Archive for the ‘மதம்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் கூட்டம் நடக்கிறது: ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

  1. பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, Sarkaryavah Shri Dattatreya Hosabale
  2. கிருஷ்ண கோபால், Sah sarkaryavah Krishna Gopal
  3. மன்மொஹன் வைத்யா, Sah sarkaryavah Manmohan Vaidya 
  4. சி.ஆர்.முகுந்த் Sah sarkaryavah CR Mukund
  5. அருண்குமார், Sah sarkaryavah Arun Kumar
  6. ராம்தத் Sah sarkaryavah Ramdutt 

முதலியோர் கலந்து கொள்கிறார்கள்[1]. தவிர நாடு முழுவதும் உள்ள பிராந்த பிரசாரக், சஹ பிராந்த பிரசாரக், க்ஷேத்ர பிரசாரக், அகிலபாரதிய பிரமுக், சஹபிரமுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்[2].

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் விவரம்: JSS பப்ளிக் பள்ளி புகழ்பெற்ற J.S.S இன் ஒரு அங்கமாகும். மைசூர் மகாவித்யாபீடத்தில் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தரமான கல்வி மற்றும் சமூக மறுசீரமைப்புக்கு ஒத்ததாக இருக்கும் நாட்டின் மிகப்பெரிய தனியார் முயற்சியாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டம், சுத்தூரில் உள்ள ஜகத்குரு ஸ்ரீவீரசிம்ஹாசன மடத்தின் மகா முனிவர்களால் அனுசரணை செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் இந்த மஹாவித்யாபீடத்திற்கு நமது வழிகாட்டும் சக்தியும் வழிகாட்டியுமான ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா ஸ்வாமிகளாவரு தலைமை தாங்குகிறார். சரித்திரத்தின் படி, காஞ்சி ராஜ ராஜசோழனுக்கும் தல்காட்டின் ராஜா மல்லனுக்கும் இடையேயான பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவிய ஆதிஜகத்குரு, தனது ஆன்மீக போதனைகளாலும், சரியான நேரத்தில் தலையீடு செய்ததாலும், 10 ஆம் நூற்றாண்டில் சுத்தூர் மகாவித்யாபீடத்தை நிறுவினார். சுத்தூரில் வீரசிம்ஹாசன மடத்தை நிறுவ வேண்டும். அப்போதிருந்து, பண்டைய பீடமானது மத மற்றும் ஆன்மீக சிந்தனைகள், கலாச்சாரம் மற்றும் இலக்கியம், குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அம்மடத்தின் பள்ளி தான், இந்த “JSS பப்ளிக் பள்ளி.”

ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்[3].  நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது[4].  ஜூலை 16ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது[5].  இது தொடர்பாக பேசிய ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது[6]. இதில் அடுத்த 4 – 5 மாதங்களுக்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும். அமைப்பின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டங்கள், அதில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விகிதம் குறித்து ஆராயப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஸ்வயம் சேவகர்கள் வந்துள்ளார்கள்.

கூட்டத்திற்கு இடையூறு செய்ய திட்டமா?: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் மாநாடு 13-07-2023 அன்று தொடங்கியது. ஏற்கெனவே அறிவித்துள்ளதால் 500 போலீஸார் பாதுகாப்பு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது. இம்மாநாட்டில் இன்று அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு எதிராகவும், மோகன் பாகவத்துக்கு எதிராகவும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் ஊட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்[7]. அதன்படி, இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தனர்[8]. இத்தகவல் கோவை மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இத்தகவல் சூலூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, இருவரையும் வழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சூலூர் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் பஸ்ஸில் இருப்பதைக் கண்டு பெண் போலீஸார் உதவியுடன் அவர்களை கீழே இறக்கினர்.

நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்தனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத்தில் ஈடுபட முயன்ற மதுரை நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தனர்[9]. அப்போது, பெண் போலீஸை தகாத வார்த்தைகளால் பேசிய கன்னத்தில் அறைந்த காரணத்தால் நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்[10]. இதனையடுத்து  கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்[11]. பெண் காவலர் அளித்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[12]. இருவரும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராவும், மோடிக்கு எதிராகவும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி, ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வர்ணித்து, விவரித்து வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] Rashtriya Swayamsevak Sangh, RSS Akhil Bharatiya Prant Pracharak Meet, 2023, at Ooty, on July 13-15, ., 11-Jul-2023, press statement

[2] https://www.rss.org/Encyc/2023/7/11/RSS-Akhil-Bharatiya-Prant-Pracharak-Meet-2023-at-Ooty-on-July-13-15.html

[3] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் வருடாந்திர கூட்டம்: ஊட்டியில் நாளை தொடங்குகிறது , தினத்தந்தி ஜூலை 12, 12:23 am.

[4] https://www.dailythanthi.com/News/India/2611-like-attack-if-threat-call-over-pak-woman-who-came-to-india-for-lover-1007682?infinitescroll=1

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஊட்டியில் துவங்கிய 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு! மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு! நோக்கம் இதுதான், By Nantha Kumar R Published: Friday, July 14, 2023, 9:43 [IST]

[6] https://tamil.oneindia.com/news/coimbatore/3-day-rss-conclave-begins-in-ooty-mohan-bhagwat-expected-to-give-advices-tomorrow-521049.html?story=1

[7] குமுதம், கோயம்புத்தூர்: பெண் போலீசை தாக்கியதாக நந்தினி, நிரஞ்சனா கைதுஎன்ன நடந்தது?, ஜூலை 15, 2023.

[8] https://www.kumudam.com/news/tamilnadu/nandini-was-arrested-in-coimbatore

[9] மீடியான்.காம், ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக போராட முயற்சிதடுத்த போலீஸுக்கு பளார்மதுரை நந்தினி கைது!, Karthikeyan Mediyaan News, 04.00 மாலை, 14-07-2023.

[10] https://mediyaan.com/covai-police-arrested-social-activists-madurai-nandhini-niranjana/

[11] இ.டிவி.பாரத், Coimbatore: பெண் காவலரை தாக்கியதாக சமூக ஆர்வலர் நந்தினி உட்பட இருவர் கைது!, Published: 14-07-2023. 12.00 hours

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/two-social-activists-arrested-for-assaulting-female-police-officer-in-coimbatore/tamil-nadu20230714125845520520247

எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் – இதன் அர்த்தம் என்ன?

ஜூன் 4, 2023

எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம்ஆர்.எஸ்.எஸ். தலைவர்இதன் அர்த்தம் என்ன?

அறிவுரை யாரை நோக்கி சொல்லப் பட்டுள்ளது: ஜூன் 2023 முதல் வாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளதில் பல விசயங்கள் உள்-பொதிந்துள்ளன. ஒவ்வொரு வரியும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்திய ஒற்றுமை என்ற நிலையில், பற்பல இப்பொழுதைய பிரச்சினைகளுக்கு பதில் கொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்களுக்கு அதிகமாகவே அறிவுரை கூறியுள்ளார். கர்நாடத் தேர்தல் தோல்வி மற்ற நிகழ்வுகளை மனத்தில் வைத்துக் கொண்டு பேசியுள்ளதை கவனிக்கலாம். முஸ்லிம் பிரச்சினை தீவிரமாகும் நிலையில் அவர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தும். ஏனெனில், எல்லையில் உள்ள எதிரிகளை எதிர்க்க, எல்லோரும் தான் ஒன்று படவேண்டியுள்ளது. பாகிஸ்தானை முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள், சீனர்கள் கம்யூனிஸ்டுகளுடன் மோத மாட்டார்கள் என்றிருக்க முடியாது.

இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: 01-06-2023 அன்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சங்க ஷிக்ஷா வர்க்’  நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.‛‛இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது எனவும், அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்” என ஆர் எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: “வேறுபாடுகள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற புரிதலின் மூலம் மட்டுமே நாட்டில் உள்ள சமூகங்களின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு ஏற்படும்[1]. வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன[2]. அவற்றுடன் நாம் அப்போது சண்டையிட்டோம். எல்லையில் அமர்ந்திருக்கும் எதிரிகளிடம் நமது பலத்தை காட்டாமல், நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்[3]. நாமெல்லாம் ஒரே நாடு என்பதை மறந்து விடுகிறோம். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்[4]. இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

இந்தியர்கள் அந்நியர்களின் கலப்பினை மறந்து ஒன்றுபட வேண்டும்: [மோகன் பகவத் பேசியதை இடது பக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அதன் விளக்கம் வலது பக்கம் கொடுக்க்ப் படுகிறது]

வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன, ஆனால் அவர்கள் இப்போது இல்லை. இப்போது அனைவரும் இங்கு உள்ளவர்கள் தான். எனவே, நாம் வெளியில் இருந்து வந்தவர்களுடன் உள்ள தொடர்பை மறந்து வாழ வேண்டும். இங்குள்ள அனைவரும், நமது அங்கத்தினர். அவர்களது சிந்தனையில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அவர்களிடம் பேச வேண்டும்.இடைகாலத்தில் இந்தியாவுக்கு வெளியிலிருந்து பல இனத்தவர் இங்கு வந்து, கலந்து, அவர்கள் மூலம் சந்ததியர் உண்டாகியுள்ளனர். அவர்கள் தாங்கள் இந்தியர்களை விட மாறுபட்டவர்கள் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் தான் பிரிவினைவாதமாகி, இந்தியர்களைப் பிளக்கிறது, ஒருவரை ஒருவர் எதிர்க்கவும் தூண்டுகிறது.

இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது. அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும். நமது தனித்துவ அடையாளங்களே, இந்தியாவை பாதுகாப்பதாக உள்ளது. வெளியில் இருந்து அல்ல. நமது நாட்டுடனான நமது உறவு பரிவர்த்தனை சார்நதது அல்ல. நாம் வேறுபாடுகளை கொண்டாடுகிறோம்[5]. ஒன்றாக வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிப்போம். ஒன்றாக வாழ்வதற்கும், நல்லிணக்கத்திற்கும் பேச்சுவார்த்தை முக்கியம். ஒவ்வொருவரும் சமுதாயத்திற்காக விட்டு செல்ல வேண்டும்[6].

புறத்தோற்றங்களில் வித்தியாசப் படுத்திக் காட்டிக் கொள்பவர்கள் வெளிநாட்டவர்கள் இல்லை, இந்தியர்களே: நல்லிணக்கத்திற்கு ஒரு தலைபட்சமான முயற்சிகள் பலிக்காது. ஒவ்வொருவரும் தியாகங்கள் செய்ய வேண்டும். அது பழக்கவழக்கம் மற்றும் மதிப்புகள் மூலம் மட்டுமே வரும். இது தான் நமது தாய்நாடு.

நமது வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். சில வெளியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில், நமது முன்னோர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். சில படையெடுப்பாளர்கள் வந்து சென்றுள்ளனர். பலர் தங்கி உள்ளனர். தாய்நாட்டுடன் இணைந்தால் நமது அடையாளம் அழிந்துவிடும் என சிலர் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. சிலர் தாங்கள் வித்தியாசமாக இருப்பதாகவும், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என நினைத்ததால், 1947 ல் நாட்டில் பிரிவினை ஏற்பட்டது.பாரசீகம், முகமதியம் / இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல அந்நிய மதத்தவர் இந்தியாவில் நுழைந்து, தமது மதத்தினைப் பரப்பியுள்ளனர். அவர்களது சந்ததியினரும் வளர்ந்துள்ளர், அத்தகையோர் இக்காலத்தில் தமது மதம், மத அடையாளங்கள் முதலியவற்றை இந்தியாவிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ள அதிகமாக முயன்று வருகின்றனர். ஆனால், புறத்தோற்றத்தில் அவ்வாறு காட்டிக் கொண்டாலும், அவர்கள் மற்ற காரணிகளால் இந்தியரே தவிர, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இல்லை.

இந்திய சமூகத்தில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு இடமில்லை. ஹிந்து சமூகம் அதன் சொந்த மதிப்புகள் மற்றும் லட்சியங்களை மறந்துவிட்டது. இதனால் தான் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு பலியாகிவிட்டது.

ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது:நமது முன்னோர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களின் கடனையும் அடைப்போம். இந்தியா ஜனநாயக நாடு. ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகள் மத்தியில் போட்டி இருக்கலாம்.

ஆனால், அரசியலுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் அது, சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது என்ற விவேகம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவில் பிளவுகளை விரும்பும் சக்திகள் குறித்து மக்கள் அறிந்து வைத்துள்ளனர்[7].இன்றைக்கு அரசியலாலேயே இந்துக்களே பிளவு பட்டுள்ளார்கள். அதே போல இந்துத்துவவாதிகளும் தனித்தனியாக இயங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்கள் கூட தனித்தனியாக கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவையெல்லாம் அவர்களது பேச்சு, நடவடிக்கை முதலியவற்றிலிருந்தே புரிந்து-தெரிந்து கொள்ளலாம்.

நமது பழங்கால பெருமைகளை புத்துயிர் பெற செய்வது முக்கியம். இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை மையமாக கொண்டு, நாட்டில் தேசிய உணர்வு ஏற்பட்டு உள்ளது[8]. கோவிட் போன்ற சவால்களை எதிர்கொள்வதையும், சமாளிப்பபையும் உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது[9]. ஜி20 அமைப்பின் தலைமைப்பதவி நம்மை த் தேடி வந்துள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்[10].

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தினமலர், இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது: மோகன் பகவத் பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஜூன் 02,2023 13:33;

[2] https://m.dinamalar.com/detail.php?id=3337052

[3] காமதேனு, எல்லையில் எதிரிகளிடம் பலத்தை காட்டாமல், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கிறோம்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி!, Updated on : 2 Jun, 2023, 1:40 pm

[4] https://kamadenu.hindutamil.in/politics/outsiders-have-gone-now-everyone-is-insider-rss-chief-mohan-bhagwat

[5] Indian Express, ‘Where is Islam safe other than India?: RSS chief Mohan Bhagwat in Nagpur, By: Express News Service, First published on: 02-06-2023 at 14:06 IST;; Updated: June 4, 2023 15:42 IST.

[6] https://indianexpress.com/article/cities/mumbai/where-is-islam-safe-other-than-india-rss-chief-mohan-bhagwat-in-nagpur-8642270/

[7] தினத்தந்தி, எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம்ஆர்.எஸ்.எஸ். தலைவர், தினத்தந்தி Jun 2, 8:42 am

[8] https://www.dailythanthi.com/News/India/fighting-among-ourselves-instead-of-showing-strength-to-enemies-at-border-rss-chief-mohan-bhagwat-977491

[9] Hindustan Times, ‘Islam is safe in India…forget foreign connections’: RSS chief Mohan Bhagwat, By HT News Desk, Jun 02, 2023 10:52 AM IST

[10] https://www.hindustantimes.com/india-news/islam-is-safe-in-india-forget-foreign-connections-rss-chief-mohan-bhagwat-101685676872813.html

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?  இது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (2)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்னஇது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (2)

சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெறமுடியும்:  திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவ முஸ்லிம் மகளிர் சங்கங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் சாமு நாசர் மற்றும் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் பங்கேற்று தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி மிதிவண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே  நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்[1].  இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது[2]. ஒருவர் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது: இங்கு முக்கியமாக நடந்து வரும் மோசடியை, “மத மொசடியை” கவனிக்க வேண்டும். குறிப்பாக எஸ்.சிக்கள், அதாவது பட்டியல்-சலுகை பெறும் இந்துக்கள், இந்துக்களாக இருந்தால் தான் இன்வொதிக்கீடு போன்ற சலுகைகளைப் பெற முடியும். ஆனால், கிருத்துவம் மற்றும் இஸ்லாம் மதம் மாறும் நபர்களுக்கு அந்த சலுகை தொடராது, கிடைக்காது. அதனால், மதம் மாறியப் பிறகும், தாங்கள் எஸ்.சிக்கள், இந்துக்கள் என்று மெய்ப்பிக்க சான்றிதழை வைத்திருக்கிறர்கள். நியாமாக, சட்டப் படி, மதம் மாறியப் பிறகு, அவர்களுக்கு அந்த சலுகை இல்லாமல் போகிறது. அதனால், சான்றிதழின் படி இந்துவாக இருந்து, அரசு சலுகைகள் பெற்று வாழும் அவர்கள், கிருத்துவர் அல்லது முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு, இத்திட்டங்களின் கீழ் அளிக்கப் படும் சலைகைககள், மானியங்கள், நிதியுதவிகள் போன்றவற்றைப் பெற முடியாது. இதைத் தான் அமைச்சர் மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறார்.

17-12-2022 – பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: கிறிஸ்தவ மக்களுக்கு உதவுவதற்காக தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்[3]. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 17-12-2022 சனிக்கிழமை நடைபெற்றது[4]. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் தலைமை வகித்தார். இதில், 314 பயனாளிகளுக்கு ரூ.33.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா் நல அலுவலா் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.கார்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

கிறிஸ்தவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு அளிக்கப் படும் உதவிகள்: இதைத்தொடா்ந்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: “தமிழகத்தில் மாவட்டம் தோறும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சிறுபான்மையினருக்கு கூடுதலாக மகளிர் உதவும் சங்கங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினா் மேம்பாட்டுக்காக தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இரண்டாம் கட்டமாக, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இதேபோல தனி அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். கிறிஸ்தவ மக்களுக்கும் தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவலாயங்களில் பணிபுரியும் பணியாளா்களின் பட்டியல் பெறப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. உலமாக்கள் உறுப்பினா்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டது. இதனால், தமிழக முதல்வா் அதே கல்வி உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டார்,” என்றார் அவா்.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்: சிறுபான்மை இசுலாமிய சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் பொருட்டும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், சென்னையில் “முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்” என்ற அமைப்பு 01.10.1982 – ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது[5]. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது. இதே போன்ற சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது. இச்சங்கங்கள் தொண்டு நிறுவனங்களாக (NGO) செயல்பட்டு முஸ்லிம் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன. இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] இ.டிவி.பாரத், சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற முடியும்அமைச்சர் தகவல், Published on: August 24, 2022 9.29 AM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thiruvallur/welfare-benefits-can-be-availed-only-if-you-have-proof-of-minority-status-minister-masthan/tamil-nadu20220824092932136136811

[3] தினமணி, கிறிஸ்தவா்களுக்கு தனி நல வாரியம், By DIN  |   Published On : 18th December 2022 01:19 AM  |   Last Updated : 18th December 2022 01:19 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/dec/18/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2–%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3968816.html

[5] https://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95ba8bb2-bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1/ba4baebbfbb4bcdba8bbeb9fbcdb9fbbfbb1bcdb95bbeba9-b95bc1bb1bbfbaabcdbaabbeba9-ba4b95bb5bb2bcdb95bb3bcd/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது?

ஜூன் 19, 2016

திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது?

முத்துக்குமாரசாமி தம்பிரான், திருக்குறள், பிஜேபி, தருண் விஜய்

வி.ஜி.சந்தோசம்திருவள்ளுவர்தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா! முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்!

குழப்பமான கூட்டங்கள், சேர்க்கைகள்- முத்து - தெய்வநாகம்முத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர்!  நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில்வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது!

 திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

திருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

Namakkal Thiruvalluvar statue

இந்துத்துவவாதிகள் செய்யவேண்டியது என்ன?: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும்.  இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.

© வேதபிரகாஷ்

19-06-2016


சிலை மாறியதால் ஏற்பட்டுள்ள சலசலப்பு - அரசியலா, உள்-பூசலா, திராவிட அழுத்தமா

[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.

[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.

[3] http://www.tamilhindu.com/2009/01/world-tamil-religion-conference-kumbakonam/

[4] http://www.tamilhindu.com/2009/01/world-tamil-religion-conference-kumbakonam/ – இங்குள்ள பதில்களில் காணவும்.

[5] https://christianityindia.wordpress.com/2014/02/22/deivanayagam-pseudo-researcher-and-christian-agent-spreading-thomas-myth/

[6] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்!

[8] More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? …….  I find it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India – Gita ramaswamy.

http://www.outlookindia.com/magazine/story/yankee-hindutva-strikes/271815

[9] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullible-hindus/

[10] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying-history-for-propagation-of-faith/

குழப்பவாதிகள், சாதியவாதிகள், அடிப்படைவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிரிவினைவாதிகள், மொழி-இனவெறியாளர்கள் மூன்றாவது அணியாம் – மதவாத எதிர்ப்பு மாநாடாம் – சரி, ஊழல்வாதம், ஊழல் எதிர்ப்புவாதம் எங்கு போயிற்று!

ஒக்ரோபர் 13, 2013

குழப்பவாதிகள், சாதியவாதிகள், அடிப்படைவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிரிவினைவாதிகள், மொழி-இனவெறியாளர்கள் மூன்றாவது அணியாம் – மதவாத எதிர்ப்பு மாநாடாம் – சரி, ஊழல்வாதம், ஊழல் எதிர்ப்புவாதம் எங்கு போயிற்று!

வகுப்புவாதசக்திகளைஎதிர்ப்பதற்குமூன்றாவதுஅணிதேவைப்படுகிறது: மூன்றாவது அணி அமைப்பது குறித்து, சமாஜவாதி, மார்க்சிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை (10-10-2013) ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் பேசுகையில், “நாட்டை வகுப்புவாத சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதற்கு மூன்றாவது அணி தேவைப்படுகிறது” என்றனர்[1]. “பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மூன்றாவது அணி தலைமையிலான அரசு உருவாகும்”, என சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வகுப்புவாதத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்து வரும் இவர்கள் இப்படி பேசுவது எப்படி? மேற்கு வங்காளம் மற்றும் கேரளா இரண்டையும் தொலைத்து விட்ட கம்யூனிஸ்டுகள், மறுபடியும் உட்டுண்ணிகளாக இருந்து கொண்டு யார் கிடைப்பார்கள் என்று வலைவீசுகிறார்களா? முல்லாயம் இதற்கு சளைத்தவர் அல்லர்!

நாட்டைவகுப்புவாதசக்திகளிடமிருந்துகாப்பாற்றவேண்டும்”: இக்கட்சிகளின் மூலங்களை, இந்த வாய்ச்சொல் வீரர்களின் பின்னணியை, முந்தைய கூட்டுகளை, சகவாசங்களை, சிறிது ஞாபகப் படுத்திக் கொண்டால், இவர்களது முகமூடிகள் கிழிந்து விடுகின்றன. இஸ்லாமிய, முஸ்லிம் மதவாத (ஐ.என்.எல், எம்.எல்), தீவிரவாத (என்.சி), பயங்கரவாத (எம்.ஐ.எம்) கட்சிகளுடன் கூட்டு வைத்திருந்தார்கள், இப்பொழுதும் வைத்திருக்கிறார்கள். அதேபோல, கிருத்துவ, கிறிஸ்தவ மதவாத, தீவிரவாத, பயங்கரவாத கட்சிகளுடன் (கே.கா, யு.என்.எப், எம்.எல்.எப்) கூட்டு வைத்திருந்தார்கள், இப்பொழுதும் வைத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஏதோ உத்தமர்கள் போல பேசி திரிவது மக்களுக்கு தெரியாது என்று நினைக்கிறார்கள் போலும். ஊழலில் ஊறிய உத்தமர்கள் காங்கிரசின், குறிப்பாக சோனியாவின் தயவால் அரசியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சோனியா-எதிர்ப்பு எல்லாம், இப்படி தேர்தல் வரும் போது மறைந்து விடும். சந்தர்ப்பம் கிடைத்தால், சோனியாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுவர், இல்லை, ரகசியமாக அவரது இல்லத்திற்குச் சென்று சாஷ்டாங்கமாக, காலில் விழுந்து எழுவர். இதுதான் இவர்களின் யோக்கியதை. ஆனால், வெளியே வரும் போது, பெரிய வீரர்களைப் போல பேசுகிறார்கள்[2].

மூன்றாவதுஅணிஅமைப்போம்அமைக்கமாட்டோம்: பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க தலைமையிலான கூட்டணிகள் தயாராகி வருகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக 3 வது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சிகள் செய்தன. ஆனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் சமீபத்தில் பேட்டியளிக்கையில் மூன்றாவது அணி அமைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்[3]. இந்த நிலையில் தனித்தனியாக நின்றால் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போகலாம் என்று கூறப்பட்டது. குறிப்பாக இடதுசாரி கட்சி தலைவர்கள் 3 வது அணி அமைத்தால் குறைந்தபட்சம் 100 இடங்களை கைப்பற்றலாம் என்று கருதுகிறார்கள். இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், மக்கள் ஜனநாயக கட்சி, அ.தி.மு.க. ஆகியவை ஒருங்கிணையும் பட்சத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து இடதுசாரி கட்சி தலைவர்கள் டெல்லியில் சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்கள். மதவாதத்திற்கு எதிராக ஒன்று திரள்வதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் மதவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த மாநாடு மூன்றாவது அணிக்கான அச்சாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது[4].

மதவாதஎதிர்ப்புமாநாடு: இப்படி கொள்கையற்ற, அரசியல் நாணயமற்ற, சுயமரியாதை அற்ற, கூட்டணி தர்மத்தை விபச்சாரமாக்கிய, அரசியலை வேசித்தனமாக்கிய, இந்த பரத்தைகளினும் கேவலமான சித்தாந்திகள், இப்படி மாநாடு நடத்தி எந்த மதவாதத்தை எதிர்க்கப் போகின்றனர்? –

  • இந்துமதவாதத்தை எதிர்பார்களா?
  • இஸ்லாம் மதவாதத்தை எதிர்பார்களா?
  • கிருத்துவ மதவாதத்தை எதிர்பார்களா?
  • ஜைன மதவாதத்தை எதிர்பார்களா?
  • சீக்கிய மதவாதத்தை எதிர்பார்களா?
  • பௌத்த மதவாதத்தை எதிர்பார்களா?
  • பார்சி மதத்தை எதிர்பார்களா?
  • யூத மதவாதத்தை எதிர்பார்களா?
  • இல்லை, புதியாதாக முளைத்துள்ள பற்பல சிறுபான்மையினர் மதவாதங்களை எதிர்ப்பார்களா?

செக்யூலரிஸ ரீதியில் இப்படி ஒவ்வொரு மதவாதத்தையும் எதிர்த்து தமது 100% மதசார்பற்ற நிலையை மெய்ப்பித்துக் காட்டுவார்களா? பிறகு இவர்களில் பெரும்பாலோர், ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தினராகவே இருந்து கொண்டு, அம்மதத்தை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமள் தேர்தல் விண்ணப்பதிலும் போட்டுக் ஜொண்டு நாடகம் ஆடவேண்டும்?

மூன்றாவதுஅணிநிறுத்தும்வேட்பாளரேநாட்டின்பிரதமராகவருவார்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு   காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணிகள் அல்லாது, மூன்றாவது அணி நிறுத்தும் வேட்பாளரே நாட்டின் பிரதமராக வருவார் என்று சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார்[5]. இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்தியில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகள் அல்லாத மாற்று அணி கடந்த காலங்களில் உருவானபோதும் அது வலுவானதாக திகழவில்லை. இருப்பினும், உண்மையான மதச்சார்பற்ற அணியாக அது விளங்கியது. ஆனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இது குறித்து பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறேன்.

மூன்றாவதுஅணிநிறுத்தும்வேட்பாளரேநாட்டின்பிரதமராகவருவார்அவர்யார்?: இங்குதான், அவர்களது போலித்தனம் வெளிப்படுகிறது.

  • முலாயம் சிங் யாவ்
  • மாயாவதி
  • ஜெயலலிதா
  • கருணாநிதி
  • சந்திரபாபு நாயுடு
  • தேவ கௌடா
  • மம்தா பேனர்ஜி
  • பிஜு பட்நாயக்

இப்படி முரண்பட்டவர்களின், எதிரும்-புதிருமாக நிற்பவர்களின் பட்டியல் நீளுகின்றது. நல்லவேளை, சரத் பவார் யுபிஏவில் தான் இருப்போம் என்று சொல்லிவிட்டார், லாலு பிரசாத் யாதவ் ஜெயிலுக்குச் சென்று விட்டார். இல்லையென்றால், அவர்களும் இந்த பட்டியிலில்வருவர்.

தேர்தலுக்குப்பிறகுஅமையும்மூன்றாவதுஅணியில்சேரவேண்டும்: “அதே சமயம், மாற்று அணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றாக தேர்தலை  சந்தித்தாலும் தொகுதிப் பங்கீடு, இடங்கள் ஒதுக்கீடு போன்றவற்றில் பிரச்னை ஏற்பட்டு, அணிக்குப் பலவீனமாக அமையும். எனவே, ஒவ்வொரு கட்சியும் அதன் சக்திக்கு ஏற்ப புரிந்துணர்வுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு அமையும் மூன்றாவது அணியில் சேர வேண்டும். அப்போது காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றான சக்தியாக விளங்கும் மூன்றாவது அணி யாரை வேட்பாளராக முன்னிறுத்துகிறதோ அவரே நாட்டின் பிரதமராக வர முடியும். வகுப்புவாத சக்திகளை எதிர்க்க ஒருமித்த கருத்துடைய மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களை இம் மாதம் 30-ஆம் தேதி சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். அக் கூட்டத்தில் யார், யார் பங்கேற்பார்கள் என்பதை இப்போது கூற மாட்டேன்”, என்றார் முலாயம் சிங் யாதவ்.

காங்கிரஸ், பாரதியஜனதாஆகியகட்சிகள்தலைமையிலானகூட்டணிகள்அல்லாது, மூன்றாவதுஅணி: இத்தகைளரசியல் நாடங்கள் அரங்கேறி இருப்பது உண்மைதான், ஆனால், காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலை இருந்து வந்தது. சந்திரசேகர் அப்படித்தான், பிரதமர் ஆனார். அதுபோல வி.பி.சிங், குஜரால், தேவ கௌடா முதலியோர் சில காலம் காங்கிரஸ் தயவில் இருந்திருக்கலாம். ஆனால், மொரார்ஜி தேசாய் போன்று இருந்திருக்க முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் தேவைகளுக்காக அத்தகைய நாடகங்கள் நடந்தன. ஆனால், இப்பொழுது மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்றன –

  • விலைவாசி (எல்லொரையும் பாதிக்கிறது),
  • ஒரு நாலைக்கு ஒரு சாப்பாடு கூட கிடைக்காத நிலை (வறுமைகோட்டில் மற்றும் கீழுள்ளவர்களின் நிலை)
  • படித்தவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம்,
  • வேலை கிடைத்தாலும் குறைவான சம்பளம்,
  • அந்நிய கம்பனிகளின் சுரண்டல்கள் (வரியேய்ப்பு, வரிவிலக்கு, பாரபட்சம் மிக்க பொருளாதார சலுகைகள் முதலியவை)

இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் யு.பி.,ஏ என்கின்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். இதில் கோடி-கோடிகளாக ஊழல் செய்து, உலகமே வியக்கும்படி சாதனை படைத்திருக்கின்றனர். இந்த ஊழல்வாதத்தை ஏன் எதிர்ப்பதில்லை என்று தெரியவில்லை.

மோடிக்குஎதிராகமதவாதஎதிர்ப்புசக்திகள்ஒன்றுதிரளவேண்டும்: திருமாவளவன்பேட்டி[6]: திட்டக்குடிக்கு வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: “நடைபெற உள்ள எம்.பி. தேர்தலில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதன் மூலம் மதவாத சக்திக்கும், மதவாத எதிர்ப்பு சக்திக்கும் இடையே நடைபெறும் யுத்தமாக இந்த தேர்தல் அமையும், எனவே மதவாத எதிர்ப்பு சக்திகள் ஒரு அணியில் திரளவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது. தமிழகத்தில் அண்மை காலமாக தலித்துகள், முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகளை போடுவது வழக்கமாக உள்ளது. அவர்களை ரவுடிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் நிலையை போலீசார் கையாண்டு வருகின்றனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது”, என்றாராம் திருமா[7]. மோடி எதிப்பைப் பற்றி தமிழகத்தில் கேட்கவே வேண்டாம். யார் வேண்டுமானாலும், மோடியை எதிர்க்கலாம். கண்டபடி போஸ்டர்கள் ஒட்டலாம், கடிதங்களை தயாரித்து வெளியிடலாம். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. பிரச்சாரமாகத்தான் இருந்து வருகிறது[8]. தேசிய அளவிலும் மோடி-எதிர்ப்பு இணைதளங்கள்[9] செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன[10].

மோடிபாதிப்புஅதிகமாகவேஉள்ளது: காங்கிரஸ்-பாதிப்பை விட மோடி-பாதிப்பு இவர்களுக்கு அதிகமாகவே உள்ளது என்று தெரிகிறது. CPI(M) தானாகவே  SP, JD(U), JD(S) and BJD முதலிய கட்சிகளுடன் பேசியதால் மட்டும் தேர்தலில் வெற்றிப் பெறமுடியாது. சீதாராம் யெச்சூரி, “தேர்தலுக்குப் பின்னர் தான் மூன்றாவது அணியைப் பற்றி யோசிக்கமுடியும்”,  வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு விட்டார்[11].  முல்லாயம் சிங் யாதவும், “நிறைய கருத்து வேறுபாடுகள் வருவதால் தேர்தலுக்கு பின்னர் தான் மூன்றாவது அணி”, என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்[12]. தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்ந்தெடுப்பு, நிறுத்துவது, பிரச்சாரம், செலவு முதலியவற்றைப் பற்றி ஏகப்பட்டப் பிரச்சினைகள் உள்ளன என்று கூறியுள்ளார்[13]. இவர் சமீபத்தில் காங்கிரஸ் தயவுடன் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து, சிபிஐ போட்ட வழக்குகளினின்று விடுவிக்கப்பட்டவர் என்று குறிப்பிடத் தக்கது. அதாவது, ஏற்கெனவே பேசம் பேசப்பட்டு விட்டது. அதே மாதிரி இவரது எதிரி மாயாவதியும் விவிக்கப்பட்டிருக்கிறார். அதாவது, காங்கிரஸ் நன்றாகவே செக் வைத்துள்ளது. போதாகுறைக்கு “மூன்றாவது அணி” பற்றி நன்றாகவே திட்டித் தீர்த்துள்ளது[14]. இல்லையென்றால், ஏப்ரல் 2014 முன்னர் மறுபடியும் சிபிஐ மேல்முறையீடு செய்ய முடியாதா என்ன? அதே சமயத்தில் சிபிஐ அமித் ஷாவைத் துரத்துகிறது! அதாவது, இவர்களின் ஒட்டு மொத்த எதிரி பிஜேபி தானே ஒழிய, காங்கிரஸ் இல்லை. ஆகவே, இன்றைய நிலையில் மோடி-பாதிப்பு தான் இவர்களை ஆட்டி வைக்கிறது.

© வேதபிரகாஷ்

13-10-2013


[2] வழக்கம் போல சனிக்கிழமை (12-10-2013) அன்று சன்-டிவியில் நடந்த விவாதம் தமாஷாக இருந்தது. ஏதோ சிரிப்பி செனல்களைப் பார்த்தது மாதிரி, பங்கு கொண்டவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். வீரபாண்டியைப் பற்றி கேட்கவே வேண்டாம்

[6] மாலைமலர், சென்னை 08-10-2013 (செவ்வாய்க்கிழமை)

[9] Endorsed by top actors (Naseeruddin Shah, Mahesh Bhatt), artists (Mallika Sarabhai, Ashok Vajpayee), academics (Nandini Sundar, G.N. Devi, K.N. Panikkar), journalists (Seema Mustafa) and intellectuals (Harsh Mandar, Shabnam Hashmi) from across the country, the website was simultaneously launched in 25 cities in India.

http://www.thehindu.com/news/national/pucl-launches-antimodi-website-across-25-cities/article5053113.ece

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)

செப்ரெம்பர் 12, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)

சாதாரண  “ஈவ்-டீசிங்”  சண்டையில்  (பெட்டி மேட்டர்)  இருவர்  /  மூவர்  கொல்லப்பட்டனர்  என்று  ஆங்கில  ஏடுகள்  விவரிக்கின்றன: ஒருபக்கம் பாலியல் பலாத்காரம் செய்தவனை தூக்கில் போடுங்கள் என்று பெண்கள் முழக்கம் இடுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள். மறுபக்கம் இப்படி (அதாவது, முசபர்நகர் விசயத்தில்) “ஈவ்-டீசிங்” என்பது சாதாரண விசயம் என்கிறார்கள். ஆனால், எந்த பெண்ணியக்கமும், வீராங்கனைகளும், தேசிய பெண்கள் ஆணையம் முதலியன தூங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றும் புரியவில்லையே? தில்லியில், மும்பையில் நடந்தால் அத்தகைய பெரிய குற்றமாகிறது, ஆனால், முசபர்நகரில் நடந்தால் சாதாரணமாகி விடுகிறாதா? பிறகு மூவர் கொல்லப்படுவதும் சாதாரணமான விசயமா? படிப்பவர்களுக்கு புத்தியில்லையா அல்லது சொல்பவர்களுக்கு அறிவில்லையா? உண்மையினை, உண்மையாக சொல்வதற்கு ஊடகங்கள் ஏன் பாரபட்சம் காட்டுகின்றன?

முசபர்நகர்  கவரத்தில்  இரு  பெண்கள்  பலாத்காரம்  /  மானபங்கம்: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்ப்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.

ஜாதிகலவரமா,  மதக்கலவரமா – இப்படி கேட்கிறார்கள்: வழக்கம் போல, மத்திய-மாநில அரசுகள், ஊடகங்கள் உண்மை நிலையை மறைக்க முயற்ச்சி செய்வது தெரிகிறது. தமிழ் ஊடகங்கள் உண்மை என்ன என்பது கூட அறியாமல், முசபர்நகரில் ஜாதி கலவரம் நடக்கின்றது[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஜாதி கலவரம் என்றால், ஏன் அகிலேஷ் முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டு அலைகிறார்? திடீரென்று அப்பா முல்லாயம் வந்து வக்காலத்து வாங்குகிறார்? ஆனால், வழக்கம் போல இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று குறிப்பிடாமல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

சமூக  ஊடகங்களை  ஊக்குவித்து  வருபவர்கள்  அவற்றைக்  குற்றஞ்சாட்டுவது: உதாரணத்திற்கு, “தி ஹிந்து” எப்படி “சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை இவ்விசயத்தில் பிரத்யேகமாக விளக்கியிருக்கிறது[2]. ஆனால், புத்தகயா குண்டுவெடிப்பின் போது அவ்வாறு செய்யவில்லை. இங்குதான் அந்த ஊடக பாரபட்சம் வெளிப்படுகிறது. என்.டி.டிவி-தி ஹிந்து, இவ்விசயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தினமும் நிகழ்ச்சிகளே ஒளிபரப்பி வருகின்றன. ஆகவே, இவை அத்தகைய சார்புடைய கொள்கையைப் பின்பற்றுவது, வாசகர்களை ஏமாற்றுவதாகும். கீழ்கண்ட தலைப்புகளினின்றே, அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை எதிர்க்கிறது மற்றும் ஆதரிக்கின்றது என்று தெரிகிறது. இது ஏன்?

New media presents scope for misuse: Tewari SEPTEMBER 10, 2013

Similarities in communal violence in Akhilesh regimeSEPTEMBER 11, 2013

FIR against several BJP leaders; death toll up to 33 SEPTEMBER 9, 2013

Where Sangh spins narratives of victimhood, belligerenceSEPTEMBER 11, 2013

Riot victims recount tales of terrorSEPTEMBER 9, 2013

MHA calls for more forces to be deployedSEPTEMBER 9, 2013

Manmohan calls up Akhilesh, conveys concernSEPTEMBER 9, 2013

SC declines to entertain plea on Muzaffarnagar riotSEPTEMBER 9, 2013

Mayawati sees SP-BJP conspiracySEPTEMBER 9, 2013

Centre offers to send more forces to Uttar PradeshSEPTEMBER 9, 2013

SP, BJP behind Muzaffarnagar violence: TiwariSEPTEMBER 9, 2013

Left parties accuse UP government of ‘lax’ attitudeSEPTEMBER 9, 2013

காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்கே டுவிட்டரில் கண்டபடி பொய்களை பரப்பி வருகிறார், என்பது படிப்பவர்களுக்கு நன்றகவே தெரியும். ஆனால், இந்நேரத்தில் மணீஸ் திவாரி ““சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” என்று சொல்கிறார் என்று “தி ஹிந்து” செய்தி போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[3]. பிறகு, இவர் ஏன் திக்விஜய் சிங்கைக் கட்டுப்படுத்துவது இல்லை? பெங்களூரு குண்டுவெடிப்பு பிஜேபிக்கு சாதகமாக இருக்கும் என்று அந்த காங்கிரஸ்-முஸ்லிம்-தலைவர்- முகமது ஷகீல் டுவிட்டரில் போட்டபோதும் கண்டுகொள்ளவில்லை. அப்படியென்றால், காங்கிரஸ் திட்டமிட்டே இப்படி செய்து வருகின்றது என்றாகிறது. ஊடகங்களும் அவ்வாறே இருக்கின்றன.

வேதபிரகாஷ்

© 12-09-2013


சோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது!

செப்ரெம்பர் 4, 2013

சோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க சீக்கியர்கள் சோனியா மீது தொடுத்த வழக்கு: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று அவரது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’  [Sikhs For Justice (SFJ)] என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப் பட்ட இருவர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[1]. இதற்கு முன்னர் கூட பிரகாஷ்சிங் பாதல், கமல்நாத் முதலியோர்களின் மீது வழக்குத் தொடர முயற்சித்து தோல்வி கண்டனர்[2].

அமெரிக்க சீக்கியர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் புகார்கள்: 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார்[3]. சமீபத்தில் சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் முதலியோருக்கு கோர்ட்டுகளில் விடுவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சீக்கியர்கள்  கடுமையாக எதிர்ததனர், ஆர்பாட்டம் செய்தனர்.

ராஜிவ்காந்தி  தூண்டிவிட்ட  கலவரம்  (1984): அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி  (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[4]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[5]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[6]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[7].

29  வருடம் கழித்து நீதிமன்றம் சஜ்ஜன்குமாரை விடிவித்தது[8] (மே.2013): 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

தில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்புஆர்பாட்டம்,போராட்டம் (மே.2013): சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[9] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து பெற்றது[10]. திடீரென்று ராகுல் அந்த நேரத்தில் சரப்ஜித் அந்திமக்கிரியையில் கலந்து கொண்டு நாடகம் ஆடியது வியப்பாக இருந்தது[11].

சோனியா காந்திக்கு சம்மன்: இந்த கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு  குற்றம் சாட்டி உள்ளது[12]. எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் [Alien Tort Claims Act (ATCA) and Torture Victim Protection Act (TVPA)] இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது[13]. வழக்கை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த சம்மன் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சோனியா காந்தி இந்த சம்மனை வாங்கிக் கொள்வாரா? அல்லது வக்கீல் மூலமாக பதில் அளிப்பாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்[14].

© வேதபிரகாஷ்

04-09-2013


[4]  According to the CBI the police were co-conspirators as the officials did not register cases and did not pick up dead bodies from the streets. The CBI referred to a speech senior Congress leader Sajjan Kumar had made in Delhi’s Raj Nagar where he incited the mob and said that not a single Sikh should survive and those sheltering Sikhs should be set ablaze. The CBI also pointed out that police control room records don’t have details of any of the major incidents of violence. In fact the police asked those residing in the Raj Nagar Gurdwara to surrender their weapons and hours later mobs came and attacked them. No damage to houses other than those of Sikhs were reported from the area.

[5] While there have been documented reports of voter-lists and school registration forms being distributed amongst the rampaging hooligans to specifically identify the Sikh families and destroy them, it is also a proven fact that during the same period, at a massive rally in Delhi, while reacting to the killings, Rajiv Gandhi had stated that ‘Once a mighty tree falls, it is only natural that the earth around it shakes‘.

[7] The killing of people in the Delhi Cantonment area during the 1984 anti-Sikh riots was the result of a well executed conspiracy, the Central Bureau of Investigation (CBI) said on Monday as the agency finished its arguments in the 1984 anti-Sikh riots in the Delhi Cantonment area case. The CBI said that people belonging only to a certain community were targeted with the pattern and scale of operation indicating that the action wasn’t a spontaneous reaction but a well organised operation, which had the backing of the police and patronage of the system.

தீவிரவாதம் செக்யூலரிஸ மயமாக்கப் படுகிறதா – பிறகு சட்டங்களை செக்யூலரிஸமாக்க எதிர்ப்பு ஏன்?

ஜூலை 16, 2013

தீவிரவாதம் செக்யூலரிஸ மயமாக்கப் படுகிறதா – பிறகு சட்டங்களை செக்யூலரிஸமாக்க எதிர்ப்பு ஏன்?

வழக்குகள் நடத்தப்படுவது, தேர்தல்கள் வருவது: தீவிரவாத வழக்குகளில் சோனியா அரசின் நிலையற்றத் தன்மையினாலும், போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ முதலிவற்றின் மீது அதிகாரம் செல்லுத்துவதாலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடப்புகளில் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் அத்தகைய வழக்குகள் கிடப்பில் போடப் படுக்கின்றன. அந்நிய வியாபார விருப்பங்களுக்கேற்றபடி ஏதாவது ஒரு முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும், பஞ்சாயத்து, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் வருக்கின்றன என்றால், ஏதோ ஆணயுள்ளது போல அவ்வவழக்குகள் முடக்கப்பட்டு விட்டும். ஆரம்பத்தில் பரபரப்பு ஏற்படுத்தி, பிறகு அமைதியாகி விடும். உதாரணத்திற்கு சமீபத்தைய பெங்களூரு குண்டு வெடிப்பை எடுத்துக் கொள்ளலாம். கர்நாடக தேர்தல் என்பதால், குறிப்பாக பிஜேபி அலுவலகம் அருகில் (மே 2013) குண்டு வெடித்தது. முஸ்லிம் அமைச்சர் உடனே அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்றார். ஆனால், காங்கிரஸ்தான் வென்றது. அதாவது, பீஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குண்டு வெடித்தால், பிஜேபிக்கு எதிரான விளைவு ஏற்படுத்தும். இப்பொழுது (ஜூலை 2013) பீஹாரில், புத்த கயாவில் குண்டுகள் வெடித்துள்ளன. உடனே திக்விஜய சிங் சங்பரிவாருக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்.

இந்திய முஜாஹித்தீன்என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்: காங்கிரஸில் திக்விஜய சிங் உளறுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அர்னவ் கோசுவாமி பேட்டியில் (14-07-2013) இவ்விஷயத்தில் குறிப்பாகக் கேள்விகள் பேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன, இந்திய முஜாஹித்தீன் என்றே சொல்லக் கூடாதா என்று கேட்டபோது, ஆமாம் “இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், என்று பதிலளித்தார். அதாவது குண்டுகள் வெடித்தாலும், இந்திய முஜாஹித்தீன் பொறுப்பேற்றாலும் அதைப் பற்றி விவரிக்கக் கூடாது, தொடர்ந்து பேசக் கூடாது, ஏனென்றல், அப்பொழுது மக்களுக்கு “இந்திய முஜாஹித்தீன்” என்றால் முஸ்லிம்கள் அமைப்பு என்று தெரிந்து விடும், அதனால், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து வலுப்படும், என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். அப்படியென்றால், வேறு பெயரில் முஸ்லிம்கள் நாளைக்கு குண்டுகள் வெடித்தால் என்னவாகும். ஒருவேளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜரங் தள் என்ற பெயர்களில் குண்டு வைத்தால் என்னாகும். ஒருவேளை இவரே அத்தகைய சூழ்ச்சியை சூசகமாக சொல்லிக் கொடுக்கிறாரா.

தீவிரவாதத்தின் நிறம், திசைத் திருப்பல்செக்யூலார் மயமாக்கப்படும் தீவிரவாதம்: தீவிரவாதத்தை நிறமிட்டு பேசியுள்ளதும் சோனியா காங்கிரஸ் அமைச்சர்கள் தாம். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “காவி தீவிரவாதம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தினார். இப்பொழுது ஷிண்டே அதனை உபயோகப் படுத்தினார். திக்விஜய சிங் அடிக்கடி உபயோகப் படுத்தி வருகிறார். இதனால் “காவி தீவிரவாதம்” என்ற சொற்றோடர் உபயோகத்தில் வந்தது. ஆனால், சமதர்ம முறைப்படி “பச்சை தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படவில்லை அல்லது சொல்லவேண்டுமே என்று “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவை எந்த நிறத்துடனும் அடையாளம் காட்டப்படவில்லை. இங்குதான் இந்திய அறிவுஜீவிகளின் போலித்தனம், சித்தாந்திகளின் பாரபட்சம், ஊடகங்களின் நடுநிலையற்றத்தன்மை முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன.

முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதால் டாஸ்க் போர்ஸ்உருவாக்கித் தர ஒப்புதல்: சிறுபான்மையினர் அமைச்சர் என்றிருக்கும் ரஹ்மான் கான்[1] என்பவர் முஸ்லிம்கள் தம்மிடம் வந்து கேட்டுக் கொண்டார்கள் என்று ஒரு உடனடி நடவடிக்கை பிரிவு / படையை (Task force) ஒன்று உருவாக்கித் தர ஒப்புக் கொண்டார்[2]. அதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வழக்குகளை சீக்கிரம் முடித்துத் தர அவ்வாறான அமைப்பை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்மானிக்க மற்றும் தீவிரவாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அத்தகைய அமைப்பை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டி, இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு இருந்தால் நல்லது என்றார். அப்படியென்றால் முஸ்லிம்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றகாதா என்று ஊடகக் காரர்கள் கேட்க, உடனே “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தீவிரவாதத்தில் “முஸ்லிம் தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் இல்லை[3]. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”, என்று “அந்தர் பல்டி” அடித்து[4], “யு-டார்ன்” உடன் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்!ரதாவது வெள்ளிக்கிழமை (12-07-2013) அன்று சொன்னதை ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) மாற்றிக் கொண்டார்[5].

முஸ்லிம்களின் அடிப்படைவாதம் எதனைக் காட்டுகிறது?: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? முன்பு இந்தியதேச சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு மத-அடிப்படையில் இடவொதிக்கீடு அளிக்கப்படும்[6] என்று நோய்டா கூட்டத்தில் (பிப்ரவரி 2012) பேசினார்[7]. தனது மனைவிக்காக தேர்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்தார். அப்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது[8]. தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் பதில் பதில் அளித்துள்ளார்[9]. காங்க்கிரஸ் கட்சியின்ன் தேர்தல் அறிக்கையிலேயே அத்தகைய வாக்குறுதி உள்ளது அதைத்தான் நான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்[10]. இது சர்ச்சையாகியதால் பிறகு வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்[11].

சட்ட அமைச்சரின் மதவாத பேச்சுகளும், கொலை மிரட்டல்களும்: அரவிந்த் கேசரிவால்[12] விஷயத்தில் “பேனாவில் மைக்கு பதிலாக ரத்தம் நிரப்பப்பட வேண்டியிருக்கும்”, என்றெல்லாம் ஆவேசத்துடன் மிரட்டினார்[13]. அதாவது “கொலைசெய்து விடுவேன்” என்று மறைமுகமாக மிரட்டினார்[14].

Khurshid is heard saying: “Mujhe wakilon ka mantri banaa diya, mujhe law minister banaa diya, aur kahaa kalam se kaam karo. Karoonga, kalam se kaam karoonga, lekin lahu se bhi kaam karoonga… Wo jaayein Farrukhabad, woh aayein Farrukhabad, lekin laut kar bhi aayein Farrukhabad se… Wo baat yeh kehte hain ki hum sawaal poochhenge, tum jawaab dena. Hum kehte hain ki tum jawaab suno, aur sawaal poochhna bhool jaao (I have been made the Law Minister and asked to work with the pen. I will work with the pen but also with blood… Let him go to Farrukhabad, but let him also return from Farrukhabad. They say they will ask questions and we should respond. I say that you hear the reply and forget asking questions).” –

ஆம் ஆத்மி கட்சியின் இணைதளத்தில் இதை வெளிப்படையாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது[15].

வேதபிரகாஷ்

© 16-07-2013


[1] Four criminal cases are pending against Rahman Khan himself and major being the charges of embezzlement of the Amanath Cooperative Bank’s funds of Rs.156.77 crore. and also accused of causing loss of property wort Rs 2 lakh crore to Wakf board affecting several thousands of people belonging to minority community. Knowing his past deeds, how can anyone believe him and expect him to do any justice to anyone including Muslims youths who are jailed on terror charges.

http://www.deccanchronicle.com/130712/news-politics/article/rahman-khan-kicks-row

[4] Minority Affairs Minister Rahman Khan on Sunday clarified his demand for setting up a task force to oversee terror cases involving Muslims, which placed him under fire from the Opposition. Khan on Friday (12-07-2013) had said that a task force will ensure justice for “innocent Muslim youth” languishing in jails in terror cases. The minister has now backtracked saying the task force will prevent the rise of radicalisation and terrorism amongst minorities. He also said that the government will soon launch a new helpline for the minorities for lodging complaints against human rights violations.

http://ibnlive.in.com/news/rahman-khan-does-a-uturn-on-setting-up-task-force-for-muslims/406472-37-64.html

[8] On Sunday, while campaigning for his wife, Mr Khurshid said that if it is elected, the Congress will set aside a nine per cent sub-quota for UP government jobs for backward Muslims; this would be carved out of existing reservation for Other Backward Castes (OBCs) in UP. The minister said more than eight Muslim castes would benefit from this move. The UP election office has taken cognisance of a newspaper report to serve notice on Louise Khurshid. She has been asked to explain within three days the statements made by her husband. The notice to Mr Khurshid would be served by the Election Commission, sources said, based on a complaint made by the BJP this morning.

http://www.ndtv.com/article/assembly-polls/salman-khurshid-in-trouble-over-muslim-quota-speech-165484

[10] Union Law Minister Salman Khurshid has criticised the Election Commission (EC) for issuing a notice to him for his Muslim sub-quota promise and claimed he did not violate the model code of conduct. Khurshid defended his announcement of granting sub-quota to Muslims if Congress came to power in Uttar Pradesh and insisted that it is not a poll violation of any sorts. Khurshid had promised 9 per cent sub-quota for backward Muslims within 27 per cent OBC quota in Uttar Pradesh if the party wins the Assembly elections.

http://ibnlive.in.com/news/muslim-quota-is-in-congress-manifesto-says-salman-khurshid/219917-37-64.html

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்!

மே 9, 2013

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

ஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].

ஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].

ஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].

ஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].

பெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].

இந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].

பிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா?

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்?

“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.

ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.

© வேதபிரகாஷ்

09-05-2013