Archive for the ‘மது போதையில் பெண் மந்திரி’ Category

மது போதையில் பெண் மத்திய மந்திரி விமானம் தாமதம்: சிதம்பர ரகசியங்கள்!

மே 10, 2010
மது போதையில் பெண் மத்திய மந்திரி விமானம் தாமதம்
மே 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18457

சிதம்பரம் சென்ற அதே விமானத்தில் பயணித்த ஸ்டீவ் பெண்மணி யார்? சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று பயணித்த விமானம், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில், டில்லி செல்வதற்காக, நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீவ்(35) என்ற பெண்ணும் அந்த விமானத்தில் பயணிப்பதாக இருந்தது.

போதையுடன் வந்தாராம் அந்த பெண்: குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, குடியுரிமை அதிகாரிகளுக்கும், அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில், ஸ்டீவின் உடைமைகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் மாலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 7.10 மணிக்கு புறப்பட்டது.

ப.சிதம்பரத்தை புறக்கணித்த மதுரை பத்திரிகையாளர்கள்
மே 10,2010,00:00  IST
Front page news and headlines today

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘கோயிலுக்குள் பத்திரிகையாளர்கள் வரக்கூடாது’ என்று தடை போட்டதால், அவரை போட்டோ எடுக்காமல் பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.

பத்திரிகையாளர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டாம்: இக்கோயிலுக்கு நேற்று காலை 11.20 மணிக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் யியோ , மனைவி ஜெனிபர் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளை ப.சிதம்பரம், அழைத்து வந்தார். கலெக் டர் காமராஜ், கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி ராஜநாயகம் வரவேற்று, அம்மன் சன்னதி வழியே கோயிலுக்குள் அழைத்து சென்றனர். ‘பத்திரிகையாளர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டாம்’ என்று அதிகாரிகளிடம் கூறிய ப.சிதம்பரம், ‘அவர்களை முதலில் வெளியே போகச் சொல்லுங்கள்’ என்று ஆடி வீதி சந்திப்பில் நின்றுகொண்டார். போலீசார் ஒவ்வொரு பத்திரிகையாளரையும் தேடினர். அவர்களுடன் சிதம்பரமும் சேர்ந்துக் கொண்டார். ‘யாரையும் விடக்கூடாது’ என்று போலீசாரை எச்சரித்துவிட்டு, கோயிலுக்குள் சென்றார். அவருடன் வந்த கட்சியினரை ‘மெட்டல் டோர் டிடெக்டர்’ மூலம் பரிசோதிக்காமல் போலீசார் அனுமதித்தனர்.

அவர்களை முதலில் வெளியே போகச் சொல்லுங்கள்: மதுரையில் சிதம்பரம் கலாட்டா: கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பங்கள் குறித்து சிங்கப்பூர் அமைச்சரிடம் கருமுத்து கண்ணன், சிதம்பரம் விளக்கினர். அம்மன், சுவாமியை தரிசித்துவிட்டு, மதியம் 12.30 மணிக்கு வெளியேறினர். அப்போது அவர்களை வீடியோ, படம் எடுக்காமல் பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், மத்திய உளவுப்பிரிவு அறிவுரைப்படி தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இப்பிரிவு,  ப.சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.