Archive for the ‘அந்துலே’ Category

கர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா?

ஓகஸ்ட் 17, 2012

கர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா?

காங்கிரஸின் மெத்தனப் போக்கு: குஜராத் அல்லது கர்நாடகம் இப்படி காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் எது நடந்தாலும், தேசிய தலைப்புச் செய்திகளாக மாறி வருவது வழக்கமாகி விட்டது. இப்பொழுது, அதனுடன், மின்னணு வதந்தியும் சேர்ந்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் முதலிய இணைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற போக்கில் கண்டபடி பொறுப்பில்லமல் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இவற்றை மற்றவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி திரித்து வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர். அரசு, அதிகாரிகள், புலனாய்வுத் துறை முதலியோர் அத்தகைய விஷமிகளைக் கண்டுபித்து தண்டிக்காமல் அல்லது அவர்களுக்கு முன்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்குக் காரணம். அதிலும் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி செய்யும் மாநிலம், அதிலும் பி.ஜே.பி என்றால் சொல்லவே வேண்டும், காங்கிரஸ் சந்தோஷமாகத்தான் இருக்கும்.

மின்னணு கலவரத்தைத் தூண்டும் அமைதியைச் சீர்குலைக்கும் பொய்மைப் பிரச்சாரம்: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் வதந்திகளை வைத்துக் கொண்டு, ஆனால் திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லீம்கள் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இப்பொழுது மஹாராஷ்டிரத்தை

வடகிழக்கு மாநிலத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்ப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்,  கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோஹாய் ஆகியோரிடம் போனில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் தமது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் கூறியதாவது: கர்நாடகாவில் வடகிழக்கை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவியுள்ள வதந்தி கவலை அளிக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக உணரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்து கர்நாடகம் என்ற முறையில், இன்னொரு பிரச்சாரத் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. பெங்களூர் நகரில் வசித்து வரும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒரே நேரத்தில் பெங்களூர் நகரை விட்டு ரயில் மூலம் வெளியேறிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காரணம் செல்போன்களில் வதந்திகளைப் பரப்பி விட்டதுதானாம்! வழக்கம் போல, அரசு எந்திரங்களுக்கு, இதைப் பற்றி தெரியும்-தெரியாது என்று முரண்பாடாகச் சொல்ல ஆரம்பிப்பர். ஆனால் உண்மையென்னவென்றால், அத்தகைய விடியோவை பரப்ப விட்டது யார் என்பதனை அரசு தெரியப்படுத்த வேண்டும்.

கலவரங்களைக் கட்டுப்படுத்தாத அரசுகள் மற்ற மாநிலங்களை ஏன் குறைகூற வேண்டும்: கர்நாடகத்தில் பீதியைக் கிளப்பி மாணவர்களை அசாமிற்கு அனுப்பத்தூண்டியவர்கள், அங்குள்ள நிலைமையினையும் அறிந்து கொள்ளவேண்டும். நேற்றுவரை அங்கு கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை மத்திய அல்லது மாநில அரசுகள் ஒன்றும் தடுத்துவிடவில்லை. மாறாக முழு செய்திகள் வரவிடாமல் தடுத்து வருகின்றன.

ஆகஸ்ட் 15/16, 2012: அசாம் மாநிலத்தின் பக்ஷா மாவட்டத்தில் இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது.  வன்முறையை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். கலகக்காரர்கள், பஸ் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு தீவைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப் படுத்தும் வண்ணம், தமுல்பூர் மற்றும் பக்ஷா பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப் பட்டுள்ளனர். முன்னதாக நடந்த வன்முறையில் சி்க்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலத்தோர் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் நேற்று திடீரென பரவ ஆரம்பித்தது. மும்பைப்போலவே பொய்யான வீடியோக்களும் பரப்பப் பட்டன. ஆனால் போலீஸார் எந்த விவரங்களையும் கொடுக்காமல் இருக்கின்றனர்.

பெங்களூரில் தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். அப்படி சொல்வதை விட நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவர்கள் மனங்களில் நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்குமே?

அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது. இதையடுத்து. இதையெல்லாம் அரசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. கண்டு பிடித்தும் நடவடிக்கை எடுக்காமல் அல்லது காலம் தாழ்த்துவது ஏன் என்று மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

அரசியல் செய்து வரும் மத்திய அரசு: தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில்நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.  இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயிடம் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார். இப்படியெல்லாம் மும்பை கலவரத்தின் போது பேசிக் கொண்தார்களா? ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து கலவரத்தை நடத்த அனுமதித்தார்கள்? முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே? கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே? அதேநிலைதான் இங்கும் உள்ளது. எல்லாவற்றையும் அனுமதித்துவிட்டு, இருப்பினும் பரபரப்பு அடங்கவில்லை என்று தெரிகிறது என ஊடகங்கள் சந்தோஷிக்கின்றன.