Archive for the ‘ராம் விலாஸ் பாஷ்வன்’ Category

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)

மே 11, 2013

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)

ரெயில்வேதுறைமீது கண் வைக்கும் கட்சிகள்: ரெயில்வேதுறை எந்த அளவிற்கு லஞ்சம் மலிந்த துறையாக உள்ளது என்பதனை பவன் குமார் பன்சால் வெளிப்படுத்தி விட்டார். இதனால், முந்தைய ரெயில்வே அமைச்சர்கள் இவரை சபித்துக் கொண்டிருப்பர் என்பது திண்ணம். கட்சிகள் மாறி-மாறி இத்துறைக்கு வந்து கொள்ளையிட்டுள்ளதும் தெரிகிறது. ராம் விலாஸ் பாஷ்வன், நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ்[1], மம்தா பானர்ஜி[2], இப்படி பெயர் சொன்னாலே போது என்ற அளவிற்கு இருந்துள்ளார்கள்.

ஊழலில்திளைக்குரெயில்வேயும், பாதிக்கப்படும்மக்களும்: ஒரு கான்ட்ராக்ட், ஆர்டர், டெண்டர் கிடைக்கவேண்டுமானால், கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்றால், கொடுப்பவர் எந்த அளவிற்கு அந்த வேலையிலிருந்து சம்பாதிப்பார் என்பதும் வெளிப்படுகிறது. முடிவு தரக்குறைவான பொருட்கள், சேவைகள் தாம் அந்த லஞ்ச-ஊழல் பேர்வழிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் முடிவாக பாதிக்கப் படுவது, நுகர்வோர்கள் தாம் – அதாவது கோடிக்கணக்கில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள்தாம்[3].

சோனியாஏன்மன்மோஹன்வீட்டிற்குச்செல்லவேண்டும்?: ஊடகங்கள் தான் தான் தலைவி – பாஸ் என்று மெய்பித்து விட்டார்[4], சோனியா சொல்கிறார்-மன்மோஹன் செய்கிறார்[5] என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருந்தன. ஆனால், சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்றார் என்பதில் தான் நாடகம் வெளிப்படுகிறது. “வா” என்றால், வந்து கும்பிடு போடும் மன்மோஹனுக்கு அப்படியென்ன முக்கியத்துவம், தைடரியம் அல்லது வேறேதோ ஒன்று வந்து விட்டது? பெரிய பதவிக்கான நியமனம் பி.எம்.ஒ.அலுவலகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதனால், பிரதம மந்திரியின் தொடர்பும் உள்ளது, அதாவது, பொம்மையை ஆட்டிவைக்கும் சோனியாவின் பங்குதான் முடிவாக உள்ளது.

ஊடகங்களின்மழுப்பல்பன்சால்பதவிநீக்கம்செய்யப்பட்டார்என்றது, பிறகுஅறிவித்ததுராஜினாமா!: ஊடகங்களின் மழுப்பல் – பன்சால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றன[6], பிறகு அறிவித்தது ராஜினாமா என்றன. சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்ற சில நிமிடங்களில் ஊழல் மந்திரி பன்சால் தூக்கப்பட்டார்[7], கோணியில் போடப்பட்டார்[8], தூக்கியெறியப்பட்டார், என்றெல்லாம் ஆங்கிலத்தில் வர்ணித்துக் கொண்டிருந்தன. ஆனால், பிறகோ அல்லது அதே செய்தியிலோ, பன்சால் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யத் தூண்டப்பட்டார், செய்து விட்டார் என்று கூட்டிச் சொல்லின[9].

பதவிநீக்கம்செய்தபிறகு, அலுவகத்திற்குவந்து, கோப்புகளில்கையெழுத்துப்போட்டுசென்றாராம்: பதவி நீக்கம் செய்தபிறகு, அலுவகத்திற்கு வந்து, கோப்புகளில் கையெழுத்துப் போட்டு சென்றாராம்! அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தாராம். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்தாராம், பன்சால் வெள்ளிக்கிழமையன்று திடீரென வந்தாராம், பரபரப்பு ஏற்பட்டதாம், அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டாராம், பைசல் செய்தாராம், பின்னர் பதவியை ராஜினாமா செய்தாராம்[10]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[11]. அப்படியென்றால், முந்தய நாட்கள் தேதியிட்டு கையெழுத்துப் போட்டார் என்றாகிறது. பிறகு, இதெல்லாம், சொல்லிவைத்து தானே அரங்கேற்றம் செய்கிறார்கள்.

லஞ்சத்தைவிதைத்துஅறுவடைசெய்வதில்கில்லாடியானகுடும்பம்: பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலியவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து அந்த பணத்தை வைத்துக் கொண்டு கம்பெனிகளை உருவாக்கி, அதற்கும், கடன் என்ற பெயரில், வங்கிகளினின்று பணம் வாங்கி, அப்பணத்தை மறுபடியும் மறுமகன் மூலமாக பன்சாலுக்கே கொடுக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, லஞ்சத்தை விதைத்து லஞ்சத்தை அறுவடை செய்து, லஞ்சத்தை முதலீட்டாக்கி, லஞ்சத்தை முதலீட்டாக மாற்றி, லஞ்சத்தை லாபமாக பெறும் கில்லாடியான குடும்பமாக பன்சால் குடும்பம் இருக்கிறது. அது கீழ்கண்ட கம்பெனிகளை வைத்துக் கொண்டு, லஞ்சப்பணம் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தது.

  1. தியோன் பார்மேசுகல்ஸ் லிமிடெட் (Theon Pharmaceuticals Limited),
  2. ஐவா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் (Iva Healthcare Private Limited),
  3. சிசிஸ் பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட் (Isis Packaging Pvt Ltd) மற்றும்
  4. பன்சி ரௌனக் எனர்ஜி குரூப் லிமிடெட் (Bansi Raunaq Energy group Limited).

நிலமாகக்கொடுக்கப்படும் / பெறப்படும்லஞ்சம்: குறிப்பிட்ட நபர், தனது 21.26 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 30,000/- தருவதாக ஒப்பொக்கொண்டு, குத்தகைக்கு என்று மித்தன் லால் சிங்க்லா (விஜய்சிங்க்லாவின் தந்தை) மற்றும் இத்ர உறவினர்களுக்கு எழுதி வைத்தார். ஆனால், பத்திரப்பதிவு செய்யப்பட்டபோது, “33 வருடங்கள்” என்பது “99 வருடங்கள்” என்று மாற்றப்பட்டிருந்தது கண்டு திகைத்துப் போய் விட்டார். வெளியே சொல்ல பயந்ததால், யாரோ ஒருவர் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளார். அதாவது, “33 வருடங்கள்” என்பதை “99 வருடங்கள்” என்று ஆவணங்களில் திருத்தியிருக்கிறார்கள் என்பது திண்ணம்[12].

சோனியா, மன்மோஹன்சிங், ஊழல்: சோனியாதான் தலைவி-பாஸ், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ஊழலில் திளைத்தும், சந்தோஷமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் என்றால், அவரது திறமை அலாதியானது தான். மன்மோஹனை கைப்பாவையாக வைத்து ஆட்டி வைக்கும் போது, கால்வருடி அடிமையாக செயல்படும் போது, அவர்தான் சோனியா வீட்டிற்கு வந்து சலாம் போட்டிருப்பார். ஆனால், ஊழலையும் “கார்பரேட்” பாணியில் லாவகமாக செய்து வரும் அவர், தனக்கு நல்ல பெயர் உண்டாக்கிக் கொள்ளவே அப்படி இடம் மாறி சென்று நாடகம் ஆடியுள்ளார். இது 2ஜி, 3ஜி போன்ற ஊழல்களையும் மிஞ்சியது, ஆட்சிக்கே உலை வைப்பது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அரசாங்க்சத்தில் இதைப் பற்றிய ஆவணங்கள் ஏகப்பட்டர்து இருக்கும். அனைத்தையும் ஒழித்து புனிதராக வேண்டும் என்றால், சிறிது காலம் தேவைப்படும். தமது ஆட்களை வைத்துக் கொண்டே சுத்தப்படுத்துவது சுலபம். அதைத்தான் சோனியா செய்து வருகிறார். சோனியாவின் நாடகம்[13] பலே, பலே!

© வேதபிரகாஷ்

11-05-2013


[1] மாட்டுத்தீவனத்திலேயே கோடிகளை அள்ளிய, இவருக்கு காங்கிரஸ் இப்பதவியை அளித்தது. கேட்க வேண்டுமா, பீகாரிகள் தேர்வு எழுத இந்தியா முழுவதும் ரெயில்களில் சென்று வர பாஸ் கொடுத்தாராம், இன்று அரசு அலுவலகங்களில் பீகாரிகள் பெரும்பாலும் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

[2] மம்தாவின் ஊழல் மேற்கு வங்காள சிட்டுக் கம்பெனி ஊழலில் நாறுகிறது. அப்பாவி மக்களைக் கொன்று வருகிறது, அதாவது, பணம் போட்ட ஏழை மக்கள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். இருப்பினும், மம்தாவிற்கு இரக்கமே இல்லை என்ற விதத்தில் நடந்து கொண்டு வருகிறார்.

[3] “அந்நியன்” படத்தில் வர்வது போன்று, எத்தனை “அம்பிகள்” வந்தாலும், இந்த ஊழல் கொம்பன்களை ஒன்றும் செய்யமுடியாது, இந்த விஷயத்தில் தான், சோனியா அனைவரையும் மிஞ்சிவிட்டார் எனலாம்.

[6] PK Bansal sacked after TIMES NOW expose10 May 2013, 2040 hrs IST, TIMES NOW — Union Railway Minister Pawan Kumar Bansal’s nephew arrest – was just the tip of the iceberg – TIMES NOW’s investigation team, knew there was much more to Railgate – slowly but steadily our investigations led us to Bansal’s doorstep. First we – exposed the meteoric rise of Bansal family fortunes along with his political ascent. Then – after thorough research and painstaking investigation – we raised a clear case of conflict of interest against the Railway Minister. And what seems to have sealed Bansal’s fate, is his first, clear, direct link to Railgate exposed first on TIME NOW . By Friday morning – TIMES NOW’s investigation team laying its hands on the critical details of super explosive tapes – which contained sensational details of Minister’s direct link. And within minutes of TIMES NOW’s expose, Sonia Gandhi heading towards Prime Minister’s residence – the decision was conveyed – Bansal had to go.

http://www.timesnow.tv/INDIA/PK-Bansal-sacked-after-TIMES-NOW-expose/videoshow/4427166.cms

[9] Railway Minister Pawan Kumar Bansal and Law Minister Ashwani Kumar were on Friday night forced to resign by the Congress and the Prime Minister as the government’s image continued to take a severe battering over allegations of corruption and interference with graft probe.