Archive for the ‘மாயாவதி’ Category

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்!

செப்ரெம்பர் 17, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்!

 

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

16-09-2013 (திங்கட்கிழமை): அகிலேஷ் வந்து சென்றதும் மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் செய்கிறார்கள் என்றதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னமே எங்கெங்கு செல்லவேண்டும், யாரைப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கப் பட்டுவிட்டது. பாதுகாப்பிற்காக கொம்புகளைத் தடுப்பாக வைக்கப் பட்டு, சாதகமானவர்களை மட்டும் வைத்து கூட்டம் கூட்டப்பட்டது. யாரும் கோஷங்கள் போடக்கூடாது என்றெல்லாம் தெளிவாக கட்டளைகள் இடப்பட்டன. அதன்படியே முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்.  இதில் கூட முதலில் ஊடகங்கள் அவர்கள் முஸ்லிம்களை மட்டும் சந்திக்கும் காட்சிகளைக் காட்டலாமா வேண்டாமா என்று தயங்கின என்று தெரிந்தன. ஏனெனில், புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை.

 

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

ஜட்-மக்கள்   /   இந்துக்கள்  இவர்களிடம்  கோபமாக  இருக்கிறார்களாம்: கலவரத்தில் ஜட் மக்கள் / இந்துக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம்கள் அதிகமாக இருந்த மற்றும் தற்காலிக இருப்பிட கூடரங்களுக்குச் சென்று முஸ்லிம்களை பார்த்துச் சென்றனர். பவாலி மற்றும் காஞ்ச்புரா பகுதிகளில் ஒப்புக்கு நின்று பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால், தங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை மற்றும் அவமானப் படுத்திவிட்டதாக புழுங்கிக் கொண்டிருக்கிருந்தனர்[1].

 

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

முஸ்லிம்களும்   வெறுப்படைந்துள்ளனர்: மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயத்திற்கு இந்த அளவிற்கு பாதுகாப்பு செய்துள்ளனரே, அதே மாதிரி முன்னமே செய்திருந்தால், பாதுகாப்புக் கொடுத்திருந்தால், இந்த கலவரமே நடந்திருக்காதே என்று வெளிப்படையாகக் கூறவும் செய்தனர்[2]. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாதம், இளம் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது. இதுவரை, 44 பேர் இறந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்புக்காக, ராணுவம், துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த, ஊரடங்கு உத்தரவு, தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. ஞாயிற்றுக் கிழமை, கலவரப் பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற, முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, பாதிக்கப்பட்ட மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

மன்மோகன் சிங் எச்சரிக்கை கலவரத்துக்கு  காரணமானவர்கள்  மீதும்,   கலவரத்தை  தூண்டி  விட்டவர்கள்  மீதும்,   கடும்  நடவடிக்கை  எடுக்கப்  படும்: உ.பி.,யில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த, பிரதமர் மன்மோகன் சிங், “கலவரத்துக்கு காரணமானவர்கள் மீதும், கலவரத்தை தூண்டி விட்டவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, எச்சரித்தார். அவருடன், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலும் சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.  பஸிகான் என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்குச் சென்ற அவர்கள், அங்குள்ள மக்களை சந்தித்து, ஆறுதல் கூறினர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இதன் பின், பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இது ஒரு மோசமான கலவரம். முதலில், முகாம்களில் தங்கியுள்ள மக்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான, அனைத்து நிவாரண உதவிகளையும் அளிக்க வேண்டும். இதற்கான உதவிகளை செய்வதற்கு, மத்திய அரசு தயாராக உள்ளது. கலவரப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு, .பி., அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்யும். கலவரத்துக்கு காரணமானவர்களையும், கலவரத்தை தூண்டி விட்டவர்களையும், கண்டறிந்து, அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”, இவ்வாறு, அவர் கூறினார்[3].

 

எனக்கு குல்லாதான் அழகாக இருக்கிறது - மௌலானா அகிலேஷ் - இப்படி வர்ணித்தது ஒரு நாளிதழ்தான்!

எனக்கு குல்லாதான் அழகாக இருக்கிறது – மௌலானா அகிலேஷ் – இப்படி வர்ணித்தது ஒரு நாளிதழ்தான்!

காலை 10 மணிக்கு வந்து  இரண்டு- மூன்று மணி  நேரம்  பார்த்து  விட்டுச் சென்ற   கதை[4]: மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறுகையில், “”கலவரம் குறித்து உ.பி., அரசை ஏற்கனவே எச்சரித்து இருந்தோம். ஆனால், உ.பி., அரசு அதை அலட்சியப்படுத்தி விட்டது,” என்றார்.  முகாம்களில் முசாபர் நகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, மற்ற முகாம்களுக்கும், பிரதமர், சோனியா, ராகுல் ஆகியோர் சென்றனர். அங்குள்ள மக்களுக்கும், அவர்கள் ஆறுதல் கூறினர். காங்., தலைவர் சோனியா, பெண்கள் இருந்த பகுதிகளுக்கு சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ராகுலும், தடுப்பு வேலிக்குள் புகுந்து, பாதுகாப்பு வளையத்தை கடந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். சிலர் கொடுத்த கடிதங்களையும் வாங்கிக் கொண்டார்[5]. முகாம்களில் இருக்கும் பெரும்பாலானோர், “நாங்கள், நிரந்தரமாக முகாம்களிலேயே தங்கி விடுகிறோம். வீடுகளுக்கு செல் வதற்கு பயமாக உள்ளது. வி.ஐ.பி.,க் களுக்கு தான், பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்றனர். இதற்கிடையே, முசாபர் நகர் கலவரப் பிரச்னையை எழுப்பி, உ.பி., சட்டசபையில், எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டன. கலவரத்தை தூண்டி விட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, பா.ஜ., – எம்.எல்.ஏ., சங்கீத் சோமைத் தேடி, அவருக்கு சொந்தமான பல இடங்களில், போலீசார், நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

 

 

On the Muzaffarnagar-Shahpur road is the Tavli madrasa. Now home to over 300 Muslims who have fled from their villages after the outbreak of recent communal violence, it is one among the many makeshift relief camps that dot the district’s landscape. It is here Shamshad Chaudhary piercingly asked Congress vice-president, Rahul Gandhi, accompanying Prime Minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi, on a visit to the riot-affected areas on Monday morning, “Why did you — the Congress party and Jawaharlal Nehru — stop us from going away in 1947? We have been reduced to strangers in our own land.” As Mr. Chaudhary recounted to The Hindu[6], Mr. Gandhi told him what had happened was ‘very wrong’. “You are not strangers … The first responsibility is with the State government, but we will do whatever we can to help.” முசபர்பூர்-ஷாபூர் சாலையில் தவ்லி மத்ரஸா உள்ளது. அதில் சுமார் 300 முஸ்லிம்கள் தங்கியுள்ளனர். இங்குதான் சம்ஷத் சௌத்ரி, “எதற்காக காங்கிரஸ் – நேரு எங்களை 1947ல் போகாமல் தடுக்கவேண்டும். எங்கள் நாட்யிலேயே நாங்கள் அறியாதவர்களாகி விட்டோம்”, என்று சோனியா, ராகுல் முதலியோரைப் பார்த்துக் குத்தும் மாதிரி கேட்டார். அப்பொழுது, ராகுல், “நீங்கள் புதியவர்கள் அல்லர். முதலில் பொறுப்பு மாநில அரசிற்கு இருக்கிறது, இருப்பினும் நாங்கள் முடிந்த உதவியைச் செய்கிறோம்.”, என்றார்.

 

தி  ஹிந்துவின்  பாரபட்சமான   செய்தி   வெளியிடும்  போக்கு: தி ஹிந்து வழக்கம் போல, ஆனால், மிகவும் மோசமாக, ஒருதலைப் பட்சமாக, முஸ்லிம்களின் குறைகளை மட்டும் செய்தியாக போட்டுள்ளது[7]. ஒரே வரியில் ஜட்-கிராமத்தவர்களையும் (இந்துக்களையும்) பார்த்தனர் என்று ஸ்டைலாக போட்டிருந்தது, கேவலமாக இருந்தது, “Through their quick three-hour run through Muzaffarnagar — stopping over at relief camps for displaced Muslims, meeting Jat villagers, and visiting the family of the slain IBN7 journalist, Rajesh Verma — India’s top political leadership got a sense of the deep chasms that have developed among communities in western Uttar Pradesh.”. இந்த “முஸ்லிம்-ஜட்” வார்த்தை ஜாலம் என்னவென்று புரியவில்லை. பிஜேபி கலவரத்தைப் பற்றி நிர்ணயித்துள்ளது என்று, ஏதோ ஒப்புக்கு ஒரு செய்தி போட்டிருக்கிறது. பீஜேபி காரர்கள்ள் எப்பட்டி நேரில் செல்லாமலே கருத்துக் கூறமுடியும். தி ஹிந்துவுக்கு சரியான கொழுப்புதான், கிண்டல்தான், நக்கல்தான்[8]. நாளைக்கு அதையும் சொல்லிக் காட்டுவார்கள். ஆர்.பி.சிங்கும் சோனியாவின் விஜயத்தை செக்யூலராக மாற்ற, எல்லோருரையும் பார்த்தாகி விட்டது என்று பேட்டியளித்துள்ளார்[9].

 

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

மன்மோஹன்சிங்,   சோனியா,   ராகுல்  விஜயம்   –   முஸ்லிம்களை  மட்டும்  சந்தித்துச்  சென்றனர்: மேலே குறிப்பிட்டப்படி, இத்தகைய குற்றச்சாட்டு, நிச்சயமாக மக்களிடம் எழுந்தது. ஏனெனில், அவர்கள் சென்றதெல்லாமே, முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகள் தாம். அதாவது, சிறுபான்மையினராக ஜட்-மக்கள் இருந்திருக்கலாம். இதனால், கூட சென்றிருந்த உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.சிங்கும் சோனியாவின் விஜயத்தை செக்யூலராக மாற்ற, எல்லோருரையும் பார்த்தாகி விட்டது என்று பேட்டியளித்துள்ளார். “முஸ்லிம்களை மட்டும் பார்த்துவிட்டு சென்றுள்ளனர், என்று கூறுவது பொய்யாகும். பர்வலா மற்றும் காஜாபூர் ஜட்-மக்கள் நிறைந்த கிராமங்கள் ஆகும். அங்கு அவர்கள் மக்களிடம் பேசியுள்ளனர். ராஜேஸ் வர்மாவின் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். ஆகையால், ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் பார்த்தனர் என்பது சரியில்லை.. எல்லோரையுயும் இந்தியர்கள் என்ற முறையில் பார்த்தனர்”, என்ற விளக்கம் கொடுத்தார்[10]. ஆனால், இவ்வாறு குறிப்பிட்டதால், அவர்களுக்கே தாழ்வு மனப்பான்மை வந்திவிட்டதோ என்னமோ. “முஸ்லிம்களை மட்டும் பார்த்துவிட்டு சென்றுள்ளனர், எங்களை கண்டுகொள்ளவில்லை”, என்றால், அவர்கள் யார் என்பதை முதலில் அவர்களே அடையாளம் கொள்ளவில்லை என்றாகிறது[11].

 

நான் அப்பாக்குத் தப்பாமல் பிறந்த மகனாக்கும் - அவர் முல்லா என்றால், நான் மௌலானா!

நான் அப்பாக்குத் தப்பாமல் பிறந்த மகனாக்கும் – அவர் முல்லா என்றால், நான் மௌலானா!

சுப்ரீம்  கோர்ட்டில்  .பி.,   அரசு  பதில்: கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி, உ.பி., அரசு மற்றும் மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.  மாநில அரசு அளித்துள்ள பதிலில், “வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. தற்போது, இயல்புநிலை திரும்பியுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள பதிலில், “வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக, கலவர பகுதிகளுக்கு, 78 கம்பெனி துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

என்னா நைனா, சும்மா நம்பளை சதாய்க்கிறியே, இன்னும் என்னத்தான் வேண்டும்?

என்னா நைனா, சும்மா நம்பளை சதாய்க்கிறியே, இன்னும் என்னத்தான் வேண்டும்?

செக்யூலரிஸ   /   மத  சார்பின்மை  சுற்றுலாசென்ற மூவர்: முக்தார் அப்பாஸ் நக்வி பா.ஜ., துணை தலைவர், “விரைவில் லோக்சபா தேர்தல் வரப் போகிறதல்லவா? அதனால் தான், பிரதமர் மன்மோகன் சிங், கலவரப் பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளார். மதச்சார்பு என்ற போர்வைக்குள் மறைந்துள்ள சில, சர்வாதிகார அமைப்புகள் தான், இந்த கலவரத்தை தூண்டி விட்டுள்ளன. அசம் கான்  சமாஜ்வாதி மூத்த தலைவர் கலவரம் நடந்த பகுதிகளுக்கு, பிரதமரும், காங்., தலைவரும், “மதச்சார்பின்மை சுற்றுலாசென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த  சுற்றுலாவால் எந்த பயனும் இல்லை.  வன்முறைக்கு ஆளானவர்களின் வலிகள், இவர்களின் பயணத்தால், ஆறப்போவது இல்லை”, என்று விமர்சித்துள்ளார்.

 

எங்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்

எங்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்

பாதிக்கப்பட்டவர்களுக்குஆறுதல்கூறுவதுஎன்பது, வெறும்நாடகமே –கூறியது மாயாவதி: மாயாவதி, “ பகுஜன் சமாஜ் தலைவர் சமாஜ்வாதி அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு, மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதைத் தவிர, மத்திய அரசின் வேறு எந்த நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வாகாது. பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது என்பது, வெறும் நாடகமே”, என்றார். ஆனால், தூண்டிவிட்டுப் பேசிய நான்கு முச்லிம் தலைவர்களுள் இருவர் இவரது கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

 

வேதபிரகாஷ்

© 17-09-2013


[1] The riot-affected Jat community in the Muzaffarnagar district and the adjoining areas are reportedly unhappy with Prime Minister Manmohan Singh, Congress president Sonia Gandhi and party vice president Rahul Gandhi for ignoring them and visiting the Muslim dominated areas and relief camps. Reports on Tuesday said that the Jats are offended with the trio’s selective approach to the riot-hit victims and alleged disparity from them, despite Sonia and Rahul making a brief stop at Bawali and Khanjpura, which are said to be the Jat dominated villages.

http://zeenews.india.com/news/uttar-pradesh/jats-offended-with-pm-sonia-rahul-s-selective-approach-to-muzaffarnagar-riot-victims_877016.html

[2] Reports also suggest that even the Muslims have complained over the huge security deployed in the area for the VVIP visit, whereas they were given no security and left to defend themselves when the violence hit their lives.

http://zeenews.india.com/news/uttar-pradesh/jats-offended-with-pm-sonia-rahul-s-selective-approach-to-muzaffarnagar-riot-victims_877016.html

[10] Facing adverse comments from all quarters over certain reports which claimed that the Congress leaders had visited only Muslim camps in riot-hit areas, the minister state for home affairs R P N Singh, who accompanied Prime Minister Manmohan Singhand UPA chairperson Sonia Gandhi to Muzaffarnagar on Monday, said they met people of all communities, listen to their woes and tried to share their pain and grief during their visit to the riot-hit areas. Terming the claim as “false” and part of “vicious propaganda”, Singh on Tuesday said the leaders including Prime Minister, Sonia Gandhi, Rahul Gandhi and other members of the team including him went to Barwala and Khajapur (predominantly Jat villages) and talked to villagers there. They also met family members of the journalistRajesh Verma who was killed during the communal clash. “It’s completely wrong to say that we met people of only one community. We visited villages of all communities….Most importantly, these are all our fellow Indians”, said Singh while clarifying reports which were based on villagers’ accounts