Posts Tagged ‘இரவில் காமி’

ராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்!

ஏப்ரல் 17, 2013

ராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்!

 

இளைஞர்காங்கிரஸ்அடிதடி, வன்முறை: ஏப்ரல் 16, 2013 அன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி திருச்சூருக்குச் செல்ல கொச்சி விமானநிலையத்தில் வந்திறங்கியபோது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்பட்டுள்ளது, உள்ளுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது[1]. போதாகுறைக்கு காங்கிரஸ்காரர்களே ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர்[2]. இளைஞர் காங்கிரஸில் உள்ள உள்பூசல்கள் தாம் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். இது இளைஞர் ராகுலுக்கு வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்று தெரியவில்லை.

 

கேரளாவில்பஞ்சாயத்துமுறைஎப்படிசெயல்படுகிறதுஎன்பதைப்பார்க்கவந்தாராம்: கேரளாவில் அதத் என்ற பஞ்சாயத்து இந்தியாவிலேயே தலைச்சிறந்ததாக செயல்படுகிறது என்ற பரிசைப் பெற்றுள்ளது. இதனால், ராகுல் அங்கு சென்றது மட்டுமல்லாது, உபியிலிருந்து, ஒரு காங்கிரஸ் குழு வந்து அவர்களுடன் உரையாடும் மற்றும் முறைகளை அறிந்து கொள்ளும் என்றார். இப்படி இத்தனை வருடங்கள் ஆகியும் கற்றுக் கொண்டே இருந்தால் எப்பொழுதுதான் கூட்டங்களில் பேப்பரைப் பார்க்காமல் பேசுவது?

 

கருத்தரங்கத்தில்கலந்துகொள்ளவந்தராகுல்: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் டில்லியிலிருந்து, கொச்சி விமான நிலையத்தில், நேற்று காலை (16-04-2013) வந்திறங்கினார். திருச்சூரில் உள்ள கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் லோகல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பஞ்சாயத்து ராஜ் கல்வி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில், பங்கேற்க, அங்கிருந்து காரில், திருச்சூர் சென்றார். குடியாட்சி முறையில் அதிகாரப்பகிர்வு மற்றும் திட்டமிடும் தன்மையில் பங்குகொள்ளல் (Democratic Decentralisation of Power and Participatory Planning) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

 

ராகுல்கேள்விகேட்டது: அங்கு பஞ்சாயத் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அங்கு பங்கு கொண்ட பஞ்சாயத்து அங்கத்தினர்களை, “தேர்தலுக்கு முன்னர் உங்களை அரசியல் கட்சிகள் கலந்தோலோசித்தனவா?”, என்று கேட்டபோது, இல்லை என்று கூறியதும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலையட்டியது வேடிக்கையாக இருந்தது. உள்ளூர் அபிவிருத்தி நிதியை எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பஞ்சாயத்து அங்கத்தினர்களை கலந்தாலோசித்துதான் செலவழிக்க்க்க வேண்டும் ஆனால், இப்பொழுது அவ்வாறு செய்யப்படுவதில்லை என்று எடுத்துக் காட்டினாராம்[3]. மாலையில், மாநில இளைஞர் காங்கிரசாரை சந்தித்த அவர், பின் டில்லி புறப்ப[4]ட்டுச் சென்றார்.

 

உட்சண்டைப்பற்றிகவலைப்படாமல்பறந்துசென்றது: காங்கிரஸில் உள்சண்டை இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான்[5]. ஆனால், இது கம்யூனிஸ்டுகளைப் போல அடித்துக் கொள்கின்ற அளவில் மாறிவிட்டது, அந்த மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தைக் காட்டுகிறது எனலாம்.  இதைப்பற்றியல்லாம் அலசாமல் சென்றது வேடிக்கைதான்.

 

கேரள அமைச்சர் மனைவியைத் துன்புறுத்திய விஷயம்: மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் கே.பி.கணேஷ்குமார் என்ற காங்கிரஸ் அமைச்சர், தனது மனைவி யாமினி தங்கச்சியை வீட்டில் அடித்துத் துன்புறுத்துகிறார் என்ற புகாரினால் ராஜினாமா செய்துள்ளார்[6]. இதற்குள் கட்சியின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் இருவர் மீது ஒருவர் புகார் அளித்து, பிரிந்து செல்ல கேரளா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்[7]. இது ராகுல் வருவதற்கு முந்தைய நாள் நடந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இல்லாமல் தான் ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா-பி காங்கிரஸ் பிரச்சினை ஆட்சியை கவிழ்க்கும் என்ற நிலை வந்தபோது[8], உமன் சாண்டி இப்படி “அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட்”டிற்கு உதவியுள்ளார் போலிருக்கிறது[9].

 

பி.சி.ஜார்ஜ் என்ற கிருத்துவ அடிப்படைவாத கட்சியின் தலைவர் கணேஷ்குமாருடமன் மோதியது: செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கேரளாவில் எப்பொழுதுமே அட்டிப்படைவாதம், பழமைவாதம், மதவாதம் என்று ஊறிப்போயுள்ள கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு, சோனியா காங்கிரஸ் பிழைப்பு நடத்தி வருகின்றது. இப்பொழுதும் கேரளா காங்கிரஸ் (ம) என்ற கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், ஒரு கேரள ஆமைச்சர் யாரோ ஓரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அப்பெண்ணின் கணவன் அவ்வமைச்சரை நன்றாக அடித்துதைத்துள்ளார் என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டபோது, அவ்வமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். கணேஷ்குமார் அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டியபோது, அப்படி போட்டால், மேலும் விஷயங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 

அசிங்கமாக, ஆபாசமாக பேசும் பி.சி.ஜார்ஜ்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாசைப் பேசி வருவார்[10] என்று பல செய்திகள் வந்துள்ளன[11]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[12]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்வதும் சகஜமானதுதான்[13]. “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[14], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல் கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்[15]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[16].

 

வேதபிரகாஷ்

16-04-2013


[2] Interestingly, Rahul Gandhi’s visit coincided with the escalation of violence in the district after Premlal, a Youth Congress worker, was attacked by armed men. Group fighting within the Youth Congress has been cited as the reason behind the attack. Minor instances of violence were also reported from other parts of the state

[3] Further, he said MPs and MLAs should spend their Local Area Development fund for regional development in consultation with the panchayat members. Currently, it was not being done in accordance with the spirit of decentralisation of power, he added. Gandhi agreed with the members that some central schemes were not suited for all states.

[4] Sitting through an interactive session on ‘Democratic Decentralisation of Power and Participatory Planning’, Gandhi asked panchayat members if political parties consulted them before choosing candidates for elections. Interestingly, both Congress and CPM members answered in the negative.

[9] It’s turning out to be an affair to remember for Kerala Chief Minister Oommen Chandy, but for all the wrong reasons. His United Democratic Front government, which is clinging on to power by a slender majority, has suffered several setbacks in the last two years. But the latest blow has probably been the most lethal of all. An extra-marital affair and allegations of domestic violence littered the exit route of K B Ganesh Kumar, the lone MLA of Kerala Congress B from his Cabinet. Now, the challenge before Chandy is chooosing the right person to fill Ganesh’s shoes

[11] George’s most recent outburst was against T V Thomas, late husband of veteran communist leader K R Gouri. Local newspapers edited out some of his abusive words when they published his comments to the media. This was after his attack on Ganesh but before the minister’s resignation this week.

http://www.indianexpress.com/news/keralas-p-c-george-uncut-and-uncensored/1097825/

[12] There was an outrage in Kerala after Union Minister Vayalar Ravi was caught on video making a personal swipe at a female reporter who wanted his reaction on PJ Kurien’s alleged involvement in the 1996 Suryanelli gangrape case. In the video, Ravi is seen asking the reporter if she has had a personal problem with Kurien. Women journalists in Kerala have expressed outrage over the incident and staged protests. http://www.youtube.com/watch?v=cd7DpiQiwaY

[15] Kerala Industries Minister P K Kunhalikutty has been been questioned by a police team re-investigating the “ice cream parlour” sex scandal case in connection with allegations made against him by a relative. The team led by ADGP Vinson M Paul questioned the Minister at his residence here on Thursday night, police sources said on Friday. Kunhalikiutty, a senior Indian Union Muslim League (IUML) leader, was learnt to have denied the allegations and told the police that ‘unfounded’ accusations were made against him with the motive of destroying his political career

http://zeenews.india.com/news/kerala/kerala-minister-grilled-by-police-in-sex-scam-case_746175.html

[16] Reportedly the opposition leader VS Achuthanandan has gotten hold of the case diary of the sensational “ice-cream parlour case” in which Kunhalikutty was allegedly involved. Also, the case diary apparently shows that the minister had paid off the victims to exclude himself from being investigated.

http://www.firstpost.com/politics/after-kurien-yet-another-sex-scandal-catches-up-with-congress-in-kerala-618856.html

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!

ஏப்ரல் 30, 2012

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!

சட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman,  self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.

மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை)  அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.

விழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].

2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].

மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.

இந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

“எனக்கு முழு அதிகாரம் உள்ளது புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணருகிறேன்.

தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.

இந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:

கேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்?

பதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.

கே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா?

ப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.

கே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே?

ப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.

கே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்?

ப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.

கே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா?

ப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.

கே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா?

ப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.

ஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 ஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11].  இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா? ஏன் கேட்பதில்லை?


[12] Manish Kunjam, former legislator from Konta district, took the medicines for Menon, an asthma patient, yesterday after Maoists made an appeal for medical help (the Union of Catholic Asian News).

http://www.ucanindia.in/news/abducted-collector%E2%80%99s-health-worsens/17642/daily

[13] “We can’t believe he has been kidnapped,” said Father Biju Uppanmackal, a priest working in Sukma in Bastar district, a tribal area under Maoist control.

http://www.ucanindia.in/news/maoists-under-fire-for-abduction/17620/daily

டயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது!

மே 28, 2010

டயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது!

இந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி: பிரபுதேவாவை திருமணம் செய்ய நயன்தாரா, அதாவது டயானா மரியம் குரியன் என்ற கிருத்துவர் இந்து மதத்துக்கு மாறுகிறார்! பிரபுதேவா முன்பு ரம்லத் என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டபோது, அவர் தான் இந்துவாக மதம் மாறி, லதா என்ற பெயரை வைத்துக் கொண்டாராம். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார் எனப்படுகிறது. பாவம், இப்பொழுது லதாவை விட்டுவிட்டு நயந்தாரவிடம் ஐக்கியம் ஆகிவிட்டாராம்!

May 28, 2010

இலங்கைக்கான ரஷ்ய விமானங்களை இடைநிறுத்திய

வன்மை முஸ்லீம் மனைவியும், காமக் கிருத்துவக் காதல்-மனைவியும்: பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. நயன்தாராவை அடிப்பேன் என்று மிரட்டினார். கணவரை விட்டு விலகும்படி செல்போனில் எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து அனுப்பினார். பிரபு தேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். எதுவும் பலிக்கவில்லை. மாறாக நெருக்கத்தை இருவரும் தீவிரமாக்கினர்.

காமத்திலும் திரியேகத்துவம்: பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்றார்கள். ஐதராபாத்தில் நடந்த படவிழாவுக்கு கைகோர்த்தப்படி வந்தனர். சென்னையில் ஒரே மேடையில் சேர்ந்து நடனம் ஆடி தொடர்பை வெளிப்படுத்தினார்கள். ரம்லத் சோர்வாகிவிட்டார். அடுத்தக்கட்டமாக இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார். நயன்தாராவுடனான சந்திப்புகள் நட்சத்திர ஓட்டல்களிலேயே நடக்கிறது. அவருக்கு சென்னையில் வீடு பார்த்து தங்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக புரோக்கர்கள் மூலம் வீடு தேடிவருகிறார். ஐதராபாத்திலும் வீடு தேடுகிறார்.

ஆர். எஸ்.எஸ் செய்யாததை பிரபுதேவா செய்திருக்கிறார்! பிரபுதேவாவுக்காக மதம்மாற நயன்தாரா முடிவு செய்துள்ளார். இவரது சொந்த பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார். பிரபுதேவா மனைவி ரம்லத் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு அவர் இந்து மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் லதா என மாற்றிக்கொண்டார். அதுபோல் நயன்தாராவும் இந்து மதத்துக்கு மாறி பிரபுதேவாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இப்போதே படப்பிடிப்புகளின்போது அந்தந்த பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா, மதம் மாறவேண்டாம் என்று கூறினாராம். ஆனால் நயன்தாரா கேட்கவில்லை. காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறுவதில் உறுதியாக இருக்கிறாராம்.

கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III

மார்ச் 6, 2010

கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III

நித்யானந்தா என்ற போலி சாமியார் ஒரு நடிகையுடன் சல்லாபித்தது கேடுகெட்டச் செயல். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், இதன் பின்னணியை முழுவதும் வெளிக்கொணர வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பல மக்களை பாத்திக்கும் வகையில் இப்பிரச்சினை உள்ளது. ஒரு பெரிய ஆளும் கட்சியின் சார்பில் இயங்கும் ஊடகம் இத்தகைய செக்ஸ்-படங்களை / வீடியோக்களை, “புளூ-ஃபிளிம்” / நீலப்படம் என்பார்களே அதைப் போன்ற சரக்கை, தினமும் திரும்ப-திரும்ப நேரம்-காலம் குறிப்பிட்டு செய்திகள் நடுவே காண்பித்து ஒளிபரப்பிய பின்னணி, ரகசியம், மர்மம் என்ன?

ஆளும் கட்சிக்காரர்களுடைய மற்றும் அவர்களின் உதவியில் இருக்கும் ஊடகங்களின் பங்கு, சம்பந்தம், பிணைப்பு  மற்றும் இணைப்பு நன்றாகவே தெரிகிறது.

ஏதோ தாங்கள் சாமியார்களின் வேலைகளை படம் பிடித்துக் காட்டுகிறோம் என்று பகுத்தறிவு, நாத்திக முகமூடிகளில் மறைந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

நல்ல எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை: சமூக உணர்வு, சமூக சிந்தனை, சமூக பாதுகாப்பு, சமூக பிரக்னை, சமூக தார்மீக கடமைகள் முதலியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அவர்கள் இந்த வேலையச் செய்ததாகத் தெரியவில்லை. வேறு ஏதோ உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு, சரியாக பரீட்சை ஆரம்பிக்கும் நாளிலிருந்து இத்தகைய வேலையை, பிரச்சரத்தை, ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த காரியத்தை ஒருவன் – ஒரு ஆள் – ஒரு தனிப்பட்ட மனிதன் செய்துவிட முடியாது.

பின்னணி வெளிக்கொணர வேண்டும்: ஆகவே, இதன் பின்னணியில் மிகவும் பலமான, அதிகாரம் கொண்ட, ஆதிக்கம் கொண்ட, பணபலம் கொண்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் பல நாட்கள் உட்கார்ந்து பேசி, ஆலோசனை செய்து, உபகரணங்களை, ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு, இடம்-நேரம்-ஏவல் அறிந்து செயல்பட்டுள்ளது தெரிகின்றது.

பின்னணியில் இருப்பவர்களும் அறியப்பட வேண்டும்: எனவே யார் பின்னணியில் இருந்தவர்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று அலசப்படுகிறது:

* இந்தகைய திட்டத்தைத் தீட்டியவர்கள்
* குறிப்பாக நிதயானந்தர் மற்றும் ரஞ்சிதா இருவரின் சம்ந்தத்தை அறிந்தவர்கள்

* அந்த இருவரும் “ஆஸ்ரமமோ” அல்லது “வேறு இடமோ” என்று பீடிகை போடுகிறார்களே, தெரிந்தே ஏன் அப்படி புளுக வேண்டும்? அதாவது அந்த இடம் தெரிந்திருக்கிறது. அந்த இடத்திலேயே செய்திருக்கிறார்கள்!

* இருவரின் நடவடிக்கைகளையும் அந்த அந்நியோயன்னியக்காரர்கள்

* ஏற்கெனவே அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்கள்.

* அவர்களின் சல்லாபங்களையும் திருட்டுத்தனமாகப் பார்த்திருக்கிறர்கள், ஒத்திகைக்காக!

* ஏனெனில் அப்பொழுதுதான் அத்தகைய காட்சிகள் கேமாராவின் கண்களுக்குள் வரும், பிடிக்கும், பிறகு தங்களது டிட்டத்திற்கேற்றப்படி வரும்.
* தொழிற்நுட்ப ரீதியில் சரியான கோணம் / கோணங்களில் கேமராவை / கேமராக்களை வைத்தவர்கள்
* அவர்களுக்கு படுக்கையறைக்கு போகும் அளவில் சுதந்திரம் இருந்திருக்கிறது என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும்.
* அவ்வாறே கேமராவை வைத்தவர்கள்
* மறுபடியும் சுதந்திட்ரமாக படுக்கையறைக்குச் சென்று கேமராக்களை எடுத்து வந்தவர்கள்
* அவர்களின் பேச்சுப்படியே இரண்டு நாட்களுக்கு மேலே படுக்கையறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

* அதாவது ஒருநாளில் இருமுறை – படுக்கையறைக்குள் சென்று உள்ளே வைக்க, வைத்ததைத் திரும்பி எடுக்க – அப்படியென்றால், அந்த நடிக்கைக்கு எத்தனைத் தடவை உடை மாறியுள்ளதோ அத்தனை தடவைகள், படுக்கையறைக்குள் உள்ளே வைத்து எடுத்திருக்கிறர்கள்!

* என்னடா அது, நிதயானந்தா மற்றும் ரஞ்சிதா தவிர இந்த் ஆட்கள் வேறு தினமும் இப்படி தாராளமாக “அந்தப்புரத்தில்” சென்று-சென்று வருகிறர்களே என்று யாருக்கும் தெரிவில்லையா, கண்டுக் கொள்ளவில்லையா, அல்லது அவர்களும் இந்த திட்டத்தில் ஒத்துழைத்தார்களா?

* பிறகு – டிவிடி பிளேயர்-காப்பியர் என்றால் அப்படியே பதிவு செய்யப்பட்டதை பிரதிகள் எடுத்து விடலாம்.

* ஆனால், ஒரு மணி நேரம் ஓடியிருந்தால் எடிட்டிங் செய்யப் பட்டைருக்கவேண்டும், இவற்றையெல்லாம் செய்தவர்கள் யார்?

* பிறகு இந்த துப்பறியும் கோஷ்டி முதலில் அல்லது பிறகு அல்லது பலதடவை யார்-யாருக்கெல்லாம் போட்டுக் காண்பித்தார்கள்?

* பார்த்தவர்கள் எல்லோரும் யார்?

* பார்த்துப் புரிந்து கொண்டு, அடையாளம் கண்டு, அதற்கேற்றப்படி உரையெழுதியது யார்?

என அந்த “புளூ ஃபிலிம்” எடுத்ததில், பங்கு கொண்டதில் பலர் ஈடுப்பட்டுள்ளது தெரிகின்றது.

ஆகவே, இது “புளூ ஃபிலிம்” எடுத்து வியாபாரம் செய்யும் கோஷ்டியின் வேலையோ எனவும் தோன்றுகிறது.

தேவநாதன் மற்றும் நித்யானந்தா விஷயத்தில் தான், உடனே மார்க்கெட்டில் சிடிகள் கிடைக்கின்றன என்று அந்தந்த பத்திரிக்கையாளர்கள், இணைத்தள விசுவாசிகள், ஆதரவாளர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறர்கள். குறிப்பாக இந்தியாவில் நமக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, வலைகுடா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ளவர்களுக்கு சுலபமாகக் கிடைத்துவிடுவது ஆச்சரியமாக உள்ளது.

அதாவது அத்தகைய தொழிற்நுட்பம் அறிந்த “வெள்ளைக் கலர் காலர்” மக்களும் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.

இதே வி ஹியூம் என்றால், மாத்யூஸ், ஜோ, ஷாஜி, கோயல் ராட்சன்…………..என்றால் ஒன்றும் கிடைப்பதில்லை.

பாலியல் குற்றங்களிலும் ஏன் பாரபட்சம் பார்க்கப் படுகிறது? இன்டர்போல் எச்சரிக்கை வருகிறது (பல செக்ஸ் குற்றவாளிகளைப் பற்றி), இங்கிலாந்து போலீஸாரே சென்னைக்கு வந்து விசாரித்து கைது செய்து கொண்டு லண்டனுக்கே அந்த குற்றாவாளியை கூட்டிச் செல்கிறார்கள், கைது செய்யப்பட்ட வில் ஹியூம் ரஜினி காந்த படத்தில் நடிக்கிறான், தப்பித்து ஓடுகிறான்., ஸ்ரீபெரொம்புதூரில், வேலூரில், கன்னியாகுமரியில், திருச்சியில்……….

ஆனால் அதைப்பற்றி இந்த புலிகள் ஒன்றும் செய்வதில்லை, அவர்களே தாராளமாக இன்டர்நெட்டில் உலாவ விட்டாலும் அதையெல்லாம் பார்ப்பதில்லை, சிட்களாஆக மாற்றுவதில்லை, பர்மா பஜார், ரிச்சித் தெருக்களில் விற்பதில்லை!

வேடிக்கைதான்!

ஒருவேளை, இந்த பாழாபோன செக்ஸில் கூட செக்யூலரிஸம் பார்க்கிறர்களா, இந்த கேடு கெட்டவர்கள்?

கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II

மார்ச் 5, 2010

கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II

கருணாநிதிக்கு யோக்கியதை இல்லை: நிச்சயமாக கருணாநிதி என்ற அந்த மனிதருக்கு, இந்து விரோத நாத்திகம் பேசி வரும் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு [இந்த விஷயத்தில் அவர் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவயில் உள்ளன], போலி மஞ்சள் துண்டு, யோகா செய்து வரும் ஆன்மீகவாதிக்கு, பலதார சாமானியனுக்கு, மானாட-மயிலாட-மார்பாட- பார்த்து அனுபவித்து வரும் தமிழக-திவாரிக்கு, நாத்திகக் கடவுளுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. முதலில் இவரையேத் திருத்திக் கொள்ளமுடியாத லட்சணத்தில் மற்றவர்கள் விஷயத்தில் அறிவுறைச் சொல்லக் கூட தகுதியற்றவர். அரசாளுகின்றவன் முன்னோடியாக இருக்கவேண்டும். அவனைப் பார்த்துப் பின்பற்ற வேண்டுமானால் தான் தனது தனி மனித வாழ்க்கையில் தூய்மைமையாக, தூயனாக, திருவள்ளுவர் காட்டிய நெறியில் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், சினிமா கூத்தாடி வாழக்கை வாழ்ந்து விட்டு, திரைப்படத்தில் நடிப்பது போல, தினம்-தினம் “ஷோக்கள்” காட்டிக் கொண்டு வாழும் போலி முதலமைச்சர்கள் மக்களின் நன்மை பற்றி பேசுவது வியப்பாகத்தான் உள்ளது.

திராவிடப் போலித் தனம்: அரிசி, பருப்பு, காய்கறி விஷயத்தில்கூட தனது விளம்பரம் போட்டு அரசு பணத்தை விரயம் செய்யும் இந்த நவீன நீரோக்கு ஏன் அப்பொழுதெல்லாம் வீரம் வரவில்லை? “பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது”. உம்மைப் போன்ற நாத்திக அரசியல்வாதிகளே இந்த “கழகத்தில்” தானே வருகிறது? கழகம் = சங்க இலக்கியத்தின்படி, திருடர்கள் கூடும் இடம். “பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் சிக்கி பலியாகி, சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது”, இதிலும் எல்லா திராவிட சாமியார்களும், திராவிட புரோகிதர்களும், திராவிட மணம் / மணமுறிவு செய்விக்கும் திராவிட ஐயர்கள், திராவிட நடிகை-நடிகர்கள்………..என வந்து விடிகிறார்களே?

முற்றும் துறந்த திராவிட முனிவர்களும், படிதாண்டாத் திராவிடப் பத்தினிகளும்: அவர்கள் எல்லாம் என்ன, அண்ணா சொல்லியபடி, “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல” என்ற “கழக”த்தில் வருகிறதா? ·  ஜக்கி வாசுதேவன் அல்லது எந்த சாமியார் மேலேயும் இத்தகைய புகார்களை தாராளமாக, ஏன் எளிதாகக் கொடுக்கலாம். ஏன் செய்யவில்லை.

  • கிருத்துவம் மற்ற இதர சாமியார்கள் கற்பழிப்பு, அபாசம், சிறுவர் பாலியல் குற்றாவாளிகள் (phedophiles), ஆபாச படங்கள், திரைப்படங்கள் (pornography), வன்முறை கலவிகள்…………..என்றெல்லாம் நுற்றுக்கணக்கான புகார்கள், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவோ, தண்டிக்கப்படுவதாகவோ தெரிவவில்லை.
  • ஊடகங்களும் செய்திகளை மட்டும் வெளியிட்டு விட்டு சமர்த்தாக, சாமர்த்தியமாக மௌனிகளாகி விடுகின்றனர் [இதைப் பற்றி வில் ஹுயூம், ஜோ, என்ற விஷயங்களில் பதிவுகளைக் காணலாம்].
  • கருணாநிதியோ அதைப் பற்றி மூச்சுக்கூடவிடுவதில்லை. ஒருவேலை அவர்களுடைய கடவுளர்களைக் கண்டால் பயம் போலும், இல்லைக் கஞ்சிக் கூடக் கிடைக்காது என்ற ஏக்கம் போலும்!
  • “சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது”, என்ற மிரட்டல்களோ, “பகலில் சாமி, இரவில் காமி, என்ற ரம்மியமான ரைம் செர்ந்த செம்மொழிகளோ உதிர்க்கப் படவில்லை. இத்தகையவற்றை பாரபட்சம் மிக்கவை என்று சொல்லாமல் என்ன சொல்வது?
  • சட்டத்தின் முன்னால் எல்லொருமே சமம் எனும்போது, எல்லா குற்றாவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப் படவேண்டும். பிறகு எதற்கு சலுகைகள், தளர்த்தல்கள், ரகசியங்கள், மர்மங்கள், மௌனங்கள் எல்லாம்?

பகலில் சாமி, இரவில் காமி, வீடியோவில் இமி, நாக்கிலே உமி!

மார்ச் 4, 2010

பகலில் சாமி, இரவில் காமிகளா?

முதலமைச்சர் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 4_ பகலில் சாமிகளாகவும், இரவில் காமிகளாகவும் நடமாடும் சாமியார்கள் பற்றி முதல் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பகலில் சாமியாகவும் _- இரவில் காமியாகவும் வாழ்க்கை நடத்தி _ பாமர மக்களின் வாழ்வையும் அறி-வையும் பாழாக்கி வருகின்ற- _ பணக் கொள்ளை _ அடிக்கின்ற பகல்வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடை-யாளம் காட்ட பகுத்-தறிவு இயக்கம் பல்லாண்டு கால-மாக, பல சான்று-களைக் காட்டி; பலத்த எதிர்ப்புக்-கிடையிலேயும் பிரச்-சாரம் செய்து வந்தும்-கூட, படக்காட்சிகள், நாட-கங்கள் இவற்றின் வாயிலாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை _ சித்திரித்தும் கூட, உதா-ரணமாக படமாக வெளி வந்த சந்திரகாந்தா – _ சொர்க்கவாசல் மனோ-கரா -_ வேலைக்காரி _- பராசக்தி_தூக்குமேடை போன்றவற்றில் அந்தக் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்-துக் காட்டியும் கூட, இன்னமும் புரிந்து கொள்ள முடியாத _- புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத – மௌடீகத்தில் மூழ்கியோர் நாட்டில், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டு-மென்று, அவற்றில் அக்-கறை காட்டுகிற ஒரு மக்-கள் நல அரசு அண்மை-யில் நடைபெற்றதாக கூறப்படுகிற; காட்சி-யாக்கி காட்டப்படுகிற; கயமைத்தன சாமியார்-களின் ஏமாற்று வித்தை-களை பொறுத்துக் கொண்—டிருக்க முடியாது. அதே நேரத்தில் குற்-றங்கள் நடைபெறுவதை விட அந்தக் குற்றங்கள் எப்படி நடைபெற்றன – எங்கே யாரால் நடத்தப்-பட்டன – எந்த முறையில் நடத்தப்பட்டன என்-பதைச் சான்றாகக் காட்ட -வெளியிடப்படு-கின்ற படங்களாயினும், செய்திகளாயினும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக் காட்சியிலோ பத்திரி-கைகளிலோ படங்களா-கப் பார்த்திடும் இளை-யோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும் -_ அது இளைய சமுதா-யத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்-பதையும் எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடந்திட வேண்டு-மென்று கேட்டுக் கொள்-வது ஓர் அரசின் கடமை-யாகும்.

அந்தக் கடமையை செய்கின்ற அரசு – அந்தக் கடமையைச் செய்கின்ற நேரத்தில் அந்தக் கடமை வெற்றி பெற அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்-டியது தான் அனைவரும் மேற்கொள்ளும் சூளுரை-யாக இருக்க வேண்டுமே யல்லாமல் ஒரு தீமையை விவரிப்பதின் மூலம் -_ அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக் கூடாது.

அண்மையில் வெளி-வந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளி வருகின்ற செய்தி-கள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்-தோர் அரசுக்கும் _-அர-சின் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டு-மே-யல்லாமல் – தாங்களே முன்-னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது என்பது மட்டுமல்ல; இத்தகைய தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்-படுத்த வலிமை சேர்ப்ப-தாகவும் ஆகி விடும்.

அருவருக்கத் தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடு-வது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே என்று சில ஏடுகளும், தொலைக் காட்சி நிறு-வனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்-கலாம். ஆனால் போதை-யேற்றும் கள்ளை அருந்-தியவனை; மேலும் கள்-ளையூற்றி திருத்த முடி-யுமா? அது போலத் தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக் கூடாதே என்ற கவலை-யோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற ஏமாற்று-வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழி-யில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்-கின்ற சபல புத்தி உடைய-வர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

இந்த அரசு எடுக்-கின்ற நடவடிக்கை-களுக்கு உண்மையிலேயே பகுத்-தறிவு வளர்த்து, ஊருக்கு உபதேசிகளை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று எண்ணுகின்ற ஒவ்-வொ-ருவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல் அமைச்-சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.