Archive for the ‘அகில பாரதிய வித்யார்தி பரிஷத்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.

2018 முதல் 2023 வரை மேற்கொண்ட முயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது  இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….

ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யப் போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1].   ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளின் முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.

13-07-2023 அன்று கூட்டம் ஆரம்பம், படுகரின் வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4].  இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS  , Kathiravan V • HT Tamil, Jul 11, 2023 04:47 PM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/annual-meeting-of-rss-pracharaks-to-be-held-in-ooty-131689073805904.html

[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”

[4] தினமணி, உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!, By DIN  |   Published On : 14th July 2023 12:49 PM  |   Last Updated : 14th July 2023 12:49 PM.

[5] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/rss-reviwe-meeting-in-ooty-4037755.html

[6] மாலைமலர், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு, By மாலை மலர்,13 ஜூலை 2023 2:50 PM

[7] https://www.maalaimalar.com/news/district/tribal-people-give-enthusiastic-welcome-to-rss-leader-in-ooty-635605

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST

[9] https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/badugar-people-did-traditional-type-of-invite-to-rss-president-mohan-bhagwat-in-nilgiris-rxrtvl

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)

பிப்ரவரி 27, 2018

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)

ABVP 2018 conference. evening stage-1st day

பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அரங்கம்!: “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்”  23வது மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. 17-02-2018 அன்று பலர் மாணவ-மாணவியர்களுக்கு பலவித விசயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மாலையில், சிறப்பு  நிகழ்ச்சிகள் இருந்தன. நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ், சொற்பொழிவாற்றினார். சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்திர குமார் போஸ் 2016ல் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்தார். ஹவுராவில் நடைபெற்ற பாஜக பொதுக்க கூட்டத்தின்போது அவர் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். முன்னதாக, கடந்தஜனவரி 23 ம் தேதி 2016 தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பான கோப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சந்திரகுமார் போஸும் கலந்து கொண்டார். அப்போதுபேசிய சந்திரகுமார், முந்தைய காங்கிரஸ் அரசு சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல கோப்புகளை அழித்துவிட்டது என குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியர், மாணவர்களுக்கு இணையாக தற்காப்பு கலை பற்றிய பயிற்சிகளை செய்து காட்டினர்.

ABVP 2018 conference.Sandeep member Minority

சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர்

ABVP 2018 conference.Sandeep member Minority.audience

சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் – கேட்கும் மாணவ-மாணவியர்.

ABVP 2018 conference.Students unite-1stday

மாணவமாணவியர்களுக்கு விளக்கம் கொடுத்து பேசியவர்கள், விவரங்கள்: திரு சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் கல்வி பற்றி பேசிக்கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர் வித்தியாசமான அணுகுமுறையில் இருந்தனர்; சிலர் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்-குறிப்புகள்ள் கூட எடுத்தனர்; சிலரோ தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர்;  சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்; மகேஷ் என்பவர், விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்துக் கொண்டிருந்தார். விலை அங்கு நடந்த உரையாடல்! லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்! நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்! கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.  பேசியதும் வேகவேகமாக சென்று விட்டார்!

ABVP 2018 conference.discussion about agriculture.2

விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்தது.

ABVP 2018 conference.discussion about agriculture

கேள்வி-பதில்…..

ABVP 2018 conference.discussion about agriculture.3

மாணவமாணவியர் ஏபிவிபி மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்?: எங்கள் குழு கலந்து கொண்டு, மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்டு, விவரங்களை சேகரித்தது. சுமார் 60 மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்ட போது [ஏபிவிபி பற்றி தெரியுமா, ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்கள், சித்தாந்தம் பற்றி தெரியுமா போன்ற கேள்விகளுக்கு……..இவை விடையாகவும் இருந்தன……..], அறிந்த விசயங்கள்:

  1. படிப்பு முதலிய விசயங்களுக்கு…………….., எனக்கு உதவுகிறார்கள் அதனால் நான் வந்து, கலந்து கொண்டேன்.
  2. ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், எவ்வாறு அப்படி இருக்க முடியும் என்பது பற்றி சொல்லிக் கொடுப்பதால், நான் இணைந்தேன்.
  3. நான் இந்து என்பதனால் கலந்து கொண்டேன்.
  4. எனக்கு புரியவில்லை, …………….எல்லோரும் வந்தார்கள், நானும் வந்தேன்……
  5. நமது நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. மாணவர்கள் அதனால், விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
  6. மோடி சிறந்த பிரதமர், என்னை கவர்ந்தவர், அதனால், யாதாவது செய்ய வேண்டும் என்று வந்தேன்.
  7. எனக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருந்ததால் / நான் ஸ்வம் சேவக் என்பதால் வந்தேன்,
  8. நான் அம்பேத்கர் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றாலும், இங்கு எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் விதத்தை புரிந்து கொண்டேன். தொடர்ந்து கலந்து கொள்வேன்.
  9. மற்ற மாணவர் சங்கம் போல நாமும் வலுவாக திகழ வேண்டும், அதற்காக உரிய முறையில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.
  10. நண்பர் கலந்து கொண்டதால், கலந்து கொண்டேன்.
  11. சென்னைக்கு இரண்டு நாள் மாநாடு, பஸ் போகிறது, வருகிறாயா என்று நண்பன் கேட்டான், வந்தேன்.

இப்படி சிறிய விடை அளித்தார்களே தவிர, அதற்கு மேல் விசாரித்தால், அவர்கள் சொல்ல தயங்கின்றனர் அல்லது சொல்ல முடியாமல் இருந்தனர்.

ABVP 2018 conference.talking ancient science

லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்!

ABVP 2018 conference.talking ancient science.audience

கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.

பங்கு கொண்டவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறதுதெரியவில்லை: இவ்வாறு பலவிதமான பதில்களினின்று அறியப் படுவதாவது:

  1. 23வது மாநாடாக இருந்தாலும், புதியதாக வருபவர்களுக்கு அமைப்பைப் பற்றி சரியாக தெரியவில்லை.
  2. ஒன்றிற்கு மேற்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டவர்களும், “பாரதத்தைக் காக்க வேண்டும்”,” நான் இந்து” போன்ற வட்டங்களிலிருந்து வெளியே வரவில்லை.
  3. இருப்பவர்களும் ஒரே மாதிரியாக பேசுவது, சொன்னதையே திரும்ப-திரும்பச் சொல்வது போன்ற ரீதியில் உள்ளார்கள். தமது திட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் [அப்-டேடிங் செய்யாமல்] உள்ளனர்.
  4. நடைமுறை பிரச்சினைகள், விவகாரங்கள், பற்றியவை தெரியாமல் இருக்கிறார்கள்.
  5. மற்ற மாணவ-மாணவியர் அமைப்புகள் பற்றி தெரிந்து வைத்து இருக்கவில்லை. தெரிந்து கொண்டாலும் அரைகுறையாக உள்ளது.
  6. அடிப்படை அரசியல் சித்தாந்தம், அரசியல் கட்சிகளின் தோற்றம்-வளர்ச்சி, அவற்றின் செயல்பாடுகள் முதலியவை தெரியவில்லை.

மாநாடு, கூட்டங்கள் நடக்கும் போது, 1000-100 என்று கலந்து கொண்டு பிரிந்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் இரண்டு-மூன்று-ஐந்து பேர் கூட சேர்ந்து பேசுவதில்லை. பிரதிநிதிகள், நகர-மாவட்ட அதிகாரிகள் கூடி பேசுகிறார்கள்.

ABVP 2018 conference.audience.Nambi

நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்

ABVP 2018 conference.audience.Nambi.narayanan

நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி………………

ABVP 2018 conference.audience

கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.

சித்தாந்த ரீதியில் என்ன செய்ய வேண்டும்?: கீழ் கண்ட விசயங்களை அனைத்து உறுப்பினர்களும் தெரிந்து கொண்டு அலச வேண்டும்:

  1. இந்துத்துவம் என்பது இந்தியாவை இணைக்க வல்ல பலமான சித்தாந்தம் என்றால், இத்தனை வருடங்கள் ஆகியும் இந்துத்துவவாதிகள், சித்தாந்த ரீதியில் ஏன் எதிரிகளை எதிர்க்காமல், எதிர்க்க முடியாமல் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும்.
  2. “இந்துத்துவம்” மற்ற மதங்களுக்கு எதிரானது என்ற எதிரிகளின் பிரச்சாரத்தை முறையாக எதிர்க்காமல், மறைமுகமாக எதிர்-பிரச்சாரம் மூலம் ஏன் அவர்களை ஆதரித்து வருகிறார்கள், இது மாற்றப்பட வேண்டும்.
  3. “இந்துத்துவவாதிகள்” குறிப்பிட்ட சித்தாந்திகள் இடது-வலது என்று இருபக்கங்களிலும் இருந்து கொண்டு, பலனைப் பெற்று வருகிறார்கள், அதாவது, அவகர்ளால் பிரயோஜனம் இல்லை என்பதை அறிய வேண்டும்.
  4. “இந்து-விரோதி” என்று “சிலரை” அறிந்த பிறகும், அவர்களின் பொய்களை ஏன் இந்துத்துவவாதிகள், மல்லுக் கட்டிக் கொண்டு பரப்பி வருவதை, ஆதரிப்பதை தடுக்க வேண்டும்.
  5. “இந்துத்துவவாதிகள்” போர்வையில், “இந்துக்கள்”, இந்துக்களின் நலன்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவது துரதிருஷ்டவசமானது, அது கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும்.
  6. இல்லை என்கிறான் ஒருவன், இருக்கிறது என்கிறான் இன்னொருவன். “இல்லை” என்பது உண்மையான பிறகும், அதைப் பற்றி சொல்லாமல் இருப்பது நாத்திகத்தை ஆதரிப்பதாக உள்ளது. இல்லாதத்தை இருக்கிறது என்ற பொய்யை திரும்ப-திரும்ப இந்துத்துவவாதிகள் போட்டு பரப்புவது, அவர்கள் உதவுவதைத் தான் மெய்ப்பிகிறது!
  7. “இல்லை என்று சொன்ன உண்மை” எனக்கு தெரியவில்லை, ஆனால், “இருக்கிறது என்ற சொன்ன பொய்” எனக்குத் தெரிகிறது என்று பாராட்டு ஏன்! இதெல்லாம் இந்துத்துவவாதிகளுக்கு என்று நான் சிந்தித்து எழுதினாலும், எதிர் சித்தாந்தவாதிகளை எதிர்ப்பதை அறிலாம், இதுதான் உண்மையான பிரச்சாரம்!
  8. +ve propaganda, –ve propaganda, anti/counter-propaganda, +ve suggestion, –ve suggestion, இதைப் பற்றியெல்லாம் இந்துத்துவவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்! ஒன்றை செய்யாதே, பார்க்காதே என்றால், அதனை செய்ய/பார்க்கத் தூண்டுவது எதிர்-தூண்டுதல், –ve suggestion , –ve suggestion ஆகும்!
  9. திமுக 1960-70களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்திக் கொண்டது. சமீபத்தில் “ஜல்லிக் கட்டு” விவகாரத்தில், உபயோகப்படுத்தப் பட்டார்கள். அதுபோல ஏபிவிபி எவ்வாறு மாணவர்களை ஒன்று சேர்க்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.
  10. திராவிடத்துவம் பேச்சுத் திறமையினால், பொய்யான இனவெறி கருதுகொளால், நாடகம்-சினிமா தொழில்களால், அவற்றால் செய்யப்பட்ட பிரச்சாரங்களினால் வளர்ந்தது. அதனை, இந்துத்துவம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தான் ஏபிவிபி உள்ளது.

© வேதபிரகாஷ்

27-02-2018

ABVP 2018 conference.leaders

ஏபிவிபி தலைவர்கள்…………………………..

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் 20வது மாநில மாநாடும் – என்னுடைய எண்ணத்தொகுப்பும்!

பிப்ரவரி 16, 2014

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் 20வது மாநில மாநாடும் – என்னுடைய எண்ணத்தொகுப்பும்!

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளிக்கு முன்னால் வைக்கப் பட்டுள்ள பேனர்

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளிக்கு முன்னால் வைக்கப் பட்டுள்ள பேனர்

திரு சந்திரசேகர் என்னுடைய நண்பர், அவரைப் பார்க்க பலர் வந்து சென்றுக் கொண்டிருப்பர். அவர்கள் எல்லோரும் ஏபிவிபிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப் படுத்தி வைப்பார். நானும் “ஹலோ” என்ற ரீதியிலும், சில விசயங்களைப் பற்றி பேசுவது உண்டு. அவர்கள் அவர்களது வேலையைப் பார்த்து கொண்டு சென்று விடுவர் சந்திரசேகர் பலமுறை அவர்களது நிகழ்ச்சிகளுக்கு வரச்சொன்னதுண்டு. ஆனால், நேரமில்லை, உடல் அசௌகரியம், வீட்டுப் பிரச்சினைகளசென்ற பல காரணங்களினால் முடியாமல் இருந்தது. அந்நிலையில் அவர்களது மாநாடு சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடப்பதாகவும் அதற்கு வருமாறும் ஆழைத்தார். இதனால், சென்றிருந்தேன். முதல் நாள் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டாவது நாள் கலந்து கொண்டேன். அதுபற்றிய குறிப்பே இது.

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (Akhila Bbharata Vidhyarthi Parishad – ABVP – ஏ.பி.வி.பி.) எனும் தேசிய மாணவர் அமைப்பின் இரண்டு நாள் மாநில மாநாடு, கொரட்டூர், சென்னையில் பிப்ரவரி 15, 16 தேதிகளில் நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது[1].

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

“தமிழக எழுகச்சி, பாரத வளர்ச்சி” என்பது மாநாட்டின் முக்கிய தலைப்பாக இருந்தது. “அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர்

பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர்

வாசலில் பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர் வரவழைத்தது. இது குறித்து ஏபிவிபி அமைப்பின் மாநில இணைச் செயலர் முத்துராமலிங்கம் ஏற்கெனவே ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துள்ளார். தினமணி மட்டும் தான் சிறுகுறிப்பை வெளியிட்டுள்ளது[2].

“அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

“அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பின் 20-ஆவது மாநில மாநாடு, சென்னை கொரட்டூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடந்து முடிந்தது. மாநாட்டை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து 15-02-2014 அன்று தொடங்கி வைத்தார். பிஜேபியுடன் அரசியல் கூட்டு வைத்துக் கொண்ட பிறகு, இவ்வாறு கூட்டங்களில் கலந்து கொள்வது போலவுள்ளது. இருப்பினும், மற்ற நேரங்களிலும் கலந்து கொண்டால் நல்லது என்று தோன்றியது. “தமிழக வளர்ச்சி; பாரத எழுச்சி’ என்பதை மைய கருத்தாகக் கொண்டு நடைபெறும் இம்மாநாட்டில், பாரதத்தின் பெருமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம், மதுவின் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில், அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர் [இவர் பெயர் அபேதகர் என்கிறர்கள், ஆனால், உச்சரிக்கும் போது அம்பேத்கர் என்றுதான் சொல்கிறார்கள்], தேசிய செயலர் ஆர்.ராஜ்குமார், மாநிலத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம், மாநிலச் செயலர் சண்முக ராஜா, காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், அமைப்பின் மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர்

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர்

இரண்டாம் நாள்- 16-02-2-14 அன்று சுனில் அம்பேத்கர் அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் குறிக்கோள், திட்டங்கள் மற்றும் செயல்பாடு (The Mission, Vision and Action of ABVP) என்பது பற்றி பேசினார், மதியம் பிரபல மருத்துவர் வி. சொக்கலிங்கம் மதுவினால் ஏற்படும் தீமைகளை மருத்துவ ரீதியில் விளக்கினார். மிகவும் நகைச்சுவையுடன், ஆனால் அதே நேரத்தில் நுணுக்கமான விசயங்களை அருமையாக எடுத்துரைத்தார். மாணவர்களுடன் கலந்துரையாடல் போல, பேச்சை தொடர்ந்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மாணவ-மாணவிகளின் உற்சாகம், கவனிப்பாக உரையைக் கேட்டு, நடுநடுவில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தல், அருமையான விசயங்களை சொன்னபோது கைத்தட்டியது முதலியவற்றைக் கண்டு, மிகவும் நெகிழ்ந்து போனார்.

Dr Chockalingam and Dr Senthamarai ABVP

Dr Chockalingam and Dr Senthamarai ABVP

மருத்துவர் வி. சொக்கலிங்கம் 1966ல் மருத்துவப் பட்டம் பெற்றவர். முந்தைய முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜியார் போன்றோருக்கு சிகிச்சை செய்துள்ளார். இவரது மகன் ஆனந்த் மற்றும் மகள் பிரியா இருவரும் மருத்துவர்கள் தாம்[3]. தேவகி மருத்துவமனை ஆரம்பித்தவர்களில் ஒருவர். தொழிலையே தெய்வமாக மதிக்கிறேன் என்று பல விசயங்களைச் சொன்னார். சைனாவில் ஒரு தடவை “நூறாண்டு காலம் வாழ்வது எப்படி?”, என்று பேச ஆரம்பித்தபோது, 18,000 பேர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் சுமார் 2,000 பேர் அந்த தலைப்புக்கே எதிர்ப்புத் தெரிவித்தனராம். ஏனெனில், அவ்சர்கள் எல்லோரும் 10, 110, 120 வயது கொண்டவர்கள். இதனால், நூறாண்டிற்குப் பிறகும் எப்படி வாழ வேண்டும் என்று தலைப்பை மாற்றிக் கொண்டாராம். இதுபோல பல சுவையான விவரங்களைக் கொடுத்தார். உடல், மனம், உயிர், அறிவு முதலியவற்றிற்குள்ள தொடர்பு பற்றி கூறும் போது, அவரது ஆழமாக ஞானம் வெளிப்பட்டது.

சுனில் அம்பேத்கர் , சந்திரசேகர் முதலியோர்

சுனில் அம்பேத்கர் , சந்திரசேகர் முதலியோர்

தொடர்ந்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன், “சமுதாய பிரச்சினைகளுக்கு மதுவின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது”, என்பது பற்றி விளக்கமாக பேசினார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்

மொத்தம் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 272 மாணவ-மாணவிகள் பதிவு செய்து கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் மாநாட்டில் அவர்களது கலந்துரையாடல்கள், நடவடிக்கைகள் முதலியன மிகவும் கட்டுப்பாடாக இருந்தன. மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் பிஎச்டி, எம்பில், பொறியியல் என்று பலதுறைகளில் படிப்பவர்கள் ஆவர். அவர்கள் தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

பெரியவர்கள், சில முக்கியஸ்தர்களுக்கு மட்டும் தான் சுமார் 50 நாற்காளிகள் போடப் பட்டிருந்தன. அவர்களில் கூட சிலர், மற்றவர்கள் வந்தபோது, நாற்காலிகளில் உட்காரச் சொல்லி, கீழே உட்கார்ந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

மற்ற மாணவ [SFI, DYFI] இயக்கத்தினரைப் போலல்லாது, சித்தாந்த ரீதியில் இவர்கள் பயிற்சி பெறாதவர்களைப் போன்றே இருக்கின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்கள், ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல அவர்கள் இல்லை. மிகவும் எளிமையாக, சாதாரணமாக, வெளிப்படையாக பேசும் இயல்புடையவர்களாக இருந்தனர்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

சுமார் 25 பேர்களிடம் பேசி பார்த்தபோது, மற்ற மாணவ இயக்கத்தினர் அவர்களை கிண்டல் அளித்து வந்தாலும், விமர்சித்து வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார்கள். இருப்பினும் [SFI, DYFI] இயக்கத்தினரைப் போல் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன என்று தெரிந்தது.

Tamilaruvi Manian, Chockalingam, ABVP

Tamilaruvi Manian, Chockalingam, ABVP

பாரதத்தின் பெருமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம், மதுவின் தீமைகள் முதலியவை மட்டும் இக்கால மாணவ-மாணவிகள் தெரிந்து கொண்டால் போதாது, இதற்கு மேலும், குறிப்பாக சித்தாந்த ரீதியில், பல மாற்று / எதிர்க் கருத்து கொண்ட, மாணவ-மாணவிய இயக்கத்தினர் அளவிற்கு பேச்சுத் திறமை, கருத்துமோதல்கள், வாதம் புரியும் தன்மை, முதலியவற்றில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இல்லை.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

ð  எதற்காக இம்மாட்டில் கலந்து கொள்கிறீர்கள்?

ð  இம்மாட்டில் பங்கு கொள்வதால் என்ன நன்மை ஏற்பட்டது?

ð  படித்து விட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?

ð  படித்து வேலைக்குச் சென்ற பிறகும் இவ்வியக்கத்தில் இருப்பீர்களா?

ð  மற்ற மாணவ இயக்கத்தினர், கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் உங்களுடன் எப்படி நடந்து கொள்கின்றனர்?

ð  அவர்கள் கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டதுண்டா?

ð  சித்தாந்த ரீதியில் அவர்களுடன் விவாதித்துண்டா?

ð  குறிப்பாக சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் விவாதித்துண்டா?

ð  உங்களை “இந்துத்வவாதிகள்” என்று விமர்சிக்கிறர்களே, அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இப்படி பல கேள்விகளை நேரிடையாகக் கேட்டுப் பார்த்தேன், அவர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. நாட்டுப் பற்றைத் தவிர மற்ற நிகழ்கால அரசியல் விவகாரங்கள், பொருளாதார பிரச்சினைகள், சமூகமாற்ற தாக்கங்கள் முதலியவற்றைப் பற்றிய தெளிவான சிந்தனை, எதிர்கொள்ள வேண்டிய முறைகள் முதலியவற்றைப் பற்றி தெரியாமலே இருக்கிறார்கள்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

பதிவு நடைபெறும் இடம் – கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

பங்குகொண்டவர்களின் மற்றொரு புகைப்படத் தோற்றம்.

Sectional view ABVP

Sectional view ABVP

சேஷாத்ரி (ஆடிட்டர் ரமேஷின் சகோதரர்), கௌதமன் முதலியோர்.

eshadri, brother of Ramesh, Gauthaman etc ABVP

eshadri, brother of Ramesh, Gauthaman etc ABVP

தினமணியில் வெளியான விவரங்கள் (17-02-2014) –  பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட முன் வர வேண்டும் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தினார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவர் அமைப்பின் 20-ஆவது மாநில மாநாடு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெற்றது. இதில் மது ஒழிப்பு தொடர்பான சிறப்பு கருத்தரங்கில் தமிழருவி மணியன் பேசியது:

மதுவுக்கு எதிராக என் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கம் போராடி வருகிறது. இதில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வரிடம் அளிக்கும் இயக்கத்தை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 15 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி தமிழக கலால்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் அளித்தோம். டாஸ்மாக் மற்றும் பாரில் குடிப்பதற்காக மட்டும் ரூ.50 ஆயிரம் கோடியை தமிழக மக்கள் செலவழிக்கின்றனர். தமிழகத்தில் இவ்வளவு ரூபாய்க்கு குடிக்கிறார்கள் என்றால் ஏழ்மையை எப்படி ஒழிக்க முடியும். மதுவை பூரணமாக ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கட்சியினர் கூட்டாக சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், பூரண மதுவிலக்கும் கண்டிப்பாக நிகழும்.

காந்திய மக்கள் இயக்கம் தற்போது கட்சியாக மாற்றம் அடைந்துள்ளது. மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்பதை நோக்கி எங்கள் கட்சி செயல்படுகிறது. மாணவர்கள் நினைத்தால் மதுவை கண்டிப்பாக ஒழிக்க முடியும். ஆதலால் தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக உருவாக்க பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட வர வேண்டும். ஒரு டாஸ்மாக் கடைக்கு 100 மாணவர்கள் என்ற ரீதியில் கூடி மதுக்கடைகளை மூடுமாறு போராடுங்கள். மதுக்கடைகள் உடனடியாக மூடப்படும் என்றார் தமிழருவி மணியன். முன்னதாக, ஏபிவிபி-யின் அகில பாரத அமைப்புச் செயலாளர் சுனில் அம்பேத்கர் ஏபிவிபி பற்றியும், டாக்டர் சொக்கலிங்கம் மதுவினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர். இந்த மாநாட்டில் ஏபிவிபி-யின் மாநில தலைவர் டாக்டர் சுப்பைய்யா, மாநில செயலாளர் செந்தில் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏபிவிபி-யைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


[2]  தினமணி, சென்னையில் 15, 16-இல் ஏபிவிபி மாநில மாநாடு

, By dn, சென்னை, First Published : 08 February 2014 04:10 AM IST