Archive for the ‘ரௌல் காந்தி’ Category

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரைசொன்னது!

ஜூன் 25, 2023

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரை சொன்னது!

பீஹாரில் 16 கட்சிகளின் கூட்டம்: அடுத்த ஆண்டு 2024ல் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் 23-06-2023 அன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் நடைபெற்றது. இதில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (53 வயது), தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

23-06-2023 அன்று லாலு பிரசாத் யாதவ் ராகுலை திருமணம் செய்து கொள் என்றது: லாலு இந்தியில் பேசியதை தமிழ் ஊடகங்கள் வரிந்து கொண்டு செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தி தெரியாது போடா என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியும், பிஹாரிகளை நக்கல் அடித்தும் வரும் தமிழ் ஊடகங்களுக்கு இதில் என்ன அக்கரை என்று தெரியவில்லை. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் [75 வயது] கூறியதாவது[1], “ராகுல் காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே கூறியிருக்கிறேன்[2]. நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்[3]. ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை[4]. இன்னும் காலம் கடக்கவில்லை. தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். ராகுலின் திருமணம் குறித்து அவரது தாயார் சோனியா காந்தி தன்னிடம் பேசியுள்ளார்[5]. நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும்[6], பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது[7]. அப்படி கல்யாணம் செய்து கொள்லும் பொழுது, நாங்கள் எல்லோரும் பாராத் / ஊர்வலத்தில் கலந்து கொள்வோம்,” என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இப்போது நீங்கள் சொன்னது நடக்கும் என்றார்[8].  கடந்த ஜனவரி மாதம், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது அளித்த பேட்டியில், சரியான பெண் கிடைக்கும்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது[9]..  டிசம்பரில், ராகுல் காந்தி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தாயார் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அவரது பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் பண்புகளை தனது துணை கொண்டிருக்க விரும்புகிறேன் என்று கூறினார்[10].

19-06-2023 அன்று ராகுலின் பிற்ந்த நாள்: 19-06-1970 அன்று பிறந்த ராகுலுக்கு 53 வயதாகிறது. 23-06-2023 அன்று இக்கூட்டம் என்றால், சரியாக சென்ற 19-06-2023 ராகுலின் பிறந்த நாள் ஆகிறது. எனவே ஒருவேளை, 75 வயதாகும் லாலு அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்லியிருக்கலாம்[11]. ஆகவே, தமாஷுக்காக சொல்லவில்லை[12]. லாலு முன்னர் ராகுலின் தந்தையால் தான் மாட்டுத் தீவின ஊழலில் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குச் சென்றார். இப்பொழுது, அதே குடும்ப வாரிசுடன் கூட்டு வைத்துக் கொள்கிறார், என்றும் ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மேலும், ராகுலின் பிறந்த நாளையே காங்கிரஸ்காரர்கள் மறந்து விடார்களா அல்லது கொண்டாடக் கூடாது என்ற மேலிடத்து உத்தரவா என்று தெரியவில்லை. 53-வயது என்றால், ராகுலின் இளமைத் தனம் போய்விடும் என்று நினைத்தார்கள் போலும். இருப்பினும், சமீபத்தில் தாடி வைத்துக் கொண்டபோது, நரைத்த முடி தெரியத்தான் செய்தது.

பிஜேபியின் திருமணஒப்புமை கிண்டல்: லாலு ராகுலுக்கு அற்வுரைக் கொடுத்தாரா, கிண்டல் அடித்தாரா என்ற நிலையில், பிஜேபிகாரர்களும் விடவில்லை. நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார்[13]. ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்) என்று தெரியவில்லை[14]. பெண்ணும் யார் என்று புரியவில்லை[15]. ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள் என பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து கிண்டலடித்துள்ளார்[16]. ஒருவேளை ராகுல் தான் பிரதம மந்திரி வேட்பாளர் என்பதனை மறைமுகமாகக் கூறினார் போலும். இந்தியில் பேசியதால், இந்தி தெரியாத கட்சித் தலைவர்கள் தமக்கு இந்தி தெரியாது என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்யும்.

2013ல் கொடுத்த விளக்கம்பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2013ல் ராகுல் விவாகம் பற்றி நடந்த விவாதம்: கடந்த  2013 மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும் ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[17]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[18]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[19]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[20]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

© வேதபிரகாஷ்

25-06-2023


[1] தினமணி, ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்: லாலு பிரசாத், By DIN  |   Published On : 23rd June 2023 09:56 PM  |   Last Updated : 23rd June 2023 09:56 PM.

[2] https://www.dinamani.com/india/2023/jun/23/lalu-prasad-yadav-asks-rahul-gandhi-to-get-married-4026423.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா,  ராகுல் நாங்க சொல்றத கேட்கணும்.. செல்லமாக மிரட்டிய லாலு பிரசாத்.. வெடித்து சிரித்த அரசியல் தலைவர்கள்!,  By Vignesh Selvaraj Published: Friday, June 23, 2023, 18:52 [IST],

[4] https://tamil.oneindia.com/news/india/lalu-prasad-asks-rahul-gandhi-to-get-married-made-fun-at-press-meet-after-opposition-meeting-518035.html

[5] நக்கீரன், திருமணம் நடக்கும்என்ற ராகுல்காந்தி; பாட்னாவில் நடந்த சுவாரசியம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 24/06/2023 (08:26) | Edited on 24/06/2023 (08:50).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/you-have-said-it-it-will-happen-rahul-gandhi-interesting-happenings-patna

[7] சமயம், தாடியை எடுத்துட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பாராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் அட்வைஸ்!, Authored by Bahanya Ramamoorthy | Samayam Tamil |,

[8] https://tamil.samayam.com/latest-news/india-news/lalu-prasad-yadhav-advise-to-ragul-gandhi-to-get-married-soon-in-patna-meeting/articleshow/101232555.cms

[9] காமதேனு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்திய லாலு பிரசாத் யாதவ்ராகுல் கூறிய பதில் என்ன?, Updated on : 23 Jun, 2023, 9:10 pm

[10] https://kamadenu.hindutamil.in/politics/rahul-gandhi-was-asked-by-lalu-yadav-to-get-married-his-response

[11] இந்தியன்.எக்ஸ்பிரஸ், பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலகலப்பு: ராகுல் திருமணத்தை வலியுறுத்திய லாலு! , Written by WebDesk, tamil news, June 23, 2023 20:15 IST

[12] https://tamil.indianexpress.com/india/still-not-too-late-to-get-married-lalu-prasad-yadav-makes-a-wisecrac,k-at-rahul-gandhi-at-patna-meet-704805/

[13] மாலைமலர், திருமண ஊர்வல அலங்கரிப்பில் மாப்பிள்ளை யார்?- பா.ஜனதா கிண்டல், Byமாலை மலர்23 ஜூன் 2023 10:10 AM (Updated: 23 ஜூன் 2023 10:11 AM).

[14] https://www.maalaimalar.com/shots/bjp-mp-ravi-shankar-prasad-takes-jibe-on-the-opposition-meeting-who-is-the-groom-pm-contender-626240

[15] புதியதலைமுறை, அனைவரும் மாப்பிள்ளைகள்…” எதிர்க்கட்சிக் கூட்டத்தை விமர்சித்த பாஜக!, Prakash J, Published on : 24 Jun, 2023, 8:50 pm.

https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[16] https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[17]  Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[18]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[19] http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[20] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html