Archive for the ‘ஆண்ட்ரூஸ்’ Category

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (3)

ஜூலை 21, 2013

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (3)

Solar scandal link - India Today graphics

சோலார்  பெனல் மோசடியில் தாவூத் இப்ராஹிம் கோஷ்டியின் தொடர்பு:  கவர்ச்சி நடிகைகள், அரசியல்வாதிகள் முதலியோருக்குப் பிறகு[1], இப்பொழுது தாவூத் இப்ராஹிம் கோஷ்டியும் இந்த சோலார் பெனல் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. எம். கே. குருவில்லா என்பவர் காபித்தோட்ட பெரிய எஸ்டேட் சொந்தகாரர். பெங்களூரில் கோரமங்களாவில் வசித்துவரும் பெரிய க்கொஓடீஸ்வரர். சென்ற அக்டோபர் 2012லேயே தனக்கு ரவி பூஜாரி உட்பட தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளிடமிருந்து தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக புகார் கொடுத்துள்ளார்[2]. சோலார் பெனல் முதலீட்டில் ஒரு கோடி ஏமாந்து விட்டதால், அவர் புகார் கொடுத்தார்.

கேரளாவிற்கும்,  வளைகுடா நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் தெரிந்ததே: கேரளாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் பலவிதங்களில் உள்ளன. செயிக்குகள் சட்டங்களை மீறி, கேரளாவில் வந்து தங்கியதிலிருந்து, தீவிரவாதிகள் தொடர்பு வரை விவரங்கள் வெளிவந்துள்ளன. ஒரு பெரிய போலீஸ் அதிகாரியே அடிக்கடி சென்று வந்ததும், அவர் மனைவி மற்றும் மதானியின் மனைவியும் சேர்ந்து வைத்துள்ள கம்பெனி போலி சிடி-டிவிடிகள் தயாரிப்பில் ஈடுபட்டது முதலிய விஷயங்களும் கேரள அரசியல்-அதிகார-சினிமா பிரிக்கமுடியாத வலைகளை எடுத்துக் காட்டுகிறது. தாவூத் இப்ராஹிமின் விருப்பங்களும் கேரளாவில் இருந்து வருகின்றன. இப்பொழுது கிரிக்கெட் ஊழலிலும் கேரளாவின் ஶ்ரீசாந்த் மட்டுமல்ல, தாவூத் இப்ராஹிமும் சம்பந்தப் பட்டுள்ளனர். அதனால், பெரிய பதவிகளில் இருப்பவர்கள், வியாபாரத்தில் கோடிகள் சம்பாதிப்பவர்கள், தாவூத் இப்ராஹிமுக்கு கப்பம் கட்டவேண்டிய அவசியம் உள்ளது. இல்லையென்றால், டி-சீரீஸ் முதலாளிக்கு நடந்த கதிதான் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால், 2ஜியில் எப்படி அவனது சம்பந்தம் உள்ளதோ, அதேபோல, இந்த சோலார் பெனல் மோசடியிலும் சம்பந்தம் இருப்பது ஒன்றும் வியப்பில்லை. மேலும், பங்களூரு தொடர்ப்பு, அவற்றை (புரிந்து கொள்ள) எளிமையாக்குகிறது.

Solar panel scam1

உம்மன் சாண்டி மகனின் பெயரைச் சொல்லி மோசடி: பினு நாயர் என்பவர் தான் (பிஜு தான் இப்படி பெயர் மாற்றம் செய்துள்ளான்) ஒரு கம்பனியின் [SCOSSA Educational Consultant Private Ltd at Koch] டைரக்டர், கல்வி ஆலோசனையாளர் என்றெல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டு[3], தன்னிடம் வந்து இங்கிலாந்து பண உதவியுடன், கொரியன் தொழிற்நுட்பம் ஊபயோகப்படுத்தி, கேரளாவில் பல பகுதிகளில் சோலார் பெனல் திட்டம் அறிமுகப்படுத்தப் போவதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் வரும் என்றும் மேலும் அது முதலமைச்சருக்கு சொந்தக்காரரின் கம்பெனி என்று அறிமுகப்படுத்தியதால் தான், தான் அவ்வாறு முதலீடு செய்ததாக ஒப்புக் கொண்டார்[4]. உம்மன் சாண்டியின் மறுமகன் ஆன்ட்ரூஸ் [‘nephew’ Andrews] மற்றும் அவரது அந்தரங்க செயலாளர் தெலிஜித் [‘personal secretary’ Deljith] அக்கம்பனியின் பார்ட்னர்கள் / டைரக்டர்கள் என்றும் சொன்னார்[5]. ஆன்ட்ரூஸ் அபு தாபியிலிருந்து வேலை செய்வதாகவும், அவர்தாம் இங்கிலாந்து பண உதவியையும், கொரியன் தொழிற்நுட்பத்தையும் பெற்றுத் தருகிறார் என்று விளக்கினார்[6]. இதனால், ஜூன் 2011லிருந்தே ஒரு கோடி பணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அவர் சொல்லியபடி போட்டுள்ளதாக புகாரில் தெரிவித்தார்[7].

Solar panel scam2

எம். கே. குருவில்லா உம்மன்சாண்டியிடம் கொடுத்த புகார் மனு: பணம் கொடுத்து ஒரு வருடம் ஆகியும், சோலார் பெனல் திட்டம் அறிவித்தபடி, தொடங்கப்படவில்லை. கேட்டபோது, சரியான விவரங்கள் கொடுக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த, குருவில்லா, உம்மன் சாண்டியை அக்டோபர் 17, 2012 அன்று நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்ததார். முதலமைச்சர், டைரக்டர் ஜெனரல் ஆப் போலீசுக்கு [Director General of Police] ஆணையிட்டு, அந்த விவகாரத்தைக் கவனிக்கச் சொன்னார். FIR போட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கும் என்றாலும், அதில் முதலமைச்சர் சம்பந்தத்தை விடுத்து, பதிவு செய்துள்ளது பிறகு தெரிய வந்துள்ளது. முதலமைச்சரிடம் புகார் கொடுத்து, பெங்களுருக்குத் திரும்பியவுடன், தனக்கு தொலைபேசியில் “உன் குடும்பத்தையே ஒழித்து விடுவோம்என்று மிரட்டல்கள் வந்தன என்கிறார்[8]. மேலும், கோரமங்களாவில் உள்ள தனது பங்களாவின் அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் உலாவி வருவதாகவும் அறிந்தார். இதனால், போலீஸ் பாதுகாப்பும் கேட்டுள்ளார். இதை விசாரித்து வரும் மத்திய குற்றவியல் பிரிவும், இதைப் பற்றி உறுதியாகச் சொல்ல மறுக்கிறார்கள். “நாங்கள் பாதுகாப்பு மட்டும் தான் கொடுத்துள்ளோம். விசாரணை கேரள போலீஸார் செய்து வருகிறார்கள்”, என்று ஒரு மூத்த அதிகாரி ஆறிவித்தாக செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன[9]. மதானி விஷயத்தில் கூட இப்படித்தான் இரு மாநில போலீஸாரும் நடந்து கொண்டார்கள்.

Solar panel scam3

உம்மன் சாண்டி,  குருவில்லாவின் புகார் பற்றி கூறுவது: உம்மன் சாண்டி “குருவில்லா உண்மையில் புகார் கொடுப்பது போல, என்னை திசைத் திருப்பியுள்ளார். என்னுடைய பெயர் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதனால், நான் அப்பொழுது நடவடிக்கை எடுக்க சொன்னேன். போலீஸார் சிலரை கைது செய்து விசாரித்தபோது, அவர்கள் வேறு கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆதாவது அவர்கள் ஏமாந்து விட்டதால், புகார் கொடுக்கக் கூடாது என்பதற்காக, அவ்வாறு குருவில்லா புகார் கொடுத்துள்ளதாக கூறினர். அவர்கள் கொடுத்த சாட்சியத்தின் பேரில் குருவில்லா கைது செய்யப்பட்டார்[10]. பெங்களூரில் ஒரு பணப்பட்டுவாடா விவ்வகாரத்தில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்”, என்றெல்லாம் உம்மன் சாண்டி கூறியுள்ளார்[11]. ஆனால், அச்சுதானந்தன் இதனை தட்டிக் கேட்டுள்ளார்[12]. குருவில்லா குறிப்பிட்ட ஆதர்ஸ மற்றும் ரஞ்சிதா என்பவர்களை விசாரிக்காமல், வழக்குப் பதிவு செய்யாமல், குருவில்லாவை கைது செய்தது ஏன் என்று கேட்டுள்ளார்[13].

M. K. Kuruvilla arrested

முந்தைய முதலமைச்சர் அச்சுதானந்தம் இது விசயமாகக் கேட்கும் கேள்விகள்: சுரானா வென்சூர்ஸ் லிமிடெட், ஆதித்யா சோலார் எனர்ஜி சிஸ்டம்ஸ், பவர் ஒன்  மைக்ரோ சிஸ்டம்ம்ஸ் என்று பல கம்பனிகள் அரசின் பட்டியலில் இருந்தன. ஆனால், பிறகு அவை நீக்கப்பட்டன. இது ஏன் என்று அச்சுதானந்தனும் கேட்டுள்ளார். தாமஸ் குருவில்லா என்ற உம்மன் சாண்டியின் உதவியாளருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது என்பதனை விசாரிக்க வேண்டும் என்றார். உம்மன் சாண்டி தில்லியில் இருக்கும் போது, ஏழுமுறை தாமஸ் குருவில்லா “கேரளா ஹவுசில்” தங்கியிருக்கிறார். சரிதா நாயருக்கும் மாநில அமைச்சர்கள் – ஆர்யதன் மொஹம்மது, கே.சி.ஜோசப், கே.பி.மோகன், முன்னாள் அமைச்சர் கே,பி.கணேஷ்குமார், மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் முதலியோருக்கும் தொடர்பு உள்ளது என்றும் அச்சுதானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்[14].

M K Kuruvilla and Thomas Kuruvilla

தாமஸ் குருவில்லா, எம். கே.  குருவில்லா குழப்பம் ஏன்?: இதில் வேடிக்கை என்னவென்றால், மேலே குறிப்பிட்ட உம்மன் சாண்டியின் உதவியாளர் தாமஸ் குருவில்லாவும் சரிதா நாயருடன் ஒரு கோடிக்கு சோலார் முதலீடு செய்வது பேசியிருக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இவர் சரிதா நாயர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவரும் உம்மன் சாண்டியும் விக்யான் பவனில் டிசம்பர் 27, 2012 அன்று நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார் என்றும் ஒரு டிவி செனல் பேட்டியில் கூறியுள்ளார்[15]. ஆனால், சாண்டி அதனை மறுத்துள்ளார்[16]. ஆனால், தான் சரிதா, ஆன்ட்ரூ, திலிஜித் என்று யாரையும் சந்தித்தது கிடையாது என்கிறார்[17]. சென்ற ஜூன் மாதத்திலேயே, சோலார் பெனல் மோசடியில் முதலமைச்சர் அலுவலகம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற புகார் கொடுத்த எம். கே. குருவில்லாவை பண மோசடி வழக்கில் கேரள போலீஸார் கைது செய்தனர். அம்பலூர் என்ற ஊரில் தன்னை குருவில்லா ரூ 52.35 லட்சம் ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்ததால் கைது செய்யப்பட்டார். தன்னுடைய பேன் ஏசியா [Pan Asia Brokers and Consultancy Pvt Ltd] கம்பெனியில்[18] முதலீடு செய்தவர்களை ஏமாற்றிவிட்டதாக புகாரின் மீது இந்த நடவடிக்கை. அந்நிய வர்த்தகத்தில் பணத்தைப் போட்டு, இரட்டிப்பாக்கி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றினாராம்[19]. ஆனால், குருவில்லா கொடுத்த புகாரின் மேல், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[20].  இது ஏதோ புகார் கொடுத்தவரை பழி வாங்கும் போக்கு போன்று காணப்படுகிறது. சூரிநெல்லி பெண்ணின் விவகாரத்திலும், அவள் மீது பணம் கையாடல் என்ற பெயரில் வழக்குப் போட்டு, சிறையில் அடைத்துள்ளனர்.

Solar panel scam5

கேரள அரசு நிறுவனம் இம்மோசடியில் பங்கு கொண்டுள்ளதா?: மாற்று வழிகளில் மின்சாரம் உற்பத்தி மற்றும் நகர்புற தொழிற்நுட்பக் கழகம் [the State Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT)] என்ற மாநில அரசின் கீழ் இந்த சோலார் பெனல் திட்டம் வருகின்றது[21]. சூரிய சக்தி திட்டங்களும் என்று இதில் வருகின்றன[22]. இதனால் பலனடைந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு மத்திய அரசு மானியம் எவ்வளவு கொடுத்தது என்ற விவரங்களும் உள்ளன[23]. இதன் கீழ் கேரளாவில் “10,000 கூரைகளில் சோலார் பெனல் திட்டம் என்று ஆரம்பித்தது. ஆனால், இதை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் போலி கம்பனிகளை உருவாக்கி, அத்தகைய சோலார் பெனல்கள் நிறுவப்பட்டது போல காட்டி, “இன்ஸ்டலெஷன் சர்டிபிகேட்டுகளை” கொடுத்து மானியத்தையும் பெற்றுவந்தது தெரிகிறது. ஒரு பக்கம், பணம் உள்ளவர்களை, இதில் முதலீடு செய்யுமாறு கவர்ச்சிகர முறையில் வேலை செய்வது, மறுபக்கம் அரசாங்கத்தையும் ஏமாற்றுவது என்று செய்து வந்துள்ளது தெரிகிறது. இதனால், புதிய மற்றும் புதுப்பிக்கப்படும் சக்தி அமைச்சக செயலாளர், எச்சரிக்கை விடுத்துள்ளார்[24].

Thomas Kuruvilla New Delhi

30%  மானியத்தைப் பெறவே இந்த அரசு சார்பான மோசடி: தொழில், விஞ்ஞானம், நகர்புற வளர்ச்சி என்று பலதுறைகள் இதில் வருவதால், அந்தந்த அமைச்சர்களுக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க முடியாது. உம்மன் சாண்டி போல, எனது அந்தரங்க செயலாளர்கள் போனில் ஏதோ பேசிக் கொண்டிருப்பார்கள், எனக்கு போனே கிடையாது, இதனால், நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். இந்த அமைச்சர்களும் அதே பாணியைப் பின்பற்றுகிறார்கள். இதில் ஒன்று வியாபாரத்தில் அதாவது இப்படி 30% மானியத்தை கொள்ளையடுக்கும் பணப்பகிர்வு விஷயத்தில் சம்பந்தப் பட்டவர்களுக்கிடையே தகராறு  வந்திருக்கலாம் மற்றும் ஆட்சி மாறியதால், அரசு சார்பு அதிகாரிகள், இடைத்தரகர்கள், மற்றவர்கள் மாறுவதால் காட்டிக் கொடுக்க முயற்சித்திருக்கலாம். அதன் விளைவுதான் பிஜு-சரிதா-ஷாலு மாட்டிக் கொண்டது[25]. ஆனால், இன்னும் இதில் மோசடி செய்தவர்கள் சிக்காமல் இருக்கின்றனர். உசாரான மத்திய அரசு செயலாளர், உண்மையிலேயே எத்தனை சோலார் பெனல்கள் நிறுவப்பட்டுள்ளன என்ற அறிக்கையினைக் கேட்டுள்ளது. அவ்விவரங்கள் கிடைக்கும் வரை 30% மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது[26].

வேதபிரகாஷ்

© 21-07-2013


[6] Mr Nair claimed that one of his directors named Andrews was the first cousin of the Kerala CM. He operated from Abu Dhabi and would arrange the technology as well as the project funding from UK, Mr Kuruvilla was told. http://archive.asianage.com/node/203025

[7] Since June 2011, Kuruvilla had transferred parts of Rs. 1 crore into different accounts and had also given cash to investors who approached him claiming to be from a company run by Kerala chief minister’s relatives.  Deccan Chronicle reported November 16, 2012 that Kuruvilla was getting threat calls from underworld operatives, including Ravi Poojary and associates of Dawood Ibrahim, after he complained to the Kerala police that he had been cheated of Rs. 1 crore by a Kerala-based solar panel company.

[11] He said the Bangalore-based businessman M.K. Kuruvilla who had complained to him had, in fact, misled him also. The Chief Minister said he had ordered action because Mr. Kuruvilla had alleged that the Chief Minister’s name was used to cheat him. When the police arrested a few people and questioned them for three days, they had a different story to tell. They said that they had been cheated and the petition was filed to prevent them from taking action. They had also approached him and the businessman was arrested on the basis of evidence produced by them. He was behind a Bangalore-based money chain operation.

http://www.thehindu.com/news/national/kerala/truth-will-be-out-soon-says-chandy/article4902567.ece

[12] Mr. Achuthanandan also sought an explanation as to why companies such as Surana, Adithya, and Power One were initially empanelled by the State Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT) and why they were excluded later. There must be an explanation why no case was registered against persons named Adarsha and Ranjith, whom the Bangalore-based businessman M.K. Kuruvilla had accused of financial fraud. Instead of arresting them or questioning them, Mr. Kuruvilla was arrested and his financial sources investigated, the Opposition leader pointed out.

http://www.thehindu.com/news/national/kerala/the-entire-cabinet-must-go-vs/article4881496.ece

[14] Mr. Achuthanandan demanded that the source of income of Thomas Kuruvila, aide of the Chief Minister in Delhi, should also be probed. He had stayed at Kerala House in Delhi on seven occasions when the Chief Minister was there. He alleged that Ministers Arayadan Mohammed, K.C. Joseph, K.P. Mohahan, and M.K. Muneer and former Minister K.B. Ganesh Kumar had links with Saritha and her company besides Union Minister of State K.C. Venugopal.

http://www.keralanext.com/news/2013/06/24/article141.asp

[16] On June 16, one of Chandy’s close associates, Delhi-based Thomas Kuruvilla, dropped another bombshell. He told a TV channel that at Saritha’s request, on December 27, 2012, he had arranged a meeting between her and Chandy at a Vigyan Bhavan conference. Chandy denies having met her.

[19] M K Kuruvila, native of Uzhavoor in Kottayam and an industrialist settled in Bangaloreswindled `45 lakh from Bijeesh during several occasions in the pretext of returning it after doubling the amount through foreign exchange trade and commodity trading.

http://newindianexpress.com/states/kerala/Man-arrested-for-fraud-in-Thrissur/2013/06/25/article1651606.ece

[20] Police on Monday (June 24, 2013) held industrialist MK Kuruvilla who alleged that CMO is connected with solar scam. He was arrested on financial fraud where it is alleged that he had cheated on Rs 52.35 lakh from a person in Amaballor. Permanagalm police arrested him. Earlier Kurvilla alleged involvement of CM’s staff in solar scam and also stated that though he filed complaint with CM, no action was taken.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137336

[24] Red-hot solar controversy has prompted the Union Ministry of New and Renewable Energy to sound the warning bell. The ministry is alarmed over reports of fraudulent companies swindling public in the name of installing solar power systems, and said it will put under microscope the implementation of the ambitious ‘10,000 solar roof-top programme’ in Kerala. Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT) is implementing the programme in the State.