Archive for the ‘ஆளுமை’ Category

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)!

மே 29, 2016

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்னபிஜேபி தோல்வி ஏன் (6)!

மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்

தமிழக பிஜேபி செய்யவேண்டியவை என்ன?: தேசிய அளவில் ஆட்சியில் உள்ள, பலம் கொண்டுள்ள பிஜேபி மாநில அளவில் பலம் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியவை என சில எடுத்துக் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கட்சியினால் செய்ய முடியாது எனும்போது, சங்கப்பரிவார் இயக்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி-எஸ்.டி, சிறுபான்மையினர், இலக்கியம், கலை, தொழிலாளர், ஆசிரியர் என்று பிரிவுகள் உண்டாக்கப்படவேண்டும்[1].

  1. திராவிட கட்சிகளின் சரித்திரம், தலைவர்கள் குணாதிசயங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி புதியதாக சேருபவர், தொண்டர்களுக்கு வகுப்புகள் வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  1. தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்க்க வேண்டும்[2]. திருக்குறள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாட்டு மக்கள் எப்படி, தேசியத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்துத்துவ உணர்வு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டும்.
  1. அரசியல் நிர்ணய சட்டம், தேர்தல் விதிமுறைகள் (வேட்பாளர்களுக்கு, தொண்டர்களுக்கு வேண்டிய விசயங்கள்), தேவையான சட்டதிட்ட நெறிமுறைகள், பொருளாதார விசயங்கள்-பிரச்சினைகள் (பொருட்-உற்பத்தி, சந்தை பொருளாதாரம், விலைவாசி) முதலியவற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.
  1. மக்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது (தடையில்லாத மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகளை அகற்றுவது), குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[3].
  1. பெண்கள் பிரச்சினைகள் (திருமணம், சொத்துரிமை, நவீனப் பிரச்சினைகள்), இளைஞர்களின் விசயங்கள் (நாகரிக பிறழ்சிகள்), சிறுபான்மையினர் உரிமைகள் (தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அகற்றப்படல்) என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[4].

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்

  1. இடம், மேடை அமைப்பு, மேடை நிர்வாகம் (நேரத்தைக் கட்டுப்படுத்தல், தேவையானவற்றைப் பேசுதல், பாட்டு பாடுதல்), கூட்டத்தை சேர்க்கும் யுக்திகள், கூட்டத்தை ஈர்க்கும் வகையில் செய்யப்படும் விளம்பர முறைகள், முடிவாக மேடையில் பேசும் திறம் (தமிழில் திராவிட பாணியில்) முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்.
  1. எப்படி மற்றவர்களின் நலன்களுக்காக வெளிப்படையாக அரசியல் செய்கிறார்களோ, அதேபோல, பெரும்பான்மைனரான “இந்துக்களையும்” ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் என்பது. ஸ்டாலின் கூட திமுகவில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்றது, யோசிக்கத்தக்கது[5].
  1. தமிழக-திராவிட கட்சிகள் கூட்டு இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயிப்பது முடியாது என்ற நிலை மற்ற மாநிலகட்சிகளுக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் இருக்கும் போது, பிஜேபி தனித்துப் போட்டியிட்டது / போட்டியிடுவது தவறாகும்.
  1. வலுவுள்ள தொகுதிகளில் பிஜேபியை ஆதரிக்கச் சொல்வது, மற்ற இடங்களில் பரஸ்பர ஆதரவு கொடுப்பது, போன்ற சாதுர்யமான விசயங்களில் பேசிப்பார்ப்பது.
  1. இருக்கின்ற இந்து ஓட்டுகள் சிதறாமல் பாதுகாப்பது (பிஜெபி, இந்து மக்கள், கட்சி, சிவசேனா…………………………………………………), ஐஜேகே போன்றவர்களை ஒத்துழைக்கச் செய்வது. இந்து-ஒற்றுமை, ஓட்டு-ஒற்றுமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

சேறை வாறி இறைத்தாலும் தாமரை மலரும்

  1. முதன்முறையில் வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களை கவனத்தில் ஈர்ப்பது – படிப்பு (கல்லூரிகளில் அனுமதி, கட்டணம் குறைப்பு / சலுகை), வேலை (படிப்பு முடிந்ததும் வேலை) போன்றவற்றில் தான் அவர்கள் விருப்பத்தைக் கொண்டிருப்பர். உண்மையான திட்டங்கள் இருக்கின்றன என்றால் தான் அவர்கள் அரசியல்வாதிகளை நம்புவர்.
  1. வீடு-வீடாகச் சென்று சுருக்கமாக விசயத்தைச் சொல்லி, மாற்ற முயற்சிப்பது. துண்டு பிரசுரம் கொடுக்கலாம்.
  1. சமூக வலைதளங்களில் நாகரிகமாக, உண்மையினைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.
  1. குறிப்பாக பெண்களிடம் ஆதரவைக் கேட்பது – இங்குதான் அவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து விடுபட வேண்டும்
  1. தீவிர, அர்த்தமில்லாத இந்தித்துவவாதத்தை குறைத்துக் கொள்வது – இது தேவையில்லை, ஏனெனில், சில திக இந்துக்கள் இவர்களை விட தீவிர இந்துக்களாக இருக்கின்றனர் என்பது உண்மை.

மோடி ம்முன்னேற்றம், வளர்ச்சி

  1. குறைந்தது 10 இடங்களிலாவது வெல்வது, அத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது. திருத்தணி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், போன்ற இடங்களில் வியாபார ரீதியில் திராவிடக் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் பலமாக இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் போலவே அவ்விடங்களில் பலம் பெறா வேண்டும்.
  1. இந்துக்கள்” இந்துக்கள் என்ற உணர்வை எடுத்துக் காட்டுவது. குறிபிட்டத் தொகுதிகளில் “இந்து நலன்கள்” காக்க குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க கோருவது.
  1. “இந்துக்கள்”, இந்துக்கள்” என்று விண்ணப்பப் படிவங்களில் எழுதிக் கொள்பவர்கள், சொல்லிக் கொள்பவர்கள், சடங்குகள்-கிரியைகள் செய்து வருபவர்கள், கோவில்-குளங்களுக்கு சென்று வருபவர்கள், ஐயப்பன்-ஆதிபராசக்தி விரதமிருந்து சென்று வருபவர்கள், அலகு-குத்தி, காவடி ஏந்துபவர்கள், நீத்தார் கடன் செய்பவர்கள்………………………………………………………………..என இப்படியுள்ள வகையறாக்கள், ஏன் இந்துக்கள் என்று உணர்ந்து, இந்த தடவை இந்து நலன்களை காக்கும், அல்லது காப்போம் என்று சொல்லும் கட்சிகளை ஆதரிக்க செய்வது.

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்- மேடைப் பேச்சு கலை-மோடி

 © வேதபிரகாஷ்

 28-05-2016

[1] இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் பலனில்லை, அவை ஏதோ சிலருக்கு மட்டும் தெரிந்த அளவில் உள்ள “லிளப்புகள்” போன்று செயல்படுவதில் எந்த பலனும் இல்லை. பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

[2]  தேசிய தலைவர்கள் ஹிந்தியில் பேசுவதால், அது தமிழக ரீதியில் வித்தியாசமாக்கிக் காட்டுகிறது.

[3] ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சங்கத்தின் மூலமாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.

[4] முக்கியமான விசயங்கள் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவ்வப்போது, அவர்களுக்கு வேலையில்லை என்றால் எழுப்பும் பிரச்சினைகளும் (சபரிமலை கோவில் நுழைவு, மதுவிலக்கு போன்றவை) இவற்றில் சேரும்.

[5] நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தது முதலியவை திராவிட சித்தாந்த முரண்பாடு, அது கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும், ஏனெனில், மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)

மே 14, 2013

ஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)

 

கபில் சிபல் வக்கீல், தந்திரக்காரர், சாதுர்யமான புத்திக் காரர், கைதேர்ந்த வித்தைக் காரர்.

 

ஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடி நஷ்டம் என்பதனை ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.

 

தான் தொலைதொடர்பு அமைச்சர் பதவிக்கு வந்ததும், ஊடகத்தில் இப்பாட்டைப் பாடி, “ஜீரோ லாஸ்” (பூஜ்யம் நஷ்டம்), நஷ்டம் ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.

 

அதற்கேற்றபடி, ஏலத்தில் விட்டு, பார் ஒன்றுமே கிடைக்கவில்லை, ஆக ஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடிகள் என்பதெல்லாம், வெறும் யேஷ்யம் தான், உண்மையல்ல என்று பேசிவந்தார்!

 

சோனியாவே வியந்து விட்டார், ஆஹா, இப்படி பட்ட ஆள் தானே நமக்கு வேண்டும், சரி இவரை ரெயில்வே துறைக்குப் போட்டால், இப்படியே “ஜீரோ” ஆக்கி வந்த விடுவார், தொல்லை போய் விடும் என்று தீர்மானித்து, முதலில் ஒரு ஜோஷி என்ற ஆளைப் போட்டு, சட்டத்துறைக்கு கபில் சிபலைப் போட்டுள்ளார்!

 

இனி நிலக்கரி ஊழல் ஒன்றும் இல்லை என்று இவர் ஆக்கிவிடுவார்!

 

மந்திரிகளே இல்லாத துறைகள்: ரூ.10 கோடி லஞ்ச பேரத்தில் சிக்கியதால் ரெயில்வே மந்திரி பன்சாலும், நிலக்கரி ஊழல் அறிக்கையை திருத்திய சர்ச்சையில் சிக்கியதால் சட்ட மந்திரி அஸ்வினிகுமாரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மத்திய மந்திரி சபையில் காலியாக உள்ள இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில ராஜாங்க மந்திரிகள், தி.மு.க விலகியதால் ஏற்பட்ட காலியிடங்கள் என, சுமார் 10 மத்திய மந்திரி பதவி நிரப்பப்பட வேண்டியதுள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள மத்திய மந்திரி பதவிகளில் சட்ட துறை கபில் சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ரெயில்வே துறை சி.பி.ஜோஷிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

 

போட்டி போடுவதால் சண்டை, சச்சரவு: எல்லோருக்கும் இத்துறைகளின் மீது கண்ணுள்ளதால், யாருக்குக் கொடுப்பது என்ற பிரச்சினை வெளிப்படையாகி விட்டது. மூத்த அமைச்சர்கள், அமைச்சர்கள் இல்லாது கட்சிசார்பு பேச்சாளர்கள், ஊடக தொடர்பாரளர்கள் முதலியோருக்கு உள்ள ஒரு வருடத்தில் கொடுத்தால், அவர்களுக்கும் நன்மையாக இருக்குமே என்ற எண்ணமும் உள்ளது, அவர்களுக்கும் ஆசை உள்ளது. இந்நிலையில் தான் “சோனியாவிற்கும், மன்மோஹனுக்கும் லடாய்” என்று ஊடகங்கள் ஹாஸ்யமாக செய்திகளை வெளியிட்டன[1].

 

இல்லை, சோனியாமன்மோகன்சிங்இருவரும்சேர்ந்துஎடுத்தமுடிவு:  இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், ஒரு சில மீடியாக்களில், அமைச்சர்கள் இருவரும், சோனியா வலியுறுத்தலினால் தான் பதவி விலகினார்கள் என செய்தி வெளியானது[2]. இது தவறான தகவல். பன்சால் மற்றும் அஸ்வனி குமார் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற முடிவு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என கூறியுள்ளார்[3]. ஆகவே இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது[4]. என்னதான் பொம்மை பிஎம் என்றாலும், சோனியா வெளிப்படையாக தானே அமைச்சர்களை நீக்குவது, நியமிப்பது என்பது, தன்னை அவமதிப்பதாக நினைப்பதாக செய்திகள் வெளியாகின[5]. ஜனார்த்தன் திவேதி மேலும், “2014 வரை மன்மோஹன் தான் பிரதமராக இருப்பார்”, என்பது[6] வேடிக்கையாக இருந்தது!

 

அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா – இப்படி பேச்சு எப்படி வரலாம்?: யார் அப்படி சந்தாகப்பட்டது, எதற்காக இந்த விளக்கம் என்று தெரியவில்லை. பிறகு, எப்படி இந்த விளக்கம் தேவைப்படுகிறது[7]. சோனியாவிற்கு பாதகமாக எந்த ஊடகங்களும் செய்திகள் வெளியிட முடியாது. பிறகு, அவர் எப்படி பிரதம மந்திரியை மாற்ற வேண்டும் என்ற கருத்திற்கு இடம் கொடுப்பார் என்றும் தெரியவில்லை. அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா, யார் என்று ஊடகங்கள் அலச ஆரம்பித்து விட்டனவாம். காரணம், அடுத்த பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, அத்தகைய மாறுதலைக் கொண்டு வர அவர் விரும்பியுள்ளார் என்கின்றன[8]. இப்படியான பேச்சு / யூகம் எப்படி வரலாம்? அதிகாரம் இரண்டு நிலைகளில் இருந்தால் இப்பிரச்சினை வரத்தான் செய்யும்[9].

 

சட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது[10]: எப்படி இவர் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. சட்ட மந்திரியாக பதவியேற்ற கபில் சிபல் கூறுகையில், “சட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும். பரந்த இலக்கினை அடைவதற்கு, சட்டத்துறையில் எளிமையான, வெளிப்படையான நடைமுறைகள் அவசியம் தேவை. அதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்துறை செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும். நீதித் துறை நியமனங்களும், செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்க நடவடிக்கை எடுப்பேன்.  விசாரணை முதல் தீர்ப்பு வழங்குதல் வரை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், சட்டத்துறையில் எனது பணிகளை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்” என்றார்[11].

 

ஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன்: அடடா, இதென்ன, ரெயில்வே துறையில் ஊழல் உள்ளது என்பதனை ஒப்புக் கொண்டு விட்டார் போலிருக்கிறாதே? இதேபோல் ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற சி.பி.ஜோஷி கூறுகையில், “ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன முறைகேடு விவகாரத்தால் ரயில்வே துறை மீது களங்கம் ஏற்பட்டுள்ளது. அதைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன். ஊழியர்கள் மத்தியிலான நம்பிக்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பொறுப்புக்களை நிறைவேற்றுவேன்” என்றார்[12].

 

© வேதபிரகாஷ்

14-05-2013


[7] Congress spokesperson Janardan Dwivedi clarified that Sonia Gandhi and Manmohan Singh shared a perfect relationship and also sought to scotch reports about the Congress high command was contemplating a leadership change at the Centre. “There cannot be any better relationship between a party president and a PM,” he said. “Reports about differences between PM and Sonia Gandhi are a rumour and disinformation, Congress condemns it,” he added. He also said that there was no doubt that ‘Manmohan Singh will remain PM till 2104’.

http://zeenews.india.com/news/nation/manmohan-singh-will-remain-pm-till-2014-congress_848361.html

http://www.firstpost.com/politics/from-here-on-sonia-manmohan-dyarchy-is-a-slow-train-wreck-779135.html

[8] The Congress leader was forced to clarify the party’s stand against the background of reports doing rounds that a section of the party wanted to replace Manmohan Singh as PM before the Monsoon Session of Parliament. The name of Congress vice president Rahul Gandhi along with Union Finance Minister P Chidambaram and Defence Minister AK Antony was doing the rounds to replace Manmohan Singh.

http://zeenews.india.com/news/nation/manmohan-singh-will-remain-pm-till-2014-congress_848361.html

http://www.firstpost.com/politics/from-here-on-sonia-manmohan-dyarchy-is-a-slow-train-wreck-779135.html