குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)

இதன் முதல் பகுதி இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[1], இரண்டாவது பதிவை இங்கே காணலாம்[2].

Electioneering speech seriousness and humourகபில்சிபல்,   சிதம்பரம்  முதலியோர்  இவ்விசயத்தில்  கமென்ட்  அடித்தது: காங்கிரஸின் தலைவர்கள் பலர், இவ்விசயத்தில் தீவிரமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. வழக்கம் போல கபில்சிபல், தமக்கேயுரிய பாணியில் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், சிதம்பரம் இதில் கிண்டலடித்திருப்பது ஆச்சரியம் தான்[3]. இவரும் உள்துறை அமைச்சராக இருந்ததினால், உள்விசயங்கள் தெரிந்திருக்கும். அப்படியிருக்கும் போது, இவ்வாசாறு சிறுபிள்ளைத்தனமாக இவர் பேசியிருப்பது, காங்கிரஸ் தலைமை எப்படி இவர்களை ஆட்டி வைக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிரகாஷ் ஜவதேகர் என்ற பாஜக தலைவர், “தேவையில்லாமல், காங்கிரஸ் இவ்விசயத்தைப் பெரிதாக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸின் அலமாரிகளில் பல எலும்புக்கூடுகள் இருப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்”, என்று சொல்லியிருக்கிறார்[4]. ஊடகங்கள் “மோடி இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்”, என்று எச்சரித்தார். ஆனால், ஊடகங்கள் பிடிவாதமாக செய்திகளைக் கொட்டுகின்றன[5].

In defense of Teesta Setalvadமம்தாசர்மா, சுசில்குமார்  ஷின்டே  முதலியோரது  சுருசுருப்பான  வேலைகள்: தேசிய மகளிர் கமிஷனின் தலைவி மம்தா சர்மா, 24 மணி நேரத்திலேயே, நோட்டீஸ் அனுப்பிவிட்டார். இவருக்கு ராஜஸ்தானில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. மற்ற விசயங்களில் சுஷில் குமார் ஷின்டே போலத் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த பெண்மணி இப்பொழுது இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பட்டியலில் அவரது பெயர் இருப்பதனால், விசுவாசமாக வேலை செய்கிறார் போலும்[6]. ஷின்டேவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்[7]. சிபிஐயின் குற்றத்தை மறைக்க டெலிகாம் துறையை விசாரிக்கக் கூறியுள்ளது, காங்கிரஸின் விசமனத்தனத்தைத்தான் காட்டுகிறது[8]. முதலில் டேப்புகள் எப்படி தனிமனிதர்களின் கைவசம் சென்றது என்று அவர் விளக்கவில்லை.

Anti-modi campaign - nakkeeran-2013நம்பிராஜனை  அடுத்து  இந்த  ஸ்னூப்பிங்”,   “ஸ்டாகிங்”   விவகாரங்கள்: நம்பிராஜனின் குற்றச்சாட்டுகள் மற்றும் புத்தகம், எவ்வாறு கேரள போலீஸ், சிபிஐ, ஆட்சியாளர்கள், மத்திய அரசு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் முதலியவை எவ்வாறு முரண்பட்டு, செயல்பட்டு, ஏதோ ஒரு காரணத்திற்காக நம்பிராஜன் பலிகடாவாக்கப்பட்டார், ஆனால், மற்றவர்கள் தப்பித்துக் கொண்டனர். ISRO spying case - Teesta Setalvad -Srikumar -awarded 2008குறிப்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி டி.ஜி.பி. ஆர்.பி.குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 19-11-2013 அன்று செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்குத் தொடர்ந்தார். ISRO spying case - Teesta Setalvad -Srikumar -seminar  2010இவர் குஜராத்திற்கு வேண்டுமென்றே நியமனம் செய்யப்பட்டு, மோடிக்கு எதிராக செயல்பட வைத்தனர் என்றும் தெரிகிறது. மத்திய அரசு யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டு வருவதால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இவ்வாறு அரசியல் ரீதியில் பயன்படுத்துவது ஒரு மிகத்தவறான முன்னோடியாக, உதாரணமாக இருக்கும். இப்படி எல்லாவிதங்களிலும் தாக்குதல்களில் குறியாக இருக்கப்படுபவர் நரேந்திர மோடிதான்!

© வேதபிரகாஷ்

21-11-2013


[8] The NCW chairperson’s comments coincided with home minister Sushil Kumar Shinde’s statement that the Centre could consider ordering a probe into violation of the woman’s privacy by Gujarat Police allegedly at Shah’s instance. According to sources, the Centre has already asked security agencies to look for evidence of the alleged “snooping” in the “interception records” that telecom service providers maintain.

http://timesofindia.indiatimes.com/india/Shinde-NCW-step-up-snoop-heat-on-Modi/articleshow/26116752.cms

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

3 பதில்கள் to “குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)”

  1. “குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக் Says:

    […] […]

  2. “குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக் Says:

    […] […]

  3. மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத் Says:

    […] https://secularsim.wordpress.com/2013/11/30/snoopping-stalking-controversies-congress-propaganda-agai… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: