Archive for the ‘வண்டலூர்’ Category

மோடியின் சென்னை வருகை – பேச்சும், சவாலும், அரசியலும் – திராவிட சித்தாந்தத்தை மாற்றுமா, தமிழக மக்கள் மாறுவார்களா, மாற்றி ஓட்டுப் போடுவார்களா? (2)

பிப்ரவரி 9, 2014

மோடியின் சென்னை வருகை – பேச்சும், சவாலும், அரசியலும் – திராவிட சித்தாந்தத்தை மாற்றுமா, தமிழக மக்கள் மாறுவார்களா, மாற்றி ஓட்டுப் போடுவார்களா? (2)

 

மோடியின் உத்வேகமான பேச்சு

மோடியின் உத்வேகமான, உற்சாகமான, ஊக்குவிக்கும்  பேச்சு

அண்டை  நாடுகளின்  விஷமத்தை  தடுக்காதது: மத்திய அரசு பலவீனமாக இருப்பதால்தான், இந்தியாவின் கோரிக்கைகளுக்கு அண்டை நாடுகள் செவிசாய்ப்பதில்லை[1]. இந்தியா மெத்தனமாக இருப்பதன் காரணமாக இலங்கை-பாகிஸ்தான்-வங்கதேசம்-நேபாளம்-மியான்மர் போன்ற நாடுகளில் இந்திய மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சீனாவின் ஊடுருவலைக்கூடக் கண்டிக்காமல் மெத்தனமாக இருக்கிறது. இதனால்தான் சுற்றியுள்ள சிறிய நாடுகள் எல்லாம் இந்தியாவை சதாய்த்து வருகின்றன. மத்தியில் உள்ள அரசு வலுவான அரசாக இருந்தால், அண்டை நாடுகளுடன் வலுவான உறவைப் பேணமுடியும்.

 

சென்னையில் பிஜேபி கூட்டம்

சென்னையில் பிஜேபி கூட்டம்

ராணுவ  அமைச்சர்  ஒருமாதிரியாக  பேசுவது, ராணுவ  அதிகாரிகள்  வேறுவிதமாக  பேசுவது: பாகிஸ்தான் எல்லை-ஊடுருவல் பற்றி ராணுவ அமைச்சர் ஒரு மாதிரியாக பேசுவது, ராணுவ அதிகாரிகள் வேறுவிதமாக பேசுவது என்று பார்க்கும் போது கேவலமாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இது மாதிரி ஒருதடவைக் கூட நடந்ததில்லை. ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை-ஊடுருவல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றால், அமைச்சர் பாகிஸ்தான் ராணுவத்தினர் உடையில் தீவிரவாதிகள் எல்லை-ஊடுருவல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று பாராளுமன்றத்திலேயே பேசினார். பிஜேபி ஆட்சி வந்தால் இப்பிரச்சினை தீரும் என்றார்.

 

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

தவறாக  பயன்படுத்தப்  படும்  சிபிஐ: அரசியல் காரணங்களுக்காக – வாக்கெடுப்பு நடத்துவதற்காகவும், ஆளும் அரசைக் காப்பாற்றுவதற்காகவும் மட்டுமே சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. சிபிஐ சரியான வழியில் செயல்பட்டால்தான் தவறிழைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும். [உபி, தமிழகம் முதலிய மாநிலங்களில் சிபிஐயை செயல்படுத்துவதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். சமீபத்தில் இர்ஸத் ஜஹான் வழக்கில் சிபிஐ, அமீத் ஷா பெயரை சேர்த்திருந்தால் யுபிஏ அரசு மகிழ்ந்திருக்கும், ஆனால், அவர்க்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் விடப்பட்டது என்றார். உடனே கூண்டுக்கிளி பேதலித்துவிட்டது என்று சமஜ்வாடி கட்சி தலைவர் கமென்ட் அடித்தார்].

 

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

வருமானவரித்  துறையை  தங்கள்  கைக்குள்  வைத்துக்  கொண்டு  எதிர்க்கட்சியினரை  மிரட்டி  வருகிறது: இதே போன்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வருமான வரித்துறையை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறது. குஜராத்துக்கு முதலீடு செய்ய வரும் தொழிலதிபர்களை மிரட்டி முதலீடு செய்யாமல் தடுக்கும் பணியில் வருமான வரித்துறை ஈடுபடுகிறது. மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், எஸ்.டி., எஸ்.சி. ஆணையம் என மக்களுக்கு நன்மை செய்யும் அமைப்புகளையும் செயல்பட விடாமல் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.  குறிப்பாக, ஏழைகளுக்கு இந்த அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

 

வெங்கைய நாயுடு, பச்சமுத்து முதலியோர்

வெங்கைய நாயுடு, பச்சமுத்து முதலியோர்

நீதிமன்றத்தை  அவமதிக்கிறது: தற்போதுள்ள மத்திய அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது. இந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் நீதிமன்றத்தின் மீது, குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். உச்சநீதி மன்ற தீர்ப்புகளை அமூல் படுத்தாமல் வைத்திருக்கின்றது. [2ஜி, காமன்வெல்த், கோல்கேட் போன்ற பல வழக்குகளில் உச்சநீதி மன்றம் அரசிற்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க ஆணையிடுள்ளது, ஆனால் காலந்தாழ்த்தி வருகிறது]

 

இக்கூட்டம் ஓட்டாளர்களாக மாறினால் ஆட்சி மாறும்

இக்கூட்டம் ஓட்டாளர்களாக மாறினால் ஆட்சி மாறும்

அதிகமான  தானியங்களை  ஏழைகளுக்குக்  கொடுக்காமல்   விற்றது: நாட்டில் உள்ள உணவு தானியக் கிடங்குகளில் ஏராளமான உணவுப் பொருள்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாகின்றன. இப்படி வீணாகும் பொருள்களை ஏழை மக்களுக்குக் கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட மத்திய அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் உணவுப் பொருள்கள் வீணாகிவிட்டதாகக்கூறி. ஒரு கிலோ அரிசி 80 காசு என மதுபான ஆலைகளுக்கு விற்று வருகிறது. இப்படி ஏழைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது. 

 

நதிகள்  இணைப்புத்  திட்டம்: நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்கி ஒன்றாக இணைக்க வேண்டும் என்று வாஜபாய் பிரதமராக இருந்தபோது திட்டம் தீட்டினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. கங்கை-காவிரி திட்டம் முடக்கப்பட்டது.  இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் ஏன் செயல்படுத்தவில்லை என்று ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்[2]. நதிகளை இணைக்க குழு அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 15 மாதங்களாகியும் குழு அமைக்கப்படவில்லை.

 

தமிழ்நாடுஎன்னஇந்தியாவில்இல்லையா?: குழாய் வழியாக நீரைக் கொண்டு வர பாதை போடவேண்டும். ரெயில் பாதை குறுக்கே வருகிறது. அதன் கீழாக பைப்புகளை எடுத்துச் செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி கொடுக்க வேண்டும், ஆனால், அனுமதி காலம் தாழ்த்தப்படுகிறது அல்லது மறைமுகமாக மறுக்கப்படுகிறது. ரெயில்வே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், தமிழக மக்களும் இந்தியர்கள் தாமே? தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது? பிறகு எதற்கு இந்த பாரபட்சம்? கூட்டாட்சியினை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார். [வைகோ இருந்தால் ரசித்திருப்பார், பாவம், டிவியிலாவது பார்த்துக் கேட்டிருப்பார்!]

 

திட்ட  கமிஷனை  முடக்கியது: நேரு அமைத்த திட்டக் கமிஷனுக்கு மரியாதை இல்லை.  அதைப்பற்றி இப்போது யாரும் விவாதிப்பதும் இல்லை. திட்டக் கமிஷன் தலைவராக பிரதமர் இருக்கிறார். ஆனால், திட்டக் கமிஷனின் பரிந்துரைகளை, மத்திய அமைச்சரவைக் குழு நிராகரிக்கிறது. திட்டக் கமிஷனுக்குப் போட்டியாக தேசிய ஆலோனைக் குழு செயல்படுகிறது. தேசிய ஆலோசனைக் குழுவை யாரோ ஒருவர் (அவர் சோனியா காந்தியை மறைமுகமாகக் குறிப்பிட்டார்) திரைமறைவில் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

 

ஆளுநர்  மாளிகைகளா  அல்லது  காங்கிரஸ்  கட்சி  அலுவலகங்களா? ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாநிலத்தின் உறவை பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருடையது. மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற மாநில சட்டமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும். ஆளுநர் அந்த சட்டத்தில் கையெழுத்துப் போட மாட்டார். இப்படிச் செய்தால் மாநில அரசுகள் எப்படி மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை. ஆளுநர் மாளிகைகளை எல்லாம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களாக மாறிவிட்டன என்று நரேந்திரமோடி குற்றஞ்சாட்டினார்.

 

ராணுவத்தில்  மதரீதியில்  எண்ணிக்கை  எடுக்கச்  சொன்னது: சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அந்த நிலை இல்லை. அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலையே நிலவுகிறது[3]. ராணுவத்தில் இதுவரை எந்த மதவாத சிந்தனையும் இல்ல. ஆனால், மதவாத ரீதியாக கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விஷத்தின் விதைகளை விதைக்க முயன்றுள்ளது [இது சோனியா உபயோகப்படுத்திய வார்த்தைகள். மறுபடியும் அவருக்கு எதிராக மோடி பயன்படுத்தியுள்ளார்[4]]. இதற்கு மறுத்துவிட்ட ராணுவம், ‘நாங்கள் அனைவரும் பாரத தாயின் புதல்வர்கள், இதை அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறிவிட்டது. இப்படிப்பட்ட அரசு மக்களை எப்படிக் காப்பாற்றும்?

 

குஜராத்  மக்களை  முட்டாள்கள்  என்று  ராகுல்  சொன்னதை  கிண்டல்  அளித்தது: அதே நாளில், “பர்தோலி யாத்திரை” என்று சர்தார் படேலைக் காப்பியடிக்கும் விதத்தில், ராகுல் குஜராத்திற்குச் சென்று குஜராத்திகளை முட்டாள்கள் என்றவிதத்தில் பேசியுள்ளதைச் சுட்டிக் காட்டி, சென்னையில், மோடி “அதனால்தான் குஜராத் மக்கள் மூன்றுமுறை காங்கிரசை நிராகரித்துள்ளார்கள். இனி இந்திய மக்களும் காங்கிரசை நிராகரிப்பார்கள்”, என்று பேசினார்[5].

 

தேர்தலில்  ஓட்டாக  மாற  வேண்டும்: மோடி கூட்டத்தில் பிஜேபி ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் கலந்து கொண்டிருப்பது தெரிகின்றது. இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் குறிப்பாக மோடியின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று வந்தார்கள். ஆங்கிலத்தில் பேசியதை அவர்கள் ரசிக்கவும் செய்தார்கள். ஹிந்தி தெரிந்தவர்கள் அதிகமாகவே ரசித்தனர். நண்பர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்னார்கள். திக, திமுக மற்ற எதிர் கட்சியினர், ஏன் முஸ்லிம்கள் கூட கலந்து கொண்டுள்ளனர்[6]. இருப்பினும் இந்த ஆர்வம், ஆச்சரியம் மற்றும் தமாஷா போன்ற விசயங்கள் ஓட்டுகளக மாறி பிஜேபிக்கு அரசியல் ரீதியாக ஆதாயம் வருமா என்பது சில மாதங்களில் தெரிந்து விடும். திராவிடத் தலைவர்களையும் மீறி தமிழகத்து ஓட்டாளிகள் மாறி ஓட்டளித்தால், நிச்சயமாக மாற்று அரசாக பிஜேபி கூட்டணி அமையும் என்று நம்பலாம்.

 

வேதபிரகாஷ்

© 09-02-2014


[1] தினகரன், காங்கிரஸ்கட்சிமீதுநரேந்திரமோடிதாக்கு-மத்தியஅரசுநினைத்திருந்தால்மீனவர்பிரச்சனையில்சுமூகமுடிவுஎடுத்திருக்கமுடியும்…, பிப்ரவரி 9, 2014.

 

[2] மாலைமலர், மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பட்டியலிட்டார் மோடி, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, பெப்ரவரி 08, 9:29 PM IST

[4] Hitting back at Congress President Sonia Gandhi for her “zeher ki kheti” remark, he said the UPA government was sowing the “seeds of communal poison” in Army by ordering a head-count based on religion.

http://indiatoday.intoday.in/story/narendra-modi-chennai-rally-attacks-chidambaram-manmohan-rahul-2014-polls/1/342561.html

[5] Hitting out at Rahul for attacking him in Gujarat on Saturday, Modi said the Congress vice president has said “useless” things against him. “He (Rahul) has used a word from Hindi which is used to abuse. He has described the people of Gujarat as “Ulloo” (fools). He insulted all the people of Gujarat. The people whom you describe as fools have rejected you for three terms.

http://indiatoday.intoday.in/story/narendra-modi-chennai-rally-attacks-chidambaram-manmohan-rahul-2014-polls/1/342561.html

மோடியின் சென்னை வருகை – பேச்சும், சவாலும், அரசியலும் – திராவிட சித்தாந்தத்தை மாற்றுமா, தமிழக மக்கள் மாறுவார்களா, மாற்றி ஓட்டுப் போடுவார்களா? (1)

பிப்ரவரி 9, 2014

மோடியின் சென்னை வருகை – பேச்சும், சவாலும், அரசியலும் – திராவிட சித்தாந்தத்தை மாற்றுமா, தமிழக மக்கள் மாறுவார்களா, மாற்றி ஓட்டுப் போடுவார்களா? (1)

 

மோடியின் சென்னையில்  பேசும்போது 2014

மோடியின் சென்னையில் பேசும்போது 2014

சனிக்கிழமை  மாலை  மோடியின்  தாக்கம்  சென்னையில்  உணரப்பட்டது: மோடியின் வருகை சென்னையில் நிச்சயமாக உணரப்பட்டது. விருப்பம் இல்லாதவர்களுக்குக் கூட, மனதில் ஏதோ அவரைப் பற்றி, கூட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. சன்டிவியே ஒலி-ஒளிபரப்பு செய்தலால் வழக்கமான சீரியல்களை (நாதஸ்வரம், மண்வாசனை, தெய்வமகள், வம்சம் முதலியன) விடுத்து, பெண்கள் கூட பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விசயமாகிறது. குறிப்பாக இளைஞர்கள் கூட, ஏதோ “மாட்சின் ஸ்கோர்” கேட்பது போல, செனலை மாற்றிப் பார்த்திருக்கின்றனர். இதெல்லாம் மோடியின் பால் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிகிறது. இருப்பினும் தமிழகம் திராவிட சித்தாந்தத்திலிருந்து விடுபட்டு, திராவிட பிடிவாத மோடிவிரோதத்தைக் கைவிட்டு, பிஜேபிக்கு ஓட்டு விழச் செய்யுமா, அல்லது பிரிக்கச் செய்யுமா என்பது கேள்விக் குறியாகிறது.

 

மோடியின் சென்னை விஜயம் பேச்சு அரசியல் 2014

மோடியின் சென்னை விஜயம் பேச்சு அரசியல் 2014

பிரமாண்ட மேடை,   ஏற்பாடு[1]:  தமிழகத்தில், திருச்சிக்கு பிறகு, மோடி பங்கேற்கும், இரண்டாவது பொதுக்கூட்டம் என்பதால், சென்னையில் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. பிஜேபியின் தொண்டர்கள் செய்த ஏற்பாடுகள் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. சென்னை, விமான நிலையத்தில் இருந்து, வண்டலூர் வி.ஜி.பி., மைதானம் வரை, 30 கி.மீ., தூரத்திற்கு, சாலையின் இரு புறங்களிலும், மோடியை வரவேற்று, பா.ஜ., கொடி, தோரணம் கட்டப்பட்டு வரவேற்பு தட்டிகள் வைக்கப்பட்டன. பா.ஜ., உடன் கூட்டணி வைக்க, உடன்பாடு எட்டியுள்ள,

  1. ம.தி.மு.க.,
  2. புதிய நீதிக்கட்சி,
  3. இந்திய ஜனநாயக கட்சி,
  4. இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம்,
  5. மக்கள் தமிழகம் கட்சிகள் சார்பிலும்,

மோடியை வரவேற்று, கொடி மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டன[2]. வண்டலூர் வி.ஜி.பி. திடலில் மோடி பேசுவதற்காக நாடாளுமன்ற கட்டட வடிவில் 160 அடி நீளம் 40 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. மேடை நடுவே 30 அடி அகலம் 12 அடி உயரம் கொண்ட பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டது. மைதானம் முழுவதும் 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டன். பொதுக்கூட்ட மைதான முகப்பு செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டது. தலைவர்கள் படங்களுடன் அலங்கார நுழைவாயிலும் உள்ளது. திடலில் குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டது. மருத்துவக் குழுவினருடன் 10 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டது. தொண்டர்கள் அமர சுமார் 5 லட்சம் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டன. 40 ஆயிரம் வாகனங்களை நிறுத்த 13 இடங்களில் வசதி செய்யப்பட்டது. சென்னையில் இருந்து வண்டலூர் வரை வழிநெடுக கொடி தோரணம், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பல கோணங்களில் மோடி படங்கள் இடம் பெற்றன.

 

நரேந்திர  மோடி  கார்  அணிவகுப்பில்  புகுந்த  ஆசாமி: போலீசார்  மடக்கி  பிடித்து  விசாரணை: வண்டலூர் பொதுக்கூட்டத்துக்கு நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் சென்றார். அப்போது ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தாம்பரம் ரெயில் நிலையம் அருகே போக்குவரத்து நிறுத்தப்பட்ட நேரத்தில் மர்ம ஆசாமி ஹெல்மெட் அணிந்து கொண்டு அதிவேகமாக மோடி அணிவகுப்பு வந்த சாலையின் எதிரில் சென்றான்[3]. பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் விரட்டியபோது பிடிபடாமல் அதிவேகமாக சென்றான். உடனே வயர்லெஸ்ஸில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் ஆசாமியை போலீசார் மடக்கினர்[4]. பின்னர் வாலிபர் பிடிபட்ட சில நிமிடங்களில் மோடியின் கார் அணிவகுப்பு அந்த பகுதியை கடந்து வண்டலூர் நோக்கி சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிடிபட்ட மர்ம நபர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் என தெரிகிறது. அவர் எதற்காக மோடி வருகையின் போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏதும் சதிதிட்டத்துடன் வந்தாரா? என்பது குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கூட்டணிக்  கட்சியினரின்  வருகை, பங்கேற்பு: கூடணி சார்பில் ம.தி.மு.க.,வின் மல்லை சத்யா, எம்.பி., கணேசமூர்த்தி; புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்; கொங்குநாடு தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன்; இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர், மாலை, 5:00 மணிக்கு, மேடைக்கு வந்தனர். எதிர்பார்த்தபடி, வைகோ வரவில்லை. பாஜக தலைவர்கள் வெங்கைய்யா நாயுடு, முரளிதர் ராவ், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன். எச்.ராஜா மற்றும் மதிமுக-இந்திய ஜனநாயகக் கட்சி-கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி-புதிய நீதிக் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்[5]. மோடி வருவதற்கு முன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பேசி முடிப்பதற்கு வசதியாக, மாலை, 5:20 மணிக்கு, தமிழக பா.ஜ.,தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார். இம்பால் மற்றும் அசாம் மாநிலம், கவுகாத்தியில் நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோடி, இரவு, 7:00 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். இரவு, லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பேசிய மோடி, காங்கிரஸ் மற்றும் மூன்றாவது அணி கட்சிகளைத் தாக்கி பேசினார்.

 

தமிழகப்  பிரச்சினைகளை  கவனமாகக்  கையாண்ட  மோடி[6]: தமிழக, குஜராத் மீனவர்கள் பிரச்னை நீடிப்பதற்கு பலவீனமான மத்திய அரசே காரணம் என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். சென்னை அருகே வண்டலூரில், பா.ஜ.க. சார்பில் சனிக்கிழமை (08-02-2014) பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நரேந்திர மோடி பேசியதாவது[7]: “தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலும், குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதில் மத்திய அரசுக்கு போதிய அக்கறையில்லை. மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து நீடிப்பதற்கு பலவீனமான மத்திய அரசே காரணம்[8]. பிஜேபி ஆட்சி வந்தால் இப்பிரச்சினை தீரும் என்றார்.

 

திமுகஅதிமுகவினரை   விமர்சிக்காமல்  விடுத்தது: தமிழகத்திற்கு ஏற்றமுறையில், மிகவும் சாதுர்யமாக மோடி பேசியுள்ளார். 2ஜி ஊழலில் பயன்பெற்றவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று ஒரே தடவை குறிப்பிட்டாலும், திமுக-அதிமுகவினரை விமர்சிக்காமல் பேசியுள்ளார்[9]. கூட்டணி அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று யூகிப்பது, எதிர்பார்ப்பது இதில் தெரிய வருகிறது. மூன்றாவது அணி என்பது, பிஜேபியின் ஓட்டுகளைப் பிரிப்பது-உடைப்பது என்ற சதிதிட்டம் ஆகும். இதனால், காங்கிரசுக்குத் தான் சாதகம். இதைத்தான் அவர்கள் (காங்கிரஸ்காரர்கள் மற்றும் மூன்றவது அணியினர்) 2004 மற்றும் 2009 ஆண்டு தேர்தல்களில் செய்து பிஜேபியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர். அதே சதிதிட்டத்தில் இப்பொழுதும் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜெயலலிதா சேர்ந்துள்ளது விசித்திரமான விசயமாக உள்ளது. அதனால் தான், மோடி கவனமாக பேசியுள்ளார்.

 

சிதம்பரம்  மற்றும்  மன்மோஹன்பொருளாதார  மேதைகளை  சாடியது: மறு-எண்ணிக்கை அமைச்சர் [Recounting Minister] என்று குறிப்பிட்டு சிதம்பரத்தைக் கிண்டலடித்துப் பேசினார்[10]. பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி புத்தகங்களினின்றுஙறியப்படுவதில்லை, ஆனால், மக்களுடன் சேர்ந்து செயல்படும் போதுதான் தெரிய வருவது. நாட்டின் முனேற்றத்திற்கு கடின உழைப்புதான் பலன் தருமேயன்றி அயல்நாட்டுப் படிப்பு உதவாது (ஹார்வார்ட் உதவாது ஹார்ட் வொர்க் தான் பலன் தரும்) என்று பேசினார். இதற்கான ஆதாரங்களைக் கொடுத்து ஆங்கிலத்திலேயே பேசினார்:

 

  • While the NDA-led government had in 2004 ensured an over eight per cent grwoth rate, “as per your own statistics, Mr Recounting Minister, the GDP growth was 4.5 per cent in 2012-13,” Modi said.
  • Modi said when he took over the reins in Gujarat in 2001, the GDP growth rate was minus 4.8 per cent.
  • “We worked hard with our so-called limited knowledge of economics. See what we have achieved. India grew at an average 7.6 per cent between 2001 and 2011-12 while the growth rate for Gujarat was 10.1 per cent,” he said.
  • In fact, most states were better positioned in terms of debt and government liability than the Centre and so was the case with fiscal deficit, he said.
  • The central government’s debt liability was Rs.50 lakh crore by March 2013, which was 50 per cent of the GDP, he claimed.

 

மத்திய அரசில் மறு ஓட்டு எண்ணிக்கைமந்திரி என ஒருவர் உள்ளார். தேர்தலில்தோற்ற அவர், மறு ஓட்டு எண்ணிக்கையில் ஜெயித்தவர். இவர் அகங்காரத்தின் உச்சியில் பேசிவருகிறார். என்னை பற்றி தவறாக பேசிவருகிறார். இருப்பினும் நான் அமைதியாக உள்ளேன். மோடியின் பொருளாதார அறிவை ஸ்டாம்பில் எழுதிவிடலாம் என கூறியுள்ளார். ஸ்டாம்ப் ஒட்டினால்தான் போஸ்டர் சென்றுசேரும். நான்என்னுடையே செயல்பாட்டின் மூலம் நிருபித்துள்ளேன். காங்கிரசில் அரசில் பிரதமர் ஒருபொருளாதார நிபுணர். நிதியமைச்சர் தானும்,பொருளாதார நிபுணர் என நினைக்கிறார். பிரதமர், நிதியமைச்சர் வெளிநாடுகளில் சென்றுபடித்தவர். நான் அரசுப்பள்ளியில் படித்தவன். அவர்களின் சவால்களை ஏற்றுக் கொள்கிறேன். நாட்டை உருவாக்குவது ஹார்வர்டா அல்லது ஹார்ட் ஒர்க்கா. நான் கடினமான உழைப்புமூலம் வந்தவன். தே..,ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி6.8 சதவீதமாக உள்ளது. ஆனால் .மு., அரசில் கடந்த 2012ம் ஆண்டில் 4.6 சதவீதமாக உள்ளது. . இதுதான் உங்கள் வளர்ச்சியா? குஜராத் முதல்வராக நான் பதவியேற்றபோது, மாநிலத்தின் பொருளாதாரவளர்ச்சி -4.8 சதவீதமாக இருந்தது எங்களின் பொருளாதார அறிவை வைத்து நாங்கள் சாதித்துள்ளோம். நாட்டின் சராசரிவளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தபோது, குஜராத்தின் வளர்ச்சி 10.6 சதவீதமாக இருந்தது. நாட்டின்கடன் 50லட்சம் கோடியாக உள்ளது. இதுநாட்டின் வருமானத்தில் 50 சதவீதமாகும், என மோடி சென்னைகூட்டத்தில் பேசினார்.

 

வேதபிரகாஷ்

© 09-02-2014


[3] தினத்தந்தி, நரேந்திரமோடி கார்அணிவகுப்பில் புகுந்த ஆசாமி: போலீசார் மடக்கி பிடித்து விசாரணை, பிப்ரவரி 9, 2014

[6] In an apparent reference to Chidambaram’s 2009 victory in Lok Sabha polls from Sivaganga after a recounting of votes, the Gujarat Chief Minister described him as the “Recounting Minister” and charged him with displaying ‘excessive arrogance’ while leaving the country’s economy in bad shape.

[7] தினமணி, மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசின் பலவீனமே காரணம்: நரேந்திர மோடி, பிப்ரவரி 9, 2014