Archive for the ‘இந்திய விரோதிகள்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.

2018 முதல் 2023 வரை மேற்கொண்ட முயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது  இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….

ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யப் போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1].   ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளின் முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.

13-07-2023 அன்று கூட்டம் ஆரம்பம், படுகரின் வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4].  இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS  , Kathiravan V • HT Tamil, Jul 11, 2023 04:47 PM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/annual-meeting-of-rss-pracharaks-to-be-held-in-ooty-131689073805904.html

[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”

[4] தினமணி, உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!, By DIN  |   Published On : 14th July 2023 12:49 PM  |   Last Updated : 14th July 2023 12:49 PM.

[5] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/rss-reviwe-meeting-in-ooty-4037755.html

[6] மாலைமலர், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு, By மாலை மலர்,13 ஜூலை 2023 2:50 PM

[7] https://www.maalaimalar.com/news/district/tribal-people-give-enthusiastic-welcome-to-rss-leader-in-ooty-635605

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST

[9] https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/badugar-people-did-traditional-type-of-invite-to-rss-president-mohan-bhagwat-in-nilgiris-rxrtvl

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)

பிப்ரவரி 27, 2018

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)

ABVP 2018 conference. evening-1st day

பார்வையாளர் கூட்டம்……………………………………..

ABVP 2018 conference.lunch

மதிய உணவு நேரம்………………………..

ABVP 2018 conference.lunch.2

பரிமாறும் மாணவியர்………………………….

கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால்,  மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே? நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –

  • ஷா பானு வழக்கு,
  • சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,
  • சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,
  • உஸைன் சித்திரங்கள்,
  • பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,
  • தேசிய கீதம் பாடுவது,
  • அதற்கு மரியாதை கொடுப்பது,
  • மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்)

என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

Marx, Lenin, Mao- trinity of Communism

Marx, Lenin, Mao- trinity of Communism

சித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி?: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:

  1. “இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.
  2. நாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்!
  3. “பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன!
  4. குடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.
  5. பொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது!
  6. நாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்!
  7. சித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்!
  8. சமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்?
  9. என் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா?
  10. சம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.

SFI conference

வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.

  1. கடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
  2. அரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
  3. ஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
  4. அதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.
  5. குறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.
  6. ஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.

Different students conferences

சித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி?: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும்.  இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

27-02-2018

SUCI conference

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)

பிப்ரவரி 27, 2018

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)

ABVP 2018 conference. evening stage-1st day

பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அரங்கம்!: “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்”  23வது மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. 17-02-2018 அன்று பலர் மாணவ-மாணவியர்களுக்கு பலவித விசயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மாலையில், சிறப்பு  நிகழ்ச்சிகள் இருந்தன. நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ், சொற்பொழிவாற்றினார். சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்திர குமார் போஸ் 2016ல் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்தார். ஹவுராவில் நடைபெற்ற பாஜக பொதுக்க கூட்டத்தின்போது அவர் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். முன்னதாக, கடந்தஜனவரி 23 ம் தேதி 2016 தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பான கோப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சந்திரகுமார் போஸும் கலந்து கொண்டார். அப்போதுபேசிய சந்திரகுமார், முந்தைய காங்கிரஸ் அரசு சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல கோப்புகளை அழித்துவிட்டது என குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியர், மாணவர்களுக்கு இணையாக தற்காப்பு கலை பற்றிய பயிற்சிகளை செய்து காட்டினர்.

ABVP 2018 conference.Sandeep member Minority

சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர்

ABVP 2018 conference.Sandeep member Minority.audience

சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் – கேட்கும் மாணவ-மாணவியர்.

ABVP 2018 conference.Students unite-1stday

மாணவமாணவியர்களுக்கு விளக்கம் கொடுத்து பேசியவர்கள், விவரங்கள்: திரு சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் கல்வி பற்றி பேசிக்கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர் வித்தியாசமான அணுகுமுறையில் இருந்தனர்; சிலர் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்-குறிப்புகள்ள் கூட எடுத்தனர்; சிலரோ தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர்;  சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்; மகேஷ் என்பவர், விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்துக் கொண்டிருந்தார். விலை அங்கு நடந்த உரையாடல்! லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்! நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்! கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.  பேசியதும் வேகவேகமாக சென்று விட்டார்!

ABVP 2018 conference.discussion about agriculture.2

விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்தது.

ABVP 2018 conference.discussion about agriculture

கேள்வி-பதில்…..

ABVP 2018 conference.discussion about agriculture.3

மாணவமாணவியர் ஏபிவிபி மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்?: எங்கள் குழு கலந்து கொண்டு, மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்டு, விவரங்களை சேகரித்தது. சுமார் 60 மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்ட போது [ஏபிவிபி பற்றி தெரியுமா, ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்கள், சித்தாந்தம் பற்றி தெரியுமா போன்ற கேள்விகளுக்கு……..இவை விடையாகவும் இருந்தன……..], அறிந்த விசயங்கள்:

  1. படிப்பு முதலிய விசயங்களுக்கு…………….., எனக்கு உதவுகிறார்கள் அதனால் நான் வந்து, கலந்து கொண்டேன்.
  2. ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், எவ்வாறு அப்படி இருக்க முடியும் என்பது பற்றி சொல்லிக் கொடுப்பதால், நான் இணைந்தேன்.
  3. நான் இந்து என்பதனால் கலந்து கொண்டேன்.
  4. எனக்கு புரியவில்லை, …………….எல்லோரும் வந்தார்கள், நானும் வந்தேன்……
  5. நமது நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. மாணவர்கள் அதனால், விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
  6. மோடி சிறந்த பிரதமர், என்னை கவர்ந்தவர், அதனால், யாதாவது செய்ய வேண்டும் என்று வந்தேன்.
  7. எனக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருந்ததால் / நான் ஸ்வம் சேவக் என்பதால் வந்தேன்,
  8. நான் அம்பேத்கர் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றாலும், இங்கு எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் விதத்தை புரிந்து கொண்டேன். தொடர்ந்து கலந்து கொள்வேன்.
  9. மற்ற மாணவர் சங்கம் போல நாமும் வலுவாக திகழ வேண்டும், அதற்காக உரிய முறையில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.
  10. நண்பர் கலந்து கொண்டதால், கலந்து கொண்டேன்.
  11. சென்னைக்கு இரண்டு நாள் மாநாடு, பஸ் போகிறது, வருகிறாயா என்று நண்பன் கேட்டான், வந்தேன்.

இப்படி சிறிய விடை அளித்தார்களே தவிர, அதற்கு மேல் விசாரித்தால், அவர்கள் சொல்ல தயங்கின்றனர் அல்லது சொல்ல முடியாமல் இருந்தனர்.

ABVP 2018 conference.talking ancient science

லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்!

ABVP 2018 conference.talking ancient science.audience

கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.

பங்கு கொண்டவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறதுதெரியவில்லை: இவ்வாறு பலவிதமான பதில்களினின்று அறியப் படுவதாவது:

  1. 23வது மாநாடாக இருந்தாலும், புதியதாக வருபவர்களுக்கு அமைப்பைப் பற்றி சரியாக தெரியவில்லை.
  2. ஒன்றிற்கு மேற்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டவர்களும், “பாரதத்தைக் காக்க வேண்டும்”,” நான் இந்து” போன்ற வட்டங்களிலிருந்து வெளியே வரவில்லை.
  3. இருப்பவர்களும் ஒரே மாதிரியாக பேசுவது, சொன்னதையே திரும்ப-திரும்பச் சொல்வது போன்ற ரீதியில் உள்ளார்கள். தமது திட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் [அப்-டேடிங் செய்யாமல்] உள்ளனர்.
  4. நடைமுறை பிரச்சினைகள், விவகாரங்கள், பற்றியவை தெரியாமல் இருக்கிறார்கள்.
  5. மற்ற மாணவ-மாணவியர் அமைப்புகள் பற்றி தெரிந்து வைத்து இருக்கவில்லை. தெரிந்து கொண்டாலும் அரைகுறையாக உள்ளது.
  6. அடிப்படை அரசியல் சித்தாந்தம், அரசியல் கட்சிகளின் தோற்றம்-வளர்ச்சி, அவற்றின் செயல்பாடுகள் முதலியவை தெரியவில்லை.

மாநாடு, கூட்டங்கள் நடக்கும் போது, 1000-100 என்று கலந்து கொண்டு பிரிந்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் இரண்டு-மூன்று-ஐந்து பேர் கூட சேர்ந்து பேசுவதில்லை. பிரதிநிதிகள், நகர-மாவட்ட அதிகாரிகள் கூடி பேசுகிறார்கள்.

ABVP 2018 conference.audience.Nambi

நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்

ABVP 2018 conference.audience.Nambi.narayanan

நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி………………

ABVP 2018 conference.audience

கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.

சித்தாந்த ரீதியில் என்ன செய்ய வேண்டும்?: கீழ் கண்ட விசயங்களை அனைத்து உறுப்பினர்களும் தெரிந்து கொண்டு அலச வேண்டும்:

  1. இந்துத்துவம் என்பது இந்தியாவை இணைக்க வல்ல பலமான சித்தாந்தம் என்றால், இத்தனை வருடங்கள் ஆகியும் இந்துத்துவவாதிகள், சித்தாந்த ரீதியில் ஏன் எதிரிகளை எதிர்க்காமல், எதிர்க்க முடியாமல் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும்.
  2. “இந்துத்துவம்” மற்ற மதங்களுக்கு எதிரானது என்ற எதிரிகளின் பிரச்சாரத்தை முறையாக எதிர்க்காமல், மறைமுகமாக எதிர்-பிரச்சாரம் மூலம் ஏன் அவர்களை ஆதரித்து வருகிறார்கள், இது மாற்றப்பட வேண்டும்.
  3. “இந்துத்துவவாதிகள்” குறிப்பிட்ட சித்தாந்திகள் இடது-வலது என்று இருபக்கங்களிலும் இருந்து கொண்டு, பலனைப் பெற்று வருகிறார்கள், அதாவது, அவகர்ளால் பிரயோஜனம் இல்லை என்பதை அறிய வேண்டும்.
  4. “இந்து-விரோதி” என்று “சிலரை” அறிந்த பிறகும், அவர்களின் பொய்களை ஏன் இந்துத்துவவாதிகள், மல்லுக் கட்டிக் கொண்டு பரப்பி வருவதை, ஆதரிப்பதை தடுக்க வேண்டும்.
  5. “இந்துத்துவவாதிகள்” போர்வையில், “இந்துக்கள்”, இந்துக்களின் நலன்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவது துரதிருஷ்டவசமானது, அது கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும்.
  6. இல்லை என்கிறான் ஒருவன், இருக்கிறது என்கிறான் இன்னொருவன். “இல்லை” என்பது உண்மையான பிறகும், அதைப் பற்றி சொல்லாமல் இருப்பது நாத்திகத்தை ஆதரிப்பதாக உள்ளது. இல்லாதத்தை இருக்கிறது என்ற பொய்யை திரும்ப-திரும்ப இந்துத்துவவாதிகள் போட்டு பரப்புவது, அவர்கள் உதவுவதைத் தான் மெய்ப்பிகிறது!
  7. “இல்லை என்று சொன்ன உண்மை” எனக்கு தெரியவில்லை, ஆனால், “இருக்கிறது என்ற சொன்ன பொய்” எனக்குத் தெரிகிறது என்று பாராட்டு ஏன்! இதெல்லாம் இந்துத்துவவாதிகளுக்கு என்று நான் சிந்தித்து எழுதினாலும், எதிர் சித்தாந்தவாதிகளை எதிர்ப்பதை அறிலாம், இதுதான் உண்மையான பிரச்சாரம்!
  8. +ve propaganda, –ve propaganda, anti/counter-propaganda, +ve suggestion, –ve suggestion, இதைப் பற்றியெல்லாம் இந்துத்துவவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்! ஒன்றை செய்யாதே, பார்க்காதே என்றால், அதனை செய்ய/பார்க்கத் தூண்டுவது எதிர்-தூண்டுதல், –ve suggestion , –ve suggestion ஆகும்!
  9. திமுக 1960-70களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்திக் கொண்டது. சமீபத்தில் “ஜல்லிக் கட்டு” விவகாரத்தில், உபயோகப்படுத்தப் பட்டார்கள். அதுபோல ஏபிவிபி எவ்வாறு மாணவர்களை ஒன்று சேர்க்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.
  10. திராவிடத்துவம் பேச்சுத் திறமையினால், பொய்யான இனவெறி கருதுகொளால், நாடகம்-சினிமா தொழில்களால், அவற்றால் செய்யப்பட்ட பிரச்சாரங்களினால் வளர்ந்தது. அதனை, இந்துத்துவம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தான் ஏபிவிபி உள்ளது.

© வேதபிரகாஷ்

27-02-2018

ABVP 2018 conference.leaders

ஏபிவிபி தலைவர்கள்…………………………..

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (1)

பிப்ரவரி 27, 2018

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (1)

 ABVP 2018 conference. arch-1st day

பள்ளி வளாகத்திற்கு செல்லும்  தெருவின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள வளைவு.

ABVP 2018 conference

ஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகம்.

ABVP 2018 conference.banner atg ate

வாசலில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

ABVP 2018 conference.vivekananda entrance

வாசலில் வைக்கப் பட்டுள்ள விவேகானந்தர் சிலை.

சென்னையில் தேதிகளில் ஏபிவிபியின் 23வது மாநில மாநாடு: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவ-மாணவியர் அமைப்பு சார்பில் “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்” என்ற தலைப்பில் பிப்ரவரி 17, 18ம் தேதிகளில் 23வது மாநில மாநாடு வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. ஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 225 கல்லூரிகளில் இருந்து 2,000 மாணவ, மாணவிகள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் பத்து மணி அளவில் கொடியேற்றத்துடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் துவங்கின. கே.ஆர். பரமசிவம் கண்காட்சி துவக்கப்பட்டது

ABVP 2018 conference. Chandra Kumar Bose-1st day

தமிழகமும், தேசியமும்: சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்தரகுமார் போஸ் கலந்து கொண்டு உரையாற்றினார், என்று குறிப்பிட்டாலும், அவர், போஸின் அண்ணனான சரத் சந்திர போஸின் பேரன் ஆவர். இவர் சுபாஷ் சந்திர  போஸுக்கும், தமிழகத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பைப் பற்றி விவரித்தார். போஸ் இந்திய தேசிய ராணுவம் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னபோது, 3,000 இளைஞர்களை, முத்துராம லிங்கம் அனுப்பி வைத்தார். இந்திய தேசியத்திற்கு, சுதந்திர போராட்டத்திற்கு, தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த அளவிற்கு தமிழகம் தேசியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது.ஆகவே, தமிழகம் என்றுமே, இந்திய தேசியத்திற்கு எதிராக இருந்ததில்லை. காங்கிரஸ் போஸை, பல வழிகளில் அமுக்க பார்த்தது. அத்தகைய சதிகள் இல்லாமல் இருந்திருந்தால், போஸ் தான், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகி இருப்பார்.

ABVP Conference 2018- subbaiah

துவக்க விழா நிகழ்ச்சிகள், தீர்மானங்கள்: கோவா என்.ஐ.டி இயக்குனர் [Director, NIT, Goa] மாணவ-மாணவியர் எவ்வாறு நன்றாகப் படித்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். பல துறைகளில் மேம்பட்டு, தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினார். சுனில் அம்பேத்கர் ஏபிவிபியின் துவக்கம், வளர்ச்சி முதலியவற்றைப் பற்றி விவரித்தார். கடந்த 67 வருடகங்களில் கம்யூனிஸ இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்து கிடங்கும் நிலையில், ஏபிவிபி பிரியாமல் கட்டுக் கோப்பாக இருந்து வருகிறது. மருத்துவர் சுப்பையா சண்முகம் பேசும் போது, தமிழகத்தில் ஜாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறார்கள், ஆனால், இங்கு, 1200 மாணவ-மாணவியர் கலந்து கொண்டுள்ள நிலையில், அதைப் பற்றி அவர்களிடம் கேட்டதில்லை, அவர்களும் அதைப் பற்றி கவலைப்பட்டதில்லை. அதுதான் ஏபிவிபியின் பலம், என்று எடுத்துக் காட்டினார். காலை பத்து முதல் 12 வரை ஆரம்பவிழா நிகழ்ச்சிகளூக்குப் பிறகு, மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் கல்வி ரீதியான பிரச்னைகள், உயர்கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு சார்ந்த  மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

  1. தமிழகத்தில், கல்வித் துறையில் நடக்கும் ஊழல்.
  2. தமிழகத்தில், கல்விஇன் நிலை.
  3. கேரளாவில் நடக்கும்கொலைகள்.

இரண்டு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளின் சிறு குறிப்பு கீழ் வருமாறு.

ABVP 2018 conference. Martialarts demo-1st day

இந்தியாவில் உள்ள மாணவமாணவியர் அமைப்புகள்: இந்தியாவில் பல மாணவ-மாணவியர் அமைப்புகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு அரசியல்கட்சியும் ஒரு மாணவ-மாணவியர் சங்கத்தை வைத்துள்ளது. இதில் காங்கிரஸைத் தவிர, மற்ற எல்லா குழுமங்களும், இந்திய தேசியத்தை எதிர்க்கும் சித்தாந்தங்கள் கொண்டவைகளாகத் தான் இருந்து வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் குழுமங்கள் அடக்கி வாசித்து வருகின்றன. இவற்றில் இந்தியாவை ஆதரிக்கும் குழுமம் என்றால் ஒன்றே ஒன்று அது அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் உள்ள மாணவ-மாணவியர் அமைப்புகள்:

Name of the organization / association Associated with
All India Students Federation (AISF) related to Communist Party of India
All Bodo Students Union (ABSU) Related to Revolutionary Communist of Bodolonand
All India Democratic Students Organisation (AIDSO) Socialist Unity Centre of India (Communist)
All India Revolutionary Students’ Federation (AIRSF) Communist Party of India (Maoist)
Akhil Bharatiya Vidyarthi Parishad  (ABVP) Constitutionally  Rastriya Swayamsevak Sang
All India Students Association (AISA) Communist Party of India (Marxist–Leninist) Liberation
Bahujan Samaj Student’s Forum (BSSF) Bahujan Samaj Party
Campus Front of India [CFI] Popular Front of India
Chhatra Bharati [CB] Third Front and Anna Hazare
Chin Student Association [CSA] No affiliation
Concern No affiliation
Kerala Students Union [KSU] Indian National Congress
MGJSM Student wing of the Jacobite Syrian Christian Church
MGOCSM Student wing of the Indian Orthodox Church
Mithila Student Union [MSU] No affiliation
Muslim Students Federation [MSU] Indian Union Muslim League
National Students Union of India [NSUI] Indian National Congress
Progressive Democratic Students Union [PDSU] Communist Party of India (Marxist-Leninist) New Democracy in Andhra Pradesh & Punjab
Radical Students Union [RSU] Communist Party of India (Maoist) in Andhra Pradesh
Students Islamic Organisation of India [SIOI] Jamaat-e-Islami Hind
Students’ Federation of India [SFI] Communist Party of India (Marxist)
Student Organisation of India [SOI] Shiromani Akali Dal
Trinamool Chhatra Parishad [TCP] Trinamool Congress
Twipra Students Federation A Nationalist students organisation of Tripura
National conference students union Jammu & Kashmir National Conference
West Bengal State Chhatra Parishad Indian National Congress

இவற்றில் பெரும்பாலானவை, இடதுசாரி சித்தாந்த இயக்கங்களை சேர்ந்தவையாக இருப்பதை கவனிக்கலாம்.

ABVP 2018 conference-Pramasivam exhibition

பேராசிரியர் கே. ஆர். பரமசிவம் நினைவாக கண்காட்சி: உள்ளே நுழையும் போது, ஒரு வளைவு வைக்கப் பட்டிருந்தது. கல்லூரி வாயிலிலும் வளைவு மற்றும் பேனர் இருந்தன. வாயிலுக்கு நேராக, விவேகானந்தரின் சிலை ஏபிவிபி கொடிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. வலது பக்கம் பேராசிரியர் கே.ஆர். பரமசிவம் [காவூரி ராமலிங்கம் அப்பல] கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அவரது நினைவாக புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மதுரைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் கே.ஆர். பரமசிவம்.  இவர் அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஏபிவிபியின் துணைத் தலைவராக இருந்த அவரது 20 வது ஆண்டு நினைவாக, இக்கண்காட்சி வைக்கப்பட்டது. 28-03-1998 அன்று மதவெறியர்களால் தெருவில் படுகொலை செய்யப்பட்டார் பேராசிரியர் பரமசிவம் அவர்கள். இவர் கொலை செய்யப்பட்ட போது அன்று முதலமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை[1]. பரமசிவத்தின் சகோதரர் எழுத்தாளர் நரசய்யா[2] அப்போது வேதனையுடன் ஒரு பத்திரிகையில் கூறினார்[3]: “ஏபிவிபியில் இருந்த ஒரே காரணத்துக்காக என் தம்பி கொல்லப்பட்டிருக்கிறான். யாருக்கும் எந்தவிதத் தீங்கையும் செய்யாதவன். நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்.”

© வேதபிரகாஷ்

27-02-2018

ABVP 2018 - K. R. Paramasivam 28-03-1998 murdered at Madurai

[1] 30-01-1988 முதல் 27-01-1989 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 2009ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்.

[2] காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர்  ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக்  கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963 ஆம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டு  விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில் இவர்  வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டுள்ளார். 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்த நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 ஆம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் இவர் சென்னையில்  வசித்து வருகிறார்.

[3] http://www.tamilhindu.com/2009/03/professor-paramasivam-a-tribute/

நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?

ஏப்ரல் 26, 2016

நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?

முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.

  • நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
  • ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
  • தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
  • புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
  • தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
  • பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
  • நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
  • பாட்டு பாடலாமா, கூடாதா?

என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

மதநம்பிக்கை பெரியது என்றால் எம்பியாகவே வந்திருக்க முடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].

வந்தே மாதரம் கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?

பத்வா யாரையும் கட்டாயப் படுத்தாது, உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?

© வேதபிரகாஷ்

10-05-2013

 


[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.

[6] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.

http://timesofindia.indiatimes.com/india/Cant-be-part-of-Vande-Mataram-BSP-MP-Barq/articleshow/19978268.cms

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

பிப்ரவரி 12, 2016

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

சமஸ் எழுத்தாளர் - சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன்.  “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].

sami - சமஸின் படம்

கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.

sami_தி இந்துவில் சமஸ் படம்

அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது?: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.

A semi-nude winged Roman Victory holding a victors wreath in her right hand and victors palm-branch in her left.நிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா?: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்? போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும்? ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதைஎவ்வளவு பெரிய வன்முறை!” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை? சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா? பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே? அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே? இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது? சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா?

a close-up of the halos about the heads of Amphitrite and Neptune.ஆழ்வார்கள்நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது?: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது? அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே? கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது? அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா? ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

Bare-breasted goddesses on the Augustan Altar of Peaceசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம்! இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-12016

[1] http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html#more

[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது!

[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே? தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா?

[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே?

[6]  இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே?

[7]  பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை? இதுவும் குழப்பவாதமோ?

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)?

நவம்பர் 14, 2015

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)?

Hasan Suroor caught in pedophile case, arrested

Hasan Suroor caught in pedophile case, arrested

 ஹசன் சுரூர் லண்டனில்பிடோபைல்குற்றத்திற்காகக் கைது: பிரிட்டன் பத்திரிகையாளர் மற்றும் இந்திய வம்சாவளியினரான ஹசன் சரூர் (65), 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் உரையாடல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்[1]. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழு ஒன்றின் வீடியோ ஆப்ரேஷன் ஒன்றில், அவர், குழந்தையிடம் பாலியல் ரீதியில் பேசி சிக்கினார்[2]. இதனை தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[3]. ஹசன் சரூர், தி ஹிந்து, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ்ட் போஸ்ட் போன்ற [The Hindu, The Guardian, The Indian Express and Firstpost] பிரபல பத்திரிகைகளில் எழுதி வருபவர். ஹசன் சரூர், பிரதமர் மோடி இங்கிலாந்து வரும் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’ என்ற இவருடைய புதிய புத்தகம் ‘ரூபா & கோ’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது, என்று “தமிழ் இந்து” விளம்பரம் செய்துள்ளது. என். ராமும், இவரும் காம்ரேடுகள் என்பதால், சுரூரின் கட்டுரைகள் எல்லாம் ஜரூராக தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளன.

As leftists, N Rams patronage is obvious in accommodating in The Hindu

As leftists, N Rams patronage is obvious in accommodating in The Hindu

14 வயது சிறுமி என்றால் டீன் ஏன் கார்ல் தானேபிறகென்ன, 65 கிழத்திற்கு பிடோபிலியா என்பது?: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[4]: “14 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் போலீஸாரால் நவம்பர் 9-ம் தேதி டெப்ட்போர்ட் பிரிட்ஜ் டிஎல்ஆர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5].  இவர் அந்த 14-வயது சிறுமியை சந்திக்க, செல்ஷியாவிலிருந்து டிஎல்ஆர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்து வந்ததாக ஒப்புக் கொண்டார்[6]. சிறுமியரை பாலியல் ரீதியாக தூண்டும் விவகாரத்தைத் தடுக்கும் அன்நோன் டிவி (Unknown TV) என்ற குழுவின் ரகசிய புலனாய்வின் மூலம் ஹசன் சுரூர் சிக்கியதாகக் கூறப்படுகிறது.  பேஸ்புக்கில் இவருடன் 14 வயது சிறுமி போல் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி சந்திப்பதாக முன்னேற்பாடாக கொடுக்கப்பட்ட இடமான டெப்ட்போர்டு ரயில் நிலையத்துக்கு ஹசன் சூருர் வர அங்கு அவர் கைது செய்யப்பட்டார்[7], என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Marx, Lenin, Mao- trinity of Communism

Marx, Lenin, Mao- trinity of Communism

பிடோபைல்கள் மாபெரும் குற்றவாளிகள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: இப்பொழுதெல்லாம் பிடோபைல் குற்றங்களை நீர்த்துவிட, டீன்-ஏஜ் பெண்களை “சிறுமிகள்” என்றும் “குழந்தைகள்” என்று குறிப்பிட்டு திசைத்திருப்பப் பார்க்கின்றனர். அதாவது அறியாத சிறிசுகள், பெருசுகளிடம் ஏதோ மாட்டிக் கொண்டுவிடுகின்றன, அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம் என்பது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழில் “சில்மிஷம்” என்று குறிப்பிட்டு முடித்து விடுகிறார்கள். ஆனால், கற்பழிப்பு என்றால், கற்பழிப்பு தான் இதில் குழந்தை, சிறுமி, இளம் பெண், வயதுக்கு வந்த பெண், வயடுக்கு வராத பெண் போன்ற வித்தியாசங்களை எடுத்துக் காண்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, சிறுவயதிலேயே இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும், இந்த குழந்தை-கற்பழிப்பாளிகள், சிறுமியர்-வன்புணர்ச்சியாளர்களை விட்டு வைக்கக் கூடாது, அவர்களை மாபெர்ம் குற்றவாளிகளாக கருதப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்.

Hasan Suroor - Muslim apologetic columnist supporting IS

Hasan Suroor – Muslim apologetic columnist supporting IS

பிடோபைல்கள் மேனாட்டுப் பிரச்சினை மட்டுமல்லாது, இப்பொழுது இந்திய, ஏன் சென்னைப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது: பிடோபைல் என்பது மேனாடுகளில் சாதாரணமான விசயமாகி விட்டது. இதை ஒரு பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டுள்ள வேளையில், இது ஒரு நோய் [பிடோபிலியா] போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதில் நடுத்தர மற்றும் வயதானவர்கள் தாம் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் மாட்டிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத பாஸ்டர்கள், பிஷப்புகள், ஏன் கார்டினல்கள் கூட மாட்டிக் கொண்டுள்ளனர். வாடிகனைப் பொறுத்த வரையில், இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில், மிகவும் ஜாக்கிரதையாக அத்தகையோரைக் கண்காணிப்பட்டு வருகின்றனர். அன்நோன் டிவி போன்ற குழுக்கள், சிறுவர்-சிறுமியர் போன்று நடித்து, டேடிங் மற்றும் சமூக வளைதளங்களில், வயதானவர்கள், அவ்வாறு சிறுவர்-சிறுமியர்களிடம் செக்ஸ் ரீதியில் அணுகும் போது கண்காணிக்கின்றனர்[8]. இக்குழுவில் பெற்றோர்களும் உள்ளனர்.

Hasan Suroor - Muslim apologetic columnist

Hasan Suroor – Muslim apologetic columnist

செய்தியாளர்கள் செய்யும்ஸ்டிங் ஆபரேஷனில்பத்திரிக்கையாளர் மாட்டிக் கொண்டது: இது ஒரு “ஸ்டிங் ஆபரேஷன்” என்று சொல்லப்படுகிறது, அதாவது, குற்றம் செய்பவர்கள் என்று அனுமானித்து, ஒருவரை, குறிப்பிட்ட விசயத்திற்காக தூண்டிவிட்டு, தூன்டில் போட்டு, பண ஆசைக் காட்டி, விசயத்தை வரவழைக்கும் விதமாகும். அவ்வாறு ஈடுபடும் போது, ரகசிய கேமராவில், உரையாடல், பணம் கொடுக்கும்-வாங்கும் நிகழ்ச்சி, அல்லது மற்ற விவாகாரங்கள் பதிவு செய்யப்படும். நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களால் நடத்தப்படும் இத்தகைய “கொட்டும் சிகிச்சைகள்”, சில நேரங்களில் வெற்றிகரமாக முடிகின்றன, சில நேரங்களில், வெறும் உற்சாகத்தூண்டுதலை உண்டாக்கி, பரபரப்பான செய்திகளாக மாறி, பிறகு அடங்கி விடுகின்றன. ஆனால், இந்நிகழ்ச்சியில், ஒரு பத்திரிக்கையாளரே மாட்டிக் கொண்டிருப்பது, கவனிக்கத்தக்கது.

Beef eating party politics- good or bad

Beef eating party politics- good or bad

இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it? புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ்?’ என்று சொல்லி சிரிக்கிறார். …….முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்………………..இப்படியெல்லாம் குறிப்பிட்டாலும், அதே ஹசன் சுரூர் தனது கட்டுரைகளில் வேறுவிதமாக எழுப்பியுள்ள பிரச்சினைகள், இதில் அலசப்படவில்லை என்று தெரிகிறது. புத்தக மதிப்பீடு செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், அவற்றை வைத்து கட்டுரைகள் எழுதுபவர்கள், இவ்வாறு ஆசிரியரைப் பற்றி, அவரது சமீபத்தைய கட்டுரைகளில் வெளிப்படுத்திய கருத்துகளை விடுத்து, தேர்ந்தெடுத்து அலசும் போக்கில் இருப்பது, படிப்பவர்களுக்கு “சென்சார்” செய்வது போலுள்ளது.

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

ஹசன் சுரூர் ஏன் மோடியை சுரூர் என்று கொட்டுகிறார்?: ஹஸன் சுரூர் எழுத்துகள் எல்லாம், மோடியை விமர்சிப்பதாக உள்ளது[10]. “இப்பொழுது ஆவியாகிப் போகும் இந்திய அரசியல் கலவையில்,செக்யூலரத்துவம்என்ற ஒன்று முஸ்லிம் பிரச்சினைகளை கடத்தி செல்கிறது. அந்த சமூகம் பதில் சொல்வதற்கு தயாராவதற்கு முன்பாகவே, அவர்களுடன் ஓடி அக்கடத்தல் வேலை நடக்கிறது”, என்று ஒரு கட்டுரையில் கிண்டல் அடிக்கிறார்[11]. காங்கிரஸின் வீழ்ச்சிற்குப் பிறகு, செக்யூலரிஸம் வேறு பக்கத்தை நாடவேண்டியுள்ளது. இன்னொரு கட்டுரையில், “முஸ்லிம்களுக்கு தலைமை இல்லாதலால், மோடியை நம்பவேண்டியுள்ளது”, என்று நக்கல் அடிக்கிறார்[12]. உலக மாற்றங்களுக்கு ஏற்றவகையில், முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ளா வேண்டும்[13]. என்று இப்படி தொடர்ச்சியாக முஸ்லிம்கள், இஸ்லாம் என்று அவ்விசயங்களைச் சுற்றிதான் இவரது எழுத்துகள் இருந்து வருகின்றன. இப்பொழுது கூட மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் முறையில் இவர் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. மோடி இங்கிலாந்திற்கு வருவது விரும்பப்படவில்லை என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், பிறகு, அது பொய்யானது என்று தெரியவந்தது[14]. சரி, கருத்துரிமை, எழுத்துரிமை என்று எடுத்துக் கொண்டால், இவையெல்லாம் சாதாரண விசயங்கள் தாம், ஆனால், ஏன் தேர்ந்தெடுத்து கொட்டும் வேலை, என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

14-11-2015

[1] தினமலர், பாலியல் உரையாடல் குற்றச்சாட்டில் ஹசன் சரூர் கைது, நவம்பர்.12, 2015: 02.11.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1385051

[3] இன்.4.இந்தியா, சிறுமி பாலியல் விவகாரத்தில் இந்திய பத்திரிக்கையாளர் கைது, Thursday ,12 November 2015.

[4] தமிழ்.இந்து, பாலியல் குற்றச்சாட்டு: லண்டனில் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் கைது, Published: November 12, 2015 12:57 ISTUpdated: November 12, 2015 13:06 IST

[5] http://in4india.in/news/Other-News/2015/11/indian-journalist-arrested-in-london

[6] http://www.huffingtonpost.in/2015/11/11/hasan-suroor-video_n_8529978.html

[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7869057.ece

[8] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Indian-origin-journalist-Hasan-Suroor-arrested-in-UK-on-paedophilia-charges/articleshow/49756604.cms

[9] http://marudhang.blogspot.in/2014/03/blog-post.html

[10] Hasan Suroor, Modi, fauxsecularists and Muslims, September 22, 2014 Last Updated at 21:46 IST.

[11] http://www.business-standard.com/article/opinion/hasan-suroor-modi-faux-secularists-and-muslims-114092201238_1.html

[12] http://www.thehindu.com/opinion/op-ed/narendra-modi-and-ties-with-muslims/article7114109.ece

[13] http://www.thehindu.com/opinion/op-ed/comment-article-islamic-difference-and-radicalisation/article6760854.ece?ref=relatedNews

[14] http://www.ibnlive.com/news/india/narendra-modi-not-welcome-image-on-uk-parliament-photoshopped-1162875.html