Archive for the ‘நக்சல் குண்டு’ Category

ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!

செப்ரெம்பர் 1, 2010

ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!

வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது[1]: சிதம்பரம், இப்பொழுது சொல்வதாவது, “சொன்னதை சொற்றோடர்களுடன் இணைத்து குழப்பக்கூடாது. நான் சொன்னதாவது வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது…….இதை மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள்[2]……………….நான் இதற்கு உரிமம் கொண்டாட முடியாது![3] அப்பொழுது “ஜிஹாத்” என்று சொன்னதற்கு ஏன் வாபஸ் வாங்கவேண்டும்? இந்த சொற்றொடர் உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படுகிறதே?

ஜிஹாதிற்கு துணைபோகும் அல்லது முஸ்லீம்களைக் கண்டு பயப்படும் கோழை சிதம்பரம்: உள்துறை அமைச்சர், “இரும்பு மனிதர்” என்று சொல்லப்படுகின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று இருக்கவேண்டும். ஆனால், சிங்கம் உட்கார்ந்த இடத்தில் குள்ளநரி போன்று உட்கார்ந்து மற்றவர் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும். ஜிஹாத் என்றதும், முஸ்லீம்கள் மிரட்டவே பயந்து விட்டது[4], இந்த சிங்கம்!   “முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்[5].

.மு.மு.., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.

அகராதி சொல்வதும், நிஜமாக நடப்பதும்: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.

ஜிஹாதைப் பற்றி காஃபிர் சிதம்பரத்தின் விளக்கம்!: “ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம்கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார். முஸôபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[6]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[7]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.

வந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள்: இதற்கிடையே மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில் மசூதி முன்னர் கூடிய முஸ்லிம்கள், வந்தே மாதரம் பாடலைப் பாடினர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற வகுப்பினரும் அவர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தடையை மீறும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

இந்தியாவில் யார்நம்பிக்கையில்லாதோர்[8]? பொறுப்புள்ள நியாயவான் சிதம்பரம் இந்தியாவில் யார் “நம்பிக்கையுள்ளவர்” மற்றும் “நம்பிக்கையில்லாதோர்” என்று கூறுவாரா? பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள்? முஸ்லிம்கள் மீதா? பயங்கரவாதத்தைப் பற்றி பேசலாம்.  பயங்கரவாதம் ஏன் ஏற்படுகிறது?  அதன் பின்னணி என்ன? என்று ஆராய்ந்து பார்த்தாலும், அறிந்தாலும் அதனை அடையாளங்காணக்கூடாது! குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்களாம்( கீழே பார்க்கவும்)? தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள்? அப்படியென்றால் அந்த “ஜிஹாத்” வேறு, சிதம்பரம் சொன்னது வேறா?

காவி பயங்கரவாத பேச்சு: .சிதம்பரம் மீது அவதூறு வழக்கு[9] (29-08-2010): ஆமதாபாத், ஆக. 30, 2010: காவி பயங்கரவாத பேச்சு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது திங்கள்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார். ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

`காவி பயங்கரவாதம்பற்றிய பேச்சு மத்திய மந்திரி .சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்[10]: மாநில தலைமை போலீஸ் அதிகாரிகள் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்ட `காவி பயங்கரவாதம்’ என்னும் வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாராளுமன்றத்திலும் இந்த சர்ச்சை எதிரொலித்தது. அப்போது ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பேட்டி அளித்த பா.ஜனதா எம்.பி. பல்வீர்பஞ்ச், ப.சிதம்பரம் பதவி விலக முன்வரவேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “தியாகத்தின் அடையாளமாக கருதப்படும் காவி நிறத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது இந்து மதத்துக்கு அவமதிப்பாகும். இதற்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரியின் இந்த பேச்சு ஓட்டுவங்கி அரசியலுக்கான மிக மோசமான உதாரணமாக அமைந்துவிட்டதாக” குற்றம் சாட்டினார்.

இரட்டை வேடம் போடும் காங்கிரஸ்; ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி சற்று இறங்கி வந்து விளக்கம் அளித்து இருந்தார். அதில், “தீவிரவாதத்துக்கு எந்தவித நிறமும் கிடையாது. பயங்கரவாதத்தின் ஒரே நிறம், கறுப்புதான்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்[11]. அவருடைய விளக்கத்துக்கு பின்னும் சர்ச்சையை கைவிட மறுத்த பா.ஜனதா கூட்டணி கட்சிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புகள் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன. ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வற்புறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில், லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்கள் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி[12] (25-08-2010): “சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, “காவி பயங்கரவாதம்’ என்ற வார்த் தையை உள்துறை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்’ என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.போபாலில் நிருபர்களிடம், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது: “காவி பயங்கரவாதம்’ என்ற நடைமுறை தலை தூக்கி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காகவே, அவர்களை திருப்திபடுத்தும் வகையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சிவராஜ் பாட்டிலைவிட மோசமான உள்துறை: மதத்தை தாண்டி இருப்பது பயங்கரவாதம். அவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாகச் செயல்படவில்லை. அதேபோல், நக்சலைட் வன்முறைகளும் அதிகரித்து விட்டன. சொல்லப்போனால் பசுபதிநாத் முதல் கன்னியாகுமரி வரை பரவி நிற்கிறது. போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரம் மிகவும் முக்கியமானது. விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், மத்திய அரசு இது குறித்து விரிவாக பேச வேண்டும். போபால் சம்பவத்தின் பின்னணியில் இருந்தது யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார். இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பா.ஜ., மற்றும் சிவசேனா எம்.பி., க்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

காவி பயங்கரவாதம்புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை[13] (24-08-2010): “இளைஞர்களை பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த பல குண்டு வெடிப்புகளுக்கும், இந்த, “காவி பயங்கரவாதத்திற்கும்’ தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் மத்திய துணை ராணுவப் படை தலைவர்களின் 45வது மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கு வரும்படி நக்சலைட்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபடுவர். இந்த ஆண்டு மட்டும் நக்சலைட்களால் 424 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 192 பேரை, போலீசுக்கு உளவு சொன்னதாகக் கூறி கொன்றுள்ளனர்.

லாயக்கு இல்லாத உள்துறை: கடந்த 12 மாதங்களாக ஜாதி, மத மற்றும் இன ரீதியான வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் நடக்கவில்லை. இது திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்த நிலை தொடர போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற வன்முறைகளுக்கான அறிகுறி தென்பட்டாலே, உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்து, பாரபட்சம் இல்லாமல் நிலைமையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இளைஞர்களையும், இளம்பெண்களையும் பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில், எந்தவிதமான தொய்வும் ஏற்படவில்லை. இதுமட்டுமின்றி, “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறையும் உருவாகியுள்ளது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளுக்கு இந்த காவி பயங்கரவாதமே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

காஷ்மீர் நாறும்போது பீழ்த்தி கொள்ளும் பொய்யர்: கடந்த 2005 முதல் தற்போது வரை, 2008ம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் திருப்தி அளிப்பதாகவே உள்ளது. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும், சில உயிரிழப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. ஆனால், இப்போது அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்றவை அங்கு மூர்க்கத்தனமாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இது அச்சம் தருவதாக உள்ளது. பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பணியாற்றியும், அங்கு நிலைமை சீரடையவில்லை. காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் பேசினார்.


[1] TIMES-NOW,  HM stands by ‘saffron terror’ remark, 1 Sep 2010, 1703 hrs IST, http://www.timesnow.tv/HM-stands-by-saffron-terror-remark/articleshow/4352884.cms

Chidambaram said, ‘The message should not be confused by phrases”. Referring to Hindu extremist outfits, Chidambaram said that he meant rightwing fundamentalist religious groups are suspected behind some terror attacks.

[2] http://news.oneindia.in/2010/09/01/chidambaram-defends-hemself-on-seffron-remark.html

[3] I’ve no patent on ‘saffron terror’; party’s view supreme: PC; http://www.zeenews.com/news652167.html;

Chidambaram pointed out that he is not the first one to use the phrase “saffron terror” as it has been used a number of times by others, including by some other ministers of the UPA government.  “I cannot claim patent on the phrase,” Chidambaram quipped.  “The message is that the right wing fundamentalists are suspected to be behind some bomb blasts. Saffron terror ensured that the message is not lost,” he pointed out.

[4] தினமலர், .மு.மு.., தலைவருக்கு .சிதம்பரம் கடிதம், ஜனவரி 10,2010,00:00  IST; http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16066

[5] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!, http://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/

[6] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=152349&SectionID=130&MainSectionID=130&SEO

[7] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/

[8] வேதபிரகாஷ், ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்!,  http://islamindia.wordpress.com/சிதம்பரத்தின்-முகமூடி-கி/

[9] தினமணி, காவி பயங்கரவாத பேச்சு: .சிதம்பரம் மீது அவதூறு வழக்கு, First Published : 31 Aug 2010 03:18:17 AM IST; http://www.dinamani.com/edition/Story.aspx?………95%E0%AF%81

[10] http://www.maalaimalar.com/2010/08/29045613/minister-pchidambaram.html

[11] http://islamindia.wordpress.com/2010/06/22/காங்கிரஸ்-முஸ்லீம்கள்-இ/

[12] தினமலர், காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி, ஆகஸ்ட் 26, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=70996

[13] தினமலர், காவி பயங்கரவாதம்புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை, ஆகஸ்ட் 25, 2010, http://www.dhinamalar.info/News_Detail.asp?Id=70247

சிதம்பரத்தின் குசும்புகள்: நக்சல் குண்டு என்றால் சந்தேகமாம், மற்ற குண்டு என்றல் ஒன்றும் இல்லையாம்!

ஜூன் 1, 2010

சிதம்பரத்தின் குசும்புகள்: நக்சல் குண்டு என்றால் சந்தேகமாம், மற்ற குண்டு என்றல் ஒன்றும் இல்லையாம்!

சிதம்பரத்தின் மானம் பறக்கிறது, ஆனால், அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

நக்சல்களின் குண்டு வெடிப்புகளில், குறிப்பாக ரயில் விபத்துகளில் சந்தேகம் உள்ளதாகச் சொல்கிறார். காங்கிரஸ் மற்றும் மம்தா, நக்சல்களுடன் மறைமுக உறவு வைத்துக் கொண்டு, மக்களைக் கொன்று குவித்து அரசியல் நடத்துகிறது. தமிழகம் மற்றும் இலங்கை முதலிய இடங்களில் எப்படி தமிழ் அரசியல்வாதிகள் தங்களது ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றுகிறார்களோ, அதே முறைத்தான் இங்கும் பின்பற்றப் படுகிறது.

இதே ஸ்ரீ ரவிசங்கர் விஷயத்திற்கு வரும்பொது, சிதம்பரத்திற்கு சந்தேகமே இல்லையாம். ஆமாம், இந்த குண்டின் இலக்கு அவர் இல்லையாம்!

என்னே, சிதம்பரத்தின் உள்துறை உளறல்கள், புலன் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள்…………….