Archive for the ‘சிறுபான்மை பிரிவு மாணவர்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.

2018 முதல் 2023 வரை மேற்கொண்ட முயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது  இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….

ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யப் போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1].   ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளின் முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.

13-07-2023 அன்று கூட்டம் ஆரம்பம், படுகரின் வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4].  இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS  , Kathiravan V • HT Tamil, Jul 11, 2023 04:47 PM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/annual-meeting-of-rss-pracharaks-to-be-held-in-ooty-131689073805904.html

[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”

[4] தினமணி, உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!, By DIN  |   Published On : 14th July 2023 12:49 PM  |   Last Updated : 14th July 2023 12:49 PM.

[5] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/rss-reviwe-meeting-in-ooty-4037755.html

[6] மாலைமலர், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு, By மாலை மலர்,13 ஜூலை 2023 2:50 PM

[7] https://www.maalaimalar.com/news/district/tribal-people-give-enthusiastic-welcome-to-rss-leader-in-ooty-635605

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST

[9] https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/badugar-people-did-traditional-type-of-invite-to-rss-president-mohan-bhagwat-in-nilgiris-rxrtvl

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்!

மே 9, 2013

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

ஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].

ஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].

ஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].

ஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].

பெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].

இந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].

பிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா?

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்?

“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.

ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.

© வேதபிரகாஷ்

09-05-2013


பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதமும், இந்தியாவின் தெருக்களில், நகரங்களில் நடந்தேறிய தீவிரவாதமும்!

ஓகஸ்ட் 19, 2012

பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதமும், இந்தியாவின் தெருக்களில், நகரங்களில் நடந்தேறிய தீவிரவாதமும்!

இதுவரை வான்வெளி-மின்னணு காதல், மோசடிகள், ஏமாற்றுவேலைகள், பிரச்சாரம், மதமாற்றம் என்றெல்லாம் சிலர் கேள்விப்பட்டிருப்பர்.

ஆனால் இப்பொழுது அவற்றுடன் வான்வெளி-மின்னணு செய்தி அனுப்புதல், பேரண்ட-மின்னணு பயங்கரவாதம், அவற்றின்மூலம் வீதிகளி கலவரம், நகரங்களில் பீதி, மக்கள் ஓட்டம் முதலியவற்றையும் செய்யலாம் என்று ஜிஹாதிகள் கண்டுபிடித்து அமூல் படுத்தியுள்ளார்கள்.

ஆக இம்முறை 65வது சுதந்திர தினம் இவ்விதமாகக் கொண்டாடப் பட்டுள்ளது.

வழக்கம் போல நம்முடைய புலனாய்வுத் துறையினர், பாகிஸ்தானிலிருந்து தான் அத்தகைய விஷமத்தனமான விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பப்பட்டன என்று ஊல்துறை செயளர் கூறுகிறார்.

பங்களூரில் அத்தகைய விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பியதற்காக அனீஸ் பாஷா (Anees Pasha, 26, a resident of BTM Layout), அவனுடைய சகோதரன் தஸீன் நவாஜ் (Thaseen Nawaz, 32) மற்றும் அவனுடைய இன்னொமொரு கூட்டாளி சஹீத் சல்மான் கான் (accomplice Shahid Salman Khan) முதலியோர் கைது செய்யப்பட்டுள்ளார்களாம்!

வடக்கிழக்கு மாணவகளை, “நீங்கள் ஏன் இன்னும் செல்லவில்லை”, என்று கேட்டு மிரட்டியதற்காக “உருது பேசும்” கும்பலையும் கைது செய்துள்ளார்களாம்!

ஆகையால் இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது!

யாரோ, எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள், அனைவரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் – ஜிஹாதிகள், இந்திய முஜாஹித்தீன்கள் முதலியோரும் கூட!

இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!

ஜனவரி 26, 2012

இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!

காதல் மதத்தைக் கடந்ததா? விஜய் டிவி, பம்பாய், சினிமா காதல் முதலியவை நடமுறைக்கு உதவாது, வராது என்ரு மறுபடியும், ஒடரு காதல் கொலையில் முடிந்து மெய்ப்பித்துள்ளது. காதல் மத்தைக் கடத்து இல்லை. குறிப்பாக முஸ்லீம் / கிருத்துவர்கள் காதலில் “ஒரு வழி” பாதைத் தான் கடைப் பிடிப்பார்கள். முதலில் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, மதம் மாறச் சொல்வார்கள். பிறகு, உறவினர்களை மாறச் சொல்வார்கள், அல்லது மாற்றச் சொல்வார்கள். கடவுளை மாற்றியப் பிறகு தான், இந்த வற்புறுத்தலான மாற்றங்கள். பிறகு, ஏகப்பட்ட மன-உளைச்சல்கள். பெற்றோர்களையே மறந்துவிட வேண்டும். சகோதர-சகோதரிகளை பார்த்தால் கூட பேச முடியாது. உற்றார்-உறவினர்கள் ஒதுங்கி விடுவார்கள் அல்லது ஒதுக்கப் படுவார்கள். சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால்,புரியாத இளைஞர்கள் அத்தகைய காதலில் வீழ்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள், மாய்கிறார்கள், மாய்த்துக் கொள்கிறார்கள்.
ஷாஜிதாவை காதலித்த சந்தானம்: சென்னையை அடுத்துள்ள வண்டலூர் கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் ஜியாவுதீன். இவரது மனைவி தவுசிக் நிஷா (39). இவர்களுக்கு ஷாஜிதா (19), ஷர்மிதா (17) என்ற 2

வாலிப வயதில் காதல் போன்ற உணர்ச்சிகள் வருவது, உண்மையான காதல் இல்லை, அது காமத்துடன் கூடிய எண்ணம் தான். இப்பொழுதுள்ள, நண்பர்களின் சகவாசம், சினிமாக்கள் பார்ப்பது, பேசுவது முதலியனத்தான் அச்த்தகைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன, படிக்கின்ற வயதில் காதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள இன்னொரு கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஷாஜிதாவை அதே கல்லூரியில் படித்து வந்த சந்தானம் (20) என்ற வாலிபர் தீவிரமாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வதற்காக பலமுறை வீட்டுக்கு சென்று சந்தானம் பெண் கேட்டுள்ளார். இதற்கு ஷாஜிதாவின் தாய் தவுசிக் நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த தாய் தவ்ஹீத்நிஷா, மகளை கண்டித்தார். அத்துடன் சந்தானத்துடன் பழகவும் தடை விதித்தார். ஆனால் சந்தானம் காதலை விடவில்லை. ஷாஜிதாவை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தவுசிக் நிஷாவை தனியாக சந்தித்து சந்தானம் பலமுறை பேசி உள்ளார். இருப்பினும் தவுசிக் நிஷா மனம் மாறாமல் தனது முடிவில் தெளிவாக இருந்தார்.

பேண் கேட்டு வந்த சந்தானம் குடும்பமும், மறுத்த முஸ்லீம் பெற்றோர்களும்: இந்த சூழ்நிலையில் கடந்த 19ம் தேதி சந்தானம், தனது பெற்றோர் மற்றும்

இத்தகைய தடைகள் இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏதோ, ஒரு செக்யூலரிஸ நாட்டிலடீருக்கிறோம் என்று கனவு காண வேண்டாம். இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான். கிருத்துவத்திலும் அதே கதிதான்.

உறவினர்களுடன் கியாஜூதீன் வீட்டுக்கு வந்தார். முறைப்படி சர்மிதாவை திருமணம் செய்து தரும்படி தவ்ஹீத் நிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நாங்கள் வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு எந்த வகையிலும் உறவினர்கள் சம்மதிக்க மாட்டார்கள். எனவே, மகளை இனி பார்க்க கூடாது, பேசக்கூடாது” என்று கூறியுள்ளார்[1]. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்தானம், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயைக் கொலைசெய்த் காதலன்[2]: இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சந்தானம் கல்லூரி வளாகத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தவுசிக் நிஷாவிடம், ஷாஜிதாவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள். நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்[3]

காதல், திருமணம் என்று வரும்போது, மதம் குறிக்கிடத்தான் செய்கிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான்.

இதற்கு தவுசிக் நிஷா, வேறு மதத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்துக்கு இது ஒத்து வராது. எனவே ஷாஜிதாவை தொந்தரவு செய்வதை விட்டு விடு என்று கூறியுள்ளார். இது சந்தானத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திடீரென ஆவேசமடைந்த சந்தானம் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து தவுசிக் நிஷாவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, நெஞ்சு பகுதி உள்ளிட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்தப் படியே தவுசிக் நிஷா வீட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் சந்தானம் ஈவு இரக்கமின்றி வீட்டுக்குள்ளேயே விரட்டிச்சென்று தவுசிக் நிஷாவை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றார். பின்னர் சந்தானம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்[4].

கொலை செய்த காதலன், தப்பி ஓட்டம்: இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் அங்கு விரைந்து சென்று தவுசிக் நிஷாவின் உடலை கைப்பற்றி செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீடு முழுவதும் ரத்தக் கறையாக

நினைத்தது நடக்கவில்லை, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஒன்றும் செய்ய முடியாத நிலையை அடையும் போது, மனிதனை இந்த அளவிற்கு கொலை செய்யத் தூண்டுகிறது. அதாவது, காதலைத் தடுப்பது என்ன, யார் என்று அடையாளம் காணும் போது, அத்தடையை நீக முயன்ற காதலனின் விரக்தி கொலையில் முடிந்துள்ளது. ஆனால், சட்டப்படி அவன் தப்ப முடியாது.

காட்சி அளித்தது. சந்தானம் பதட்டத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஒரு அரிவாளை அங்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். தவுசிக் நிஷாவை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற சந்தானம் சப்-இன்ஸ்பெக்டரின் மகன். இவரது தந்தை பெயர் சந்திரபாபு. இவர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தவுசிக் நிஷாவை தீர்த்துக்கட்ட சந்தானம் திட்டம் போட்டு வேலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கு சந்தானத்தின் நண்பர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இன்று காலையில் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள்.

விஜய் டிவி விவாதம் நடமுறைக்கு வராது: விஜய் டிவியில், “நீயா, நானா” என்ற நிகழ்ச்சியில், பல முறை, வாழ்க்கையில் ஒரு சிலர் செய்து வரும் காரியங்களை, ஒட்டு மொத்தமாக அனைவருமே சமுதாயத்தில் செய்து வருகின்ற மாதிரியும், அதனால், சமூகத்தில் ஏதோ பெரிய தாக்கம் ஏற்படுத்துகின்றது போலவும், குறிப்பிட்ட, தேர்ந்தெடுக்கப் பட்டவரளை வைத்துக் கொண்டு, வலிந்து, தங்களது கருத்துகளை பார்வையாளர்களின் / நேயர்களின் மீது திணிக்க யத்தணித்து வருகிறது. அப்படித்தான், ஒன்று / இரண்டு நிகழ்ச்சிகளில், மதம் கடந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

மதம் கடந்து காதல், திருமணத்தால் யாருக்கு லாபம்? அதில் இந்து காதலி தான், முஸ்லீம் / கிருத்துவ காதலனுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளாள். அதே போலத்தான் இந்து காதலன், முஸ்லீம் / கிருத்துவ காதலிக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளான். ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று விவாதிக்கவில்லை. அதாவது, காதல் மதத்தைக் கடந்து என்பது இஸ்லாம் / கிருத்துவ மதங்களைப் பொறுத்த வரைக்கும் பொய் என்றேயாகிறது.

ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது: இதற்கு “முடியாது” என்று முஸ்லீம்கள் / கிருத்துவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில், பள்ளியில், கல்லூரியில் படிக்கும் இந்து மாணவ-மாணவியர் முஸ்லீம்-கிருத்துவ மாணவி-மாணர்களுடன் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதே போல பணி புரியும் இடங்களில் வஇருக்கும் இந்துக்கள் முஸ்லீம்-கிருத்துவர்களிடம் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதாவது, நட்பு என்ற எல்லைகளை கடந்து காதல் என்று நிலை வரவேண்டாம். ஏனெனில், பிரச்சினைகள் தாம் வரும், குடும்பங்கள் பாதிக்கப் படும், உறவுகள் துண்டிக்கப் படும். அதாவது, பெருமளவில் இந்துக்களுக்குத் தான் எல்லா விதங்களிலும் பாதிப்பு ஏற்படும். அதையும் மீறி காதலித்து, கல்யாணம் செய்து கொண்டால், ஏதோ பெரிய தியாகம் செய்து, எல்லாவற்றையும் துறந்த நிலை தான் ஏற்படும். குறிப்பாக இந்துப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப் படுவார்கள். இவையெல்லாம், அந்த நிகச்ழ்ழிகளிலேயே தெரிய வருகிறது. இருப்பினும், தணிக்கை செய்து, மழுப்பி அத்தகைய எண்ணம் உருவாகாதவாறு நிகழ்ச்சியை அமைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

26-01-2012.


[2]

[4] நக்கீரன், காதலியின் தாயை வெட்டிக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் தப்பி ஓட்டம், http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=69381

செக்யூலரிஸ நாட்டில் மதரீதியிலான உதவித்தொகை / ஸ்காலர்ஷிப் ஏன்?

ஜூலை 8, 2010

செக்யூலரிஸ நாட்டில் மதரீதியிலான உதவித்தொகை / ஸ்காலர்ஷிப் ஏன்?

கல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்: சென்னை : சென்னை மொமோரியல் ஹால் அருகே மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பாரதிய ஜனதா சார்பில், நேற்று காலை (07-07-2010 புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது[1]. இதில் தமிழக அரசு, இதர சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல், இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.மேலும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா. ஜ., சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன். எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார், மாநில துணைத்தலைவர் தமிழிமை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடப்பது செக்யூலார் ஆட்சி என்றால் எப்படி சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது? அதாவது மத அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து, பாரபட்சமாக மக்கள் பணத்திலிருந்து இப்படி “உதவித் தொகை” என்பது சரியாகுமா? படிப்பில்கூடவா, இப்படி மதரீதியாக பாரபட்சம், வேறுமை, வித்தியாசம் முதலியவை பார்ப்பார்கள்? பிறகு எதற்கு போலித்தனமான செக்யூலரிஸம், எல்லா மதங்களும் ஒன்று என்ற பாட்டு எல்லாம்! இந்து மதம் தவிர மற்ற மதங்கள்தான் உசத்தி என்றால், அங்கேயே, அந்த செக்யூலரிஸக்கொள்கை தவிடு பொடியாகி விடுகிறதே?

தமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரம்[2]: தமிழக அரசு, இவ்விஷயமாக கொடுத்துள்ள விளம்பரம் மற்றும் அதிலுள்ள விவரங்கள் பின்வருமாறு:

GOVERNMENT OF TAMIL NADU

DEPARTMENT OF MINORITIES WELFARE

807 (5th Floor), Anna Salai, CHENNAI-600 002

MERIT CUM MEANS BASED SCHOLARSHIP

TO MINORITY STUDENTS FOR 2010-11

Applications are invited from the students belonging to the following

Minority Communities as notified by the Government of India, who are

pursuing Degree or Postgraduate level Professional / Technical Courses

as notified by the Ministry of Minority Affairs from the Government /

Govt.recognized Private Educational Institution, for sanctioning Merit

Cum Means Based Scholarship. Under this scheme, Fresh scholarship

allotted to religious Minorities of Tamil Nadu for the year 2010-11 are

given below:-

No. of Fresh Scholarship for No. of Fresh

Scholarship to

Tamil Nadu

Muslims Christians Sikhs Buddhists

Total

366 399 1 1 767

ELIGIBILITY : i) Students who got admission, on the basis of competitive

examination or not facing competitive exam can avail scholarship

provided they should have obtained 50% marks in the previous year final

examination at Higher Secondary/Graduation level, ii) The scholarship

holder shall not avail any other scholarship/stipend from any other

Department, iii) 30% reserved for Women Candidates, if, sufficient Women

Candidates are not available, Male candidates will be selected. v) The

Annual Income from all sources of the student’s parent or guardian should

not exceed Rs.2.50 lakh. Full Course fee (except refundable deposits) will

be reimbursed to those students studying in Listed institutions as

notified by the Ministry of Minority Affairs. For other institutions, Course

fee upto a maximum of Rs.20000 and Maintenance Allowance of Rs.10000

for Hosteller @ Rs.1000 pm and Rs.5000 for Day scholars @ Rs.500 pm

subject to a maximum of 10 months.

FOR FRESH SCHOLARSHIP

Year of Course Semester/Non-semester Mark Sheet should

be attached to the applications

I year 50% of marks in +2 or HSC
IInd Year 50% of marks in Diploma .. for Lateral Entry

(or) I year Examination Marks

III year 50% of marks in I & II year Examination
IV year 50% of marks in I, II, III year Examinatio

RENEWAL:-Students who have been awarded fresh scholarship

during 2007-08, 2008-09 , 2009-10 are eligible for Renewal of

scholarship for 2010-11. They students should have passed with 50%

of marks in the previous year examination at the time of submission

of renewal application.

The details of the scheme, List of eligible courses, Name of the listed

Institutions, Application form, claim format etc., are available at

http://www.minorityaffairs.gov.in & tn.gov.in/bcmbcmw/welfschemes.

Students are directed to submit the application within the due date

mentioned below along-with all the relevant mark sheets and

certificates to the Educational Institution. Non-submission of mark

sheets, and other certificates will result in summary rejection

without assigning any reason whatsoever. Last Date for submission

of applications to the Institutions by the Students

For Renewal Cases 26.07.2010 ( Monday)

For Fresh Cases 10.08.2010 (Tuesday)

The Principal/Registrar/Dean of the respective Educational

Institution is requested to scrutinise the applications with relevant

enclosures etc., to ensure their eligibility and forward the same duly

signed to the Commissioner of Minorities Welfare, 807 (5th Floor),

Anna Salai,Chennai-2 with in the stipulated time given below:-

For Fresh Cases To Forward Application form original with relevant attested copies of mark sheet and other certificates.

Bank A/c details of Institution should reach on or before 13.08.2010 by 5.45 PM

For Renewal Cases Consolidated Claim Format only should reach on or before 30.07.2010 by 5.45 PM

Commissioner, Minorities Welfare Department and

Managing Director (TAMCO)


[1]தினமலர், கல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34594

[2] http://www.tn.gov.in/bcmbcmw/Draft_Advertisement_Minorities_2010_11.pdf