Archive for the ‘கிலானி’ Category

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

ஏப்ரல் 1, 2011

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

 

காஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவே, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான்! பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது? அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா?

 

இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.

 

சுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம்! உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

 

வேதபிரகாஷ்,

01-04-2011

 

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

ஜனவரி 20, 2011

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

சிதம்பரத்தின் சதி வேலைகள்: சிதம்பரம் ஒட்டுமொத்தமாக, இந்திய தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவர்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. முன்பு வந்தேமாதரம் விஷயத்தில் அந்தர்-பல்டி அடித்தது, ஜிஹாதி விஷயத்தில் மயங்கியது, மாவோயிஸத்தில் நிறத்தில் மூழ்கி, காவிநிறத்தை தூஷித்து, பச்சைநிறத்தில் மறுபடிட்யும் தோய்ந்து தேந்து விட்டார் போலும்! இடைத்தரககர்கள் வேறு பாஜகவை கொடியேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது வியப்பாகத்தா உள்ளது[1]. 1991ல் முரளி மனோஹர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப் பட்டார்.

பக்ஷி ஸ்டேடியத்திற்கும், லால் சைக்குக்கிற்கும் என்ன வித்தியாசம்? லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது? உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட்? லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் எந்த ஆளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லலமல் கிடந்தார்கள். அதைப் பற்றி தெரிந்ஹும், தெரியாதவர் மாதிரி தூன்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அப்துல்லா இவ்வாறு பேசுவதை ககது கொடுத்துக் கேட்கிறார்கள். தடுப்பதற்கு வழியைப் பார்க்கிறார்கள்.

உமர் சோனியா மெய்னோவையும் சந்தித்தாராம்[3]: சோனியாவயும் சந்தித்துள்ள உமர், அவரையே வந்து கொடியேற்றச் சொல்லியிருக்கலாமே? இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே? ஆனால், அவ்வாறு முன்வருவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், முஸ்லீம் ஓட்டுகள் மட்டுமல்ல, ஜிஹாதிகளின் துப்பாக்கிகளும் சோனியாவை நோக்கித் திரும்பிவிடும் என்பது நன்றாகவே தெரியும். ஆகையால்தான் தொடை நடுங்கி சிதம்பரம், ஜிஹாதிகளை தாஜா செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு[4]: உள்துறை சதிகள் மறுபடியும் ஆரம்பித்து விட்டன. ஆமாம், ஏன் சோனியாவே சென்று கொடி ஏற்றலாமே? ஏன் அவ்வாறு செய்வதில்லை? காங்கிரஸ்காரர்கள் ஏன் இதை யோப்சித்துப் பார்ப்பதில்லை? காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று பாஜக ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரத்துடன் உமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் உள்ள “லால் சவுக்” பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் நோக்கி அக்கட்சி “ஏக்தா யாத்ரா” என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தி வருகிறது. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].

ஜிஹாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து வரும் உமர் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க ஒப்பாரி: காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். “சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது”. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றினால் அமைதிக்குக் குந்தகம் இந்நிலையில் தான் ஏற்படும் என்றால், அம்மாநிலத்தின் நிலைமையே சதேகத்தில் உள்ளதே?

இந்துக்களை ஒழித்து, முஸ்லீம்களை தாஜா செய்து வரும் காங்கிரஸ்: மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது’ எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான்.  இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததில், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்தியதேசிய ஆதரவு ஊர்வனமும், தேசிய-விரோதி ஊர்வலங்களும்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், “பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன்‘ என்றார். குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.

சொந்ததேசத்தில் இந்துக்கள்-பண்டிட்டுகள் அகதிகள்[6]: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-01-2011


[1] SHUJAAT BUKHARI, Interlocutors ask BJP not to hoist tricolour, http://www.thehindu.com/news/national/article1102872.ece

[4] உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு ஜனவரி 19,2011,0 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169366

[6] பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை, ஜனவரி 20,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169732

 

தேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

நவம்பர் 30, 2010

தேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

நீதி மன்றம் ஆணையிட்டப்பிறகு, தில்லியில் திலக் மார்க் போலீஸ் ஸ்டேஷனில், ஒருவழியாக தேசத்துரோக பேச்சுகளுக்காக கீழ்கண்டவர்களின்மீது[1] பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ்[2] வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

1.   அருந்ததி ராய்

2.   சையது அலி ஷா கிலானி,

3.   வராவர ராவ்

4.   எஸ்.ஏ. கிலானி

5.   செயிக் ஷௌகத் ஹுஸைன்

6.   சுபத்ரா சென்குப்தா

7.   சுஜாதோ பத்ரா

சட்டப்பிரிவு சட்டமீறல்கள்
124 A (sedition) of the IPC தேசத்துரோகம்
153 A (promoting enmity between different groups and doing acts prejudicial to maintenance of harmony) of the IPC இரு பிரிவினருக்கிடையே விரோத்தத்தை மூட்டும் வகையில் ஊக்குவிப்பது மற்றும் அமைதியைக்கெடுப்பது
153 B (imputations, assertions, prejudicial to national integration) of the IPC தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது, தப்பாக விளக்குவது, களங்கம் ஏற்படுத்துவது முதலியன
504 (insult intended to provoke breach of peace) of the IPC அமைதியைக் குலைப்பது
505 (statements conducing to public mischief) of the IPC பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடப்பது
Section 13 of the Unlawful Activities (Prevention) Act. மேல் கண்ட சட்டமீறல்கள் – இச்சட்டப்பிரிவின் கீழ்

காஷ்மீர் இந்துக்கள்தான் புகார் கொடுத்தனர் நடவடிக்கை எடுக்க இவ்வலவு நாள்: அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்த காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[3], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது[4]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்தார்[5]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[6], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லி தூங்கிவிட்டார்கள்!

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: ஆனால், ஏதோ செய்யவேண்டுமே என்று, “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. முன்பும் தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று கொடுத்த நோட்டிஸும் பாக்கி இருக்கிறது[7].

உள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன[8]: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது[9].

வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்தது[10]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[11].  இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[12]. இருப்பினும், காங்கிரஸ் அரசு நடவடிக்கை வேண்டாம் என்று தீர்மானித்தது[13], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[14]. அந்நேரம், பீஹாரில் தேர்தல் இருந்தது!

வேதபிரகாஷ்

© 30-11-2010


[4] The complaint for registration of FIR against them has been filed at Tilak Marg police station, and according to the complainant, the police has promised investigation and “if the case suits, then a FIR will be filed within two days,” which may prompt the police to take action against Roy, Geelani and others.

http://www.dailypioneer.com/292994/Kashmiri-Pandits-lodge-police-complaint.html

[7]வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!,  https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[8] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!, https://secularsim.wordpress.com/2010/10/29/no-action-against-arundhati-and-geelani/

[9] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114407

[10] தினமணி,  கிலானி, அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு இல்லை: மத்திய அரசு முடிவு, First Published : 29 Oct 2010

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=……………..81

 

[11] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!, https://secularsim.wordpress.com/2010/10/27/susanna-arundhati-roy-sedition-arrest/

[12] A legal opinion given by a law officer had said that the speeches made by the duo at the Delhi conference amounted to sedition and both should be booked under Section 124A of the IPC.

http://www.indianexpress.com/news/No-action-against-Geelani–Arundhati/704153

[13] The decision to the speeches was taken to avoid giving a handle to separatists and civil liberties activists, who were expected to rally around Roy to support freedom of expression.

http://www.hindustantimes.com/No-case-to-be-filed-against-Roy-Geelani/H1-Article1-619143.aspx

[14] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா

நவம்பர் 1, 2010

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா


சர்தார் படேல் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம்: அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலுடைய 135வது பிறந்த தினமாகும். வழக்கம் போல ஊடகங்கள் கூட ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. சென்ற ஆண்டு (31-10-2009) ருக்ஸானா பாட்டுப் பாடியது[1], இன்றோ அந்த லாயக்கில்லாத உள்துறை காஷ்மீரத்திற்குச் சென்று பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தச் சென்றுள்ளாதாகவும்[2], மிகவும் குறைந்த பாதுகாப்புடன் சென்றுள்ளதாகவும் உளையிட்டுக் கொண்டிருக்கின்றன. சர்தார் படேல் இல்லையென்றால், இப்பொழுதைய இந்தியா இல்லை, அதாவது 565 சிறிய-சிறிய ராஜசமஸ்தானைகளை (princely states) இணைத்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கினர். ஆனால், இன்று யாரும் அவரை, குறிப்பாக எந்த இந்தியனும் நினைப்பதாக தெரியவில்லை. இன்று 31-10-2010, சர்தார் படேல் சாலையில், சென்னை ராஜ்பவனுக்கு எதிரில் சிலர் அவர் சிலைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்தபோது, யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வண்டிகள் மட்டும் வேகமாக சென்று வந்து கொண்டிருந்தன.  சிலர் கார் சன்னல்களின் வழியாக எட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒட்டிச் சென்றனர்.

Image0011

Image0011

சர்தார் படேல் செய்தது என்ன? 600ற்கும் மேற்பட்ட சிறிய ராஜசமஸ்தானைகளை இந்தியாவுடன் சேர அழைத்தப்போது, சுமார் 560 சமஸ்ததனங்கள் ஒப்புக் கொண்டன. பிறகு 565 இந்தியாவுடன் சேர / இணைய கையெழுத்திட்டு பத்திரங்களைக் கொடுத்தன. ஆனால், ஜுனாகர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் என்ற மூன்று சம்ஸ்தானங்கள்தாம் இணையவில்லை. ராணுவ நடவடிக்கை மூலம் முதலில் ஜுனாகர், பிறகு ஹைதராபாத் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில்தான் நேரு வந்து குழப்பிவிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றதால், அப்பிரச்சினை இன்றும் தொடர்கிறது! ஆனால், படேலை விட்டிருந்தால், காஷ்மீரத்தை அன்றே இந்தியாவுடன் சேர்த்திருப்பார். அத்தகைய உறுதி இன்றைய ஆட்சியாளர்களுக்குன் இல்லை. ஆக, இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால், அதற்கு அவர்தாம் காரணம். திபெத்திற்கு உதவ ராணுவத்தை அனுப்பலாம் என்று ஆலோசனை சொன்னார், அனால், நேரு மறுத்துவிட்டார். அதனால்தான் திபெத்தில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. தான் இறப்பதற்கு முன்பு கூட (டிசம்பர் 1950), சீனாவை நம்ப வேண்டாம் என்று நேருக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு கேட்கவில்லை “இந்து-சீனி பாயி-பாயி” என்றார், சீனர்களோ 1962ல் படையெடுத்து எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்பிரச்சினையும் இன்று தொடர்கிறது!

 

இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்: மாலை பாரதீய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் நல்ல ஆட்சி / நிர்வாகம் (Good Governance), ஒழுக்கம் என்றால் என்ன (What is Integrity) போன்ற தலைப்புகளில் நடந்த அகில இந்திய கட்டுரைப் போட்டிகளில் வென்ற பதினைந்து மாணவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. பங்கு கொண்டவர்கள் எல்லாமே முக்கியமானவர்கள்தாம். எஸ்.பி. ஆம்புரோஸ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை செயலர், என். விட்டல் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய மத்திரி விஜிலன்ஸ் கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை தேர்தல் கமிஷனர், குமரி அனந்தன், என்று பலர் கலந்து கொண்டனர்.

கட்டுரைப் போட்டிகளின் விவரங்கள்: சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட் மற்றும் பாரதீய வித்யா பவன் சிவ்-ஜி (SIV G) வருடந்தோரும் www.siv-g.org என்ற இணைதளத்தில் ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். 21 வயதிலுள்ள பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று பரிசுகள் – ரொக்கப்பரிசுகள் (ரூ.5000, 3000 மற்றும் 1000), தவிர 12 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

சர்தார் படேலை மறப்பதேன்? இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால் அதற்கு சர்தார் வல்லபாய் படேல் தான் காரணம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-31 வாரத்தை “விஜிலென்ஸ் அவேர்னஸ் வீக்” (Vigilance Awareness Week) என்று கொண்டாடும் மத்திய அரசு அலுவலகங்கள் கூட இந்நாள் அவரது பிறந்த நாள், அதை நினைவில் கொள்ளும் வகையில் தான் இவ்வாரம் அவ்வாறாகக் கொண்டாடப் படுகிறது என்பதனை ஒருவேளை அறியாதிருப்பர். ஏனெனில் காங்கிரஸ்காரர்களே அவரை அவ்வாறு இருட்டடிப்புச் செய்கின்றனர். காங்கிரஸுக்குலுள்ள, குறிப்பாக நேரு ஆதாரவாளர்கள் பட்டேலைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. உண்மையில் காந்தி சொன்னதற்காக, படேல் பல தடவை விட்டுக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பாக காங்கிரஸின் தலைவர் பதவிக்கு படேலிற்குதான் அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதாவது உள்ள 16 அங்கத்தினர்களில் 13 பேர் படேலையும், ஒருவர் நேருவையும் ஆதரித்தனர். இருப்பினும் காந்தி சொன்னதற்காக, படேல் விட்டுக் கொடுத்தார். அதாவது, சுதந்திரம் கிடைத்தப் பிறகு காங்கிரஸ் தலைவர் தான் பிரதம மந்திரி பதவியைப் பெறுவார் என்று அறிந்தும் விட்டுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, இறுதி யாத்திரையின் போது 1500க்கும் மேற்பட்ட ஐஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வந்திருந்து இறுதி மரியாதை செய்தனர். ஏனெனில் அவர்களுக்கு படேலுடைய நிர்வாகம், ஆளுமை, உறுதி முதலியவற்றைக் கண்டு அவ்வளவு மதிப்பு, மரியாதை. ஆனால், அவருக்கு 1991ல் தான் “பாரத் ரத்னா” கொடுக்கப்பட்டது!

வேதபிரகாஷ்

© 31-10-2010


[2] நவம்பர் 6ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=117531

சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!

ஒக்ரோபர் 23, 2010

சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!

ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம்! இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல!

Geelani holds convention in Delhi

Geelani holds convention in Delhi

ஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].

Indian dogs go back home

Indian dogs go back home

ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம்  கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6]! இப்படி பேசியுள்ளது சிதம்பரம்! எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது!

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].

Protest against Geelani in Delhi

Protest against Geelani in Delhi

காஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.

எதிர்ப்பு-தெரிவித்தவர்கள்-தாக்கப்பட்டனர்

எதிர்ப்பு-தெரிவித்தவர்கள்-தாக்கப்பட்டனர்

பிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா?”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது! ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].

Geelani.21-10-2010

Geelani.21-10-2010

அருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].

ஜிலானி-அருந்ததி

ஜிலானி-அருந்ததி

போலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர்! கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம்! ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].


[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.

[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதிஇந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்!, http://islamindia.wordpress.com/2010/10/21/காஷ்மீர-இந்துக்கள்-பிரிவு/

[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்!

[5] Chidambaram said the authorities had videographed the proceedings of the seminar and submitted them to legal advisers for an opinion on whether laws were violated. “If it is established prima facie that the laws have been violated, Delhi police will take action in accordance with the law,” he said.

[16] Hurriyat hawk Syed Ali Shah Geelani, writer and Maoist sympathiser Arundhati Roy and parliament attack accused SAR Geelani were speakers at the event.

[17] She compared the protests in the Kashmir to the Naxals operating in central India and to even the ‘Narmada Bachao Andolan’. Roy said people everywhere are fighting for their rights.

[18] “You have to look for tactical, political and intellectual alliances and think about justice, otherwise you will be like fish swimming in a tank with strong walls and ultimately getting tired,” she said. Ms. Roy said she did not want young people in Kashmir to be let down even by their own leaders. She said the idea of justice linked struggles of people in Nagaland, Manipur, Chhattisgarh, Jharkhand and Orissa to the people of Kashmir.

[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:

http://www.global-sisterhood-network.org/content/view/2178/59/