Archive for the ‘சீதாராம் யச்சூரி’ Category

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரைசொன்னது!

ஜூன் 25, 2023

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரை சொன்னது!

பீஹாரில் 16 கட்சிகளின் கூட்டம்: அடுத்த ஆண்டு 2024ல் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் 23-06-2023 அன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் நடைபெற்றது. இதில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (53 வயது), தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

23-06-2023 அன்று லாலு பிரசாத் யாதவ் ராகுலை திருமணம் செய்து கொள் என்றது: லாலு இந்தியில் பேசியதை தமிழ் ஊடகங்கள் வரிந்து கொண்டு செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தி தெரியாது போடா என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியும், பிஹாரிகளை நக்கல் அடித்தும் வரும் தமிழ் ஊடகங்களுக்கு இதில் என்ன அக்கரை என்று தெரியவில்லை. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் [75 வயது] கூறியதாவது[1], “ராகுல் காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே கூறியிருக்கிறேன்[2]. நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்[3]. ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை[4]. இன்னும் காலம் கடக்கவில்லை. தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். ராகுலின் திருமணம் குறித்து அவரது தாயார் சோனியா காந்தி தன்னிடம் பேசியுள்ளார்[5]. நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும்[6], பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது[7]. அப்படி கல்யாணம் செய்து கொள்லும் பொழுது, நாங்கள் எல்லோரும் பாராத் / ஊர்வலத்தில் கலந்து கொள்வோம்,” என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இப்போது நீங்கள் சொன்னது நடக்கும் என்றார்[8].  கடந்த ஜனவரி மாதம், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது அளித்த பேட்டியில், சரியான பெண் கிடைக்கும்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது[9]..  டிசம்பரில், ராகுல் காந்தி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தாயார் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அவரது பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் பண்புகளை தனது துணை கொண்டிருக்க விரும்புகிறேன் என்று கூறினார்[10].

19-06-2023 அன்று ராகுலின் பிற்ந்த நாள்: 19-06-1970 அன்று பிறந்த ராகுலுக்கு 53 வயதாகிறது. 23-06-2023 அன்று இக்கூட்டம் என்றால், சரியாக சென்ற 19-06-2023 ராகுலின் பிறந்த நாள் ஆகிறது. எனவே ஒருவேளை, 75 வயதாகும் லாலு அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்லியிருக்கலாம்[11]. ஆகவே, தமாஷுக்காக சொல்லவில்லை[12]. லாலு முன்னர் ராகுலின் தந்தையால் தான் மாட்டுத் தீவின ஊழலில் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குச் சென்றார். இப்பொழுது, அதே குடும்ப வாரிசுடன் கூட்டு வைத்துக் கொள்கிறார், என்றும் ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மேலும், ராகுலின் பிறந்த நாளையே காங்கிரஸ்காரர்கள் மறந்து விடார்களா அல்லது கொண்டாடக் கூடாது என்ற மேலிடத்து உத்தரவா என்று தெரியவில்லை. 53-வயது என்றால், ராகுலின் இளமைத் தனம் போய்விடும் என்று நினைத்தார்கள் போலும். இருப்பினும், சமீபத்தில் தாடி வைத்துக் கொண்டபோது, நரைத்த முடி தெரியத்தான் செய்தது.

பிஜேபியின் திருமணஒப்புமை கிண்டல்: லாலு ராகுலுக்கு அற்வுரைக் கொடுத்தாரா, கிண்டல் அடித்தாரா என்ற நிலையில், பிஜேபிகாரர்களும் விடவில்லை. நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார்[13]. ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்) என்று தெரியவில்லை[14]. பெண்ணும் யார் என்று புரியவில்லை[15]. ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள் என பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து கிண்டலடித்துள்ளார்[16]. ஒருவேளை ராகுல் தான் பிரதம மந்திரி வேட்பாளர் என்பதனை மறைமுகமாகக் கூறினார் போலும். இந்தியில் பேசியதால், இந்தி தெரியாத கட்சித் தலைவர்கள் தமக்கு இந்தி தெரியாது என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்யும்.

2013ல் கொடுத்த விளக்கம்பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2013ல் ராகுல் விவாகம் பற்றி நடந்த விவாதம்: கடந்த  2013 மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும் ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[17]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[18]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[19]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[20]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

© வேதபிரகாஷ்

25-06-2023


[1] தினமணி, ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்: லாலு பிரசாத், By DIN  |   Published On : 23rd June 2023 09:56 PM  |   Last Updated : 23rd June 2023 09:56 PM.

[2] https://www.dinamani.com/india/2023/jun/23/lalu-prasad-yadav-asks-rahul-gandhi-to-get-married-4026423.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா,  ராகுல் நாங்க சொல்றத கேட்கணும்.. செல்லமாக மிரட்டிய லாலு பிரசாத்.. வெடித்து சிரித்த அரசியல் தலைவர்கள்!,  By Vignesh Selvaraj Published: Friday, June 23, 2023, 18:52 [IST],

[4] https://tamil.oneindia.com/news/india/lalu-prasad-asks-rahul-gandhi-to-get-married-made-fun-at-press-meet-after-opposition-meeting-518035.html

[5] நக்கீரன், திருமணம் நடக்கும்என்ற ராகுல்காந்தி; பாட்னாவில் நடந்த சுவாரசியம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 24/06/2023 (08:26) | Edited on 24/06/2023 (08:50).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/you-have-said-it-it-will-happen-rahul-gandhi-interesting-happenings-patna

[7] சமயம், தாடியை எடுத்துட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பாராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் அட்வைஸ்!, Authored by Bahanya Ramamoorthy | Samayam Tamil |,

[8] https://tamil.samayam.com/latest-news/india-news/lalu-prasad-yadhav-advise-to-ragul-gandhi-to-get-married-soon-in-patna-meeting/articleshow/101232555.cms

[9] காமதேனு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்திய லாலு பிரசாத் யாதவ்ராகுல் கூறிய பதில் என்ன?, Updated on : 23 Jun, 2023, 9:10 pm

[10] https://kamadenu.hindutamil.in/politics/rahul-gandhi-was-asked-by-lalu-yadav-to-get-married-his-response

[11] இந்தியன்.எக்ஸ்பிரஸ், பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலகலப்பு: ராகுல் திருமணத்தை வலியுறுத்திய லாலு! , Written by WebDesk, tamil news, June 23, 2023 20:15 IST

[12] https://tamil.indianexpress.com/india/still-not-too-late-to-get-married-lalu-prasad-yadav-makes-a-wisecrac,k-at-rahul-gandhi-at-patna-meet-704805/

[13] மாலைமலர், திருமண ஊர்வல அலங்கரிப்பில் மாப்பிள்ளை யார்?- பா.ஜனதா கிண்டல், Byமாலை மலர்23 ஜூன் 2023 10:10 AM (Updated: 23 ஜூன் 2023 10:11 AM).

[14] https://www.maalaimalar.com/shots/bjp-mp-ravi-shankar-prasad-takes-jibe-on-the-opposition-meeting-who-is-the-groom-pm-contender-626240

[15] புதியதலைமுறை, அனைவரும் மாப்பிள்ளைகள்…” எதிர்க்கட்சிக் கூட்டத்தை விமர்சித்த பாஜக!, Prakash J, Published on : 24 Jun, 2023, 8:50 pm.

https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[16] https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[17]  Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[18]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[19] http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[20] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!

ஒக்ரோபர் 29, 2010

தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!

வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது[1]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[2].  இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[3]. இருப்பினும், காங்கிரஸ் அரசு இப்படி தீர்மானித்துள்ளது[4], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[5]. கேட்டால், பீஹாரில் தேர்தல் என்பார்கள்!

 

ஜிஹாதிகளிடம் செக்யூலரிஸ செல்லத்தனம் ஏன்? வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை, யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை…….என்ற நிலை தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாகாதா? கல்லடி ஜிஹாதிகளை திருப்பியடிக்காமல், நமது வீரர்கள் செல்லமாக அடி வாங்கிக் கொண்டு வந்தார்கள், ஆனால், என்னாயிற்று? நங்கள் எப்படி கட்டடித்தோம் என்று அந்த தேசத்துரோக கருத்தரங்கத்திலேயே “செயல் விளக்கம்” செய்து காட்டினார்கள்! அதுமட்டுமட்டுமா, எல்லைகளில் ஊடுவல், பாகிஸ்தானியர் துப்பாக்கி சூடு, இந்திய ஜவான்கள் பல்கி, காயம் என்று அந்தந்த நாட்களில் – 20-23, அக்டோபர் – தான் நடந்தேறின. இருப்பினும் சொதப்பலாக, வருமானவரி கட்டவில்லை என்று ஜிலானிக்கு நோட்டீஸ்[6] அனுப்பப்பட்டுள்ளதாம்!

 

நடவடிக்கை தேவையற்ற விளம்பரமாக அமையும் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்: எனினும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவர்களுக்கு தேவையற்ற விளம்பரமாக அமையும் என்பதாலும், பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்பதாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன[7]. மானம் கெட்ட காங்கிரஸ் ஏற்கெனெவே பலதடவை விளம்பரங்களிளேயே பாகிஸ்தானிற்கு பலதடவை அத்தகைய “பப்ளிசிடி” கொடுத்துள்ளது. இப்பொழுது கூட, பாகிஸ்தான் இந்த அளவிற்கு தொடர்ந்து எல்லைகளில் சுட்டு வாந்தாலும், பொத்திக் கொண்டுதான் இருக்கிறது.

 

சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றி போலீஸ் அதிகாரிக்குத் தகவல் வந்தபின் அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் ஒருவரது பேச்சு அமைந்துள்ளது என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்குத் தகவல் வந்தபின் அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கோ, மத்திய உள்துறை அமைச்சருக்கோ, அமைச்சகத்துக்கோ கிடையாது என பாரதிய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. பிஜேபி என்ன சொன்னாலும், யாரும் ஒன்றும் கேட்டுவிடப்போவதில்லை! அந்த நிலையில் அந்த கட்சி உள்ளது!

 

கிலானி, அருந்ததி ராய் பேச்சு; போலீஸ் விசாரணையைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: “சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் ஒருவரது பேச்சு அமைந்துள்ளது என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தகவல் வந்தால், அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது[8], அந்த வழக்கை மேற்கொண்டு நடத்துவது குறித்து அனுமதி கோரும் சமயத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட முடியும்”.

 

அமைதியான குழுவினரே அடாவடடத்தனமான கருத்துகளை வெளியிடுகிறர்கள்: “காஷ்மீர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவில் உள்ள ராதா குமார், ஆசாதி (சுதந்திரம்) தொடர்பாக விவாதம் நடத்துவது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறும் வகையில் திருத்தம் கொண்டு வர ஆலோசனை வழங்குவேன் எனக் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இந்திய ஜனநாயகத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஒரு முக்கியமான கருவியாகும். பிரிவினைக்கு அதைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. கடந்த ஓராண்டாக அமைதியான ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என உள்துறை அமைச்சர் .சிதம்பரம் பெருமைப்பட்டு கொள்கிறார். ஆனால், அமைதியாக செயல்பட வேண்டிய பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக கருத்து கூறிவருகின்றனர். மூன்று பேர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்படவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது தனிநாடு கேட்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது”, என்றார் அவர்.

 

காஷ்மீர் இந்துக்கள் புகார் – நடவடிக்கை எடுக்கப் படுமா?: அரசு இப்படி ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்துள்ள காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[9], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது[10]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்துள்ளார்[11]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[12], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லியிருக்கிறார்கள்!

 

யார் இந்த காஷ்மீர் இந்துக்கள்? “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள்[13]. ஆனால், கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர்[14]. எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில்[15], முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[16]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன.

 

வேதபிரகாஷ்

© 28-10-2010


[1] தினமணி,  கிலானி, அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு இல்லை: மத்திய அரசு முடிவு, First Published : 29 Oct 2010

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=……………..81

[2] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!, https://secularsim.wordpress.com/2010/10/27/susanna-arundhati-roy-sedition-arrest/

[3] A legal opinion given by a law officer had said that the speeches made by the duo at the Delhi conference amounted to sedition and both should be booked under Section 124A of the IPC.

http://www.indianexpress.com/news/No-action-against-Geelani–Arundhati/704153

[4] The decision to the speeches was taken to avoid giving a handle to separatists and civil liberties activists, who were expected to rally around Roy to support freedom of expression.

http://www.hindustantimes.com/No-case-to-be-filed-against-Roy-Geelani/H1-Article1-619143.aspx

[6] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[7] Highly-placed sources said a decision in this regard was taken after considering various issues, including the legal opinion secured by the Delhi Police. “Booking them (Geelani and Roy) would only give them unnecessary publicity and a handle to separatists in the Valley. We have decided to ignore them,” an official in the Union Home Ministry said.

தினமலர், கிலானி, ராய் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை, அக்டோபர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=115686

[8] தினமணி, கிலானி, அருந்ததி ராய் பேச்சு; போலீஸ் விசாரணையைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: பாஜக, First Published : 29 Oct 2010 01:35:35 AM IST; Last Updated : 29 Oct 2010 02:39:51 AM IST; http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324883&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=…..95

[10] The complaint for registration of FIR against them has been filed at Tilak Marg police station, and according to the complainant, the police has promised investigation and “if the case suits, then a FIR will be filed within two days,” which may prompt the police to take action against Roy, Geelani and others.

http://www.dailypioneer.com/292994/Kashmiri-Pandits-lodge-police-complaint.html

[13] இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வடில்லை.

[14] மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர்.

[15] அருந்ததி தகர வீட்டில் வசித்தாக, இணைதளங்களில் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது, இவர்களை தாராளமாகச் சென்று பார்த்திருக்கலாமே? ஆமாம், போட்டியாக இத்தாலிக்கு வந்து விடப்போகிறார்கள் என்று பயந்து விட்டார் போலும்!

[16] ஏசி ஹால், பிரியாணி லன்ச், ராத்திரி டிரிங்ஸ் என சகலமும் இருந்தன. அனுபவித்த பேராளர் வழியாக அறிந்தது!

சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

செப்ரெம்பர் 30, 2010

சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார். ஆனால், சொரணையற்ற இந்திய அமைச்சர் அமைதியாக, வேறு பாசையில் எதுவோ பேசி வருவது ஆச்சரிமாக உள்ளது.

பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் இவ்வாறு பேசுவதற்கு, கிருஷ்ணாவிற்கு தைரியம் கிடையாது. “தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும், எல்லைகளில் தீவிரவாதிகளை நுழைய உதவுவது, ஜிஹாதிகளை வளர்ப்பது முதலியன கூடாது என்று சொல்ல வக்கில்லை. பயங்கரவாதம் / தீவிரவாதம் பேசி மக்களைக் கொண்ரு வரும் வேளையில், அவர்களிடம் அன்பாக, அமைதி பற்றி பேசுவதால் என்ன பயன்? காந்தியால் சாதிக்க முடியாததை, இந்ர்ஹ தொடைநடுங்கி, தேசவிரோத காங்fகிரஸ்காரர்கள் சாதித்து விடப்போகின்றனரா?

பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு: மனித உரிமை பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என மத்திய அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்[1]. இதற்கிடையே நேற்று ஐ.நா., பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். அவர் பேசியதாவது: “காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை குறி வைத்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதியளிக்கக் கூடாது. பாகிஸ்தான் கொடுத்துள்ள வாக்குறுதி படி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். ஜனநாயகம் குறித்தும், மனித உரிமை குறித்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக் காக்க உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவங்குவதற்குரிய சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். .நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது”,  இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.

இந்திய எல்லை பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல்: ஒவ்வொரு தடவை, ஐநா கூட்டத்தில் பேச்சு எனும்போது, பாகிஸ்தானியர் இவ்வாறு எல்லைப்பகுதிகளில் சுடுவது, உள்ளூரில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வது என்று வழக்கமாகக் கொண்டுள்ளனர்[2]. இதெல்லாம் வெறும் பிரச்சார ரீதொயில் மற்றும், ஊடகங்களின் கவனத்தைக் கவரவும் என்றாலும், அத்தகைய முறையை இந்தியா பின்பற்றாதது, தீவிரவாதத்தைப் பின்பற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இளக்காரமாகி விடுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அத்துமறியுள்ளது, எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவ உயர் அதிகாரி கூறுகையில், நேற்று இரவு 11.45 மணியளவில் துவங்கி 2 மணிநேரம் கடும் சண்டை நடைபெற்றதாகவும், மீண்டும் காலையில் இந்திய செக்போஸ்ட்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பூஞ்ச் பகுதியில் உள்ள செக்போஸ்ட்களை குறிவைத்து, பாக். ராணுவம், ராக்கெட், கையெறி குண்டுகள், இலகுரக துப்பாக்கிகளின் துணைகொண்டு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிதம்பரத்தின் கையாலாகாதத்தனம்: சொரணையற்ற சிதம்பரமும், நிலைமையை அறிந்தே, (தீவிரவாதம் / பயங்கரவாதத்தால்) பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்ற சட்டப்பிரிவுகளை எடுத்துவிடுவேன்[4], காஷ்மீரத்தில், ராணுவத்தைக் குறைப்பேன்,  “அஃப்ஸ்பா”வைக் குறைப்பேன்[5], பங்கர்களை அப்புறப்படுத்துவேன்[6], செக்போஸ்டுகளை குறைப்பேன், அதிகாரங்களைக் குறைப்பேன், தேசவிரோத கல்லடி-பயங்கரவாதிகளை[7] விடுதலை செய்வேன் என்று கிளம்பியுள்ளார். பிறகு, இறந்த ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள், போலீஸார்கள் இவர்களுடைய உயிர்களின் மதிப்பு என்ன?

சங்பாஸ் டெஹ்ரீக்” – ஜிஹாத் என்றாலே பேதிபோகும் சிதம்பரம் வாந்திபோகும் நிலை வந்துவிட்டது: கல்லடி பயங்கரவாதிகளை, சிதம்பரம் “லஸ்கரின் ஏஜென்டுகள்” என்று சொன்னதால் அந்த கூட்டாத்தாருக்கு கோபம் வந்துவிட்டதாம்[8]. இல்லை “அது உள்ளூர் இயக்கம்தான். பாகிஸ்தானிற்கும் இதற்கும் சபந்தம் இல்லை”, என்று விளக்கம் கொடுக்கிறார்களாம்! நாங்கள் “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்! இனி, சிதம்பரம் அவர்களிடமும் பேதி விட்டால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தொடை நடுங்கியாகிவிட்ட சிதம்பரம் 52 கல்லடி-பயங்கரவாதிகளை விடுவிக்கத் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது[9].

இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு: “ஐ.நா., பொதுக் கூட்டத்தின் போது நான் சந்திக்கத் தயாராக இருந்த போதும், இந்தியா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டது’ என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்[10]. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த வாரம் முதல், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் நியூயார்க் வந்திருக்கின்றனர்.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியும், நியூயார்க் பயணம் மேற்கொண்டிருப்பதால், இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் சூழலில் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்று நேற்று முன்தினம் மாலை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். மேலும் அவர், ஐ.நா., பொதுச் சபை மற்றும் மக்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில், குரேஷி காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசிவருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “உள்நாட்டுப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக குரேஷி காஷ்மீர் பிரச்னையை எழுப்புகிறார்’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குரேஷி, “எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். நான் தங்கியிருக்கும் ரூஸ்வெல்ட் ஓட்டலுக்கு வரும்படி கிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்தேன். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு நானே வருவதாகவும் கூறியிருந்தேன். அவர் ஏன் வரவில்லை என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். பாக்., தரப்பில் எந்தக் குறைபாடும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார்.


[1] தினமலர், பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு, செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95805

[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hRtIvmuvlbec3cXAtqo9dUxVaX6Q?docId=CNG.87fc43de98513173dcce8b64af55cda1.221

[3] தினமலர், பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல், செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95698

[4] http://www.dnaindia.com/india/report_disturbed-areas-act-in-jammu-and-kashmir-to-go_1445457

[5] http://timesofindia.indiatimes.com/india/Panel-to-review-partial-withdrawal-of-AFSPA/articleshow/6655303.cms

[6] http://www.thehindu.com/news/national/article803155.ece

[7] “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்!

[8] http://timesofindia.indiatimes.com/india/Kashmir-doesnt-belong-to-India-or-Pak/articleshow/6655263.cms

[9] http://timesofindia.indiatimes.com/india/JK-govt-decides-to-release-52-stone-pelters-/articleshow/6654124.cms

[10] தினமலர், இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95765

அப்துல் நாசர் மௌதானியும், சீதாராம் யச்சூரியும்!

ஓகஸ்ட் 29, 2010

அப்துல் நாசர் மௌதானியும், சீதாராம் யச்சூரியும்!

மதானியுடன் கூட்டு, சி.பி.ஐ (எம்) என்ன சொல்கிறது? சி.பி.ஐ (எம்) தலைவர்களில் ஒருவரான சீதாராம் யச்சூரி என்பவர், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது உரையாடிக் கொண்டிருந்தார். மம்தா பேனர்ஜி அவரைப்பற்றியும், நேபாள மாவோயிஸ்டுகளைப் பற்றியும் இணைத்து பேசியுள்ளதைப் பற்றி ஒரு நிருபர் கேட்டார். இன்னொருவரோ, தீவிரவாதியான மதானியுடன் கேரளாவில் 2009ல் கூட்டுவைத்துக் கொண்டீர்களே, என்று கேட்டார்.

இதனால், சங்கடமடைந்த யச்சூரி[1], தனக்கு உரித்தான பாணியில் நழுவலுடன் பதிலளித்ததாவது, “நேபாள மோவோயிஸ்ட்கள் மற்றும் மம்தா என்று பார்க்கும்போது, அது மிகவும் சிக்கலானப் பிரச்சினையாகும். அதனுடன் மதானியை செர்த்து விட்டால், இன்னும் மிக-அதிகச்சிக்கலான பிரச்சினையாகி விடும். ஆகவே, மம்தாவைப் பொறுத்த கேள்விக்கு மட்டும் பதிலளிக்கிறேன்”, என்று தப்பித்துக் கொண்டுவிட்டார்!


[1] http://sify.com/finance/ducking-madani-news-analysis-ki3akdijgfi.html