Archive for the ‘ஊக்குவிப்பு’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம்என்ன? (1)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? (1)

உள்ஒதுக்கீட்டிலும்உள்ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது: கிருத்துவத்தில், கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ மதத்தில் 3000-4000ற்கும் மேலாக சமூகப் பிரிவுகள், சமுதாயக் கட்டமைப்புகள், குமுக தனி அமைப்புகள் எல்லா நாடுகளிலும், இந்தியாவில் மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மிஷினர்கள் அவ்வாறுத்தான் பிரகடனப் படுத்திக் கொண்டு, அமெரிக்க-ஐரோப்பிய மற்ற அயல்நாட்டு மிஷின்களிடமிருந்து பணத்தைப் பெற்று வருகின்றன. அதனை வைத்து பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் நன்றாக கொள்ளையடித்து ஜாலியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த விசயம் தான். ஆனால், இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நல திட்டங்கள் மற்றும் நிதியுதவி முதலியவற்றிலும், மதரீதியில் பங்குப் போட்டுப் பெற, தனி மதநல வரியம் என்று ஆரம்பித்துள்ளனர். இதிலும், ஆதிக்கக் கிருத்துவர் எங்கு மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்று விடுவரோ என்று பயந்து, உள்ஓதுக்கீட்டிலும்-உள்-ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது மதநம்பிக்கையால் அவர்கள் மதமாற்றப் படவில்லை, மோசடிகளால் மற்ற காரணங்களுக்காக மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர், என்பது உறுதியாகிறது.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்தது: செபி பேராயம் சார்பில் அதன் தமிழக தலைவர் பேராயர் மேசக் ராஜா தலைமையில், செபி பேராயத்தின் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் 05-09-2022 அன்று சந்தித்தனர்[1]. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா[2], “செபி பேராயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்துள்ளோம். இதில் சட்ட சபையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது –

  1. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
  2. 1997ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகளை விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
  3. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு தாலுகாவிற்கு 3 ஏக்கர் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.

இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்: இப்படி கேட்பதிலிருந்து, கிருத்துவர்களிடம் உள்ளா 3000-5000 பிரிவுகளைத்தான் குறிக்கிறது. தனி கல்லறைகள் என்பது, டினாமினேஷகளில் தான் அதிகம் உள்ளது போலிருக்கிறது. ஏனெனில் சடங்குகள் செய்வதிலிருந்து, சலுகைகள், நிதியுதவி பெறுவது போன்றவற்றில், அந்தந்த சர்ச், டினாமினேஷன் என்று தான் கிடைக்கும். ஆகவே, அவர்கள் அவ்விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். “பங்கு தந்தை” என்று தெளிவாக பெயரை வைத்துள்ளார்கள். ஆகவே, “பங்கு தந்தை” ஏரியா./ சர்ச் / பகுதி விட்டு ஏரியா வந்து வசூல் செய்ய முடியாது. ஆக, செபி பேராயம் கேட்டுள்ளது, அவர்களது நியாயப் படி போலும். இதெல்லாம் அவர்களது உள்-விவகாரப் பிரச்சினை போல காட்டிக் கொண்டாலும், நிதர்சன நிலையில், அவர்களது வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகிறது. அரசு எப்படி கொடுக்கும், இவர்கள் எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்து கூறியது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது[3]. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழக அரசு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். புதிதாக தேவாலயங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தெந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை வழங்கப்படுகின்றது. பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூருகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட முடிவு செய்தது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்[4]. அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டது[5]. சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது[6]: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ‘‘கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்,’’ என்று அறிவித்தார்[7].

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட்டது: இதையடுத்து, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையான மாத ஊதியம் இல்லாமல், தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரின் நன்கொடைத் தொகையில் இருந்து, சிறு தொகைவழங்கப்பட்டு வருகிறது. எனவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்[8]. இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் நல வாரியத்தை அமைக்க ஒப்புதல் வழங்குகிறது[9]. நலவாரிய உறுப்பினர்-செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும்பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] நக்கீரன், தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படும் சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும்” – செபி பேராய தலைவர்!, நக்கீரன் செய்திப்பிரிவு  பி.அசோக்குமார், Published on 09/05/2022 (16:28) | Edited on 09/05/2022 (16:39)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-need-repeal-law-denies-permission-build-church-and-gather-people

[3] வெளிநாடுகளில் இப்பொழுதெல்லாம், கிருத்துவர்கள் தங்களது இறந்தவர்களின் உடல்களை எரிக்க அரம்பித்து விட்டர்கள். இல்லை, அடுக்கு மாடிகள் போன்று அடக்கம் செய்ய பெட்டிகள் போன்று அமைத்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, மற்ற உடல்களை உதைக்கிறார்கள்.

[4] தினத்தந்தி, தேவாலய பணியாளர்களுக்கு நலவாரியம்தமிழக அரசு அரசாணை, Jun 1, 7:24 pm.

[5] https://www.dailythanthi.com/News/State/welfare-board-for-church-employees-government-of-tamil-nadu-712597

[6] தமிழ்.இந்து,  கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்களுக்கு நலவாரியம், செய்திப்பிரிவு, Published : 02 Jun 2022 06:39 AM, Last Updated : 02 Jun 2022 06:39 AM

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/808626-welfare-for-christian-church-preachers-1.html

[8] தினகரன், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர்கள் நல வாரியம்: அமைச்சர் தகவல், 2021-09-09@ 00:11:32

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=703789

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

நவம்பர் 1, 2022

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

காஞ்சுக்கல் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலையில் மூவர் கைது: கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45. இவர் லிங்காயத் சமுதாய மடமான இங்கு 1997 முதல் பசவலிங்க சுவாமி மடாதிபதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார். மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் 30-10-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன[2]. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[3]. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது[4]. அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயரை மடாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

மடங்கள் அரசு, அதிகாரம் மற்றும் அரசியலுடன் சம்பந்தப் பட்டிருப்பது: கர்நாடகாவைப் பொறுத்த வரையில், லிங்காயத் சாமிகள் அதிக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழகத்து சங்கராச்சாரியார் போல, எல்லா அரசியல்வாதிகளும் இவர்களிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோலவே, இந்திரா காந்தி, சோனியா காந்தி, இப்பொழுது ராகுல் காந்தி என்று எல்லோரும் வந்து, இவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். மேலும், பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், கோடிகணக்கில் நிலம், முதலிய சொத்துகளும் இருக்கின்றன. பள்ளிகள் என்று நிறுவனங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. இதனால், ஆளும் அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும், மடங்களுக்கும் சம்பந்தங்கள், உறவுகள் மற்றும் போக்குவரத்துகள், பலவிதங்களில் இருந்து கொண்டே இருக்கும். ஆட்சி, அதிகாரம் மாறினாலும், இத்தகைய உறவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறாகத்தான், இந்த மடாதிபதியு சிக்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவ்வாறு திட்டமிட்டு தற்கொலைக்குத் தூண்டியது இன்னொரு மடாதிபதி.

இதையடுத்து, போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: ராம்நகர எஸ்.பி, சந்தோஷ் பாபு, 30-10-2022 அன்று இந்த விவரங்களை கூறினார். தற்கொலை செய்து கொண்ட மடாதிபதிக்கு போன் செய்து பேசியது, தொட்டபல்லாபூரைச் சேர்ந்த நீலாம்பிகா, 22. இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியான இவருக்கு, கன்னுார் மடாதிபதி மிருத்யுஞ்ஜயாவின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தனக்கு பணகஷ்டம் என்று சொல்லி ரூ 500, 1000 என்றெல்லாம் வாகிக் கொண்டிருக்கிறாள். இந்த இரண்டு மடாதிபதிகளும் உறவினர்கள். இருவரது மடங்களும் மாகடி பகுதியில் தான் உள்ளன. பண்டி மடாதிபதியின் புகழை கெடுத்தால், தனக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கன்னுார் மடாதிபதி கணக்கு போட்டார். மேலும் இரண்டு மடங்களுக்கும் இடையே நிலம் பற்றி வழக்குகளும் உண்டு. இதனால், நீலாம்பிகையை வைத்து, காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மாட்ட வழி வகுத்தார். எனவே, தனக்கு அறிமுகமான நீலாம்பிகாவை, அவரிடம் ‘வீடியோ’ காலில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் பேச வைத்து, பதிவு செய்து கொண்டார்[5]. ஏப்ரலில் இந்த வீடியோக்கள் எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்த மாணவியும் ஏதோ காரணங்களுக்காக ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்துள்ளாள் என்று தெரிகிறது.

கன்னூர் மடாதிபதி வீடியோவை வைத்து காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மிரட்டியது: இந்த வீடியோவை பண்டி மடாதிபதியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ந்தார். மேலும், அந்த மாணவியையும் வைத்து எச்சரிக்க செய்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு தொடர்ந்து அடிக்கடி தொந்தரவு செய்து, நிலைமை மீறி மனத்தளவில் பாதிக்க்ப் பட்ட நிலையை அடைந்துள்ளார். அத்தகைய மிரட்டல்-சதாய்ப்புகளால், பயந்து, மனவலிமை இழந்து. 24-10-2022 அன்று, அவர் தற்கொலை செய்து கொண்டார்[6]. அவர் எழுதி வைத்த கடிதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை செய்தனர். முழு விவரங்கள், வீடியோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்தப் பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தனர். இதையடுத்து ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் –

  1. பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி  நீலாம்பிகா, இவர்களுக்கு உதவியாக இருந்த
  2. கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருத்யுஞ்ஜயா சுவாமி,
  3. மகாதேவய்யா, ஓய்வு பெற்ற ஆசிரியர், இப்பொழுது வக்கீல்

ஆகிய மூவரையும் போலீசார் 30-11-2022 அன்று கைது செய்தனர்[7].

போன்களை கைப்பற்றி உரையாடல்களையும் கேட்டு வபுலன் விசாரணை நடத்தப் பட்டது: கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், மாணவி நீலாம்பிகா, தற்கொலை செய்த மடாதிபதி தவிர, மேலும் பல பிரமுகர்களுக்கும் போன் செய்ததுடன், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்களையும் அனுப்பி உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், பங்கஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பண்டி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்கள் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்[8]. இதனால் மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீலாம்பிகா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தற்கொலைக்கான காரணம் என்ன?: இதுபற்றி விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்[9]. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர்[10]. மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை வைத்து அந்த பெண் உள்பட மேலும் சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், வழக்குக்கும் என்ன தொடர்பு? உள்ளது என்பது பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் மடத்தில் உள்ளவர்கள் உள்பட பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கைதானவர்களிடன் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்து மடாதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம்: முன்னமே பல சம்பந்தப் பட்ட பதிவுகளில் அகசியுள்ள படி, மடாதிபதிகள், தங்களது சீடர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட, குடும்ப, இல்லற மற்றும் பொருளாதார பிரச்சினைகள், குறைகள் முதலியவற்றை சொல்லி, தீர்வு காண முறையிடுவர். மடாதிபதிகள் இறை நம்பிக்கையுடன், எல்லாம் நல்லபடி நடக்கும் என்று தான் ஆசி வழங்குவார். அவ்வாறே நடக்கும் போது சீடர்கள், பக்தர்கள் முதலியோர் சந்தோஷம் அடைவர், நடக்கா விட்டால், வெளிப்படையாக பிரச்சினைக்குக் காரணமானவர்களைக் குறிப்பிட்டு, சமாதானம்  மத்தியஸ்தம் செய்ய கோருவர். பிடிவாதமாக, அடம் பிடித்து, ஆர்பாட்டமும் செய்வர். அழுது கலாட்டா செய்யும் ஆட்களும் உண்டு. அந்நிலைகளில், முடிந்த வரை மடாதிபதி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார். ஆனால், முடியாத போது, பிரச்சினைகள் வேறு வகையில் உருவெடுத்து, குற்றங்கலிலும் முடிகிறது. மடாதிபதிகளுக்குள் பிரச்சினை ஏற்படும் போது, சட்டரீதியில் நீதிமன்றங்களில் வழக்குகளாகச் செல்கின்றன. நிச்சயமாக அங்கு வழக்கு ஒரு மடாதிபதிக்கு வெற்றி என்றால், இன்னொரு மடாதிபதிக்கு தோல்வி என்றாகிறது. பிறகு, மேல்முறையீடு என்றெல்லாம் போகலாம். ஆனால், மடாதிபதிகள் தங்களது தார்மீக, தரும, மதக் கடமைகள், கிரியைகள், செயல்கள் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். அந்நிலைகளில் இத்தகைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] தினமலர், கர்நாடகா மடாதிபதி தற்கொலை விவகாரம்: கைதான கல்லூரி மாணவி குறித்துதிடுக், Updated : நவ 01, 2022  09:24 |  Added : நவ 01, 2022  09:21.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3159346

[3] தினத்தந்தி, மடாதிபதி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது, தினத்தந்தி அக்டோபர் 31, 2:59 am.

[4] https://www.dailythanthi.com/News/India/abbot-suicide-case3-people-including-a-college-student-were-arrested-826146

[5] தினத்தந்தி, ஆடையின்றி வீடியோ காலில் பேசிய சாமியார் உயிரை காவு வாங்கிய சபலம்இளம்பெண் பகீர் வாக்குமூலம், By தந்தி டிவி 31 அக்டோபர் 2022 2:16 PM

[6] https://www.thanthitv.com/latest-news/karnataka-bandemutt-swamiji-sucide-145746

[7] தினத்தந்தி கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல், நவம்பர் 2, 1:23 am (Updated: நவம்பர் 1, 10:18 am)

[8] https://www.dailythanthi.com/News/India/including-the-arrested-college-student3-people-in-police-custody-for-6-days-826808

[9] தமிழ்.ஒன்.இந்தியா, ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல், By Nantha Kumar R, Published: Sunday, October 30, 2022, 0:21 [IST].

[10] https://tamil.oneindia.com/news/bangalore/honeytrap-karnataka-lingayat-seer-suicide-case-bangalore-woman-and-2-others-arrested-by-police-482828.html

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ஒக்ரோபர் 16, 2016

 

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ravana-balaya-sri-lanka-fundamentalist-groupராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.

psdhivu-sri-lanka-16-10-2016இட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]:  “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதுஇலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].

ravana-balaya-sri-lanka-fundamentalist-group-jatayuகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்?: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.

dusshera-modi-sonia-pranab-etcமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].

प्रधानमंत्री नरेंद्र मोदी ने लखनऊ के ऐशबाग के रामलीला मैदान पर जय श्री राम के उद्घोष के साथ अपना भाषण शुरू किया। उन्होंने सभी को विजयादशमी की शुभकामनाएं दी। पीएम मोदी ने कहा कि यह मेरा सौभाग्य है कि मुझे अति प्राचीन कार्यक्रम में आने का सौभाग्य मिला। मुझे ने कहा कि विजयादशमी असत्य पर सत्य की विजय का त्यौहार है। हम रावण को हर वर्ष को जलाते हैं। रावण को जलाते समय हमें यह भी ध्यान रखना चाहिए कि हम अपने भीतर की व सामाजिक बुराइयों को भी खत्म करना चाहिए। விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.
मोदी ने कहा कि इस बार रामलीला का विषय आतंकवाद है। आतंकवाद मानवता का दुश्मन है। भगवान श्रीराम मानवता का प्रतीक है, वो आदर्शों का पालन करते हैं। आतंकवाद के खिलाफ सबसे पहले लड़ाई जटायु ने लड़ी थी, उसने एक स्त्री के सम्मान के लिए अत्याचारी से लड़ाई लड़ी थी। जटायु आज भी अभयता का संदेश देते हैं। साथ ही उन्होंने यह भी संदेश ‌दिया कि आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे। தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.
मोदी बोले आज आतंकवाद के कारण पूरा विश्व तबाह हो रहा है। हम सीरिया की तबाही की तस्वीर देख रहे हैं। आज जरूरी है कि पूरा विश्व आतंकवाद के खिलाफ एक हो। आतंकवाद के खिलाफ पूरी दुनिया को एक होना ही होगा। தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.
प्रधानमंत्री ने कहा कि आज पूरा विश्व गर्ल चाइल्ड डे मना रहा है। जब रावण ने एक सीता का अपहरण किया था तो हम लोग हर साल उसे जलाते हैं लेकिन आज मां के गर्भ में बेटियों की हत्या की जा रही है। हमें इस बुराई को मारना होगा। उन्होंने कहा कि घर में बेटा पैदा होता है ‌तो जश्न मनाया जाता है, अगर बेटी पैदा हो तो उससे भी बड़ा जश्न मनाया जाना चाहिए। आज हमें महिलाओं को बराबरी का अधिकार देना होगा। இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.

satan-mara-evil-etcமாரா, சாத்தான், எதிர்கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

16-10-2016

stoning-satan-hajj-ritual

[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம்! இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.

[2] http://www.pathivu.com/?p=90264

[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா? மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016  10:41 am

[4] http://tamil.adaderana.lk/news.php?nid=84482

[5] Economic Times, PM Narendra Modi’s Ravana terrorism comment draws ire in Sri Lanka, PTI, Updated: Oct. 14, 2016, 06.27 pm.

[6] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-narendra-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka/articleshow/54853192.cms

[7] Nai Dunia, मोदी के बयान से श्रीलंका में रावण के अनुयायी नाराज, Published: Fri, 14 Oct 2016 10:39 PM (IST) | Updated: Fri, 14 Oct 2016 10:42 PM (IST)

[8] http://naidunia.jagran.com/world-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka-835607

[9] The Hindu, Modi likens war on terror to killing of Ravan at Ramlila event, Updated: October 11, 2016 21:45 IST

[10] http://www.thehindu.com/news/national/other-states/live-modi-attends-ramlila-function-in-lucknow/article9208219.ece

[11] अमर उजाला, विजयदशमी पर बोले मोदी, आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे, टीम डिजिटल – लखनऊ, , Updated Wed, 12 Oct 2016 05:19 PM IST

[12] http://www.amarujala.com/lucknow/prime-minister-narendra-modi-in-lucknow

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

ஜூன் 12, 2016

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

காங்கிரஸின் எதிர்ப்பு - சைனிக் காலனி

காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ்மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.

No land to sainik colony protest - Hiriyat conferenceசைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2].  அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.

J and K assembly debate about sainik colonyமுஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது[3]. இதை எதிர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

sainik-colony- omar in twitterமுஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை  சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.

kashmiri-pandit-cries-for-human-rights.2காஷ்மீரப்   போர்வையில்  இந்து பெண்களின்   உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான்! இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு!

© வேதபிரகாஷ்

12-06-2016

[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ட்டசபையில் மெகபூபாஉமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST

[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.

[3] http://www.dailythanthi.com/News/India/2016/06/06165811/Mehbooba-Omar-in-war-of-words-over-Sainik-Colony-issue.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=222249

[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By  ஸ்ரீநகர், First Published : 10 May 2016

[6] http://indianexpress.com/article/india/india-news-india/sadhvi-prachi-make-india-muslim-free-2839903/

[7]http://www.dinamani.com/india/2016/05/10/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article3424409.ece

[8] http://scroll.in/latest/809537/its-time-to-rid-india-of-muslims-sadhvi-prachi-says-in-communal-strife-torn-roorkee

[9] Furthermore this controversial speech was made while she was speaking in Uttarakhand’s Roorkee, where at-least 32 people were injured last week as a part of a clash between two communities over forcible evacuation of a scrap dealer’s shop.

http://www.storypick.com/sadhvi-prachi-rant/;

[10] https://www.youtube.com/channel/UC9G9oq-mPIo9_Y6iEvTn72wtps://youtu.be/BOZOCYHpeSs

[11] http://www.news18.com/news/politics/time-to-make-india-free-of-muslims-sadhvi-prachi-1253346.html

[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST

[13]http://www.dinamani.com/india/2016/06/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/article3474687.ece

[14] http://www.indianexpress.com/news/sc-pulls-up-jandk-for-bid-to-justify-ex-gratia-policy/1170131/

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

பிப்ரவரி 12, 2016

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

சமஸ் எழுத்தாளர் - சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன்.  “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].

sami - சமஸின் படம்

கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.

sami_தி இந்துவில் சமஸ் படம்

அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது?: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.

A semi-nude winged Roman Victory holding a victors wreath in her right hand and victors palm-branch in her left.நிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா?: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்? போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும்? ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதைஎவ்வளவு பெரிய வன்முறை!” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை? சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா? பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே? அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே? இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது? சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா?

a close-up of the halos about the heads of Amphitrite and Neptune.ஆழ்வார்கள்நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது?: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது? அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே? கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது? அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா? ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

Bare-breasted goddesses on the Augustan Altar of Peaceசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம்! இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-12016

[1] http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html#more

[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது!

[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே? தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா?

[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே?

[6]  இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே?

[7]  பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை? இதுவும் குழப்பவாதமோ?

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

ஜனவரி 17, 2016

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 2012

2011லிருந்து மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது (2011 முதல் 2015 வரை): நவம்பர் 2011 முதல் மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறந்து வருகின்றன. ஜனவரி 2012 வாக்கில் 37 குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது[1]. மேற்கு வங்காள மாநிலத்தில் பரவி வரும் இனம் தெரியாத மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[2]என்று ஜூன்.2014லிலும் செய்திகள் வெளியாகின. மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மால்டா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர். சுமார் ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இதே போன்ற கோளாறுகளுடன் இன்றும் 3 குழந்தைகள் மால்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது[3]. இருப்பினும் கடந்த ஐந்தாண்டுகளாக மம்தா அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சரி, இதற்கு என்ன காரணம்?

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 25-01-2012குழந்தைகள் இறப்பையும், முஸ்லிம் பிரச்சினை என்று உண்மைகளை மறைக்கும் போக்கு:

  1. மால்டாவில் 57% முஸ்லிம்கள், அதில் 92% கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். அவர்களில் 12-13 வயதுகளிலேயே திருமணம் நடந்து விடுகின்றது.
  2. ஏழ்மையில் உழலும் அத்தாய்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடிவதில்லை.
  3. பர்துவான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மால்டாவில் உள்ள பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுகிறது என்பதனைக் காட்டுகிறது. முஸ்லிம்களிலோ இந்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.
  4. ஆனால், தேசிய ஊடகங்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவதில்லை. பெண்ணியக் குழுக்களும் கவலைப்படவில்லை.
  5. முஸ்லிம்கள் பிரச்சினை என்று செக்யூலரிஸ கோணத்தில் மறைக்கப்படுகிறது.
  6. இங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் குறைவாகவே இருக்கின்றனர். எல்லைப்புறத்தில் பலவித குற்றங்கள் நடக்கும் இடமாக இருப்பதால், இங்கு வேலை செய்வதற்கும் அஞ்சுகிறார்கள்.
  7. மேலும்முஸ்லிம்கள் எனும் போது தவிர்க்கவே செய்கிறார்கள்.
  8. ஜார்கென்ட், பீஹார், ஏன் பங்காளதேச பெண்களும் இன்கு அனுமதிக்கப்படுகிறார்கள்[4]. மேலும், மிகவும் மோசமான, இறக்கும் நிலையில் குழந்தைகளை எடுத்து வருவதால், டாக்டர்கள்-நர்சுகள் அஞ்சுகிறார்கள்.
  9. பழுக்காத லிச்சிப்பழம், விளாச்சிப்பழம் சாப்பிடுவதால் குழந்தைகள் இறக்கின்றன என்றும் விவாதிக்கப்பட்டது[5].
  10. ஆரோக்கியம் மற்றும் நலத்துறை பொறுப்பு மம்தாவின் பொறுப்பில் இருக்கிறது. இதை ஒரு செக்யூலரிஸப் பிரச்சினையாக இருப்பதால், அமைதியாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஒருநிலையில் மம்தா இதெல்லாம் வெறும் வதந்தி என்று கூட சொல்லியது வியப்பாக இருந்தது[6].

ஆக பங்காளதேச முஸ்லிம்களின் ஊடுருவல், சிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் மறைக்கப்படுகின்றன. இதே வேறு மாநிலமாக இருந்தால், தினமுன் இதைப்பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பர்.

Malda Kaliachak polic stationசிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், ஏன் மறைக்கப்படுகின்றன?: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது? சேலம், ராஜஸ்தான் பிரச்சினைகள் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள், ஆனால், மால்டா பற்றி, ஒன்றுமில்லை. மால்டாவில் 2011 மற்றும் 2015 இரண்டு முறை இந்திய வரலாற்றுப் பேரவை நடத்தி, ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களைக் கூட்டி, ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கச் செய்த போதும், இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அப்படியென்றால், அவர்களும் இதனை முஸ்லிம் பிரச்சினை என்றே கருதி அமைதியை கடைப்பிடிக்கின்றனரா அல்லது உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றனரா?

Malda map, IHC, poppy cultivationமால்டாவும், அயோத்தியாவும் (டிசம்பர் 2015): மால்டாவில் என்ன நடந்தாலும், அங்கு டிசம்பர் 28 முதல் 30 வரை மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, திடீரென்று மால்டாவில் மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு தெரிய வந்ததும், ஐயோ இதுவும் மிகவும் ஆபத்தானது, சட்டத்திற்கு புறம்பானது என்று ஓலமிட்டது திகைப்பாக இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[7]. இர்பான் ஹபீப், ஆதித்திய முகர்ஜி, ஷெரீன் மூஸ்வி, பி.பி.சாஹு, இந்து பங்கா போன்ற பிரபலமான சரித்திராசிரியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது இருந்தனர்.

14-ramjanmabhumi-naya-mandir-pillars-are-readyபல ஆண்டுகளாக வெளிப்படையாக நடந்து வரும் கட்டிட வேலை எப்படி சட்டமீறல் ஆகும்?: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது? இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா? அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன்? மால்டாவில் என்ன சட்டமீறல்கள் நடக்காத புண்ணிய பூமியாக இருந்து வருகிறதாமப்படியென்றால், இவர்களின் உள்நோக்கம் தான் என்ன?

© வேதபிரகாஷ்

17-01-2016

[1]  Soudhriti Bhabani, Dreams die young in horror hospital where 37 children have died in less than a week, UPDATED: 09:17 GMT, 25 January 2012.

[2] மாலைமலர், மேற்கு வங்காளத்தில் மர்ம நோய்: 8 குழந்தைகள் பலி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 07, 2014, 1:07 PM IST.

[3] http://www.maalaimalar.com/2014/06/07130751/8-children-die-in-West-Bengal.html

[4] Sources said women in labour were admitted to the Malda hospital from the block healthcare units and from neighbouring states, such as Jharkhand and Bihar, and even Bangladesh.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2091391/Malda-crib-deaths-37-children-died-West-Bengal-hospital-week.html

[5] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Unripe-litchis-harmful-for-children-Bengal-minister-says-after-Malda-deaths/articleshow/36401764.cms

[6] Even as West Bengal Chief Minister Mamata Banerjee recently called the spurt in infant death cases  in state hospitals a “rumour”, 10 more children were reported dead in Malda sub-divisional government hospital in the last 48 hours.

http://indiatoday.intoday.in/story/infant-deaths-continue-in-malda-hospital-10-more-die-in-48-hours/1/171845.html

[7] http://indianculturalforum.in/index.php/2016/01/11/indian-history-congress-dont-break-monuments-dont-incite-religious-sentiments/

[8] http://ayodhyatourism.com/karsevak-puram/

ஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை!

ஜனவரி 16, 2016

ஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை!

ஜன்சத்தா புகைப்படம் - கமலேஷ் திவாரி சிறையில்ஆஸம் கானுக்கு ஒரு சட்டம், கமலேஷ் திவாரிக்கு ஒரு சட்டமா?: ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று ஆர்.எஸ்.எஸ்காரர்களை நிந்தித்து, அவதூறாக பேசியது ஆஸம் கான் என்ற அடிப்படைவாதி உபி அமைச்சர்தான். அவ்வாறு பேசியது நவம்பர் 29, 2015. இவருக்கு இதுபோல தூஷ்ணமாக, அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக, பேசுவது வாடிக்கையாகவே இருக்கிறது. இருப்பினும், முல்லாயம் சிங் யாதவோ அல்லது அகிலேஷ் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. ஏனெனில் முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும். இதனால், கமலேஷ் திவாரி பதிலுக்கு தூஷித்தார். டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். விசயம் அறிந்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அன்றே உத்தரவிட்டு, திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காக்கச் சொன்னார். மேலும் சட்டப்படி திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், முஸ்லிம்கள் விடுவதாக இல்லை. ஏனெனில், அவர்களுக்குப் பிரச்சினை மால்டாவில் உள்ளது. பீஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் என்று மூன்று மாநிலங்களில் பங்களாதேசத்து தீவிரவாதிகள் மேலே குறிப்பிட்ட எல்லா சட்டமீறல் குற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எல்லையில் இருக்கும் மால்டாவில், அவை வெளிப்பட்டு வருவது, சங்கடமாகி விட்டது.

Eminent historians, IHC, resoltionஇந்திய வரலாற்றுப் பேரவை உறுப்பினர்களுக்குண்டான சங்கடங்கள்: போதாகுறைக்கு, டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்தனர்[1]. “உள்ளூர் சரித்திரம்” பற்றி அறிந்து கொள்ள அவர்கள் ஆவலாக இருந்தது சாதாரணமான விசயம் தான். பொதுவாக ஆய்வுக்கட்டுரைகள் அவ்வாறே சமர்ப்பிக்கப் படும். ஆனால், மால்டாவில் அவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் இல்லை, தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நிலைதான் உள்ளது. அவர்கள் நன்றாகக் கவனிக்கப்பட்டாலும், உள்ளூர் விவகாரங்கள் திகைக்க வைத்தது. அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரிந்து வந்தது அவர்களுக்கு வுத்தியாசமாகத்தான் இருந்தது. மாலை-இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றெல்லாம் கெடுபிடி செய்யப்பட்டது. அப்பொழுதுதான், மார்க்சீய ஆதரவாளர்கள் என்னத்தான் மறைக்க முயன்றாலும், இந்த விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் இவர்கள் மால்டாவை விட்டு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஜனவரி 1, 2016 வங்காள மக்களுக்கு “கல்பதரு தினம்” ஆகும். அதாவது, தக்ஷிணேஷ்வர காளிமாதா கோவிலில் ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். பக்தர்கள் தாங்கள் என்ன நினைத்து / வேண்டிக் கொண்டாலும் அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அன்றுதான் கலவரங்கள் ஆரம்பிக்கும் என்று தெரியாது.

Gulam Rasool Balyawi denies his involvementஇடாராஷரியா (इदारा-ए-शरिया), இத்திஹாத்மில்லத் முதலிய மதவாத இயக்கங்கள் கலவரங்கள் நடத்தியது: உண்மையில் 01-01-2016 அன்றே வெள்ளிக்கிழமை முசபர்நகரில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கூடி ஆர்பாட்டம் நடத்தி, திவாரிக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று வெறித்தனமான கோரிக்கையை வைத்தனர் அதாவது “பத்வா” ரீதியில் ஆணை போட்டனர்[2]. தலைக்கு ரூ.51 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது[3] ( कोई कमलेश को फांसी देने की मांग कर रहा है तो कोई 51 लाख में उसको मार देने पर खुले आम ऐलान कर रहा हैl). அதாவது, எந்த வழக்கும் பதிவு செய்யாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல், திவாரிக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமாம்! மேலும், திவாரி ஏற்கெனவே ஜெயிலில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மௌலானா காலித் [Maulana Khalid] என்ற மதத்தலைவரின் தலைமையில் இத்திஹாத்-இ-மில்லத் [‘Ittehad-e-Millat’] என்ற அடிப்படைவாத அமைப்பின் கீழ் ஆர்பாட்டம் நடைப்பெற்றது[4]. பெங்களூரு, தில்லி முதலிய இடங்களிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. 07-01-2016 அன்று பிஹாரில் புர்னியா மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற முஸ்லிம்கள் வாகனங்களை எரித்து அங்குள்ள போலீஸ் ஷ்டேசனைத் தாக்கிக் கொளுத்தினர்[5].  ஆனால், சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

Edara-e-Sharias accepted that they organized the rally.2கல்பதரு தினத்தில் கலவரங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன: 01-01-2016 அன்று இடாரா-இ-ஷரியா [Idara-e-Shariya] என்ற இன்னொரு இஸ்லாமிய அடிப்படவாத இயக்கம் ஆர்பாட்டம் நடத்தி, காலியாசக் (कालियाचक) போலீஸ் ஸ்டேசனைத் தாக்கித் தீக்கிரையாக்கியது[6]. போராட்டம் நடத்த தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகித்தத்து, கூட்டம் கூட்டியது, கலவரம் ஏற்படுத்தியது, தாக்குதல் நடத்தியது எல்லாமே குலாம் ரஸூல் பல்யவி [JD(U) MP Gulam Rasool Balyawi ] என்ற மதத்தலைவர் பெயரில் நடந்துள்ளது[7]. இவர் ஜனதா தள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். ஆனால், டைம்ச்-நௌ டிவி பேட்டியில், இவர் கூறும்போது, அதிகாரிகளிடம் புகார் கொடுத்து திரும்பும் போது தான் கலவரம் நடந்தது, அதில் ஈடுபட்டவர்களுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். ஆனால், ஊர்வலத்தை-ஆர்பாட்டத்தை நடத்தியது தான்தான், அதற்கு அனுமதியுள்ளது என்று அவ்வியக்கத்தின் சேர்மேன் / தலைவர் ஒப்புக்கொண்டார் என்று டைம்ஸ்-நௌ அறிவித்துள்ளது[8]. தாங்கள் SBDO / BDO அலுவலகங்களுக்கு செல்வோம் என்று போலீஸாரிடம் அறிவித்தீர்களா என்று கேட்டதற்கு, அவர் “இல்லை” என்றார். அதுபோலவே, எத்தனை கூட்டம் வரும், வந்தது என்றெல்லாம் தமக்குத் தெரியாது என்றார்.

Gulam Rasool Balyawi mp with leadersபிரச்சினையின் பின்னணி என்ன?: இந்தியில் வந்துள்ள விசயங்கள் முறையாக மற்ற மொழிகளில் வருவதில்லை. இதனால், மற்ற மொழிகளில் அரைகுறையாக செய்திகள் வருகின்றன. அதனால், தவறான கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆஸம் கானால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை தான் ஆரம்பமாக இருக்கிறது.

क्या है मामला[9]

मामला उस वक्‍त शुरू हुआ, यूपी के कैबिनेट मंत्री आजम खान ने 29 नवंबर को कथित तौर पर राष्‍ट्रीय स्वयंसेवक संघ के बारे में कुछ आपत्‍त‍िजनक टिप्‍पणी की। कुछ रिपोर्ट्स के मुताबिक, इसकी प्रतिक्र‍िया में ही तिवारी ने कथित टिप्‍पणी की। कुछ दिन तक उनका बयान सोशल मीडिया पर सर्कुलेट हुआ, जिसके बाद मुस्‍ल‍िम धर्मगुरुओं का ध्‍यान इस ओर गया। बाद में तिवारी का बयान उर्दू मीडिया में भी छपा। बयान पर पहली प्रतिक्रिया स्‍वरुप 2 दिसंबर को सहारनपुर के देवबंद में एक बड़ा प्रदर्शन हुआ। इसमें दारूल उलूम के स्‍टूडेंट्स शामिल हुए। मुसलमानों में फैले गुस्‍से के मद्देनजर तिवारी को 2 दिसंबर को अरेस्‍ट कर लिया गया। वह फिलहाल जेल में हैं। शांति कायम करने के लिए सीएम अखिलेश यादव ने मुस्‍ल‍िम धर्मगुरुओं के साथ बीते बुधवार को अपने आवास पर मीटिंग भी की। सीएम ने आश्‍वासन दिया कि तिवारी के खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी।

 

பிரச்சினை என்ன?

நவம்பர் 29, 2015 அன்று உபி அமைச்சர், ஆஸம் கான், ஆர்.எஸ்.எஸ் பற்றி நிந்தனைகுரிய வார்த்தைகளை உபயோகித்தார். இதற்குப் பிறகு திவாரியின் பதிலும் வந்தது. சமூக வலைதளங்களில் அவை வெளிவந்தன. பிறகு ஊடகங்களில் வந்தன. டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். அன்றே திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காகச் சொன்னார்.திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

आजम को क्यों भूल गए[10]

निश्चित तौर पर कमलेश तिवारी को पैगंबर मुहम्मद साहब के अपमान के लिए सजा मिलनी चाहिए। सजा के रूप में तिवारी को अरेस्ट भी कर लिया गया। लेकिन सवाल ये भी उठता है कि जहां से इस मामले को पहली चिंगारी मिली कार्रवाई तो उस सिरे से लेकर आखिरी कोने तक होनी चाहिए। केवल इसलिए क्योंकि आजम सपा सपा के वरिष्ठ मंत्री हैं, इसलिये उन्हें छोड़ दिया जाये?

ஆஸம் கானை மறந்தது ஏன்?

கமலேஷ் திவாரி நிச்சயமாக, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும். அதன்படியே கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால், பிரச்சினை ஆரம்பித்து வைத்த நபரை ஏன் விட்டுவிட்டனர்? ஆஸம் கான் தானே முதலில் அவதூறாக பேசியது? கேபினெட் அமைச்சராக இருக்கிறார் என்பதால் விட்டுவிடலாமா?

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தி.ஒன்.இந்தியா இதனை வெளியிட்டுள்ளது, ஆனால், தமிழ்.ஒன்.இந்தியாவுக்குத் தெரியவில்லை போலும்! மரண தண்டனை கூடாது என்று அடிக்கடி கலாட்டா செய்யும் மனித உரிமை போராளிகள், சட்டமேதைகள் மற்றும் அறிவிஜீவிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[2]  http://zeenews.india.com/news/india/who-is-kamlesh-tiwari-why-1-lakh-muslims-are-demanding-death-penalty-for-him_1833614.html

[3] http://hindi.revoltpress.com/nation/millions-of-muslims-in-the-streets-but-administration-in-silent-mode/

[4] Protesters under the banner of ‘Ittehad-e-Millat’ led by Maulana Khalid, closed their business and demonstrated against the Hindu Mahasabha activist.

http://zeenews.india.com/news/india/who-is-kamlesh-tiwari-why-1-lakh-muslims-are-demanding-death-penalty-for-him_1833614.html

[5] http://zeenews.india.com/news/bihar/malda-fire-reaches-bihars-purnea-protesters-ransack-police-station_1842893.html

[6]  http://www.ndtv.com/cheat-sheet/mob-violence-near-malda-home-ministry-asks-mamata-government-for-report-1262797

[7] http://www.timesnow.tv/MaldaCoverUp-Prove-charges-against-me/videoshow/4484253.cms

[8] Days after TIMES NOW highlighted Muslim group Edara-e-Sharia’s link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3 which turned violent. Speaking to TIMES NOW, the chairman said that they organised the rally to protest against the alleged blasphemous comments by a right wing leader. He had also said that the group had taken permission from the police to hold the rally.

http://video-timesnow-yahoopartner.tumblr.com/post/137217294120/malda-violence-edara-e-sharia-admits-organising

[9] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[10] http://hindi.oneindia.com/news/features/malda-purnia-violence-connection-with-azam-khan-374469.html

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (3)!

நவம்பர் 18, 2015

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடிஎதிர்ப்பு, இந்தியவிரோதம்இந்தியர்களுக்கு ஆபத்தானது (3)!

Samantha Cameron opted for an elegant sari as she joined her husband and Prime Minister Narendra Modi backstage at Wembley

Samantha Cameron opted for an elegant sari as she joined her husband and Prime Minister Narendra Modi backstage at Wembley

மோடி வரவேற்க்கப்பட்டது, மூன்று நாள் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது: இனி மோடியை வரவேற்றவர்களைப் பற்றிப் பார்ப்போம். பொருளாதார முதலீடு மற்றும் அந்நிய நாட்டு நட்புற மேன்பாடு என்ற ரீதியில் வந்த மோடியை வரவேற்க ஏற்பாடுகள் சில மாதங்களாக நடந்து முடிந்தன. இதற்கான பிரத்யேக இணைதளத்தில் எல்லா விவரங்களும் கொடுக்கப்பட்டன[1]. தீபாவளி நேரத்தில் வருவதால், சிறந்த வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற விதத்தில் ஏற்பாடுகள் நடந்தன[2]. இரு நாட்டு நல்லுறவு மேன்பட அவை உறுதியாக இருந்தன. “ஐரோப்பிய இந்திய போரம்” என்ற அமைப்பால், “யு.கே வெல்கம்ஸ் மோடி” நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன[3]. எண்ணிக்கையில் 414 என்று பல்வேறு நிறுவனங்கள், இயக்கங்கள் வரவேற்கும் குழுக்களில் இருந்தனர்[4]. இங்கிலாந்தில் உள்ள 1.6 மில்லியன் இந்தியா வம்சாவளியினர், இந்நிகழ்ச்சியை கொண்டாட ஆவலாக இருந்தனர். அவ்வாறே வெற்றிகரமாக செய்து முடித்தனர். துரதிருஷ்ட வசமாக, அதே 13-11-2015 அன்று மாலையில், பாரிஸில் தீவிரவாத தாக்குதல் நடந்ததால், இவை அமைதியாக நடந்து முடிந்தன. 15-11-2015 அன்று மோடி துருக்கிற்கு ஜி-20 கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.

Samantha Cameron dazzled in a patterned sari as she joined her husband and prime minister Modi to greet performers backstage

Samantha Cameron dazzled in a patterned sari as she joined her husband and prime minister Modi to greet performers backstage

பிஹார் தோல்விக்குப் பிறகும் இப்பிரச்சாரம் தொடர வேண்டிய அவசியம் என்ன?: மோடியின் லண்டன் விஜயம் முன்னரே தெரிந்த விசயம். மோடி-எதிர்ப்பு குழுக்களை சட்டப்படிக் கட்டுப்படுத்த, லண்டனில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்பாட்டம் நடத்த உரிமையுள்ளது என்பதனால், குறிபிட்ட இடத்தில் நின்று கொண்டு ஆர்பாட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படியே, அவர்கள் நடத்தி முடித்தனர். ஆனால், மோடி-ஆதரவு கூட்டம் என்பதை விட, உண்மையிலேயே, மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். கேமரூனின் மனைவி சமந்தா, இந்திய பெண்மணியைப் போன்று நெற்றியில் பொட்டு, ஜாக்கெட்-புடவை கட்டிக் கொண்டு வந்தார். இந்திய-இந்து பெண்களே அசந்து போகும் வரையில் வந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 60,000 இந்திய வம்சாவழியினர் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்தனர். வாணவேடிக்கைக்குப் பிறகு கலைநிகழ்ச்சி நடந்தது. கேமரூன் சமந்தா தம்பதியர் கலைஞர்களை பாராட்டினார். பிறகு, மோடி வழக்கம் போல பேசி, அனைவரையும் கவர்ந்தார். நிச்சயமாக அந்த அவாஸ் கோஷ்டிகளே வெட்கப்படும் அளவிற்கு நடந்தது. இருப்பினும், நவம்பர் முதல் வாரம் நடந்த விருது திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தைப் பற்றியும் அலச வேண்டியுள்ளது.

Bihar elections - September to October 2015

Bihar elections – September to October 2015

விருதுகள் திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரம்செப்டம்பரில் ஆரம்பித்து அக்டோபர் உச்சத்தை அடைந்து, நவம்பரில் முடிந்தது: செப்டம்பர் 4, 2015 அன்று உதய் பிரகாஷ் [Uday Prakash], என்ற இந்தி எழுத்தாளர், தனது சாகித்திய விருதைத் திருப்பியளித்தார்[5]. பிறகு நயந்தாரா ஷெகால் [Nayantara Sahgal], அஷோக் வாஜ்பேயி [Ashok Vajpeyi] விருதைத் திருப்பிக் கொடுத்தனர். கிருஷ்ண சோப்தி, [Krishna Sobti], சஷி தேஷ்பாண்டே [Shashi Deshpande]. இவ்வாறு அக்டோபர் மாதம் வரை 33 பேர் திருப்பிக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன[6]. இதில் வார்யம் சிங் சந்து [Waryam Singh Sandhu] என்பவர் அவசரநிலை பிரகடன காலத்தில் காங்கிரஸ் அரசால் சிறையிடைக்கப்பட்டவர். அக்டோபரில் இந்த “திரும்பக் கொடுக்கும் சடங்கு” உச்சத்தை அடைந்தது. நவம்பரில், திடீரென்று அடங்கி விட்டது. அவசரநிலை பிரகடனம், 1984 சீக்கியப் படுகொலைகள், 1989 பகல்பூர் கலவரங்கள், யு.பி.ஏ கோடானு கோடி ஊழல்கள் முதலிவை நடந்த போது இவர்களில் யாரும் கண்டுகொள்ளவில்லை.  இத்தகைய முரண்பாடுகளை பலரும் எடுத்துக் காட்டினர்.

Introducing Mr Modi to the thousands of people packed into the stadium, Mr Cameron described the night as a -truly historic moment

Introducing Mr Modi to the thousands of people packed into the stadium, Mr Cameron described the night as a -truly historic moment

எதிர்-கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது: அனுபம் கேர் தலைமையில், விருதுகள் திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தை எதிர்த்து, அதாவது அதன் போலித்தனத்தை எடுத்துக் காட்டி கூட்டம்-ஊர்வலத்தை நடத்தினார். அதில் நூற்றுக்கணக்கில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். அரசிடம் விருது வாங்குவது என்பது ஒரு “திரும்ப செய்யும் முறை அல்லாத விசயம்மாகும். ஏனெனில், விருதை திரும்ப கொடுத்து விடுவதால் அதன் மூலம் பெற்ற பெயரையும், புகழையும் திரும்பக் கொடுப்பதாகாது[7]. பலனை அனுப்பவித்தது அனுபவித்தது தானே? சாகித்ய அகடாமி, தன்னாட்சி பெற்ற தனி அமைப்பு. அதன் செயல்பாடுகளில் அரசு தலையிடுவதில்லை அதே போல் அரசின் செயல்பாடுகளில், சாகித்ய அகடாமியும் தலையிடுவதில்லை. இதற்கு முன் எத்தனையோ பிரச்னைகள் நடத்திருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தாளர் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் ஆதரவு இருக்கும் எழுத்தாளர்கள், பரிந்துரைகளின் மீது விருது கொடுக்கப்படுகிறது என்பதும் உண்மைதான்.

A woman proudly shows off her ticket to the event, which saw crowds of supporters descending on Wembley this evening

A woman proudly shows off her ticket to the event, which saw crowds of supporters descending on Wembley this evening

பிஹார் தேர்தல் செப்டம்பரில் ஆரம்பித்து, நவம்பரில் முடிந்தது: பீஹாரில் தேர்தல் நடக்கவிருந்தது, தெரிந்த விசயமே. முதல் கட்டத்திற்கு செப்டம்பர் 16 அன்று அறிவிப்பு வெளியானது. கடைசி கட்ட ஓட்டளிப்பு நவம்பர் 5ம் தேதி முடிந்தது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் கல்பர்கி கொலை எதிர்ப்பு போராட்டம் (ஆகஸ்ட் 30 கொலை), சாகித்திய விருதுகள் திருப்பிக் கொடுத்தது, மாட்டிறைச்சி பிரச்சினை, தாத்ரி விவகாரம் என அனைத்தும் நடந்துள்ளன. இந்நிகழ்ச்சிகளும் காங்கிரஸ் மற்றும் சமஜ்வாடி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தன. அதனால், அவை எப்படி நடந்தன, கொலையாளிகளை ஏன் பிடிக்கவில்லை, சட்டம்-ஒழுங்கு நிலை என்னவாயிற்று என்றெல்லாம் யாரும் கேட்பதாக இல்லை. ஆனால், இவற்றிற்கெல்லாம் “இந்துத்துவ” சக்திகள் தாம் காரணம், குறிப்பாக மோடிதான் காரணம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

David Cameron and his wife, Samantha

David Cameron and his wife, Samantha

ஆகஸ்ட்.2013லிருந்து, செப்டம்பர் 2015 வரை சாகித்திய விருது பெற்றவர்களுக்கு எந்த உணர்வும் வரவில்லை: ஆகஸ்ட்.2013ல் மஹாராஷ்ட்ராவின் “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்ற மூடநம்பிக்கை அழிப்பு சமிதி என்ற இயக்கத்தைத் துவக்கியவரான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார். அப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருந்த மாநில மற்றும் மத்திய அரசுகளின் மீது சந்தேகம் வரவில்லை. காங்கிரஸ் தான் காரணம் அல்லது அதன் தலைவி சோனியா தான் மூலகாரணம் என்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை. பிப்ரவரி மாதம் 2015ல் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே என்பவர், “சிவாஜி கோன் ஹோதா” என்ற தலைப்பில், மஹாராஷ்ட்ர வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அவதூறாக எழுதியதால், அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது சோனியா தான் காரணம் என்று யாரும் அடையாளம் காணவில்லை. ஆக, ஆகஸ்ட்.2013 முதல் பிப்ரவரி 2015 வரைக்கூட, சாகித்திய விருது பெற்றவர்களுக்கு திரும்பகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

Dr Kalburgi was a leading scholar and a well-known rationalist thinker - BBC photo

Dr Kalburgi was a leading scholar and a well-known rationalist thinker – BBC photo

செப்டம்பர் 2015லிருந்து உணர்ச்சிகள் பீரிட்டது எப்படி, ஏன், எதற்காக?: கல்பர்கி பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார். இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது கருத்தூரிமை உள்ளவர்களுக்கும், அக்கருத்துரிமையால் பாதிக்கப்படும் மக்களுக்கும், வெவேறு சட்டங்கள் உள்ளன போலும்! ஆகஸ்ட்.30, 2015 அன்று கல்பர்கி கொல்லப்படுகிறார். இப்பொழுதுதான் உணர்ச்சி திடீரென்று பீரிடுகின்றது.

© வேதபிரகாஷ்

18-11-2015

[1] https://www.ukwelcomesmodi.org/

[2] With the Prime Minister of India, Shri Narendra Modi, due to visit the United Kingdom later this year, the largest Indian diaspora in the world is eagerly waiting in anticipation to deliver the loudest, greatest and most vibrant welcome he has seen outside of India. UKWelcomesModi will bring together individuals from the 1.6 million-strong Indian community in Britain- from all backgrounds, generations and regions – to celebrate two great nations with one glorious future. It is the Diwali event for the family this year- with a cultural showcase featuring the best of Indian and British talent; a landmark speech to be delivered by Prime Minister Modi and a grand finale featuring the biggest fireworks display in the whole country.

[3] UKWelcomesModi pays tribute to the deep ties between India and the UK, highlighting the formidable contribution made by members of the Indian diaspora in all walks of British life. Prime Minister Modi’s already iconic leadership has made waves across the world. UKWeclomesModi is honoured to host this new global visionary who will give us a glimpse of India in years to come as it forges new paradigm of growth and success for not just Asia, but the rest of the world too. Organised by the Europe India Forum and in partnership with Indian cultural and community organisations across the country, the event is set to be the highlight of 2015. The Europe India Forum is a not for profit organisation promoting Europe-India relations for communities, by communities.

[4] https://www.ukwelcomesmodi.org/partners

[5] http://indianexpress.com/article/explained/writers-protest-what-returning-sahitya-akademi-honour-means/

[6] http://indianexpress.com/photo-news/india/here-are-the-33-writers-who-returned-their-sahitya-akademi-awards/

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1375770