கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)
உடல்நலம் குறைவு முதலிய விசயங்கள்: இந்த நிலையில் மடாதிபதியின் தற்கொலை குறித்து அவரது உதவியாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் குதூர் போலீசார் பிரிவு 306-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்[1]. இவர் சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்[2]. இதனால் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என மடத்தின் ஊழியர்கள் கூறினர் இருப்பினும் இவையெல்லாம் தற்கொலை செய்து கொண்டதற்கு சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது. ஏலும், இவர் சமூக அக்கரைக் கொண்டு, சில காரியங்களை செய்து வந்தார். அவை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு திங்கள்கிழமை 24-10-2022 மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு முதலியன: கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு புயலாக கிளம்பி பரபரப்பை கிளப்பியுள்ளது[3]. சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[4]. கடந்த ஆண்டு 2021 டிசம்பா் மாதத்தில் சிலுமே மடத்தின் பீடாதிபதி பசவலிங்க சுவாமிகளும் இதேபோல தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்[5]. அவரது உடல்நலம் கெட்டுவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது[6].
பாலியல் புகார் –போக்சோவில் வழக்குப்பதிவு – கைதான மடாதிபதி (செப்டம்பர் 2022): கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரசித்த பெற்ற முருக மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார்[7]. இந்த மடத்திற்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவிகள் இருவர், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் பாலியல் புகார் அளித்தனர்[8]. இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, மடாதியும் போலீசார் முன்பு ஆஜராக விளக்கம் அளித்தார். பின்னர், பாலியல் புகார் கூறிய இரு மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடாதிபதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தலித் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மடாதிபதியை சந்தித்த ராகுல் காந்தி – அடுத்த பிரதமராக ஆசி: கடந்த மாதம் செப்டம்பர் 2022, தார்வாடில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி, கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்த மடத்திற்கு திடீர் விஜயம் செய்தார். அங்கு வழிபாடு செய்த அவருக்கு, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு, திருநீறு பூசி, தாயத்து அடங்கிய கயிற்றைக் கழுத்தில் அணிவித்தார்[9]. அந்தச் சமயத்தில் மற்றொரு துறவியான ஹாவேரி ஹொசமட சுவாமி, “இங்கு வந்த இந்திரா காந்தி பிரதமரானார்; அதேபோல ராஜீவ் காந்தியும் பிரதமரானார். தற்போது ராகுல் காந்தியும் வந்திருப்பதால் அவரும் நிச்சயம் பிரதமராவார்,” எனக் கூறி ஆசீர்வதித்திருக்கிறார்[10]. அப்போது, தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு குறுக்கிட்டு, தயவுசெய்து இப்படிச் சொல்ல வேண்டாம், அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்; இது அரசியல் பேசவேண்டிய இடமல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கியதா என்று தெரியவில்லை.
05-09-2022 அன்று பசவலிங்க சுவாமி தற்கொலை செய்து கொண்டது: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து சாதி மடமான இதன் மடாதிபதியாக பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர்[11]. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்[12]. இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வது– மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா?: 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். 05-09-2022 அன்று மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் லிங்காயத்துக்களின் ஓட்டு வங்கி கணிசமாக கர்நாடகத்தில் இருந்து வருவதால், அரசியல் கட்சிகள் எப்பொழுதும், அம்மடங்களை குறிவைத்து திட்டம் போட்டுக் கொன்டிருக்கும். சோனியா சாந்தி 2012ல் விஜயம் செய்தது போல, இப்பொழுது 2022ல் ராகுல் காந்தி விஜயம் செய்வதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து லிங்காயத்து மடங்களில் தற்கொலைகள் நடப்பது, இயற்கையாக இல்லை. பாலியல் புகாரில் சிக்குவது என்பது, சைவ மடங்களில் புதுமையாக இருக்கிறது எனலாம். அரசியல் தொடர்புகளினால் தான் இத்தகைய சர்ச்சைகள், குழப்பங்கள், முரண்பாடுகள், மனரீதியிலான பாதிப்புகள், துறவிகளையும் பாதிக்கின்றன, தாக்குகின்றன என்று கவனிக்கும் போது, துறவரம் என்பதெல்லாம், வெறும் சடங்குகளாக நடந்து வருகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.
© வேதபிரகாஷ்
26-10-2022.
[1] தினமலர், மடாதிபதி துாக்கிட்டு தற்கொலை மூன்று பக்க கடிதத்தில் பரபரப்பு, பதிவு செய்த நாள்: அக் 25,2022 00:02
[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3153752
[3] தமிழ்.நியூஸ்.18, கர்நாடகாவில் சாமியார் தூக்கிட்டு தற்கொலை.. பின்னணி என்ன?, LAST UPDATED : SEPTEMBER 05, 2022, 20:05 IST, Published by:Kannan V, First published: September 05, 2022, 20:05 IST
[4] https://tamil.news18.com/news/national/karnataka-lingayath-mutt-seer-basava-siddalinga-swami-dies-by-suicide-note-found-796801.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, ரொம்ப மிரட்டுறாங்க.. கடிதம் எழுதி தூக்கிட்டு மடாதிபதி தற்கொலை.. கர்நாடகாவில் தொடரும் அதிர்ச்சி, By Nantha Kumar R, Updated: Tuesday, October 25, 2022, 15:30 [IST]
[6] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-kanchugal-bande-mutt-pontiff-basavalinga-swamy-suicide-after-writes-death-note-482143.html
[7] மாலை முரசு, ராகுல்காந்தி சந்தித்த மடாதிபதி போக்சோவில் கைது: மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் !!, Ramadevi, Sep 2, 2022 – 07:22; Updated: Sep 2, 2022 – 07:24
[8] https://www.malaimurasu.com/posts/india/Unidentified-person-entered-Indian-border
[9] புதிய தலைமுறை, கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார்– 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, 01-09-2022 01.29 PM
[10] https://www.puthiyathalaimurai.com/newsview/146435/Karnataka-Sex-complaint-against-abbot-7-days-to-file-report
[11] தமிழ்.இந்து, கர்நாடகாவின் இளம் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை, செய்திப்பிரிவு, Published : 06 Sep 2022 07:59 AM, Last Updated : 06 Sep 2022 07:59 AM
[12] https://www.hindutamil.in/news/india/861893-basavalinga-swamy-a-young-abbot-of-karnataka-commits-suicide.html