Archive for the ‘கிறிஸ்தவன்’ Category

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

பிப்ரவரி 22, 2023

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

கொரியர் டெல்லா சேரா என்ற இத்தாலி நாளிதழில் வெளிவந்த ராகுல் காந்தியின் பேட்டி (1-02-2023): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி [52 வயதான] இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு [ Italian daily “Corriere della Sera”] பேட்டி அளித்துள்ளார்[1]. இப்பேட்டி பிப்ரவரி 1, 2023 அன்று முழுபக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த பேட்டியில் தனது திருமணம், பாரத் ஜோடோ யாத்திரை, 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்[2]. ஆனால், இந்திய ஊடகங்களில் சுருக்கமாக வெளிவந்துள்ளது எனலாம். ராகுலின் திருமணம் பற்றி அடிக்கடி இத்தகைய கேள்விகள், செய்திகள் மற்றும் குசுகுசுக்கள் கடந்த 25 ஆண்டுகளாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. பல பெண்களுடன் இருப்பது போன்ற புகைப் படங்கள், அவர்கள் தான் காதலி, கார்ள்-பிரென்ட், வருங்கால மனைவி, திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார், திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது வரை ஒப்புக்கொண்ட-ஏற்றுக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.

பல இடங்களில் படித்தவர்: இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போது வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி ஜூன் 19, 1970 அன்று புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தலைவரான மோதிலால் நேரு ஆவார். இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர். 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார். மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவர் 1995 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் பட்டம் பெற்றார்.

ரகசியமாக வேலை செய்தவர்-காதலித்தவர்: ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் [the Monitor Group[3], a management consulting firm, in London] மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002-ன் பிற்பகுதியில் மும்பை திரும்பினார். 2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.

இத்தாலிய உறவுகளை மறக்காதவர்: 52 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, “விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது. குழந்தைகள் பெற விரும்புகிறேன்” என்றார்[4]. எங்கள் குடும்பத்தில் இந்திய பாட்டியான இந்திரா காந்திக்கு என் மீது பாசம் அதிகம்[5]. இத்தாலி பாட்டிக்கு பிரியங்கா மீது பாசம் அதிகம்[6]. இத்தாலி பாட்டி பாவ்லோ மைனோ [Paola Maino] 98 வயது வரை வாழ்ந்து கடந்தாண்டு தான் மறைந்தார்[7]. கடந்த வருடன் 2022 ஆகஸ்ட் மாதத்தில் காலமானார் . இத்தாலி பாட்டியுடன் மிகுந்த பாசத்துடன் இருந்தேன். என் பாட்டியுடன் மிகவும் பாசத்துடன் இருந்தேன். அதே போல மாமா வால்டர் மற்றும் அவரின் மகன்களிடமும் பாசமாக இருந்தேன்… என்று குறிப்பிட்ட ராகுல்[8], “இந்திய ஒற்றுமை யாத்திரை முடியும் வரை தாடியை எடுக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் தான் தாடியுடன் உள்ளேன். இனி தாடியை வைத்திருக்கலாமா அல்லது எடுக்கலாமா என்று முடிவு செய்வேன்” என தாடி ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்[9].

இந்திய அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்[10]: இந்தியாவில் ஏற்கெனவே ஃபாசிஸம் உள்ளது[11]. ஜனநாயக அமைப்புகள் நிலைகுலைந்துள்ளன. நாடாளுமன்றம் செயல்படுவதில்லை. அதிகார சமநிலை இல்லை. நீதித் துறை சுதந்திரமாக இல்லை. அனைத்து செயல்பாடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஊடகம் சுதந்திரமாக இல்லை. கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகள், நிறுவனங்களில் ஆா்எஸ்எஸ்ஸின் ஹிந்து பயங்கரவாதிகள் ஊடுருவி, அவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றனா். இந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனா். அவா்களால் தங்கள் எதிர்காலத்தைப் பார்க்க முடியவில்லை. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், பிரதமா் மோடியை 100 சதவீதம் தோற்கடிக்க முடியும். மாற்றுக் கண்ணோட்டத்தை முன்வைப்பதன் மூலம் ஃபாசிஸம் தோற்கடிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். வரும் தேர்தலில் பிரதமர் மோடி நிச்சயம் தோற்று போவார் என்று சொல்லவில்லை. அதேவேளை, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தால் 100 சதவீதம் அவர்களை தோற்கடிக்கலாம். நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் பாசிசம் ஊடுருவிவிட்டது. நாடாளுமன்றம் முறையாக செயல்படுவதில்லை.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெளி நாட்டு உறவுகள் பற்றிக் குறிப்பிட்டது: உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தை பொறுத்தவரை நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை[12]. அது வெளியுறவுக்கொள்கை சார்ந்தது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு காண்பது அவசியமானது[13]. சீனாவால் மேற்கத்திய நாடுகளால் தொழில்துறையில் போட்டியிட இயலாது. ஆனால், இந்தியாவால் அது முடியும்” என்றார். ராகுல் காந்தி 164 நாட்கள் நாடு தழுவிய நடைபயணத்தை அன்மையில் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் கடந்த மாதம் 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவுற்றது. பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி, கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட பயணமாக ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் சென்றுள்ளார். அதே நேரத்தில் கேம்பிரிட்ஜில் பேசப் போகிறார், சீனாவைப் பற்றி ரகசியமாக பேசப் போகிறார், என்றெல்லாம் செய்தி வந்துள்ளது.

© வேதபிரகாஷ்

22-02-2023.


[1] நியூஸ்.18.தமிழ், சிங்கிளாக இருப்பது ஏன்?… தாடி ரகசியம்மனம் திறந்த ராகுல் காந்தி..!, NEWS18 TAMIL First published: February 22, 2023, 09:07 IST, LAST UPDATED : FEBRUARY 22, 2023, 09:34 IST.

[2] https://tamil.news18.com/news/national/rahul-gandhi-answers-about-his-marriage-plans-in-an-interview-to-italian-news-media-896290.html

[3] Monitor Deloitte is the multinational strategy consulting practice of Deloitte Consulting. Monitor Deloitte specializes in providing strategy consultation services to the senior management of major organizations and governments.

[4] மாலைமலர், இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: ராகுல் காந்தி பதில், By மாலை மலர், 22 பிப்ரவரி 2023 8:15 AM

[5] https://www.maalaimalar.com/news/national/why-not-married-yet-rahul-gandhi-answers-575262

[6] தமிழ்.வெப்.துனியா, குழந்தை பெற்று கொள்ள ஆசை…..ராகுல் காந்தி பேட்டி…!, செவ்வாய், 21 பிப்ரவரி, 2023 20:49 IST

[7] https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/rahul-gandhi-says-about-marriage-and-child-123022100079_1.html

[8] தமிழ்.ஏபிபி.லைவ், Rahul Gandhi: “திருமணம் நடக்காதது ஏன் என தெரியவில்லை; ஆனால் இந்த ஆசை இருக்கு” – மனம் திறந்த ராகுல் காந்தி!, By: ஆர்த்தி | Updated at : 22 Feb 2023 12:39 PM (IST), Published at : 22 Feb 2023 12:39 PM (IST)

[9] https://tamil.abplive.com/news/india/former-congress-president-rahul-gandhi-has-mentioned-in-an-interview-to-a-private-daily-that-he-is-not-married-but-wants-to-have-children-103132

[10] தினமணி, திருமணம் செய்யாதது விசித்திரம்! – ராகுல் காந்தி பேட்டி, By DIN  |   Published On : 22nd February 2023 12:26 AM  |   Last Updated : 22nd February 2023 12:26 AM

[11] https://www.dinamani.com/india/2023/feb/22/i-was-indian-grandmothers-favourite-priyanka-italian-grandmothers-rahul-4005068.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, குழந்தைகளை பிடிக்கும்திருமணம் எப்போது? இத்தாலி நாளிதழில் ராகுல் ஓபன் டாக்.. மோடி பற்றியும் பேச்சு, By Mani Singh S, Published: Tuesday, February 21, 2023, 21:12 [IST.

[13] https://tamil.oneindia.com/news/delhi/i-would-like-to-have-children-rahul-gandhi-interview-to-the-italian-daily-499794.html

திடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம் தொடர் பயிலரங்கம்!

ஜூன் 10, 2020

திடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம்  தொடர் பயிலரங்கம்!

Kural new warriors June 2020

தென்னிந்திய படிப்பு மையம்: தென்னிந்திய படிப்பு மையம் [Centre for South Indian Studies[1]] என்று ஒன்று ஆரம்பிக்கப் பட்டு, திடீரென்று திருக்குறளில் அபரிதமான காதலை வெளிப்படுத்தி இருப்பது புளகாங்கிதம் அடையும் வகையில் புல்லரிக்கிறது. 40 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வரும் எங்களுக்கு, தென்னிந்திய படிப்பு மையம் என்று புதியதாக முளைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், இவர்களை நாங்கள் இந்திய வரலாற்றுப் பேரவை, தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, என IHC, SIHC, APHC, TNHC, THC, AIOC etc., எங்குமே பார்த்ததில்லை! திருக்குறளை கேவலப் படுத்தி, தூஷித்து, அசிங்கப் படுத்திக் கொண்டிருந்த போது, இவர்கள் எல்லோரும் எங்கிருதார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது பல்கலைக்கழகத்தில் “சைவ சித்தாந்த மாநாடு” நடந்தபோதும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது, குறள், வள்ளுவர் என்று கிளம்பி விட்டார்கள். ஏற்கெனவே சில கோஷ்டிகள், அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி நாறடித்து விட்டார்கள். ஆகவே, இதன் பின்னணி என்ன என்று அறியப் படுத்த வேண்டும். 05-06-2020 அன்றே, “வள்ளுவரை, திருவள்ளுவரை, குறளை, திருக்குறளை எந்த விதத்திலும் வியாபாரம் செய்யக்கூடாது. வள்ளுவம் வணிகத்திற்கு அல்ல!” என்று பதிவு போட்டிருந்தேன்.

Centre for South Indian Studies, commercialization of Valluver-1

தென்னிந்திய படிப்பு மையம் என்னது, அதன் பின்னணி [Centre for South Indian Studies (CSIS)[2]]: தென்னிந்திய படிப்பு மையம் என்னது, அதன் பின்னணி என்ன என்று கேட்டபோது, சரியான பதில் கிடைக்கவில்லை. இணைதளத்தில் தேடி பார்த்த போது, இது ஒரு டிரஸ்ட் மற்றும் அதன் உறுப்பினர்கள் கீழ்வருமாறு:

Centre Board of Trustees உறுப்பினர் பெயர் நிபுணத்துவம்
1 என்.சி.பிந்த்ரா [NC Bipindra[3]]

 

பத்திரிக்கையாளர்
2 மருத்துவர் சுப்பையா சண்முகம்

[Dr Subbiah Shanmugam[4]]

புற்றுநோய் நிபுணர்[5]
3 பி. சந்தீப் குமார் [Sandeep Kumar P[6]] பொருளாதாரம்-வணிகம்
4 அபிஷேக் டான்டன் [Abhishek Tandon[7]] வணிகவியல் பேராசிரியர்

இவர்கள் எல்லோருமே தத்தம் துறைகளில் ஜாம்பவான்களாக இருக்கலாம். ஆனால், சரித்திரத்துடன் சம்பந்தப் படாதவர்களாக இருப்பது விசித்திரமாக இருக்கிறது. அவர்கள் சரித்திர ஆராய்ச்சி செய்யக் கூடாது என்பதில்லை, ஆனால், கடந்த 40-60 வருடங்களில் இவர்களது / அவர்களைச் சார்ந்த சித்தாந்திகளது பங்களிப்பு என்ன என்று தெரியவில்லை. தமிழகப் பல்கலைக் கழகங்களில் சரித்திர மாநாடுகளுக்கு வந்துள்ளார்களா, முறையாக சித்தாந்திகளை எதிர்கொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை. தமிழகம், தமிழக வரலாறு, தென்னிந்தியா சரித்திரம் என்பதில் எல்லாம் நிறைய நடந்துள்ளன. அந்நிலையில், விசயங்களை அறிந்தவர்களை விடுத்து, இப்படி புதியவர்களைப் போட்டிருக்கும் போக்கு புரியவில்லை. இப்பொழுது, “தொடர் பயிலரங்கம்” என்று ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் யாருக்கு பயிற்றுவிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

Centre for South Indian Studies, commercialization of Valluvar-2

தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவதரித்த தினம் வைகாசி அனுசம் ஜூன் 5, 2020: இதுவரை, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்ற பெயரில் 2017லிருந்து, இந்துத்துவ வாதிகள் சேர்ந்து, ஒரு நிறுவனத்தை அமைத்து, விழாக்களை நடத்தினார்கள். 2017ல் விஜி சந்தோஷத்திற்கே, விசுவாசமாக எல்லீஸர் விருது வழங்கி, சந்தோசித்தார்கள்.  2018லும் கொண்டாடினார்கள். இதிலும் விஜி.சந்தோசம் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. 2019ல் தெரியவில்லை. இப்பொழுது, 2020ல் வேறு பெயரில் / இயக்கத்தின் கீழ் நடத்துகிறார்கள் போலும். ஆனால், இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்று அவர்களே சொல்கிறார்கள். குறிப்பாக, ஒருங்கிணைப்பாளர் – பேராசிரியர் மதுசூதனன் கலைச் செல்வன், என்ற பெயர் திகைப்பாக இருக்கிறது. இவர் ஏற்கெனவே இந்து-எதிர்ப்பு வாதங்கள், திரிபு விளக்கங்கள் முதலியவை செய்துள்ளது தெரிகிறது[8]. மேலும், காஞ்சி சங்கரச்சார்யா முதல் மற்ற ஆதினம் வரை போட்டோ எடுத்துக் கொண்டு, சமூக வளைதளங்களில் போட்டுக் கொண்டு, அதிரடி விளம்பரப் பிரியராக இருப்பதும் தெரிகிறது. இவரை யாரும் கேள்விக் கேட்கக் கூடாது, லேப்டாப்பை வைத்துக் கொண்டு, கதாகாலக்ஷேபம் செய்வதில், வித்தகராக இருப்பது பிரபலம். நவீனகால டூரிஸம் என்று ஐந்து நட்சத்திர பாணியில் “டூர்” நடத்துகிறார்கள்[9].

தேதி தலைப்பு பேச்சாளர்
ஜூன்.4 2020 வரலாற்றில் வள்ளுவர் தினம் கல்வெட்டு

எஸ். ராமச்சந்திரன்

ஜூன்.5 2020 வள்ளுவரின் அறக்கோட்பாடுகள் பேராசிரியர் கே.எல். மாதவன்
ஜூன்.6 2020 வள்ளுவரின் இறைக் கொள்கை பேராசிரியர் தெ.ஞானசுந்தரம்
தெ.ஞானசுந்தரம் பதிலாக இவர் பேசினார். பேராசிரியர்

செ. ஜகந்நாதன்

இதில். கல்வெட்டு ராமச்சந்திரன் தவிர, மற்றவர்கள், தென்னாட்டு சரித்திரத்தில் என்ன ஆராய்ச்சி செய்தார்கள் என்று தெரியவில்லை. பொறுமையாக, இவர்கள் பேசியதைக் கேட்டு, குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு, இக்கட்டுரையை எழுதுகிறேன். இவர்கள் அதை எப்படி முறையாக மறுப்பது, எதிர்ப்பது என்பதில்லாமல், அரைத்த மாவை அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! இதனால், யாருக்குப் பலன் என்று தெரியவில்லை.

Centre for South Indian Studies, commercialization of Valluvar-3

எஸ். ராமச்சந்திரன் சரித்திரத்தைச் சொன்னார்: ராமச்சந்திரன் மட்டும் தான் பிரச்சினையை அணுகியுள்ளார். 1969ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எவ்வாறு திருக்குறளுக்கு எதிராக வேலை செய்து வருகிறது என்று எடுத்துக் காட்டினார். உண்மையில் வைகாசி-அனுசம் அன்று வள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட 1966ல் பிறப்பித்த அரசு ஆணை உள்ளது. 1966ல் இந்திய ஜனாதிபதி, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் மூலம், திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப் பட்டது. 1971ல் கருணாநிதி முதலமைச்சர் ஆனதும், இதனை மாற்ற முயன்றார். அந்த ஆணையை நீக்கி, புதிய அணையை பிறப்பிப்பதற்குப் பதிலாக, தை.2க்குப் பிறகு, திருவள்ளுவர் தினம் என்று அறிவித்து, கொண்டாட ஆரம்பிக்கப் பட்டது. திருவள்ளுவர் கோவில் திருப்பணிக் குழுவுடன், திருவள்ளுவர் கோவில் நிலமீட்பு இயக்கமும் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால், வள்ளுவர் கோட்டம் என்று ஆரம்பித்து, திசைத் திருப்பப் பட்டது. இந் நினைவகம்,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. அதற்குள், தெய்வநாயகம் கோஷ்டி எவ்வாறு, கருணாநிதியின் உதவியுடன் “திருவள்ளுவர் கிறிஸ்தவர், திருக்குறள் கிறிஸ்தவர் நூல்” முதலியவற்றை வெளியிட்டதையும் குறிப்பிட்டார்.

Prof Ram Nah NMadurai

ஜூம்ஜூம்  தொடர் பயிலரங்கம்!: இந்த கொரோனா காலத்தில், எல்லோருமே, பெரும்பாலும், இத்தகைய ஜூம்-கூட்டத்தை ஏற்பாடு செய்வது வழக்காமாகி விட்டது. இப்படி சிலர் பேசிக் கொண்டே இருப்பர், மற்றவர்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் இதில் கேள்வி கேட்பது, பதில் சொல்வது முதலியன இல்லை. பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான். பிறகு யூ-டியூப்பில் போடுகிறார்கள். பொழுது போகவில்லை என்றால், ஏதோ, டிவி பார்ப்பது போல பார்க்கிறார்கள். ஆனால், படிப்பு, ஆராய்ச்சி, இதனால் பலன் என்றெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை. விளம்பரம், காசு கிடைக்குமா என்று தான் பார்க்கிறார்கள். நோய் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. இவர்களால் மருந்து கொடுக்க முடியவில்லை. போதாகுறைக்கு, அந்நோயுக்கு சாதகமாக சிலவற்றை செய்து சென்று விடுகிறார்கள். அரசியல், அதிகாரம், குறிப்பிட்டத் தலைவரை ஆதரிப்பது என்ற ரீதியில் செல்லும் இத்தகைய தமாஷாக்களால், சிலருக்கு பலன் கிடைக்கலாம், ஆனால், பிரச்சினையை விட்டு விடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

10-06-2020

Madghu sudden interest in Tirukkural

[1] The so-called “Centre for South Indian Studies” appeared to have floated recently with not known persons like N.C.Bipindra, Subbaiah Shanumuga, Sandeep Kuma, Abhishek Tandon.

[2] Centre for South Indian Studies (CSIS) is a public charitable trust established in Delhi, engaged in academic study, research and analysis of economic, social, historical and political developments, both past and contemporary. CSIS commissions scientific research on various subjects and topics pertaining to South India, directly by its researchers and funds studies of interests that conform to its aims and objectives. It also motivates academicians and students to take up new research initiatives to rework on conventional narratives on South India to enable understanding these topics scientifically. Apart from organising research programmes, CSIS also brings out publications periodically and carries out social awareness programmes. CSIS regularly organises lectures, debates, panel discussions and talks on various subjects related to South India. We also organise seminars and workshops, as part of our academic activity. https://csisdelhi.com/about-centre-for-south-indian-studies/

[3] NC Bipindra has been a journalist for over two decades, writing and reporting on matters aerospace, defence and national security for two-thirds of that period. He has worked as the Defence Affairs Editor of a leading national daily newspaper and as the Chief Defence Correspondent of India’s premier news wire, establishing a strong relationship with politicians, government officials and the armed forces. While journalism has been a passion, Bipindra is also a qualified lawyer, with specialisation in Criminal and Civil laws, Arbitration and Intellectual Property Rights. He also has valuable experience as a serial entrepreneur. He is also a social media best-practices mentor to several individuals, including politicians and celebrities, business houses and social institutions.

[4] Dr Subbiah Shanmugam is a Surgical Oncologist and a Professor, with over 30 years of medical practice, of which 20 years have been spent teaching medical students. At present, he is the Head of the Department of Surgical Oncology at the Government of Tamil Nadu’s Kilpauk Medical College and Government Royapettah Hospital at Chennai. During his spare time, the medical doctor is involved in the activities of several professional organisations and social movements. Dr Subbiah is at present the Visitor’s (President of India) nominee in third Executive Council (2016-19) at the Central University of Tamilnadu, Tiruvarur, and an External Member of the Board of Studies for Super-Specialities, Rajiv Gandhi Medical University, Karnataka (2018-21). He was a National Executive member of Indian Association of Surgical Oncologists between 2014 and 2016.

[5] Oncology is a branch of medicine that deals with the prevention, diagnosis, and treatment of cancer. A medical professional who practices oncology is an oncologist.

[6] Sandeep Kumar P is a research scholar on Applied Economics and Business Management. He is also an active participant in various social movements. As a writer, he contributes to various journals on socio-political issues in English and Malayalam. He is a regular participant of Malayalam TV debates on issues pertaining to national importance. Sandeep is also member of various committees under Ministry of Human Resources Development and Ministry of Health, Government of India.

[7] Abhishek Tandon is currently working as an Assistant Professor in Shaheed Sukhdev College of Business Studies, University of Delhi. He received his PhD degree in Software Reliability and Marketing from Department of Operational Research, University of Delhi. He was awarded best Teacher award by Government of NCT of Delhi in 2016-17. He has published papers in the field of Reliability Modeling, Optimization theory, Forecasting and Marketing Research. He is a life member of the Society for Reliability Engineering, Quality and Operations Management (SREQOM).

[8] ஜூன் 14, 2019 அன்று திநகரில், “மிஸ்டிக் பல்மேரா” என்ற இடத்தில், கோவில்களில் கொக்கோக சிலைகள் என்ற தலைப்பில் பேசியபோது, கேள்விகள் கேட்டபோது, தடுக்கப் பட்டது. லிங்கத்தைப் பற்றி, வழக்கம் போல, “ஃபல்லிக்” என்றெல்லாம் பேசியது வேடிக்கையாக இருந்தது.

 [9] Embassy Travel and Tours Pvt. Ltd, Mystery Palmyra போன்ற எலைட் அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன. செல்லும் இடங்களில் ஜாலியாக, 5-ஸ்டார் வசதியாக இருக்கலாம்.

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

ஜூன் 26, 2017

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

Tamil writers, speakers, researchers have been rhetoric

ல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர்.  எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1].  ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.

Malar Mannan - 2013

இந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.

Thiruvalluvar coin minted by F W Ellis. front and observe- British museum

வள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம்.  இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.

Tiruvalluvamalai- 11-12th cent CE, interpolated

மதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின்சரித்திரங்கள்எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

Ellis forged works

திருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy]  முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.

© வேதபிரகாஷ்

26-06-2017

Tiruvalluvamalai- works forged in his name

[1] மலர் மன்னன்,  , http://puthu.thinnai.com/?p=11110

[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D

[3]  ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524

[4] Sir Walter Elliot came to Madras in 1821 and worked till 1860, as a Member of the Council of the Governor of Madras. He was a life long and devoted student of Oriental Studies inBotany, Zoology, Indian languages, Numismatics and Archeology. He rescued the Amaravathi Marbles, which are now housed in the British Museum along with his coin collection and collection of other artifacts.. His work, ‘Coins of Southern India’, formed part of the famous series ‘Numismata Orientalia’, published in 1884

[5] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .

Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.

[6] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.

  1. First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
  2. De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
  3. Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
  4. Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
  5. In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.

Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.

தெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்! (5)

ஜூன் 20, 2017

தெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதைதிருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்! (5)

John Samuel - thomas myth

கிருத்துவர்களின் ஆராய்ச்சிகள் எல்லைகளைக் கடப்பது: இங்கு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட விசயங்கள் எதுவும் அலசப்படவில்லை. ஊடகங்களில் வந்தது மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிந்த, அறிந்த மற்றும் சரிபார்த்த விசயங்களை வைத்து தான் இவை தரப்படுகின்றன. கிருத்துவர்களுக்கு தங்களது நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், அதே நேரத்தில், மற்ற நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் புறம்பாக எதுவும் செய்ய முடியாது. ஆனால், தாமஸ் கட்டுக் கதையினை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் போது, அதன் பின்னணியை ஆயும் போது தான், இவ்வளவு விவரங்கள் வெளிவருகின்றன. ஆரம்பித்திலிருந்தே, ஜான் சாமுவேல் கிருத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர். ஆனால், முருகனை வைத்து அவ்வாறு செய்ததால் தான் பிரச்சினை உருவானது. பிறகு அவர்களது தொடர்புகளால், பிரச்சினை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை, எல்லாவழிகளிலும் மெய்ப்பிக்கப் படாமல் இருக்கிறது.

Shu Hikosaka, John Samuel, V R Krishna Iyer

ஜான் ஜி. சாமுவேல் யார்? [1998 முதல் 2001 வரை நடந்த பிரச்சினைகள்]:  ஜான் சாமுவேல் ஒரு கிருத்துவர், “Institute director John Samuel, an Indian Christian, increased the last percentage, opining a nonmystical­­and subtly anti­Hindu­­view that most scholars, including himself, believe Murugan was elevated from a historical person”, அதனால், முருகனை ஒரு மனிதனாக பாவித்து, பிறகு கடவுளாக உயர்த்தப் பட்டதை, இந்து-விரோதமானது என்று “இன்டுயிஸம் டுடே” வர்ணித்தது[1]. முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் ஒருவர் புகார் 1998ல் கொடுத்தார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி[2] அவரது பணம் கையாடலை விசாரித்தது. விசாரணையில் அவர் சுமார் ஒன்பது லட்சம் கணக்குக் காட்டமுடியவில்லை. அதனால், பணம் கையாடஉறுதி செய்யப் பட்டதால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார்.  பதிலுக்கு கொடுமுடி சண்முகம்[3] என்பவர் அமர்த்தப் பட்டார். விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை மே.7, 2001 அன்று ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர். இவையெல்லாம் அப்பொழுதைய தினசரிகளில் செய்திகளாக வெளிவந்தன[4].

Hotel Monisa, Mauritius, where the delegates of second International conference on Skanda-Muruka stayed in April 2001

அனைத்துலக ஸ்கந்தாமுருகா மாநாடு [1998, 2001, 2003]: அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை, கம்பனி சட்டம், பிரிவு 25ன் கீழ் ஆரம்பித்து, ஷேர்களை பங்குகளை / விற்க முயற்சித்தார். மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. முன்பு, ஏப்ரல் 2001ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில் பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது. மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது. ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்காகத்தான். தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டார் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார். பிறகுதான் அவரது நண்பர்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்தது.

J.G.Kannappan, I.Ramachandran, S,P.Sabharatnam

ஸ்கந்தமுருக இயக்குனர்கள் அதிர்ந்தது, நண்பர்கள் ஒதுங்கியது: ஒரு ஈரோடு மருத்துவர்  எம்.சி. ராஜமாணிக்கம்- நொந்தேப் போய்விட்டார். ஜே. ஜி. கண்ணப்பன் ஒதுங்கி விட்டார். வி. பாலாம்பாள் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல நடித்தார். ஜே. ராமச்சந்திரன், டாக்டர் ராம்தாஸ், ராஜு காளிதாஸ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் திடீரென்று தனது கிருத்துவ புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தெய்வநாயகம் போலவே இவனும் அந்த தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டார். நியூயார்க்கில் ஒரு மாநாடு, பிறகு சத்யபாமா காலேஜில் (ஜேப்பியார் உபயம்). இப்பொழுது, இந்த செம்மொழி மாநாட்டில் அடக்கம்! இந்த கூட்டத்தைப் பாருங்களேன் – மணவை முஸ்தபா, அப்துல் ரஹ்மான், …………..இப்படி முஸ்லீம்கள், அன்னி தமசு (தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிக்கு உதவியவர், சவேசுவின் மனைவி என்று சொல்லப்படுகிறது), சாமுவேல்……….கிருத்துவர்கள், மற்ற நாத்திகர்கள்………………….தயானந்த பிரான்சிஸ் தாமஸ் கட்டுக்கதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார், அதனை வீ. ஜானசிகாமணி குறிபிடுவார்; பிறகு, இருவரும் சேர்ந்து எழுதுவார். ஜே.டி. பாஸ்கர தாஸ் எழுதும் போது, தைக் குறிப்பிடுவார். இப்படித்தான், அவர்களது ஆராய்ச்சி வளரும்.

john-samuel-colluding-with-deivanayagam

2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.  இப்பொழுது பிஜேபி ஆட்சி வந்துள்ளதால், இவர்களது வேலை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். கேரளாவில் செரியனின் பட்டனம் ஆராய்ச்சியும், இதே தாமஸ் கட்டுக்கதையினை நோக்கி வந்துள்ளதை கவனிக்கலாம். பி.எஸ். ஹரிசங்கர் என்பவர், ஒரு புத்தகத்தை எழுதி [B S Harishankar’s ‘Pattanam: Constructs, Contexts and Interventions’] மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது[5].

Pattanam, Hari shankar, P J Cherian, thomas myth

2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[6]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[7]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது[8].

© வேதபிரகாஷ்

20-06-2017

First early Christianity in India held 2005 - Santhosam, Deivanayagam, John Samuel

[1] http://www.hinduismtoday.com/modules/smartsection/print.php?itemid=4380

[2] The Institute of Asian Studies is non-profit research centre was registered as an autonomous Society in 1982 and it is governed by a team of members in the capacity of the Board of Governors. Eminent personalities from various walk of life – judiciary, education, government, culture – who evince a keen interest in Asian culture, language, and literature form the Boar d of Governors which is headed by Justice V.R. Krishna Iyer.

[3] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419   E-mail : kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, காலமகிவிட்டார் என்று தெரிகிறது.

[4] “……………பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம். பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்”, என்று குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது, தினத்தந்தி, மாலைமுரசு, தினமணி போன்ற தமிழ் செய்திதாள்களிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் விவரங்கள் வந்துள்ளன. இப்பொழுது, கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.

[5] http://www.newindianexpress.com/states/kerala/2017/jun/05/questioning-efforts-to-connect-myth-with-history-1612964–1.html

[6] Second International Conference Seminar on the History of early Christianity in India (14th to 17th January 2007, http://www.xlweb.com/heritage/asian/christianity-conference2.htm

[7] Third International Conference on the History of Early Christianity in India and the Middle East (September 2008)

[8] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)

Ellis is praised without knowing his baxkground

எல்லீசர்பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார்எல்லீசர்பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:

  1. திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.
  2. ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு?]
  3. “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.
  4. “எல்லீசர்” அறக்கட்டளை விருது.

அப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா? செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:

Tiruvalluvar Invitation- appreciating ELLIS

நிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

  • இதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.
  • திரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.speaking.2

திரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது? தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி. போன்றோரும், அண்ணாதுரை, .வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா? திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.

Mylapore function 08-06-2017-5

  • VHP R.B.V.S. மணியன்ஜி,
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,
  • G.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்

அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”.  இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.

B R Haran, Tamil Selvan, Myth of Christian cont.to Tamil and my reply

 

2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்?: பி.ஆர். ஹரண், தமிழுக்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிஅ பங்கு என்ற கட்டுக்கதை, என்ற கட்டுரையில், Misinformation campaigners project missionaries such as G.U. Pope, Constantine Joseph Beschi, Robert Caldwell, Barthalomaus Ziegenbalg, Francis Whyte Ellis and Dr. Samuel Green et al as great champions of Tamil and magnificent contributors to its development, including the introduction of “prose” writing. Of these, Francis Whyte Ellis or ‘Ellis Durai’ in Tamil, was a Madras-based civil servant in the British government and Samuel Green a doctor in Sri Lanka; both supported missionaries in evangelical causes,” என்று எழுதினார்.

“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.

“Ironically, A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages cannot be termed his own work as he allegedly took lots of passages from Francis Whyte Ellis, who wrote Dravidian Language Hypotheses.. To understand why Caldwell resorted to “research” South Indian languages, one should read Dr. K. Muthaia’s articleCaldwell Oppilakkanaththin Arasiyal Pinnani (“The Politics Behind Caldwell’s Comparative Grammar), published in the April 1997 issue of the Tamil monthly magazine Kanaiyaazhi.
“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.

Tiruvalluvar according to ELLIS

ஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்?: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்?

  1. எல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன?
  2. “எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்?
  3. திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்?
  4. எல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்?
  5. யார் பணம் கொடுத்தது?

இதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா?

© வேதபிரகாஷ்

16-06-2017

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.speaking

[1] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil, Posted on August 2, 2010.

 https://bharatabharati.wordpress.com/2010/08/02/myth-of-christian-contribution-to-tamil-%E2%80%93thamizhchelvan/

[2] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 1, Posted on July 21, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1324

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 2, Posted on July 22, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1325

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 3, Posted on July 23, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1326

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 4, Posted on July 22, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1327

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 5, Posted on July 25, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1328

[3] https://www.facebook.com/jayaraman.v.o/posts/10154585311106709?hc_location=ufi

சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்!

ஜூன் 19, 2016

சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்!

சிலை மாறிய மர்மம்

இந்துத்துவவாதிகளின் சலசலப்பு[1]: 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது, என்றதால், அவர்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்[2]:

இந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது:

  • ஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையில், மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளுவமாகுமா?
  • இந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா?
  • இறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன?

உண்மையில் இக்கேள்விகளில் காழ்ப்பு, வெறுப்பு, கோபம், முதலியவைத்தான் வெளிப்படுகின்றன. 27.08.2015 அன்று சிலையை வாங்கிக் கொண்டார் என்றால், 16-08-2015 அன்றே, சிலைவைக்கும் நிகழ்சியை அரசியலாக்கி, பரஸ்பர விருப்பங்களை வெளிப்படுத்தி விட்டார்.

 Siva, Radhakrishnan,....., Raja, Tarun etc

செக்யூலரிஸமயமாக்கப் பட்ட சிலை விவகாரம் (ஆகஸ்ட்.2015): ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16, 2015 அன்று லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்[3]. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்[4]. ஆக, இது அனைத்துக் கட்சி சமரச நிகழ்சியாகி விட்டது. உடனே, தில்லியில் “திருவள்ளுவர் விழா” ஏற்பாடாகிறது.

சிலை அரசியல், திராவிட ஆதரவு - வைரமுத்துஅரசியலாக்கபட்ட சிலை விவகாரம் (17-12-2015): திருக்குறளை போற்றும் வகையில் 17-12-2015 அன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்[5]. திருக்குறள் அறிஞர் ராமசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பு செய்தார். பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோரும் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் புதியபார்வை ஆசிரியர் எம்.நடராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பரத்வாஜ், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை ஹம்ஸத்வனி அமைப்பின் செயலாளர் ஆர்.சுந்தர், டெல்லி தமிழ் சங்க துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள், வெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் ராகவன் நாயுடு, பணிக்கர் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு பணிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே.வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குரூஸ்சுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கப்பட்டது. தெய்வநாயகத்தைத் தான் கூப்பிடவில்லை போலும்! ஆக, இதுவும் சமத்துவ, சமரச, அனைத்துக் கட்சி விழாவானது.

திருவாள்ளுவர் கழகம் - முத்துக்குமாரசாமி தம்பிரான், திருக்குறள், பிஜேபி, தருண் விஜய்

திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்”, திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் என்றெல்லாம் திடீரென்று முளைத்துள்ளது[7]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[8]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[9]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[10], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[11]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

19-06-2016


Tarun Vijay, his wife at Chennai airport 15-06-2016

[1] தமிழ்.தினசரி, கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம்!, பதிவு செய்தவர் : பால. கௌதமன், 17/06/2016.

[2]http://www.dhinasari.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/9353-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html

[3] தமிழ்.இந்து, ஹரித்வார் கங்கை கரையில் அமைப்பதற்காக மாமல்லபுரத்தில் தயாராகும் திருவள்ளுவர் சிலை, Published: August 19, 2015 08:28 ISTUpdated: August 19, 2015 08:29 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article7556712.ece

[5] தினத்தந்தி, பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா கவிஞர் வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள் தமிழகத்தை சேர்ந்த 133 மாணவமாணவிகள் பங்கேற்பு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 3:38 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 5:45 AM IST

[6] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf

[7]தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது, என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..

https://www.facebook.com/search/results.php?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&init=public

[8]http://www.dinamani.com/india/2015/08/23/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5/article2988276.ece?service=print

[9] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf

[10]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

[11] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.

கண்ணுதல், பொதுமறை குறள்தான் குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

Rahul Gandhi-with actress, girl friend etc

ராகுல் தனது  “கேர்ல் பிரன்ட்”  பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cuttingஅதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].

Rahul with actress, women etc.2

 

Was Rahul Gandhi detained by FBI?

By Our Special Correspondent in “The Hindu” dated Sunday, September 30, 2001

http://www.frontlineonline.info/thehindu/2001/09/30/stories/02300003.htm

NEW DELHI, SEPT. 29. With the U.S. security agencies leaving nothing to chance after the September 11 terrorist strikes, sleuths of the Federal Bureau of Investigation (FBI) “detained” Mr. Rahul Gandhi, son of the former Prime Minister, Rajiv Gandhi, and the Leader of the Opposition, Ms. Sonia Gandhi, for about an hour at the Boston airport early this week, sources here said.

According to sources, Mr. Gandhi, reportedly travelling from Boston to Washington, was detained by the FBI agents who would not let him go even after checking his travel documents thoroughly. They checked his baggage, despite being told that he was the son of a former Indian Prime Minister.

Sources here maintain that only when the news reached 10, Janpath, and the Congress president, Ms. Sonia Gandhi, reportedly spoke to the Indian Ambassador in the U.S., Mr. Lalit Mansingh, Mr. Gandhi was able to proceed with his onward journey.

Though official circles were silent over the incident, Congress sources said they were concerned. Mr. Gandhi’s movement should have been known to the U.S. security agencies because he is a Special Protection Group protectee. And, under the security drill, any movement of a SPG protectee abroad is communicated in advance to their counterparts in that country.

`Envoy did not intercede’

Meanwhile, Sridhar Krishnaswami reports from Washington, quoting well-placed diplomatic sources, that media reports of Mr. Mansingh having been brought into the picture to allow Mr. Gandhi to proceed on his onward journey from Boston to Washington “are simply not true.”

The sources also said since Mr. Gandhi did not get any security protection here, the U.S. agencies were not under any obligation to inform the Indian Embassy of any contact they may have had with him.

In fact, some Embassy officials here have no knowledge of Mr. Gandhi’s trip from Boston to Washington. “But reports of Ms. Sonia Gandhi calling the Indian Ambassador and asking him to intercede with authorities on the `detention’ of Mr. Rahul Gandhi are simply not true,” a senior Indian diplomat told The Hindu.

Diplomats are pointing to the heightened security precautions in the U.S. in the aftermath of the terrorist attacks. Besides different layers of security check at airports, many are subjected to some intense questioning by the Federal Bureau of Investigation and other investigative agencies. But for official purposes, in the case of the movement of VVIPs – and in some cases VIPs – the Embassy notifies Diplomatic Security for necessary courtesies.

Rahul with actress, women etc.3

இந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].

Rahul with actress, women etc.4

அமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

Rahul with actress, women etc.5

ஐகோர்ட்,  சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின,  தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Rahul with actress, woen etc.1

கிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].

The alleged matter appearing in a foreign website

அயல்  நாட்டு  சதி  உள்ளது  என்று  சிபிஐ  கூறியதால்  விசாரித்து  அறிக்கை  வெளியிட  சுப்ரீம்  கோர்ட்  ஆணை   (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

 

சோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும்.  மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

Rahul with women workers

வேதபிரகாஷ்

© 09-08-2013

 


[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.

[2] He hasn’t been seen publicly with any woman after being pictured with his Spanish ex-girlfriend Veronique, an architect, at the cricket World Cup in 1999. “She is my girlfriend and best friend too,” Rahul had said about her when he spoke about the subject for the first time in 2004, when he was touring Amethi.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[3] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[4] Cricketer Atul Wassan says, “Rahul will in all probability marry someone who isn’t in the public eye as much as he is – someone who is intelligent, will be loved by people, and maintains a low profile.” A possible Diana-inthe- making would obviously be a potential disaster as the Congress scion’s wife.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[7] The apex court on October 1 had reserved its order on the plea challenging the March 7, 2011 order of the Allahabad High Court. – See more at: http://www.indianexpress.com/news/rahul-gandhi-absolved-of-rape-charge-but-sc-slashes-fine-on-exsp-mla-kishore-samrite/1018515/#sthash.gbVIxiUs.dpuf

[10] October 18, 2012 – ITEM NO.1A COURT NO.12 SECTION II (For Judgment) – S U P R E M E  C O U R T O F  I N D I A – RECORD OF PROCEEDINGS – CRIMINAL APPEAL NO. 1406 OF 2012 – KISHORE SAMRITE Appellant(s) – VERSUS – STATE OF U.P. & ORS. Respondent(s); Date: 18/10/2012 This Appeal was called on for pronouncement of Judgment today.

http://www.indiankanoon.org/doc/75923839/

[11] The CBI shall continue the investigation in furtherance to the direction of the High Court against petitioner in Writ Petition No. 111/2011 and all other persons responsible for the abuse of the process of Court, making false statement in pleadings, filing false affidavits and committing such other offences as the Investigating Agency may find during investigation. The CBI shall submit its report to the court of competent jurisdiction as expeditiously as possible and not later than six months from the date of passing of this order.

[13] The CBI also claimed that the petitioner, Kishore Samrite, who filed a case against Rahul Gandhi, in the Allahabad High Court, had received foreign funds. The agency told a Supreme Court bench that it had seized chits showing Samrite had received foreign money for paying lawyers’ fees.  The CBI said the abduction victim did not exist and the woman was conjured up in reports and uploaded on three foreign websites, which Samrite used with an ulterior motive. According to it, the victim woman was non-existent, her address fictitious and there was no record whatsoever with the Uttar Pradesh government or local bodies.

Read more at: http://indiatoday.intoday.in/story/foreign-hand-behind-bid-to-malign-rahul-gandhi-cbi-tells-sc/1/222107.html

 

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

Ragul Gandhi absolved of rape case IE Photo

பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Rahul in Bhopal

காங்கிரஸ்  செயலாளர்  சியோராஜ்  ஜீவன்  வால்மீகியின்  புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].

Rahul Gandhi meets potential Youth Congress candidates

குடும்ப  அரசியல்  மற்றும்  பரம்பரை  ஆட்சிமுறையைத்  தவிர்ப்பதற்காகவே  காங்கிரஸ்  துணைத்தலைவர்  ராகுல்  திருமணம்  செய்து  கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5].  பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].

Meenakshi Natarajan.3

वाल्मीकि ने प्रेस कॉन्फ्रेंस में राहुल गांधी को लेकर दावा किया, ‘वह महान आदमी हैं और उन्होंने काफी बलिदान दिया है। यही वजह है कि उन्होंने शादी न करने का फैसला किया है। यहां तक कि अटल बिहारी वाजपेयी ने भी शादी नहीं की थी।’ हालांकि, जब उनसे पूछा गया कि क्या खुद राहुल गांधी ने शादी न करने की बात उनसे कही है तो वाल्मीकि ने यू-टर्न ले लिया। वाल्मीकि ने कहा, ‘मैं राहुल गांधी से नहीं मिला हूं। मैंने ये बातें अखबारों में पढ़ी हैं। यह बात गलत भी हो सकती है।’

Meenakshi Natarajan with Rahul.2

மோடியும் பிரமச்சாரி தானே?: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ? இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. Rahul Gandhi-with Nandita Das-2009-TOI photoநிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார். rahul-gandhi-girlfriend-veroniqueஇந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.

Rahul Gandhi-with Nandita Das-2009-another angle

கடந்த  மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும்  ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

வேதபிரகாஷ்

© 09-08-2013


[2] Walmiki praised Gandhi as a “great person” who has made a lot of sacrifices. He also cited the example of Atal Bihari Vajpayee, the former BJP prime minister, who did not marry.

http://news.oneindia.in/2013/08/08/pm-poverty-marriage-whats-rahul-gandhis-state-of-mind-1278663.html

[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு,  பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST

[6] Talking to reporters here, Valmiki first said that Rahul had vowed that he would not marry in order to prevent “vanshwad” (dynastic rule).  However, when asked to repeat his statement, he refused to do so and instead apologized. “I read it somewhere that he (Rahul) had said that he will not marry so as to prevent dynastic rule,” Valmiki said. He later apologized and said, “I may be wrong and therefore want to apologize.”

http://timesofindia.indiatimes.com/india/Congress-leader-courts-controversy-over-Rahuls-marriage-regrets/articleshow/21683376.cms

[8] Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[9]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[11] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்?

ஏப்ரல் 20, 2013

இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்?

Karu at IUML conference receiving momento

11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.

Karu-Arjun and Lenin-Krishna

கௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:

Hindu a thief of sorts: KarunanidhiTNN | Oct 25, 2002, 10.04 PM IST – Times of India.

CHENNAI: It was the DMK chief’s strongest pitch against Hindutva. Talking at a public meeting on Thursday evening, organised by minority communities to protest the religious conversion ordinance, M Karunanidhi said, “Who is a Hindu? You must ask Periyar EVR. A good man would say the word Hindu means a thief[8]. I don’t think of the Hindu in such demeaning terms. I’d prefer to say the term means someone who steals the heart.” He, however, did not explain the source of his claim. What is pertinent to note is that DMK is a key constituent of NDA.

OLYMPUS DIGITAL CAMERA

கௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].

Karu temple - later removedகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்!

19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].

karunanidhi-with-kulla-eating-kanjiகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.

23-04-2013 அன்று என்ன நடக்கும்?: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

  • திராவிட சித்தாந்தத்தில் கட்டுண்டு,
  • திராவிட மாய வலையில் சிக்குண்டு,
  • பகுத்தறிவில் உழன்று,
  • சாதியில் மூழ்கி,

ஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,

  • தொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,
  • மனசாட்சியை நிர்வாணமாக்கி,
  • மரத்துப் போக செய்ததில்

இத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே,  23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –

  • கருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.
  • சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்.
  • கண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.
  • அதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.
  • இல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.

இந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்!

வேதபிரகாஷ்

20-04-2013


[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST

http://dinamani.com/tamilnadu/2013/04/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/article1552913.ece

[9] On October 24, 2002, newspapers carried Karunanidhi’s statements that said the term ‘Hindu’ meant ‘thief’. A criminal complaint was lodged by B R Gouthaman with the Mambalam police, stating that these statements bashing Hindus had hurt their sentiments and created unrest in society.

http://timesofindia.indiatimes.com/city/chennai/11-year-old-case-comes-back-to-haunt-Karunanidhi/articleshow/19632749.cms

http://www.thinaboomi.com/2013/04/19/21309.html

[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694490