Posts Tagged ‘முல்லாயம் சிங் யாதவ்’

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்?

செப்ரெம்பர் 15, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்?

 

அமர்சிங் வெளியேற்றம், ஆசம்கான்மறுநுழைவு: அமர்சிங் பிஎஜேபி எம்.பிக்கள் விசயத்தில் அதிகமாகவே வேலை செய்து, அதாவது, பணம் கொடுத்து மாட்டிக் கொண்டு, சிறையிலும் இருந்துள்ளார். போதாகுறைக்கு அக்காலத்தில் தான், ஆசம்கானுடன் தகராறு ஏற்பட்டது. ஒருவேளை, இருவரும் கட்சிக்காக யார் அதிகமாக உழைக்கிறார் என்று காட்டிக் கொள்ள அத்தகைய காரியங்களை செய்திருக்கலாம். ஆனால், அமர்சிங் விவகாரம் பிஜேபி எம்.பிக்களுக்கு லஞ்சம் என்ற விதத்தில் பெரிதாகி விட்டது. காங்கிரசுக்கு தொடர்பு என்று கூட விவகாரங்கள் இருந்தன. போதாகுறைக்கு பாட்லா தீவிரவாத பிரச்சினையிலும் சிக்கிக் கொண்டார்[1]. இதனால், 06-01-2010 அன்று அமர்சிங் சமஜ்வாடி கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. 02-02-2010 அன்று கட்சியிலிருந்தும் முல்லாயம் சிங்கால் வெளியேற்றப்பட்டார். ஆனால், முன்னர் 04-12-2010 அன்று மறுபடியும் ஆசம்கான் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனால், எல்லாமே, சேர்ந்து நடத்திய நாடகமா அல்லது அமர்சிங்கை வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகளா இல்லை பிஜேபியின் பலம் குறைக்க மேற்கொண்ட வழிகளா என்று அரசியல் ரீதியில் ஆராய வேண்டியுள்ளது.

ராஜினாமாமிரட்டல்இவருக்குசாதாரணவிசயம்தான் (2012): 25-07-2012 அன்று தனக்கு மீரட் மாகாணத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்வதாக மிரட்டினார். அதாவது, மீரட் மிகவும் மதசார்புள்ள, கலவரங்கள் நடக்கும் இடமாகும். முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இவர்களைப் பிரித்து வைத்துதான் அரசியல் செய்ய முடியும். ஆகவே, தன்னுடைய அதிகாரம் குறைந்து விடுமே என்று ஆத்திரப்பட்டதில், ஆச்சரியமில்லை (இன்றும் கலவரப் பகுதிகளில் மீரட் உள்ளதை கவனிக்கலாம்). முஸ்லிமாக இருந்தாலும், வேண்டுமென்றே முல்லாயம் சிங், இவரை கும்ப மேளா கமிட்டிக்கு சேர்மேனாக நியமித்தார். ஏதோ உபியில் இவரைவிட சிறந்த இந்துவே கிடைக்காத மாதிரி, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் நியமிக்கப்பட்டது வினோதமே. ஆனால், அந்நேரத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. ஆனால், அல்லாஹாபாத் ரெயில் நிலையத்தில் நடந்த நெரிசலில் 40ற்கும் மேற்பட்டவர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்காணவர் காயமடைந்தனர். அப்பொழுது தான், தான் அதற்கு பொறுப்பில்லை, ரெயில்வே தான் காரணம் என்றெல்லாம் திமிராகப் பேசினார். அந்நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பிரச்சினை வரும் போலிருந்தது. இதனால், 11-02-2011 அன்று அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். முல்லாயம் விடவில்லை, ஆமாம், ராஜினாமை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் நிர்வாகத்தைப் போற்றிப் பாராட்டினார். ஒரு முஸ்லிம் நிர்வாகம் செய்ததில் 40 இந்துக்கள் இறக்க நேர்ந்தது என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. போதாகுறைக்கு, ஹார்வார்ட் பல்கலைக் கழகம், இவர் எவ்வாறு கும்ப மேளாவை நிர்வகித்து நடத்தினார் என்று பேசுவதற்காக அழைத்ததாம்!

பாஸ்டன் விமான நிலையத்தில் தகராறு செய்தது (ஏப்ரல், 2013): ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இவருக்கு அழைப்பு வந்ததால், கும்ப மேளா நிர்வகிப்புப் பற்றி பேசச் சென்றார். ஆனால், பாஸ்டன் விமான நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்லது. இவரது கட்சி சமாஜ்வாடி பார்டி மற்றும் அதற்குண்டான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப் பட்டது. அல்-குவைதா மற்றும் டி-கம்பெனிகளினின்று அக்கட்சிக்கு பணம் வருவது, மற்றும் இதர தொடர்புகள் பற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி, தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்தார்[2].  [இந்திய ஊடகங்கள், குத்தி-நோண்டி விவரங்களை சேகரிக்கும் புலன்-விசாரணை பத்திரிக்கையாளர்கள் இதைப் பற்றிக் கண்டு கொள்ளாதது ஆச்சரியமே. குறிப்பாக டெஹல்காகாரர்கள் இதைப் பற்றி ஆராயதது ஏன் என்று தெரியவில்லை] அந்த அதிகாரி ஒரு பெண்மணி என்று குறிப்பிடத் தக்கது[3]. ஆனால், தான் முஸ்லிம் என்பதால் தான் அவ்வாறு செய்கிறார்கள், தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள் என்று கத்தி கலாட்டா செய்திருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாது, தான் தடுத்து நிறுத்தப் பட்டதற்கு, அந்த அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்[5]. வாதம், கூச்சல்கள் அதிகமானதால், நியூயார்க் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. நிலைமை மோசமாகியதால், அது தலையிட்டு, விமான நிலையத்திலிருந்து ஆசம் கானை வெளியே அழைத்துச் செல்லப்பணிக்கப்பட்டார். இதை தனக்கு நேர்ந்த அவமானம் என்று அறிவித்து, இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார். இவற்றையெல்லாம், இவர் இந்தியாவிற்கு வந்த பிறகுதான் கூறியுள்ளார். அதாவது, உண்மையில் அங்கு என்ன நிகழ்ந்தது என்ற முழு விவரங்கள் இந்திய ஊடகங்கள் வெளியிடவில்லை.

இயற்கைவளங்களைகொள்ளையெடிக்கமனிதனுக்குஉரிமைஇருக்கிறது. ராமரின்பெயரால்கொள்ளைஅடிப்பதாகஇருந்தால், கொள்ளையடியுங்கள்”: சென்றமாதத்தில் துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பென்ட் செய்வதற்கும் இவர்தான் முக்கிய காரணமாக இருந்தார்[6]. மணல் மற்றும் கனிம கொள்ளையைத் தடுக்க முயன்ற அவரை, மசூதியின் சுவறை இடிக்க ஆணையிட்டார் என்று பொய் சொல்லி அவரை பதவி நீக்கம் செய்தனர். அப்பொழுது, அத்தகைய கொள்ளையைப் பற்றிக் கேட்டபோது, “இயற்கை வளங்களை கொள்ளையெடிக்க மனிதனுக்கு உரிமை இருக்கிறது. ராமரின் பெயரால் கொள்ளை அடிப்பதாக இருந்தால், கொள்ளையடியுங்கள்”, [leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal] என்று நக்கலாகவும் பேசினார். உண்மையில், இவர் குரானில் உள்ளதை மாற்றி இப்படி ராமரின் பெயரில் ஏற்றிச் சொன்னதை யாரும் கவனிக்கவில்லையா அல்லது மறுபடியும் “கம்யூனலிஸம்” பிரச்சினை வந்துவிடும் என்று விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.

ஆசம்கான் பெண்கள் விசயத்தில் விரோதமாக நடந்து கொண்டது ஏன்?: ஆசம்கான் பொதுவாக பெண்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்-அல்லாத பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் அப்படி ஏன் நடந்து கொண்டார், அவரது பிரசினை என்ன என்பதை யாரும் ஆராயமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கீழ்கண்ட பெண்கள் விசயத்தில், இவர் நடந்து கொண்ட முறை, மிகவும் மோசமாக இருந்துள்ளது:

  1. ஜெயபிரதா (2009)
  2. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி (2013)
  3. துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி (2013)

இவர்களுக்கும் ஆசம்கானுக்கும் எந்த விதத்திலும், சம்பந்தமோ, தொடர்போ இல்லை. ஜெயபிரதா ஆவது, அக்கட்சியில் இருந்தார், ஆனால், அமெரிக்க அதிகாரி மற்றும் இந்திய அதிகாரி அவர்களது கடமையைச் செய்துள்ளனர். பெண்கள் என்று கூட பார்க்காமல், மதரீதியில் காழ்ப்புடன் அவர்கள் மீது தூஷணம் செய்துள்ளார் என்று தெரிகிறது. இஸ்லாம் பெண்களுக்கு பதிப்பு அளிக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி இவர், அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியும்? இப்பொழுது கூட, பெண்களை, அதிலும் இந்து பெண்களை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால் தான், இந்த கலவரமே நடந்துள்ளது. இவர் தாம், முசபர்நகர் பகுதிக்கு பொறுப்பாக இருக்கிறார். பிறகு, இவருக்குத் தெரியாமல், இதெல்லாம் நடந்திருக்க முடியாது. ஆகவே, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் என்பதனால், இவ்வாறு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறாரா என்று ஆராய வேண்டியுள்ளது.

வேதபிரகாஷ்

© 14-09-2013


[1] On 22 July 2008 he accused Uttar Pradesh Chief Minister Mayawati of kidnapping six MPs of his party from Uttar Pradesh and holding them captive in Uttar Pradesh BhavanNew Delhi. Later, Samajwadi Party expelled the six MPs for defying the party directive during the confidence motion voting. He also courted controversy by asking for a probe in the Jamia Nagar batla house encounter case. First he gave 10 Lakh rupees cheque to the family of Mohan Chand Sharma, a police officer who died in the encounter, which bounced when checked its validity. Later he asked for a judicial enquiry into the firing incidence suggesting that the encounter may have been fake. Mohan Chand Sharma‘s family criticized him and returned his money. Amar Singh has been chargesheeted for offering bribes to three parliament members of the Bharathiya Janata Party in 2008 under the Prevention of Corruption Act by the Delhi Police on 24 August 2011. Amar Singh has pleaded health grounds for not appearing before the courts where the chargesheet was being heard. However, distressed by adverse media reports, Mr. Singh has appeared before the courts to dispel allegations that he is running away from a process of law. After hearing his personal pleas the Court has sent Mr. Amar Singh to judicial custody till September 19, 2011, in Delhi’s Tihar jail. A. Singh had filed a petition in 2006 after some of his telephone conversations were illegally tapped and were in circulation. The leader had moved the apex court and got a restraint order against their publication in the media. In May 2011, the Supreme Court of India removed the stay on publishing the taped conversations with political leaders and Bollywood stars. In these tapes, Amar Singh can be heard discussing bribes and bending government policies to suit vested interests. On September 6, 2011, Amar Singh was arrested for his alleged involvement in the scam and was ordered to be remanded in custody until 19 September. He had appealed to the court to exempt him from appearing personally, stating that he was ill with an infection; however, his request was rejected.

[2] However, Khan was detained at the Boston Airport for questioning, over his Samajwadi Party finances, and its links to Al-Qaeda and D-Company. Specifically, a female officer of the U.S. Customs and Border Protection wing of the U.S. Department of Homeland Security took Khan to an adjacent room “for further questioning”.

[3] A woman officer of the US Customs and Border Protection wing of the Homeland Security took Khan to an adjacent room “for further questioning,” sources said.

http://indiatoday.intoday.in/story/i-was-detained-at-boston-airport-because-i-am-a-muslim-alleges-azam-khan/1/267872.html

[5] The Minister was reportedly detained for about 10 minutes for “further questioning.” The high-power contingent led by Mr. Akhilesh Yadav, which included among others, State Chief Secretary Javed Usmani, had arrived by a British Airways flight.

http://www.thehindu.com/news/national/sp-condemns-azam-khans-detention-at-boston-airport/article4656605.ece

[6] Even as suspended Indian Administrative Service (IAS) officer Durga Shakti Nagpal, who took on the sand mining mafia in Gautam Budh Nagar, is to be served a chargesheet by the Uttar Pradesh government for allegedly mishandling a communally sensitive situation, senior Samajwadi Party leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal. Durga Shakti Nagpal, during her tenure as the sub-divisional magistrate of Gautam Budh Nagar, had cracked down on the sand mining mafia. She had recently seized 24 lorries involved in illegal mining and form April to June, under her watchful eye, the mining department impounded 297 vehicles and collected a fine of over Rs 80 lakh. Read more at: http://ibnlive.in.com/news/you-can-loot-in-lord-rams-name-sp-leader-azam-khan-on-ias-durga-case/410856-37-64.html?utm_source=ref_article

சாவிலும் மதம் பார்க்கும் இந்திய செக்யூலரிஸம் – சோனியா-ராகுலின் கேடுகெட்டத் தனம்!

மே 4, 2013

சாவிலும் மதம் பார்க்கும் இந்திய செக்யூலரிஸம் – சோனியா-ராகுலின் கேடுகெட்டத் தனம்!

Indian soldier beheaded - wife cries demands for headராகுலுக்குஎப்பொழுதுஉணர்ச்சிபொங்கிஎழும்?: சீக்கியரின் இறுதி சடங்கில் எப்படி ராகுல் கலந்து கொண்டு, உணர்ச்சியைக் கொட்டியுள்ளார் எனும் போது, ஜனவரியில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, உடல்கள் அனுப்பப்பட்டபோது, ராகுல் அத்தகைய உணர்ச்சியை ஏன் காட்டவில்லை என்று தெரியவில்லை. பாகிஸ்தானியர், இரண்டு இந்திய ராணுவ வீரர்கள், கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் வந்து விட்டார்கள் என்று, சுட்டுக் கொன்று, உடலை சீர் குலைத்து, தலையினையும் வெட்டி, உடல்களை அனுப்பியுள்ளது. இந்த செய்தியைக் கூட ராணுவ அமைச்சகம் காலந்தாழ்த்திதான் உறுதி செய்தது[1]. தரம்வதி / தர்மவதி என்ற ஹேம்ராஜ் சிங்கின் மனைவி “எனது கணவரது தலையைத் தாருங்கள்”, கதறியது யாருக்கும் தெரியாமல் போய் விட்டது எனலாம்[2].  ஊடகங்கள் பெரிதாக அதனை அடிக்கடிக் காட்டி, மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை

Indian soldier beheaded - Dharmavati criesஇந்தியராணுவமந்திரிபுள்ளிவிவரங்களைத்தருவதோடுசரி: 2010லிருந்து 102 முறை பாகிஸ்தானியர் ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதிகளைத் தாண்டி வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்[3] என்று இந்திய ராணுவ மந்திரி எடுத்துக் காட்டுகிறார். சரி, பதிலுக்கு என்ன செய்தார்? ஆனால், பாகிஸ்தானியர், ராணுவ வீரர்களாகவும், தீவிரவாதிகளாகவும், ஜிஹாதிகளாகவும் மற்ற பெயர்களில் பலமுறை எல்லைகளைத் தாண்டி வந்தபோது, சுரணையற்ற இந்திய அரசு, நிலைமையை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்று பதிலடி கொடுக்காமல், தீவிரவாதத்தை ஊக்குவித்து, பெருக்கி வந்துள்ளது எனலாம். இதனால் தான், பாகிஸ்தான், இதெல்லாம் இந்தியாவின் பிரச்சாரம் என்று கூறிவருகிறது[4].

Indian soldier beheaded - wife and kidsஇந்தியவீரர்கள்கொல்லப்படுவது, கழுத்தறுக்கப்படுவது, தலைத்துண்டிக்கப்படுவதுதொடர்கின்றன: மார்ச் மாதத்தில், உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தபோது, இவ்விஷயத்தில் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது[5]. முந்தைய கார்கில் போரிலும் ஒரு வீரரின் தலை வெட்டிய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், அதனுடன் சேர்த்துக் கொண்டது. இந்தியாவின் ராணுவ மந்திரி, வெளியுறவு மந்திரி என்று இருப்பவர்கள் இந்தியர்க்ளகச் செயல்படாமல், தத்தம் மதத்தினராகத்தான் செயல் படு வருகிறார்கள். இதனால் தான், அயல்நாடுகள், இவர்களை மதிப்பதில்லை. விளைவு இந்திய வீரர்கள் கொல்லப்படுவது, கழுத்தறுக்கப்படுவது, தலைத் துண்டிக்கப்படுவது தொடர்கின.

Indian soldier beheaded - coffin carried by peopleஹேம்ராஜின்அந்திமகிரியையில்யாரும்கலந்துகொள்ளவில்லை: உபியில், செர்பூர் (மதுரா மாவட்டம்) என்ற ஊரில் நடந்த அந்திமக்கிரியை நிகழ்சியில் யாரும் – அதாவது ராகுல், சோனியா, என்று – கலந்து கொள்ளவில்லை[6]. உபி-முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அல்லது முல்லாயம் சிங் கூட கலந்து கொள்ளவில்லை. தர்மவதி தனது குழந்தைகளுடன் தனியாக இருக்கிறார். கிராமத்தில் உள்ளோர் அசோக சக்கிர விருது வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளனர்[7]. ஆனால், அவரது குடும்பத்தாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை!

Indian soldier beheaded - coffin Yemarajஜியாஉல்ஹக்கொல்லப்பட்டபோதோஏகப்பட்டஅரசியல்கலாட்டா: இதே அந்த போலீஸ் அதிகாரி சுட்டுக் கொள்ளப்பட்டு, சடங்குகள் நடந்தபோது, அரசியல்வாதிகள் கலந்து கொண்டார்கள். ஏனெனில், அவர் – ஜியா உல் ஹக் அதாவது முஸ்லீம்! ஆபிஸர்-ஆன்-டியூட்டி பதவி ஆலித்தபோது, அவரது மனைவி பர்வீன், டிஎஸ்பி பதவிதான் வேண்டும் என்று அடம் பிடித்தார்[8]. அதுமட்டுமல்ல, குடும்பத்தை சேர்ந்த எட்டு நபர்களுக்கு வேலை வேண்டும் என்று ஒரு பட்டியலையும் கொடுத்தார்[9]. இதனால் வேலை விஷயத்தில் இவருக்கும், இவரது மாமனாட்ருக்கும் சண்டை ஏற்பட்டது[10]. அகிலேஷ் வாக்குக் கொடுக்காவிட்டால், அந்திமக்கிரியைகூட செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்தார்[11]. இப்படி ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்தன, செய்திகளை, விடியோக்களை வெளியிட்டன!

Indian soldier beheaded - Women protestசுரணையற்றஇந்தியர்கள்செக்யூலரிஸத்தில்ஊறித்திளைத்துள்ளனர்: ஆக சாவிலும் இந்திய செக்யூலரிஸம் மதம் பார்க்கிறது, அதன்படியே, சோனியா-ராகுல் உணர்ச்சிப் பொங்க, தேர்ந்தெடுத்து அந்திமக் கிரியைகளில் பங்கு கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட விதவைகளுக்குக் கூட உபி பாரபட்சம் காட்டுகிறது. இப்படி அந்த செக்யூலரிஸத் தன்மை வெளிப்படுகிறது. இதையும் நல்லது என்று பாராட்டிக் கொண்டு, பிரச்சாரம் செய்து இந்தியர்களை லாயக்கில்லாதவர்களாக, பேடிகளாக, சுரணையற்றவர்களாக மாற்றி வைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

04-05-2013


[3] Last year on April 26, 2012 defence minister, A K Antony in a written reply in Rajya Sabha had said a total of 102 ceasefire violations along the LoC in Jammu and Kashmir have taken place since 2010. Read more at: http://indiatoday.intoday.in/story/army-jawans-pakistani-troops-line-of-control-poonch/1/241332.html

[9] Parveen has prepared a list of eight people to hand over to the government for the proposed jobs. Most of the people in the list belong to her father’s family. The name of Zia-ul-Haq’s cousin has been placed at 8th position.

http://daily.bhaskar.com/article/UP-up-dsp-killing-zia-ul-haqs-wife-battles-in-laws-over-govt-jobs-4200670-NOR.html

[10] Haq’s father has strongly objected to the composition of the list, saying after Parveen, only members from the police officer’s side of family should be given the jobs.

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்!

ஜனவரி 29, 2012

முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்!

முல்லாயமும், இமாமும் சண்டை போட்டுக் கொண்டு சேர்ந்து விட்டனராம்: முன்பு, இமாம் முலாயமை கடுமையாகத் தாக்கி, விவர்சனம் செய்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், தேர்தலில் கலந்து கொண்டதால், இமாம் புகாரியை முல்லாயமும் விமர்சனம் செய்துள்ளார்[1]. “காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்து முஸ்லீம்களை ஏமாற்றி வருகிறது. இதனால் 1970-80களில் முஸ்லீம்களின் பிற்போக்குத் தன்மைக்குக் காரணாமாக இருந்தது. முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று கட்டளையிடுவது[2] தில்லி சாஹி இமாம்”, என்று ஆணையிட்டுள்ளார்! சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள்? ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும்? பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியே, இவ்வாறு பேசியுள்ளார்[3]. தேர்தல் ஆணையர் இதனை கண்டுகொள்வாரா, விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.

யார் இந்த சாஹி இமாம் புகாரி? இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும்! அயல்நாட்டில் அப்படி பேசியதால், ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டார்களாம். பிறகு, அவர் இறந்ததைக் கூட, செய்தித்தாள்களில் சிறியதாகப் போட்டு, மக்கள் மறந்து விடவேண்டும் அல்லது இவையெல்லாம் தெரியாமலேயே போக வேண்டும் என்று வேலை செய்துள்ளன. அந்த இமாமின் மகன் தான், இப்பொழுது, “முல்லா”யம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று முழங்கியிருக்கிறார்.

குடும்பம் சகிதமாக இமாம் முல்லாயத்திற்கு ஆதரவு: மௌலானா அஹமது புகாரி என்பவர், தில்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதின் இமாம் ஆவர், சாஹி பிரிவைச் சேர்ந்தவர் ( Shahi Imam of Delhi’sJama Masjid Maulana Ahmad Bukhari ). இவருக்கு குடும்பம் எல்லாம் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரிய வருகிறது. ஆமாம், இவரது மறுமகன் முஹம்மது உமர் கான், சமஜ்வாடி கட்சி வேட்பாளராக பேஹத் இன்ற இடத்தில் போட்டியிடுகிறார். அவரும், தனது மாமனார் பேசும் போது கூட இருந்தார். மாமனார்-மறுமகன் மேடையில் இருந்தது, மக்களுக்கு குசியாக இருந்ததாம். முல்லாயம் 18% ஒதுக்கீடு தருகிறேன் என்று வாக்களித்து விட்டாராம், பதிலுக்கு இதோ எங்களது முஸ்லீம் ஓட்டு என்று இமாம் சொல்லிவிட்டாராம்[6].

இமாம், மற்ற முஸ்லீம் மதத்தலைவர்கள் குழுமியிருந்தது: “தியோபந்த்” என்ற முஸ்லீம் அமைப்பிலிருந்து வந்திருந்த மதகுருமார்கள் சிலரும் – மௌலானா நூருல் ஹூடா (Maulana Noorul Huda) மற்றும் மௌலானா முப்டி அர்ஸத் பரூக்கி (Maulana Mufti Arshad Farooqui) முதலியோரும் இருந்தனர்[7]. முஸ்லீம்களின் விருப்பங்களை காக்கும் ஒரே கட்சி சமஜ்வாடி கட்சி தான் என்று அடித்து பேசினார். இமாமின் இத்தகைய மதவாத ரீதியில், ஒரு குறிப்பிட்ட கட்சிற்கு ஓட்டு போடுங்கள் என்று ஆணையிடுவதால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது, என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இது “செக்யூலரிஸம்” ஆகுமா? பஞ்சாபில் கூட சீகிய மதத்தலைவர்கள் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று விவாதித்து வருகின்றனர்[8]. ஆனால், இவ்வாறு மதத்தலைவர்கள் தொடர்ந்து, அரசியலில் மீடுபடுவதும், ஒருசில கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும், “செக்யூலரிஸம்” வேறு பேசிக் கொண்டு இருக்கும் அக்கட்சிக:ளின் சுயரூபத்தைக் காட்டுகிறது. காங்கிரச்காரர்கள் தாம், இப்படி மதவாதத்தை கடைபிடித்து, பிஜேபியை மதவாதக் கட்சி என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் காலத்தை ஓட்டி வருகின்றன. இருப்பினும், சாதாரண மக்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வரும்போது, அரசியல்வாதிகள் சரியான பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள்.

“கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள்: பாரதிய ஜனதா கட்சியுடன், முலாயம் 2009ல் கூட்டு வைத்ததற்கு, என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆகையால், இனி “கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள் என்று பத்திரிக்கைக்காரர்கள் முன்பாகவே பேசியுள்ளார்[9]. அதாவது, தேவையென்றால், பிஜேபி செக்யூலர் கட்சியாக இருக்கும், மற்ற கட்சிகள் கூடு வைத்துக் கொள்ளும் அல்லது கூட்டணியில் இருக்கும், தேவையில்லை என்றால், மதவாத கட்சியாகிவிடுகிறது.

ஒசாமா பின் லாடனை ஆதரித்த தில்லி இமாம்!: “தில்லி இமாம் ஒரு மதவாதி, அவர் ஒசாமா பின் லாடனை ஆதரித்தவர், அதுமட்டுமல்லாது 2004ல், பிஜேபிக்கு எதிராக பத்வாவையும் போட்டவர்”, என்று கமெண்ட் அடித்தவர்[10], காங்கிரஸ் ஜோகர் – திக்விஜய சிங்[11]. “அவரை எதிர்த்தவர் தான், அவர் பகுதியிலிருந்து தேர்தலில் வென்றுள்ளார். இதிலிருந்தே, அவரது செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது, என்று தெரிந்து கொள்ளாலாம். ஆகவே, அத்தகைய மதவாதியான இமாம் புகாரி சொல்வதைக் கேட்டு முஸ்லீம் உபியில் ஏமாந்துவிட மாட்டார்கள்”, என்று கூறி முடித்தார்[12]. ஆனால், காங்கிரஸே அத்தகைய முஸ்லீம்களை தாஜா செய்யும் வேலையை செய்து வருகிறது. முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு என்று ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பிறகு, பிரச்சினை வரும் என்றறிந்ததும், ஜகா வாங்கியுள்ளது.

Bukhari calls stir anti-Islam, tells Muslims to stay away, August 22, 2011NEW DELHI: Syed Ahmed Bukhari, Shahi Imam of Delhi’s Jama Masjid, has called upon Muslims to stay away from the Anna movement saying his war cry – Vande Mataram and Bharat Mata Ki Jai – are against Islam.

“Islam does not condone the worship of the nation or land. It does not even condone worship of the mother who nurtures a child in her womb. How can Muslims then join his stir with a war cry that is against the basic tenets of Islam. I have advised them to stay away,” Bukhari told TOI.

Bukhari, who is not perceived to be close to the Congress, may have inadvertently voiced the very concerns that Congress leaders have been expressing off the record about how Anna’s stir has isolated Muslims though none of them had ventured to make a public statement on this. The call has also reignited the centuries old debate of Vande Mataram being anti-Muslim.

Even though Team Anna includes lawyers like Prashant and Shanti Bhushan who have taken up cudgels against Narendra Modi for his alleged role in the Gujarat riots, the Shahi Imam, one of the tallest Muslim religious leader, is critical of the movement because he feels that communalism and not corruption is the bane of the country. “If Anna had included communalism in his agenda, I would have been more convinced of his intentions,” he said.

While questioning where Anna is getting funds to organize such a massive rally, Bukhari has accused Anna of indulging in politics at the behest of the RSS and the BJP.

காந்தியை எதிர்த்த பாணியில், அன்னா ஹஜாரே இயக்கத்தை எதிர்த்த இமாம் புகாரி: சமீபத்தில் பெருமளவில், ஊழலுக்கு எதிராக நடந்ட, நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் முஸ்லீம் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேறு ஆணையிட்டுள்ளார்[13]. சரி, அப்படி என்ன, அன்னா செய்து விட்டார்? “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ? “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார்! அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது? பிறகு, நாங்கள் “இந்துக்கள்” கூட வேலை செய்ய மாட்டோம், அவர்கள் “காபிர்கள்” என்று வெளிப்ப்டையாகச் சொல்லி, ஜின்னா பாதையில் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மகாத்மா காந்தியையே எதிர்த்தவர்கள், அன்னா ஹஜாரேவை மதிப்பார்களா என்ன?

வேதபிரகாஷ்

29-01-2012


[1] Twenty years after he admonished the then Shahi Imam of Delhi’s Jama Masjid, Syed Abdullah Bukhari, for dabbling in Uttar Pradesh politics — the Maulana had campaigned for the Janata Dal in the 1991 Assembly elections — Samajwadi Party chief Mulayam Singh has joined forces with the late cleric’s son and the present Shahi Imam, Syed Ahmed Bukhari, to win over Muslims in the poll-bound State. http://www.thehindu.com/news/states/other-states/article2840357.ece

[4] A Muzaffarnagar court on Saturday (October 18, 2008) issued a non-bailable warrant against the Shahi Imam of Delhi Jama Masjid Syed Ahmad Bukhari for not appearing before it in a 2007 case related to violation of election code of conducthttp://www.expressindia.com/latest-news/Nonbailable-warrant-issued-against-Shahi-Imam/375080/

[5] Non-bailable arrest warrants against Bukhari

A court in Gorakhpur has ordered issuance of non-bailable arrest warrants and initiation of proceedings for attachment of property against the Shahi Imam of Delhi Jama Masjid, Syed Abdullah Bukhari, for securing his attendance in a defamation case.

Bukhari has been evading appearance before the court of the judicial magistrate despite non-bailable warrants of arrest and proceedings under section 83 of the CrPC ordered against him on several occasions since 1993.

The magistrate has again ordered the Delhi police to arrest Bukhari and produce him before his court on October 21.

An advocate had filed a defamation suit against Bukhari for allegedly making anti-Indian statements, as published in a newspaper on December 9, 1992.

[9] Bhukhari called upon the community to close the “Kalyan Singh chapter”. Since Yadav had publically apologised for his poll pact with former BJP CM Kalyan Singh in 2009, it was no longer a factor, Bukhari told journalists.

http://www.hindustantimes.com/Specials/Coverage/Assembly-Elections-2012/Chunk-HT-UI-AssemblyElections2012-UP-TopStories/Close-Kalyan-chapter-vote-for-SP-Bukhari/SP-Article10-803528.aspx

[11] Congress general secretary Digvijay Singh said, “Bukhari is a communal person, who at one time supported Osama Bin Laden.”

http://www.hindustantimes.com/Specials/Coverage/Assembly-Elections-2012/Chunk-HT-UI-AssemblyElections2012-UP-TopStories/Close-Kalyan-chapter-vote-for-SP-Bukhari/SP-Article10-803528.aspx

[12] “Bukhari’s worth can be estimated from the fact that his opponent has won from the area he lives in. Muslims of UP will not get misled by his appeal,” Digvijaya said while talking to the reporters.

http://timesofindia.indiatimes.com/india/UP-Muslims-will-not-be-misled-by-communal-Bukhari-Digvijaya/articleshow/11665792.cms