Archive for the ‘ஜீவகாருண்யம்’ Category

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)!

நவம்பர் 5, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)!

N Ram opposed - for food untouchability - 04-11-2015

N Ram opposed – for food untouchability – 04-11-2015

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்![1]: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை [03-11-2015] முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. 2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர் எம்.கே நாராயணன். ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகத்திற்குறிய நபர் என்று வர்மா கமிட்டி , ஜெயின் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட இந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி, 2009இல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர். ஈழத்தில் 2009 யுத்தம் முடிவுற்றவுடன் ’ஈழத்தமிழர்களை’ சித்தரவதை முள்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு ‘மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்’ என என்.ராம் தி இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டாளர்களை கொதிப்படைய வைத்தது. தினம் தினம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அந்த முகாமை சிலாகித்து கட்டுரை எழுதியவர் தி இந்துவின் ஆசிரியர் என்.ராம். மேலும், பாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி போன்றே இருப்பவன் என்றும், பிற குழந்தைகள் உடுத்த உடையின்றி வரும் பொழுது பள்ளிக்கு ஏ.சி கார்களில் சென்றவன் என்றும் பொய்க்கட்டுரைகளை எழுதியது தி இந்து. இதன் மூளையாகச் செயல்படுபவர் என்.ராம். இவர்கள் இணைந்து நடத்தும் ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை எதிர்க்கும் வகையில் இன்று மாலை இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

N Ram opposed - participating parties - 04-11-2015

N Ram opposed – participating parties – 04-11-2015

போராட்டத்தின் போது எம்.கே.நாராயணன், என்.ராமின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் முன்னனி, தமிழ்த்தேச குடியரசு இயக்கம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் தமிழக மக்கள் ஜனநாயக முன்னனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Beef politics enters The Hindu.1

Beef politics enters The Hindu.1

 

பார்ப்பன வெறியன் இந்து ராம்”, “மோடியின் கைகூலிஎன்றெல்லாம் கத்திய காம்ரேடுகள்: தமிழகத்திலிருந்து வெளியாகும் தி ஹிந்து பத்திரிகையினையும் என். ராமையும் கண்டித்து, ஹிந்து பத்திரிகை அலுவலகத்தினை முற்றுகையிட்டு “மே பதினெழு இயக்கம்” போராட்டம் நடத்தியது[2]. இன்று இடம்பெற்ற இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் உள்ளிட்ட தோழர்கள், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் ஆகியோரும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.  மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[3] என்று சிலர் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்திக்கொண்டிருந்தனர்.

  • “அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • “பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • ஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,
  • “உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  •  “பார்ப்பன வெறியன் இந்து ராம்”,
  • “பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,
  • “பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”
  • “மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.

காம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை.

Beef politics enters The Hindu.2

Beef politics enters The Hindu.2

தனது முற்போக்கு முகமூடியை வைத்து ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் பார்ப்பனியத் தன்மை: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ‘மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால் , அசைவ உணவினை அனுமதிப்பதில்லை’ என்றும் சொல்லி இருக்கிறது[4]. பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால், அசைவ உணவினை அனுமதிப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறது. மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்கு உள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல், மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிகையாளர்களை பதவி நீக்கம் செய்வது வரை, தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது. இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்துவது அவசியம்.

Beef politics enters The Hindu.3

Beef politics enters The Hindu.3

இந்த அடிப்படையில் தி இந்துவின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும், அசைவ உணவினை உட்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீதான தி ஹிந்து நிர்வாகத்தின் சாதிவெறியை அம்பலப்படுத்தும் விதமாகவும் மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழர் விடியல் கட்சி தோழர்களால் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும், ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை” நாளை மாலை சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்துகிறார்கள். இந்த கருத்தரங்கத்தினை எதிர்த்து நாளை மியூசிக் அகாடமி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்[5].

Beef politics enters The Hindu.4

Beef politics enters The Hindu.4

மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடம் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை: 2009 யுத்தம் முடிவுற்றவுடன் “ஈழத்தமிழர்களை சித்திரவதை முஸ்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்”, என்று ராம் இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டார்களை கொடிப்படைய வைத்தது….என்றெல்லாம் “பதிவு” என்ற தளம் குறிப்பிடுகின்றது[6]. பாலச்சந்தன் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தை போராளி என்றெல்லாம் பொய் செய்திகளை வெளியிட்ட ராம் என்றும் சாடியுள்ளது, இந்தியாவை எதிர்க்கிறேன் என்பவர்கள், ஈழத்தை நேசிக்கிறேன் என்பவர்கள், தமிழனை கொச்சைப்படுத்துபவனை வெல்வேன் என்று மார்தட்டுகிற அனைத்து தோழர்களும் கைகோர்ப்போம், – கட்சி, சாதி, மத இல்லை கடந்து ஒன்று கூடுவோம்”, என்கின்றது[7]. ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகப் போராடுகிறோம் என்பவர்களிடம், ஏன் இத்தகைய வேறுபாடுள்ளது என்பது புதிராக உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதும்; திராவிட சித்தாந்திகள், திராவிட சித்தாந்திகளை குறை சொல்வதும்; பெரியார் பெயரில் இயக்கங்கள் நடத்துபவர்கள் அடித்துக் கொள்வதும்; தமிழ்-தமிழ் என்பவர்களும் மாறுபட்டிருப்பதும் வேடிக்கையான விசயம் தான். மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடன் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை.

Beef politics enters The Hindu.5

Beef politics enters The Hindu.5

மாட்டிறைச்சி அரசியல் இந்துவில் நுழைந்து விட்டது!

Beef politics enters The Hindu.6

Beef politics enters The Hindu.6

காம்ரேடுகள் மோதிக் கொள்ளும் வினோதம்.

Beef politics enters The Hindu.7

Beef politics enters The Hindu.7

© வேதபிரகாஷ்

05-11-2015

[1] http://tamilsnow.com/?p=64166

[2] தமிழ்.வின், தி ஹிந்து பத்திரிகை அலுவலகம் முற்றுகை!, புதன்கிழமை, 04 நவம்பர் 2015, 04:27.33 PM GMT.

[3] http://www.tamilwin.com/show-RUmtzBTYSVfx2B.html

[4] http://tamilsnow.com/?p=63949

[5] http://tamilsnow.com/?p=63949

[6] பதிவு, எம்.கே.நாராயணன், தி இந்துவின் என். ராமிற்கு எதிராகப் போரட்டம், ஆர்த்தி, சென்னை, புதன், நவம்பர் 4, 2015: 02.52,தமிழீழம்.

[7] http://www.pathivu.com/?p=48964

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)?

நவம்பர் 3, 2015

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா,எனது உணவு எனது உரிமைஎன்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)?

Tiruvannamalai - beef eating progressive writers.7

Tiruvannamalai – beef eating progressive writers.7

கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்: இதுதான் போராட்டத்தின் லட்சணம், மற்றும் போலீஸாரின் நடவடிக்கை என்று தெரிகிறது. இதனிடையே தள்ளுமுள்ளு சம்பவத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களின் செல்போன், கேமராவையும் போலீசார் பறித்தனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், நியூஸ்-7 வீடியோவில் பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தென்படுகிறது[1]. ஊடகக்கரர்களிடையே இடதுசாரி மற்றும் சித்தாந்தக்காரர்கள், அபிமானிகள் இருப்பதினால் தான், இத்தகைய முரண்பட்ட செய்திகள் வெளிவருகின்றன. போலீஸாருக்கும் ஊடகக்காரர்களுக்கும் நட்புள்ளது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ், அதாவது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை நிறுத்தி மொபைல் போனை திரும்ப கொடுக்க உதவினராம்[2]. இதனிடையே, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த வந்து கைதான 55 பேர், உணவுத் திருவிழாக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி சதீஷ்குமார் தலைமையிலான 15 பேர் உள்பட மொத்தம் 70 பேரும் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.

Tiruvannamalai - beef eating progressive writers.4

Tiruvannamalai – beef eating progressive writers.4

அனுமதி ரத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்[3]: மாட்டுக்கறி உணவு சாப்பிடும் நிகழ்ச்சிக்கான அனுமதியை காவல் துறை ரத்து செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே நிகழ்ச்சி நடத்த கூடியிருந்தவர்களிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறினர்.   தமிழ்நாட்டில் விரும்பியதைச் சாப்பிடுவதற்குக் கூட உரிமையில்லையா? மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா?’ என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.  அதை ஏற்க மறுத்த காவல் துறையினர், நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினர். பின்னர் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து தள்ளி அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நரேந்திர மோடி ஆட்சியில் கருத்துரிமையும், உணவு உரிமையும் பறிக்கப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்த போக்கு தலைதூக்குவது ஆபத்தான அறிகுறி. எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”, என்றார். இந்த அறிக்கையும் போலித்தனமானது என்று தெரிகிறது. கைதாகும் முன்னரே, கைது என்று “வால்போஸ்டர்” ஒட்டும் நிலைப்பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆக, இதெல்லாம் திட்டமிட்ட செயல் என்றாகிறது.

thiruvannamalai beef-fest news cutting tamil

thiruvannamalai beef-fest news cutting tamil

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, திருவிழாவா, எனது உணவு எனது உரிமைஎன்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன?: பலவித பெயர்களில் உள்ள இயக்கங்கள், எதற்கு அனுமதி கோரின? நடத்தப்பட்டது –

  1. விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழா
  2. ஊர்வலமா
  3. மாட்டிறைச்சி / பீப் சாப்பிடும் போராட்டமா,
  4. “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா

மேலே எடுத்துக் காட்டியுள்ளபடி, இது “முற்போக்கு”ப் போர்வையில், இடதுசாரி, தீவிரவாத கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் முதலிய சிசவப்புப் பரிவாரின் வேலைதான் என்றாகிறது. மேலும் “தி இந்து” இந்நிகழ்ச்சியைப் பற்றி அக்டோபர் 15, 2015 அன்றே செய்தி வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது[5]. “பீப் விழா திருவண்ணாமலையில், நவம்பர்1ம் தேதி” [Beef fest in Tiruvannamalai on November 1] என்று தலைப்பிட்டு விவரங்களைக் கொடுத்துள்ளது[6]. சமைக்கப்பட்ட பீப்-மாமிசத்தைக் கொண்டு வந்து, அங்கு வருபவர்களுக்கு கொடுப்போம். மேடைமேலெ இருப்பவர்களுக்கும், மேடையில் இல்லாதவர்களுக்கு பரிமாறுவோம். கசாப்புக்காரர்களுக்கு விருது அளித்து பாராட்டி பேசுவோம், பாடுவோம் என்றெல்லாம் கர்ணா என்பவர் அறிவித்துள்ளதாக செய்தி தெரிவித்தது. அதாவது, காம்ரேடுகளுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே தெரியும். “தி இந்து” ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவு நாளிதழ். அதிலும், என். ராம், மிரியன் சாண்டி என்கின்ற கத்தோலிக்கப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, கிருத்துவ ஆதரவு செய்திகளும் இந்து குழும இதழ்களில் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன[7]. இப்பொழுது அவ்வாறே நிறைவேறியுள்ளது[8]. ஆனால், அதே “தி இந்து”, போலீஸார் பீப்-பிரியானி விழாவைத் தடுத்தனர் [] என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9].

மகஇக - மதிமாறன் போட்டோக்கள்.1

மகஇக – மதிமாறன் போட்டோக்கள்.1

கார்த்திகை மாதம் வருகின்ற நேரத்தில் ஏன்?: புனித தலத்தில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய கூட்டங்கள் பிரச்சினையைக் கிளப்ப வேண்டிய உள்-நோக்கம் என்ன? முன்பு ஶ்ரீரங்கத்தில் இதே போல ம.க.இ.கவினர் கருவறை நுழைவு போராட்டம் என்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதுவே, பெரிய பிரச்சினையாகவும் ஏற்பட்டிருக்கும். ஆனல், பக்தர்கள் அடித்து அனுப்பி விட்டனர். அத்தகைய பிரச்சினையை இங்கு ஏற்படுத்த விரும்புகின்றனரா? எழுத்தாளர்கள் என்றால் பொறுப்பு இருக்க வேண்டுமே, இவர்களைப் பார்த்தால், ஏதோ கலாட்டா, கலவரம் செய்ய வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள்? பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இவ்வாறு வந்து கலாட்டா செய்வது ஜனநாயகமா, நாகரிகமா, தமிழர்களின் பண்பாடா? இதேபோல, நாகூரில் பன்றி கறி விழா, பன்றி கறி திருவிழாவா, பன்றி கறி உணவுத் திருவிழா, பன்றி கறி சாப்பிடும் விழா, பன்றி கறி சாப்பிடும் போராட்டம் என்று நடத்துவார்களா? மாட்டார்களே, அதனால் தான், இது இந்து-விரோத செயல், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செய்யப்படும் குரூர காரியம் என்று தான், திட்டவட்டமகத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

03-11-2015

[1] https://www.youtube.com/watch?v=VGdR-eey5jE

[2] After the intervention of a few members of the Tiruvannamalai sub-division police, who were familiar with the journalists, intervened the altercation ended with policemen returning the mobile phone of the reporter.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Rough-Up-Beef-Fest-Organisers/2015/11/02/article3109237.ece

[3] தமிழ்.வெப்.துனியா, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது: ஜி.ஆர்.கண்டனம், Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (01:34 IST)

[4]http://www.dinamani.com/tamilnadu/2015/11/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/article3109666.ece

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/beef-fest-in-tiruvannamalai-on-november-1/article7764260.ece

[6] Tamil Nadu Progressive Writers and Artists Association (TNPWAA) and Untouchability Eradication Front will be jointly organising a Beef Festival in Tiruvannamalai on November 1 to assert the right of citizens to choose their food. This event is organised in response to Dadri Killings in which a mob attacked a Muslim family in Dadri in the state of UP on 28 September on the suspicion that the family consumed beef and Mohammad Akhlaq of the family was killed in the attack. The Beef fest is to be organised in front of Anna Statue in Tiruvannamalai town, said S.Karuna, State Deputy General Secretary of the TNPWAA. He said that they would bring in cooked beef briyani and distribute it to participants on and off the dais and also eat there. Apart from serving the beef briyani, there would be poet reciting, cultural events and honouring of butchers, Mr.Karuna added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/beef-fest-in-tiruvannamalai-on-november-1/article7764260.ece

[7] The participation of N. Ram in a CBCI conference, presentation of paper there, the contonuous propagation of “thomas myth in India” by S. Muthaiah etc., have been pointed put many times. Yet, they contonue to spread such manufactured news with design to fool the gullible, naïve and meek Indians.

[8] A ‘beef biriyani’ festival organised by the Tamil Nadu Progressive Writers and Artists Association (TNPWAA) here on Sunday triggered tension with the police arresting around 50 participants.Defying police orders, the organisers had conducted the festival near Anna Statue in the town to register their protest against the growing intolerance towards the minorities and the oppressed in the country and the Dadri lynching incident. According to a TNPWAA office-bearer, the festival organisers wanted to assert the right of the people to choose their food. A poetry reading session was conducted at the venue where butchers were honoured and participants served beef biriyani.However, the police denied permission for the event and pasted notices on the doors of the TNPWAA office here intimating them of the same. But the organisers continued to request the police to get some sort of relief viz. permission to hold festival without serving the beef there or conduct the festival at an alternative venue. With the police not budging, the organisers decided to defy the ban.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/cops-prevent-beef-biriyani-festival-in-tiruvannamalai/article7831369.ece

[9]  The Hindu, Cops prevent beef biriyani festival in Tiruvannamalai, A. D. Balasubramaniyam, Tiruvannamalai, November.2, 2015;  Updated: November 2, 2015 08:35 IST.

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)?

நவம்பர் 1, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)?

திக படம் - பசுவதையா, மனித வதையா

திக படம் – பசுவதையா, மனித வதையா

அக்டோபர் 26ம் தேதியில் நிகழ்த்தப்பட்ட இவ்விவகாரம் திட்டமிட்டதா?: அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. பத்தாண்டுகள் கழித்து அதே அக்டோபர் 26 அன்று இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆக, இது திட்டமிட்டே செய்யப்பட்டதா, அல்லது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. பொதுவாக, இதெல்லாம் பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்று மற்றவர்கள் கணிப்பார்கள். ஆனால், உண்மையில் இதனால் யார் லாபமடைகிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி என்று முன்னர் பிரச்சினை செய்தவர்கள் யார் என்று பார்த்தால், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம்கள் மற்ற இவர்களுடன் தொடர்பு கொண்ட குழுக்கள், இயக்கங்கள் என்பதனை கவனிக்கலாம். மாணவர்களிடையே, பிரிவு, வெறுப்பு, துவாசங்களை உருவாக்கவே, அவர்கள் செய்து வருகிறார்கள். ஏ.பி.வி.பி வருகிறது, வளர்ச்சியடைகிறது, பல பல்கலைக்கழகங்களில் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், சரஸ்வதியை எதிர்ப்பது, பசுமாமிசம் உண்ணுவதை ஆதரிப்பது என்ற முறைகளில் தடுத்துவிட முடியாது.

கோமாதா படம்

கோமாதா படம்

எதை வேண்டுமானாலும் உண்ணுவோம், அதை கேட்க நீ யார்?: நான் எதை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதனை முடிவு செய்ய நீ யார்? என்னுடைய சமையலறை நுழைய உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதை கவனிக்கலாம். மனிதனுக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிட உரிமை இருக்கிறது என்றால், அவ்வாறே எதையாகிலும் உண்டு வாழட்டும். ஆனால், ஒருவன் உண்ணும் உரிமையை தடுக்க அடுத்தவனுக்கு இல்லை எனும்போது, அதேபோல, அவன் உண்ணும் உரிமையை தடுக்க, இவனுக்கும் இல்லை என்றாகிறது. பசு மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை என்றால், பன்றி மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை எனலாம். இல்லை, யூகாரிஸ்டில், நாங்கள் உண்மையிலேயே மனித மாமிசம் மற்றும் ரத்தம் தான் உண்ணுவோம் என்று, நாளைக்கு கிறிஸ்தவர்கள் தங்களது உரிமையைக் கேட்கலாம். பிறகு எப்படி பன்றி மாமிசம் உண்ணுவோம், மனித மாமிசம் உண்ணுவோம் என்று அறிவிப்பார்களா, பார்ட்டி நடத்துவார்களா? கருத்தரங்கங்கள் நடத்துவார்களா?

கோமாதா - தெய்வமாக மதித்தல்

கோமாதா – தெய்வமாக மதித்தல்

தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு பொறுத்தவரையில் மாடு என்பது தான் சகலமும்: சங்காலத்திலிருந்தே ஆநிரை, மாடுகள் முதலியன தெய்வீகமாக, செல்வமாக, சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்பட்டது. “கோ” என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் மற்றும் அதிலிருந்து பல வார்த்தைகளும் உருவாகின. கோ என்றால் தலைவன், அரசன் பசு என்று இரண்டு பொருள் தரும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது. பசுக்களை வளர்ப்பவர்கள், காப்பவர்கள் என்று ஆயர், கோவலர். இடையர், பூழியர், குடவர் என்று பல பக்கள் குழுமங்கள் இருந்தன. பசுக்கள் செல்வமாகக் கருதப் பட்டதால், அப்பொழுது அவற்றைக் கவர்வது, திருடுவது என்ற பழக்கம் இருந்தது. இதனால், ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பறு புலவர்கள் தங்களது பாடல்களில் அவற்றை விவரித்துள்ளனர். பசுக்களை காக்கும் ஆயர்களுக்கும், அவற்றைக் கவரும் மழவர், மறவர், எயினர், வேடர் போன்றோருக்கும் சண்டை, போர் நடந்ததை சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகிறது. ஆவுடையர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தனர்.  “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றையவை”, என்று வள்ளுவர் சொன்னதிலிருந்து அதன் மேன்மையை அறிந்து கொள்ளலாம். இடைக்காலத்தைய இலக்கியங்களும் அவ்வாறே மதித்து வந்தன.

ஆநிரை கவர்தல் - காத்தல்

ஆநிரை கவர்தல் – காத்தல்

இடைக்காலத்தில் ஆநிரை காப்பது: ‘ஆகெழு கொங்கு’ என்று பசுக்களை மையப்படுத்தி பெருமை கண்ட கொங்கதேசத்தவராக, பசுக்களை மீட்பதிலும் காப்பதிலும் பெருமைப்பட்டனர், பசுக்களை மீட்ட வீரனுக்கு ஊர்கள் மானியம் வழங்கப்பட்டன. செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர், அதாவது, ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் / செரு புரியும் கோவலர்கள், கோ-காவலர்கள், கோரகக்ஷ்கர்கள் ஆனார்கள். ஆகவே, ஆநிரை காத்தல் என்பது தமிழரின் அறம் மட்டுமல்லாது கடமையும் ஆகும். குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி என்னும் ஊரின் மிக அருகில் உள்ள வங்கட்டூர் என்ற ஊரில் நடுகற்கள் துரைசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இருந்து நான்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.. இந்த நடுகற்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரனும், சுந்தரசோழனின் மூத்த மகனுமான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனால் படைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு நடுகற்களில் இரண்டு பழங்கால போர் பற்றிய செய்தியினை தருகின்றது. அதாவது ‘ஆநிரை காக்கும் பூசலில்’ இறந்துபோன தந்தை தின்மச்செட்டி மற்றும் அவரது மகன் சாத்தையன் பற்றி குறிக்கின்றது[1].

ஆநிரை கவர்தல்- நடுகற்கள்

ஆநிரை கவர்தல்- நடுகற்கள்

ஆநிரை மீட்ட வீரக்கல்தேனியில் கண்டுபிடிப்பு[2]: 11 மற்றும் 14ம் நூற்றாண்டு காலத்து சிற்ப கற்றூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கல் “ஆநிரை மீட்ட வீரக்கல்.’ இக்கல்லில் கீழிருந்து மேலாக நான்கு நிலைகளில் இரண்டு வீரர்களின் வீரச்செயல்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள முதல் நிலையில், போரில் ஈடுபடும் வீரன் குதிரையின் மீது அமர்ந்து எதிரியை ஈட்டி கொண்டு எரிவதாகும். இரண்டாவது நிலையாக வீரனின் காலடியில் பெண் அல்லது வீரனின் மனைவியாக கருதும் அந்த பெண்ணும் கணவருடன் இறந்திருப்பதற்கான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நிலையில், சங்க காலம் முதல் போரின் போது தமிழருக்கே உரித்தான ஆநிரை மீட்டல் அதாவது போரின் போது எதிரிகளிடமிருந்து மாடுகள் அல்லது பெண்களை மீட்டு வருவதாகும். அதன் நினைவாக மீட்டு வரும் வீரரின் நினைவாகவும், இரு மனைவிகளும் இறந்ததன் நினைவாக எழுப்பப்பட்ட வீரக்கல்லாகும். நான்காவது நிலையாக வீரர்கள் தனது மனைவிகளோடு இறந்ததை குறிக்கும் வகையில் இடது புறம் சூரியனும், மையத்தில் சிவலிங்கமும், வலது புறத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டு வருவதற்காக இரு ஆட்சியாளர்களிடையே போர் நடந்ததற்கான ஆதரமான வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போல் நாயக்கர் கால நிர்வாக முறையில் சிறப்புடையதாக கருதப்பட்ட நாட்டுக்காவல் முறை (ஊர்க்காவல் முறை) இருந்ததற்கான நாட்டுக் காவல் ஒற்றைக் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உருவ அமைப்பாக வீரன் ஒருவன் குத்துவாள் இடுப்பில் செருகி ஆவேசத்துடன் ஒரு கையில் வாளை உயர்த்திய நிலையிலும், ஊர்க்காவல் முறையின் அடையாளமாக மறுகையில் தடி ஊன்றிய நிலையிலும் உள்ளது. இந்த கல் 14 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருக்கலாம், என கண்டறியப்பட்டுள்ளது[3].

ஆநிரை காத்தல் - தெய்வமாக மதித்தல்

ஆநிரை காத்தல் – தெய்வமாக மதித்தல்

இக்காலத்தைய நிலைமை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 – 1898 ஜூலை 5) 19 ஆம் நூற்றாண்டில் புலால் உணவுக்காக பசுக்கொலை செய்து மாமிசம் உண்ணும் ஆங்கிலேயர்களின் கொடுமையை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நூறு பாடல்கள் கொண்ட, “ஆங்கிலியர் அந்தாதி” என்று பாடினார். இவ்வாறிருக்கும் போது, “தமிழர்கள்” என்று பறைச்சாற்றிக் கொள்பவர்கள், இவற்றையெல்லாம் மறைத்து, மறந்து ஏதேதோ பேசுகிறார்கள், எழுதிகிறார்கள். இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல், தங்களை கவிக்கோ, பெருங்கவிக்கோ என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள், பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுமாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள், பிறகு எப்படி, ஏன் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்?

1966 anti-cow slaughter rally Delhi.6

1966 anti-cow slaughter rally Delhi.6

1966ல் தில்லியில் நடைப்பெற்ற பசுவதை எதிர்ப்பு பேரணியும், சாதுக்கள் கொல்லப்பட்டதும்: இந்தியாவில் பசுவதையைத் தடைசெய்ய வேண்டி இந்துக்கள் பல காலமாகப் போராடி வருகின்றனர். நவம்பர் 7, 1966 அன்று “கோபாஸ்டமி” என்று கொண்டாடப்படும் தினத்தன்று சாதுக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனும் பசுவதையை தடை செய்யக் கோரி குரல் எழுப்பினார், இந்திரா காந்திக்கு கடிதமும் எழுதினார்[4]. சாதுக்களின் பேரணி பாராளுமன்றைத்தை நோக்கிச் சென்றபோது, பேரணி மீது அப்போதைய இந்திரா காந்தி அரசின் உத்தரவுப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எட்டு சாதுக்கள் பலியானார்கள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால், தில்லியில் இருந்த காமராஜர் வீடு தாக்கப்பட்டது. இதற்காக சங்கராச்சாரியார் சுவாமி நிரஞ்சன் தீர்த்தர், சுவாமி பர்பத்திரி, மஹாத்மா ராமசந்திர வீர் முதலியோர் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டர். மஹாத்மா ராமசந்திர வீர் 166 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா இதற்காக பொறுபேற்று ராஜினாமா செய்தார். ஆனால், தமிழகத்தில் இவ்வுண்மைகளைச் சொல்வது கிடையாது. மாறாக, நாத்திகவாதிகள், இந்துவிரோதிகள் (ஏனெனில் அவர்கள் எழுதும் விதத்திலேயே அதனை வெளிப்படுத்துக் கொள்கின்றனர்[5]) இதைக்கூடத் திரித்து எழுதுகிறர்கள் என்பதை கவனிக்க வேண்டும்[6].

1966 anti-cow slaughter rally Delhi.1

1966 anti-cow slaughter rally Delhi.1

சென்னையில் நடைப்பெற்ற போராட்டங்கள்: ஆலய வழிபடுவோர் சங்கம், சென்னை எனும் எஸ்.வி.பத்ரி என்பவரால் அமைக்கப்பட்ட அமைப்பு தமிழகம் வழியாகக் கடத்தப்பட்டு கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் பசுக்கள், கன்றுகள், எருமைகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றது. சென்னை பெரம்பூரில் 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு நவீன இறைச்சிக்கூடம் அமைக்க ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக இங்கு சாதாரண இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை அமைக்கும் பொறுப்பை டெல்லியைச் சேர்ந்த ஹின்ட்-அக்ரோ லிமிடெட் அமைப்பு ஏற்றது. இந்த நவீன இறைச்சிக்கூடம் ஒரு நாளில் 10,000 மாடுகளை வதை செய்யும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 60 மாடுகளையும் 250 கன்றுகளையும், ஆடுகளையும் வதை செய்யும் திறன் கொண்ட இந்த நவீன இறைச்சிக்கூடத்திற்கு பொது மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டும், உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.

1966 anti-cow slaughter rally Delhi.3

1966 anti-cow slaughter rally Delhi.3

© வேதபிரகாஷ்

31-10-2015

[1] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/03/22223735/Planting-defense-appeal-to-remain-in-a-state-of-near.vpf

[2] தினமலர், ஆநிரை மீட்ட வீரக்கல்தேனியில் கண்டுபிடிப்பு, செப்டம்பர்.5, 2014.02.34.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1062756&Print=1

[4] In his letter, written in 1966 to the then Prime Minister, Mrs. Indira Gandhi of 1966, Lok Nayak Shri Jaya Prakash Narayan wrote that “ For myself, I cannot understand why, in a Hindu majority country like India, where rightly or wrongly, there is such a strong feeling about cow-slaughter, there cannot be a legal ban”. A copy of the letter is annexed and marked as Annex I (4). http://dahd.nic.in/ch1/chap1.htm#item13

[5] http://www.unmaionline.com/new/2486-euthanasia-cow-human-euthanasia.html

[6] http://subavee-blog.blogspot.in/2015/03/2.html

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

ஒக்ரோபர் 28, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே  சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரை போடும் போலி வேடங்கள்: புளூ கிராஸ் சொசைடி போன்ற நிறுவனங்களும் இவ்விவகாரங்களில் இரட்டைவேடம் போட்டு வருகின்றன. ஏதோ மிருகங்கள் கஷ்டப்படுவதைப் பற்றி, இவர்கள் கஷ்டப்படுவதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள், மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதேபோலத்தான் மற்ற ஜீவகாருண்ய சங்கங்கள், அஹிம்சை போதிக்கும் இயக்கங்கள் முதலியன இத்தகைய ஜீகாருண்யம் மற்றும் இம்சைகளை ஆதரிப்பது போல மௌனம் சாதித்து வருகின்றன. “மாமிசம் இல்லாமல் ஒரு நாள்”, என்று போலித்தனமாக, சாது வாஸ்வானி என்ற இயக்கம் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, வருடத்தில் ஒரு நாள், மிருகங்களைக் கொல்லாமல், மற்ற 364 நாட்களிலும் கொன்று சந்தோஷமாக இருக்கலாம் போலிருக்கிறது. பௌத்தர்கள் அஹிம்சை போதித்தாலும், மாமிசம் உண்டுகொண்டுதான் வாழ்கிறார்கள்.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

பக்ரீத் மிருகவதை கண்டுக்கொள்ளப்படாது: நன்றாக எல்லாவித மாமிசங்களையும் உண்டு வாழும் முகமதியர்களும் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுவதும், வல்லாளார் பெயரில் கூட்டங்களில் கலந்து கொள்வதும் வினோதமாகத்தான் இருந்து வருகின்றன. இவ்வாறுதான் அஹிம்சை மற்றும் மிருகவதை எதிர்ப்பு போன்றவை உள்ளன. இந்த புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரையுள்ள கோஷ்டிகள் மற்ற மிருகவதைகள் நடக்கும் போது கண்டுகொள்ளமாட்டார்கள். பக்ரீத் போது, ஒட்டகம், பசு, ஆடு-மாடு என்று வெளிப்படையாகவே அறுத்து பலியிட்டு, தோலை உரித்து, ரத்தம் ஓடவைத்து பலி கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவ்வப்போது, சில இரக்கமுள்ளவர்கள், நடிகைகள் முதலியோர், ஏதோ பறவைகள் எல்லாம் துன்பப்படுகின்றன, என்று அவற்றை கூண்டுகளிலிருந்து வெளியே சுதந்திரமாக பறக்கவிட்டோம் என்றும் பீழ்த்திக் கொள்வார்கள். ஆனால், இதைப்பற்றி தெரியாதது மாதிரி இருப்பார்கள்.

Beef sale in J and K state - Court ti decide DM

Beef sale in J and K state – Court ti decide DM

பீப் ஈட்டிங் – பசுமாமிசம் உண்ணுதல் பிரச்சினை: சமீப காலமாக மாட்டிறைச்சி விவகாரம் பலவிதங்களில் வெளிப்பட்டு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஊடங்களின் உசுப்பிவிடும் வேலைகள் தான் இதில் அதிகமாக இருக்கின்றன. இந்து சேனா அமைப்பினர் இது தொடர்பாக மாட்டிறைச்சிக்கு தடை பெறுவதில் மும்முரமாக உள்ளனர். இதுவரை, இந்த சேனா எங்கிருந்தது என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. உ. பி., மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக எழுந்த வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  பிறகு, கொல்லப்பட்டவரின் மகன் “லவ்-ஜிஹாதில்” ஈடுபட்டான், அதாவது, ஒரு இந்து பெண்ணை காதல் புரிந்ததால் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் காஷ்மீரில் மாட்டிறைச்சி பார்ட்டி நடத்திய சுயேச்சை எம்.எல்.ஏ. ரசீத் என்பவர் சட்டசபையில் தாக்கப்பட்டார். அவர் டில்லி வந்த போது கறுப்பு மை வீசப்பட்டது[1]. சாப்பிடுகிறேன் என்றால் சாப்பிட்டு விட்டு போகலாம், பிரச்சினையே இல்லை, ஆனால், அதனை, விளம்பரப்படுத்தி, ஏன் பிரச்சினையாக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதெல்லாம், தேசிய அளவில் அதிகமாக பேசப்பட்டன. ஊடகங்கள் இவைத்தான் முக்கியமான செய்திகள் போன்று “மாட்டிறைச்சி அரசியல்” என்று தலைப்பிட்டு தினம்-தினம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா?: மாடுகள் வெட்டப்படுவதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என யோகாகுரு பாபா ராம்தேவ் 27-10-2015 அன்று கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவர் ஏன் சொல்லவேண்டும். மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா என்பதனை யார் தீர்மானிப்பது? எதற்காக மாடுகளை வைத்திருக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதனை யார், எதற்காக தீர்மானிக்க வேண்டும் என்று யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்போது கேரள அரசுக்கு மாட்டிறைச்சி விவகாரம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் ஜந்தர் மந்தரில் கேரள பவன் உள்ளது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது இதனை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒரு குரல் போலீஸ் ஸ்டேஷன் போனில் ஒலித்தது[2]. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்[3]. இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் ஏதும் வராமல் இருக்க மாட்டிறைச்சியை நிறுத்தி கொள்ளுங்கள் என கேட்டு கொண்டனர். இப்புகாரை அடுத்து, அங்கு டெல்லி போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்[4]. ஆனால் அங்கு பரிமாறப்பட்டது எருமை மாட்டு இறைச்சி என்று பின்னர் தெரியவந்தது[5]. டெல்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரளா பவன் உணவகம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

ban-on-beef-in-maharashtra-cartoon

ban-on-beef-in-maharashtra-cartoon

மலையாளத்தில் கிறுக்கியதும், ஆங்கிலத்தில் எழுதியதும்: கேரள தலைமைச் செயலாளர் ஜி.ஜி. தாமஸ் டெல்லியில் கூறும்போது, “கேரளா பவன் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமையின் இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் பீஃப் (மாட்டிறைச்சி) என்று கூறப்பட்டுள்ளது” என்றார். “கேரளா பவனில் உள்ளுரை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். டெல்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். எனினும், நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார் ஜி.ஜி. தாமஸ்[6]. ஆனால், இல்லை, நாங்கள் விற்போம் என்று அறிவித்து விட்டது[7]. என்.டி-டிவி தனது செய்தியில், ஒரு மாதிரியாக சொல்வதிலிருந்தே இதில் விவகாரம் இருக்கிறது என்று தெரிகிறது[8]. “Three men who visited the Kerala House canteen yesterday noticed “beef fry” on a handwritten menu on the whiteboard. It was the only dish scribbled in Malayalam, and they wasted no time in calling the police.” நேற்று மூன்று ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள். மெனுவில் “பீப் பிரை” என்று கையினால் எழுதிவைத்ததைப் பார்த்து, நேரத்தை விரயமாக்காமல் உடனடியாக போலீசுக்கு புகார் கொடுத்தனர். மலையாளத்தில் அது கிறுக்கலாக இருந்தது, என்று நக்கலாக விளக்கும் போதே தெரிகிறது. போர்டில் உள்ளது அழகாகத்தான் உள்ளது, கிறுக்கல் ஒன்றும் இல்லை. மீன் கறி, மீன் வருவல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுபோது, அடுத்ததை ஏன் மலையாளத்தில் இருக்க வேண்டும்? அதுதானே “பசு மாமிச வருவல்” என்று அறியப்பட்டது! ஆக, இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

28-10-2015

[1] http://www.ndtv.com/india-news/j-k-lawmaker-engineer-rashid-attacked-with-black-ink-in-delhi-1233954

[2] தினமலர், கேரளா பவனில் மாட்டிறைச்சி மெனு ; இந்து சேனா எதிர்ப்பால் பதட்டம் ,பதிவு செய்த நாள் அக் 27,2015 12:56; மஅற்றம் செய்ய்த நாள். அக் 27,2015 15:56;

[3] http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7809438.ece

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1373708

[5] http://www.maalaimalar.com/2015/10/27162437/Oomen-chandy-Mamata-Kejriwal-c.html

[6] தி.இந்து, கேரளா பவன்மாட்டிறைச்சிவிவகாரம்: டெல்லி போலீஸ்சோதனையும் 10 முக்கிய தகவல்களும், Published: October 27, 2015 13:21 ISTUpdated: October 27, 2015 19:39 IST.

[7] http://www.deccanherald.com/content/508682/beef-back-kerala-house-menu.html

[8] http://www.ndtv.com/india-news/cops-rush-to-kerala-house-after-call-alleging-beef-on-menu-1236740