Archive for the ‘பாலியல்’ Category

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)

ஆதாரம் இல்லை - பெருமாள் முருகன்

ஆதாரம் இல்லை – பெருமாள் முருகன்

மாதொருபாகன் பிரச்சினையை சார்லி ஹெப்டோவுடன் ஒப்பிட்டது: இப்பிரச்சினையில், கிருத்துவ-இஸ்லாமிய சர்ச்சைகளையும் ஏன் இணைக்க வேண்டும் என்று சிலர் கேல்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அத்தகைய ஒப்பீட்டை “தி இந்து” தான் செய்தது[1], “ஜனநாயகச் சமூகங்களின் அடிப்படையே கருத்துச் சுதந்திரம்தான். அந்தக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல்தான் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அந்த இதழின் ஆசிரியர், கேலிச்சித்திரக்காரர்கள் நால்வர், காவலர்கள் இருவர் உட்பட 12 பேரைப் பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். பேனாவுக்கு மாற்று பேனாதானேயொழிய, துப்பாக்கி அல்ல என்பதை உணராத அந்தப் பயங்கரவாதிகள், இந்தத் தாக்குதலின் மூலம் பிரான்ஸில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள்!”, என்று ஆரம்பித்து, தி இந்து தமிழில், “உலகின் பெரும்பாலான நாடுகளில் இது ஒரு பெரிய பிரச்சினை. படைப்புகளை உருவாக்குபவர்கள் கத்தி மேல் நடப்பதுபோல் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சமீபத்திய உதாரணங்களாக ஆமிர் கானின் ‘பி.கே.’ திரைப்படத்துக்கும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கும் எழுந்த சகிக்க முடியாத எதிர்ப்புகளைக் குறிப்பிடலாம்”, என்று இதையும் சேர்த்துள்ளது[2]. பிறகு யார், யாருக்கு வழி காட்டுகிறார்கள்?

பெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்

பெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்

பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெருமாள் முருகன் வெளியிட்ட கடிதம்: 13-01-2015 அன்று அமைதி பேச்சிற்குப் பிறகு, வெளியிட்ட கடிதம்[3]: “எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப்போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே, பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

  1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர, அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி, எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
  2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
  3. பெருமாள்முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
  4. இனி, எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
  5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி. – பெ.முருகன் (பெருமாள்முருகன் என்பவனுக்காக)”, தி இந்து இதை வெளியிட்டு, இக்குறிப்பையும் கொடுத்துள்ளது. குறிப்பு: சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் – எழுத்தாளர் பெருமாள்முருகன் இடையே நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில், “ பெருமாள்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ‘மாதொருபாகன்’ நாவலில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட வேண்டும். தற்போது விற்பனையில் உள்ள பிரதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” ஆகிய நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டன. கடைசியாக, பெருமாள்முருகன் இவற்றை ஏற்றுக்கொண்டதன்பேரில், அவருக்கு எதிரான போராட்டங்களைக் கைவிடுவதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் பெருமாள்முருகன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை இது.

பெருமாள் முருகன் - மாதொருபாகன்

பெருமாள் முருகன் – மாதொருபாகன்

மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள்[4]: பெருமாள்முருகன் 13-01-2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். மாதொருபாகன்நூலோடு பிரச்சனை முடியப்போவதில்லைவெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் நான் எழுதிய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது. எனது நூலை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு உரிய நஷ்டஈடு அளிப்பேன். எனது நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்க தயார்”, என்று பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்[5]. இது விரக்தியா, அகங்காரமா என்பது அவருக்குத்தான் தெரியும். “உயர்வு நவிற்சி அணி” எப்படியிர்க்கும் என்பது தமிழர்களுக்குத் தெரிந்தது தான்! மேலும், “மாதொருபாகன் நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும்”, என்பது, ஏதோ எச்சரிப்பது போலத்தான் உள்ளது. அப்படியென்றால், அவரது-அவர்களது அடுத்த திட்டம் என்ன என்று தெரியவில்லை.

மாதொரு பாகன் ஆதரவு.2

மாதொரு பாகன் ஆதரவு.2

நாத்திகக் கட்சிகள் உள்நுழைந்து ஆர்பாட்டம் செய்தது: சென்னைப் புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை (14-01-2015) இரவு திடீரென இருவர் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு வந்து கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர்[6]. பபாசி நிர்வாகிகளும் வந்து புத்தகத் திருவிழா அமைதியாக நடக்க ஒத்துழைக்குமாறு கோரினர். ஆனால், முகத்தில் கருப்புத் துணி கட்டியவர்கள் கோஷங்களை எழுப்பி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அப்பகுதியிலிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்[7]. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையில், எழுத்தாளருக்கு ஆதரவாக மாற்றுவின் இடதுசாரி இளைஞர் சார்பில் போராட்டம் நடைபெற்றது, ஆனால், டிவிசெனலில் “விடுதலை ராஜேந்திரன்” தன் பெயரைச் சொல்லிக் கொண்டு பேட்டி கொடுத்தார். அதாவது, திராவிடக்கழகத்தவரும் இதில் நுழைந்துள்ளனர். இது குறித்து பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில், புத்தக திருவிழாவை குறும்பதிப்பகத்தார், எழுத்தாளர்கள், ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே, யாருக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ யாரும் புத்தகக் காட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள், “எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான்”, என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்பட்டன[8]. பெருமாள் முருகன், இனிமேல் தான் எழுதுவதையே விட்டுவிடப் போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

Madhuru Bagan - Oppopsition for sales increase DM

Madhuru Bagan – Oppopsition for sales increase DM

மனுஷ்ய புத்திரன், எல்.ஆர்.ஜெகதீசன் முதலியோரின் விமர்சனங்கள்: பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது பெருமாள் முருகன், தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும், அதற்கான் நஷ்ட ஈடை தான் பதிப்பகங்களுக்கு கொடுத்து விடுவதாகவும், அதேபோல தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும், அதற்கான நஷ்ட ஈடை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… இதன் மூலமாக தனக்காக குரல் கொடுத்த அத்தனை பேரையும் செருப்பால் அடித்திருக்கிறார் பெருமாள் முருகன். ………அவர் – பெருமாள் முருகன் இப்போது செய்திருப்பதென்ன? இது பச்சையான கோழைத்தனம். பச்சாதாபத்தை தூண்டி தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தை இன்னும் சில தினங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி இது, என்று சாடியுள்ளார் மனுஷ்ய புத்திரன்[9]. எல்.ஆர்.ஜெகதீசன், காட்டமாக இதற்கெல்லாம் பெரியார் தான் காரணம் என்று நக்கலாக வாதம் புரிந்துள்ளார்[10]. அதாவது, இங்கு உண்மையினை மறைத்து, பிரச்சினையைத் திசைத்திருப்பி, விசயத்தையும் வேறுவழியில் இழுத்துச் செல்லும் போக்கைக் கவனிக்கலாம்.

ருஷ்டி-நஸ்.ரீன் -முருகன்

ருஷ்டி-நஸ்.ரீன் -முருகன்

தமிழ் இந்துவின் விவரங்கள்: சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நாவல் தடைசெய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘டாவின்சி கோட்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெண்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்: அன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகம். இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த உதாரணங்களுடன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது, என்று “தி இந்து” கூறுகிறது. இந்த நாவல், திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் புத்தகத்தின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள்முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன[11], என்று விவரித்தது. எம்.எஃப்.ஹுஸைன், தஸ்லீமா நஸ்.ரீன், ஜோசப் முதலியோரை விட்டுவிட்டது! பொதுமக்கள் திரண்டு எதிர்த்துள்ளதை மறைத்து, அவர்களைக் கண்டித்து, தமிழகம் எங்கும் குரல்கள் எழுந்துள்ளது என்று விவரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] தி இந்து, பேனாவைக் கொல்ல முடியாது!”, 10-01-2015.

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6785870.ece

[3]http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article6772647.ece

[4] தினகரன், மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள், 14-01-2015.00.08.39, புதன்கிழமை.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127240

[6]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/01/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/article2620630.ece

[7] தினமணி, கருத்துரிமைக்காக போராட்டம், By dn, சென்னை First Published : 15 January 2015 04:47 AM IST

[8] The Hindu, “The writer is dead”,  Wednesday, 14-01-2015, p.7.

[9] http://heronewsonline.com/novel-controversy/

[10] http://heronewsonline.com/periyaar/

[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6733122.ece

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

ஏப்ரல் 24, 2012

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

நித்யானந்தா செக்ஸ் வீடியோ விகாரங்கள்[1]: நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ[2], வீடியோ எடுத்தது[3], சன்–டிவி தொடர்ந்து ஒளிப்பரப்பியது[4], அடிக்கடி ஒளிப்பரப்பியது, மிரட்டி கோடிகளில் பணம் கேட்டது, ஒளிபரப்பக் கூடாது என்று தடைகோரியது, முதலிய விவகாரங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் நன்றகத் தெரிந்தவையாகும்[5]. ஆகையால், அவற்றைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதே போல ஒரு காங்கிரஸ் செக்ஸ்-சிடி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும் சட்டம் வேறு மாதிரி செயல்படுவது தெரிகிறது. கருத்துரிமை, அந்த உரிமை, இந்த உரிமை என்று பேசுபவர்கள் இம்மாதிரி விஷயங்களில் அவ்வாறு பேச முடியாதுதான். இருப்பினும், ஒரே மாதிரி அணுகுமுறை இல்லாதது போது, வித்தியாசம் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.

சிவப்புப்புடவை” – வாழ்க்கையேஅதிகாரத்திற்குவிலையாகும்போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ! அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்! அபிஷேக் மனு சிங்வி என்பவர், மிகவும் பெரிய இடத்து மனிதர். சோனியா மெய்னோவிற்கு மிகவும் வேண்டியவர்[6]. சோனியாவின் இளம் பிராயத்து விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் இருந்ததற்கு, சிங்வி அதிகமாகவே பாடுபட்டிருக்கிறார்[7]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார். அத்தகைய சிங்வி இப்பொழுது தாமே ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொண்டு, சிடி வந்துள்ளது.

அபிஷேக் மனு சிங்வி செக்ஸ் வீடியோ விகாரங்கள்: சில நாட்களுக்கு முன்பாக, இவர் தன்னுடைய சேம்பரில், ஏதோ ஒரு ஜூனியர் வக்கீல் பெண்ணுடன் உறவு கொள்வது போல வீடியோ ஒன்று இணைதளத்தில் வலம் வந்தது. அபிஷேக் மனு சிங்வி தனது அறையில் மேஜைக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறார். எதிர்பக்கத்தில் அந்த பெண் உட்கார்ந்திருப்பார் போல உள்ளது. பின்பக்கத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள பீரோக்கள் இருக்கின்றன. அரைமணிக்கும் மேலாக ஓடுகின்ற இந்த வீடியோவில் இந்தியில் இவர் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்…………………..(முதலில் சாதாரணமாகப் பேசி பிறகு செக்ஸியாகப் பேசி விஷயத்திற்கு வருகிறார் என்று இந்தி தெரிந்தவர்கள் கேட்டு சொல்கிறார்கள்) பிறகு அப்பெண்ணை அணைத்துக் கொள்கிறார்………………வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………………சட்டையை அவிழ்க்கிறார்………….வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………….படுத்துக் கொள்கிறார். வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. பிறகு அபிஷேக் மனு சிங்வி எழுந்து கொள்கிறார்……………………முகத்தில் கண்ணாடி இல்லை…………………….அந்த பெண்ணை வேறு திசையில் படுக்கச் சொல்கிறார். கையை விரலால் அவ்வாறு சுழற்றி காண்பிக்கிறார். அதுமட்டுமல்லாது, கையால் தலையைப் பிடித்து அமுக்கி படுக்க வைக்கிறார்……………………….அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு உட்கார்ந்திருக்கிற மாதிரி உள்ளது. ஆனால், இவர் ஏதோ வேகமாக எழுந்து-எழுந்து உட்காருகின்ற மாதிரி தென்படுகிறது. . வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு அவர் எழுந்து கொள்கிறார். முதலில் எதையோ மாட்டிக் கொள்கிறர் ;போல உள்ளது. பிறகு பேன்டை மாட்டிக் கொள்கிறார். இன்-சர்ட் செய்து சரிசெய்து கொள்கிறார். ஆக இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக அபிஷேக் மனு சிங்வி, ஏதோ ஒரு பெண்ணுடன், அவரது சேம்பரில் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தார் என்பது போலத்தான் உள்ளது.

அரசியல் பலம் இருந்ததினால் செக்ஸ்-சிடி தடை செய்யப்பட்டது: விஷயம் தெரிந்தவுடன், அபிஷேக் மனு சிங்வி தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிக் கொண்டார். இந்த சிடியை அவரது டிரைவர் தான் பரப்பினார் என்று பிறகு தெரிந்தது. கொடுத்த சம்பளம் போதவில்லை என்ற காரணத்தால் தான் அவ்வாறு செய்ததாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்ததும், அந்த சிடியை கொடுத்துவிட்டதாஅவும் தெரிகிறது. வழக்கம் போல அந்த சிடி மார்பிங் செய்யப் பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. இருப்பினும் பெரிய இடத்து விவகாரம் என்பதால், ஊடகங்களும் அமுக்கி வாசித்தன. ஈரொரு நாட்களில் மொத்தமாக அமுங்கிவிட்டது. இவ்விதமாகத்தான் சில சுதந்திரங்கள் உள்ளன. ஆனால் இணைத்தளத்தில், இந்த வீடியோ வைரஸ் மாதிரி பரவியது[8]. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.

சிங்வி ராஜினாமா (23-04-2012)[10]: காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்[11]. ‌இவர் வகிக்கும் பற்ற பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்[12]. சி.டி. விவகாரத்தில் சிக்கிய அபிஷேக்சிங்வி, பெரும் சர்ச்சைக்குள்ளானார். முன்னதாக ‌காங்., செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்தும் சத்தமில்லாமல் நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சட்டத்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இது குறித்து சிங்வி கூறுகையில், சி.டி. விகாரத்தில் என்னை மிரட்டினர். எனவே என்னை கட்டாயப்படுத்திய பதவி விலக வற்புறுத்தியுள்ளதாக கூறினார்[13]. இருப்பினும் “நான் அவனில்லை” என்று கூறவில்லை! இதற்கும் நித்யானந்தாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருப்பினும் சென்னை உயர்நீதி மன்றம் வேறுவிதமாக இருந்திருக்கிறது.

வேதபிரகாஷ்

24-04-2012


[2] வேதபிரகாஷ், நித்தியானந்தாதமிழ்நடிகை,சன்நியுஸ்தொலைக்காட்சி, , மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:  http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்யானந்தா-தனிழ்-நடி/,

[3] வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தாவை குறுந்தகடு செய்யவேலைக்கு அமர்த்திய நித்யானந்தா!, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்::http://dravidianatheism.wordpress.com/2010/03/07/ஸ்ரீநித்ய-தர்மனந்தாவை-க/

[4] வேதபிரகாஷ், நான்அவனில்லை, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:
http://dravidianatheism.wordpress.com/2010/03/07/நான்-அவநில்லை-நிதான/

[9] தினமலர், ஏடாகூடசி.டி.,யில்சிங்விஎக்கச்சக்கம்‘: காங்., செய்திதொடர்பாளர்பதவிநீக்கம், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2012,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2012,02:29 IST;  சென்னைப் பதிப்பு; http://www.dinamalar.com/News_detail.asp?Id=450752

ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு!

மார்ச் 4, 2011

ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு:

ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு: பி. கே. குன்ஹாலிக்குட்டி என்பவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முக்கியமான தலைவர். அவர் இப்பொழுது மற்றொரு குற்றச்சாட்டிற்குட் பட்டுள்ளார். ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு கேரளாவில் மிகவும் பிரசித்தியானது. கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லர் விபச்சாரத்தின் திரையாக உபயோகப்பட்டு வந்தது. இங்கு வரும் இளம்பெண்களை மயக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தனர். அவ்வாறு பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி கொத்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததால், இது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு என்றும் அழைக்கப் படுகிறது[1]. அதுமட்டுமல்லாத அந்த பாதிக்கப் பட்ட பெண் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலில் புணர்ச்சிகளுக்குட் பட்டு, கொத்தமங்கலத்தில் ஒரு வீட்டில் கிடந்தாள். அக்டோபர் 5, 1997 அன்று ஒரு இளம்பெண் தன்னை பலர் பாலியல் ரீதியில் வன்புணர்ச்சியில் ஈடுபட்டனர் என்று புகார் கொடுத்தாள். அதன் பிறகு அவள் அடையாளங்காட்டிய 43 பேர் குற்றஞ்சாட்டப் பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த ஏழுபேர்களில் ஒருவர் தான் இந்த குன்ஹாலிக்குட்டி(Kunhalikutty).

1997 லிருந்து 2011 வரை நடந்த விவகாரங்கள்[2]: இதுவரை நடந்துள்ள விவகாரங்கள்:

1997: ஐஸ்கிரீம் பார்லரை முகப்பாக வைத்துக் கொண்டு கோழிக்கோட்டில் செக்ஸ் / விபச்சாரம் நடப்பதாகவும், அதில் கேரளாவின் பெரிய அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால்[3], அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வேஸி என்ற அரசு சாரா நிறுவனம், அப்போதைய கேரள முதன் மந்திரி ஈ.கே. நாயனாரிடம்[4] புகார் கொடுத்தது.

1998: ரெஜினா என்ற பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி, எப்படி, குன்ஹாலிக்குட்டி என்ற மந்திரி தன்னை பாலியல் ரீதியாக புணர்ந்தார் என்று விவரித்து, ஒரு வாக்குமூலம் கொடுத்தாள்.

1999: திடீரென்று ரெஜினா தன்னுடைய வாக்குமூலத்தை மறுத்தாள்[5]. இதனால், குன்ஹாலக்குட்டி, இந்த வழக்கில் ஒரு சாட்சியாக ஆஜரானார்.

2003: உள்ளூர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப் பட்ட அனைவரையும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்தது.

2004: ரெஜினா மறுபடியும் குன்ஹாலக்குட்டியின் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றாள். தான் பயமுறுத்தப் பட்டதாலும், பண ஆசை காட்டியதாலும் தான் அவ்வாறு முரண்பட்ட வாக்குமூலத்தைக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டாள்.

2005: இதனால், குன்ஹாலக்குட்டி, ஒமன் சாண்டி அரசிலிருந்து, ராஜினாமா செய்தார்.

2006: உச்சநீதி மன்ற இவ்வழக்கை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.

2011: குன்ஹாலக்குட்டி-ரௌஃப் பிரச்சினையால், மறுபடியும் இவ்வழக்கு அனைவரது கவனத்தை ஈர்த்த்துள்ளது.

குற்றஞ்சாட்டப் பட்ட குன்ஹாலிக்குட்டி தப்பியது: இவர் என்ற தொழிற்துறை அமைச்சரரக இருந்தார், இந்த செக்ஸ் வழக்கினால் பதவி 2005ல் விலக நேர்ந்தது. ஐஸ் கிரீம் பார்லருக்கு வரும் இளம்பெண்களை மயக்கி செக்ஸில் ஈடுபடுத்தி வந்த வழக்கில், பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி இவரது பெயரைக் குறிப்பிட்டதால், ராஜினாமா செய்யவேண்டியிருந்தது. இருப்பினும், பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று, அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டார். அப்பொழுது குன்ஹாலிக்குட்டி அப்பெண்ணிற்கு பணம் கொடுத்துதான், தப்பித்துக் கொண்டார், என்று சொல்லப் பட்டது.

குன்ஹாலிக்குட்டியின் மீதுள்ள குற்றச்சாட்டுகள்: அதுமட்டுமல்லாது, உள்ளூர் ஆஸ்பத்திரிலிருந்து அப்பெண் மனநிலை சரியில்லலதவர் என்று சான்றிதழ் பெற்றது, பொய்யான சுய-வாக்குமூலங்களைப் பெற்றது, குன்ஹாலிக்குட்டியின் டைரியில் பிரயாணங்களைப் பற்ரிய விவரங்களை திருத்தியது, என ஆரம்பித்து, இப்பொழுது நீதிபதிகளுக்கே பணம் கொடுத்து சாதகமான தீர்ப்பு வாங்கியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. ரெஜினா என்ற பெண்ணின் வாக்குமூலத்தில், குன்ஹாலிக்குட்டியின் செயல்கள் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. அதன் பிரதி / நகல் கேரள பெண்கள் கமிஷனிடம் உள்ளது[6].

மறுமகன் இப்பொழுது குற்றஞ்சாட்டுவது: ஆனால், இப்பொழுது, அவ்வாறு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதில், இரு நீதிபதிகள் காசு வாங்கிக் கொண்டுதான், அவ்வாறு செய்தனர் என்ற குற்றாச்சாட்டு இப்பொழுது (பிப்ரவரி 14, 2011) எழுந்துள்ளது. குன்ஹாலிக்குட்டியின் மைத்துனரான கே. ஏ. ரௌஃப் என்பவர் கே. நாராயண குருப் மற்றும் கே. தங்கப்பன் என்ற இரு நீதிபதிகள் அவ்வாறு செய்ததாக, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி தந்தபோது, வெளிப்படையாகக் கூறினார். “அப்பெண் பொட்டா என்ற இடத்தில் உள்ள கிருத்துவ வழிப்பாடு மையத்திற்கு[7] செல்வது வழக்கமாக இருந்ததால், அம்மையத்தின் பாதிரியார் ஜியார்ஜ் பணக்கல் என்பவரை நாங்கள் சந்தித்தோம். எப்பெண்ணின் வாயை மூட ரூ……..லட்சம் பணம் கொடுத்தோம்”, என்றெல்லாம் கூறினார்[8]. கேரளாவின் பார் கவுன்சில் இதற்கான – நீதிபதிகள் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது[9].

இப்படி தொடர்ந்து காங்கிரஸ்காரர்கள் செக்ஸ் வழக்குகளில் சிக்கி வருவது, காங்கிரஸ் பாரம்பரியம் என்றுதான்  தோன்றுகிறது. நேரு காலத்தில் அவரே பற்பல பெண்களுடன் தொயர்பு வைத்திருந்தது பற்றி புத்தகங்களே வந்துள்ளன. பிரோஸ் காந்தியும் அவ்வாறே பேசப்பட்டார். என்.டி.திவாரி சமீபத்தில் மாட்டிக் கொண்டார். பி.ஜே.குரியன், குட்டி ……என்று தொடர்கிறது.

வேதபிரகாஷ்

04-03-2011


[3] அரசியல் இருப்பதால் பரஸ்பர குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இருப்பினும் செக்ஸ் ஆட்டங்கள் நடந்துள்ளதை மறுக்கவில்லை.

[4] கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது என்று பொன்மொழியை உதிர்த்தவர் இவர்தான். பிறகு நான் என்ன இல்லாததை சொல்லிவிட்டேன், அதுதான் கம்யூனிஸ்ட் மானிஃபஸ்டோவிலே இது உள்ளதே என்று விளக்கமும் அளித்தார்!

[5] ரெஜினாவின் கணவன் பிரமோத் என்பவருக்கு வளைகுடா நாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும் வாக்குக் கொடுக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது.

[7] ரெட்ரீட் என்று அழைக்கப் படும் இந்த கிருத்துவ மையங்களிலும் பல செக்ஸ் கேளிக்கைகள் நடக்கின்றன, அச்வற்றிலும் பலர் சிக்கியுளனர்.