Archive for the ‘உட்பூசல்’ Category

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

ஜூலை 13, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

Modi tackling Dravidianism

அமித் ஷாவின் தமிழக விஜயம் – 2014: கடந்த 2014-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்றதும் முதல்முறையாக தமிழகம் வந்திருந்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் வாக்குச் சாவடி களிலும் குறைந்தது 100 உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறு அறிவுறுத்தியிருந்தார். இது எந்த அளவுக்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை இந்தப் பயணத்தின்போது அமித் ஷா ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது. 20-12-2014 அன்று மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்[1]. டிசம்பர் 24, 2014 அன்று முதன்முதலாக சென்னையில், பிஜேபி தொண்டர்களின் முன்பாக பேசினார்[2]. ஆனால், கட்சி உட்பூசல்களுடன் செயல்படுவதை கவனித்தார். அதனால், ஒருவேளை, ஜாதியத்துவத்தை வைத்தே, அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தார் போலும். இதன் தொடர்ச்சி தான், ஜாதி சங்கத் தலைவர்களுடன் நடத்தும் பேச்சு, முதலியன, ஆனால், அங்கும் 2019ற்குள் என்ன பலன் பெற்றுவிடலாம் என்ற ரீதியில் புதியதான ஆட்கள் [ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாதவர் என்றாலும் பரவாயில்லை, தேசவிரோத, இந்துவிரோத, இந்துக்கள் அல்லாதவர்கள்] சேர்க்கப்பட்டார்கள். “குழுக்கள்” அதிகமாகின. இவையெல்லாம், பதவி [அரசு நியமனங்கள்], பணம், அதிகாரம் என்ற பலன்களை எதிர்பார்த்து சேர்ந்த கூட்டமாகின. இதனால், 50-70 வருடங்களாக பணியாற்றி வந்தவர்கள் ஒதுக்கப் பட்டார்கள். நியாயம்-தர்மம் போன்ற கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அமைதியாக இருந்தனர். மற்றவர், போட்டி-கோஷ்டியரின் மீது சேற்றை வாறி இறைத்தனர். ஊடகங்களுக்கு தீனி போட்டு, தம்மை பிரபலப் படுத்திக் கொண்டனர்.

BJP Faction leaders, nominated, joined etc

ஆகஸ்ட் 2015ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்[3]: தேவேந்திரகுல வேளாளர் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா 06-08-2015 அன்று மதுரை வந்தார். அவரை பல்வேறு ஜாதிசங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

  1. நாடார் மகாஜன சங்கம் சார்பில் கரிக்கோல்ராஜ், பெரீஸ் மகேந்திரவேல்,
  2. ரெட்டி நலச் சங்கம் சார்பில் ஜி.ரங்கநாதன், பட்டாபிராம், ராமலிங்கம்,
  3. யாதவர் சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், கபிலன், சரவணன்,
  4. நாயுடு சங்கம் சார்பில் ஜெயக்குமார்,
  5. தேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன்,
  6. மருதுபாண்டியர் பேரவை சார்பில் கண்ணன்,
  7. அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவன தலைவர் ஆறுமுகம்,
  8. சவுராஷ்டிரா சமூக நல பேரவை சார்பில் ஜவஹர்லால்,
  9. செட்டியார் சமூகம் சார்பில் சிவானந்த சீனிவாசன்

உட்பட பலர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் அஇமூமுக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், வேலம்மாள் கல்வி நிறுவன தலைவர் எம்வி.முத்துராமலிங்கம், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தனித்தனியே சந்தித்தனர்[4]. இவர்களிடையே அமித்ஷா பேசியதாவது: ஊழல் மாநிலங்களில் தமிழகம் உயர்நிலையிலுள்ள சூழ்நிலை யுடன் நிலவுகிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதே என் விருப்பம். பல்வேறு சமுதாயத்தினரும் இந்த இயக்கத்தில் இணைந்தால், தூய்மையான நிர்வாகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் விரைந்து செயலாற்று வோம். ஊழலும், முன்னேற்றமும் ஒன்றாக செல்ல முடியாது. ஊழல் உள்ளபோதே தமிழகம் இந்தளவு முன்னேறியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டால் தமிழகம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும். அப்போது தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் உருவாகும் என்றார்.

Balasubramanian Adity, Vanathi Ladai

ஆகஸ்ட் 2017ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்: 25-12-2016 அன்று ஜெயலலிதா இறந்த பிறகு, அரசியல்வாதிகள், குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க தீவிரமாகி விட்டனர். கருணாநிதி படுத்த படுக்கையாகி விட்ட பிறகு, திமுக கடுமையாக அரசியல் குழப்பத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது. மே 26, 27, 28 தேதிகளில் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டாலும், வரமுடியவில்லை. பிறகு, ஆகஸ்டில் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா, வன்னியர், நாடார், முத்தரையர், யாதவர் என பல 25க்கு மேற்பட்ட ஜாதி சங்க தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதாக  உரையாடினார். இதன் மூலம் பாஜக சாதி சங்களின் ஆதரவை பெற முயற்சி நடத்துகிறது.  டிசம்பர் 2017ல், 2ஜி வழக்கில் திமுக தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதாவது, திமுக ஊழல் கட்சி அல்ல என்று பிரச்சாரம் செய்யும். அதனால், என்டிஏவில் திமுக நுழைவதற்கும் பிரச்சினை இல்லை. மோடி ஜெயலலிதாவை சந்தித்தது போக, கருணாநிதியையும் பார்த்து வருகிறார். திமுக உள்ளே வந்தால், பிஜேபி விசுவாசிகளுக்கு “சான்ஸ்” குறையும், அதனால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அழகிரியை வைத்து, திமுகவை உடைத்து, அதிமுகவையும் உடைத்து, ர்ஜினியை வைத்தும் புதிய கூட்டணியை உண்டாக்கலாம்.

Faction MBJP - no takers 2016

2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபிகோஷ்டி பூசல்[5]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி,  தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[6], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை.  இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[7]. இவையெல்லாம் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட விவகாரங்கள்[8].

© வேதபிரகாஷ்

13-07-2018

 

Balasubramanian Adity, Sankara narayanan - Vanathi Ladai

[1] Shri Amit Shah address public meeting at Maraimalai Nagar,Chennai,Tamil Nadu: 20.12.2014

https://www.youtube.com/watch?v=ZyilYpqQKuA

[2] In his first ever speech made in Chennai on December 20, 2014, Shah exhorted party cadre in Tamil Nadu to end the cyclical ‘misrule’ of Dravidian parties and to take Tamil Nadu on board with Prime Minister Modi’s Mission for Growth. However, the party could not open its account in the State Assembly in the 2016 elections.

Indian Expess, Amit Shah to visit Tamil Nadu from August 22, to meet OBC leaders, Published: 30th July 2017 08:04 AM | Last Updated: 30th July 2017 08:04 AM

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/jul/30/amit-shah-to-visit-tamil-nadu-from-august-22-to-meet-obc-leaders-1635580.html

[3] தி.தமிழ்.இந்து, தமிழகத்தில் ஊழலை ஒழிக்க பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும்: ஜாதி சங்க தலைவர்களிடம் அமித்ஷா வேண்டுகோள், Published : 07 Aug 2015 09:18 IST; Updated : 09 Jun 2017 17:30 IST.

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article7511314.ece

[5] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?, on September 18, 2014 11:57 am.

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-top-leaders-bjp-willing-contest-from-coimbatore-249011.html

[7]  http://sathiyamweekly.com/?p=5416

[8] https://secularsim.wordpress.com/2016/05/29/from-1996-to-2016-how-bjp-faired-in-tamilnadu-elections/

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]

ஜூலை 12, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள்தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]

Amt Sha turning to Dravidian parties

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு  ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.

Amt Sha made Dravidian parties ton get alerted

ஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.

தமிழக பிஜேபியில் பொறாமை, போட்டி, கோஷ்டி-அரசியல் என்ற நிலை மாற வேண்டும்

தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு நிலை, தமிழ் பற்றிய நிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு பொய் பிரசாரம்  உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா? எப்போது தமிழகத்தில் பா.ஜ.க.  ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை  கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.

பிஜேபியின் கவர்ச்சி அரசியலும் தோற்றது - 2016

ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றிய அமித் ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா? என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா? , வருவீர்களா? தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா? வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா? செய்வீர்களா? என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.

தமிழக பிஜேபி தலைவர்கள்

அமித்ஷா வரவும், தில்லி திரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர்.  7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].

தமிழக பிஜேபி - தேர்தல் முடிவு -எச்.ராஜா - 2016

அமித் ஷா பேச்சை ஊடகங்கள் விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே..! தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.

© வேதபிரகாஷ்

12-07-2018

rly ticket tamil

[1] அமித் ஷா பல ஜாதி சங்கத் தலைவர்களுடன் 2015லிருந்து பேசி வரும்போது, இதனை சொல்லியுள்ளார்.

[2] காங்கிரஸ் ஊழல் கட்சி – அதனை வெளியேற்றியுள்ளோம் என்று எடுத்துக் காட்டுகிறார்.

[3] கல்மாடி, ராஜா, கனிமொழி முதலியோர் ஜெயிலுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார். ஆனால், இப்பொழுது, அவ்வழக்கு தள்ளுபடியாகி விட்டது.

[4] எடியூரப்பா சிறைக்குச்சென்று வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

[5] அமித் ஷா “தலித்” என்ற பிரயோகத்தை செய்தாலும், ராஜா, “பட்டியல் இனம்” என்று மொழிபெயர்த்தார்.

 

[6] மாலை மலர், தமிழக பயணத்தை முடித்து பா... தேசிய தலைவர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார், பதிவு: ஜூலை 09, 2018 23:38

[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/09233829/1175487/bjp-leader-amit-shah-depart-delhi.vpf

[8] மாலைமலர், தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பதா? – சென்னை கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம், பதிவு: ஜூலை 09, 2018 19:39; மாற்றம்: ஜூலை 09, 2018 20:00.

[9] https://www.maalaimalar.com/News/District/2018/07/09193912/1175462/Amit-sha-claims-to-form-BJP-govt-in-TN.vpf

[10] தி.இந்து, தமிழகத்தில் அதிகமான ஊழல்“: பாஜக தலைவர் அமித் ஷா வேதனை, பிடிஐ, Published : 09 Jul 2018 22:15 IST; Updated : 09 Jul 2018 22:17 IST

[11] http://tamil.thehindu.com/tamilnadu/article24373521.ece

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

ஜூலை 3, 2016

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

திருவள்ளுவர் கங்கை சிலை

தருண் விஜய் அரசியல் செய்கிறாரா?: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது.   மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.

திருவள்ளுவர் ஓவியங்கள்திருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தாபிரச்சினை என்ன?: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்[1] என்றது விகடன்.  ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3].   ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.

ஜாதி பிரசினையில் சிக்கிய வள்ளுவர் சிலை - 02_07_2016_010_010உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர் தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.

கருணாநிதி, தருண் விஜய்தருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய்,என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.

திருவள்ளுவர் ஓவியம் - கே.ஆர். வேணுகோபால சர்மாதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படிகருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”.  ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].

Valluvar sttue - DK response - Viduthalai - 02--07-2016சிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா?: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்? அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.

© வேதபிரகாஷ்

03-07-2016

[1] http://www.vikatan.com/news/tamilnadu/65670-tiruvalluvar-statue-fails-to-launch-in-haritwar.art

[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[7] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

[8] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

 

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

மே 29, 2016

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

TN 2016 BJP failed in alliance

பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.  அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை           எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.

தமிழக பிஜேபி - தேர்தல் முடிவு -எச்.ராஜா - 2016இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை! ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம்  பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

poll-of-exit-polls_NDTV 2016தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].

தமிழக பிஜேபி - ஜவடேகர் பிரச்சாரம்- 2016மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

பிஜேபியின் கவர்ச்சி அரசியலும் தோற்றது - 2016தமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்

[2] http://www.bjptn.org/event.php?id=47

[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]

http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-3rd-place-t-nagar-254060.html

[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக!, By சென்னை, First Published : 23 May 2016 03:14 AM IST

[5]http://www.dinamani.com/tamilnadu/2016/05/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF/article3446859.ece

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-done-reasonably-well-the-tamilnadu-assembly-election-254085.html

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

மே 29, 2016

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

தமிழக பிஜேபி கூட்டணி தோல்விதிராவிடத்துவ மேடை பேச்சு, கவர்ச்சி அரசியல், முதலியவை இல்லை: நவம்பர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் மற்றும் அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டனர்[1]. தி.மு.க.வில் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க. கலைபிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்[2]. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டார். இப்படி செய்திகள் வந்தன.

சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன்

எஸ்.வி சேகர், பிஜேபி மற்ற பிஜேபிகாரர்கள்: ஏற்கெனவே, எஸ்.வி. சேகர் இருந்து, புகைந்து கொண்டிருந்தது தெரிந்த விசயமே[3]. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்[4]. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது. தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்[5]. மோடிக்கு வேண்டியவர் எனது போலக் காட்டிக் கொண்டு, இவர் கராத்தே தியாகராஜனை ஆதரித்தார் என்பதும் தெரிந்த விசயமே. ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தனர் என்று தெரியவில்லை. எங்குமே இவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பிறகு எதற்காக, இவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும், பதவிகள் கொடுக்க வேண்டும்.

சேலம்பொது கூட்டம் கர்நாடக்கா அமைச்சர் பிரச்சாரம்பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி முதலியோரது பிரச்சாரம்: 29-04-2016 அன்று மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், தே நாளில் திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்[6]. 30-04-2016 அன்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 06-05-2016 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலை சென்னையில், நந்தனம்- வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது. வெங்கைய்ய நாயுடு நன்றாகத்தான் பேசினார். பிறகு வந்த மோடி தனக்கேயுரிய பாணியில் ஹிந்தியில் மோடி பேசினார். இவையெல்லாம் பிஜேபி மற்றும் மோடி ரசிகர்கள், தொண்டர்கள், பின்பற்றுபவர்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் கைதட்டி அரவாரம் செய்து ரசித்து சந்தோசப்பட்டனர். ஆனால், பொது மக்களுக்கு விசயம் சென்றடையவில்லை.

தாமரை வெல்லட்டும், தமிழகம் வளரட்டும்மோடி அரிசியா, அம்மா அரிசியா கோஷம் பொது மக்களுக்கு சென்றடையவில்லை: உண்மையில் அரிசி-அரசியல் தமிழகத்தில் நன்றாகவே வேலை செய்யும். அண்ணாதுரை ரூபாய்க்கு படி அரிசி கொடுப்பேன் என்று மேடையில், மக்களைக் கவர்ந்து ஓட்டைப் பெற்றனர். கருணாநிதியும் அத்தகைய முறையைக் கையாண்டார். ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி கொடுத்து, பாமர மக்களைக் கவர்ந்தார். பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை[7]. தமிழக மக்கள் மாதம் 20 கிலோ இலவச அரிசி பெறுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும், ஆனால் அதிமுக அரசு அதனை தான் வழங்குவதுபோல் காட்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை என்ற விவரத்தை பிப்ரவரி 2016ல் தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை[8].

maniarasanavd-அரிசி அர்சியல்நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்[9]: தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 அம்மா அர்சி - 2016 தேர்தல்

விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது: இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது[10]: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்காது. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி எஸ் டி வரி - மசோதா - ரசியல்ஜி.எஸ்.டியும், அரசியலும்: கலால் / எக்சைஸ் தீர்வை / வரி [Excise duty] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதில் ஒருபகுதி மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சேவை வரி [Service Tax] அறிமுகப்படுத்தியப் பிறாகும், இம்முறை தொடர்ந்தது. 2006-07களில் “பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம்” [The Goods and Services Act] அறிமுகப்படுத்த வேண்டிய முயற்சிகள் தொடங்கின. காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தாலும், அதற்கான தொலைநோக்கு திட்டம், அமல் படுத்தும் துணிவு, மாநிலங்களுடன் சரியில்லாத உறவுகள் போன்ற காரணங்களினால் அப்படியே வைத்திருந்தது. 2014ல் மோடி பதவிக்கு வந்ததும், அயல்நாட்டு மூலதனம் [FDI] வரவேண்டுமானால், ஜி.எஸ்.டி அமூல்படுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வழக்கம்போல தகராறு செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அமெரிக்கா-முதலாளித்துவம் என்றெல்லாம் தடுத்துக் கொண்டேயிருந்தனர். இந்நிலையில் 2016 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, கம்யூனிஸ்டுகளும் அதே நிலையை அடைந்தனர். அதனால், மம்தா, ஜெயா ஒப்புக் கொண்டால், “பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா” அமூலாக்கப்பட்டு விடும். ஆனால், தமிழக பிஜேபிக்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி!!, By: Mathi, Published: Thursday, November 26, 2015, 15:35 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-napolean-made-vice-president-tn-bjp-240819.html

[3] https://www.patrikai.com/sv-shekhar-tease-bjp-party/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்?, By: Veera Kumar, Published: Friday, May 27, 2016, 15:36 [IST].

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/s-v-shekar-showing-anger-toward-tamilnadu-bjp-254686.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nirmala-sitharaman-prakash-javadekar-will-campaign-on-friday-intamil-nadu-252433.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் மோடி அரிசியை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த டாஸ்மாக், By: Siva, Published: Thursday, May 19, 2016, 12:23 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-wave-powerless-amma-s-state-254054.html

[9] தினமலர், நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல், பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2016,20:12 IST.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1450802

2016 தமிழக சட்டசபை தேர்தலும் தனித்து விடப்பட்ட பிஜேபியும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் – பிஜேபி தோல்வி ஏன் (1)!

மே 28, 2016

2016 தமிழக சட்டசபை தேர்தலும் தனித்து விடப்பட்ட பிஜேபியும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் – பிஜேபி தோல்வி ஏன் (1)!

தமிழக பிஜேபி தலைவர்கள்

பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாதுபோன்ற கோஷங்கள்: தமிழக பிஜேபியினர் ஒரு மாயையான கற்பனையில் மிதந்து கொண்டிருந்தனர் என்பது அவர்களது பிரச்சாரம், பேச்சு, அறிக்கைகள் முதலியன இருந்தன. “பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது”, என்ற அளவுக்கு அறிக்கைக்கைகள் விடப்பட்டன[1]. திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையாக இருந்தனர். ஆனால், அதில், பிஜேபி தலைவர்களுக்குள் ஒருமித்த கருத்து, முயற்சி மற்றும் பேச்சுவார்த்தை இல்லை. இல. கணேசன் மற்றும் தமிழிசை பேச்சுகளில் இது வெளிப்பட்டது[2]. பிஜேபிக்கு வலிந்து “இடைத்தரகம்” செய்துவரும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், இந்துத்துவ எழுத்தாளர்கள், சமூகவலை போராளிகள் வேறு உசுப்பிவிடும் நிலையில் பொய்களை சொல்லி, சதோஷப்படுத்தி வந்தனர். 100 இடங்களைப் பிடித்து விடலாம் என்றெல்லாம் கணக்குக் காட்டினர். வதந்திகளை உருவாக்கி குழப்பத்தை உண்டாக்கினர். ஜெயாவைப் பொறுத்த வரையில், மோடி-ரேஞ்சில் உள்ளவர்களுடன் தான் பேசுவார், மற்ற மத்திய அமைச்சர்களுடன் பேசமாட்டர். ஆனால், தேவையில்லாமல் மற்ற பிஜெபிக்காரர்கள் கமென்ட் அடித்துக் கொண்டிருந்தனர். ஜி.எஸ்.டி விவகாரத்தில் மோடி, அருண் ஜெயிட்லி ஜெயாவுடன் பேசிப்பார்த்தாலும் உடன்படவில்லை. இதனால், மேலிடம் ஜெயாவுடன் கூட்டு வைத்துக் கொள்ள விரும்பவில்லை[3]. ஆனால், தமிழகத்தலைவர்கள் மாறி-மாறி பேசிக் கொண்டிருந்தார்கள்.

வெங்கைய்ய நாயுடு, ராஜா, மோடி, தமிழிசை சென்னை. வொய்.எம்.சி.மைதானம்

காங்கிரஸ்திமுக கூட்டணி பிஜேபியை தனியாக ஒதுக்கியது – 2016 தேர்தலில் தனித்து விடப்பட்ட பிஜேபி:: காங்கிரஸ் திமுகவோடு சேர்ந்தவுடன், நிலைமை மாறிவிட்டது. “ஊழல் ஊழலோடு சேர்ந்து விட்டது” என்பதை விட மற்ற பேரங்கள் பின்னணியில் இருந்தன. விஜய்காந்தின் பேரம் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளுடன் வெற்றிப் பெறாதலால்[4], வேறு கூட்டணி உருவாக்க திட்டமிட்டார். அந்நிலையில் தான் அந்த மக்கள் கூட்டணி உருவானது. பாமக தனியாக நிற்க திட்டமிட்டதாலும், ஜெயலலிதா தனியாக நிற்பது என்று உறுதியாக இருந்ததாலும், பிஜேபி தனியாகத் தள்ளப்பட்டது. அதிமுக மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுடன் மோதி வெல்வது என்பது நடக்காத காரியம் என்றுணர்ந்த போதிலும், தேர்தலில் குதித்தது. முகநூலிலும் நேரிடையாக, வேட்பாளர்கள் மற்றும் மறைமுகமாக அவர்களது நண்பர்கள் முதலியோரின் பிரச்சாரம் அதிரடியாக இருந்தாலும், நிதர்சனமாக இல்லை[5]. ஆகாசத்தில் கோட்டையைக் கட்டும் ரீதியில் தான் இருந்தது. விசுவாசமான தொண்டர்கள் (உண்மையானவர், பிரிவினைக் கூட்டத்தவர், நொந்து போனவர்கள் உட்பட), புதியதாக சேர்ந்துள்ள இளைஞர்கள் (விசுவாசம் மிக்கவர், ஆர்வத்துடன் இருப்பவர் மற்ற வகையறாக்கள்) முதலியோர் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று அவர்களுக்கேத் தெரிந்தது. இங்கு தினமலரின் அலசல் ஓரளவுக்கு சரியாக இருப்பதால், அது சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

அருண் ஜெயிட்லி, ஜயலலிதா

பிஜேபி-அதிமுக பாராளுமன்ற லடாய்கள்[6]: தினமலர் சொல்வது, “நில எடுப்பு மசோதா தொடர்பாக, துவக்கத்தில்பா..,வுடன் நல் முகம் காட்டிய, .தி.மு.., திடுமென பின்வாங்கியதில், பிரதமர் மோடிக்கு, .தி.மு.., மீது கடும் கசப்பு ஏற்பட்டது. இருந்த போதும் ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியிலான நட்பை நல்லவிதமாகவே தொடர வேண்டும் என, முடிவெடுத்த மோடி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் தண்டித்து, அவர் ஜாமினில் இருந்த போது இல்லம் தேடி சென்று, உடல் நலம் விசாரித்து சென்றார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் ஜெயலலிதாவை, இல்லம் தேடி வந்து பார்த்து சென்றார். ஆனாலும், ராஜ்யசாபாவில் பா.., கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்களிலும், .தி.மு.., – பா..,வை விட்டுவிலகியே நின்றது.இதனால், மத்திய அமைச்சர்கள் பலரும், அடிக்கடி தமிழகம் வர துவங்கினர்.தங்கள் துறை தொடர்பான நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொண்டனர். பியுஷ் கோயல், சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் என, பல அமைச்சர்களும் தமிழகம் வந்து சென்றனர். இதை, தமிழக அரசு தரப்பில் விரும்பவில்லை. லேசுபாசான அதிருப்திகளை அதிகாரிகள் மட்டும் வெளிப்படுத்தினர். ஆனால், .தி.மு.., தலைமை, ‘ரியாக்ட்செய்யவில்லை[7].

பிஜேபி- அதிமுக லடாய் 2016 தேர்தல்

வெள்ளம் புரட்டிப் போட்ட கூட்டணி[8]: தினமலர் தொடர்கிறது, “கடந்த நவம்பர் இறுதியில், தமிழகத்தை மழை, வெள்ளம் புரட்டி போட்டது. தமிழக முதல்வரான ஜெயலலிதா, மக்களைச் சந்திக்காமல், வீட்டிலேயே முடங்கி இருக்க, டில்லியில் இருந்து கிளம்பி வந்தார் பிரதமர் மோடி. தன்னிச்சையாகவே, பாதிக்கப்பட்ட இடங்களை சென்று பார்த்தவர், சென்னை வந்து முதல்வரை சந்தித்தார். மழை, வெள்ள பாதிப்புகளுக்காக முதற்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினார். பிரதமர் வருகிறார் என தெரிந்ததும், அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் சென்னையை சுற்றிப் பார்த்தார் ஜெயலலிதா. இப்படி இரண்டு தரப்புக்குமான இடைவெளி அதிகரிக்க துவங்கியது.இருந்த போதும், தமிழக பா.., தலைவர்கள் பலரும் சட்டசபை தேர்தலில், .தி.மு..,வுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என விரும்ப, கடைசி கட்ட முயற்சியும் எடுக்கப்பட்டது. .தி.மு..,வின் டில்லி முக்கிய பிரமுகரை சந்தித்து, பா.., முக்கிய தலைவர் பேசினார்மூன்றில் ஒரு பங்கு இடங்கள், தேர்தல் முடிந்ததும்கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என, கூட்டணி பேசினர்.ஆனால் அதை, .தி.மு.., தலைமை விரும்பவில்லை. தமிழகத்தில் பா..,வால் எந்த நன்மையும் இல்லைகடந்த முறை போல இம்முறையும் கிட்டத்தட்ட தனித்து தான் போட்டிஒன்றிரண்டு சிறிய கட்சிகளும் கூட, இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி என, முடிவெடுத்தார் ஜெயலலிதா[9].

modi-jayalalitha

பனிப்போரை சமாளித்த ஜெயா: தினமலர் தொடர்கிறது, “இதை பா.ஜ., ரசிக்கவில்லை. இருந்த போதும், லோக்சபா தேர்தலைப் போல, விஜயகாந்தை வைத்து கூட்டணி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி. இதனால், தமிழகத்தில் தனித்து விடப்பட்டு விட்டது.விளைவு, ஜெயலலிதாவை சந்திக்க முடிய வில்லை என, பா.ஜ., மத்திய அமைச்சர்கள் கடும் விமர்சனம்.  ஜெ., பொதுக்கூட்டங்களுக்கு வந்து வெயிலால் இறந்தவர்களை வைத்து, தீவிர அரசியல், ஜெயலலிதா போகும் பிரசார கூட்டங்களுக்கு கடுமையான நெருக்கடி. அதனால், அவர் தன் பிரசார பயணத் திட்டத்தை மாற்ற வேண்டியதானது,  தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் தீவிரம்*முடுக்கி விடப்பட்ட வருமானவரித்துறை; தமிழகம் முழுவதும், 45 இடங்களில் ரெய்டு, கரூரில் அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் வீடு, குடோன் ரெய்டு. பல கோடி ரூபாய் பறிமுதல்; அதே கரூர் கந்தம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் மணிமாறன் வீடு, குடோனில் ரெய்டு; 5 கோடி ரூபாய் பறிமுதல். இப்படி தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை மூலமாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் கூட்டணிக்கு வராத அ.தி.மு.க.,வை பழிவாங்கத் துடிக்கிறது பா.ஜ., என, ஆளும்கட்சித் தரப்பில் இருந்து பொருமல் சத்தம் கேட்க துவங்கி உள்ளது.

 © வேதபிரகாஷ்

 28-05-2016

[1] http://www.bjptn.org/event.php?id=32

[2] தினமலர், தேர்தல் களம், தமிழிசையின் பேட்டி, ஏப்ரல்.4, 2016.

[3]  மோடி ராஜினாமா, ஜெயா கவிழ்ப்பு, ஒரு ஓட்டு வித்தியாசம் முதலியவற்றை விசுவசமான பிஜேபிக்காரர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.

[4] பிஜேபிக்கு வலிந்து “இடைத்தரகம்” செய்துவரும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், இந்துத்துவ எழுத்தாளர்கள், சமூகவலை போராளிகள், இதிலும் விளையாடியுள்ளனர்.  வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முடிவு செய்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் அடங்கிய தேமுதிக நிர்வாகிகள், தில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக செய்திகள் கசிந்தன. இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக – பாஜக மூத்த தலைவர்கள் சந்திப்பு என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பான வீண் வதந்தி என தெரிவித்தார்.

http://www.dinamani.com/tn-election-2016/2016/03/08/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/article3316506.ece

[5] https://www.facebook.com/TamilnaduBJP/?fref=nf

[6] தினமலர், சீறீ பாய்கிறதா புலி, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016,21:58 IST

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508489

[8] தினமலர், சீறீ பாய்கிறதா புலி, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016,21:58 IST

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508489