சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)

 சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)

Jagannaath Swami - colour photo

மூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.

Pranav Swami - colour photo

சிவகுமார்,  ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத்து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்தி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ஆண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.

KPN photo

நிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.

KPN photo

அஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.


[6] The mutt, which attracts followers from the Lingayat community, has been dogged by controversies over property related issues.

http://articles.timesofindia.indiatimes.com/2013-04-08/bangalore/38372031_1_suicide-note-seer-pontiffs

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)”

 1. vedaprakash Says:

  ‘Future of Chowli Math is uncertain’ by RISHIKESH BAHADUR DESAI
  http://www.thehindu.com/todays-paper/tp-national/future-of-chowli-math-is-uncertain/article4597151.ece

  Suicide of three persons there raises questions about maths

  The self-immolation of three devotees of Sri Ganeshwar Avadhoot Maharaj in the Chowli Math near Bidar on Monday raises several questions about religious institutions like maths that are worlds unto themselves, with little accountability to any overarching authority.

  Jagannath Swami (30) of Nagur in Andhra Pradesh, Eera Reddy Swami (45) of Manur in Andhra Pradesh, and Pranav Swami (16) of Chowli village, immolated themselves on the math premises on Monday. While Jagannath Swami was staying in the math for over 15 years, Eera Reddy Swami was there for nearly 7 years, Pranav Swami had left home two years ago to stay with Sri Ganeshwar Avadhoot Maharaj.

  The incident comes five weeks after what appeared to be suicide of Sri Ganeshwar Avadhoot Maharaj, the reclusive seer who founded the math. He also had left a suicide note. While the police suspect that he had consumed poison, the devotees did not file any complaint. His body was buried without a post-mortem.

  “Some inmates told us that Ganeshwar Avadhoot had spoken about mass suicide along with his followers,” said a police officer investigating the case. The math attracted a large number of devotees from Maharashtra and Andhra Pradesh. But its inmates remained reclusive and its activities were shrouded in mystery to outsiders, including residents of Chowli village. “We seldom saw the seer coming out of his room. He used to deliver weekly discourses. But that had stopped a few years back,” said Basavaraj Channappa, a resident of Chowli.

  The math was started by Shiva Kumar, a young man from Gugwad in Sangli district bordering Athani in Karnataka. He was brought to Chowli by Sangayya Swamy a police officer in 1989 or 90. Sangayya Swami was murdered in the early 90s, though the police say it was not related to the affairs of the math.

  Sri Ganeshwar Avadhoot, as he began to be called in Chowli, set up a small math on a piece of farmland donated by Omkarappa, a village resident. Locals called the seer Chowli Mutya.

  Chowli Mutya was a Marathi-speaking Lingayat. But the math was not run on Basaveshwara’s ideals. It has no idols of Basaveshwara or other Sharanas. Instead, there are over 100 statues and idols of Chowli Mutya. One of the statues is over 40ft high.

  The math’s finances and influence expanded in the last decade. Land prices in Chowli shot up after 2007 when the outer ring road of Bidar passed through the village. The math’s expansion plans suffered as land prices soared and Chowli farmers refused to part with their land. This had led to some disputes too. Some devotees lodged cases against land owners of Chowli village. For instance, devotees pressured the police to arrest a person called Basavarajappa and a few others for the alleged kidnapping of Maruti Swamy, a devotee who went missing on January 31, said Pandhari Nath, a resident of Chowli.

  16 branches

  The math has 16 branches spread across Karnataka, Andhra Pradesh and Maharashtra, and each branch is independent in its own right. “People who are complaining of police failure should realise that the devotees did not allow the police to investigate the earlier cases properly,” said a senior police officer.

  Uncertainty ahead

  “The math’s future is uncertain. We have lost Jagannath Swami, who was running the math. Now we are directionless,” said Aravind Patil, a devotee from Humnabad. “We had met Deputy Commissioner P.C. Jaffer seeking advice about the math management. He suggested that devotees should set up a trust. Elders of Chowli village and a few devotees held a meeting to discuss the issue, and agreed to set up a trust. But it has not been formed yet,” he said.

 2. vedaprakash Says:

  Anguished followers set themselves on fire in Bidar math
  http://www.thehindu.com/news/national/karnataka/3-bidar-math-inmates-commit-selfimmolation/article4593851.ece

  euthanasia (also includes assisted suicide) suicide

  In what appears to be ritual suicide, three devotees, including a teenager, immolated themselves inside the Sri Ganeshwar Avadhoot Maharaj Math in Chowli village in Bidar taluk in the early hours of Monday. Chowli is about 7 km from Bidar.

  Jagannath Swami (30), Eera Reddy Swami (45) and Pranav Swami (16), are believed to have sat on a mound of firewood and set fire to it after dousing it with kerosene around 4.30 a.m., the police said. They were all followers of the late Sri Ganeshwar Avadhoot Maharaj, a Lingayat pontiff, who himself died in a possible suicide from self-poisoning on February 28.

  Inmates of the math alerted the police about the fire. “Loud cries woke them up. They saw flames and alerted our constables. They called the New Town police station and the Fire Services personnel, who arrived within minutes,” said a police officer who was present in the math. Fire fighters struggled for nearly an hour to put out the blaze. “Once we started removing the firewood, we noticed the bodies. Only then did we know of the suicide,” the officer said.

  Mystery

  While the reasons for the death of the 55-year-old Ganeshwar Avadhoot Maharaj remain a mystery, the three devotees left a note stating their reasons for committing suicide. In the two-page, partly printed and partly handwritten note, they state: “Unable to bear the pain of separation” they are “going to meet their departed Guru.” They also state that they have “no relatives, friends or foes in this world”. They said their Guru’s spirit had instructed them to go to him through the route of Agni (sacred fire).

  A police van has been stationed in the math since the pontiff’s death. But the van was parked outside the math premises and the personnel were sleeping in the math’s community hall when the incident occurred, police said.

  “The firewood was stocked for the mass feeding to be organised on the math’s annual fair scheduled for April 11,” Shantappa, a devotee from Bhalki said.

 3. சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4) | Indian Secularism Says:

  […] [7] https://secularsim.wordpress.com/2013/04/11/chowli-ashram-episode-reason-behind-sectarian-politics/ […]

 4. M. K. Mahalakshmi Says:

  நிலத்தின் விலை ஏறினால் யாருக்குத்தான் ஆசை வராது?

  இன்று ரோடு போடுவது, ரியல் எஸ்டேட் பிசினஸை வளர்ப்பது, கருப்பை வெள்ளையாக்குவது என்பது ஒரு தந்திரமாகவே கொண்டுள்ளனர்.

  சாமியார் அட்ஜெஸ்ட் பண்ணவில்லை என்றால் போட்டுத்தான் தள்ளூவார்கள்.

  தற்கொலை செய்து கொண்ட மூவர்களும், உண்மையாகவே அவ்வாறு செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

  குறிப்பிட்ட அஷோக் சாமியார் பற்றிய விவரங்களை மேலும் தாங்கள் கொடுத்தால், ஓரளவிற்கு யூகிக்க முடியும்.

  மற்றபடி லிங்காயத்தாரை மிரட்டியுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் தேவை.

 5. L. K. Raghuraman Says:

  கர்நாடக தேர்தல்: பிரதமர் – சோனியா – ராகுல் பிரசாரம்
  http://www.thinaboomi.com/2013/04/14/21125.html

  கர்நாடக சட்டசபை தேர்தல்: காங். வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் – சோனியா – ராகுல் பிரசாரம்.
  1/1

  புதுடெல்லி,ஏப்.15 – கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். கர்நாடக மாநில சட்டசபைக்கு வரும் மே மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே மாதம் 8-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முக்கிய கட்சிகளான ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பாக 177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதிப்பேர் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கியுள்ள புதிய கட்சியான கர்நாடக ஜனதா கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்கலாம் என்று தெரிகிறது.

  இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். ராகுல் காந்தி வருகின்ற 26,30, மே மாதம் 2 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதனையடுத்து சோனியா காந்தி வருகின்ற23,28,மே 1 ஆகிய தேதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார். வருகின்ற 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். ஹூப்ளி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் நடக்கவுள்ள காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: