Archive for the ‘சல்மான் குர்ஷித்’ Category

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

நவம்பர் 9, 2013

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

Rahul hate speech at Churu, Rajasthan ISI etc

பாகிஸ்தான் உளவுப்படை முசபர்நகர்முஸ்லிம்களைசந்திக்கிறது: காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர், ‘.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில், மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, .எஸ்.., தொடர்பு கொண்டு பேசியதுஎன்றார். ‘முசாபர்நகர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சந்தித்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக, வன்முறையில் ஈடுபட அவர்களை ஊக்குவித்ததாகவும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த மத கலவர தீயை பாஜ.தான் தூண்டி விட்டது. அதை காங்கிரஸ் அணைத்து வருகிறது என்று ராகுல் பேசினார். அவரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

முஸ்லிம்தலைவர்களின்கண்டனம், எதிர்ப்புமுதலியன: முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜமாத் மௌலானா மதனி என்ற உலிமா-இ-ஹிந்த் முஸ்லிம்மத தலைவர், “ராஹுல் மிகவும் பொறுப்பற்றமுறையில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. உண்மையில் அத்தகைய விசயங்கள் அரசியல் ஆக்கக் கூடாது. ஒருவேலை அத்தகைய விவரம் அவருக்குக் கிடைத்திருந்தாலும் இவ்வாறு வெளிப்படையாக அறிவிப்பது, முறையற்றதாகும்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[1]. மௌலானா கல்பே சாதிக் என்ற இன்னொரு முஸ்லிம்மத தலைவர் அதனைக் கண்டித்து, போடியின் கருத்தை ஆதரித்து, “மோடியிடத்தில் அம்மாதிரியான மாற்றத்தை நாங்கள் காண நேர்ந்தால், 2002ஐ மறந்துவிடும்படி, முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்வோம்”, என்றும் கூறியிருந்தார்[2]. ஆஸம் கானே, .எஸ். தொடர்பு கொண்ட முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா என்று கேட்டார்[3].  கே.எம். செரிப் என்ற பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியாவின் தலைவர், “காங்கிரஸ் தனது திட்டத்தின் மூலம், பிஜேபியையும் மிஞ்சுகிறது”, என்று கமென்ட் அடித்தார்[4]. உடுப்பியில் குலாம் மொஹம்மது என்ற ஜனதா தள் (செக்யூலர்) மாவட்டத் தலைவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்[5]. முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும், ராகுலின் பேச்சு முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகத்தை இன்னும் அத்கப்படுத்துவதாக கவலைக் கொண்டுள்ளனர்[6].

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

மோடியின்கேள்விகள்: மோடி, “இளவரசர் .எஸ். முஸ்லிம்களை தொடர்பு கொள்ளும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்? அதனை ஏன் தடுக்கவில்லை. மேலும் அவரிடத்தில் .எஸ். அவ்வாறு முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டது என்று சொல்வதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறாதா?”, என்றும் கேட்டிருந்தார்[7]. அதுமட்டுமல்லாது, அரசில் எந்த பதவியும் வகிக்காமல்,வெறும் கட்சியின் துணைத்தலைவர் என்ற நிலையில் இருக்கும் போது, இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், எவ்வாறு அவரிடத்தில் அத்தகைய ரகசியமான தகவலை சொல்லமுடியும், அந்த முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா, என்று கேட்டிருந்தார். இதற்குள் எதிர்பார்த்தபடி, உள்துறை அமைச்சகம் அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டதாம்[8]. உத்திரபிரதேச அரசும் அவரது பேச்சை மறுத்து, பதிலுக்கு நூற்றுக் கணக்கான குஜராத்தியர் அங்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர் என்றது. இந்த கண்டுபிடிப்பை, பேனி பிரசாத் வர்மா என்பவர் செய்துள்ளார்[9].

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

தலைமைதேர்தல்கமிஷனில்புகார், நோட்டீஸ்: பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனில், புகார் அளித்தனர். ‘சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில், ராகுல் பேசியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிட கான்பூர் தலைமை மாஜிஸ்ட்ரேட் கோர்டில் சமஜ்வாடி கட்சி தலைவர் பர்ஹான் லரி, “ராகுலின் பேச்சு முஸ்லிம்களின் மனங்களை பாதிப்பதாக உள்ளது”, என்று பிரபுல்ல கமல், தலைமை மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் கொடுத்தார். இதுதவிடர வணிக சங்கத்தலைவர் ஞானேஸ் திவாரி மற்றும் சமூக சேவகர் மொஹம்மது இஸ்லாமுத்தீன் என்பவர்களும் அதே கோர்ட்டில் புகார் கொடுத்துள்ளனர்[10].  இதுகுறித்து பதில் அளிக்கும்படி, ராகுலுக்கு, ‘இது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த மாதம் 31ம் தேதி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடு விதித்தது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

ராகுல்பதில்அளிக்கமேலும்அவகாசம்கேட்டது: தேர்தல் கமிஷன் விதித்த கெடு முடிவடையும் நிலையில், ‘பதில் அளிப்பதற்கு, கூடுதலாக, ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என, ராகுல் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு, நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது[11].இந்த கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கும்படி தேர்தல் ஆணையத்தை ராகுல் கேட்டு கொண்டார். அதை ஏற்ற தேர்தல் ஆணையம், நவம்பர் 8ம் தேதி காலை 11.30க்குள் விளக்கத்தை அனுப்பும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், 08-11-2013 காலை 11.30 மணி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, ராகுல் அனுப்பிய விளக்க கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்தது[12].

Sonia angry

மதஉணர்வுகளைத்தூண்டவில்லை[13]: “ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின்போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை” என்று காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அனுப்பியிருந்த நோட்டீசுக்கு வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று ராகுல் காந்தி பதில் அனுப்பியுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. யாருடைய மனதையோ மத உணர்வுகளையோ தூண்டும் வகையில் பேசவில்லை. வகுப்புவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. எனவே, அது தொடர்பான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கிப் பேசினேன். எந்த இடத்திலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். அதை நிராகரிக்க வேண்டும்‘ என்று ராகுல் காந்தி கடிதத்தில் கூறியுள்ளார்.

உரியநடவடிக்கைதேர்தல்ஆணையம்: ராகுல் காந்தியின் கடிதம் கிடைத்த தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அவரது விளக்கத்தை ஆணையம் உரிய முறையில் பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று சம்பத் கூறினார். ஊடகக் காரர்கள் அக்கடிதத்தில் என்ன இருந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்ல மறுத்து விட்டார். ஏற்கெனவே என்.ஐ.ஏ, சிபிஐ முதலியவை காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கிறது என்று பரந்த புகார் உள்ளது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் உண்மையில் செயல்படுவாரா இல்லையா என்று சந்தேகத்தில் தான் உள்ளது. ராகுலின் மீது நாட்டில் பல இடங்களில் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், போலீஸ் என்று புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் இப்புகாரை நிராகரித்து விட்டால், மற்ற குற்றப் புகார்களும் அடிபட்டு விடும். முன்பு இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, ராகுலுக்கு ஏற்படுமா, அவ்வாறு ஏற்பட சோனியா விட்டுவிடுவாரா என்று ஆராயத்தக்கது.

© வேதபிரகாஷ்

09-11-2013


[1] Criticising Rahul Gandhi for his ISI remark, Jamiat Ulema-e-Hind leader Maulana Madani said, “Rahul Gandhi’s statement was very irresponsible and we condemn it. Such issues must not be politicised. Even if he had any such information, it’s a reckless statement.”

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[2] While Rahul is being criticised by Muslim clerics, Modi got unexpected support from a top Muslim cleric, Maulana Kalbe Sadiq. “If we see a change in the attitude of Modi, we will try to convince Muslims to forget 2002. Such a thing has happened in the past,” Sadiq said.

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[3] Khan also urged Rahul Gandhi to come forward with the names of the Muslim youth that were allegedly contacted by Pakistani agents to help the Samajwadi Party-led Uttar Pradesh to take action accordingly.

http://zeenews.india.com/news/nation/azam-khan-asks-rahul-gandhi-to-name-muslim-youth-approached-by-isi_885794.html

[7] Questioning Rahul’s Indore speech on ISI trying to recruit riot-affected victims in Uttar Pradesh’s Muzaffarnagar, the BJP leader asked what the Congress Vice President had done to address the issue. “What has the shahzada done to stop the ISI from reaching out to Muslims in Muzaffarnagar,” asked Modi while addressing a rally in Jhansi on Friday.His second question to Rahul was more direct. The Gujarat strongman questioned the credibility of Rahul’s statement on ISI. “Does shahzada have any proof of ISI reaching out to riot victims?” he said.

[9] The Uttar Pradesh Government on Saturday officially dismissed Congress vice-president Rahul Gandhi’s claims about Pakistan’s ISI being in touch with affected Muslim youth from riot-hit Muzaffarnagar even as Union Steel Minister Beni Prasad Verma added a new dimension, saying hundreds of people from Gujarat had come to Muzaffarnagar to indulge in rioting.

http://www.dailypioneer.com/sunday-edition/sunday-pioneer/nation/up-dismisses-rahuls-isi-in-touch-claim.html

[10] Samajwadi Party leader Farhan Lari, while alleging that Rahul had hurt the sentiments of the Muslim community, has lodged the complaint before the CMM Prafulla Kamal. Another case has been lodged by traders’ leader Gyanesh Tewari and social worker Mohammad Islamuddin in the same court. The duo too have maintained that the statement has posed serious threat to the country’s integrity.

http://www.hindustantimes.com/india-news/two-complaints-filed-against-rahul-gandhi-for-isi-statement/article1-1140912.aspx

[13] தினமணி, 09 November 2013 01:46 AM IST,

செக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு!

ஏப்ரல் 18, 2013

செக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு!

ஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார்.  இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].

“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது?”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.

பேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.

Mr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,

என்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].

இந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6].  “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா?” [26/11 RSS Ki Saazish? -26/11, An RSS Conspiracy? ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].

குண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்?: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.

4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].

“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:

  • “இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.
  • தேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
  • அருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.
  • மேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.
  • இவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.

மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].
பெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.

வேதபிரகாஷ்

18-04-2013


[4]  ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.

[8] It was at this book’s launch on December 6 where Singh had said that Mumbai ATS chief Hemant Karkare had called him, hours before he was killed in the terror attacks, to tell him about threats he had received for probing Hindu extremists and their terror links. Burney, however, tendered an apology on January 29, saying that he would like to “clarify and apologise if he has hurt anyone by the title of his book and is happy to change the title” if that would assuage feelings.

http://www.dnaindia.com/india/1501809/report-rss-rejects-aziz-burney-apology-to-pursue-case-against-him

[9] The Chief Judicial Magistrate Court in Allahabad on Friday ordered registration of a case against Congress leader Digvijay Singh for this statement in Ujjain on July 18 calling RSS a bomb making factory. Singh had said the “RSS was spreading terrorism in the country and it has been making bomb factories.” The Congress general secretary had earlier courted controversy when he said that he did not rule out the involvement of Sangh in Mumbai serial blasts.While the RSS and the BJP had slammed him, the Congress had washed its hands off the comments. Read more at:http://indiatoday.intoday.in/story/digvijay-singh-booked-for-remarks-against-rss/1/149268.html

[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.

[12]Congress Legislature Party leader Siddaramaiah blamed the BJP and the Sangh Parivar saying that they end up committing such acts for political gains. Another Congress leader, H Vishwanath, MP from Mysore, alleged that RSS is a suspect in the incident. “RSS has a history of indulging in acts of terrorism. They have done it in Malegaon. The Central investigation agencies should crack the case and expose those behind the blasts before the elections are over,” he stated.

http://www.deccanherald.com/content/326750/cong-suspects-rss-hand-bjp.html

[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.

[16] The MHA sources said that the office ofKarnataka BJP, near which the blast took place in the morning, was bustling with till Tuesday when ticket distribution process concluded. However, since the process had ended, there was not much crowd at the party office on Wednesday.Sources also said that a temple located about 100 metre from the blast site, could also be the target. “The bombers wanted higher casualties so they chose the spot carefully,” a source said.The incident comes a day before the third anniversary of the blast outside the Chinnaswamy Stadium. Sources said it was too early to name any suspect, but confirmed that improvised explosive device (IED) was used in the explosion. The Ministry of Home Affairs (MHA) on Wednesday confirmed that the latest Bangalore blast was a terror attack. Union Home Secretary R.K. Singh confirmed that it was indeed a terror attack, but refrained from naming any organisation as the investigation was still on. Earlier, Union Home Minister Sushilkumar Shinde said, “We are enquiring the matter and will let you know about the details soon.”

Read more at: http://indiatoday.intoday.in/story/bangalore-blast-bjp-terror-attack-home-ministry-sushilkumar-shinde/1/262709.html

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

ஓகஸ்ட் 7, 2012

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

சோனியா மெய்னோ என்ன தீர்மாகின்றாரோ அதுதான் செயல்படுத்தப் படுகிறது. மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.

சோனியா பார்ட்டி வைத்தால் விரோதிகள் முல்லாயமும், மாயாவதியும் கலந்து கொள்கின்றனர். இது கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சருவது போல.

நவீன் பட்நாயக் சாமர்த்தியமாக விலகிக் கொள்கிறார்.

சந்திரபாபு நாயுடைப் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான பழுத்த செக்யூலார் பழம்.

ஆக சோனியா ஒன்றல்ல பல தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொள்கிறார்.

சொல்லி வைத்தப்படியே அன்னா ஹஜாரேயும் தமது இயக்கத்தை முடக்கி விட்டார். சல்மான் குர்ஷித் என்னதான் பேசினாரோ?

பிறகென்ன, அடுத்த பிரதமர் ராகுல் தான்!

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மே 7, 2012

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மீசை-தாடி இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதி: ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, “முஸ்லீம் என்பதால் தான் அப்படி செய்கிறார்கள்”, என்று சொல்லப்பட்டது. தமிழகத்தின் கமல்ஹசன் என்ற முஸ்லீம் அடிவருடிகூட, ஏதோ தானு ஒரு முஸ்லீம் போலவும், தனக்குக் கூட அப்படித்தான் ஏற்பட்டது என்றுக் கூட சொல்லிக் கொண்டது! ஆனால் இப்பொழுது எல்லாமே பொத்திக் கொண்டு இருக்கின்றன. சல்மான் குர்ஷித் என்பவர் என்னதான் செக்யூலரிஸ முகமூடி அணிந்து கொண்டு, மீசை-தாடிகள் இல்லாமல் உலா வந்தாலும், தான் ஒரு இருகிய, கெட்டியான, உறுட்தியான இஸ்லாமிய அடிப்படைவாதி என்று பலமுறை காண்பித்து வருகிறார். உபி தேர்தல் சமயத்தில், முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு தேவை, கொடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து வகையாக மாட்டிக் கொண்டார். ஆனால், சட்ட அமைச்சராயிற்றே. ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது. சட்டம், நீதி முஸ்லீம் என்றால் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்கிறது. இப்பொழுது, ஆபாச-சிடி புகழ் அபிஷேக் சிங்வி வகையாக மாட்டிக் கொண்ட பிறகு, உண்மை நிரூபிக்கப் பட்டால், அவருக்கு மிக்கக் கடுமையான தண்டனையளிக்கப்ப்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹஸாரே பேசியிருந்தார். அதற்கு சல்மான் குர்ஷித் சொல்கிறார்:

நான் நீதி / சட்ட அமைச்சர் என்று இருமாப்புடன் பேசும் சல்மான் குர்ஷித்: “நான் நீதி மந்திரி, சட்ட மந்திரி. எனக்கு சட்டத்தைப் பற்றித் தெரியும். என்னைப் பொறுத்த வரையிலும் ஒருவன் கொலை செய்திருந்தால், அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கலாம். ஆனால், மற்றதற்கு அத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்றால் எனக்குத் தெரியவில்லை. அவர் எந்த சட்டத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சட்டம் இருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று கிண்டலும் நக்கலும் கலந்த இந்தியில் நிருபர்களுக்கு[1] பேட்டியளித்துள்ளார்[2]. அதாவது, பொருள் கலந்து புன்சிரிப்பில் இஸ்லாமிய நாடுகளில் தான் அத்தகைய சட்டம் உள்ளது, இந்தியாவில் இல்லை என்பது போல பேசினார்! ஆனால், இதே ஆள் தான் இப்படியும் பேசியுள்ளார்:

என்னை தூக்கில் போட்டாலும் நான் அப்படித்தான் பேசுவேன், (என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது): இப்படி பேசினதும் சல்மான் குர்ஷித் தான்!

  “முஸ்லீம்களுக்கான உரிமைகளுக்காக நான் போராடுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன்”, என்று பேசியவர்[3] யார் என்று ஞாபகம் இருக்கிறதா? இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான்! இதை தாடி வைத்திருந்த ராகுல் காந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அவ்வாறு பேசியுள்ளார். ஆக தாடி-மீசை மழித்த இந்த முஸ்லீமிற்கும், அந்த தாடி-மீசை வைத்திருக்கும் ராகுலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முஸ்லீம்களின் ஓட்டுக்கள் வேண்டுமானால், முஸ்லீம் முஸ்லீம் இல்லாதது போலக் காட்டிக் கொள்ள வேண்டும், முஸ்லீம்-அல்லாதவர், முஸ்லீம் போல வேடம் போட வேண்டும். இப்படித்தான் தேர்தல் பார்முலா வேலை செய்யும் என்பதினால் தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள், போதாக் குறைக்கு, பெரிய பதவிகளில் முஸ்லீம்கள் வேறு. இவர்கள் பாரபட்சமில்லாமல் வேலை செய்வதில்லை என்பது இப்படித்தான் நிரூபணம் ஆகிறது.
  • சட்டத்தைத் தெரிந்து கொண்டு பேசினாரா இல்லையா என்பதனை அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசுவதற்கு யார் தைரியம் தருவது? அருகில் ராகுல் சிரித்துக் கொண்டே இருப்பதினால், அங்கீகரித்து விட்டார் என்ற மமதையா?
  • நீதி-சட்ட அமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் அப்படி பேசலாமா? இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா? இதற்குத் தான் செக்யூலரிஸம் என்று அர்த்தமா?
  • தேர்தல் கமிஷனரும் ஒரு முஸ்லீம் தான். ஆனால், அவரும் ஒன்றும் செய்யவில்லையே?
  • அப்படியென்றால், அவர் முஸ்லீம் என்பதால், மற்றொரு முஸ்லீம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டாரா?
  • பிறகு எப்படி பெரிய பதவிகளில் இருக்கும் முஸ்லீம்களை நம்புவது?
  • நாளைக்கு அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அல்லது உத்திரவாதம்?
  • பிறகு என்ன சட்டம்-நீதி எல்லாம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம் என்ற பொய்யயன பேச்சு, நாடகம் எல்லாம்? இதுதான் சமதர்மமா, நியாயம்-தர்மம் என்று பேசும் பேச்சா?
  • இந்தியாவில் என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்கிறது?
  • முஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றால், அதற்கு என அர்த்தம்?
Working for people, let EC hang me: KhurshidPTI – Farukkhabad, February 11, 2012

Sticking to his stand on minorities, Congress leader Salman Khurshid has said he would ensure the rights of Pasmanda Muslim community even if the Election Commission “hangs” him[4].

Addressing an election rally in Khatakpur locality on Friday night, the law minister said that EC had

censured him, but even if the “Commission hangs him or does anything else”, he would ensure that people of Pasmanda community get their rights[5].

“Can’t I even say that Pasmanda Muslims would get their due?” he said, adding that Congress was set to hoist the tricolour in the state assembly after 22 years.

The Commission had censured Khurshid for his remarks on sub-quota for minorities, finding them to be a violation of the model code of conduct for elections.

Khurshid, while campaigning for his wife Louise, a Congress candidate from Farrukhabad assembly constituency in Uttar Pradesh, had promised the electorate last month that the party would increase the sub-quota for minorities to 9%, out of the 27% Other Backward Classes (OBC) reservation.

The EC order had come on BJP’s complaint about Khurshid’s remarks, asking the Commission to take action against him for violation of model code of conduct.

பாவம், தேர்தல் கமிஷன், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது[6], தூக்கில் போடவில்லை. தேர்தல் நடைமுறை ஒழுங்கு பற்றியும் சோனியா காங்கிரஸ் கவலைப் படவில்லை. தனது சகோதரன் இருந்தான் என்பதினால், பிரியங்கா கூட, சல்மானுக்கு வக்காலத்து வாங்கி வந்ததை டிவி-செனல்கள் வெளிப்படையாகத் தான் காட்டின. ஏன், அவரது கணவனும் அதிக அளவில் வண்டிகளுடன் உலா வந்தார், ஆனால், தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யவில்லை! சோனியா மெய்னோவின் மாப்பிள்ளை – ராபர்ட் வெதேரா ஆயிற்றே, சட்டம் எப்படி வெல்லை செய்யும்?

வேதபிரகாஷ்

07-05-2012


[2] “I respect Anna. I am a law minister…as per my understanding a person is hanged in rarest of rare cases, especially relating to murder. “If somone has other knowledge on law, I am prepared to learn from him. I will try to understand more about law,” Khurshid said taking a dig at social crusader Hazare.

http://www.dnaindia.com/india/report_salman-khurshid-takes-a-dig-at-anna-for-his-knowledge-of-law_1684950