Archive for the ‘“மாதொரு பாகன்” நாவல்’ Category

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5)

சுயமரியாதை திருமணம்- தாலி மறுப்பு

சுயமரியாதை திருமணம்- தாலி மறுப்பு

சுயமரியாதை, சீர்திருத்தத் திருமணங்கள் சட்டவிரோதமானது, அத்திருமணத்தில் பிறந்த குழந்தைகளும் நிலையிழந்தது: பிராமணர்-எதிர்ப்பு, சடங்குகள்-இல்லாத, தாலி-கட்டாத, திராவிடத்துவ, பெரியாரிய சுயமரியாதை / சீர்திருத்த திருமணங்கள் நடந்தன. ஆனால், நீதிமன்றங்களுக்கு அவர்கள் வாரிசு உரிமை, சொத்துரிமை, சொத்துப் பிரிப்பு முதலிய வழக்குகளுக்குச் சென்றபோது, அவர்களின் திருமணம் அந்நேரத்தில் / அக்காலத்தில் உள்ள சட்டங்களின்படி செல்லாது என்றாகியது. அதாவது, அப்பொழுதிருந்த எந்த திருமணச் சட்டத்திலும், இத்தகைய முறை இல்லாமல் இருந்ததால், இவையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக நடந்தவை என்றாகியது. தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது என்பதனை பகுத்தறிவுகள், திராவிட வீரர்கள் புரிந்து கொண்டனர்.  அதாவது, அவர்களது திருமணங்களும் சட்டங்களுக்குப் புறம்பானவை, பிறந்த மகன்கள்-மகள்களும் அவ்வாறே பிறந்தவை என்றாகியது. பிறகு எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது?

சுயமரியாதை திருமணம்

சுயமரியாதை திருமணம்

திராவிடர்கள் இந்துக்கள் ஆனது, மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்க சுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.

Self-respect marriage validated under Hindu Marriage Act

Self-respect marriage validated under Hindu Marriage Act

பெருமாள் முருகன் போன்றோர், இக்கருவை வைத்து ஒரு நாவல் எழுதுவார்களா?: இவையெல்லாம், இப்பொழுது கடந்த 60-80 ஆண்டுகளில் நடந்துள்ள உண்மைகள். அதில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது சந்ததியர் உயிரோடு இருக்கிறார்கள். ஆவணங்கள், அத்தாட்சிகள், சான்றுகள், ஆதாரங்கள் திறந்தே, வெளிப்படையாக இருக்கின்றன. ஆகவே, இவற்றை வைத்துக் கொண்டு, யாராவது கதை எழுத முன்வருவார்களா, எழுதி கொடுத்தால் யாராது பதிப்பிப்பார்களா? எழுதி-பதிப்பித்தால், தமிழர்கள் ஒப்புக் கொள்வார்களா? எண்ணும்-உரிமை, கருத்துரிமை, சொல்லுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசிவரும் முற்போக்குவாதிகள், “இந்துத்துவ-வாதிகள்”, இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள் மற்ற வகையறாக்கள் இதைப் பற்றி என்ன சொல்வார்கள்?

My rights and the rights of others

My rights and the rights of others

உரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் எல்லாமே எல்லைகளுக்குட்பட்டவை: உரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் என்றெல்லாம் ஒருவருக்கே, ஒரு சமூகத்திற்கே, ஒரு சித்த்தாந்த கூட்டத்திற்கே  என்று தமதாக உரித்தாக்கிக் கொள்ளமுடியாது. அவ்வாறு உரித்தாக்கிக் கொள்ளவேண்டுமானால், உள்ள உரிமைகட்டுகளையும் உடன் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். அவற்றுடன் இணைந்த கடமை, பொறுப்பு முதலிய சரத்துகளையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், அதாவது –

  1. மனம் ஒரு குரங்கு என்று தத்துவம் பேசலாம், ஆனால் உரிமைகள் என்று வரும் போது, கயிற்றால் கட்டித்தான் வைத்துக் கொள்ளவேண்டும்.
  1. ஒருவரது சிந்தனையுரிமை அடுத்தவரது சிந்தனையுரிமையை மீற முடியாது;
  1. ஒருவரது எண்ணவுரிமை, அடுத்தவரது எண்ணவுரிமையை பாதிக்கக் கூடாது;
  1. ஒருவரது கருத்துரிமை, அடுத்தவரது கருத்துரிமையை பரிக்க முடியாது;
  1. ஒருவரது சிந்தனையுரிமை, அடுத்தவரது சிந்தனையுரிமையை மீறமுடியாது;
  1. ஒருவரது பேச்சுரிமை அடுத்தவரது பேச்சுரிமையைக் கொள்ளைக் கொள்ள முடியாது;
  1. ஒருவரது எழுத்துரிமை அடுத்தவரது எழுத்துரிமையை தூஷிக்க முடியாது;
  1. அவரவர், அவரவரது இடங்களில், எல்லைகளுக்குள் இருந்துகொண்டு செயல்பட வேண்டும், வரம்புகள் மீறமுடியாது.
  1. பஞ்சபூதங்களுக்கு எல்லைகள்-வரம்புகள் இல்லை என்று இருக்கலாம், ஆனால், அவையும் மீறும்போது அழிவு, பேரழிவு ஏற்படுகின்றது. அதுபோலவே,  பஞ்சபூதங்களிலான மனிதர்களும் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்களே.
  1. கிரகங்கள், அண்டம், பேரண்டம் எல்லாமே,  ஒழுங்காக தத்தம்வழிகளில் சென்று கொண்டிருக்கும் போது, நிலையில்லாத மக்கள், தங்கள் விருப்பம் போல நடந்து கொள்ள முடியாது. மற்றவர்களையும் அடக்கி-ஒடுக்க முடியாது.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[2] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

http://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/