Archive for the ‘பி.ஜே. தாமஸ்’ Category

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?

செப்ரெம்பர் 6, 2010

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?

ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரி தேர்வு: மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவர் ஆளும், அதிர் கட்சிகளின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி கலந்தாசிக்கும்போது, காங்கிரசின் தரப்பில் பி.ஜே. தாமஸ் என்ற கேரள அதிகாரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது பின்னணியை ஆராய்ந்தபோது, 1991-92 வருடத்தில் அனுமதியின்று ரூ. மூன்று கோடி பாம் ஆயில் இறக்குமதி செய்த வழக்கில் சம்பந்தப் பட்டது தெரிய வந்துள்ளது[1]. ஆகவே பீஜேபி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும், சோனியாவின் சாய்ஸ் என்பதனால், மன்மோஹன், எதிர்பார்த்தபடியே தாமஸை நியமனம் செய்துவிட்டார்[2].

ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது பி.ஜே. தாமஸ் தொலைதொடர்பு அமைச்சகத்தின் செயலர்: இதே பி.ஜே. தாமஸ் முன்பு தொலைதொடர்பு அமைச்சகத்தில் செயலராக இருந்துள்ளார். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது, இவரது பங்கும் அதில் இருந்ததாக, தொலைதொடர்பு ஊழியர்கள் குற்றாஞ்சாட்டியுள்ளனர். ஆனால், அப்படிப்பட்ட ஆளையே, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவராக்குவது, படு அசிங்கமாக – திகைப்பாக, வேதனையாக இருக்கிறது[3].

சிதம்பரம் ஆதரிக்கும் தாமஸ்: “முன்பு ஊழல் குற்றத்தில் சம்பந்தப் பட்டிருக்கலாம், ஆனால், இப்பொழுது அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார்[4]. ஆகவே அவரது திறமைதான் நமக்கு இப்பொழுது வேண்டும், அதைத்தான் நாம் பார்க்க வேண்டும்”, இப்படி வக்காலத்து வாங்குவது உள்துறை சிங்கம் சிதம்பரம் தான்! நிச்சயமாக கருணாநிதி சிதம்பரத்தின் உதவியுடன் இந்த ஊழலை மறைக்க பார்க்கிறர் என்பது நன்றகவே தெரிகிறது. அதற்கு காங்கிரஸ், இவ்வாறு செயல்படுகிறது.

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா? உதாரணத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ராஜாவை இவர் எப்படி நீயாயம்-தர்மம் படி விசாரிப்பார், புலம் ஆய்வு செய்வார்? ஏனெனில், அப்பொழுது, ராஜா இவரது “பாஸ்”, அலுவலக எஜமானன். ஆகவே, இது நிச்சயமாக ஊழலை மறைக்க, ஒரு ஊழல் அழுக்குப் பட்ட ஆசாமியை வைத்துக் கொண்டு மறைக்கும் நாடகமே என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன[5]. ஆகவே, விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?, என்று கேட்டால், முடியும் என்கிறது காங்கிரஸ்!

உ.டி.எஃப் மற்றும் எல்.டி.எஃப் கருணாநிதி-ஜெயலலிதா மாதிரி: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறி கேரளாவில் கொள்ளையடுத்து வருவது சகஜமான விஷயம். ஆகவே, இந்த ஊழலை மறைக்கவும், இந்த இரண்டு கூட்டணி ஆட்சிகள் வேலை செய்துள்ளன. 2005ல் உ.டி.எஃப் ஆட்சி இந்த வழக்கு செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. 1992ல் ஒரு மலேசிய கம்பெனியிலிருந்து பாம் ஆயிலை இறக்குமதி செய்தலில், ஊழல் ஏற்பட்டதாகவும், அதில் பல கோடிகள் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பாட்டாதாகவும், அதனால், இவர்கள் பலனடைந்ததாகவும் வழக்கு போடப்பட்டது. கருணாகரன் மற்றும் ஏழு பேர் அந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்: அதில் டி. எச். முஸ்தஃபா – முன்தைய உணவு விநியோக மந்திரி, ஜிஜி தாமஸ், ஸ்கேரியா மாத்யூ இருவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இவர்களில் பிணையில் வெளிவந்தவர்கள்[6]. 2006ல் எல்.டி.எஃப் ஆட்சி உச்சநீதி மன்றத்தில்[7], இவ்வழக்கை உயிர்ப்பித்தது[8]. ஆனால், உச்சநீதி மன்றம் ஊழல் பிரச்சினையை விட்டு விட்டு, அரசியல் காழ்ப்பிற்க்காக, இவ்வழக்கு நடத்தப்படுகிறதா என்று ஆராய்ச்சி செய்யுமாறு, கேரள உயர்நீதி மன்றத்திற்கே திருப்பி வைஇத்தது. பிறகு, புதைத்து மூடப்பட்டது.

நிறம் தெரியாத கண்ணடி போட்ட சிதம்பரம்: ஊழலில் கறைப்பட்ட, அழுக்குப்பட்ட, சாயம் பட்டது கூட சிதம்பரத்திற்கு தெரியவில்லை, ஆனால், அவரது அனுபவம் தான் திறமையாகத் தெரிகிறது. அதே நேரத்தில், தீவிரவாதத்தில் / பயங்கரவாதத்தில், கண்ணாடி மாட்டிக் கொண்டிருந்தாலும் காச்வி நிறம் நன்றகத் தெரிகிறது, ஆனால், இங்கு ஊழலின் கறை / நிறம் தெரியவில்லை. திறமை என்றால், மற்ற அதிகாரிகளிடம் இல்லையா? அப்படி ஊழல்கறையைவிட, திறமையைவிட, என்ன அதிகமாக அந்த தாமஸிடம் உள்ளது? அதுதான் “தாமஸ்” என்ற பெயர் போலும், அதாவது, கிருத்துவர் என்ற தகுதி போலும்! ஆமாம், சோனியா மெய்னோ சொல்லியிருப்பார்கள், அதனால், இந்த ஆடுகள் பணிவாக அப்படியே ஒத்துழைக்கின்றன.


[1]The BJP’s objections are over Thomas’ alleged involvement in the palm oil import scam worth almost Rs. 3 crore in 1991-92. Thomas, Kerala’s Food and Civil Supplies secretary, had struck an import deal with a Malaysia-based private firm without mandatory clearance

http://www.ndtv.com/article/india/decision-to-appoint-thomas-is-to-cover-up-2g-scam-bjp-49799

[2] இப்பொழுதுகூட, இது “மேஜாரிட்டி டிஸிஷன்” என்றுதான் சொல்கிறார்களேத் தவிர, ஊழல் பேர்வழி எப்படி பதவிக்கு வரலாம் என்று சிந்திப்பதாக இல்லை.

[3] http://www.thehindu.com/news/national/article615916.ece

[4] Mohan Singh of Samajwadi Party said, “This will negate the very purpose for which CVC was instituted. Thomas may have been exonerated but we all know how acquittals happen. He has been tainted once and he will not be able to put pressure on tainted officials he is supposed to watch.”
Read more: Row over govt pick for CVC post – India – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Row-over-govt-pick-for-CVC-post/articleshow/6503526.cms#ixzz0yi5neQG3

[5] Vijay wondered as to how Thomas could be expected to make a fair inquiry into the spectrum case — which he insisted could one day land before the CVC — since the main accused, Telecom Minister A Raja, happened to be his one-time boss.

http://www.indianexpress.com/news/new-cvc-bjp-says-attempt-to-cover-up-spectrum-cwg-row/677718/2

[6] http://news.oneindia.in/2006/08/09/

[7] http://news.oneindia.in/2006/08/08/no-anxiety-over-reopening-palm-oil-case-karunakaran-1155102957.html

[8] http://www.indiareport.com/India-usa-uk-news/latest-news/3565/Politics/6/20/6