Archive for the ‘கஞ்சா’ Category

கம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது!

ஜனவரி 17, 2016

கம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது!

Malda map, IHC, poppy cultivation

கௌர் பங்கா பல்கலைக் கழகமும் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015: முன்பே குறிப்பிட்டப்படி, மால்டா பங்களாதேச எல்லைக்கு சுமார் 10-12 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு கௌர் பங்கா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் இருப்பதால், நவீன வசதிகள் கிடைக்கின்றன. இதனால், இந்திய-விரோத சக்திகளுக்கு புகலிடமாக இருக்கிறது. திருட்டு ஆயுதத் தொழிற்சாலை, கள்ளநோட்டு வரிவர்த்தனை, எல்லைகளைத்தாண்டி நடத்திவரும் சட்டமீறல்களோடு, மற்ற குற்றங்களும் சேர்கின்றன. ரெயில்களைத் தாக்கி விலையுயர்ந்த பொருட்களைக் கவர்வது என்றும் சேர்கிறது. போதாகுறைக்கு ஜிஹாதும் சேர்ம் போது, அப்பாவி இந்துக்களும் கொல்லப்படுகிறார்கள். ரெயில் கொள்ளையில் அதனால், இரண்டுமே சேர்ந்து விடுகிறது. எப்படி 2011 மற்றும் 2015 மால்டா ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு, காலியாசக் போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் முதலியன நடைப்பெற்றுள்ளனவோ, அதேபோல, இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது, தற்செயலானதா, திட்டமிட்டதா என்று தெரியவில்லை.

Rail attacked, passengers thrown out - Belakoba bodies found

ஆயுத கும்பல் மால்டாவில் ரெயில் கொள்ளை (ஜூன்.2012): நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி, பயணிகளிடம் ஆயுதம் தாங்கிய கும்பல் கொள்ளை அடித்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த பயணிகள், ரயில் நிலையத்தில் திடீர் போராட்டம் நடத்தினர்[1].மேற்கு வங்கம் நியூஜல்பாய்குரியில் இருந்து கோல்கட்டா அருகே சீல்தாக் வரை செல்லும் பதடிக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு மால்டா டவுன் ரயில் நிலையம் அருகேயுள்ள ஏக்லாகி ரயில் நிலையத்தை ரயில் எட்டியபோது, சிக்னலுக்காக நிறுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய 25 பேர் கொண்ட கும்பல், ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளை மிரட்டி, அவர்களிடம் இருந்த பணம், விலை மதிப்புள்ள பொருட்களைப் பறித்தது.அப்போது இரு பயணிகள் அக்கும்பலை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆத்திரமடைந்த கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கி காயப்படுத்தியது. கொள்ளை அடித்த பொருட்களுடன், பின்னர் கும்பல் தப்பி ஓடியது. ரயில் மால்டா ரயில் நிலையத்தை அடைந்ததும், பயணிகள் பிளாட்பாரத்தில் இறங்கி தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்திய பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதெல்லாம், ஏதோ எப்பொழுதுவது நடப்பது என்று நினைத்துவிட வேண்டாம். இரண்டே மாதங்களில் இன்னொரு கொடூரமான தாக்குதல் நடந்தது.

மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மார்க்சிஸ்டுகல் தொடர்புகள்ஆயுத கும்பல் மால்டா அருகில் ரெயில் கொள்ளை (ஆகஸ்ட்.2012)[2]: இதேபோல ஆகஸ்டிலும், அடையாளம் தெரியாத ஆட்கள் பெங்களூர்-கௌஹாதி ரெயிலில் நுழைந்து, இரண்டு பிரயாணிகளை பிடித்து வெளியே தள்ளினர்[3]. மற்றவர்களிடம் கொள்ளையடித்தனர்; பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்; தடுத்தவர்களை அடித்தனர். நியூஜெல்பைகுரி ஸ்டேசன் அருகில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர்வாசிகள் ரயில்களை மறித்து ஆர்பாட்டம் செய்தனர். “தி ஹிந்து” இப்படி அரைகுறையாக செய்தியை வெளியிட்டாலும், கோக்ரஜார் கலவரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள், அப்பாவி இந்துக்களைத் தாக்கி பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். பிறகு மெதுவாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் எனும் போது, அவர்கள் பெயர்கள் – அனீஸ் பாஷா, தாஸீன் நவாஸ், ஷாஹித் சல்மான் கான் [Anees Pasha (26), Thaseen Nawaz (32) and Shahid Salman Khan (22)] என்று குறிப்பிடப்படுகிறது[5]. இப்படி சம்பந்தம் இல்லாத அப்பாவி மக்களை முஸ்லிம்கள் கொல்வது எந்த விதத்தில் நியாயமானது?

மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் தொடர்புகள்மால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (அக்டோபர், 2011): ஜனவரி 2015ல் ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆனால், 2011லும் அதே கதைதான்! காலியாசக் போலீஸார், தமக்குக் கிடைத்த ரகசிய தகவல் மூலம், லிட்சி ஆர்கேட், பலுகிராம் கிராம், மொஜம்பூர் கிராம பஞ்சாயத்து, காலியாசக் என்ற இடத்தில் திடீரென்று ரெயிட் செய்ததில், ஒரு ஆயுதத் தொழிற்சாலையைக் கண்டுபிடித்தனர். அதில் ஏராளமான துப்பாக்கி வகைகள், பாகங்கள், குண்டுகள் முதலிய இருந்தன[6]. அந்த இடம் அஸதுல்லா பீஸ்வாஸ் என்ற உள்ளூர் சி.பி.ஐ.எம் தலைவர் [CPI-M leader Asadullah Biswas] மற்றும் அவரது சகோதரர் குலாம் கிப்ரியா பீஸ்வாஸுக்கு [Golam Kibria Biswas, who is a CPI-M zilla parishad member] சொந்தமானது. பின்னவர் சி.பி.ஐ.எம் ஜில்லா பரிஷத் அங்கத்தினர். அப்பகுதியில் போட்டி கோஷ்டிகளுக்குள் பலமுறை துப்பாக்கி சண்டைகள் நடந்து வந்துள்ளன. இங்கும் சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் மற்றும் திரிணமூல் கட்சியினர் எனும்போது, இரு கட்சிகளும் விசயங்களை மறைத்து விடுகின்றன. இதேவிதத்தில் தான் அதே காலியாசக் போலீஸ் ஷ்டேசன் ஜனவரி 2015ல் முஸ்லிம்களால் தாக்கப்பட்டுள்ளது.

சில்டா ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்ததுசிபிஎம் தலைவர், ஆட்கள் கைது, போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் ஜனவரி 2012: ஜனவரி 2011ல் மேற்கு வங்காளத்தையுட்டியுள்ள மிதினாபூர், பங்கூரா, புர்லியா மாவட்டங்களில் உள்ள சிபிஎம் பயிற்சி கூடாரங்களிலிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்[7]. ஜனவரி 7 அன்று ஒன்பது பேர் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவும் வகையில், ஆயுதங்களை சேகரிப்பதில், இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அதாவது, கம்யூனிஸ்ட் பிரிவுகள் ஒன்றாக “சிவப்புப் பரிவால்லென்ற ரீதியில் செயல்படுகின்றன என்றாகிறது. ஆனால், மே மாதத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்ததாக, ஏழு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர்[9]. அப்துல் ரஹ்மான் என்ற உள்ளூர் தலைவர் கள்ளத்துப்பாக்கி வைத்துக் கொண்டதற்காக, கைது செய்யபட்டப்போது, சிபிஎம் ஆட்கள் போலீஸ் ஷ்டேசனைத் தாக்கி இன்ஸ்பெக்டரை காயப்படுத்தினர்[10]. போலீஸ்காரர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர், நான்கு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர். அதாவது, மார்க்சிஸ்ட் கட்சியில் முஸ்லிம்கள் இருந்தால், இவ்வாறு போலீஸ் ஷ்டேசன் தாக்கப்படுகிறதா அல்லது மார்க்சிஸ்டுகளும் முஸ்லிம்களைப் போன்று அத்தகைய வழிகளைப் பின்பற்றுகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.

மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் தொடர்புகள்மார்க்சிஸ்டுகள் ஆயுதங்கள் பதுக்கல்: ஜூன் 2011: மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்[11]. மேற்கு வங்காளத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூர், 24 பர்கானா போன்ற மாவட்டங்களில் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சமீபத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தோற்று திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக ஆயுதங்களும் வெடிபொருள்களும் கண்டுபிடிக் கப்பட்டன. காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தொடரும் என்று முதல்வர் மம்தா அறிவித்தார். இந்நிலையில், மால்டா மாவட்டம் காலியாசாக் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு காவல்துறையினர் நடத்திய சோத னையில் 7 துப்பாக்கிகள், 3 கைத் துப்பாக்கிகள், 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 300 ஜெலட்டின் குச்சிகள், 50 கையெறி குண்டுகளை காவல்துறையினர் கைப் பற்றினர். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர்  கைது செய்து விசாரிக்கின்றனர்[12].

லால்கரில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் 2012மால்டாவும் அயோத்தியும், இந்திய வரலாற்று மாநாட்டின் தீர்மானமும்: இத்தகைய கலவர பூமியாக, ஜிஹாதிகளின் போக்குவரத்து மிகுதியாக உள்ள, மால்டாவில் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் வந்த உறுப்பினர்கள், தங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் என்று போற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அயோத்தி பற்றிய தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டது, ஜிஹாதிகளைத் தூண்டிவிடும் முறையில் இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[13].

© வேதபிரகாஷ்

17-01-2016

[1] தினமலர், ரயிலை நிறுத்தி கொள்ளை ஆயுத கும்பல் கைவரிசை, ஜூன்.17, 2012: 02.34.

[2] Two passengers were killed and seven others injured on Sunday after being thrown out of a Bangalore-Guwahati train, railway sources said. One of the passengers, who is now admitted to the district hospital, said they were looted, beaten up and then thrown out of the train by unknown persons. Police found two bodies near Belakoba railway station, few km away from New Jalpaiguri, on Sunday morning while seven other persons were found lying injured near the tracks. “The two had died on the spot. We do not know the reason behind the incident. We are investigating the matter,” said New Jalpaiguri area manager (rail) Partho Sarthi Seal. The injured have been admitted to the district hospital and the North Bengal Medical College Hospital. Protesting against the incident, locals staged a rail blockade delaying many local trains and all Assam-bound express trains. Later in the day, the blockade was lifted.

[3] The Hindu, Passengers thrown out of running train in New Jalpaiguri, 2 killed, pdated: August 19, 2012 17:56 IST.

[4] http://www.thehindu.com/news/national/passengers-thrown-out-of-running-train-in-new-jalpaiguri-2-killed/article3795066.ece

[5] Announcing the arrests, Commissioner of Police B.G. Jyothi Prakash Mirji said Anees Pasha (26), Thaseen Nawaz (32) and Shahid Salman Khan (22) were all residents of Bangalore, but refused to divulge any messages these men had sent.

http://www.thehindu.com/news/cities/bangalore/police-send-message-with-three-arrests/article3792781.ece?ref=relatedNews

[6] The devices which were recovered from that camp included 15 flat files, 3 round files, 1 square file, 1 blower, 20  pipes, 2 hand drill machines, 3 triggers, 4 haxo frame, magazine with bolt, 5 table vice, arms butt, 13 springs and huge number of iron screws. Police informed that at least 31 types of devices were recovered altogether.

http://soumyadesarkar.blogspot.in/2011/10/arms-factory-unearthed-in-malda.html

[7] http://www.thehindu.com/news/national/other-states/no-arms-recovered-from-cpim-camps-crpf/article1137499.ece

[8] The CRPF today said it has not been able to recover any arms from the camps allegedly run by the CPI(M) in Lalgarh and its adjoining districts (Midnapore, Bankura and Purulia) of West Bengal. The State government had come under severe criticism when nine people were killed allegedly by armed CPI(M) cadres at Netai in West Midnapore on January 7, 2011. The Left Front government has been accused of misusing the joint forces only to help the CPI(M) cadres to gather arms and gain ground in the three districts which was under the control of Maoists for a long time.

[9] http://www.dnaindia.com/india/report-more-illegal-arms-recovered-in-west-bengal-seven-cpim-activists-held-1548642

[10] In another incident, Danton Zonal committee secretary of CPI(M) Abdul Rahim was arrested for carrying an illegal revolver at Khandarui village. Angry over the arrest, a group of CPI(M) cadres attacked the police team and injured the Inspector-in-Charge of Danton police station Manik Chakrabarty and a constable. While the policemen were hospitalised, four CPI(M) cadres arrested.

http://www.dnaindia.com/india/report-more-illegal-arms-recovered-in-west-bengal-seven-cpim-activists-held-1548642

[11] விடுதலை, மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பறிமுதல், புதன், 29 ஜூன் 2011 11:03.

[12] http://www.viduthalai.in/home/viduthalai/medical/12784-2011-06-29-10-34-03.html

[13] http://indianculturalforum.in/index.php/2016/01/11/indian-history-congress-dont-break-monuments-dont-incite-religious-sentiments/

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

ஜனவரி 16, 2016

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம்இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

03-01-2016 violence Malda by Mus;ims preplanned

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்லசொல்வது மம்தா (09-01-2016)!: மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல! இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா பானர்ஜி 09-01-2016 சனிக்கிழமை கலந்துகொண்டார். மாநாட்டுக்கு முன்பும், அதற்குப் பிறகும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது[1]:

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டதாகும். அங்கு நிகழ்ந்த மோதல் என்பது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நடைபெற்றதாகும். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. எனினும், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இங்கு மதவாத வன்முறைகளுக்கு இடமில்லை”, என்றார் அவர். எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே” அப்படியா மோதல்கள் நடக்கும்? கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும்? அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது? உள்ளூர் ஆட்கள் அவர்களுடன் மோதுகின்றனர் என்பதிலிருந்தே, எல்லைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பது தெரிகிறது. அவை தான் கஞ்சா வளர்ப்பு, திருட்டு ஆயுத தொழிற்சாலை, கள்லநோட்டு பரிவர்த்தனை முதலியவை.

மத்திய அமைச்சர்கள் பலர் உங்களைப் பாராட்டி பேசுகின்றனரே? என்ற கேள்விக்கு மம்தா அளித்த பதில்: “நான் எப்போதும் கூட்டாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மத்திய அரசு என்பது தாய் போன்றது. மாநில அரசுகள் பிள்ளைகள் போன்றவை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்தால் கூட்டாட்சி அமைப்பு வலுவடையும். ஜிஎஸ்டி மசோதா எங்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் அதை ஆதரிக்கிறோம். ஆனால், நிலம் கையக சட்ட மசோதா குறித்து எங்களுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன”, என்றார் மம்தா.

Malda riots - Mamta manipulated for vote bank politucsதிவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள்சொல்வது அதிகாரிகள்: இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறி அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் கமலேஷ் திவாரிக்கு எதிராக மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தி, போலீஸ் ஷ்டேசன்களைத் தாக்கியபோது, பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது[2]. இதில் காவல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதலே என்று கூறினார்கள்[3]. திவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் என்றனர்[4]. 35க்கும் மேலாக வாகனங்கள் சேதமடைந்தன; இந்துக்களின் வீடுகள் சூரையாடப்பட்டன; வேண்டுமென்றே பீஹார்[5], தில்லி, ராஜஸ்தான், பெங்களூரு என்று பல இடங்களில் ஆர்பாட்டம் செய்தனர், அங்கு ஐசிஸ்க்கு ஆதரவாக ஆனால் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆகவே, இப்பிரச்சினையை அகில இந்திய ரீதியில் பெரிதாக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. உண்மையில் கஞ்சா செடிகளை வளர்த்து, போதை மருந்து தயாரித்து விநியோகத்தில் ஈடுபட்ட முஸ்லிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை அந்த கும்பல் விரும்பவில்லை. ஆனால், இது திட்டமிடப்பட்ட மத வன்முறை என விஹெச்பி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன, என்ரு தமிழ் ஊடகங்கள் கூருவதும் விசித்திரமானது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.

Malada IHC - opium, Marx and tradeஊடுருவிய வங்கதேசத்தவர் 8 பேர் கைது: அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்குள் ஊடுருவிய 8 நபர்கள் உள்பட 9 பேரை எல்லையோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வேலை வாங்கித் தருகிறோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், அவர்களுக்கு உதவிகரமாக இருந்த இந்தியர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்[6]. இவர்கள் முஸ்லிம்கள் என்ரு குறிப்படத்தக்கது. சட்டங்களை மதிக்காமல் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்குதான் காரணம். முஸ்லிம்கள் என்றாலே மம்தா அரசு மெத்தனமாக இருப்பதும், இவர்களுக்கு தைரியமாக இருப்பதால், அரசு துறை அதிகாரிகளை எதிர்ப்பது போன்ற போக்கு சாதாரணமாக உள்ளது. இப்படி தினமணி செய்தி வெளியிட்டாலும், எல்லைத்தாண்டி முஸ்லிம்ள் ஊடுருவல் செய்வது குறித்து விளக்கவில்லை.

Where Heroin is villain-Vast fields of illegal poppy crop at Gopalgunj in West Bengals Malda districtபிஜேபி உண்மை கண்டறியும் குழு திருப்பி அனுப்பப்பட்டது: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது[7]. இதுகுறித்து அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  மால்டா கலவரம் குறித்து நேரில் ஆராய, பாஜகவின் தேசிய பொதுச் செயலரும், எம்.பி.யுமான பூபேந்தர் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எம்.பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாவர். இந்த உண்மை கண்டறியும் குழு, தனது ஆய்வறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் விரைவில் அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர், பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது[8]. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Malda opium Police destroyஎல்லை மீறிய சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் குழுக்கள்: எல்லை ஊர்களான கோபால்கஞ், பலியாடங்கா, காலியாசக், மொஹப்பத்பூர், மோதாபாரி, டங்கா முதலியவை, இந்திய-விரோத சக்திகளின் புகலிடமாக உள்ளன. கஞ்சா வளர்ப்புதான் அதற்குக் காரணம். 13-01-2016 அன்று, காலியாசக் மற்றும் சுற்றியுள்ள 500 ஏக்கர் / 1500 பீகா பரப்பளவில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன[9]. இது ஜனவரி 5ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை நடந்தது[10]. மேலும், போலீஸ் ஷ்டேசன்கள் எரியூட்டியது தெரியக்கூடாது என்று அவசர-அவசரமாக அவை மராமத்து செய்யப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. கஞ்சா தவிர கள்ளநோட்டு விநியோகம் பெருமளவில் நடக்கிறது.  2015ல் ரூ.3.08 கோடிகள் பிடிபட்டுள்ளன, 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டத்திற்க்குப் புறம்பாக துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கு 1987 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை எல்லாவற்றிலும் முச்லிம் இளைஞர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமணி, மால்டாவில் ஏற்பட்டது மதக் கலவரம் அல்ல:மம்தா பானர்ஜி, By கொல்கத்தா, First Published : 10 January 2016 12:32 AM IST.

[2] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3392013/The-region-epicentre-illegal-drug-trade-counterfeit-currency-racket-Kaliachak-India-s-Afghanistan-poppy-farming-weapons-smuggling-infiltration-radicalisation-make-lethal-cocktail.html

[4] : Local officials say the Kaliachak violence on January 3, was a pre-planned attack by Muslim groups under the garb of protesting against the hate speech of Akhil Bharat Hindu Mahasabha leader Kamlesh Tiwari, thus noted Soudhriti Bhabani.

Soudhriti Bhabani,The region is an epicentre of illegal drug trade’: Kaliachak is India’s Afghanistan where poppy farming, weapons smuggling and radicalisation make a lethal cocktail, PUBLISHED: 23:33 GMT, 9 January 2016 | UPDATED: 00:20 GMT, 10 January 2016.

[5] http://aajtak.intoday.in/story/after-malda-hungama-and-brawl-started-in-bihars-purniya-over-kamlesh-tiwaris-remark-on-paigamber-1-849458.html

[6]http://www.dinamani.com/india/2016/01/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/article3220099.ece

[7] தினமணி, மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக, By  புது தில்லி, First Published : 11 January 2016 12:52 AM IST

[8]http://www.dinamani.com/india/2016/01/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article3221619.ece

[9] The Hindu, Crackdown on poppy in Malda, Shiv Sahay Singh, Kolkotta, January, 14, 2016

[10] http://www.thehindu.com/news/national/other-states/crackdown-on-poppy-in-malda/article8103838.ece