Archive for the ‘விவேகானந்த வித்யாலயா’ Category

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (1)

பிப்ரவரி 27, 2018

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (1)

 ABVP 2018 conference. arch-1st day

பள்ளி வளாகத்திற்கு செல்லும்  தெருவின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள வளைவு.

ABVP 2018 conference

ஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகம்.

ABVP 2018 conference.banner atg ate

வாசலில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

ABVP 2018 conference.vivekananda entrance

வாசலில் வைக்கப் பட்டுள்ள விவேகானந்தர் சிலை.

சென்னையில் தேதிகளில் ஏபிவிபியின் 23வது மாநில மாநாடு: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவ-மாணவியர் அமைப்பு சார்பில் “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்” என்ற தலைப்பில் பிப்ரவரி 17, 18ம் தேதிகளில் 23வது மாநில மாநாடு வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. ஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 225 கல்லூரிகளில் இருந்து 2,000 மாணவ, மாணவிகள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் பத்து மணி அளவில் கொடியேற்றத்துடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் துவங்கின. கே.ஆர். பரமசிவம் கண்காட்சி துவக்கப்பட்டது

ABVP 2018 conference. Chandra Kumar Bose-1st day

தமிழகமும், தேசியமும்: சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்தரகுமார் போஸ் கலந்து கொண்டு உரையாற்றினார், என்று குறிப்பிட்டாலும், அவர், போஸின் அண்ணனான சரத் சந்திர போஸின் பேரன் ஆவர். இவர் சுபாஷ் சந்திர  போஸுக்கும், தமிழகத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பைப் பற்றி விவரித்தார். போஸ் இந்திய தேசிய ராணுவம் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னபோது, 3,000 இளைஞர்களை, முத்துராம லிங்கம் அனுப்பி வைத்தார். இந்திய தேசியத்திற்கு, சுதந்திர போராட்டத்திற்கு, தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த அளவிற்கு தமிழகம் தேசியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது.ஆகவே, தமிழகம் என்றுமே, இந்திய தேசியத்திற்கு எதிராக இருந்ததில்லை. காங்கிரஸ் போஸை, பல வழிகளில் அமுக்க பார்த்தது. அத்தகைய சதிகள் இல்லாமல் இருந்திருந்தால், போஸ் தான், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகி இருப்பார்.

ABVP Conference 2018- subbaiah

துவக்க விழா நிகழ்ச்சிகள், தீர்மானங்கள்: கோவா என்.ஐ.டி இயக்குனர் [Director, NIT, Goa] மாணவ-மாணவியர் எவ்வாறு நன்றாகப் படித்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். பல துறைகளில் மேம்பட்டு, தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினார். சுனில் அம்பேத்கர் ஏபிவிபியின் துவக்கம், வளர்ச்சி முதலியவற்றைப் பற்றி விவரித்தார். கடந்த 67 வருடகங்களில் கம்யூனிஸ இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்து கிடங்கும் நிலையில், ஏபிவிபி பிரியாமல் கட்டுக் கோப்பாக இருந்து வருகிறது. மருத்துவர் சுப்பையா சண்முகம் பேசும் போது, தமிழகத்தில் ஜாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறார்கள், ஆனால், இங்கு, 1200 மாணவ-மாணவியர் கலந்து கொண்டுள்ள நிலையில், அதைப் பற்றி அவர்களிடம் கேட்டதில்லை, அவர்களும் அதைப் பற்றி கவலைப்பட்டதில்லை. அதுதான் ஏபிவிபியின் பலம், என்று எடுத்துக் காட்டினார். காலை பத்து முதல் 12 வரை ஆரம்பவிழா நிகழ்ச்சிகளூக்குப் பிறகு, மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் கல்வி ரீதியான பிரச்னைகள், உயர்கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு சார்ந்த  மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

  1. தமிழகத்தில், கல்வித் துறையில் நடக்கும் ஊழல்.
  2. தமிழகத்தில், கல்விஇன் நிலை.
  3. கேரளாவில் நடக்கும்கொலைகள்.

இரண்டு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளின் சிறு குறிப்பு கீழ் வருமாறு.

ABVP 2018 conference. Martialarts demo-1st day

இந்தியாவில் உள்ள மாணவமாணவியர் அமைப்புகள்: இந்தியாவில் பல மாணவ-மாணவியர் அமைப்புகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு அரசியல்கட்சியும் ஒரு மாணவ-மாணவியர் சங்கத்தை வைத்துள்ளது. இதில் காங்கிரஸைத் தவிர, மற்ற எல்லா குழுமங்களும், இந்திய தேசியத்தை எதிர்க்கும் சித்தாந்தங்கள் கொண்டவைகளாகத் தான் இருந்து வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் குழுமங்கள் அடக்கி வாசித்து வருகின்றன. இவற்றில் இந்தியாவை ஆதரிக்கும் குழுமம் என்றால் ஒன்றே ஒன்று அது அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் உள்ள மாணவ-மாணவியர் அமைப்புகள்:

Name of the organization / association Associated with
All India Students Federation (AISF) related to Communist Party of India
All Bodo Students Union (ABSU) Related to Revolutionary Communist of Bodolonand
All India Democratic Students Organisation (AIDSO) Socialist Unity Centre of India (Communist)
All India Revolutionary Students’ Federation (AIRSF) Communist Party of India (Maoist)
Akhil Bharatiya Vidyarthi Parishad  (ABVP) Constitutionally  Rastriya Swayamsevak Sang
All India Students Association (AISA) Communist Party of India (Marxist–Leninist) Liberation
Bahujan Samaj Student’s Forum (BSSF) Bahujan Samaj Party
Campus Front of India [CFI] Popular Front of India
Chhatra Bharati [CB] Third Front and Anna Hazare
Chin Student Association [CSA] No affiliation
Concern No affiliation
Kerala Students Union [KSU] Indian National Congress
MGJSM Student wing of the Jacobite Syrian Christian Church
MGOCSM Student wing of the Indian Orthodox Church
Mithila Student Union [MSU] No affiliation
Muslim Students Federation [MSU] Indian Union Muslim League
National Students Union of India [NSUI] Indian National Congress
Progressive Democratic Students Union [PDSU] Communist Party of India (Marxist-Leninist) New Democracy in Andhra Pradesh & Punjab
Radical Students Union [RSU] Communist Party of India (Maoist) in Andhra Pradesh
Students Islamic Organisation of India [SIOI] Jamaat-e-Islami Hind
Students’ Federation of India [SFI] Communist Party of India (Marxist)
Student Organisation of India [SOI] Shiromani Akali Dal
Trinamool Chhatra Parishad [TCP] Trinamool Congress
Twipra Students Federation A Nationalist students organisation of Tripura
National conference students union Jammu & Kashmir National Conference
West Bengal State Chhatra Parishad Indian National Congress

இவற்றில் பெரும்பாலானவை, இடதுசாரி சித்தாந்த இயக்கங்களை சேர்ந்தவையாக இருப்பதை கவனிக்கலாம்.

ABVP 2018 conference-Pramasivam exhibition

பேராசிரியர் கே. ஆர். பரமசிவம் நினைவாக கண்காட்சி: உள்ளே நுழையும் போது, ஒரு வளைவு வைக்கப் பட்டிருந்தது. கல்லூரி வாயிலிலும் வளைவு மற்றும் பேனர் இருந்தன. வாயிலுக்கு நேராக, விவேகானந்தரின் சிலை ஏபிவிபி கொடிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. வலது பக்கம் பேராசிரியர் கே.ஆர். பரமசிவம் [காவூரி ராமலிங்கம் அப்பல] கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அவரது நினைவாக புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மதுரைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் கே.ஆர். பரமசிவம்.  இவர் அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஏபிவிபியின் துணைத் தலைவராக இருந்த அவரது 20 வது ஆண்டு நினைவாக, இக்கண்காட்சி வைக்கப்பட்டது. 28-03-1998 அன்று மதவெறியர்களால் தெருவில் படுகொலை செய்யப்பட்டார் பேராசிரியர் பரமசிவம் அவர்கள். இவர் கொலை செய்யப்பட்ட போது அன்று முதலமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை[1]. பரமசிவத்தின் சகோதரர் எழுத்தாளர் நரசய்யா[2] அப்போது வேதனையுடன் ஒரு பத்திரிகையில் கூறினார்[3]: “ஏபிவிபியில் இருந்த ஒரே காரணத்துக்காக என் தம்பி கொல்லப்பட்டிருக்கிறான். யாருக்கும் எந்தவிதத் தீங்கையும் செய்யாதவன். நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்.”

© வேதபிரகாஷ்

27-02-2018

ABVP 2018 - K. R. Paramasivam 28-03-1998 murdered at Madurai

[1] 30-01-1988 முதல் 27-01-1989 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 2009ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்.

[2] காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர்  ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக்  கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963 ஆம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டு  விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில் இவர்  வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டுள்ளார். 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்த நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 ஆம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் இவர் சென்னையில்  வசித்து வருகிறார்.

[3] http://www.tamilhindu.com/2009/03/professor-paramasivam-a-tribute/

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் 20வது மாநில மாநாடும் – என்னுடைய எண்ணத்தொகுப்பும்!

பிப்ரவரி 16, 2014

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் 20வது மாநில மாநாடும் – என்னுடைய எண்ணத்தொகுப்பும்!

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளிக்கு முன்னால் வைக்கப் பட்டுள்ள பேனர்

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளிக்கு முன்னால் வைக்கப் பட்டுள்ள பேனர்

திரு சந்திரசேகர் என்னுடைய நண்பர், அவரைப் பார்க்க பலர் வந்து சென்றுக் கொண்டிருப்பர். அவர்கள் எல்லோரும் ஏபிவிபிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப் படுத்தி வைப்பார். நானும் “ஹலோ” என்ற ரீதியிலும், சில விசயங்களைப் பற்றி பேசுவது உண்டு. அவர்கள் அவர்களது வேலையைப் பார்த்து கொண்டு சென்று விடுவர் சந்திரசேகர் பலமுறை அவர்களது நிகழ்ச்சிகளுக்கு வரச்சொன்னதுண்டு. ஆனால், நேரமில்லை, உடல் அசௌகரியம், வீட்டுப் பிரச்சினைகளசென்ற பல காரணங்களினால் முடியாமல் இருந்தது. அந்நிலையில் அவர்களது மாநாடு சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடப்பதாகவும் அதற்கு வருமாறும் ஆழைத்தார். இதனால், சென்றிருந்தேன். முதல் நாள் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டாவது நாள் கலந்து கொண்டேன். அதுபற்றிய குறிப்பே இது.

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (Akhila Bbharata Vidhyarthi Parishad – ABVP – ஏ.பி.வி.பி.) எனும் தேசிய மாணவர் அமைப்பின் இரண்டு நாள் மாநில மாநாடு, கொரட்டூர், சென்னையில் பிப்ரவரி 15, 16 தேதிகளில் நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது[1].

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

“தமிழக எழுகச்சி, பாரத வளர்ச்சி” என்பது மாநாட்டின் முக்கிய தலைப்பாக இருந்தது. “அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர்

பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர்

வாசலில் பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர் வரவழைத்தது. இது குறித்து ஏபிவிபி அமைப்பின் மாநில இணைச் செயலர் முத்துராமலிங்கம் ஏற்கெனவே ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துள்ளார். தினமணி மட்டும் தான் சிறுகுறிப்பை வெளியிட்டுள்ளது[2].

“அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

“அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பின் 20-ஆவது மாநில மாநாடு, சென்னை கொரட்டூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடந்து முடிந்தது. மாநாட்டை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து 15-02-2014 அன்று தொடங்கி வைத்தார். பிஜேபியுடன் அரசியல் கூட்டு வைத்துக் கொண்ட பிறகு, இவ்வாறு கூட்டங்களில் கலந்து கொள்வது போலவுள்ளது. இருப்பினும், மற்ற நேரங்களிலும் கலந்து கொண்டால் நல்லது என்று தோன்றியது. “தமிழக வளர்ச்சி; பாரத எழுச்சி’ என்பதை மைய கருத்தாகக் கொண்டு நடைபெறும் இம்மாநாட்டில், பாரதத்தின் பெருமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம், மதுவின் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில், அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர் [இவர் பெயர் அபேதகர் என்கிறர்கள், ஆனால், உச்சரிக்கும் போது அம்பேத்கர் என்றுதான் சொல்கிறார்கள்], தேசிய செயலர் ஆர்.ராஜ்குமார், மாநிலத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம், மாநிலச் செயலர் சண்முக ராஜா, காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், அமைப்பின் மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர்

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர்

இரண்டாம் நாள்- 16-02-2-14 அன்று சுனில் அம்பேத்கர் அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் குறிக்கோள், திட்டங்கள் மற்றும் செயல்பாடு (The Mission, Vision and Action of ABVP) என்பது பற்றி பேசினார், மதியம் பிரபல மருத்துவர் வி. சொக்கலிங்கம் மதுவினால் ஏற்படும் தீமைகளை மருத்துவ ரீதியில் விளக்கினார். மிகவும் நகைச்சுவையுடன், ஆனால் அதே நேரத்தில் நுணுக்கமான விசயங்களை அருமையாக எடுத்துரைத்தார். மாணவர்களுடன் கலந்துரையாடல் போல, பேச்சை தொடர்ந்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மாணவ-மாணவிகளின் உற்சாகம், கவனிப்பாக உரையைக் கேட்டு, நடுநடுவில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தல், அருமையான விசயங்களை சொன்னபோது கைத்தட்டியது முதலியவற்றைக் கண்டு, மிகவும் நெகிழ்ந்து போனார்.

Dr Chockalingam and Dr Senthamarai ABVP

Dr Chockalingam and Dr Senthamarai ABVP

மருத்துவர் வி. சொக்கலிங்கம் 1966ல் மருத்துவப் பட்டம் பெற்றவர். முந்தைய முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜியார் போன்றோருக்கு சிகிச்சை செய்துள்ளார். இவரது மகன் ஆனந்த் மற்றும் மகள் பிரியா இருவரும் மருத்துவர்கள் தாம்[3]. தேவகி மருத்துவமனை ஆரம்பித்தவர்களில் ஒருவர். தொழிலையே தெய்வமாக மதிக்கிறேன் என்று பல விசயங்களைச் சொன்னார். சைனாவில் ஒரு தடவை “நூறாண்டு காலம் வாழ்வது எப்படி?”, என்று பேச ஆரம்பித்தபோது, 18,000 பேர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் சுமார் 2,000 பேர் அந்த தலைப்புக்கே எதிர்ப்புத் தெரிவித்தனராம். ஏனெனில், அவ்சர்கள் எல்லோரும் 10, 110, 120 வயது கொண்டவர்கள். இதனால், நூறாண்டிற்குப் பிறகும் எப்படி வாழ வேண்டும் என்று தலைப்பை மாற்றிக் கொண்டாராம். இதுபோல பல சுவையான விவரங்களைக் கொடுத்தார். உடல், மனம், உயிர், அறிவு முதலியவற்றிற்குள்ள தொடர்பு பற்றி கூறும் போது, அவரது ஆழமாக ஞானம் வெளிப்பட்டது.

சுனில் அம்பேத்கர் , சந்திரசேகர் முதலியோர்

சுனில் அம்பேத்கர் , சந்திரசேகர் முதலியோர்

தொடர்ந்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன், “சமுதாய பிரச்சினைகளுக்கு மதுவின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது”, என்பது பற்றி விளக்கமாக பேசினார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்

மொத்தம் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 272 மாணவ-மாணவிகள் பதிவு செய்து கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் மாநாட்டில் அவர்களது கலந்துரையாடல்கள், நடவடிக்கைகள் முதலியன மிகவும் கட்டுப்பாடாக இருந்தன. மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் பிஎச்டி, எம்பில், பொறியியல் என்று பலதுறைகளில் படிப்பவர்கள் ஆவர். அவர்கள் தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

பெரியவர்கள், சில முக்கியஸ்தர்களுக்கு மட்டும் தான் சுமார் 50 நாற்காளிகள் போடப் பட்டிருந்தன. அவர்களில் கூட சிலர், மற்றவர்கள் வந்தபோது, நாற்காலிகளில் உட்காரச் சொல்லி, கீழே உட்கார்ந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

மற்ற மாணவ [SFI, DYFI] இயக்கத்தினரைப் போலல்லாது, சித்தாந்த ரீதியில் இவர்கள் பயிற்சி பெறாதவர்களைப் போன்றே இருக்கின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்கள், ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல அவர்கள் இல்லை. மிகவும் எளிமையாக, சாதாரணமாக, வெளிப்படையாக பேசும் இயல்புடையவர்களாக இருந்தனர்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

சுமார் 25 பேர்களிடம் பேசி பார்த்தபோது, மற்ற மாணவ இயக்கத்தினர் அவர்களை கிண்டல் அளித்து வந்தாலும், விமர்சித்து வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார்கள். இருப்பினும் [SFI, DYFI] இயக்கத்தினரைப் போல் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன என்று தெரிந்தது.

Tamilaruvi Manian, Chockalingam, ABVP

Tamilaruvi Manian, Chockalingam, ABVP

பாரதத்தின் பெருமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம், மதுவின் தீமைகள் முதலியவை மட்டும் இக்கால மாணவ-மாணவிகள் தெரிந்து கொண்டால் போதாது, இதற்கு மேலும், குறிப்பாக சித்தாந்த ரீதியில், பல மாற்று / எதிர்க் கருத்து கொண்ட, மாணவ-மாணவிய இயக்கத்தினர் அளவிற்கு பேச்சுத் திறமை, கருத்துமோதல்கள், வாதம் புரியும் தன்மை, முதலியவற்றில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இல்லை.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

ð  எதற்காக இம்மாட்டில் கலந்து கொள்கிறீர்கள்?

ð  இம்மாட்டில் பங்கு கொள்வதால் என்ன நன்மை ஏற்பட்டது?

ð  படித்து விட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?

ð  படித்து வேலைக்குச் சென்ற பிறகும் இவ்வியக்கத்தில் இருப்பீர்களா?

ð  மற்ற மாணவ இயக்கத்தினர், கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் உங்களுடன் எப்படி நடந்து கொள்கின்றனர்?

ð  அவர்கள் கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டதுண்டா?

ð  சித்தாந்த ரீதியில் அவர்களுடன் விவாதித்துண்டா?

ð  குறிப்பாக சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் விவாதித்துண்டா?

ð  உங்களை “இந்துத்வவாதிகள்” என்று விமர்சிக்கிறர்களே, அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இப்படி பல கேள்விகளை நேரிடையாகக் கேட்டுப் பார்த்தேன், அவர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. நாட்டுப் பற்றைத் தவிர மற்ற நிகழ்கால அரசியல் விவகாரங்கள், பொருளாதார பிரச்சினைகள், சமூகமாற்ற தாக்கங்கள் முதலியவற்றைப் பற்றிய தெளிவான சிந்தனை, எதிர்கொள்ள வேண்டிய முறைகள் முதலியவற்றைப் பற்றி தெரியாமலே இருக்கிறார்கள்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

பதிவு நடைபெறும் இடம் – கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

பங்குகொண்டவர்களின் மற்றொரு புகைப்படத் தோற்றம்.

Sectional view ABVP

Sectional view ABVP

சேஷாத்ரி (ஆடிட்டர் ரமேஷின் சகோதரர்), கௌதமன் முதலியோர்.

eshadri, brother of Ramesh, Gauthaman etc ABVP

eshadri, brother of Ramesh, Gauthaman etc ABVP

தினமணியில் வெளியான விவரங்கள் (17-02-2014) –  பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட முன் வர வேண்டும் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தினார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவர் அமைப்பின் 20-ஆவது மாநில மாநாடு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெற்றது. இதில் மது ஒழிப்பு தொடர்பான சிறப்பு கருத்தரங்கில் தமிழருவி மணியன் பேசியது:

மதுவுக்கு எதிராக என் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கம் போராடி வருகிறது. இதில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வரிடம் அளிக்கும் இயக்கத்தை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 15 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி தமிழக கலால்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் அளித்தோம். டாஸ்மாக் மற்றும் பாரில் குடிப்பதற்காக மட்டும் ரூ.50 ஆயிரம் கோடியை தமிழக மக்கள் செலவழிக்கின்றனர். தமிழகத்தில் இவ்வளவு ரூபாய்க்கு குடிக்கிறார்கள் என்றால் ஏழ்மையை எப்படி ஒழிக்க முடியும். மதுவை பூரணமாக ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கட்சியினர் கூட்டாக சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், பூரண மதுவிலக்கும் கண்டிப்பாக நிகழும்.

காந்திய மக்கள் இயக்கம் தற்போது கட்சியாக மாற்றம் அடைந்துள்ளது. மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்பதை நோக்கி எங்கள் கட்சி செயல்படுகிறது. மாணவர்கள் நினைத்தால் மதுவை கண்டிப்பாக ஒழிக்க முடியும். ஆதலால் தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக உருவாக்க பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட வர வேண்டும். ஒரு டாஸ்மாக் கடைக்கு 100 மாணவர்கள் என்ற ரீதியில் கூடி மதுக்கடைகளை மூடுமாறு போராடுங்கள். மதுக்கடைகள் உடனடியாக மூடப்படும் என்றார் தமிழருவி மணியன். முன்னதாக, ஏபிவிபி-யின் அகில பாரத அமைப்புச் செயலாளர் சுனில் அம்பேத்கர் ஏபிவிபி பற்றியும், டாக்டர் சொக்கலிங்கம் மதுவினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர். இந்த மாநாட்டில் ஏபிவிபி-யின் மாநில தலைவர் டாக்டர் சுப்பைய்யா, மாநில செயலாளர் செந்தில் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏபிவிபி-யைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


[2]  தினமணி, சென்னையில் 15, 16-இல் ஏபிவிபி மாநில மாநாடு

, By dn, சென்னை, First Published : 08 February 2014 04:10 AM IST