Archive for the ‘காவி மயம்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.

2018 முதல் 2023 வரை மேற்கொண்ட முயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது  இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….

ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யப் போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1].   ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளின் முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.

13-07-2023 அன்று கூட்டம் ஆரம்பம், படுகரின் வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4].  இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS  , Kathiravan V • HT Tamil, Jul 11, 2023 04:47 PM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/annual-meeting-of-rss-pracharaks-to-be-held-in-ooty-131689073805904.html

[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”

[4] தினமணி, உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!, By DIN  |   Published On : 14th July 2023 12:49 PM  |   Last Updated : 14th July 2023 12:49 PM.

[5] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/rss-reviwe-meeting-in-ooty-4037755.html

[6] மாலைமலர், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு, By மாலை மலர்,13 ஜூலை 2023 2:50 PM

[7] https://www.maalaimalar.com/news/district/tribal-people-give-enthusiastic-welcome-to-rss-leader-in-ooty-635605

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST

[9] https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/badugar-people-did-traditional-type-of-invite-to-rss-president-mohan-bhagwat-in-nilgiris-rxrtvl

இந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை! நூதன நிபந்தனை!

ஒக்ரோபர் 27, 2019

இந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை! நூதன நிபந்தனை!

Hindu has to donate 25,000 to muslim and christian trursts-news cutting

இந்து கொலையில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டுள்ளதால், முஸ்லிம்கடைகளில் பொருளை வாங்காதே என்ற முகநூல் பதிவு: மத நல்லிணக்கத்துக்கு எதிராக, முகநுாலில் பதிவை வெளியிட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், வித்தியாசமான நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கியது[1]. நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், முகநுாலில் ஒரு பதிவை வெளியிட்டார்[2]. அதில், ‘மத மாற்றத்துக்கு எதிராக பேசிய ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். ‘அதை கண்டித்து நடந்த போராட்டத்துக்கு எதிராகவும், கொலைக்கு ஆதரவாகவும் செயல்படும், துணிக்கடையை புறக்கணிப்போம். ஹிந்துக்களே விழித்து கொள்வோம்’ என, கூறப்பட்டு உள்ளது. இந்த பதிவுக்காக, செல்வகுமாருக்கு எதிராக, மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘இந்தப் பதிவை நான் தயார் செய்யவில்லை; முகநுாலில் வந்த பதிவு அது. போலீஸ் எச்சரித்த உடன், அதை நீக்கி விட்டேன்’ என, கூறியுள்ளார்.

Hindu has to donate 25,000 to muslim and christian trursts

செக்யூலரிஸ ரீதியில் முன் ஜாமீன் நிபந்தனை: மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கினார். மத நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார். அதே போல பணத்தை கொடுத்து, ஜாமீன் பெற்றார் என்றாகிறது. ஆனால், மேல்முறையீடு சென்றாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. இந்துத்வவாதிகளும் இதில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

Hindu has to donate 25,000 -news cutting

மதசார்பற்ற நாட்டில், செக்யூலரிஸ போர்வையில் கம்யூனல் தீர்ப்புகள் கொடுக்கப் படுவது: ஜூலை மாதத்தில் ரிச்சா பட்டேல் என்பவர் இது போன்று ஒரு பதிவு செய்த போது, மசூதிக்குச் சென்று குரான் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும், என்று நீதிபதி ஆணையிட்டார். பிறகு அது சுமூகமாக இரு கூட்டத்தாரும் பேசிய சமரசம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முகநூலில் உள்ள பதவியை பகிர்ந்ததற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது/ பிரச்சனை இருபுறமும் ஆராய்ந்து கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியம், முக்கியத்துவம் மற்றும் நிர்பந்தம் உள்ளது. இது மத சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அணுகப் பட்டு, ஏதோ ஒரு செக்யூலரிஸம் ரீதியில் தீர்வு காண்பது போல உள்ளது. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 25,000 கொடுக்க வேண்டும் என்பது மதசார்பற்ற தீர்ப்ப்பா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், தமிழகத்தில் இதைவிட மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பள்ளிகளில், குறிப்பாக கிருத்துவ பள்ளிகளில், இந்து மாணவ மாணவிகள், விபூதி-பொட்டு வைக்கக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக்கூடாது, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாடக் கூடாது, போன்ற சரத்துகள் நடைமுறைப் படுத்தப் பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்திகளாக வந்திருக்கின்றன. மதசார்பற்ற செக்யூலரிஸ தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்றால், அவ்வாறே முந்தைய தீர்ப்புகள் இருந்திருக்கவேண்டும் அதாவது சட்டத்திற்கு முன்பு எல்லாம் நம்பிக்கையாளர்களும் ஒன்றுதான் என்று இருந்தால் எல்லாருக்கும் அதே மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நீதிமன்றங்கள் அத்தகைய ஒரு முன்மாதிரியை எடுத்து வைக்கும் படி நடந்து கொள்ளவில்லை. சட்டங்கள் செக்யூலரிஸ மயமாக்கப் படவில்லை. இவ்வாறிருக்கும்பொழுது, இத்தகையதீர்ப்பு வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது.

Richa Patel case July 2019

19 வயது மாணவி கைது – பேஸ்புக் பதிவிற்காக[3]: ஜார்கண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜூலை 12ம் தேதி, 2019 ரிச்சா பட்டேல் என்னும் மாணவி கைது செய்யப்பட்டார்[4]. இவ்வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ் குமார் 5 குரானை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கினார்[5]. ரிச்சா பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மன்சூர் கலிஃபா, ரிச்சா இப்போது வரை குரான் விநியோகிக்கவில்லை என பிபிசியிடம் கூறினார்[6]. மேலும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த பெண்ணின் வீட்டாரும் மற்றும் வேறு சிலரும் அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு என்னை சமாதானம் செய்ய வந்தார்கள்[7]. அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன், இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாக இருந்தது என்று கூறினார்[8].

Richa Patel case - quran-July 2019

சமரசமாக முடிந்த பிரச்சினை[9]: “ஃபேஸ்புக் பதிவிற்காக இன்னொரு மதத்தின் வழிபாட்டிடத்துக்கு சென்று குரானை விநியோகிப்பது எனக்கு சங்கடமாகத் தோன்றுகிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் என்னுடைய அடிப்படை உரிமையில் எப்படி தலையிடமுடியும்? என்னுடைய மதத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எவ்வாறு தவறாக முடியும். நான் ஒரு மாணவியாக இருக்குபோதும் என்னை திடீரென்று கைது செய்தார்கள்,” என பிபிசியிடம் கூறினார் ரிச்சா பட்டேல். ரிச்சா பட்டேல் அல்லது ரிச்சா பாரதி ராஞ்சி மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்[10]. இப்போது வரை எனக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு என்ன செய்யலாம் என்பதை நான் முடிவெடுப்பேன்” என கூறினார். அதன்பிறகு இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. திங்கள் கிழமை ராஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனீஷ் குமார், 5 குரானை வாங்கி அஞ்சுமன் கமிட்டி மற்றும் புத்தகசாலையில் விநியோகிக்க வேண்டும் என்னும் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும்போது ரிச்சாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Richa Patel case - quran-distribution, July 2019

செக்யூலரிஸ நீதிமன்றங்களில் கம்முனல் தீர்ப்புகள் ஏன்?: கடந்த ஆகஸ்ட் மாதம், கிருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் பாலியல் குற்றங்க்களுக்கு, தீர்ப்பு கொடுக்கும் போது, கிருத்துவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடக்கிறது, போன்றவை இடம் பெற்றபோது, அழுத்தம் கொண்டு வந்து, அவ்வரிகள் நீக்கப் பட்டன. அதாவது, தீர்ப்பும் வளைக்கப் பட்டது. பிறகு, இப்பொழுது, இவ்வாறான நிபந்தனை எப்படி விதிக்கப் பட்டது என்று தெரியவில்லை. என்னத்தான், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், அவர்கள் தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய, சிறிய வழக்குகளில், நீதிபதிகள் விசித்திரமாக நடந்து கொள்வது, வியப்பாகத் தான் இருக்கிறது. அதாவது, இந்துத்துவ வாதிகளுக்கு, எதிராகவே தீர்ப்புகள் வருகின்றன எனலாம்.

© வேதபிரகாஷ்

27-10-2019.

Richa Patel case - quran-distribution, July 2019-news cutting

[1] தினமலர், முகநுாலில் சர்ச்சை பதிவு, Added : அக் 26, 2019 19:49.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2397791&Print=1

[3] பிபிசிதமிழ், ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம், 17 ஜூலை 2019

[4] https://www.bbc.com/tamil/india-49013910

[5] The Hindu, Court ordeers Teenager to donate Quran over offensive Facebook post, PTI, RANCHI, JULY 16, 2019 21:20 IST, UPDATED: JULY 17, 2019 14:49 IST

[6] https://www.thehindu.com/news/national/other-states/donate-quran-courts-bail-condition-to-woman-arrested-for-offensive-post/article28491887.ece

[7] Indian Express, Donate Quran, court’s bail condition to Jharkhand woman arrested for offensive Facebook post targeting Muslims, Published: 16th July 2019 11:46 PM | Last Updated: 17th July 2019 12:51 AM.

[8] http://www.newindianexpress.com/nation/2019/jul/16/donate-quran-courts-bail-condition-to-jharkhand-woman-arrested-for-offensive-facebook-post-targeti-2004857.html

[9] Times of India, Ranchi court withdraws order to distribute Quran for bail over ‘communal’ FB post, Jaideep Deogharia | TNN | Updated: Jul 19, 2019, 13:29 IST.

[10] https://timesofindia.indiatimes.com/city/ranchi/ranchi-court-withdraws-order-to-distribute-quran-for-bail-over-communal-fb-post/articleshow/70267057.cms

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

Bharat sakti, Aurobindo 1904-08

வீக்என்டை ஜாலியாகக் கழித்த விதம்என்றாகியது: இவர்கள் முன்னமே  எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:

  1. இந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.
  2. ஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று?
  3. “பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.
  4. 130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை! என்று கேட்டிருந்தேன், வரவில்லை.
  5. “பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.
  6. 1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.
  7. “பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
  8. “பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்?
  9. தமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது!
  10. கத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன!

Suddhananda Bharati

ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா?: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.

Pondy Lit Fest - S G Suraya

தமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே? நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்!,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்?

PondyLitFest 2019-a lady lecturing standing on a table

தமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது.  வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.

PondyLitFest 2019- Hindi song

தூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.

© வேதபிரகாஷ்

07-10-2019Shenbaga convention centre, Puducherry

[1] The Hindu, Pondy Lit Fest begins, SPECIAL CORRESPONDENT, PUDUCHERRY, SEPTEMBER 28, 2019 00:38 IST; UPDATED: SEPTEMBER 28, 2019 04:56 IST

[2] Bedi inaugurates event; this year’s theme is ‘Bharat Shakti’: The second edition of the Pondy Lit Fest 2019, with the theme ‘Bharat Shakti,’ began here on Friday. Lieutenant Governor Kiran Bedi inaugurated the three-day event at Hotel Shenbaga convention centre. Ms. Bedi recalled the religious and cultural importance of the Union Territory. She spoke about the ancient history of Pondicherry and the origin of its name. Around 80 historians, writers, artists and journalists would participate in the three-day event.

Topics of discussion: Some of the topics included are “Nationalism: Just who is an anti-national,” Jammu and Kashmir: Erasing a blot on history,” Hindutva: Way of Life or rebranded Hinduism, “India in the world,” “Economy: Is $5trillion a mirage and “Fake News: Agenda or Technology to blame.” Kerala Governor Arif Mohammed Khan, Health and Public Works Minister of Assam Himanta Biswa Sarma and BJP general secretary Ram Madhav are the main speakers on the last day of the event. https://www.thehindu.com/news/cities/puducherry/pondy-lit-fest-begins/article29534347.ece

[3] The Print, India’s Right-wing doesn’t mind different voices within. That’s what separates it from Left, AJIT DATTA, Updated: 5 October, 2019 1:05 pm IST

[4] https://theprint.in/opinion/india-right-wing-mind-different-voices-within-left-wing/301461/

[5] DD, Pondy Lit Fest: A two day literature festival in Puducherry, Oct 4, 2019

[6] https://www.youtube.com/watch?v=atGA_Vl8hFE

[7] It is unfortunate that the organizers purposely prevented some experts from Tamilnadu to attend and the proceedings were held in a very restrictive manner. Ironically, most of them spoke in English and Hindi. Most of the speakers spoke in a very generalized manner [learned from three participants]. No videos are uploaded to know what exactly they spoke. There has not been any media coverage. Lt us hope that PondyLitFest 2020 would transparent, accommodative and democratic.

சூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?

ஜூலை 26, 2016

சூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும்,  துவேஷிப்பதும் ஏன்?

Swami Vivekananda and Ingersoll -

திராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன?” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..

Jaya invited by the RKM mutt Swamijis

திக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது?: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2].  ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.

  1. விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம்அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].
  2. விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை தலையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.
  3. “சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது?”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது! பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.
  4. அதிலென்ன வீரத்துறவி விவேகானந்தர்? வீரம் இருந்தால் துறவியாக முடியாது! துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது!. விவேகானந்தர் டுபாக்கூரோ?” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].

இதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.

Karu participating Xian function

விவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா? இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].

Jayalalita inagurated 150th Swami Vivekananda celebration 2013

“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்?: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.

Swami Vivekananda is a “Paraiah” – Shudra from Kayasth community. When he became a Sanyasi, some social reformers challenged him as to how a Shudra could become a Sanyasi. He gave them suitable reply with supporting evidences from scriptures proving that Shudras were nothing but Kshatriyas: “I am not all hurt if they call me a Shudra. It will be a little reparation for the tyranny of my ancestors over the poor. If I am a Paraiah, I will be more glad, for I am the disciple of a man, who – the Brahmn of Brahmins – wanted to cleanse the house of a Paraiah[9].

M. Karunanidhi inaugurating -Vivekananda Cultural Heritage of India exhibition at the renovated Vivekananda Illam 20-12-1999 .PTI

சூத்திரன் யார்? – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.

He started Sri Ramakrishna Mission only to liberate oppressed and suppressed: “From the Math will go out men of character who will deluge the world with spirituality…………The Shudra caste will exist no longer – their work being done by machinery[10]. He defines “Shurahood” as the status of people “engaged in serving another for pay”. Then, perhaps most of the higher castes are “Shudras” and the real shudras are not, as they work for themselves and not for others to get any pay.

© வேதபிரகாஷ்

26-07-2016

Jayalalita inagurated 150th Swami Vivekananda celebration 2013.RKM

[1] http://www.viduthalai.in/home/viduthalai/medical/106888-2015-08-14-10-24-34.html

[2]  http://www.viduthalai.in/component/content/article/108-2011-02-27-14-53-35/55121-2013-02-19-10-57-21.html

[3] http://www.viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/54384-2013-02-08-12-25-25.html

[4] http://www.viduthalai.in/component/content/article/137-2012-03-26-08-36-14/54655-2013-02-12-10-54-45.html

[5] http://www.viduthalai.in/component/content/article/108-2011-02-27-14-53-35/54093-2013-02-04-10-14-14.html

[6] http://www.viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/52692–150.html

[7] தினமலர், விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00  IST

[8] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=1106&ncat=TN&archive=1&showfrom=4/25/2008

[9] Swami Vivekananda, Complete Works, Vol. III, p.211.

[10] Ibid, Vol. V, p.316

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

ஜூலை 3, 2016

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

திருவள்ளுவர் கங்கை சிலை

தருண் விஜய் அரசியல் செய்கிறாரா?: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது.   மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.

திருவள்ளுவர் ஓவியங்கள்திருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தாபிரச்சினை என்ன?: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்[1] என்றது விகடன்.  ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3].   ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.

ஜாதி பிரசினையில் சிக்கிய வள்ளுவர் சிலை - 02_07_2016_010_010உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர் தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.

கருணாநிதி, தருண் விஜய்தருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய்,என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.

திருவள்ளுவர் ஓவியம் - கே.ஆர். வேணுகோபால சர்மாதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படிகருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”.  ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].

Valluvar sttue - DK response - Viduthalai - 02--07-2016சிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா?: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்? அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.

© வேதபிரகாஷ்

03-07-2016

[1] http://www.vikatan.com/news/tamilnadu/65670-tiruvalluvar-statue-fails-to-launch-in-haritwar.art

[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[7] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

[8] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

 

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1)

ஓகஸ்ட் 22, 2015

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1)

Gajendra Chauhan

Gajendra Chauhan

கஜேந்திர சௌஹான் நியமனமும், இடதுசாரி மாணவர்களின் ஆர்பாட்டமும்: ஜூன்.5, 2015 அன்று கஜேந்திர சௌஹான் என்ற இந்தி நடிகர் புனே திரைப்படக் கல்லூரி [Chairman of the Film and Television Institute of India (FTII)] சேர்மன் பதவி நியமிக்கப்பட்டார். ஆனால், அங்கிருக்கும் சில இடதுசாரி மாணவ அமைப்புகள், இது நிறுவனங்களை காவிமயமாக்கும் முயற்சிகளில் ஒன்று என்று விமர்சித்து போராட்டத்தை ஆரமித்தனர். ஆனால், தனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுங்கள், தான் மற்றவர்களைவிட திறமைசாலியாக செயல்பட்டுக் காட்டுவேன் என்று கேட்டுக் கொண்டார்[1]. முகேஷ் கன்னா, சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, ராஸா மூரத், ராஜ்வர்தன் சிங் ராத்தோர், பைன்டல் போன்றோர் இவரது நியமனத்தை ஆதரிட்த்துள்ளனர். ஆனால், பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றவர்கள் இதை எதிர்த்துள்ளனர். சௌஹான் சினிமா மற்றும் டெலிவிஷன் சங்கத்தில் 20 வர்டங்களாக பணியாற்றி வந்துள்ளார் மற்றும் ஒரு வருடம் தலைவராகவும் இருந்துள்ளார். 2004ல் பிஜேபியில் சேர்ந்தார், அதன் கலாச்சாரப் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்த ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, இடதுசாரி மாணவக் குழுக்கள் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

ftii-protest-759

ftii-protest-759

முந்தைய தலைவர்களும், அவர்களது பின்னணியும்: இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம், ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இச்சங்கத்தின் தலைவர், மற்ற சங்கக்குழுக்களின் தலைவராகவும் செயல்படுகிறார். இதுவரை, இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர்கள்[2]:

எண் முந்தைய சேர்மென் பொறுப்பு வகித்த காலம்
இருந்து வரை
1 அன்வர் ஜமால் கித்வாய் November 1, 1974 September 30, 1977
2 எஸ்.எம்.எச்.பர்னி November 25, 1975 September 30, 1977
3 ஆர்.கே. லக்ஷ்மண் November 1, 1977 September 30, 1980
7 ஸ்யாம் பெனகல் February 5, 1981 September 30,1983
8 ஸ்யாம் பெனகல் September 1989 September 30, 1992
9 மிரினால் சென் April 9, 1984 September 30, 1986
10 அடூர் கோபாலகிருஷ்ணன் September 1, 1987 September 1989
11 அடூர் கோபாலகிருஷ்ணன் November 21, 1992 September 30,1995
12 மஹேஷ் பட் November 20, 1995 September 30, 1998
13 கிரிஸ் கார்னாட் February 16, 1999 October 10, 2001
14 வினோத் கன்னா October 12, 2001 February 2002
15 வினோத் கன்னா March 4, 2002 March 3, 2005
16 யு.ஆர்.அனந்தமூர்த்தி March 4, 2005 March 3, 2008
17 யு.ஆர்.அனந்தமூர்த்தி March 4, 2008 March 3, 2011
18 சயீத் அக்தர் மீர்ஜா  March 4, 2011 March 3, 2014

இவையெல்லாமே அரசியல் சார்பு நியமங்களே, ஆனால், அப்பொழுதெல்லாம் யாரும் இவர்கள் இந்தந்த சித்தாந்தங்களை சேர்ந்தவர்கள் என்று யாரும் அடையாளம் காணப்படவில்லை, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதில் சிலர் இரண்டு முறையும் பதவி வகித்திருக்கின்றனர், அப்படியென்றால்ணிவரைவிட வேறு யாரும் தகுதியானவர்கள், சிறந்தவர்கள் இல்லையா அல்லது கிடைக்கவில்லையா, அவர்கள் மற்றவர்களை விட மிகச்சிறந்த திறமைசாலிகளா அல்லது அதிக தகுதியுடையவர்களா என்றும் யாரும் கேட்கவில்லை. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையினைக் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. இவர்கள் எல்லோரும் தத்தமக்கு என்று சித்தாந்தங்களை கடைபிடித்து வந்தார்கள், அவ்வாறே அங்கு வேலைசெய்தபோது, ஆதரவு கொடுத்தார்கள். இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை[3].  இனி அவர்களின் பின்னணியைப் பார்ப்போம்.

Adoor Gopalakrishnan

Adoor Gopalakrishnan

அடூர் கோபாலகிருஷ்ணன் (1987-1995): FTII தலைவராக பணியாற்றிய இவர் ஒரு மறைவு-கம்யூனிஸவாதி (crypto-communist). இவரது படங்களில் கம்யூனிஸ வாத-விவாதங்கள் இருக்கும். ஆனால், இவரது சித்தாந்த சார்பை யாரும் தட்டிக் கேட்கவில்லை, அப்பொழுது, நிறுவனங்கள் கம்யூனிஸமயமாக்கப்படுகிறது என்று யாடும் அலறவில்லை. உண்மையில் கடந்த 70 வருடங்களாக “சோசியலிஸம்” போர்வையில், கம்யூனிஸ்டுகள் நிறைய அரசு நிறுவனங்களில் பதவிகளைப் பெற்று, அவற்றை சித்தாந்தமயமாக்கி இருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால், இப்பொழுது, “பாஜக அரசின் பாசிசச் செயல்: சமீபத்தில் ராஜேந்தர் சௌஜஹான் நியமனத்தை எதிர்த்துப் பேசியுள்ளார்[4]. இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கண்டனம்”, என்றெல்லாம் பேசியுள்ளார்[5]. ஆக, இவரது எதிர்ப்பில் கம்யூனிஸ பிரியோகங்கள், சொல்லாடங்கள் முதலியவை இருப்பதை கவனிக்கலாம்.

Janab Mahesh Bhatt and his daughter Puja and actress

Janab Mahesh Bhatt and his daughter Puja and actress

மஹேஷ் பட் (1995-1998): மஹேஷ் பட் ஒரு முஸ்லிம், லோரைன் பிரைட் (Lorraine Bright ) என்ற கிருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு பூஜா பட் மற்றும் ராஹுல் பட் பிறந்தனர். பூஜா பட் நிர்வாணமாக போட்டோக்கு போஸ் எல்லாம் கொடுத்துள்ளார், ஆபாசமாக பலபடங்களில் நடித்துள்ளார். ராஹுல் பட்டுக்கும், 26/11 தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லிக்கும் தொடர்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. 1970ல் பர்வீன் பாபி என்ற நடிகைக்கூட தொடர்பு வைத்திருந்தார், திருமணம் செய்து கொண்டார். 1986ல் சோனி ரஜ்தான் என்ற இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறுஈவரது வாழ்க்கையில் “தார்மீகமாக” எதையும் பேச முட் இயாது, ஆனால், “நவீனத்துவத்தில்” இவையெல்லாம் சாதாரணமானது என்று வாதிக்கப்படும், நியாயப்படுத்தப்படும். ஷஹீன் பட், அலியா பட் இவர்களுக்குப் பிறந்தனர். இவரது பெண்கள் திரைப்படங்களில் ஆபாசமாக நடித்து வருகின்றனர். இவரே பல நடிகைகளுடன் ஆபாசமாக இருந்துள்ளார். மகளுக்கு “லிப்-டு-லிப்” முத்தமமெல்லாம் கொடுத்துள்ளார். எம்ரான் ஹாஸ்மி இவருடைய மைத்துனர். காங்கிரஸ்காரர், 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டபடி பேசியுள்ளார். ஆனால், இவரது தகுதி, திறமை, நிலை முதலியவற்றைப் பற்றி 1995-98ல் யார்ம் பேசவில்லை. இவர் மாணவ-மாணவியர்களுக்கு ஏற்றவரா என்றேல்லாம் ஊடகங்கள் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. அவரது புகைப்படங்கள், போஸ்டர்களை எல்லாம் ஆதாரங்களாக போட்டு, அவர் ஒரு சி கிரேட், டி கிரேட் என்றெல்லாம் தூஷிக்கவில்லை.

Girish Karnad

Girish Karnad

கிரிஸ் கார்னாட் (1999-2001): இவர் தமிழ் மற்ற மொழி படங்களில் சிறிய வேடக்களில் தான் நடித்துள்ளார். அவற்றை எந்த கிரேட்டில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும். கிரிஸ் கார்னாட், வி.எஸ். நைபால் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதற்கு 2012ல் டாடா இலக்கிய விழாவில் கண்டபடி பேசின்னார். அதாவது தன்னுடைய செக்யூலரிஸ நிலைப்பாட்டை எடுத்துக் காட்டினார். ரவீந்தரநாத் தாகூர் இரண்டம் தரமான நாடக எழுத்தாளர், அவருடைய நாடகங்கள் எல்லாம் பார்க்கவே சகிக்காது என்றெல்லாம் 2012ல் பேசியுள்ளார். ஆனால், மாணவர்கள் இவர் மீது கொதித்தெழவில்லை, ஆர்பாட்டம் செய்யவில்லை. 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக பேசியுள்ளார். இத்தகைய பேச்சுகள் முதலியன அவவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன.

© வேதபிரகாஷ்

22-08-2015

[1] http://www.thehindu.com/features/friday-review/i-am-a-self-made-man/article7329869.ece

[2] http://www.ftiindia.com/management.html

[3] http://www.ndtv.com/india-news/with-one-para-cv-gajendra-chauhan-was-selected-film-institute-ftii-chief-1202989

[4] http://cinema.dinamalar.com/tamil-news/34522/cinema/Kollywood/Gajendra-Chouhan–must-quit-:-Adoor-Gopalakrishnan.htm

[5]  http://www.headlines4u.com/2015/07/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2/.