Archive for the ‘அமரேந்துரு’ Category

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணாப்முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

மார்ச் 3, 2013

பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப்முகர்ஜி மாமாமச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

நமது இந்திய அரசியல்வாதிகளின் போக்கே அலாதியாக இருக்கிறது. முன்பு, டிசம்பரில் சுனாமி வந்தபோது, ஐந்து நசத்திர ஓட்டல்களில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். 26/11 அன்று ராஹுல் காந்தியே ஏதோ பார்ட்டியில் இருந்து, அடுத்த நாளில் பாராளுமன்றத்தில் வந்து உளறியிருக்கிறார்.

இப்பொழுது, பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப் முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

Pranab visits Bangladesh 2013

பிரணாப் வரவை எதிர்பார்த்து சதார் உபசிலா மாவட்டத்தில் இருக்கும் பத்ரபிலா கிராமமே விழாகோலத்தில் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடைய மாமனா அமரேந்துரு கோஷுடைய வீடே 1971 கலவரத்தில் இடித்து விட்டார்களாம்!

பக்கத்தில் இருந்த கோவிலும் அதோகதி!

ஆனால், இப்பொழுது இவர் வருகிறார் என்பதால், அவ்வீடு புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளதாம்!

இங்கு சுமார் ஒரு மணி நேரம் தங்கியிருப்பாராம்!

Pranab visits Bangladesh 03-03-2013

21 துப்பாக்கி குண்டு முழக்கம் !

சிவப்புக்கம்பள விரிப்பு !!

ஆர்பாட்டமான வரவேற்பு !!!

டாக்டர் பட்டம் வேறு கொடுக்கிறார்களாம்!

பிறகென்ன இருதரப்புப் பேச்சு?

உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு மதமோ, எல்லையோ இல்லை என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில், பிரணாப் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டாக்கா சென்றடைந்தார். ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த அவரை, வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் வரவேற்றார். அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தன.

அங்கு வங்கதேச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் அளித்த பேட்டியில், “பயங்கரவாதத்துக்கு மதமோ, எல்லையோ இல்லை. ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மீதும் மனிதகுலம் மீதும் தாக்குதல் நடத்துவதுதான் பயங்கரவாதத்தின் குறிக்கோள்“, என்று பேசியுள்ளது வேடிக்கைதான். “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வளரும் நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்“, என்றார் பிரணாப். ஜமாத்-இ-இஸ்லாம் மற்றும் இதர இஸ்லாமிய அடிப்படைவாதம்-தீவிரவாதப் பிடிகளில், இஸ்லாமிய நாடாக இருந்து வரும் பங்களாதேசம் எப்படி பங்களிக்கும் என்று தெரியவில்லை.