Archive for the ‘அஹிம்சை’ Category

வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)

ஜூன் 25, 2017

வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைனபௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)

C.F.C. Volney - Christos from Krishna

ஐரோப்பிய இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனபௌத்த மதங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன்?: ஐரோப்பிய கிருத்துவ வல்லுனர்கள் கிருத்துவமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, ஒரு நிலையில், ஏசு. கிருஸ்து மற்றும் ஏசுகிருஸ்து என்ற நபரே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், சரித்திர ஆராய்ச்சி என்ற ரீதியில் பார்த்தால், எந்த ஆதாரமும் முன்னமே அத்தகைய சரித்திர நபர் இருந்ததை எடுத்துக் காட்டுவதாக இல்லை. அந்நிலையில், இலக்கிய ஆதாரங்களை வைத்து மெய்ப்பிக்கப் பார்த்தனர். அப்பொழுது, சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டடு என்றார். “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று எழுதினர். புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் தான், இவற்றின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து, குழப்பப் பார்த்தனர்.

Constantaine Joseph Beschi and Sivaprakasa Munivar

கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டது: குறிப்பிட்டபடி, ஐரோப்பியர்களுக்கு ஜைனம் மற்றும் பௌத்தம் குறித்த வேறுபாடுகள் அறியாமல் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். ஜைனம்-பௌத்த இரண்டுமே ஒன்று, என்று முதலில் ஜைன மதம் இருந்ததையே மறுத்தனர். பிறகு, கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டனர். கான்ஸ்டன்டியஸ் பெஸ்கி [Constantius Beschi] / வீரமாமுனிவர் தாமஸ்தான் இந்தியாவில் கிருத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை நம்பினார். சிவஞான முனிவர் போன்றோர், கிருத்துவத்தை நேரடியாக எதிர்த்து, “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” முதலிய நூல்களை எழுதி மறுத்தனர்[1]. தாமஸ் கட்டுக்கதையினை எப்படி பரப்பினர் என்றதை எனது புத்தகத்தில் காணலாம்[2]. கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றிப் பார்க்கும் போது, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர் மற்றும் மிஷனரிகள், அங்குள்ள மக்கள், வழிபோக்கர் முதலியோர்களிடம் கதைகளைக் கேட்டு, அவற்றை குறிப்புகளாக, அறிக்கைக்களாக, நினைவுகளாக எழுதி வைத்தனர். அக்கதைகளை வைத்து தான், இத்தகைய புதிய கட்டுக்கதையை உருவாக்கினர்.

Zigenbalg, Dubois, Pope, Colebrooke, Wilson, Beschi

ஜைனமதத்தைப் பற்றிய கத்தோலிக்கபுரோடெஸ்டென்ட் ஐரோப்பியர்களின் மாறுபட்ட, முரண்பட்ட கதைகள், கருதுகோள்கள்:

  1. பார்தலோமியஸ் ஜீஜன்பால்கு [Bartholomaus Ziegenbalg] எல்லா தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நம்பினார். தொல்காப்பியத்தை ஒரு ஜைன அரசன் தான் தொகுத்தார் என்றும் முடிவுக்கு வந்தார்.
  2. ஜீன் பிராங்கோயிஸ் பொன்ஸ் [Jean François Pons] என்ற பாதிரி தென்னிந்தியா / மேற்கு ஆசியா முழுவதும் ஜைனம் தான் பரவியிருந்தது என்றார்.
  3. கோர்டக்ஸ் [Coeurdoux (1691–1779)] பாதிரி, பௌத்தர்கள் தாம் விக்கிர வழிபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்றார்.
  4. மெக்கன்ஸி, தன்னுடைய உதவியாளரான தருமைய்யா என்ற ஜைனரை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் வைத்து சரித்திரமாக எழுதி வைத்தார். அதில் ஒரு கதை தான், மெக்காவில் ஜைனர்கள் இருந்தார்கள், ஆனால், மொஹம்மது [ஏழாம் நூற்றாண்டு] அவர்களை தண்டிக்க ஆரம்பித்தால், இந்தியாவிற்கு வந்து பரவினர், என்பது. வில்சன், அதை பாராட்டினார். பாமியன் முதலிய இடங்களில் இருந்த சிலைகள் எல்லாம் ஜைனர்களுடையது என்று நம்பினார். மதுரை சங்கத்தில், திருவள்ளுவர் தனது நூலை அரங்கேற்றியதால், ஜைனர்கள் முழுவதுமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றார்[3]. சம்பந்தர் மற்றும் ராமானுஜர் காரணம் போன்ற கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அகாலங்கரால் தோற்கடிக்கப் பட்ட பௌத்தர்களை எண்ணை செக்கில் வைத்து நசுக்கிக் கொள்ளாமல் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார்[4].
  5. பிரான்சிஸ் பச்சனன் [Francis Buchanan (1762–1829)] என்பாரும், தான் பிரயாணம் செய்தபோது, மக்களிடம் கேட்டறிந்த கதைகளை எல்லாம் எழுதி வைத்தார்[5].
  6. எல்லீஸும் மக்கன்ஸி போல, சரவணபெலகோலாவுக்குச் சென்று, அங்கிருக்கும் ஜைன குருவிடத்தில், பல கதைகளைக் கேட்டறிந்தார். ஜைனர்களின் தத்துவம், சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு முந்தையது, தமிழ் இலக்கியம் எல்லாம் ஜைனர்களால் உருவாக்கப்பட்டது, பௌத்தம் ஜைனத்தின் ஒரு சாகை என்றெல்லாம் நம்பினார். எல்லீஸ் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில், வள்ளுவர் ஒரு ஜைனர் என்று குறிப்பிடாமல் இருந்தாலும், 1807-1817 காலகட்டத்தில் அவர்தாம், வள்ளுவர் தங்க நாணயத்தை வெளியிட்டார் என்று ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டினார்[6].
  7. கால்டு வெல் 9 முதல் 13 நூற்றாண்டு வரையிருந்த ஜைன எழுத்தாளர்களைத்தான், தமிழ் இலக்கியத்தின் மிகவுயந்த சிறப்பான காலம் [the Augustan age of Tamil literature] என்று போற்றுகிறார்[7]. பிறகு வந்த போப்பும், ஜைனர்களின் கீழ் தமிழிலக்கியம் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு, வளர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.

Co. Tod - Annals and Antiquities of Rajasthan

கல்கத்தாமதராஸ் மோதல்கள், கட்டுக்கதைகள் தயாரிப்புகள், சரித்திரமாகும் நிலைகள்: ஹென்றி கோல்புரூக் [Henry T. Colebrooke] இந்த கருதுகொள்களை அறவே மறுக்கிறார். தென்னிந்தியாவில், பிராமணர்களின் வருகைக்கு முன்னர் ஜைனர்-பௌத்தர் இல்லை என்கிறார். எச். எச். வில்சன் [H.H. Wilson] பௌத்தர்கள் தென்னிந்தியாவுக்கு மூன்றாம் நூற்றாண்டிலும், ஜைனம் ஏழாம் நூற்றாண்டிலும் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல, வில்சன் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தின் தொன்மையினயும் மறுக்கிறார். தமிழிலக்கியங்கள் பெரும்பாலும், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயற்க்கப்படவை என்கிறார்[8]. கல்கத்தாவில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம், மதராஸில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம் முழுவதுமாக மாறுபட்டிருந்தது. ஜேம்ஸ் டோட் [James Tod] என்பவர் கிருஷ்ண வழிபாட்டின் தாக்கத்தில் தான் ஜைனமதத்தில் விக்கிரங்கள் தோன்றின என்றார். ஜேம்ஸ் டெலாமைனின் [James Delamaine] ஆராய்ச்சியின் படி, ஜைன புராணங்கள் எல்லாமே, வைஷ்ணவ / கிருஷ்ணர் வழிபாட்டிலிருந்து தான் தோன்றின என்றார்[9].

© வேதபிரகாஷ்

25-06-2017

Madras school of orientalism

[1] ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது! 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார்! 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம்! உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார். இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது!

[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, 1989.

[3] Mackenzie’s story of the presentation of Tirukkural to the Tamil Cankam depicts its author, Tiruvalluvar, as a Saiva. Upon the occasion when the superiority of this literary work was demonstrated, the whole of the Tamil Cankam of Madurai, composed of Jains, was forced to commit suicide (Cotton et al. 1992, 1.14; Wilson 1828, 180ff, VII and XVIII; Taylor 1857–62, III, 163).

[4] Mackenzie’s account of the struggle at Kanchipuram between the Buddhists and the Jains, with Akalanka at their head, tells us that the Buddhists were defeated. The Jains, in keeping with the spirit of ahimsa, refrained from grinding up the Buddhists in an oil press and instead banished them to Sri Lanka (Mahalingam 1972–6, 14.3 and 68; cf. Taylor 1857–62, 3, 368, 423–5, 436–7).

[5]  Buchanan, Francis. 1999 [1807]. A Journey from Madras through the Countries of Mysore, Canara, and Malabar, 3 vols, New Delhi: Asian Educational Services.

[6] Mahadevan, Iravatham. 1995. ‘A Unique Gold Coin with Tiruvalluvar’s Portrait’, Studies in South Indian Coins, 5, pp. 139–45.

[7] Caldwell, R., A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages, 3rd edn, revised by J.L. Wyatt and T. Ramakrishna Pillai (eds), New Delhi: Oriental Books Reprint Corporation. 1974 [1913]. pp. 83-84.

[8] Wilson has nothing to say about Jain contributions to Tamil literature, in part because he rejects the Madras School of Orientalism’s ideas about the antiquity, originality, and quality of this literature, maintaining that the earliest Tamil works are simply translations of Sanskrit texts (1828, xxxii–xxxiv).

[9] Major James Delamaine, Of the Sra’wacs or Jains, published in 1827, 426–7, 433.

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

ஏப்ரல் 4, 2017

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்:  உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

Congress - calf and cow symbol

பசுவின் முக்கியத்துவம்: பாரதத்தில் பசுவைப் போற்றும் பழக்கம் பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. பசுவதை பெரும்பாவம் என்று கல்வெட்டுகளில் அதிகமாகவே குறிப்பிடப் பட்டுள்ளன. “இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும், ” போன்றவை மிகப்பிரபலம். பிராமணர்கள் தாம் தாவர உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் எல்லாவகையான உணவுகளையும் உண்டு வந்தனர். பிறகு ஜைனர் மற்றும் பௌத்தர்கள் புலால் மறுத்தல், புலால் உண்ணாமை, ஜீவகாருண்யம் முதலியவை போதித்தாலும், அவர்களும் அவற்றைப் பின்பற்றவில்லை. ஏனெனில், சத்திரிய ஜைனர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தரே பன்றி இறைச்சி தின்று வயிற்றுப் போக்கு, ரத்தம் வெளியேறியதால் இறந்தார். மேலும், பௌத்தர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கின்றனர். சங்க இலக்கியங்களிலிருந்து, திருக்குறல் வரையிலுள்ளவற்றை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இக்காலத்தில் இதைப் பற்றி பிரச்சார ரீதியில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. ஜீவகாருண்யம் பேசுபவன், எப்படி புலால் உண்ணுவான் என்று கூட யோசிக்காமல், கண்டவன் எல்லாம் சித்தாந்தம் பேச ஆரம்பித்து விட்டான்.

Get sinned if one kills cow

முகமதியஐரோப்பிய காலங்களில் பசுவதை: முகமதியர் இந்தியாவில் நுழைந்து, கொள்ளையடுத்து, பிறகு ஆட்சி செய்த காலங்களில், இவ்வுணர்வு அதிகமாகியது. ஏனெனில், அவர்கள் மாமிசம் உண்பவர்கள் மட்டுமல்லாது, பசுமாமிசம் உண்பவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியர்கள் அப்பழக்கத்தைக் கொண்டிருந்ததால், அவ்வாறே சித்தரிக்கப் பட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் [1839-1898] புலால் உணவுக்காக உயிர் வதை செய்வதை மிகக் கடுமையாகக்    கண்டித்தவர். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் பசுக் கொலை செய்து ஊன் தின்னும் கொடுமையை வெறுத்துத் தாக்கி 100 பாடல்கள் கொண்ட ‘ஆங்கிலேயர் அந்தாதி’ என்னும் சமுதாய சிந்தனை நூலை இயற்றியவர். பாரதத்தைப் பொறுத்த வரையில், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருந்தாலும், பசு மாமிசம் உண்பதில்லை. அதே போல, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்ற பண்டிகை-விரத காலங்களில் மாமிசம் உண்பதில்லை. அத்தகைய ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், மக்களிடையே எந்த பிரச்சினையோ, விவாதமோ வந்ததில்லை. ஆகவே, இத்தகைய உணவு உண்ணும் பழக்க-வழக்கங்களில், மாமிசம் அறவே உண்ணாக்கூடாது என்று சொல்லவே, அமூல் படுத்தவோ முடியாது. பசுவதை மூலம் கலவரங்களை உண்டாக்கலாம் என்றறிந்து, பரிசோதனை செய்தவன் வெள்ளைக் காரன். அச்சதியில் ஒத்துழைத்தவர்கள் முகமதியர். இக்கலை இப்பொழுதும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.

Anti-Gandhi pro-beef campaign

மாட்டிறைச்சியும், பசு மாமிசமும்: மாட்டிறைச்சி எனும்போது, எருது, எறுமை முதலியவற்றின் மாமிசங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள், கிருத்துவர்கள், மேனாட்டவர் போன்றோர் தாம் பசுமாமிசமும் உண்கின்றனர். இந்துக்களில் 90% பசுமாமிசம் உண்பதில்லை. எனவே, பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும். மாட்டிறைச்சியை உண்பதை யாரும் தடுக்க முடியாது. இப்பொழுது கூட சட்டம், தண்டனை முதலியவை “பசுவதை” பற்றி தான் உள்ளதே தவிர மற்ற மாட்டிறைச்சி பற்றியில்லை. ஆனால், ஊடகங்கள், இதனை ஊதி பெரிதாக்கி, செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்து வருகின்றன. ஒவைசி போன்ற தீவிரவாத-அடிப்படைவாத முஸ்லிம்களும் திமிராக, நான் அப்படித்தான் பேசுவேன், முடிந்தால் வழக்குத் தொடுத்துக் கொள் என்று அகங்காகரமாக பேசி வருகின்றனர். இதிலிருந்தே, ஊடகங்களும், மற்றவர்களும், இதை வைத்து கலவரம் உண்டாக்க எத்தனித்திருப்பது தெரிகிறது.     முன்னரே குறிப்பிட்டப் படி, “பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே”, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்.

Anti-Gandhi pro-beef campaign-gandhi against beef

பிஜேபிக்காரர்கள் குழப்புகின்றனரா, குழம்பியுள்ளனரா?: கேரள மாநிலம் மல்லப்புரம் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 03-04-2017 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். குறிப்பாக, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ‘பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்’ எனக் கூறியிருந்தார்[1]. இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க-வின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களைக் கிளம்பியுள்ளன[2]. பிற மாநிலங்களில் உ.பி, ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா மாட்டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. கேரள மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததுமே சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை தொடங்கியது[4]. பிற பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடவடிக்கை இதனை அடுத்து அதிகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என கூறியுள்ளார்.

Gandhi againat cow slaughter

பசுவதை மற்றும் மாட்டிறைச்சி சித்தந்தங்களை குழப்பும் ஊடகங்கள், அரசியல்வாதிகள்: “இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்தால் உயர் தரமான மாட்டிறைச்சிகள் கிடைக்க செய்வேன், இறைச்சி கூடங்களை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன், தடையின்றி மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன்,” என அவர் தெரிவித்திருந்தார்[5]. பசுவதை மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிரான சித்தாந்தங்களை உடைய பா.ஜ.க.வில் இருக்கும் அவர் இத்தகைய கருத்து கூறியிருந்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது[6]. இந்நிலையில், இன்று தன்னுடைய கருத்தில் இருந்து பல்டியடித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஸ்ரீபிரகாஷ், “நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பசுவதைக்கு முழுவதும் எதிரானவனே, உத்தரப்பிரதேசத்தில் செய்தது போல சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கடைகளை கேரளாவிலும் மூடுவோம் என சொல்லி, மக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்வோம் என கூறியிருந்தேன்,” என தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி குறித்து பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் இருவேறு கருத்துக்கள் தெரிவித்தது குறித்து அம்மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜேந்திரனிடம் கேள்வியெழுப்பியபோது, அவருடைய பேட்டிகளை நான் பார்க்கவில்லை என பதிலளித்துள்ளார்.

Gandhi againat cow slaughter-MODI

பசுவதை தண்டனைப் பற்றிய குழப்பங்கள், சட்டங்கள்: குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. எனினும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் அங்கு நீடித்து வந்ததை அடுத்து, தண்டனையை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது[7]. இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர் களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய் தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும். தவிர அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா கூறும்போது, ‘‘பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் செய்யும்படி சாதுக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர் களது கோரிக்கைக்கு இணங்க நாட்டிலேயே மிக கடுமையான சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், வாக்காளர்களை ஈர்க்கவும், அரசியல் ஆதாயம் பெறவும் மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன[8].

Cow slaughter-Act-implementation-violation

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 2015 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

© வேதபிரகாஷ்

04-04-2017

Cow slaughter-Act-implementation-violation-in states

[1] விகடன், அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச் செய்வேன்’ : பா.. வேட்பாளரின் வாக்குறுதி!, Posted Date : 15:26 (02/04/2017); Last updated : 10:00 (03/04/2017

[2] http://www.vikatan.com/news/india/85204-bjp-candidate-campaign-against-beef-ban.html

[3] தினத்தந்தி, எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி, ஏப்ரல் 02, 05:00 PM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/02170000/Give-me-your-vote-I-will-give-you-good-quality-beef.vpf

[5] மாலைமலர், ’பசுவதைக்கு நான் எதிரானவனேதரமான மாட்டுக்கறி வழங்கப்படும் எனக் கூறிய கேரள பா.. வேட்பாளர் பல்டி , பதிவு: ஏப்ரல் 03, 2017 22:57

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/03225742/1077888/Am-against-cow-slaughter-says-BJP-candidate.vpf

[7] தி.இந்து, பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம், Published: March 31, 2017 14:45 ISTUpdated: April 1, 2017 09:12 IST

[8]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9609759.ece

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

ஒக்ரோபர் 28, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே  சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரை போடும் போலி வேடங்கள்: புளூ கிராஸ் சொசைடி போன்ற நிறுவனங்களும் இவ்விவகாரங்களில் இரட்டைவேடம் போட்டு வருகின்றன. ஏதோ மிருகங்கள் கஷ்டப்படுவதைப் பற்றி, இவர்கள் கஷ்டப்படுவதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள், மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதேபோலத்தான் மற்ற ஜீவகாருண்ய சங்கங்கள், அஹிம்சை போதிக்கும் இயக்கங்கள் முதலியன இத்தகைய ஜீகாருண்யம் மற்றும் இம்சைகளை ஆதரிப்பது போல மௌனம் சாதித்து வருகின்றன. “மாமிசம் இல்லாமல் ஒரு நாள்”, என்று போலித்தனமாக, சாது வாஸ்வானி என்ற இயக்கம் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, வருடத்தில் ஒரு நாள், மிருகங்களைக் கொல்லாமல், மற்ற 364 நாட்களிலும் கொன்று சந்தோஷமாக இருக்கலாம் போலிருக்கிறது. பௌத்தர்கள் அஹிம்சை போதித்தாலும், மாமிசம் உண்டுகொண்டுதான் வாழ்கிறார்கள்.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

பக்ரீத் மிருகவதை கண்டுக்கொள்ளப்படாது: நன்றாக எல்லாவித மாமிசங்களையும் உண்டு வாழும் முகமதியர்களும் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுவதும், வல்லாளார் பெயரில் கூட்டங்களில் கலந்து கொள்வதும் வினோதமாகத்தான் இருந்து வருகின்றன. இவ்வாறுதான் அஹிம்சை மற்றும் மிருகவதை எதிர்ப்பு போன்றவை உள்ளன. இந்த புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரையுள்ள கோஷ்டிகள் மற்ற மிருகவதைகள் நடக்கும் போது கண்டுகொள்ளமாட்டார்கள். பக்ரீத் போது, ஒட்டகம், பசு, ஆடு-மாடு என்று வெளிப்படையாகவே அறுத்து பலியிட்டு, தோலை உரித்து, ரத்தம் ஓடவைத்து பலி கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவ்வப்போது, சில இரக்கமுள்ளவர்கள், நடிகைகள் முதலியோர், ஏதோ பறவைகள் எல்லாம் துன்பப்படுகின்றன, என்று அவற்றை கூண்டுகளிலிருந்து வெளியே சுதந்திரமாக பறக்கவிட்டோம் என்றும் பீழ்த்திக் கொள்வார்கள். ஆனால், இதைப்பற்றி தெரியாதது மாதிரி இருப்பார்கள்.

Beef sale in J and K state - Court ti decide DM

Beef sale in J and K state – Court ti decide DM

பீப் ஈட்டிங் – பசுமாமிசம் உண்ணுதல் பிரச்சினை: சமீப காலமாக மாட்டிறைச்சி விவகாரம் பலவிதங்களில் வெளிப்பட்டு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஊடங்களின் உசுப்பிவிடும் வேலைகள் தான் இதில் அதிகமாக இருக்கின்றன. இந்து சேனா அமைப்பினர் இது தொடர்பாக மாட்டிறைச்சிக்கு தடை பெறுவதில் மும்முரமாக உள்ளனர். இதுவரை, இந்த சேனா எங்கிருந்தது என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. உ. பி., மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக எழுந்த வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  பிறகு, கொல்லப்பட்டவரின் மகன் “லவ்-ஜிஹாதில்” ஈடுபட்டான், அதாவது, ஒரு இந்து பெண்ணை காதல் புரிந்ததால் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் காஷ்மீரில் மாட்டிறைச்சி பார்ட்டி நடத்திய சுயேச்சை எம்.எல்.ஏ. ரசீத் என்பவர் சட்டசபையில் தாக்கப்பட்டார். அவர் டில்லி வந்த போது கறுப்பு மை வீசப்பட்டது[1]. சாப்பிடுகிறேன் என்றால் சாப்பிட்டு விட்டு போகலாம், பிரச்சினையே இல்லை, ஆனால், அதனை, விளம்பரப்படுத்தி, ஏன் பிரச்சினையாக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதெல்லாம், தேசிய அளவில் அதிகமாக பேசப்பட்டன. ஊடகங்கள் இவைத்தான் முக்கியமான செய்திகள் போன்று “மாட்டிறைச்சி அரசியல்” என்று தலைப்பிட்டு தினம்-தினம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா?: மாடுகள் வெட்டப்படுவதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என யோகாகுரு பாபா ராம்தேவ் 27-10-2015 அன்று கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவர் ஏன் சொல்லவேண்டும். மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா என்பதனை யார் தீர்மானிப்பது? எதற்காக மாடுகளை வைத்திருக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதனை யார், எதற்காக தீர்மானிக்க வேண்டும் என்று யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்போது கேரள அரசுக்கு மாட்டிறைச்சி விவகாரம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் ஜந்தர் மந்தரில் கேரள பவன் உள்ளது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது இதனை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒரு குரல் போலீஸ் ஸ்டேஷன் போனில் ஒலித்தது[2]. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்[3]. இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் ஏதும் வராமல் இருக்க மாட்டிறைச்சியை நிறுத்தி கொள்ளுங்கள் என கேட்டு கொண்டனர். இப்புகாரை அடுத்து, அங்கு டெல்லி போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்[4]. ஆனால் அங்கு பரிமாறப்பட்டது எருமை மாட்டு இறைச்சி என்று பின்னர் தெரியவந்தது[5]. டெல்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரளா பவன் உணவகம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

ban-on-beef-in-maharashtra-cartoon

ban-on-beef-in-maharashtra-cartoon

மலையாளத்தில் கிறுக்கியதும், ஆங்கிலத்தில் எழுதியதும்: கேரள தலைமைச் செயலாளர் ஜி.ஜி. தாமஸ் டெல்லியில் கூறும்போது, “கேரளா பவன் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமையின் இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் பீஃப் (மாட்டிறைச்சி) என்று கூறப்பட்டுள்ளது” என்றார். “கேரளா பவனில் உள்ளுரை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். டெல்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். எனினும், நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார் ஜி.ஜி. தாமஸ்[6]. ஆனால், இல்லை, நாங்கள் விற்போம் என்று அறிவித்து விட்டது[7]. என்.டி-டிவி தனது செய்தியில், ஒரு மாதிரியாக சொல்வதிலிருந்தே இதில் விவகாரம் இருக்கிறது என்று தெரிகிறது[8]. “Three men who visited the Kerala House canteen yesterday noticed “beef fry” on a handwritten menu on the whiteboard. It was the only dish scribbled in Malayalam, and they wasted no time in calling the police.” நேற்று மூன்று ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள். மெனுவில் “பீப் பிரை” என்று கையினால் எழுதிவைத்ததைப் பார்த்து, நேரத்தை விரயமாக்காமல் உடனடியாக போலீசுக்கு புகார் கொடுத்தனர். மலையாளத்தில் அது கிறுக்கலாக இருந்தது, என்று நக்கலாக விளக்கும் போதே தெரிகிறது. போர்டில் உள்ளது அழகாகத்தான் உள்ளது, கிறுக்கல் ஒன்றும் இல்லை. மீன் கறி, மீன் வருவல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுபோது, அடுத்ததை ஏன் மலையாளத்தில் இருக்க வேண்டும்? அதுதானே “பசு மாமிச வருவல்” என்று அறியப்பட்டது! ஆக, இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

28-10-2015

[1] http://www.ndtv.com/india-news/j-k-lawmaker-engineer-rashid-attacked-with-black-ink-in-delhi-1233954

[2] தினமலர், கேரளா பவனில் மாட்டிறைச்சி மெனு ; இந்து சேனா எதிர்ப்பால் பதட்டம் ,பதிவு செய்த நாள் அக் 27,2015 12:56; மஅற்றம் செய்ய்த நாள். அக் 27,2015 15:56;

[3] http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7809438.ece

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1373708

[5] http://www.maalaimalar.com/2015/10/27162437/Oomen-chandy-Mamata-Kejriwal-c.html

[6] தி.இந்து, கேரளா பவன்மாட்டிறைச்சிவிவகாரம்: டெல்லி போலீஸ்சோதனையும் 10 முக்கிய தகவல்களும், Published: October 27, 2015 13:21 ISTUpdated: October 27, 2015 19:39 IST.

[7] http://www.deccanherald.com/content/508682/beef-back-kerala-house-menu.html

[8] http://www.ndtv.com/india-news/cops-rush-to-kerala-house-after-call-alleging-beef-on-menu-1236740