Archive for the ‘விழா’ Category

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (1)

ஒக்ரோபர் 26, 2022

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (1)

முற்றும் துறந்த துறவிகள் தற்கொலை செய்து கொள்ளலாமா?: இந்துமடாதிபதிகள் கொலை செய்யப் படுவது, தற்கொலை செய்து கொள்வது, புதிய செயல்பாடு, நிகழ்வு மற்றும் போக்காக தென்படுகிறது. கர்நாடகாவில் அடிக்கடி நடப்பது திகைப்பாக இருக்கிறது. 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். இவ்வாறு நடப்பது, மடாதிபதி பதவிக்கு வரவா, சொத்தா, அரசியலா போன்ற கேள்விகள் எழத்தான் செய்தன, செய்கின்றன. ஆனால், உடனே, அப்பிரச்சினை அமுங்கி விடுகிறது. துறந்தவர் என்ற நிலையில், துறவியாகி, சந்நியாசியாகி, மடாதிபதியாகி விட்டப் பிறகு, உலக ஆசைகளில் ஈடுபட்டு, மாட்டிக் கொண்டு, இத்தகைய நிலையை அடைவது, துறவிக்கு, துறவறத்திற்கு, மடத்திற்கு, இந்துமதத்திற்கே இழிவைத் தேடித் தரும் காரியமாகும். இதெல்லாம் திட்டமிட்டு நடத்தப் படுகின்றனவா, அவ்வாறான இழுக்கை உண்டாக்க நடத்தப் படுகின்றனவா அல்லது மனித ஆசைகளால் நிகழ்கின்றனவா என்று பாரபட்சம் இல்லாமல், நடுநிலையோடு பிரச்சினையை அலச வேண்டியுள்ளது.

லிங்காயத்து சைவ நம்பிக்கையும், வேத மறுப்பும்: கர்நாடகாவில் ஒரு பிரிவினர் லிங்காயத் என்ற பெயரில் தனி வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்[1]. லிங்காயத் பிரிவை 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் நடைமுறையில் கொண்டு வந்தார்[2], ”வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை. லிங்காயத்தை பின்பற்றுபவர்கள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்து கொள்வர். இவர்கள் தங்களோடு எப்போதும் லிங்கத்தை உடன் வைத்திருக்க வேண்டும், லிங்கத்தை கைகளில் வைத்து பூஜிக்க வேண்டும், குழந்தை பிறந்ததும் லிங்கத்தை கழுத்தில் தொங்கவிட வேண்டும் என்பது பசவண்ணா உருவாக்கிய கோட்பாடுகள். அதோடு அசைவம் உண்ணக்கூடாது, மது அருந்தக்கூடாது போன்றவை பசவண்ணா உருவாக்கிய கொள்கைகள். சாதிகளை வைத்து மக்கள் பிரிக்கக்கூடாது என்றார். விதவை திருமணத்தை ஆதாரித்தார், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும்,” என்றார்.

லிங்காயத் தனிமதம், இந்து மதமல்ல போன்ற கோரிக்கைகள், ஆர்பாட்டங்கள்: உண்மையில், இடைக்கால ஜைன-பௌத்த போராட்டங்கள், மோதல்கள், வாத-விவாதங்கள் வன்முறையில் முடிந்துள்ளன. இடைகாலத்தில் சைவவிரோத, ஜைனத்திலிருந்து விடுபட, பசவேஸ்வரர் இத்தகைய கொள்கைகளை முன்வைத்து, ஜைனத்தை தோற்கடித்தார். இந்த முற்போக்கு கருத்துக்களால் பசவண்ணா பின்னால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இவர்களே லிங்காயத்தார் என அழைக்கப்படுகின்றனர். லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் 2018 கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று கூறப்பட்டது. கர்நாடகாவில் சுமார் 17% பேர் லிங்காயத் மதத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து லிங்காயத்தை தனிமதமாக அறிவித்தனர். இதை வைத்துக் கொண்டு, தமிழகத்திலும் சில கோஷ்டிகள் கலாட்டா செய்து வருகின்றன[3]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை, வகை-வகையாக தங்களது சித்தாந்தங்களை வெளிப்படுத்தி, திரிபு விளக்கங்களுடன் கலாட்டா செய்வர். திமுக இவர்களுக்கு மேடை கொடுப்பதால், ஊடக விளம்பரமும் தாராளமாகக் கிடைக்கிறது[4]. கர்நாடகாவில், அதே வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது.

திங்கள்கிழமை 24-10-2022 அன்று குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது: கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டத்தில் உள்ள குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தற்கொலை செய்து கொண்டார்[5]. ராமநகரம் மாவட்டம், மாகடி வட்டத்தில் கெம்பாபுராவில் அமைந்துள்ளது குஞ்சகல் பண்டே மடம்[6]. இதன் தலைமை மடாதிபதியாக பசவலிங்கேஷ்வரா சுவாமி கடந்த 1997 முதல் பொறுப்பு வகித்து வந்தார்[7]. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தின் பீடாதிபதியாக உள்ள பசவலிங்கேஸ்வர சுவாமிகள், தனது மடத்தின் பூஜையறையின் கண்ணாடிக் கம்பியில் திங்கள்கிழமை 24-10-2022 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்[8]. 1997ஆம் ஆண்டு மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பசவலிங்கேஸ்வர சுவாமிகள், அண்மையில் வெள்ளி விழாவைக் கொண்டாடியிருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மடத்தின் பணியாளர்களுடன் நிதி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தன் அறைக்கு உறங்க சென்றவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

பூஜைக்குப் பிறகு எடுத்த முடிவு: தினமும் அவா் காலை 4 மணிக்கு எழுந்து பூஜை செய்வது வழக்கம். அந்த சமயத்தில் பூஜையறையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக திங்கள்கிழமை காலை 6 மணிக்குப் பிறகும் பூஜையறையின் கதவுகள் மூடியிருந்ததைக் கண்ட மடத்தின் ஊழியா்கள், கதவைத் தட்டினா்.  கார் டிரைவர் தான் முதலில் கவனித்தார் என்று சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அவரது கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தனா். ஆனாலும், கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த மடத்தின் ஊழியா்கள், பின்புறமாகச் சென்று அறைக்குள் பார்த்த போது பீடாதிபதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மடத்தில் இருப்பவர்கள், இதனை நம்பவில்லை. நிச்சயமாக, ஏதோ ஒரு காரணத்திற்காக, குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக, அவர் மிரட்டப் பட்டிருக்க வேண்டும், அதனால், அத்தகைய முடிவுக்குச் சென்றிருக்க வேண்டும் என்று கூறப் படுகிறது.

பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டியுள்ளது: இதுகுறித்த தகவலின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் எழுதி வைத்திருந்த மரணக் குறிப்பை போலீஸார் கைப்பற்றினா். அதில், ஒருசிலா் தனது செல்வாக்கை குறைக்கும் வகையிலான தகவல்களை வெளியிடுவதாக மிரட்டியதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அக் கடிதத்தில் தன்னை யார் மிரட்டினார்கள் என்பதையும் பீடாதிபதி குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் கூறினா். அவா்களின் பெயரைத் தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனா். இந்த நிலையில் மடாதிபதிக்கு யாரோ அடிக்கடி வீடியோ கால் பேசியதும் தெரியவந்து உள்ளது[9]. இதனால் அவர் பயன்படுத்திய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்[10]. மேலும் மடாதிபதி பசவலிங்க சாமியின் டைரியையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்[11]. மேலும் ஹனிடிராப் முறையில் மடாதிபதி மிரட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[12]. பிறகு, தற்கொலைக்குத் தூண்டியவர்கள் அடையாளம் காணப் பட்டு, அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப் படுமா என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-10-2022.


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Lingayat Seer : லிங்காயத் மடாதிபதி பசவலிங்க ஸ்வாமி தற்கொலை என தகவல்.. 2 பக்க கடிதத்தில் இருந்தது என்ன?, By: ஆர்த்தி | Updated at : 25 Oct 2022 01:33 PM (IST),Published at : 25 Oct 2022 01:33 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/india/karnataka-lingayat-seer-found-hanging-cops-find-blackmail-angle-in-2-page-suicide-note-80901

[3]  சைவசித்தாந்த மாநாடு நடத்திய சரவணன் கோஷ்டி, ஸ்டாலின் மேடையில் பேசிய சைவர்கள் முதலியோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

[4]  சைவர் வேறு, இந்து வேறு போன்று விசமத்தனமான வாத-விவாதங்களையும் குறிப்பிடலாம்.

[5] தமிழ்.இந்து, கர்நாடகாவில் மடாதிபதி தற்கொலை, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 05:40 AM, Last Updated : 26 Oct 2022 05:40 AM

[6] https://www.hindutamil.in/news/india/887689-abbot-commits-suicide-in-karnataka.html

[7] தினமணி, குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தற்கொலை, By DIN  |   Published On : 26th October 2022 01:23 AM  |   Last Updated : 26th October 2022 01:23 AM

[8] https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2022/oct/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3938168.html

[9] தினத்தந்தி, வீடியோவை காட்டி மிரட்டியதால் ஜன்னல் கம்பியில் மடாதிபதி தற்கொலை?” – சிக்கிய கடிதத்தால் பரபரப்பு, By தந்தி டிவி, 25 அக்டோபர் 2022 10:43 PM

[10] https://www.thanthitv.com/latest-news/abbot-suicide-karnataka-144627

[11] தினத்தந்தி, தற்கொலை செய்த மடாபதியின் செல்போன்கள் பறிமுதல், தினத்தந்தி அக்டோபர் 26, 12:15 am (Updated: அக்டோபர் 26, 12:15 am)

[12] https://www.dailythanthi.com/News/India/the-cell-phones-of-the-abbot-who-committed-suicide-were-seized-822140

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)

Ellis is praised without knowing his baxkground

எல்லீசர்பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார்எல்லீசர்பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:

  1. திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.
  2. ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு?]
  3. “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.
  4. “எல்லீசர்” அறக்கட்டளை விருது.

அப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா? செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:

Tiruvalluvar Invitation- appreciating ELLIS

நிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

  • இதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.
  • திரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.speaking.2

திரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது? தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி. போன்றோரும், அண்ணாதுரை, .வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா? திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.

Mylapore function 08-06-2017-5

  • VHP R.B.V.S. மணியன்ஜி,
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,
  • G.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்

அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”.  இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.

B R Haran, Tamil Selvan, Myth of Christian cont.to Tamil and my reply

 

2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்?: பி.ஆர். ஹரண், தமிழுக்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிஅ பங்கு என்ற கட்டுக்கதை, என்ற கட்டுரையில், Misinformation campaigners project missionaries such as G.U. Pope, Constantine Joseph Beschi, Robert Caldwell, Barthalomaus Ziegenbalg, Francis Whyte Ellis and Dr. Samuel Green et al as great champions of Tamil and magnificent contributors to its development, including the introduction of “prose” writing. Of these, Francis Whyte Ellis or ‘Ellis Durai’ in Tamil, was a Madras-based civil servant in the British government and Samuel Green a doctor in Sri Lanka; both supported missionaries in evangelical causes,” என்று எழுதினார்.

“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.

“Ironically, A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages cannot be termed his own work as he allegedly took lots of passages from Francis Whyte Ellis, who wrote Dravidian Language Hypotheses.. To understand why Caldwell resorted to “research” South Indian languages, one should read Dr. K. Muthaia’s articleCaldwell Oppilakkanaththin Arasiyal Pinnani (“The Politics Behind Caldwell’s Comparative Grammar), published in the April 1997 issue of the Tamil monthly magazine Kanaiyaazhi.
“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.

Tiruvalluvar according to ELLIS

ஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்?: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்?

  1. எல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன?
  2. “எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்?
  3. திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்?
  4. எல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்?
  5. யார் பணம் கொடுத்தது?

இதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா?

© வேதபிரகாஷ்

16-06-2017

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.speaking

[1] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil, Posted on August 2, 2010.

 https://bharatabharati.wordpress.com/2010/08/02/myth-of-christian-contribution-to-tamil-%E2%80%93thamizhchelvan/

[2] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 1, Posted on July 21, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1324

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 2, Posted on July 22, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1325

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 3, Posted on July 23, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1326

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 4, Posted on July 22, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1327

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 5, Posted on July 25, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1328

[3] https://www.facebook.com/jayaraman.v.o/posts/10154585311106709?hc_location=ufi

“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (4)

நவம்பர் 30, 2013

“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (4)

 Modi with Mathuri and the police officer 2013

இப்பிரச்சினை பெரியதாகும் என்று நினைத்து, முன்பு, “குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)” என்ற தலைப்பில் ஒரு 21-11-2013 அன்று பதிவையிட்டிருந்தேன்[1]. இதன் இரண்டாவது[2] மற்றும் மூன்றாவது[3] பதிவை இங்கே காணலாம்.

Modi riding on a cart at the Kutch Ustav

உளவு  பார்க்கப்பட்ட  இளம்பெண்ணை  நரேந்திரமோடி  சந்தித்ததாக   கூறப்படும்  படங்கள்: ஊக்குவிக்கும், போதையேற்றும், பித்தர்களாக்கும் செய்திகள் போன்று இன்று புலனாய்வு செய்திகள் என்று வெளியிடப்படுகின்றன. உளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திர மோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[4], என்று தமிழ் ஊடகங்கள் பின்னணியை ஆராயாமல் வெளியிட்டுள்ளன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா பதவியில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இளம்பெண்ணை கண்காணிக்கும்படி போலீஸ் அதிகாரி ஜிங்காலுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி அந்த பெண்ணின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மோடியோ, அமித் ஷாவோ நேரடியாக இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தால் பா.ஜ.கவின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மோடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

Modi, Sharma at Kutch Ustav.2

காங்கிரஸின்  அழுத்தற்குட்பட்டு  விசாரணை  கமிட்டு  ஏற்படுத்தியது: இதற்குள் தருண் தேஜ்பால் விவகாரம் வெடித்து புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தின. இதில் காங்கிரஸ்-பாஜக நேரிடையாகவே மோதிகொள்ள ஆரம்பித்தன. ஆனால், அதிலும் மாட்டிக் கொண்டது மோடிதான்! பெண் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் “விகாஷா நெறிமுறைகளை”ப் பின்பற்ற வேண்டும் என்றுள்ளதால், ஒருவேளை பிரசினையைத் தவிர்க்க பாஜக அவ்வாறு விசாரணை கமிட்டியை நியமித்திருக்கலாம். இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைகளை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 26-ம் தேதி ஓய்வு பெற்ற அகமதாபாத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் இருநபர் விசாரணை குழுவினை குஜராத் அரசு அமைத்தது[5].  ஆனால், காங்கிரஸ்காரர்கள் அதனையும் குறை கூறினார்கள். வழக்கம் போல சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்கள்.

Modi, Sharma at Kutch Ustav

கட்ச்  ஷ்ரத்  உஸ்தவ்”   நடந்த   போது   எடுக்கப் பட்ட   புகைப்படங்கள்  (2005): அக்டோபர் 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த “கட்ச் ஷ்ரத் உஸ்தவ்” (कच्छ शरद उत्सव) விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை “குலைல்” என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டுள்ளது[6]டீது தவிர 13 படங்களை வெளியிட்டுள்ளது[7]. அந்த பெண்ணின் பெயர் மாதுரி (உண்மையான பெயர் அல்ல) என்று கூறியுள்ள “குலைல்”, அவருடைய முகத்தை தெளிவாக காட்டாமல் மறைத்து வெளியிட்டு இருக்கிறது. மோடி, சர்மா மற்றும் அந்த பெண் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது போலிருக்கிறது[8].

The post in the website reads: “These pictures raise a serious question mark about the credibility of the explanation put forth both by Madhuri’s father Premlal Soni and the BJP that only Premalal was known to Modi and it was he who had requested the CM to ‘take care’ of his daughter in 2009 when the illegal snooping operation was mounted. The pictures show that Modi knew Madhuri for at least five years before his state machinery mounted an illegal round the clock vigil on the young woman in August 2009.””It also confirms that part of the affidavit filed by Sharma in the Supreme Court in which he had alleged that Madhurihad visited Modi when he came to inaugurate the ‘Sharad Utsav’ in October 2005.  Sharma served as the collector of Kachchh district between 2003 and 2005,” the post further said[9].

மோடி இரவில் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த போது, இப்பெண்ணும் அங்கிருந்தார் என்று சர்மா சொல்வதாக, இந்த இணைதளம் வெளியிட்டுள்ளது[10]. ஆனால், மோடி, சர்மா முதலியோர் பேசிக் கொண்டதன் உண்மைத்தன்மைப் பற்றி தமக்குத் தெரியாது என்றும் ஒப்புக்கொண்டுள்ளது[11]. இதன் பின்னணியில் பாதி உண்மை – பாதி பொய் என அரசியல் உள்நோக்கங்களுடன் வதந்திகள் உலா வந்துக் கொண்டிருக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது[12].

Asish ketan anti-modi campaign

புகைப்படங்கள், பிரதீப்சர்மா, ஆசி  ஸ்கேத்தான், சங்கர்  சிங்  வகேலா  தொரடர்புகள்: ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மா கட்சில் பணிசெய்து கொண்டிருந்ததால், அவ்விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள அங்கு இருந்திருப்பார். பணி ரீதியில் அங்கு நடக்கும் நிகழ்சிகளையும் கவனித்துக் கொண்டிருப்பார். அப்படங்களிலும் விசித்திரமாக எதுவும் இல்லை. ஆகவே, அப்பொழுதே பிரதீப் சர்மா உள்நோக்கத்தோடு செயல்பட்டு, அப்புகைப்படங்களின் பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பொழுது அவற்றை இந்த “குலைல்” இணைதளத்திற்கு கொடுத்து பிரச்சினை ஏற்படுத்த பிரதீப் சர்மா பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.  “பாஞ்ச-ஜன்யம்” என்ற சங்கப்பரிவார் பத்திரிக்கை[13] மற்றும் உள்ளூர் பத்திரிக்கைகள்-நாளிதழ்களிலேயே இப்புகைப் படங்கள் வந்துள்ளன.

சங்கர்  சிங்  வகேலா  போன்ற  முந்தைய  சங்கப்பரிவார்  தலைவர்கள்,   ஆனால்,   பிஜேபிவிரோதிகள்: குஜராத்தில் காங்கிரஸ் பல ஆண்டுகளுகாக ஆட்சி செய்து வந்தமையாலும், ஆர்.எஸ்.எஸ் காரரான சங்கர் சிங் வகேலா பொன்றோர் காங்கிரஸில் இருப்பதாலும், காங்கிரஸ் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகளை ஊக்குவித்து, தொடர்ந்து இப்படி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவது நன்றாகவே தெரிகிறது. சங்கர் சிங் வகேலா ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்து காங்கிரசில் சென்றுள்ளதால் அவருக்கும் பிஜேபிஐப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே தெரிந்திரிக்கும்.  அதனால், பிரச்சினைக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்.

ஆசிஸ்  கேத்தான்  –  தெஹல்கா    யுக்திகள்: ஆசிஸ் கேத்தான் என்ற முந்தைய தெஹல்கா ஆள் தான் இப்பொழுது, “குலைல்” என்ற இணைதளத்திற்கு செய்திகளைக் கொடுத்து வருகிறார். முன்னர் 2002 விசயங்களைப் பற்றி அதிரடியாக “பொய்-மெய் கலந்து குழப்பமான” வீடீயோக்களை என்டி-டிவி செனல்களில் வெளியிடப்பட்டன. அப்பொழுது, இவரும் அவரது நண்பரும் தாங்கள் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள், இந்துக்கள், இந்து-ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, ஆராய்ச்சி செய்கிறோம் என்ற போர்வையில் பேட்டி கண்டு, போட்டோ-வீடியோ எடுத்து விசயங்களை சேகரித்தனர். பிறகு, வீடியோ-மிக்ஸிங் செய்து, சப்தங்களை, ஒலிகளை சேர்த்து பொய்யாக வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டார்கள். அவற்றில் சங்கப்பரிவார் தலைவர்களே தாங்கள் கலவரங்களை ஏற்படுத்தியாத ஒப்புக் கொள்கின்றமாதிரி இருந்தன. ஆனால், அவையெல்லாம் “போலியாக உருவாக்கப்பட்டவை” என்றாகியது.  சிறிது காலமாக அடங்கியிருந்த கேத்தான், இப்பொழுது குறிப்பாக தெஹல்கா சிக்கல்களில் இருக்கும் போது, வேறு இணைதலங்களில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதீப்  சர்மாவின்  புரட்டுகள், ஆசிஸ்  கேத்தானின்  உளவுத்  தன்மைகள்: அந்த படங்களில் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மாவும் இருக்கிறார்[14].  இளம்பெண்  மோடி விவகாரம் பற்றி முதலில் சர்ச்சையை கிளப்பியதும் சர்மாதான். தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் குஜராத் அரசு இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், “மலைத் தோட்ட திட்டம் தொடர்பாகநான் கலெக்டராக இருந்தபோது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்தேன் அந்த பெண்ணுடன் மோடி அடிக்கடி இமெயிலில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த பெண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஐ.ஏ.என்.எஸ் என்ற செய்தி நிறுவனம் கொடுத்துள்ளதை அப்படியே மற்ற நாளிதழ்கள் தங்களது இணைதளங்களில் வெளியிட்டுள்ளன[15]. “இந்தியா டுடே – ஆஜ்தக்” இணைதளம்[16] மற்றும் டிவிசெனல்களில் இதைபற்றிய ஒரு கார்ட்டூனையும் தொடர்ந்து ஒளி-ஒளிபரப்பி வருகிறது, இணைதலத்திலேயும் போட்டிருக்கிறது[17]. “Facebook” தளங்களிலும் இதனை விரசமாகவே பிரச்சார ரீதியில் வெளியிட்டுள்ளார்கள்[18]. தேஜ்பாலை கைது செய்த பிறகு ஊடகங்கள் இனி இவ்விசயத்தை வைத்துக் கொண்டு ஒரு வாரம்-பத்து நாட்கள் ஓட்டிவிடுவார்கள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

30-11-2013


[8] The pictures were taken during the first edition of the ‘KutchSharad Utsav’ in October 2005, the website claimed.

In one of the pictures, Modi is engaged in animated conversation with IAS officer Pradeep Sharma and the woman with her face blurred.

http://www.business-standard.com/article/news-ani/snooping-row-web-portal-releases-pictures-of-modi-with-woman-113112900535_1.html

[10] According to Sharma, Madhuri was also present in one of the tents on the night Modi was there, the website claims. Pradeep Sharma, who got suspended by the Gujarat government, had tried to corner the CM alleging that the phone of the woman was being tapped illegally at his behest.

http://www.asianage.com/india/web-portal-releases-picture-narendra-modi-madhuri-557

[11] The website has refrained from attesting to the veracity of the conversations.

http://timesofindia.indiatimes.com/india/Website-releases-photos-of-Narendra-Modi-with-woman/articleshow/26543237.cms?

[12] மாலைமலர், சர்ச்சைக்குரியஇளம்பெண்ணுடன்மோடிஇருக்கும்படம்: செய்திஇணையதளம்வெளியிட்டது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 30, 1:24 AM IST

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)

ஏப்ரல் 11, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)

PHOTO CAPTION

சோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].

PHOTO CAPTION

105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.

PHOTO CAPTION

அன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].

Sonia attending Lingayat conference April.3

இதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.

Sonia honoured by Lingayat - but a woman was shut down by police forcefully

கிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா?

Sonia attending Lingayat conference Aprl 2012

என்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.

PHOTO CAPTION

சாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்

Sonia attending Lingayat conference April.2

அட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள்? சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்

PHOTO CAPTION

ஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது

PHOTO CAPTION

இவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க

பலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].

PHOTO CAPTION

சோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.

லிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா?: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

PHOTO CAPTION

வெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.

வேதபிரகாஷ்

11-04-2013


[1] The Congress, which is ridden by factionalism in Karnataka, is hoping for a revival through Sonia Gandhi, who is on a two-day visit to the state. With just a year for the assembly elections, Sonia made the right beginning by participating in the Guruvandana programme of Shivakumara Swami, the pontiff of the Sri Siddaganga Mutt, the most powerful institution of Lingayats, the largest community in the state. Her visit is seen as a move by the Congress to woo the Lingayats, who were rallying behind former CM B.S. Yeddyurappa and the BJP for the last one decade.

Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2136817/Sonia-makes-poll-point-pontiffs.html#ixzz2Q9TGX71i
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[5]  A woman was beaten up by police today for showing black flag to the Congress President Sonia Gandhi in Tumkur, during the birthday celebration of Siddaganga Math head. A young woman tried to disrupt Mrs Gandhi’s speech during the ceremony. As she began her speech, the woman, seated among the audience, suddenly rose and waved a black flag demanding Scheduled Caste (SC) status for her community Madiga Dandora. The police immediately swung into action and beat her up. She was then taken away from the venue even as some of her supporters shouted slogans.

http://www.ndtv.com/article/india/woman-beaten-by-cops-after-trying-to-disrupt-sonia-gandhi-s-rally-in-karnataka-203518

[6] Members of the vedike, who along with leaders of the Karnataka Rajya Dalit Mahasabha and Christian and Muslim organisations, staged a protest here on Wednesday, alleged that attempts were being made to hush-up the incident.

http://www.thehindu.com/todays-paper/tp-national/cbi-probe-sought-into-suicides-at-chowli-math/article4604721.ece

[7] Members of the vedike, who along with leaders of the Karnataka Rajya Dalit Mahasabha and Christian and Muslim organisations, staged a protest here on Wednesday, alleged that attempts were being made to hush-up the incident.

http://www.thehindu.com/todays-paper/tp-national/cbi-probe-sought-into-suicides-at-chowli-math/article4604721.ece

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!

ஏப்ரல் 30, 2012

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!

சட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman,  self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.

மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை)  அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.

விழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].

2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].

மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.

இந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

“எனக்கு முழு அதிகாரம் உள்ளது புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணருகிறேன்.

தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.

இந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:

கேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்?

பதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.

கே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா?

ப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.

கே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே?

ப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.

கே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்?

ப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.

கே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா?

ப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.

கே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா?

ப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.

ஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 ஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11].  இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா? ஏன் கேட்பதில்லை?


[12] Manish Kunjam, former legislator from Konta district, took the medicines for Menon, an asthma patient, yesterday after Maoists made an appeal for medical help (the Union of Catholic Asian News).

http://www.ucanindia.in/news/abducted-collector%E2%80%99s-health-worsens/17642/daily

[13] “We can’t believe he has been kidnapped,” said Father Biju Uppanmackal, a priest working in Sukma in Bastar district, a tribal area under Maoist control.

http://www.ucanindia.in/news/maoists-under-fire-for-abduction/17620/daily