Archive for the ‘பாஷா’ Category

குழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்!

ஓகஸ்ட் 4, 2012

குழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்!

 

முஸ்லீகள் காளியின் பெயரால் நரபலி கொடுத்தார்களாம்: இரண்டாண்டுகளுக்கு முன்பு, ஜூலை மாத வாக்கில் (ஜூலை 2010) இந்த குரூர நிகழ்சி நடந்தது. முதலில் தர்காவில் குழந்தையை நரபலிக் கொடுத்து பூஜை முடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. சன்-டிவி போன்ற செனல்கள் கூட விவரமாக வீடியொ-செய்திகளை வெளியிட்டது. ஆனால், திடீரென்று “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை  கொடுப்பதாக  இருந்தால்  காளிக்குல்  கொடுங்கள்”, என்று கொலையாளி சொன்னதாக செய்தி வந்தது[1]. ஒரு முஸ்லீம் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை சொல்கிறாரா தப்பித்துக் கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறாரா என்று தீவிர விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது[2]. நூற்றுக்கணக்கான குழந்தைகள் மறைவதற்கு நரபலி காரணமா என்ற சந்தேகமும் எழுந்தது[3]. மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டும் குழந்தைகள் கொலைசெய்யப் படுகின்றன[4]. அவ்விதத்தில் காணாமல் போன குழந்தைகள் விஷயத்திலும் மற்ற விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன[5].

 

மனைவியின் நோயையை நீக்க நரபலி கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை: மதுரையில் ஒருவயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில் கணவன், மனைவிபோல் வாழ்ந்த இருவருக்கு மதுரை கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தூத்துக்குடி, காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கபூர் (30). அவர் மனைவியை விவாகரத்து செய்தவர். ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில் தங்கி, சமையல் வேலை செய்து வந்த இவருக்கும், அங்கிருந்த ரமீலாபீவிக்கும் (28), பழக்கம் ஏற்பட்டது. ரமீலாபீவி கணவரை விவாகரத்து செய்தவர். இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்தனர்.

 

நரபலி கொடுத்தது, ரத்தம் குடித்தது: தலைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், செல்வந்தராகலாம் எனக்கருதி, அத்தகைய குழந்தையை தேடி மதுரை வந்தனர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் 21 நாட்கள் தங்குவதற்கு இருவரும் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.  மதுரை எஸ்.ஆலங்குளம் கோவலன் தெருவை சேர்ந்த கவுகர் பாட்ஷாவின் மனைவி சிரின் பாத்திமா. இவர் தனது ஒரு வயது குழந்தை காதர்யூசுப், தாய் சுல்தான் பீவியுடன், 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்கினர். அங்கு மறுநாள் இரவு, தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, காதர்யூசுப்பை அப்துல்கபூரும், ரமீலாபீவியும் கடத்தி, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு இருவரும் தங்கி இருந்த விடுதியின் குளியலறையில் கழுத்தை அப்துல்கபூர் அறுத்து ரத்தத்தை வாளியில் பிடித்தனர். ரத்தத்தையும் குடித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன[6]. தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி எடுத்தனர். ஏர்வாடி சோமன் நகரில் 2 நாட்கள் பூஜை செய்து, அங்கு குழந்தையின் உடலையும், திருச்செந்தூர் கல்லாமொழி கடற்கரையில் தலையையும் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியுள்ளனர்[7].

 

குழந்தையை பெற்றொர் புகார், குற்றவாளிகள் கைது: சிரின் பாத்திமா புகாரின் பேரில், மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்குவதற்கு பெயர் பதிவு செய்துவிட்டு மாயமான அப்துல் கபூர், ரமீலா பீவியை தேடினர். அவர்கள் கொடுத்த காயல்பட்டினம் முகவரியில் விசாரித்த போலீசார், ஏர்வாடியில் இருப்பதை அறிந்து இருவரையும் கைது செய்தனர்[8].  இவ்வழக்கு மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி எம்.சுரேஷ் விஸ்வநாத் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சிவமுருகன் ஆஜரானார்.

 

தண்டனைக் கொடுக்கப் பட்டது: குற்றத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர், அவர்கள் விளக்கியபடி குறிப்பீட்ட இடங்களுக்குச் சென்று, ஆதாரங்களை போலீஸார் திரட்டினர். குழந்தையை கடத்தியதற்காக அப்துல், கபூர், ரமீலாவிற்கு ஆயுள் தண்டனை, கொலை செய்ததற்காக இருவருக்கும் மற்றொரு ஆயுள்தண்டனை[9], தடயங்களை மறைத்ததற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, தலா 2000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார்[10].

 

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் ஏனிப்படி நரபலிகள் தொடர்கின்றன: கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட கழகம் மற்றும் திமுக, அதிமுக முதலிய திராவிடக் கட்சிகள் பகுத்தறிவோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய சித்தாந்தக் கூட்டாளிகள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற இந்து-எதிர்ப்பு கோஷ்டிகள் அத்தகைய பகுத்தறிவோடுதான் நடந்து கொண்டு வருகிறார்கள் ஊடகங்களில் ஊலையிட்டு வருகிறார்கள். பிறகெப்படி அத்தகைய ஞானப் பிழம்புகள் நரபலி கொடுக்க முடியும்? பெரியாரின் வாரிசான கலைஞரின் மூத்த வாரிசின் மண்ணான மதுரையில் எப்படி நரபலிகள் கொடுக்கப்படமுடியும்? திமுகவினரே[11] அதில் எப்படி துணைப் போக முடியும்? “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை  கொடுப்பதாக  இருந்தால்  காளிக்குல்  கொடுங்கள்”, என்று ஒரு முஸ்லீம் சொன்னது போல, ஒரு பெரியாரிச, பகுத்தறிவாளனும் அவ்வாறே சொன்னால் என்னாவது? இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜலட்சுமி என்ற குழந்தையைக் கொன்று ரத்தம் தூவியவனின் அயூப் கான்[12]. இங்கு மதச்சாயம் பூச விரும்பவில்லையென்றாலும், எப்படி முஸ்லீம்கள் இக்காரியங்களில், அதிலும் பகுத்தறிவாளனாக, பெரியார் பாதையில் செல்லும், திமுகவின் அதிகாரியாக, மேலாக ஒரு முஸ்லீமாக இருந்து அத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள்? ஒருவேளை ஆதிசங்கரர் எதிர்த்துப் போராடிய நரப்ச்லிக் கூட்டத்தார் இவர்கள்தாம் போலும்[13].

 

வேதபிரகாஷ்

04-08-2012


[6] Times of India, Fakir ‘beheads’ toddler, ‘drinks’ his blood in Tamil Nadu, TNN Jul 26, 2010, 12.33am IST

http://articles.timesofindia.indiatimes.com/2010-07-26/india/28315709_1_dargah-child-sacrifice-exhumed

[7] “Gafoor and Ramala Beevi took the child to a lodge in Ramanathapuram. When the child started crying, Gafoor slit his throat. He then beheaded the boy and buried the head at Kattupallivasal near the Erwadi dargah. The couple then took the head to Thoothukudi where they buried it near the Kallamozhi dargah,” Chidambaram Murugesan, inspector and head of the special team investigating the case said.

[12] According to the police, A. Ayub Khan of Katchakatti, the DMK functionary, sprinkled the child’s blood around a newly constructed building as part of fulfilling a vow………….Ayub Khan, who was then the deputy chairperson of the Madurai district panchayat, was constructing a new building for a women’s college. As he could not complete construction even after two years, he was advised to sprinkle the blood of a girl child around the campus. Ayub Khan offered Rs.8.5 lakh to carry out the task. Mahamuni and Karuppu, the butchers, were lured by broker A. Murugesan (54) of Vadipatti and Ponnusami (22) and Lakshmi……….Ayub Khan had confessed to sprinkling the blood on the college campus, the SP said.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3364973.ece

[13] ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்று அரேபியர்களுக்கு போதித்தார் என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. காளாமுகர்கள், நரபலி கூட்டத்தார் முதலிரோரையும் எதிர்த்ததாக கூறுகின்றன.

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை?

செப்ரெம்பர் 1, 2010

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை?

துன்மார்க்க கோவை குண்டு வெடிப்பு: 1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் கொல்வதற்காக, சதி திட்டம் தீட்டப் பட்டு, கலவரத்தை உருவாக்க நகரின் பல பகுதிகளில் குண்டுகள் வைக்கப் பட்டு, அவை வெடித்ததில் 52 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இவையெல்லாம் அப்பொழுதைய எண்ணிக்கையாகும். அதற்குப் பிறகு இவை அதிகமாகியுள்ளது. தீவிரவாதிகள் கைது, நீதிமன்ற வழாக்காடு என்று செய்திகள் வர வர, இந்த மக்களை மறந்து விட்டார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டார்கள். ஆனால், இன்று வரை, அதற்ககக் காரணமானவர்களின் நிலைப் பற்றி வரிந்து கொண்டு எழுதி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டோர்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

குண்டுகள் வைத்தது உண்மை, மக்கள் கொல்லப்பட்டது உண்மை, காயமடைந்தது உண்மை: முஸ்லீம்கள் திட்டமிட்டு, ஜிஹாத் என்று குண்டுகள் வைத்தது, குண்டுகள் வெடித்தது, வெடித்ததில் மக்கள் பரிதாபகரமாக இறந்தது, காயமடைந்தது, ரத்தம் சிந்தியது, உடல் உறுப்புகள் சிதறியது, முதலிய கோரக் காட்சிகளும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய உரிமைகளைப் பற்றி ஒன்றும் சொல்லப்படுவதில்லையே? ஏன்? கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் என்னவாயிற்று? கை-கால்களை இழந்தவர்களின் நிலையென்ன? படுகாயமடந்த மற்றவர்கள் என்னவானார்கள்? அவர்கள் கண்ணீர் சிந்தாமல், கஷ்டபடாமல் சந்தொஷமாகவா இருக்கிறார்கள்? ஊடகங்கள் எந்த செய்திகளையும் வெளியிடுவதில்லை!

பிப்ரவரி 14, 2009: துக்கமான தினமா, மகிழ்ச்சியான தினமா?: இந்த தேதியை மக்கள் ‘காதலர் தினம்’ என்றுதான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களே தவிர, கோயம்புத்தூரில் ஜிஹாதிகல் குண்டு வைத்த தினம் என்று நினைக்க மாட்டார்கள்! ஆக, மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் 52 அப்பாவி மக்கள், குறிப்பாக இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள் என்று சிலர் நினைவுகூருகின்றனர். அந்தக் குண்டு வெடிப்பில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை நகரில் 14-02-2009ல் ஊர்வலமாகச் சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 600 பேர்கள் தடையுத்தரவை மீறியதாகக் கைது செய்யப்பட்டனர். மாறாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதியை பாபர் மசூதி இடி்க்கப்பட்ட நாளாக இந்தியா முழுவதிலும் முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து, ரயில் மறியல், சாலை மறியல் போன்ற பலவிதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை மத்திய, மாநில அரசுகள் இதற்குத் தடை விதிப்பதில்லை மாறாக, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் போலீசாரை ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாவலுக்கு ஆயிரக் கணக்கில் கொண்டு நிறுத்துகிறது.