Archive for the ‘சட்டர்ஜி’ Category

மென்மையான இலக்காக உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்மத்துடன் தாக்கிய மர்மம் என்ன?

மார்ச் 22, 2013

மென்மையான இலக்காக உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்மத்துடன் தாக்கிய மர்மம் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group1

சுநீத்தின் திராவிடனும், இப்பொழுதைய திராவிடனும்: சுநீத் குமார் சட்டர்ஜி “திரவிடியன்” என்ற புத்தகத்தை எழுதியபோது, புலகாங்கிதம் அடைந்து, “திராவிடர்கள்” பூரித்துப் போயினர். ஆஹா, ஒரு வங்காளக்காரர் (அப்பொழுது ஆரியர் என்று அவரை அடையாளங் காணவில்லை போலும்) தமிழனை “திராவிடன்” என்று அடையாளம் காட்டி விட்டானே என்று தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டனர். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் துறை அமைப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குவதற்காக 1963ல் வந்திருந்த போது, “திராவிடர்” என தலைப்பில் மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனை 1965ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சிறுபுத்தகமாக வெளியிட்டது.

Aurobindu Ashram attacked by Dravidian group3

1963 திராவிடன் 2013ல் மாறியது ஏன்?: மடலேறும் அடலேறுகள், பெருஞ்சித்தரனார், சாலை இளந்திரையமன், க. ப. அறவாணன் போன்ற கோஷ்டியினர் அதை வைத்துக் கொண்டு நன்றாகவே அறிவுஜீவி வியாபாரம் செய்தனர். “சட்டர்சியின் திராவிடர் வரலாற்று மானுட மொழியியல் நோக்கில் இனவியலாய்வு” என்று பெரிய தலைப்பைக் கொடுத்து, அந்நூலை பொழிபெயர்த்து சம்பாதிக்கவும் செய்தனர். வங்காளிகளும் திராவிடரே என்றெல்லாம் துதி பாடினர்! பாரி நிலையம் 1990ல் தமிழ் பதிப்பை வெளியிட்டது.

Aurobindu Ashram attacked by Dravidian group2

அழகான பூக்களை மிதித்து சிதைப்பரோ?பூத்துக் குலுங்கும் மலர்களை கசக்கிப் பிழிவரோ?

மொட்டுக்களை குத்தி நாசம் செய்வரோ?

இதழ்களை கூறு போடுவரோ?

செடிகளை வேரோடு பிடுங்குவரோ?

ஆமாம், நாங்கள் செய்வோம், தமிழ்-தமிழ் என்று சொல்லிக் கொண்டே துணிந்து செய்வோம்!

தமிழர்-தமிழர் என்று பறைச்சாற்றிக் கொண்டு, பதைபதைக்க செய்வோம்!

தமிழகம்-தமிழகம் என்று பகர்ந்து கொண்டு தலைநிமிர்ந்து செய்வோம்!

Aurobindu Ashram attacked by Dravidian group

வேறொருவர் சமாதி, நினைவிடங்களில் இப்படி கூரூர வன்மத்தைக் காட்டுவார்களா?: சென்னையிலேயே பெங்காளி சங்கம், பள்ளி, கலாச்சாரத் துறை, மேற்கு வங்காள அலுவலம், என்றெல்லாம் பிரபலமாக உள்ளனவே, அவற்றையெல்லாம் விடுத்து, அமைதியாக இருக்கும், அதிலும் அரவிந்தர் சமாதி இருக்கும் இடத்தில் இப்படி வன்முறை நிகழ்ச்சிகளை திராவிடர்கள், தமிழர்கள் எப்படி செய்துள்ளார்கள்? இதே மாதிரி, வேறொருவர் சமாதி, நினைவிடங்களில் இப்படி கூரூர வன்மத்தைக் காட்டுவார்களா?

Aurobindu Ashram attacked by Dravidian group4

மென்மையான இலக்கை வன்மம் தாக்கலாமா?: அப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group5

பீதியை, பயத்தை, கலவரத்தை, திகிலை, பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன?: நியூட்டன் விதி தமிழ் சினிமாக்களில் எடுத்தாள்வது போல, திராவிட நாட்டில் எதிர்-எதிராக இரண்டு நியூட்டன் விதி போல இம்முறையைக் கையாளுகிறார்களா? தாக்கினால், திரும்பத் தாக்கப்படும்; திட்டினால், திரும்பவும் திட்டுகள் கிடைக்கும்; அடித்தால் பதிலுக்கு அடி கிடைக்கும்; இல்லை ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும், பீதியை, பயத்தை, கலவரத்தை, திகிலை, பரபரப்பை ஏற்படுத்த இத்தகைய போக்கைக் கடை பிடிக்கிறர்கள் என்றால் அதற்கு பெயர் என்ன, விளக்கம் என்ன? அந்த மனப்பாங்கை என்னவென்பது?

Aurobindu Ashram attacked by Dravidian group6

© வேதபிரகாஷ்

22-03-2013