Archive for the ‘ஊக்கு’ Category

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

நவம்பர் 1, 2022

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

காஞ்சுக்கல் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலையில் மூவர் கைது: கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45. இவர் லிங்காயத் சமுதாய மடமான இங்கு 1997 முதல் பசவலிங்க சுவாமி மடாதிபதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார். மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் 30-10-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன[2]. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[3]. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது[4]. அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயரை மடாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

மடங்கள் அரசு, அதிகாரம் மற்றும் அரசியலுடன் சம்பந்தப் பட்டிருப்பது: கர்நாடகாவைப் பொறுத்த வரையில், லிங்காயத் சாமிகள் அதிக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழகத்து சங்கராச்சாரியார் போல, எல்லா அரசியல்வாதிகளும் இவர்களிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோலவே, இந்திரா காந்தி, சோனியா காந்தி, இப்பொழுது ராகுல் காந்தி என்று எல்லோரும் வந்து, இவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். மேலும், பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், கோடிகணக்கில் நிலம், முதலிய சொத்துகளும் இருக்கின்றன. பள்ளிகள் என்று நிறுவனங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. இதனால், ஆளும் அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும், மடங்களுக்கும் சம்பந்தங்கள், உறவுகள் மற்றும் போக்குவரத்துகள், பலவிதங்களில் இருந்து கொண்டே இருக்கும். ஆட்சி, அதிகாரம் மாறினாலும், இத்தகைய உறவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறாகத்தான், இந்த மடாதிபதியு சிக்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவ்வாறு திட்டமிட்டு தற்கொலைக்குத் தூண்டியது இன்னொரு மடாதிபதி.

இதையடுத்து, போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: ராம்நகர எஸ்.பி, சந்தோஷ் பாபு, 30-10-2022 அன்று இந்த விவரங்களை கூறினார். தற்கொலை செய்து கொண்ட மடாதிபதிக்கு போன் செய்து பேசியது, தொட்டபல்லாபூரைச் சேர்ந்த நீலாம்பிகா, 22. இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியான இவருக்கு, கன்னுார் மடாதிபதி மிருத்யுஞ்ஜயாவின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தனக்கு பணகஷ்டம் என்று சொல்லி ரூ 500, 1000 என்றெல்லாம் வாகிக் கொண்டிருக்கிறாள். இந்த இரண்டு மடாதிபதிகளும் உறவினர்கள். இருவரது மடங்களும் மாகடி பகுதியில் தான் உள்ளன. பண்டி மடாதிபதியின் புகழை கெடுத்தால், தனக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கன்னுார் மடாதிபதி கணக்கு போட்டார். மேலும் இரண்டு மடங்களுக்கும் இடையே நிலம் பற்றி வழக்குகளும் உண்டு. இதனால், நீலாம்பிகையை வைத்து, காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மாட்ட வழி வகுத்தார். எனவே, தனக்கு அறிமுகமான நீலாம்பிகாவை, அவரிடம் ‘வீடியோ’ காலில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் பேச வைத்து, பதிவு செய்து கொண்டார்[5]. ஏப்ரலில் இந்த வீடியோக்கள் எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்த மாணவியும் ஏதோ காரணங்களுக்காக ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்துள்ளாள் என்று தெரிகிறது.

கன்னூர் மடாதிபதி வீடியோவை வைத்து காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மிரட்டியது: இந்த வீடியோவை பண்டி மடாதிபதியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ந்தார். மேலும், அந்த மாணவியையும் வைத்து எச்சரிக்க செய்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு தொடர்ந்து அடிக்கடி தொந்தரவு செய்து, நிலைமை மீறி மனத்தளவில் பாதிக்க்ப் பட்ட நிலையை அடைந்துள்ளார். அத்தகைய மிரட்டல்-சதாய்ப்புகளால், பயந்து, மனவலிமை இழந்து. 24-10-2022 அன்று, அவர் தற்கொலை செய்து கொண்டார்[6]. அவர் எழுதி வைத்த கடிதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை செய்தனர். முழு விவரங்கள், வீடியோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்தப் பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தனர். இதையடுத்து ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் –

  1. பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி  நீலாம்பிகா, இவர்களுக்கு உதவியாக இருந்த
  2. கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருத்யுஞ்ஜயா சுவாமி,
  3. மகாதேவய்யா, ஓய்வு பெற்ற ஆசிரியர், இப்பொழுது வக்கீல்

ஆகிய மூவரையும் போலீசார் 30-11-2022 அன்று கைது செய்தனர்[7].

போன்களை கைப்பற்றி உரையாடல்களையும் கேட்டு வபுலன் விசாரணை நடத்தப் பட்டது: கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், மாணவி நீலாம்பிகா, தற்கொலை செய்த மடாதிபதி தவிர, மேலும் பல பிரமுகர்களுக்கும் போன் செய்ததுடன், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்களையும் அனுப்பி உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், பங்கஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பண்டி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்கள் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்[8]. இதனால் மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீலாம்பிகா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தற்கொலைக்கான காரணம் என்ன?: இதுபற்றி விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்[9]. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர்[10]. மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை வைத்து அந்த பெண் உள்பட மேலும் சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், வழக்குக்கும் என்ன தொடர்பு? உள்ளது என்பது பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் மடத்தில் உள்ளவர்கள் உள்பட பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கைதானவர்களிடன் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்து மடாதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம்: முன்னமே பல சம்பந்தப் பட்ட பதிவுகளில் அகசியுள்ள படி, மடாதிபதிகள், தங்களது சீடர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட, குடும்ப, இல்லற மற்றும் பொருளாதார பிரச்சினைகள், குறைகள் முதலியவற்றை சொல்லி, தீர்வு காண முறையிடுவர். மடாதிபதிகள் இறை நம்பிக்கையுடன், எல்லாம் நல்லபடி நடக்கும் என்று தான் ஆசி வழங்குவார். அவ்வாறே நடக்கும் போது சீடர்கள், பக்தர்கள் முதலியோர் சந்தோஷம் அடைவர், நடக்கா விட்டால், வெளிப்படையாக பிரச்சினைக்குக் காரணமானவர்களைக் குறிப்பிட்டு, சமாதானம்  மத்தியஸ்தம் செய்ய கோருவர். பிடிவாதமாக, அடம் பிடித்து, ஆர்பாட்டமும் செய்வர். அழுது கலாட்டா செய்யும் ஆட்களும் உண்டு. அந்நிலைகளில், முடிந்த வரை மடாதிபதி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார். ஆனால், முடியாத போது, பிரச்சினைகள் வேறு வகையில் உருவெடுத்து, குற்றங்கலிலும் முடிகிறது. மடாதிபதிகளுக்குள் பிரச்சினை ஏற்படும் போது, சட்டரீதியில் நீதிமன்றங்களில் வழக்குகளாகச் செல்கின்றன. நிச்சயமாக அங்கு வழக்கு ஒரு மடாதிபதிக்கு வெற்றி என்றால், இன்னொரு மடாதிபதிக்கு தோல்வி என்றாகிறது. பிறகு, மேல்முறையீடு என்றெல்லாம் போகலாம். ஆனால், மடாதிபதிகள் தங்களது தார்மீக, தரும, மதக் கடமைகள், கிரியைகள், செயல்கள் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். அந்நிலைகளில் இத்தகைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] தினமலர், கர்நாடகா மடாதிபதி தற்கொலை விவகாரம்: கைதான கல்லூரி மாணவி குறித்துதிடுக், Updated : நவ 01, 2022  09:24 |  Added : நவ 01, 2022  09:21.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3159346

[3] தினத்தந்தி, மடாதிபதி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது, தினத்தந்தி அக்டோபர் 31, 2:59 am.

[4] https://www.dailythanthi.com/News/India/abbot-suicide-case3-people-including-a-college-student-were-arrested-826146

[5] தினத்தந்தி, ஆடையின்றி வீடியோ காலில் பேசிய சாமியார் உயிரை காவு வாங்கிய சபலம்இளம்பெண் பகீர் வாக்குமூலம், By தந்தி டிவி 31 அக்டோபர் 2022 2:16 PM

[6] https://www.thanthitv.com/latest-news/karnataka-bandemutt-swamiji-sucide-145746

[7] தினத்தந்தி கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல், நவம்பர் 2, 1:23 am (Updated: நவம்பர் 1, 10:18 am)

[8] https://www.dailythanthi.com/News/India/including-the-arrested-college-student3-people-in-police-custody-for-6-days-826808

[9] தமிழ்.ஒன்.இந்தியா, ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல், By Nantha Kumar R, Published: Sunday, October 30, 2022, 0:21 [IST].

[10] https://tamil.oneindia.com/news/bangalore/honeytrap-karnataka-lingayat-seer-suicide-case-bangalore-woman-and-2-others-arrested-by-police-482828.html

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

ஓகஸ்ட் 22, 2015

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

U R Ananathmurthy and his christian wife Esther

U R Ananathmurthy and his christian wife Esther

யு.ஆர். அனந்தமூர்த்தி (2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம்  முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.

Saeed-Akhtar-Mirza

Saeed-Akhtar-Mirza

சயீத் அக்தர் மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

Saeed aktar mirza, babar and masjid

Saeed aktar mirza, babar and masjid

கஜேந்திர சௌஹான் ஒருபுரோன் ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவரை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

தகுதிதராதரம்பாண்டித்யம் முதலியன எவ்வாறு எடைபோடுவது?: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியுமா?: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும்  இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்! இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

22-08-2015

[1] He married a Christian lady, Esther, and faced many problems for his inter-religious wedding. http://www.firstpost.com/living/ur-ananthamurthy-pioneer-kannada-literatures-navya-movement-1677817.html

[2] http://scroll.in/article/675713/kannada-writer-ananthamurthy-loved-whiskey-and-a-good-argument

[3] . On the first day of class, a seminar on Indian mythology, he looked around at his ten or so students, and said, “Why don’t we go to my house, and continue the class over dinner and whiskey?” And so we abandoned the classroom for the rest of the term, and met at his house every week. The classes, fueled by good Scotch and his wife Esther’s tamarind rice, went on until one in the morning.

Suketu Mehta, Kannada writer Ananthamurthy loved whiskey and a good argument- A former student pays tribute to the towering writer who passed away on Friday, aged 81.,  Aug 23, 2014 · 07:46 am

[4] http://parallelcinema.blogspot.in/2005/08/salim-langde-pe-mat-rodont-cry-for.html

[5] The delicate relationship between a 15-year-old girl and her grandfather is used to describe how the growing political tensions between Muslems and Hindus in 1992 led to the destruction of a medieval Muslim mosque and subsequently, violent rioting in the streets of Bombay.

[6]In a debate moderated by TIMES NOW’s Editor-in-Chief Arnab Goswami, panelists — Gajendra Chauhan, Chairman, FTII, Paintal, Actor; Uday Shankar Pani, Filmmaker & Alumni FTII; Narendra Pathak, Member, FTII; Anupam Kher, Actor; Vinay Shukla, Filmmaker and Writer; Aruna Raje Patil, Filmmaker; Prateek Vats, Alumni, FTII; Saurabh Shukla, Actor; and Vikas Urs, Student, FTII (Cinematography).

 http://www.timesnow.tv/Debate-FTIIMahabharat-Bollywood-fights-Yudhisthira/videoshow/4478061.cms

[7] http://www.firstpost.com/politics/gajendra-chauhan-to-pahlaj-nihalani-the-unstoppable-rise-of-the-anti-intellectuals-under-modi-govt-2376458.html

[8] Rishi Majumder, Gajendra Chauhan to Pahlaj Nihalani: The unstoppable rise of the anti-intellectuals under Modi govt, Aug 3, 2015 15:44 IST.

[9] http://www.thehindu.com/features/magazine/bishwanath-ghosh-gajendra-chauhans-appointment-as-ftii-chairman/article7460395.ece

[10] Biswanath Ghosh, Ideology vs stature, Updated: July 26, 2015 01:14 IST

[11] Vivek Deshpande, The problem with Gajendra Chauhan -Debate over the appointment of the FTII chairman has acquired an elitist hue,   Updated: July 16, 2015 12:26 am.

[12] http://indianexpress.com/article/opinion/columns/the-problem-with-gajendra-chauhan/

[13] Mohua Chatterjee & Himanshi Dhawan, Chauhan was RSS pick for top job at FTII, TNN | Jul 11, 2015, 12.08 AM IST

[14] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Chauhan-was-RSS-pick-for-top-job-at-FTII/articleshow/48025610.cms

[15] Deeptiman Tiwary, Gajendra Chauhan: A 34-year veteran of C-grade exploits, TNN | Jul 11, 2015, 01.19 AM IST

[16]  http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Gajendra-Chauhan-A-34-year-veteran-of-C-grade-exploits/articleshow/48026077.cms

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)

மார்ச் 6, 2014

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)

திருமலையில் ஜகன் கலாட்டா 03-03-2014

திருமலையில் ஜகன் கலாட்டா 03-03-2014

ஞாயிற்றுக்கிழமை 03-03-2014 அன்று  திருமலையில்  ஜெகன்மோகன்  ரெட்டி  கலாட்டா:  ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஞாயிற்றுக் கிழமை 03-03-2014 அன்று, திருப்பதியில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அன்று இரவு, திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, ஏழுமலையானை தரிசிக்க சென்றார். மாலை 5:00 மணிக்கு, அவருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது TTD அதிகாரம் கிருத்துவரான ஜகனுக்கு VIP தரிசனம் ஞாயிற்றுக் கிழமை அன்று மிகக் கஷ்டப்பட்டு கொடுத்தது. பாராளுமன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த சிறப்பு சலுகைக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜகன் இந்துக்கள் அல்லாதவர்கள் கையெழுத்து போட்டுத் தரவேண்டிய படிவத்தைக் கொடுக்கவில்லை என்று TTD அதிகாரிகள் கூறுகின்றனர்[1]. 6.10க்கு ஜெகனும், அவரின் ஆதரவாளர்களும், வைகுண்டம் வரிசையில் நுழைந்தனர். ஜெகன், செருப்பு அணிந்தபடி நுழைய முயற்சித்தார்[2]. ஆரம்பத்திலேயே செருப்புகளை கழட்டி வைத்து வரவேண்டும் என்ற அறிப்புப் பலகைகள் பல இடங்களில் பல மொழிகளில் பெரியதாகவே வைக்கப் பட்டுள்ளன. மாடவீதிகளிலேயே செருப்புடன் வரக்கூடாது. எனவே, தெலுங்குக் காரர்களான இவர்களுக்கு இவையெல்லாம் தெரியாது என்பதில்லை.

ஜகஜால ஜகன் கலாட்டா 2014

ஜகஜால ஜகன் கலாட்டா 2014

விதிமுறைகளை  மீறி  கோவிலில்  நுழைந்த  கிருத்துவக்  கூட்டம்: வி.ஐ.பி.,க்கள் தரிசன விதிமுறைப்படி, வி.ஐ.பி.,யுடன், 15 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், ஜெகனுடன், சுமார், 300 பேர் சென்றனர். டிக்கெட் பெறாத ஜெகனின் பாதுகாவலர்களை, போலீசார், வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு, அராஜகத்துடன் அவர்கள், ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்[3]. இதனால் தான் ஜி. பானுபிரகாஷ ரெட்டி என்ற மாநில தலைவர், “VIPக்கள் திருமலைக்கு வரும்போது எந்தவிதமான சர்ச்சைகளையும் கிளப்பக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது ஜனன்மோஹனின் கட்சி அலுவலகமோ அல்லது இடுபுலபய எஸ்டேட்டோ அல்ல, அதனால், இங்கு இவ்விதமாக முறைதவறி நடந்து கொண்டிருக்கக் கூடாது. செருப்புடன் தான் செல்வேன் என்று அடாவடி செய்திருக்கக் கூடாது. வண்டிகள் ஹாரன்கள் அடிக்க, ஆர்பாட்டம் செய்து கொண்டு, கத்திக் கொண்டு, 300க்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள் பாதுபாப்பு அதிகாரிகளைத் தள்ளிக் கொண்டு, கோவிலுக்குள் நுழைய முயற்சித்தது, புனிதத்தை கெடுத்த செயலாகும்”, என்றுவிளக்கினார்[4].

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - புகைப்பட ஆதாரம்

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்

தி.தி.தேவஸ்தான  டிரஸ்ட்  போர்டின்   முக்கிய  அதிகாரிகள்  முன்னிலையில்  நடந்த  அத்துமீறல்கள்: “ஶ்ரீ வெங்கடேஸ்வரர் எல்லோருக்கும் கடவுள் தான் (அந்தரிவாடு = அதாவது எல்லோருக்கும் இறைவன்)”, இருப்பினும் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். திருமதி விஜயம்மா தான் செல்கின்ற இடத்திற்கெல்லாம் பைபிளை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஆனால், படிவத்தில் கையெழுத்துப் போடவேண்டும் எனும்போது, அதெல்லாம் தேவையில்லை என்கிறார். இவர் அதனை எப்படி நியாயப்படுத்த முடியும்?”, அவர் மேலும் தொடர்ந்தார்[5]. பி. கருணாகர ரெட்டி மற்றும் பாஸ்கர் ரெட்டி முதலியோர் முன்னிலையில் இத்தகைய அத்துமூறல்கள் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகும் என்று கூறி முடித்தார். இருவருமே தி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் [TTD trust board] முக்கிய அதிகாரிகள் ஆவர். மேலும் உள்ளே நுழைந்தவர்கள் தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கவில்லை[6], எந்த பாதுகாப்பு சோதனையிலும் உட்படுத்தப்படவில்லை.

ஜகன் அத்துமீறல் தி இந்து போட்டோ

ஜகன் அத்துமீறல் தி இந்து போட்டோ

தடாலடியாக  கோவிலில்  நுழைந்த  மகனும், ஊழியம்  செய்யும்  மறுமகனும்: மே 2012லும் ஜகன் இதே மாதிரி அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளது நினைவு கூறத்தக்கது[7]. அப்பொழுது, “ஜெய் ஜகன்” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்றனர்[8].

Jagan, a Christian, along with his 60 followers, including former Tirumala Tirupati Devasthanams (TTD) trust board chairman Bhumana Karunakara Reddy, entered the temple through the Vaikuntham queue complex to have a VIP break darshan of Lord Venkateshwara.Though the TTD authorities tried to approach him with the declaration form, which he was supposed to sign stating that he has faith in the temple deity, Jagan ignored the authorities and went into the temple to have the darshan.

What was more shocking to the devotees was Jagan’s followers raising slogans of “Jai Jagan” as they were entering into the main temple complex. The other devotees raised a protest at this as Jagan passed by them, but he ignored them.

TTD executive officer L V Subrahmanyam, who ordered an inquiry into the incident following complaints by several devotees, said as per the rules, it was mandatory on the part of non-Hindus to sign a formal declaration for the darshan of Lord Venkateshwara saying they had complete faith in the Lord. Jagan, being a born Catholic Christian, should have signed the declaration form.

அப்பொழுதும் இதே மாதிரியாகத்தான்ஆவர்கள் நடந்து கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் எனும் போது, கோவிலுக்கு வந்து கலாட்டா செய்யும் இந்த அரசியல்வாதிகளை ஓட்டாளர்கள் கவனிக்க வேண்டும், அதிலும் இப்படி கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அதிரடியாக, அத்துமீறல்களை செய்ய எப்படி அனுமதிக்கிறர்கள் என்று தெரியவில்லை.

சாமுவேலுக்கு நடக்கும்  கல்லறை சடங்கு, ஊழியம்

சாமுவேலுக்கு நடக்கும் கல்லறை சடங்கு, ஊழியம்

குடும்பமே  கத்தோலிக்கப்  பிரச்சாரத்தில்  ஈடுபட்டுள்ளது: கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த இக்குடும்பம் முன்னரே பற்பல வித மதரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. YSR பதவியில் இருக்கும் போது, இஸ்ரேலுக்கு தீர்த்தயாத்திரை போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, ரோத்ஸ்சைல்ட் [Rothschild controlled Jewish industrialists] என்ற தொழிலதிபரை சந்தித்து, அவரது வியாபாரத்தை ஆந்திராவிற்கு வரும்படி செய்தார், தனக்கும் வரும்படி வந்தது. கடப்பாவைச் சேர்ந்த இக்குடும்பம் மதமாற்றத்தை ஊக்குவிக்க குவாரிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் போதே, ஏழைக் கிராமத்தினரை வேலைக்கு அமர்த்தும் சாக்கில் அவர்களை கிருத்துவத்தில் சேர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுசிறு குன்றுகளின் மீது சிலுவைகளை வைத்து ஆக்கிரமிப்பு வேலையை செய்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களை குடும்பம் மட்டுமல்லாது, உள்ளூர் எம்.எல்.ஏ, அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள்[9]. YSRன் மகன் இப்படி கோவிலில் நுழைகிறான் என்றால், மறுமகனோ பிரபல ஊழியனாக இருந்து, மதம் மாற்றம் செய்து வருகிறார். அனில்குமார் என்ற மறுமகன் கடப்பா மற்றும் சுற்றுப்பகுதிகளில் மதம் மாற்றம் செய்து வருகிறார். சாமுவேலின் கல்லறை அவர்களது இடுபுலயபய [Idupulayapaya] என்ற கிராமத்தில் உள்ளது. அவருக்கு கிருத்துவமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டு கல்லறை கட்டப் பட்டு, சடங்குகளும் செய்யப்பட்டன[10]. சாமுவேலின் மனைவி விஜயம்மா பொட்டும், பூவாகத்தான் வலம் வருவார், ஆனால், கையில் எப்பொழுதும் பைபிளை வைத்திருப்பார். பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பார்.

YSR family

YSR family

கத்தோலிக்கர்களின் செக்யூலரிஸ நாடகங்கள்: திருப்பதியைப் பொறுத்த வரையில், YSR ஊக்குவிப்பினால் தால் கிருத்துவர்கள் திருப்பதியில் சர்ச் கட்டிக் கொண்டது, சென்னை-திருப்பதி சாலையில் சர்ச்சுகளைக் கட்டி வருவது, கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளை கொடுத்து வருவது, திருமலையிலேயே அவ்வாறு செய்தது என்ற பலவித செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து விட்டன. ஆனால், கிருத்துவப் பிரச்சார பீரங்கில்கல் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், கிருத்துவர்களை மதரீதியில் துபுறுத்தப்படுகிறார்கள் என்று பொய்களை அவிழ்த்து விட்டது[11]. “தி இந்துவும்” இந்து இயக்கங்கள் எதிர்த்ததைப் பற்றி செய்தி வெளியிட்டது[12]. ஆகவே, கிருத்துவர்கள் மிகவும் தீவிரமாக திருப்பதி-திருமலை புண்ணிய க்ஷேத்திரங்களின் மீது தாக்குதல் செய்ய தயாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது. ஒருபுறம் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரம் வருட காலத்தைய 100-கால் மண்டபம், மடங்கள் முதலியன அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மறுபுறம், இவ்வாறான பிரச்சார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

06-03-2014


[1] TTD authorities granted VIP darshan to Jaganmohan Reddy, a Christian, in the wee hours of Sunday. But the TDP has alleged that the YSR Congress leader has violated the norms of visiting the temple by not signing the mandatory declaration.

http://www.deccanherald.com/content/389423/jagan039s-balaji-darshan-stirs-controversy.html

[2] Th, ஏழுமலையான்  கோவிலில்  ஜெகன்மோகன்  அராஜகம், 03-03-214, sennai

[4] Referring to the controversies that marked Jagan’s recent visit to Tirumala, party State spokesperson G. Bhanuprakash Reddy said it was unfortunate for the holy abode to witness such unpleasant incidents time and again and advised prominent personalities to steer clear of controversies. “We wish to remind Jagan that it is not his party office or Idupulapaya estate where he can behave the way he wants,” he said, disapproving of his reported act of walking with footwear up to the queue line. The indiscriminate blaring of horns, mobbing of his security men and around 300 of his followers gaining entry into the temple by force not only scared the devotees, but also vitiated the serene atmosphere at the temple, he charged. The party also took exception to Jagan not signing the declaration form meant for people of other faiths to indicate their belief in Lord Venkateswara.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/bjp-flays-jagan-for-sacrilege-at-tirumala/article5749607.ece

[5] “Though Sri Venkateswara is the ‘God of All’ (Andarivaadu), there are some established norms that ought to be followed. Ms. Vijayamma carries the Bible everywhere, but Jagan does not sign the declaration at Tirumala, saying there is no necessity. How does he explain it?” he questioned. He said that the occurrence of the incident in the very presence of B. Karunakar Reddy and Ch. Bhaskar Reddy, the ex-Chairman and the former ex-officio member respectively of the TTD trust board, was even more painful. He also flayed the TTD officials for succumbing to pressure and extending a welcome to Jagan that was grossly disproportionate to his protocol status.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/bjp-flays-jagan-for-sacrilege-at-tirumala/article5749607.ece

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்!

மே 9, 2013

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

ஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].

ஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].

ஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].

ஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].

பெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].

இந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].

பிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா?

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்?

“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.

ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.

© வேதபிரகாஷ்

09-05-2013


பிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை!

மே 6, 2013

பிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை!

 

காங்கிரஸ்ஆட்சியைபடிக்கிறதுகருத்துகணிப்புகளில்தகவல் (05-05-2013)கர்நாடகாவில், தேர்தலுக்கு பன் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், “காங்கிரஸ் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், மொத்தம் உள்ள, 223 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. சில தனியார், “டிவி’ சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் சார்பல், தேர்தலுக்கு முந்தைய, கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எடியூரப்பா செய்து காட்டி விட்டார் – காங்கிரஸ் திட்டம் வெற்றி பெற்று விட்டது, ஊழல் வென்று விட்டது: ஊழல் கட்சியின் தலைவி மற்றும் மகன் முதலியோர் கர்நாடகத்திற்கு வந்து, பிஜேபி கொள்ளையடுத்து விட்டது, கோடிகளை அள்ளிவிட்டது, ஊழலை ஊக்குவித்தது என்று பாட்டுப் பாடியது தெரிந்த விஷயமே. ஆனால், அவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பெங்களூரு அறிவுஜீவிகள் என்று கேட்காமல், காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபாதைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எடியூரப்பா பிறகு எப்படி பிஜேபி ஓட்டுகளைப் பெற்றுள்ளார். ஊழலில் திளைத்திருந்தால், அவரும், காங்கிரசூம் வெற்றியே பெறக்கூடாது. ஆனால், கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளனவே? அப்ப்டியென்றால், கர்நாடக மக்கள் ஊழல் காங்கிரஸுக்கு ஓட்டளித்த மர்மம் என்ன?

 

நாராயணசாமியும், கூடங்குளம்எதிர்ப்பும்: தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட இரண்டு அணு உலைகளுடன் கூடிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தை மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய அணுமின்கழகம் ஆகியவை இணைந்து இயக்குகின்றன. இந்த அணுமின்நிலையத்தின் முதல் அணு உலை, மின் உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே, ‘இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்’ என பல்வேறு காரணங்களை கூறி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

 

கிருத்துவக்கூட்டங்களின்போலிஎதிர்ப்பும், காங்கிரசும், வழக்குநடத்தும்விதமும் (13-09-2012): சுப்ரீம் கோர்ட்டில் அணு மின்திட்ட எதிர்ப்பாளர்கள் பல்வேறு வழக்குகளையும் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில், வல்லுனர் குழு பரிந்துரை செய்த பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி இருப்பதுடன், அணுக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம், அந்த வட்டார மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க மறுக்கப்பட்டது. அதே நேரம், ‘சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் பாதுகாப்புத்தான் முக்கியம், அதற்கு இடையூறாக இருக்கிற அம்சங்கள் குறித்து ஆராயப்படும்’ என கோர்ட்டு கூறியது.

 

கூடங்குளம்அணுவுலைஇயங்கதடைநீக்கம் (06-05-2013): தொடர்ந்து இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, கூடங்குளம் அணுமின்நிலையம் முழுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது, இயற்கை பேரிடர்களை தாங்கி நிற்கும் வலுவை கொண்டுள்ளது, தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளுகிற ஆற்றல் வாய்ந்தது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 3 மாத காலம் தொடர் வாதங்களை கேட்டு பதிவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அந்த தீர்ப்பு 06-05-2013 (திங்கள்கிழமை) அன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

 

கூடங்குளம்அணுமின்நிலையம்பாதுகாப்பாகஉள்ளது (06-05-2013): பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்ற ஒரே கருத்தை தெரிவித்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் தேவைக்கும் அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவின் அணு சக்தி கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு ஏற்க வேண்டும். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர்.

 

மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது (06-06-2013): கர்நாடகத்திற்குப் பிறகு மத்திய பிரதேசம் – கபில் சிபல் மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது என்று போபாலில் பேசியுள்ளார்[1]. அதுமட்டுமல்லாது, ஊடகங்களும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்று கோபித்தார். “உங்களுக்கெல்லாம் பணம் கொடுக்கப்படுகிறது”, என்று கேள்வி கேட்ட நிருபர்கள் மீது சீறி விழுந்தார். சட்டப் பண்டிதரான இவருக்கு எப்படி தனது கட்சியின் கோடி-கோடி ஊழல்கள் எல்லாம் மறந்து போயிற்று என்று தெரியவில்லை.

 

© வேதபிரகாஷ்

06-05-2013


தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

மே 6, 2013

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.

கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன.  கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்து இயக்கங்களில்  ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும் பிளவு பட்டுள்ளன. இந்த வேலையை திமுக மற்றும் அதிமுக கட்சிகளே செய்துள்ளன. இதனால், சில இந்து இயக்கங்கள், இந்து போர்வையில் செக்யூலரிஸ பாணியில் வேலை செய்து வருகின்றன.  குறிப்பிட்ட விஷயங்களில் சும்மா இருந்துவிடலாம், அல்லது கருத்தைக் கூட வெளியிடாமல் இருக்கலாம், ஆனால், ஊடகங்களின் ஆதரவு, விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காக, கொள்கையை விடுத்து, இந்து நலன்கள் பாதிக்கும் முறையில் நடந்து கொள்கிறார்கள். ஆட்சி மாறும் போது, அத்தகைய திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள், குறிப்பிட்ட கோணத்திலேயே வேலை செய்து வருகின்றன.

முஸ்லீம் இயக்கங்கள் பிரிந்துள்ளவை போன்று இருந்தாலும் இஸ்லாமில் ஒன்றாக இருக்கின்றன: முஸ்லீம் இயக்கங்களும் திராவிடக் கட்சிகளினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறாக தோன்றினாலும், தங்களது மதநலன்களை விட்டுக் கொடுக்காமல் வேலை செய்து, சாதித்து வருகின்றார்கள். இணைதளங்களில், தனிப்பட்ட முறையில், மண்டபங்களில் எதிர்த்துப் பேசி, அறிக்கைகள் விட்டுக் கொண்டு எதிர்கள் போலிருப்பார்களே தவிர, இஸ்லாம் என்று வரும்போது, ஒன்றாகத்தான் செயல்படுகின்றனர். இதை திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள் புரிந்து கொள்வதில்லை.

ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது: தமிழ்நாடு, கர்நாடகாவில் நடக்கும் நிகழ்சிகளைக் கூர்ந்து கவனித்தால், பிஜேபிக்கு எதிராக நடத்தப் படும் செயல்கள், கங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதைக் காணலாம். மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதா முதலமைச்சாரக உள்ளார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் பேசியும், நடந்து கொண்டும் வருகின்றனர். ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இல்லாத பட்சத்தில் அதிமுக வரவேண்டும் என்ற ஆசை, அதே நேரத்தில் பிஜேபி கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்ற தீவிரம். இதில் இந்து அமைப்பினரைத் தாக்கினால், ஜெயலலிதாவின் மீது பிஜேபிக்கு கோபம் வரும், கர்நாடகா-தமிழகம் இணைப்பை ஏற்படுத்தினால், மத்தியிலிருந்தும் அழுத்தம் வரும், அதே நேரத்தில் கர்நாடக தேர்தலில், பிஜேபியை தூக்கி விடலாம் என்ற திட்டத்தில் செயல்படுவது போலத்தான் தெரிகிறது. மேலும், குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், செய்த குற்றத்தை மறுபடியும் செய்யும் போக்கு, பல இடங்களில் இருப்பது போல அலிபி உண்டாக்கும் தந்திரம் முதலியவை இவற்றை எடுத்துக் காட்டுகின்றன. ஆக ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது என்பது தெளிவாகிறது.

கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்: கர்நாடகத்தில் மதப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளாமல், காங்கிரஸ் ஜாதிப் பிரசினையை எடுத்துக் கொண்டு விளையாடி உள்ளது. இதனால், ஜெயலலிதா அமைதியாக இருக்கிறார். எடியூரப்பாவின் நண்பரான கருணாநிதியும் இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், மத்திய அமைச்சர்கள் இதில் மிக்க கவனமாக செயல்படுவதை காணலாம். ஆகவே, ஒருவேளை கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்ற யேஷ்யத்தில் காங்கிரஸ் உள்ளது. எடியூரப்பாவை சரி கட்டினது மாதிரி, பெங்களூரில் நடக்கும் வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்தால், பதிலுக்கு கூடணிக்கு வந்து விடலாம் என்ற கணக்கிலும் காங்கிரஸ் உள்ளது.

© வேதபிரகாஷ்

06-05-2013

சோனியாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் எப்படி அந்திமக்கிரியையில் கலந்து கொள்கிறார்? (2)

மே 4, 2013

சோனியாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் எப்படி அந்திமக்கிரியையில் கலந்து கொள்கிறார்? (2)

Rahul gandhi with Dalbir kaur

ராகுல்சரப்ஜித்சிங்கின்குடும்பத்தைசந்தித்தது: 03-05-2013 அன்று ராகுல் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளது அரசியலாக்கத்தான் தெரிகிறது.  ஒரு மணி நேரம் அவர்களுடன் இருந்த ராகுல் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கௌரை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்[1]. முன்பு இவ்விஷயத்தில் அக்கரைக் காட்டாதவர், இப்பொழுது எப்படி இவ்வாறு செய்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[2]. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பீஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[3]. சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[4] பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

Rahul_Gandhi_at_Sarabjit_Singh_funeral

லாகூர்வெடிகுண்டுவழக்கு: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, பிகிவிண்ட் என்ற கிராமத்தை சேர்ந்தவர், சரப்ஜித் சிங் விவசாயி. பாகிஸ்தானின் லாகூர் நகரில், 1990ம் ஆண்டு தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. அதில், இந்திய உளவுப்படையான, “ரா’ வின் கைவரிசை இருக்கலாம் என, பாகிஸ்தான் கருதி வந்து, எல்லைகளில் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, இந்திய உளவாளி எனக் கருதிய பாகிஸ்தான் போலீசார், அவரைப் பிடித்து சென்று, சிறையில் அடைத்தனர்[5].

தவறுதலான அடையாளத்தினால் கைது, தண்டனை: பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, “மஞ்சித் சிங்” என்று அடையாளம் காணப்பட்டு பாகிஸ்தானியர் கைது செய்தனர்[6]. ஆரம்பநிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் அறிவித்தது[7]. சரப்ஜித் சிங்தான், “மஞ்சித் சிங் என்று அடையாளம் காட்ட முடியாத நிலையில், தனியாக அழைத்துச் சென்று, அவர் மீது, வெடிகுண்டு வழக்குகள் தொடரப்பட்டு, தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அவரின் கருணை மனுக்களை, கோர்ட்டுகளும், அப்போதைய அதிபர் முஷாரப்பும் நிராகரித்த நிலையில், தண்டனையை, அதிபர் ஜர்தாரி அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை, சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் சிலர் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர், சுயநினைவு இழந்தார். “கோமா’ நிலையில், லாகூர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலையில் இறந்தார். விமானம் மூலம் அவர் உடல் எடுத்து வரப்பட்டது[8].

சொந்தஊரில்தகனம்: பிறகு, சொந்த ஊரான பிகிவிண்டிற்கு, ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்ட சரப்ஜித் உடல், நேற்று அங்கேயே தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை, சரப்ஜித்தின் மூத்த சகோதரி, தல்பீர் சிங் மேற்கொண்டார். அப்பொழுது கூட, ராகுல் அணைத்தப் படி காணப்பட்டார். மாநில அரசு சார்பில், முழு அரசு மரியாதையுடன், சரப்ஜித் சிங் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க, தகனம் செய்யப்பட்டது[9]. இதில், மாநில முதல்வர், பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், வெளியுறவுத் துறை இணையமைச்சர், பிரினீத் கவுர், காங்கிரஸ் பொதுச் செயலர், ராகுல் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்[10]. சரப்ஜித் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தில், மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று கூடி, “சரப்ஜித் சிங், தேசிய தியாகி; அவர் மறைவு குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றியது.

உடல்உறுப்புகள்அகற்றம்: லாகூர் மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவர் உடல், சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் நகர மருத்துவமனையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. லாகூர் சிறையில் சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், அவர் தலையில், 5 செ.மீ., அகலத்திற்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஆழமாக இருந்த அந்த காயம் தான், அவரை, “கோமா’ நிலைக்கு கொண்டு சென்றது என, அவரின் உடலை, பிரேத பரிசோதனை செய்த, லாகூர் டாக்டர்களில் ஒருவர் கூறியுள்ளார்.மேலும், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க, சரப்ஜித் சிங்கின் மண்ணீரல், சிறுநீரகம், கல்லீரல், குடல், மூளை போன்ற பாகங்கள் அகற்றப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த டாக்டர் கூறினார்.

பாகிஸ்தான்பத்திரிகைகள்இரங்கல்: பாக்., சிறையில், சரப்ஜித் கொல்லப் பட்டதற்கு, அந்நாட்டு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளன. நேற்று வெளியான, பாகிஸ்தான் பத்திரிகைகளில், முதல் பக்கத்தில், சரப்ஜித் சிங் செய்தி வெளியாகி இருந்தது. அந்த பத்திரிகைகளில், சரப்ஜித் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அந்த பத்திரிகைகள் வலியுறுத்தியிருந்தன.

சீக்கியர், காங்கிரஸ், தேர்தல் – 2014: தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, சீக்கியர்களிடத்தில் வளைந்து செல்லும்ம் வேலையில் ஈடுபட்டால், காங்கிரஸ் மறுபடியும், ஒரு பெரிய இழப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இப்பொழுது தான், ஓரளவிற்கு, சீக்கியப் பிரிவினைவாதம் தணிந்து, சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. அதனுடன் காங்கிரஸ் விளையாடினால், மறுபடியும் எதிர்விளைவுதான் ஏற்படும். பாகிஸ்தான், அதனைத்தான் எதிர்பார்க்கிறது. ஏனெனில், பஞ்சாபில் பிரச்சினை என்றால், காஷ்மீர் பிரச்சினையை சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் நுழையலாம். சரியாக இந்நேரத்தில் தான் சீனத்துருப்புகளும் லடாக்கில் நுழைந்துள்ளன. இவற்றை நிர்வகிக்கத் தெரியாத காங்கிரஸ் அரசு, சிறுமைத்தனமாக, இத்தகைய நிகழ்சிகளில் பங்குக் கொண்டு ஆதாயம் தேடப் பார்ப்பது, கேவலமான செயல்.

உன்கி நாநி யாத் ஆயேகி: அப்பா இப்படி சொன்னது ஞாபகத்தில் இருக்கும். அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளுப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும் – என்று ராகுல் சொல்லித்தான், சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர்.  ராகுலுக்கு சீக்கியர்களை வளைத்துப் போடுவதற்கு சாமர்த்தியம் இருக்கிறாதா என்று தெரியவில்லை. பாட்டி எப்படி இறந்தால் என்பதும் ராகுலுக்குத் தெரிந்திருக்கும்.  பிறகு எதற்கு, இந்த விபரீத விளையாட்டு?

வேதபிரகாஷ்

04-05-2013


[1] During the meeting that lasted for nearly an hour, Mr Gandhi reportedly got very emotional. He was seen hugging Sarabjit’s sister Dalbir Kaur in pictures captured by the media. He reportedly also broke down while talking to her.

http://www.ndtv.com/article/india/rahul-gandhi-s-emotional-meeting-with-sarabjit-singh-s-family-361772

[2] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.

[5] உளவாளி, ஒற்றன் எனும்போது, ஆளும் கட்சி, ராஜீயமுறையில் ஒற்றர்கள் பரிமாற்றம் மூலம், சரப்ஜித் சிங்கை இந்தியா விடுவித்திருக்கலாம் என்று கூறியுள்ளதை நோக்கத்தக்கது. இக்கோணத்தில் சிந்திக்க காங்கிரஸுக்குத் தெரியவில்லையா அல்லது விடுவிக்க விருப்பம் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

[6] Sarbjit’s family says he had crossed the Indo-Pak border inadvertently in an inebriated condition 23 years ago. He was arrested in Pakistan by the army in 1990 by the name of Manjit Singh. Accused of being an Indian spy, he was charged with plotting a series of bomb blasts in 1989 at Lahore and Multan, convicted, and was sentenced to death.

http://news.outlookindia.com/items.aspx?artid=797122

[7] Sarabjit was tried by several successive courts and was awarded death penalty. His trial was based on a confessional statement which the Pakistani authorities claim he gave during the course of the investigation.

[8] இதனையும் ஊடகங்கள் பெருமளவில் கிரிக்கெட் போட்டி மாதிரி போட்டிப் போட்டுக் கொண்டு, காண்பித்துக் கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாது, விஷயம் இல்லாததால், காண்பித்ததையே, திரும்ப-திரும்பக் காண்பித்துக் கொண்டிருந்தன.

[9] இதை மத்திய அரசு ஏன் எதிர்க்கவில்லை அல்லது அவ்வாறு செய்யலாமா என்று கேட்கவில்லை.

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)

மே 4, 2013

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)

 

ராஜிவ்காந்திதூண்டிவிட்டகலவரம்: அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[1]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[2]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[3]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[4].

 

29 வருடம்கழித்துநீதிமன்றம்சஜ்ஜன்குமாரைவிடிவித்தது: 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

 

சோனியாவீடுமுன்புகொடும்பாவிஎரிப்பு: இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும் சோனியா காந்தியின் இல்லத்தை முற்றுகையிட மான்சிங் சாலை அருகே தில்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சீக்கியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்[6]. அதையொட்டி அக்பர் சாலை-மான்சிங் சாலை சந்திப்பில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், போலீஸாரை தள்ளிவிட்டு, தடுப்புகள் மீது ஏறி குதித்து அக்பர் சாலையில் பலர் நுழைந்தனர். அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனங்களில் ஏறிய சிலர் சோனியா ஒழிக, காங்கிரஸ் அரசு ஒழிக என்று கோஷம் எழுப்பினர். சோனியா வீட்டு முன்பாக சஜ்ஜன் குமாரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்[7]. அதனால், சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், போலீஸ் உயரதிகாரிகள் சீக்கிய குருத்வாரா பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். அதன் பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

உள்துறைஅமைச்சர்வீட்டின்முன்பும்ஆர்பாட்டம்: இதற்கிடையே, ஒரு பிரிவு சீக்கியர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே இல்லம் அமைந்துள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். இதை அறிந்த போலீஸார், அந்தச் சாலையை இணைக்கும் அனைத்துச் சந்திப்புகளிலும் தடுப்புகளை அமைத்தனர். கிருஷ்ண மேனன் மார்கில்தான் முன்னால் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் இல்லம் அமைந்துள்ளது. அதனால், அப்பகுதி வழியாக நாடாளுமன்றச் சாலை, இந்தியா கேட் செல்ல வேண்டிய வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

 

பிந்தரன்வாலேமரணஅறிவிப்பு 25 ஆண்டாகியும்வெளியாகவில்லை: பொற்கோவிலில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக ராணுவம் மேற்கொண்ட “ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையின் போது, பிந்தரன்வாலே கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தரப்பிலோ, அதிகாரப்பூர்வமாக, 25 ஆண்டுக்கு பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை[8]. அப்போதைய டம்டாமி தக்சல் தலைவராக இருந்த பிந்தரன்வாலேயின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தும் கூட, அவரது மரணம் குறித்து அரசு பகிங்கர அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், பொற்கோவில் நடவடிக்கையில் பிந்தரன்வாலே தப்பித்து, பாகிஸ்தான் சென்றுவிட்டதாக வதந்திகள் கூட உலவின.

 

பிந்தரன்வாலேஇறக்கவில்லை: சீக்கிய மதத்தவர்களில் ஒரு பிரிவினர் மத்தியில், குறிப்பாக கிராமப்புரத்தை சேர்ந்தவர்கள் மத்தியில், பிந்தரன்வாலே இன்னும் இறக்கவில்லை என்றும், அவர் தகுந்த நேரத்தில் திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை நிலவியது. பிந்தரன்வாலே மரணத்தை அவர் தலைமை வகித்த தக்சல் அமைப்பும் கூட, அவரது மரணத்தை அங்கீகரிக்கவில்லை. இதன் புதிய தலைவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்வரை நியமிக்கப்படாமலேயே இருந்தார்.

 

பிந்தரன்வாலேஇறந்ததைஏற்றுக்கொண்டபப்பர்கல்சா:  பிந்தரன்வாலே இறந்ததை ஏற்றுக் கொண்ட ஒரே அமைப்பு பப்பர் கல்சா அமைப்பு மட்டுமே. 1989ம் ஆண்டு இதை அங்கீகரித்த இந்த அமைப்பு, பிந்தரன்வாலேவை வீரதியாகியாக அறிவிக்கும்படி வலியுறுத்தியது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பிந்தரன்வாலே, 1984ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல், ஜூன் 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் போலீஸ் குழுவினரால், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் மருத்துவக் கல்லூரி அதிகாரிகளிடம், ராம்பாக் போலீஸ் நிலைய துணை எஸ்.ஐ., மூலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கி குண்டுகளின் காயம் மற்றும் அதிர்ச்சி காரணமாக பிந்தரன்வாலே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் உள்ள அனைத்து 14 காயங்களும் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அது தவிர விலா எலும்புகளில் இரண்டு உடைந்திருந்தன. பிந்தரன்வாலேயின் உடல், அவரது கூட்டாளியின் உடலுடன், ஜூன் 8ம் தேதி அமிர்தசரசில் குருதுவாரா சகீதா தகன மைதானத்தில் எரிக்கப்பட்டது. 203 பேரின் சாம்பல்களுடன், பிந்தரன்வாலேயின் சாம்பலும், ரோபர் மாவட்டத்தில் உள்ள கிரட்பூர் சாகிப்புக்கு எடுத்து செல்லப்பட்டு, சட்லஜ் நதியில், அமிர்தசரஸ் ஜில்லா பரிஷத் செயலர், மற்றும் நிர்வாகி மாஸ்டிரேட் ஆகியோரால் கலக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையின்போது, பிந்தரன் வாலே இறந்து போனதாக அவரது குடும்பத்தினர் கூட எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எஸ்.ஜி.பி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, பிந்தரன்வாலேயின் மரண சான்றிதழ் கோரி, அவரது மகன் இஷார் சிங், மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.

 

சோனியாவின்அரசியல் நாடகம் ஆபத்தானது: சீக்கியர்கள் இப்படி தன் வீட்டின் முன்பாக ஆர்பாட்டம் செய்யும் வேளையில், சோனியா தந்திரமாக கர்நாடகத்திற்கு வந்து, தேர்தல் கூட்டங்களில், பிஜேபியைக் கடுமைகயாகப் பேசி வருகிறார். புதன்கிழமை அன்று ரெய்ச்சூரில் பேசினார்[9]. கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், வரும், 23ம் தேதி முதல், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.கர்நாடகாவில், அடுத்த மாதம், 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம், ஏற்கனவே, சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. வரும், 25ம் தேதி, சிக்மகளூர் மற்றும் மங்களூரிலும்; ஏப்ரல், 30ல், குல்பர்க்கா மற்றும் பெல்காமிலும்; மே, 2ம் தேதி, மைசூரு மற்றும் பெங்களூருவிலும், சோனியாவின் பிரசாரம் செய்கிறார்.வரும், 23ம் தேதி, ராய்ச்சூர் மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களிலும், வரும், 26ல், கோலார், தும்கூர் மற்றும் ஹாவேரி மாவட்டங்களிலும், மாண்டியா, ஹசன் மற்றும் ஷிமோகா மாவட்டங்களில், மே, 1ம் தேதியும், ராகுல் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், 29ம் தேதி, ஹூப்ளி மற்றும் பெங்களூரில் பிரசாரம் செய்கிறார்[10]. பெங்களூரு பேலஸ் மைதானத்தில் சோனியா 02-05-2013 அன்று பேசியபோது, நிறைய நாற்காலிகள் காலியாக இருந்தன[11].

 

வேதபிரகாஷ்

04-05-2013


[1]. According to the CBI the police were co-conspirators as the officials did not register cases and did not pick up dead bodies from the streets. The CBI referred to a speech senior Congress leader Sajjan Kumar had made in Delhi’s Raj Nagar where he incited the mob and said that not a single Sikh should survive and those sheltering Sikhs should be set ablaze. The CBI also pointed out that police control room records don’t have details of any of the major incidents of violence. In fact the police asked those residing in the Raj Nagar Gurdwara to surrender their weapons and hours later mobs came and attacked them. No damage to houses other than those of Sikhs were reported from the area.

[2] While there have been documented reports of voter-lists and school registration forms being distributed amongst the rampaging hooligans to specifically identify the Sikh families and destroy them, it is also a proven fact that during the same period, at a massive rally in Delhi, while reacting to the killings, Rajiv Gandhi had stated that ‘Once a mighty tree falls, it is only natural that the earth around it shakes‘.

[4] The killing of people in the Delhi Cantonment area during the 1984 anti-Sikh riots was the result of a well executed conspiracy, the Central Bureau of Investigation (CBI) said on Monday as the agency finished its arguments in the 1984 anti-Sikh riots in the Delhi Cantonment area case. The CBI said that people belonging only to a certain community were targeted with the pattern and scale of operation indicating that the action wasn’t a spontaneous reaction but a well organised operation, which had the backing of the police and patronage of the system.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.