Archive for the ‘பெனல்’ Category

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)

ஜூலை 14, 2013

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)

Biju-Radhakrishnan-IE-photo-Solar scam

மோசடிகளில் கையாண்ட முறைகள்[1]: இருவருமே 2005லிருந்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு, கைது செய்யப் பட்டு, சிறைவாசம் அனுபவித்து, மறுபடி-மறுபடி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளையுடை அணிந்த டிரைவர்கள் ஓட்டிவரும் கார்களில் பிரயாணம் செய்தல், தங்கள் கூட வரும் ஆட்களும் டிப்-டாப்பாக உடை அணிந்து கொண்டு வருதல், பெரிய கார்புரேட் கம்பெனிகாரர்கள் போல பந்தா காட்டுதல், போன்ற முறையில் செயல்பட்டு வந்தார்கள். ரூ.2 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று ரூ.40 லட்சங்கள் பெற்றுக் கொண்டு மாயமானது, காற்றாலை மோசடியில் கோயம்புத்தூரில் கைது, அரசியல்வாதிகள், நடிகைகள் என்று வைத்துக் கொண்டு 2011ல் கொச்சியில் சோலார் முதலீடு அலுவலகங்களை திறந்து வைத்தல் என்று தான் பளபளப்புடன் வியாபாரம் செய்துள்ளனர்.

Saritha-S-Nair - arrested

ஸ்விஸ் சோலார் கம்பெனியும், சிதம்பரம் பெயர் சொல்லி செய்த மோசடிகளும்: பொலீஸாரின் தகவல்கள் படி, பிஜு தன்னை மின்சாரம் உற்பத்தி துறையை சேர்ந்த அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு ஒரு பெரிய நடிகரை சந்தித்துள்ளான். மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் தனக்கு பரிச்சயம் உள்ளது என்றும், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் தொடங்க இலவசமாக நிலம் கிடைக்கும் என்றும், அதனால் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமுள்ள, அதே நேரத்தில் அரசு திட்டங்களில் பங்குகொள்ள முதலீட்டார்களை எதிர்பார்ப்பதகாவும் சொல்லிக் கொண்டான்[2]. அரசு வாகனம் போல கூம்பு வைத்த காரில் வந்து, மந்திரி சிதம்பரந்தின் ஊழியர்களுடன் போனில் பேசுவது போல காட்டிக் கொண்டுள்ளான். இவ்வாறு புகார் அளித்தவர்கள் கூறியுள்ளனர்[3].

Shalu Menon arrested Kottayam Friday 05-07-2013 solar panels -PTI

பிஜுவின் நடிகை தொடர்புகள்,  உம்மன் சாண்டியின் நிலை: சோலார் வசதி செய்து தருவதாக மக்களை ஏமாற்றிய வழக்கில் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சரிதா எஸ். நாயர் [Saritha S. Nair and her live-in partner Biju Radhakrishnan] ஏற்கனவே சென்ற மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாலு மேனன் ஒரு நடிகை, நாட்டியம் ஆடுபவர், கோரியோகிராபர் ஆவர். இவர் பல அமைச்சர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். டீம் சோலார் கம்பெனியின் எக்சிகியூடிவ் டைரக்டர் என்று பிஜுவால் அறிமுகப்படுத்தி வைக்கப் பட்டார். இப்பிரச்சினை எழுந்ததும், ஷாலு மேனன் தப்பி செல்வதற்கு ராதாகிருஷ்ணன் தனது காரை அளித்ததாக கூறப்படுகிறது. கேரள போலீஸார் ஏற்கெனவே ஷாலு-பிஜு திரிசூரில் தொடர்புகளை கண்டறிந்துள்ளனர்[4]. திரிசூரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது, ஷாலுவுடன் பிஜுவை மக்கள் பார்த்திருக்கின்றனர். பின்னர், தப்பித்து மறைந்தபோது, கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டான். அவன் தான் சாண்டியை சந்தித்து பேசினேன், சரிதாவிற்கு தொடர்புள்ளது, சாண்டியின் உதவியாளர்கள் எப்பொழுதும் போனில் பேசியுள்ளனர் என்ற விவரங்கள் வெளிவந்தவுடன், கேரளாவில் சோலார் ஊழல் விவகாரத்தை சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பி முதல்வர் உம்மன் சாண்டியை ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதனால் இரண்டு நாட்களாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

Jeya kerala  function - Ummen Chandy and others

சோலார் ஊழலில் உம்மன் சாண்டிக்கும் உள்ள தொடர்பு: கேரளாவில் சோலார் கருவிகள் பொருத்துவதில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இந்த ஊழல் குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயரை முதல்வர் உம்மன்சாண்டி சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. இதனால் சோலார் ஊழலில் உம்மன்சாண்டிக்கும் தொடர்பு உள்ளது என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதனால் முதல்வர் பதவியில் இருந்து உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  சோலார் ஊழலையொட்டி முதல்வர் பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளைஞர் பிரிவினர் தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்[5]. உம்மன் சாண்டியின் அலுவலகம் தாக்கப்பட்டது. அப்பொழுது சசிதரூர் ஊழலைப் பற்றி கவலைப்படாமல், தாக்குதல் ஜனநாயகம் அல்ல என்று பேசியுள்ளார்.

Biju, Chandy, George

எதிர் கட்சிகள் பதவி விலக கேட்டது: அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்து சபையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவரக்கோரி நோட்டீசு கொடுத்தனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி.திவாகரன் பேசும்போது சோலார் ஊழலுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்வர் பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். சோலார் ஊழல் புகார் விஷயத்தில் எதிர்க்கட்சிகளை ஆளும் கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து சந்திப்பதோடு எதிர்க்கட்சிகளின் சதித்திட்டத்திற்கு நாங்கள் ஆளாகமாட்டோம் என்றும் கூறிய உம்மன்சாண்டி, பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டேன் என்றார். இதனையொட்டி சபையில் கூச்சல் குழப்பம் நிலவியதில் சட்டசபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. டென்னி ஜோப்பன் மற்றும் ஜிக்குமோன் ஜேகப் என்ற சாண்டியின் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[6]. இருப்பினும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்.

Shalu with Jeyaram in a function

உம்மன் சாண்டி – சரிதா தொடர்புகள்: சோலார் திட்டம் தொடர்பாக சரிதா நாயருடன் முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து பேசினேன் என்று ஸ்ரீதரன் நாயர் கூறியுள்ளார். இந்த சந்திப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி நடந்தது என்று மலையாளம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் ஸ்ரீதரன் நாயர் கூறியுள்ளார்[7]. இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, ஸ்ரீதரன் நாயரை சோலார் சம்பந்தமாக நான் சந்திக்கவில்லை கல்குவாரி விஷயமாக பிரதிநிதிகளுடன் வந்த ஸ்ரீதரன் நாயரை சந்திதித்தேன் என்றார். உண்மையில் இவரும் பிஜுவால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். அதனால், முதலமைச்சரிடம் சென்றபோது, அதைப் பற்றி பேசாமல் இருந்திருப்பார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இதேபோலத்தான் பிஜுவும் முதலமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளான். அப்பொழுது தான் சரிதா-கணேஷ்குமார் உறவு பற்றி பேசியதாகச் சொல்லப்பட்டது. இப்படி சம்பந்தம் இல்லை என்று பேசினாலும், இவர்கள் எல்லோருமே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள். உம்மன்சாண்டிற்கு மொபைல் இல்லை. அவரது செயளர்களின் போன்களைத் தான் உபயோகப்படுத்தி வருகிறார். அந்த எண்களுக்கு சரிதா நடு இரவு என்றுகூட பார்க்காமல் பலதடவை பேசியுள்ளார். என்ன முக்கியமான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு நடு இரவில் பேசுவார்களா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

Salu - T Radhakrishnan visit to her - clarified

சரிதாவுடன் காங்கிரஸ் கட்சிக்கார்களுடைய நெருக்கம்: சரிதா நாயர் யார்-யாருடன் மொமைல் மூலம் தொடர்பு கொண்டுள்ளார், பேசியுள்ளார் என்று போலீஸார் நம்பர்களைப் பெற்று சோதனை செய்தனர். அதில் கீழ்கண்டவர்களின் எண்கள் உள்ளன[8]:

Saritha has contacts with ministers and Chennitala

  1. ரமேஷ் சென்னிதாலா, கேரள பிரதேச காங்கிரஸ் கட்சி மாநில தலைவர்
  2. கே. சி. வேணுகோபால், மத்திய அமைச்சர்.
  3. ஆர்யதன் முஹம்மது, மாநில அமைச்சர்
  4. கே. சி. ஜோசப், மாநில அமைச்சர்
  5. ஆடூர் பிரகாஷ், மாநில அமைச்சர்
  6. எம். பி. அனில்குமார், மாநில அமைச்சர்.
  7. ஷிபு பேபி ஜான், மாநில அமைச்சர்.
  8. பி. சி. விஷ்ணுநாத், எம்.எல்.ஏ
  9. பென்னி பேஹன், எம்.எல்.ஏ
  10. ஹிபி எடின், எம்.எல்.ஏ
  11. மோன்சி ஜோசப், முந்தைய அமைச்சர்
  12. ஷனிமோல் உஸ்மான், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்
  13. டி. சித்திக், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்.

Saritha has contacts with ministers and Chennitala2

சரிதா நாயரின் செல்போனில் உள்ள எண்கள் காங்கிரஸ் கட்சிக்கார்களுடைய நெருக்கத்தைக் காட்டுகிறது. உண்மையிலேயே காங்கிரஸின் செக்யூலரிஸமும்  இதில் அதிகமாகவே வெளிப்பட்டுக்கிறது. இந்து, முஸ்லிம், கிருத்துவர் என்று இருப்பதை காணலாம். திக் விஜய சிங் கிருக்கர்கள் இந்த “செக்யூலரிஸ / சமதர்ம” ஊழலை ஆதரித்துப் பேசினாலும் ஆச்சரியப் பட்டுவதற்கு இல்லை. இவர்கள் என்னத்தான் மறுத்தாலும், இந்த தொடர்புகளைப் பற்றி விளக்கம் கொடுத்தே ஆகவேண்டும்.

Solar scam - Radhakrishnan, Saritha, Ganesh

பி. சி. ஜார்ஜ் தெரிவிக்கும் விவரங்கள்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் கேரளாவில் ஆபாசமாக பேசுவதில் வல்லவராக இருந்து வருகிறார். இப்பொழுது அவர் சில விவரங்களை வெளியிட்டுள்ளார்: “அச்சுதானந்தன் முதலமைச்சராக இருந்தபோதே இந்த ஊழல் நடந்து கொண்டிருந்தது. சிஜு என்ற போலீஸ்துறையை சேர்ந்தவரும் இந்த ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறார். ஒரு ADGPயே இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொடியேரி பாலகிருஷ்ணன் அலுவலகத்திற்கு சரிதா பலமுறை வந்துள்ளார். ஆனால் சந்தித்தாரா என்று சொல்ல முடியாது”, என்றாராம்[9].

Jeya kerala  - group

பி.சிஜார்ஜ் என்ற கிருத்துவ அடிப்படைவாத கட்சியின் தலைவர் கணேஷ்குமாருடன் மோதியது: செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கேரளாவில் எப்பொழுதுமே அட்டிப்படைவாதம், பழமைவாதம், மதவாதம் என்று ஊறிப்போயுள்ள கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு, சோனியா காங்கிரஸ் பிழைப்பு நடத்தி வருகின்றது. இப்பொழுதும் கேரளா காங்கிரஸ் (ம) என்ற கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், ஒரு கேரள ஆமைச்சர் யாரோ ஓரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அப்பெண்ணின் கணவன் அவ்வமைச்சரை நன்றாக அடித்துதைத்துள்ளார் என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டபோது, அவ்வமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். கணேஷ்குமார் அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டியபோது, அப்படி போட்டால், மேலும் விஷயங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். கணேஷ்குமார் இதனால் பதவி விலக நேர்ந்தது. ஆனால், இங்கு சரிதாவின் தொடர்பு வருகிறது.

Jeya kerala  - group photo2

அசிங்கமாக, ஆபாசமாக பேசும் பி.சிஜார்ஜ்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாசைப் பேசி வருவார் என்று பல செய்திகள் வந்துள்ளன[10]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[11]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்வதும் சகஜமானதுதான்[12]. “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[13], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல் கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்[14]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[15].

Jeya kerala  - group photo3

சோலார் பெனலுடன் காற்றாலை மோசடியும் இணைந்தது: சூரிய ஒளியுடன் காற்றும் சேந்துள்ள கொடுமை இந்த ஊழலில் காணலாம். இக்கூட்டம் தாங்கள் காற்றாலைகள் வைத்திருக்கிறோம், அதனால் அவற்றிலும் முதலீடு செய்யலாம் என்று வியாபார ஆசைக் காட்டியுள்ளனர். அந்த காற்றாலைகளில் பல அமைச்சர்களும் முதலீடு செய்துள்ளார்கள் என்றும் சொன்னார்கள். அவர்களை நாகர்கோவில்-திருநெல்வேலி சாலையில் “உல்லாச உல்லாவாக” கூட்டி வந்து மயக்கியுள்ளனர். அதையும் நம்பி, சிலர் பணத்தை கொடுத்துள்ளனர்.

Saritha house raided-Solar scam

கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் பரஸ்பர குற்றச்சாட்டு: திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் இடதுசாரி குடியாட்சி முன்னணியை [Left Democratic Front (LDF)] இந்த ஊழலை உக்குவித்ததற்கு குற்றஞ்சாட்டியுள்ளார். பிஜு முன்னர் தான் கொடியேரி பாலகிஷ்ணனுக்கு நெருக்கமானவன் என்று சொல்லிக் கொண்டான். தேவராஜன் என்பவர் புகார் கொடுத்தபோது, அவரை சமாதானப் படுத்த மந்திரியின் செயலருடன் பேச அழைத்துச் சென்றான். இந்த மோசடி அவர்கள் காலத்திலேயே ஏற்பட்டது, ஆனால், தகுந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து விட்டனர், என்றெல்லாம் குறைகூறினார்[16]. பி.சி.ஜார்ஜ் தன்னிடம் சரிதாவிடம் ஏமாந்த  54 பெயர்கள் கொண்ட ஓரு பட்டியல் இருப்பதாகச்ச் சொல்லிக்கொள்கிறார்[17]. அதில் காங்கிரஸ்காரர்களின் பெயர்களும் உள்ளனவாம்!

Shalu Menon arrested3

ஏ. பிரோஸ் என்ற பொதுமக்கள் நலத்துறை இயக்குனர் இந்த ஊழல் விவகாரமாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இவரது முன்-ஜாமின் மனு 12-07—2013 அன்று கேரள உயர்நீதி மன்றம் நிராகரித்தது[18]. உமன் சாண்டியின் செலர் டென்னி ஜோப்பன் என்பவரும் முன்-ஜாமின் மனு கொடுத்துள்ளார். பிஜுவின் தாயார் ராஜம்மாள் என்பவரும் ரேஸ்மி கொலை விஷயத்தில் முன்-ஜாமின் மனு கொடுத்துள்ளார். பின்னது இரண்டை கோர்ட் தள்ளி வைத்தது[19].

Shalu with VIPs in a function

சோனியாவுடன் பேசும் அளவிற்கு இப்பிரச்சினை அந்த அளவிற்கு பெரியதா?: உம்மன் சாண்டி இது விஷயமாக சோனியாவை சந்தித்து பேசியது ஏன் என்று தெரியவில்லை[20]. சோனியா ஆட்சியில் ஊழல் நடக்கவில்லைய என்ன? பிறகு எதற்கு இந்த அவசியம், அவசரம்? தான் ராஜினாமா செய்யப் போவதில்லை மற்றும் மந்திரிகள் மாற்றம் இல்லை என்று வேறு அறிவித்தது இதற்கு மேலும் வேடிக்கையான விஷயம் தான்.சாண்டி தொடர்ந்து பதவி வகித்தால் வரும் 2014 தேர்தலில் தமது வெற்றி பாதிக்கப்படும் என்று காங்கிரஸ்காரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்[21]. இருப்பினும் ஏ. கே. ஆன்டனியின் சிபாரிசு மூலம் சாண்டி தப்பித்துக் கொண்டதாக தெரிகிறது[22]. சோனியாவுடன் பேசும் அளவிற்கு இப்பிரச்சினை அந்த அளவிற்கு பெரியதாக இருக்கும் என்றால், இதன் பின்னணியில் வேறு ஏதோ உள்ளது என்றுதான் தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 14-07-2013


[2] Quoting their statements, the police said that Biju had approached one of them along with a television serial actor. He allegedly introduced himself as a bureaucrat working in the Central government’s power department. He claimed that he had the mandate of the then Union Home Minister P. Chidambaram to seek out “public-spirited” businessmen to invest in government-backed (by providing free land) solar and wind energy projects scheduled to come up in Tamil Nadu.

http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/singed-by-the-solar-trap/article4826226.ece?ref=relatedNews

[3] The complainant also told the police that the accused had arrived in a car with a roof-top beacon to lend legitimacy to his claim that he was a civil servant of standing in the Union government. Investigators said the suspect had also made calls from the businessman’s house, some of them purportedly to Mr. Chidambaram’s personal staff.

http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/singed-by-the-solar-trap/article4826226.ece?ref=relatedNews

[8] Phone call list of solar cheating scam accused Sarita S Nair made available is sure to give sleepless nights to many ministers. The phone list which first mentioned calls made to the chief minister and the home minister has now extended to some more ministers and KPCC president Ramesh Chennithala. On Thursday, when the phone call list was made available to the media, Ramesh Chennithala and union minister K C Venugopal, state ministers Aryadan Muhammed, K C Joseph, Adoor Prakash, M P Anilkumar, Shibu Baby John and MLAs P C Vishnunath, Benny Behan, Hiby Edin, former minister Moncy Joseph, congress leaders Shanimol Usman, T Sidhique among others figured in the list. The calls were made ranging from a few minutes to a longer duration, according to available documents.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137684

[10] George’s most recent outburst was against T V Thomas, late husband of veteran communist leader K R Gouri. Local newspapers edited out some of his abusive words when they published his comments to the media. This was after his attack on Ganesh but before the minister’s resignation this week.

http://www.indianexpress.com/news/keralas-p-c-george-uncut-and-uncensored/1097825/

[11] There was an outrage in Kerala after Union Minister Vayalar Ravi was caught on video making a personal swipe at a female reporter who wanted his reaction on PJ Kurien’s alleged involvement in the 1996 Suryanelli gangrape case. In the video, Ravi is seen asking the reporter if she has had a personal problem with Kurien. Women journalists in Kerala have expressed outrage over the incident and staged protests. http://www.youtube.com/watch?v=cd7DpiQiwaY

[14] Kerala Industries Minister P K Kunhalikutty has been been questioned by a police team re-investigating the “ice cream parlour” sex scandal case in connection with allegations made against him by a relative. The team led by ADGP Vinson M Paul questioned the Minister at his residence here on Thursday night, police sources said on Friday. Kunhalikiutty, a senior Indian Union Muslim League (IUML) leader, was learnt to have denied the allegations and told the police that ‘unfounded’ accusations were made against him with the motive of destroying his political career

http://zeenews.india.com/news/kerala/kerala-minister-grilled-by-police-in-sex-scam-case_746175.html

[15] Reportedly the opposition leader VS Achuthanandan has gotten hold of the case diary of the sensational “ice-cream parlour case” in which Kunhalikutty was allegedly involved. Also, the case diary apparently shows that the minister had paid off the victims to exclude himself from being investigated.

http://www.firstpost.com/politics/after-kurien-yet-another-sex-scandal-catches-up-with-congress-in-kerala-618856.html

[17] The solar panel scam has got murkier with Government Chief Whip P.C. George coming out with a list, purportedly maintained by Sarita S. Nair, containing the names of those who had given money to the accused. Home Minister Thiruvanchoor Radhakrishnan, on his part, refused to accept this as a valid document. George said that he has in his possession a list, believed to be kept by Sarita, which has 54 names, including that of a KPCC functionary.

http://www.thehindu.com/news/cities/Kochi/george-claims-to-have-list-of-solar-scam-victims/article4912650.ece

[19] Firoz was suspended for his alleged involvement in a financial cheating case along with Saritha S Nair and Biju Radhakrishnan, main accused in the solar scam case. The bail plea of Tenny Joppen, former private secretary to chief minister, Oommen Chandy, also came up. Joppen was arrested in connection with the solar scam case. When the petition came up, Advocate General K P Dandapani sought for adjournment, saying he needed more time to study the case diary. It has been posted to Tuesday next. The anticipatory bail plea of Rajammal, mother of Biju Radhakrishnan, in connection with the death of Biju’s first wife Rashmi, also came up before the court. The petition was adjourned for next week.

[21] Despite the fact that the state unit led by PCC chief Ramesh Chennithala has backed Chandy, there has been unease in the state Congress with a section having reservations over Chandy’s continuance as they argue that it will hurt the party’s prospects in the upcoming Lok Sabha polls.

http://www.dnaindia.com/india/1860508/report-solar-panel-scam-demand-for-kerala-chief-minister-oommen-chandy-resignation-gathers-momentum

[22] Sources said Sonia was convinced about the probe and the corrective measures initiated by Chandy, but conveyed her displeasure to him over lack of coordination in the state government on the issue. She also told Chandy to launch more people-friendly measures and to go in for a cabinet rejig to placate certain disgruntled communal organizations. Apparently A K Antony’s stand that there was no need for a leadership change at this stage helped Chandy’s cause.

http://timesofindia.indiatimes.com/india/Solar-panel-scam-Oommen-Chandy-meets-Sonia-Gandhi-is-safe-for-the-time-being/articleshow/21062073.cms