Archive for the ‘கருத்து சுதந்திரம்’ Category

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)

பிப்ரவரி 27, 2018

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)

ABVP 2018 conference. evening-1st day

பார்வையாளர் கூட்டம்……………………………………..

ABVP 2018 conference.lunch

மதிய உணவு நேரம்………………………..

ABVP 2018 conference.lunch.2

பரிமாறும் மாணவியர்………………………….

கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால்,  மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே? நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –

  • ஷா பானு வழக்கு,
  • சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,
  • சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,
  • உஸைன் சித்திரங்கள்,
  • பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,
  • தேசிய கீதம் பாடுவது,
  • அதற்கு மரியாதை கொடுப்பது,
  • மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்)

என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

Marx, Lenin, Mao- trinity of Communism

Marx, Lenin, Mao- trinity of Communism

சித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி?: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:

  1. “இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.
  2. நாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்!
  3. “பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன!
  4. குடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.
  5. பொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது!
  6. நாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்!
  7. சித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்!
  8. சமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்?
  9. என் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா?
  10. சம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.

SFI conference

வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.

  1. கடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
  2. அரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
  3. ஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
  4. அதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.
  5. குறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.
  6. ஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.

Different students conferences

சித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி?: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும்.  இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

27-02-2018

SUCI conference

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

Tiruvalluvar Invitation-1

திருவள்ளுவர் திருநாட்கழகம் நடத்திய திருவள்ளுவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லீசர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா: 08-06-2017 அன்று மதியம் பேஸ்புக் நண்பர் Dr சந்தோஷ் முத்து[1] என்பவர், இந்த அழைப்பிதழை “திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை – 92 நடத்தும், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா அழைப்பிதழ்” என்று பேஸ்புக்கில் போட்டிருந்தார்.  இவர் சங்கப் பரிவாருடன் தொடர்புள்ளவர் ஆவார். வியாழன் 08-06-2017 அன்று காலையில் 9.15 மணியளவில், திருவள்ளுவர் கோவில் மற்றும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகம் முதலிய இடங்களில் நடப்பதாக முதல் பக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம், 2/48, முதல் முதன்மைச்சாலை, ஏ.வி.எம். அவென்யூ, விருகம்பாக்கம், சென்னை – 600 092 என்ற விலாசம் போடப்பட்டுள்ளது. சரி, அதுதான் நடந்து முடிந்து விட்டதே என்று யோசிக்கும் போது, “எல்லீசர்” என்பது கண்ணில் பட்டதும், அப்பெயரே விசித்திரமாக இருந்ததால், விழா அழைப்பிதழை கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

Tiruvalluvar Invitation-2

சாமி தியாகராசனின் அழைப்பிதழில் இவ்வாறு வேண்டியுள்ளார் (25-05-2017): சாமி. தியாகராசன்[2], தலைவர், திருவள்ளுவர் திருநாட்கழகம் அழைப்பிதழில், இவ்வாறு கூறியுள்ளார், “அன்புடையீர்! வணக்கம் எமது கழகத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டாகத் திருவள்ளுவர் பிறந்தநாளை, நிகழும் திருவள்ளுவராண்டு 2048 வைகாசி மாதம் 25 ஆம் நாள் அனுட நட்சத்திரம் நிலைபெறும் (08-06-2017) வியாயக் கிழமை அன்று காலை 9.15 மணிக்குச் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சிறப்புப் பூசையுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறோம்.

“மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி நிரலில் காணும் வண்ணம் விழாக்கள் நிகழ்வுரும்.

தாங்கள் அன்புகூர்ந்து விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்”, என்று முடித்துள்ளார். சென்னை, 25-05-2017 என்ற தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாக, இதைப் பற்றி பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இவ்வழைப்பிதழ் அனுப்பப் படவில்லை மற்றும் தெரிவிக்கப்படவில்லை.

Mylapore function 08-06-2017-13

நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்ட விவரங்கள்: நிகழ்ச்சி நிரல் இவ்வாறு விவரங்களைக் கொடுத்துள்ளது:

காலை: 9.15 மணி வழிபாடு

காலை: 10.30 மணி விருது வழங்கும் விழா

இறைவணக்கம்

வரவேற்பு

விழாத்தலைவர் தவத்திரு திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள் எம்.ஏ; எம்.பில் அவர்கள் இளவரசு, காசித் திருமடம் திருப்பனந்தாள்.

முன்னிலை:

திரு. இரா. வெங்கடேசன் I.A.S., அவர்கள், செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடரசு.

முனைபவர். மா. வீரசண்முகமணி, I.A.S., அவர்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடரசு.

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையும் எழுதியுள்ளமைக்காக விருது பெறுபவர்

திரு பசுபதி தனராஜ் அவர்கள், வழக்கறிஞர், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், நடுவண் அரசின் கப்பல் பற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்.

திருவள்ளுவரின் திருவுருவத்தைத் தமது சொந்தச் செலவில் படிம வடிவில் உருவாக்கி உலகின் பலபகுதிகட்கு அனுப்பி நிறுவச் செய்து வள்ளுவரின் பெருமையைப் பாரெங்கும் பரவச் செய்து வருவதற்காக

விருது பெறுபவர்

கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், தலைவர் V.G.P குழுமம், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்முமிகு சேவூர். எஸ். இராமச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர்.

ஆள்வினையே ஒருவரை அடையாளப்படுத்தும் மற்றபடி அவரது அங்கங்கள் அல்ல என்னும் வள்லுவத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்ந்து வருவதற்காக

விருது பெறுபவர்

அ. சுபாஷ் அவர்கள்

விருது வழங்கி வாழ்த்துரை

திரு. இல. கணேசன் அவர்கள்.

தலைவர் ஆசியுரை

நன்று நவிலல்

நாட்டு வாழ்த்து.

தலைவர் – பேராசிரியர், முனைவர் சாமி தியாகராசன்

மதிப்பியல் தலைவர் திரு இரா. முத்துக்குமாரசுவாமி

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.3 -twitter

செயற்குழுவினர் பட்டியலில் உள்ள பெயர்கள்:

  1. திரு பால. கௌதமன்.
  2. வழக்கறிஞர் முனைவர் எஸ். பத்மா.
  3. மா. மணிவாசகம்.
  4. சிவாலயம் ஜெ. மோகன்.
  5. கவிஞர் முத்துலிங்கம்
  6. திரு எஸ். இராமச்சந்திரன்.
  7. வழக்கறிஞர் ஜி. முருகவேல்.
  8. வழக்கறிஞர் பால சீனிவாசன்
  9. திரு பி. ஆர். ஹரன்.
  10. டால்பின் திரு ஶ்ரீதர்
  11. திரு ஆர் சீனிவாசன்
  12. திரு ஆர். பரிதிமால்கலைஞர்.
  13. செங்கோட்டை ஶ்ரீராம்

பொருளாளர் திர்மதி வெ. பத்மப்ரியா.

தொடர்புக்கு: 044 – 4201 6242; +91 95518 70296

Muthulingam-poet, Nambi Narayanan,......, .....

அறக்கொடையாளர்கள் என்று பட்டியல் இவ்வாறு இருந்தது:

  1. அதிபர், காசித்திருமடம், திருப்பனந்தாள்.
  2. டாக்டர். C. பூமிநாதன், ஆஸ்த்திரேலியா,
  3. திரு செகந்நாதன். புதுச்சேரி.
  4. திரு சியாம் சுந்தர், புதுச்சேரி.
  5. திரு சௌந்தரராசன், சென்னை.
  6. திரு முருகவேள் சென்னை.
  7. திரு இராதாகிருஷ்ணன், குடந்தை.
  8. முனைவர் மு. செல்வசேகரன் குடந்தை.
  9. திரு. கணேசன், குடந்தை.
  10. திரு திருநாவுக்கரசு குடந்தை.
  11. திரு கண்ணன் குடந்தை.

இப்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், அதிகாரிகள், பல்துறை வல்லுனர்கள் என்று அமர்க்களமாக விழா நடந்தது போலும். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2017

திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

[1] Dr M.Santhoshkumar, MSc PhD, Founder Associate Director, Center for Creativity & Innovation in Education, Sri Lathangi Vidhya Mandir Hr Sec School, Coimbatore. (Formerly Assistant Professor in Biochemistry in RVS College and PSG College- 2011-2016). ABVP activist.

https://www.facebook.com/drmsanthosh/; https://twitter.com/SanthoshMuthu16

[2]  பிஜேபியின் இலக்கிய அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

16 Department for Party Journals and Publications Sami Thyagarajan State Convenor , Tamil Literature Cell

95518 70296

 

கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்-பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா?

ஜூலை 21, 2016

கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா?

Top ten criminals of India - google.The Guardian UK

உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் வருவதால் வழக்கு பதிவு: உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது[1]. மோடியுடன் உலகத்தில் உள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வருகின்றன. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா [Sushil Kumar Mishra] என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப 20-07-2016 அன்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெளியிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[3].  புகார் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை[4].

Lawsuit-against-Google

கூகுள் அளித்த விளக்கமும், மெபொருள் விசமர்த்தனமும்: இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுஷில்குமார் மிஸ்ரா விளக்கம் கோரியுள்ளார்[5]. 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது[6]. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார் ஆனால் பயனில்லை[7]. மறுபடிபறுபடி தேடும் போது, அவ்வாறான படத்தொகுப்புகளே வந்து கொண்டிருந்தன. கூகுள் நிறுவனம் அதற்கு, தேடுபொறியில் சில தேவையற்ற புகைப்படங்கள் இடம்பெற்று விட்டதாகவும், அது சில மென்பொருள் எண்கள் மீது ஆதாரமாக இருப்பதாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேடுபொறியை மேம்படுத்தி வருவதாகவும், விளக்கமளித்திருந்தது[8]. இதற்கு கூகுள் நிறுவனம் ஜூன் 2015ல் மன்னிப்பும் கேட்டது என்கிறது தினமலர்[9].  மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[10]. இதனை ஏற்க மறுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுஷில்குமார் மனுத்தாக்கல் செய்தார்.

Top ten criminals of India - google

போலீஸ் புகாரை ஏற்காதது ஏன்?: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள்  வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11].  அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள்! ஆகவே, இதைப் போன்றவற்றை கண்டுகொள்ளவில்லை போலும்!

Top ten criminals of India - google.5

2015ல் பதிவு செய்த வழக்கு தள்ளுபடி: இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[12]. ஆனால் அது சிவில் வழக்காகக் கருதப்பட வேண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்[13]. தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தலைமை நீதி மேஜிஸ்ட்ரேட் முன்னர் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது[14].

Top ten criminals of India - google.vikatan

மோடி, குற்றவாளி, வழிமுறை (algoritm) அமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தால் மாற்றிவிடலமே?: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும்! பிறகு, அது தவறு எனும்போது, மாற்றியிருக்கலாமே, மாற்றாமல், ஏதோ இதுபோன்ற பதிலைக் கொடுப்பது ஏன்?

according to Google algorithm, Modi is a criminal

கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா?: இன்றைய நாட்களில் கூகுள் போன்றவை அறிவுதேடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், உண்மையான தகசவல்கள் கிடைக்கின்றன என்று பயனாளிகள் நினைது / நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையும் பாரபட்சம் கொண்டவை, சில நேரங்களில் சரியான முடிவுகள், சில நேரங்களில் தவறான முடிவுகளை எல்லாம் கொடுக்கும் என்ற விசயம் சில நேரங்களில் தெரிய வருகின்றன. கணினி மனிதனால் உருவாக்கப்பட்டது, அதனை இயக்கும் மென்பொருள் முதலியனவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அம்மென்பொருள் உருவாக்கம், செயல்படுத்தும் முறை, மாற்றும் முறைகள், முதலியனவும் கணினிகளை இயக்கும் திட்டங்களினால் சிலரது விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைக்க முடியும், அத்தகைய முறையில் கருத்துருவாக்கத்தை சிதைக்க முடியும், கெடுக்க முடியும், சீரழிக்க முடியும் என்பனவெல்லாம் தெரிய வரும் போது, பயனாளிகள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது. இனி கிடைக்கும் செய்திகள், தகவல்கள், விவரங்கள் ஆதாரமானவையா, ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்று சரிபார்த்து எடுத்தாளா வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-07-2016

[1] தினகரன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு .பி. கோர்ட் நோட்டீஸ், Date: 2016-07-20@ 19:14:32

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=232537

[3] தமிழ்.வெப்துனியா, உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு, புதன், 20 ஜூலை 2016 (10:07 IST).

[4] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/google-lists-pm-modi-in-top-criminals-gets-court-notice-116072000018_1.html

[5] நியூஸ்.7.டிவி, இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடிகூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்!, July 20, 2016

[6] நாணயம்.விகடன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடி; கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், Posted Date : 15:39 (20/07/2016)

[7] http://www.vikatan.com/personalfinance/article.php?aid=12977

[8] http://ns7.tv/ta/google-lists-pm-modi-top-criminals-gets-court-notice.html

[9] தினமலர், கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016. 08:18

[10] “These results don’t reflect Google’s opinion or our beliefs; our algorithms automatically matched the query to web pages with these images……… the company is working to improve its search related algorithm to prevent unexpected results like this..” Sometimes, the way images are described on the internet can yield surprising results to specific queries, Google added.

http://www.deccanchronicle.com/technology/in-other-news/200716/google-lists-modi-in-top-10-criminals-gets-court-notice.html

[11] Deccan chronicle, Google lists Modi in ‘top 10 criminals’, gets court notice, Published. Jul 20, 2016, 1:25 pm IST, Updated. Jul 20, 2016, 1:28 pm IST

[12] New Indian Express, Google gets court notice for listing PM Modi in ‘top 10 criminals’ search, By Online Desk, Published: 20th July 2016 11:48 AM, Last Updated: 20th July 2016 11:49 AM

[13] http://www.newindianexpress.com/nation/Google-gets-court-notice-for-listing-PM-Modi-in-top-10-criminals-search/2016/07/20/article3538537.ece

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1567858

[15] “These results don’t reflect Google’s opinion or our beliefs; our algorithms automatically matched the query to web pages with these images……… the company is working to improve its search related algorithm to prevent unexpected results like this..” Sometimes, the way images are described on the internet can yield surprising results to specific queries, Google added.

http://www.deccanchronicle.com/technology/in-other-news/200716/google-lists-modi-in-top-10-criminals-gets-court-notice.html

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5)

சுயமரியாதை திருமணம்- தாலி மறுப்பு

சுயமரியாதை திருமணம்- தாலி மறுப்பு

சுயமரியாதை, சீர்திருத்தத் திருமணங்கள் சட்டவிரோதமானது, அத்திருமணத்தில் பிறந்த குழந்தைகளும் நிலையிழந்தது: பிராமணர்-எதிர்ப்பு, சடங்குகள்-இல்லாத, தாலி-கட்டாத, திராவிடத்துவ, பெரியாரிய சுயமரியாதை / சீர்திருத்த திருமணங்கள் நடந்தன. ஆனால், நீதிமன்றங்களுக்கு அவர்கள் வாரிசு உரிமை, சொத்துரிமை, சொத்துப் பிரிப்பு முதலிய வழக்குகளுக்குச் சென்றபோது, அவர்களின் திருமணம் அந்நேரத்தில் / அக்காலத்தில் உள்ள சட்டங்களின்படி செல்லாது என்றாகியது. அதாவது, அப்பொழுதிருந்த எந்த திருமணச் சட்டத்திலும், இத்தகைய முறை இல்லாமல் இருந்ததால், இவையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக நடந்தவை என்றாகியது. தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது என்பதனை பகுத்தறிவுகள், திராவிட வீரர்கள் புரிந்து கொண்டனர்.  அதாவது, அவர்களது திருமணங்களும் சட்டங்களுக்குப் புறம்பானவை, பிறந்த மகன்கள்-மகள்களும் அவ்வாறே பிறந்தவை என்றாகியது. பிறகு எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது?

சுயமரியாதை திருமணம்

சுயமரியாதை திருமணம்

திராவிடர்கள் இந்துக்கள் ஆனது, மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்க சுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.

Self-respect marriage validated under Hindu Marriage Act

Self-respect marriage validated under Hindu Marriage Act

பெருமாள் முருகன் போன்றோர், இக்கருவை வைத்து ஒரு நாவல் எழுதுவார்களா?: இவையெல்லாம், இப்பொழுது கடந்த 60-80 ஆண்டுகளில் நடந்துள்ள உண்மைகள். அதில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது சந்ததியர் உயிரோடு இருக்கிறார்கள். ஆவணங்கள், அத்தாட்சிகள், சான்றுகள், ஆதாரங்கள் திறந்தே, வெளிப்படையாக இருக்கின்றன. ஆகவே, இவற்றை வைத்துக் கொண்டு, யாராவது கதை எழுத முன்வருவார்களா, எழுதி கொடுத்தால் யாராது பதிப்பிப்பார்களா? எழுதி-பதிப்பித்தால், தமிழர்கள் ஒப்புக் கொள்வார்களா? எண்ணும்-உரிமை, கருத்துரிமை, சொல்லுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசிவரும் முற்போக்குவாதிகள், “இந்துத்துவ-வாதிகள்”, இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள் மற்ற வகையறாக்கள் இதைப் பற்றி என்ன சொல்வார்கள்?

My rights and the rights of others

My rights and the rights of others

உரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் எல்லாமே எல்லைகளுக்குட்பட்டவை: உரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் என்றெல்லாம் ஒருவருக்கே, ஒரு சமூகத்திற்கே, ஒரு சித்த்தாந்த கூட்டத்திற்கே  என்று தமதாக உரித்தாக்கிக் கொள்ளமுடியாது. அவ்வாறு உரித்தாக்கிக் கொள்ளவேண்டுமானால், உள்ள உரிமைகட்டுகளையும் உடன் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். அவற்றுடன் இணைந்த கடமை, பொறுப்பு முதலிய சரத்துகளையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், அதாவது –

  1. மனம் ஒரு குரங்கு என்று தத்துவம் பேசலாம், ஆனால் உரிமைகள் என்று வரும் போது, கயிற்றால் கட்டித்தான் வைத்துக் கொள்ளவேண்டும்.
  1. ஒருவரது சிந்தனையுரிமை அடுத்தவரது சிந்தனையுரிமையை மீற முடியாது;
  1. ஒருவரது எண்ணவுரிமை, அடுத்தவரது எண்ணவுரிமையை பாதிக்கக் கூடாது;
  1. ஒருவரது கருத்துரிமை, அடுத்தவரது கருத்துரிமையை பரிக்க முடியாது;
  1. ஒருவரது சிந்தனையுரிமை, அடுத்தவரது சிந்தனையுரிமையை மீறமுடியாது;
  1. ஒருவரது பேச்சுரிமை அடுத்தவரது பேச்சுரிமையைக் கொள்ளைக் கொள்ள முடியாது;
  1. ஒருவரது எழுத்துரிமை அடுத்தவரது எழுத்துரிமையை தூஷிக்க முடியாது;
  1. அவரவர், அவரவரது இடங்களில், எல்லைகளுக்குள் இருந்துகொண்டு செயல்பட வேண்டும், வரம்புகள் மீறமுடியாது.
  1. பஞ்சபூதங்களுக்கு எல்லைகள்-வரம்புகள் இல்லை என்று இருக்கலாம், ஆனால், அவையும் மீறும்போது அழிவு, பேரழிவு ஏற்படுகின்றது. அதுபோலவே,  பஞ்சபூதங்களிலான மனிதர்களும் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்களே.
  1. கிரகங்கள், அண்டம், பேரண்டம் எல்லாமே,  ஒழுங்காக தத்தம்வழிகளில் சென்று கொண்டிருக்கும் போது, நிலையில்லாத மக்கள், தங்கள் விருப்பம் போல நடந்து கொள்ள முடியாது. மற்றவர்களையும் அடக்கி-ஒடுக்க முடியாது.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[2] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

http://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

Mathoru bagan compromise -Novel controversy

Mathoru bagan compromise -Novel controversy

பொது மக்களும், ஊடகங்களைப் பின்பற்றுபவர்களும்: படித்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அவ்வாறு நாவல்களை வாங்கிப் படிப்பார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆகவே, பொது மக்கள் இவரது நாவலைப் படித்து, விவாதிக்கவோ, மறுப்பு நூல் எழுதுவதோ என்பது ஆகாத காரியம். பொது மக்கள் எல்லோரும் நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல, அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்பதும் இழுத்தடிப்பு வேலைதான் என்று அறிந்து கொள்ளலாம். சாதாரண பொது மக்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே, தவிர இத்தகைய காரியங்களுக்கு வரமாட்டார்கள். “மாதொரு பாகன்” என்ற சொற்றொடர், சிவபெருமானைக் குறிக்கும் என்பதை இந்துக்கள் நன்றாகவே அறிவர். குறிப்பாக சைவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும், பொதுவாக இத்தகையப் புத்தகங்களை அறிவிஜீவிகள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் வாங்கிப் படிப்பது கிடையாது. அதனால், யாரும் அப்புத்தகங்களைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பெருமாள் முருகன் என்றவர் எழுதிய அப்பெயர் கொண்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு கலாட்டா செய்துள்ளது கூட, நாளிதழ் படிப்பவர்கள், டிவி-செய்தி பார்ப்பவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. முற்போக்கு, நவீனத்துவம், சிறகடித்துப் பறக்கும் எண்ணங்கள் கொண்ட எழுத்தாளர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் குழுக்கள், இருவரையொருவர் பாராட்டி, புகழ்ந்து கொண்டு, இத்தகைய எழுத்துமூட்டைகளைக் குவித்து வருகிறார்கள். வேறு வழிகளில் பணம் கிடைத்து வருவதால், பணத்தை செலவழித்து புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இவர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தை விற்க யுக்தியா

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தின் விற்பனயைப் பெருக்க யுக்தியா?

பெருமாள் முருகன் உள்ளூர் பள்ளிகளை விமர்சித்தது முதலியன: பெருமாள் முருகன் விளக்கம் கொடுத்தது போல, மகாபாரதம், முதலிய கதைகள் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. நாத்திகர்களுக்கு, ராமாயணம்-மகாபாரதம் முதலிய கட்டுக்கதை என்றெல்லாம் வர்ணிப்பவர்களுக்கு, அதிலிருந்து இப்படி எடுத்துக் காட்டி, திரித்துக் கூறுவதே வழக்கமாகி விட்டது. “வாடகைத் தாய்” விசயம், விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறது. அதற்காக, குழந்தை இல்லாத ஒரு பெண்னை அவ்வாறு அடுத்தவன் கூட படுத்து, குழந்தைப் பெற்றுக் கொள் என்று கதை எழுதமுடியுமா என்று உள்ளுர்வாசிகளில் விசயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள். தனக்கு எதிராக கருத்து வலுப்படுகிறது என்றதும், சில பத்திகளை எடுத்து விடுகிறேன், ஊர்பெயரை விட்டுவிடுகிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால், மறுபக்கம் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தான் எதிர்த்ததால், அவை தனக்கு எதிராக செயல் படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். மாணவர்களை வைத்து சாதிக்கு எதிராக எழுதவைத்து, அதனைத் தொகுத்து வெளியிட்டார். உண்மையில் மாணவர்கள் இவர் சித்தாந்த ரீதியில் திரிபு விளக்கம் கொடுக்கிறார் என்பது தெரியாது. இங்கிருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழகத்திலேயே முதலிடத்தில் வருகின்றனர், இருப்பினும், அங்கு நடத்தப்பட்டு வரும் கல்விமுறை சரியில்லை என்றெல்லாம் விமர்சித்து எழுதி வந்தார். அந்நிலையில் கவுண்டர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எந்த ஊடகமும் கவலைப்படவில்லை, யாரிடமும் பேட்டி காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

கொங்கு தேசிய மக்கள் கட்சியின் போராட்டம்: இதனால் அவர் மேற்குறிப்பிட்டபடி மன்னிப்பு தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்த சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலர் ஈஸ்வரன் அப்புத்தகம்   தடை செய்யப்படவேன்டும் என்றார், என்று ஊடகங்கள் எழுதித்தள்ளின. “திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள ‘‘மாதொரு பாகன்’’ என்ற புத்தகம் தமிழக பெண்களை மிகவும் கொச்சையாக இழிவாக சித்தரித்துள்ளது. அதே ஆசிரியர் எழுதியுள்ளஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’ ‘ஆலவாயன்போன்ற புத்தகங்களிலும் பெண்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எழுத்தாளர்களுடைய எழுத்து உரிமைக்கும், பேச்சுரிமைக்கும், தமிழர்கள் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல. அநாகரீகமாக எழுதுவதையோ, பேசுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற லலிதா குமாரமங்கலத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எழுத்தாளர் என்று அந்த ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் அவர் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்று படித்து விட்டு பேச வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. நாங்கள் செய்திகளை இப்படித்தான் போட்டுக் கொண்டிருப்போம், காட்டிக் கொண்டிருப்போம், நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள் என்ற போக்கில் தான் அவர்கள் செயபட்டார்கள். இதற்கு பெயர் என்ன என்பதை அந்த ஞானிகள், மேதாவிகள், எழுத்தாளர்கள் முதலியோர் தான் சொல்லவேண்டும்.

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

ரஜினி பாணியில் எல்லோருக்கும் காசு கொடுத்து விடுகிறேன் என்றது: 09-01-2015 அன்று திருச்செங்கோட்டில் கடையடைப்பு முழுவதுமாக இருந்தது. ஆனால், எழுத்தாளர்களும், படிப்பாளிகளும் ஆசிரியருக்குத் துணையாக இருக்கின்றனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரையும் வெளியிடப்பட்டது[4]. திராவிடக் கட்சிகளின் மௌனம் ஏன் என்றும் கேட்டு இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை வாங்கியவர்கள் கூட அதனை எரித்து விடலாம், அவர்களுக்கு காசு கொடுத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி இயக்கங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, சரித்திர ஆதாரம் எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் எழுதினார் என்றெல்லாம் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் கூறினார். அதாவது, இவரை யாரோ கொன்று விடுவர் போன்ற பீதியைக் கிளப்பி விட்டது போல செய்தி வெளியிடப்படுகிறது. 12-01-2015 அன்று நடந்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடந்தபோது, ஆசிரியர் மன்னிப்பு கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவற்றைக் குறிப்பிட்டு பேசிக் கண்டித்துள்ளது வியப்பாக உள்ளது. தமிழ் இந்துவும் விட்டுவைக்கவில்லை, “தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு?”, என்று விவரித்து எழுதியது[11]. சுருக்கமாக சொல்வதானால், திருச்செங்கோட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ “தலிபன்களை”ப் போன்று சித்தரித்தது. அவர்களது உணர்வுகள் சிறிது கூட எங்களுக்குக் கவலையில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டன. ஆனால், இந்த அளவிற்கு இவை இப்படி நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமலர், திசைமாறும்மாதொரு பாகன்நாவல் எதிர்ப்பு போராட்டம், 11-01-2015.

[2] http://www.maalaimalar.com/2015/01/13094115/Srirangam-election-BJP-candida.html

[3] http://www.thehindu.com/news/cities/chennai/writers-and-academics-support-perumal-murugan/article6773811.ece

[4] http://www.thehindu.com/opinion/op-ed/in-defence-of-the-chronicler-of-kongu/article6778031.ece?ref=relatedNews

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews

[6] http://www.thehindu.com/news/national/will-compensate-publishers-perumal-murugan/article6786144.ece?ref=relatedNews

[7] http://www.thehindu.com/opinion/interview/people-are-looking-to-settle-scores-with-me-perumal-murugan/article6778030.ece?ref=relatedNews

[8]  The Hindu, ‘People are looking to settle scores with me’, 12-01-2015, Interview with Kolappan, kolappan.b@thehindu.co.in

[9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”

தமிழ்ச் செல்வன் என்பவர், “ரத்தன் டாடா அறக்கட்டளை நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது ” – தினமலர், 03-01-2015, சனிக்கிழமை, சென்னை.

[10] The Hindu, RSS, BJP say they are not behind protests, Tuesday, 13-01-2015

[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article6772652.ece

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை!

செப்ரெம்பர் 6, 2013

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை!

Indian diarist Sushmita Banerjee shot dead in Afghanistan

இந்திய பெண்ணின் மீது தாக்குதல், கொலை, எச்சரிக்கை: தலிபானின் பெண்களை அடக்கும், அடக்கியாளும், ஆண்டு சித்திரவதை செய்யும், அவ்வாறு சித்திரவதை செய்து கொல்லும் போக்கை இன்னும் அறியாத இந்தியர்கள், இந்துக்கள், காபிர்கள் இருக்கலாம். தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1]. இதன் மூலம், மறுபடியும் இந்திய மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தலிபான் ஜிஹாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆமாம், உண்மையில் ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்[2].

Escape from Taliban-novel-film

சுஷ்மிதா பானர்ஜி, என்ற சையது பானர்ஜி கொலை செய்யப்பட்ட விதம்: ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்கண்ட செயல்களால் தெரிய வருகிறது[3]:

  • கணவனுக்குத் தெரிந்த நிலையில், அவரைக் கட்டிப் போட்டு, மனைவியை இழுத்துச் செல்லுதல் – அதாவது கணவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதனை காட்டியது.
  • தலைமுடியை பிடுங்கியது[4] – குரூரமான செயல் – அதாவது பெண்ணின் அடையாளத்தை உருகுலைத்தல்.
  • 20 தடவை சுட்டது – ஒரு பெண்ணை நேருக்கு நேராக இத்தனை தடவை சுடவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், தலிபானின், ஷரீயத்தின், இஸ்லாத்தின் தண்டனை எப்படி அமூல் படுத்தப் படும் என்பதைக் காட்டவே அவ்வாறு சுட்டுள்ளனர்.
  • இத்தனையும் அவர் கட்டப்பட்டுள்ள நிலையில் நடந்துள்ளது – அதாவது சித்திரவதை படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி கொலை செய்யப்பது ஏன்?: கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா பானர்ஜி, 49. சையது பானர்ஜி என்கின்ற இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வர்த்தகர் ஜான்பாஸ் கானை, 1989ல், திருமணம் செய்து கொண்டார். சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். இந்திய பெண் என்பதால், இவர் பர்தா எதையும் அணியாமல் நடமாடி வந்தார். இதனால், தலிபான்கள் இவரை மிரட்டினர். இவர் தன் வீட்டில் சுகாதார மையம் ஆரம்பித்து, சேவையாற்றி வந்தார். இதையும் மூடும் படி தலிபான்கள் எச்சரித்தனர். தலிபான்களின் உத்தரவை இவர் மதிக்காததால், ஒழுக்கம் தவறிய பெண்ணாக இவரைச் சித்தரிக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் அவரை, நாட்டை விட்டுத் துரத்த முயன்றனர். இதற்காக ஒரு முறை இவரைச் சிறை பிடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர்[5]. இதையெல்லாம் சுஷ்மிதா, கட்டுரையாக எழுதியுள்ளார்.

Susmita Banerjee (seated left) and actress Manisha Koirala in Ladakh when the film Escape from Taliban was shot.

தலிபானிடமிருந்து எந்த பெண்ணும் தப்ப முடியாது: “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[6]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[7]. இவருடைய அனுபவங்கள், 2003ல், “எஸ்கேப் பிரம் தலிபான்’ என்ற, இந்திப் படமாகத் தயாரிக்கப்பட்டது. இவருடைய வேடத்தில், நடிகை மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். தலிபான்களின் கெடுபிடிகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் வழியாக இவர் தாயகம் தப்பி வந்தார். தலிபான் ஆட்சி முடிந்ததால், மீண்டும் ஆப்கான் சென்று கணவருடன் வசித்து வந்தார். இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[8].இருப்பினும், தலிபான்கள் இவரை மறைமுகமாக மிரட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று இவர் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள், சுஷ்மிதாவின் கணவரைக் கட்டிப் போட்டு விட்டு, இவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாகச் சுட்டனர். பின், அங்கிருந்த இஸ்லாமியப் பள்ளியில் இவரது சடலத்தைப் போட்டு விட்டு ஓடி விட்டனர்[9].

Taliban executed Sayeed Banerjee

முஸ்லிம் கணவன் தன்னை ஏமாற்றியது: கல்கத்தாவில் ஜான்பாஸ் கானை சந்தித்து பிறகு கல்யாணம் செய்து கொண்டார். சுஷ்மிதா பானர்ஜி, சையது பானர்ஜி ஆனார். ஆனால், ஆப்கானிஸ்தானிற்குச் சென்றபோது தான் கணவருக்கு ஏற்கெனவே குல்குடி என்ற ஒரு மனைவி, குழந்தைகள் எல்லோரும் இருக்கின்றனர் என்ற விவரங்கள் தெரியவந்தன. அவரது பெற்றோர்கள் எப்படியாவது, விவாக ரத்து செய்து கொண்டு மகளை மீட்கவேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால், சுஷ்மிதா பானர்ஜி, கணவரின் மீது இரக்கம் கொண்டது மட்டுமல்லாது, அக்குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். பிறகு டின்னி என்ற தனது மைத்துனரின் மகளை தத்து எடுத்துக் கொண்டார்[10]. மாறக கணவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. கர்ஸாய் பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்படும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும், தலிபான்கள் “பெண்கள் இருக்கும் இடம் பாவங்களின் உறைவிடம்” என்று தான் பறைச்சாற்றிக் கொண்டு வருகின்றனர், அவர்களுக்கு தண்டனை என்று கொன்றும் வருகின்றனர்[11].

Ms Banerjee wrote a best-selling memoir about her life in Afghanistan

முஸ்லிமை கல்யாணம் செய்து கொண்டு, முஸ்லிம் ஆனாலும், பெண்கள் அடிமைகள் தாம்: இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இருப்பதினால் தான், முஸ்லிம்கள் மற்றவர்களை ஏமாற்றி வருகின்றனர். பயந்து கொண்டுதான், முஸ்லிம்களைப் பற்றி உண்மையை சொல்லாமல் இருக்கின்றனர். இஸ்லத்தைப் பொறுத்த வரையில், பெண்கள் என்றுமே ஆண்களுக்கு நிகராக வர முடியாது. அவ்வாறு நினைத்துப் பார்க்கவே முடியாது. இப்பொழுதைய நவீன காலத்தில், மேனாட்டு சித்தாந்திகள், அறிவுஜீவிகள் முதலியோரை ஏமாற்றுவதற்காக, சில பெண்களை, ஏதோ முனேற்றம் அடைந்து எல்லா உரிமைகளையும் பெற்றுவிட்டதைப் போல காட்டிக் கொள்வர், பிறகு கொல்வர். ஆமாம், இறப்பு தான் பெண்ணிற்கு சிறந்த, உன்னதனமான நிலை, முடிவு. இதனால் தான், பெண்-ஜிஹாதிகள் உக்கிரமாக, தீவிரமாக, பயங்கரமாக செய்ல்பட்டிருக்கிறார்கள். இது முஸ்லிம் பெண்களைப் பற்றிய இரண்டு நிலைகள். முஸ்லிம் அல்லாத பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவள் அடிமையைவிட கீழ்த்தரமாக நடத்தப் படுவாள். அதுதான் வளைகுடா நாடுகளில் நடந்து வருகிறது. இடைக்காலத்து ஹேரம் என்ற முறை, இப்பொழுது இவ்விதமாக செயல்பட்டு வருகிறது. காபிர்களான பெண்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் முஸ்லிம்களுக்கு அர்பணித்துவிட வேண்டியது தான். சாவுதான் அவளுக்கு அத்தகைய குரூரங்களினின்று விடுதலை கொடுக்கும்.

execution of women by Taliban

இவரது நாவல் திரைப்படம் ஆனது, ஆனல், உடல் பிணமானது: இப்பெண்ணின் நாவல் / புதினம், திரைப்படம் ஆகியிருக்கலாம். ஆனால், அத்தகைய படம் வந்ததா என்றே தெரியவில்லை என்பது நோக்கத்தக்கது. இன்றைக்கு, ரோஜா, மும்பை, விஸ்வரூபம் போன்ற படங்களை தடை செய் என்று தமிழகத்திலேயே முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். பிறகு, இப்படத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இவரது நாவல் திரைப்படம் ஆகியிருக்கலாம், ஆனால், ஆவரது உடல் இப்பொழுது பிணமாகியுள்ளது என்பதுதான் உண்மை. ஆமாம், இஸ்லாம் அவருக்கு விடுதலை கொடுத்துள்ளது.

© வேதபிரகாஷ்

06-09-2013


[3] “We found her bullet-riddled body near a madrassa on the outskirts of Sharan city this morning,” provincial police chief Dawlat Khan Zadran said, confirming earlier reports from Indian media. “She had been shot 20 times and some of her hair had been ripped off by the militants,” he said, adding that masked men had tied up the writer and her Afghan husband, local businessman Jaanbaz Khan, before executing her.

http://www.abc.net.au/news/2013-09-06/taliban-sushmita-banerjee-afghanistan-indian-authors/4939634

[6] The report, quoting Afghan police officials, said Taliban militants arrived at her home in, Kharana, capital of Paktika province, tied up her husband and other members of the family, took Banerjee out and shot her. They dumped her body near a religious school. No militant group has yet said it killed Banerjee, 49, also known as Sayed Kamala, who was married to an Afghan businessman Jaanbaz Khan. She earned fame for her memoir, A Kabuliwala’s Bengali Wife, recounting her life in Afghanistan and her escape in 1995. The memoir was made into ‘Escape from Taliban’, a Bollywood film starring Manisha Koirala. The film was touted as a “story of a woman who dares [the] Taliban”. The deceased had recently moved back to Afghanistan to live with her husband, the report said. In an article in Outlook magazine in 1998, she had written that “life was tolerable until the Taliban crackdown in 1993” when the militants ordered her to close a dispensary she was running from her house and “branded me a woman of poor morals”.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Indian-diarist-Sushmita-Banerjee-shot-dead-in-Afghanistan/Article1-1117939.aspx

[11] Banerjee’s execution does not bode well for Afghanistan’s women, especially when their empowerment under the Hamid Karzai regime was held up as one of the greatest successes of the Nato coalition forces. Human rights groups operating in Afghanistan and abroad say that a string of laws passed by the parliament will expose women to extreme forms of abuse. The Islamists have been demanding shutting down of women’s shelters which they describe as “dens of immorality”.

http://timesofindia.indiatimes.com/india/Indian-author-Sushmita-Banerjee-executed-in-Afghanistan-by-Taliban/articleshow/22349517.cms

இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்?

ஏப்ரல் 20, 2013

இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்?

Karu at IUML conference receiving momento

11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.

Karu-Arjun and Lenin-Krishna

கௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:

Hindu a thief of sorts: KarunanidhiTNN | Oct 25, 2002, 10.04 PM IST – Times of India.

CHENNAI: It was the DMK chief’s strongest pitch against Hindutva. Talking at a public meeting on Thursday evening, organised by minority communities to protest the religious conversion ordinance, M Karunanidhi said, “Who is a Hindu? You must ask Periyar EVR. A good man would say the word Hindu means a thief[8]. I don’t think of the Hindu in such demeaning terms. I’d prefer to say the term means someone who steals the heart.” He, however, did not explain the source of his claim. What is pertinent to note is that DMK is a key constituent of NDA.

OLYMPUS DIGITAL CAMERA

கௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].

Karu temple - later removedகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்!

19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].

karunanidhi-with-kulla-eating-kanjiகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.

23-04-2013 அன்று என்ன நடக்கும்?: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

  • திராவிட சித்தாந்தத்தில் கட்டுண்டு,
  • திராவிட மாய வலையில் சிக்குண்டு,
  • பகுத்தறிவில் உழன்று,
  • சாதியில் மூழ்கி,

ஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,

  • தொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,
  • மனசாட்சியை நிர்வாணமாக்கி,
  • மரத்துப் போக செய்ததில்

இத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே,  23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –

  • கருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.
  • சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்.
  • கண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.
  • அதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.
  • இல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.

இந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்!

வேதபிரகாஷ்

20-04-2013


[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST

http://dinamani.com/tamilnadu/2013/04/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/article1552913.ece

[9] On October 24, 2002, newspapers carried Karunanidhi’s statements that said the term ‘Hindu’ meant ‘thief’. A criminal complaint was lodged by B R Gouthaman with the Mambalam police, stating that these statements bashing Hindus had hurt their sentiments and created unrest in society.

http://timesofindia.indiatimes.com/city/chennai/11-year-old-case-comes-back-to-haunt-Karunanidhi/articleshow/19632749.cms

http://www.thinaboomi.com/2013/04/19/21309.html

[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694490

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ஏப்ரல் 20, 2013

பகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.

ஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்!

பகுத்தறிவு தீவிரவாதம்

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…

View original post 778 more words

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

ஏப்ரல் 20, 2013

இப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.

சட்டத்தை மீறும் நீதிகள்

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

சங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

அதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.

குற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.

அங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.

மகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.

அதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.

ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

  1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
  2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
  3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
  4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
  5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
  6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
  7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
  8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
  9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது /…

View original post 285 more words