Archive for the ‘பாஜக’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் கூட்டம் நடக்கிறது: ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

  1. பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, Sarkaryavah Shri Dattatreya Hosabale
  2. கிருஷ்ண கோபால், Sah sarkaryavah Krishna Gopal
  3. மன்மொஹன் வைத்யா, Sah sarkaryavah Manmohan Vaidya 
  4. சி.ஆர்.முகுந்த் Sah sarkaryavah CR Mukund
  5. அருண்குமார், Sah sarkaryavah Arun Kumar
  6. ராம்தத் Sah sarkaryavah Ramdutt 

முதலியோர் கலந்து கொள்கிறார்கள்[1]. தவிர நாடு முழுவதும் உள்ள பிராந்த பிரசாரக், சஹ பிராந்த பிரசாரக், க்ஷேத்ர பிரசாரக், அகிலபாரதிய பிரமுக், சஹபிரமுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்[2].

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் விவரம்: JSS பப்ளிக் பள்ளி புகழ்பெற்ற J.S.S இன் ஒரு அங்கமாகும். மைசூர் மகாவித்யாபீடத்தில் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தரமான கல்வி மற்றும் சமூக மறுசீரமைப்புக்கு ஒத்ததாக இருக்கும் நாட்டின் மிகப்பெரிய தனியார் முயற்சியாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டம், சுத்தூரில் உள்ள ஜகத்குரு ஸ்ரீவீரசிம்ஹாசன மடத்தின் மகா முனிவர்களால் அனுசரணை செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் இந்த மஹாவித்யாபீடத்திற்கு நமது வழிகாட்டும் சக்தியும் வழிகாட்டியுமான ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா ஸ்வாமிகளாவரு தலைமை தாங்குகிறார். சரித்திரத்தின் படி, காஞ்சி ராஜ ராஜசோழனுக்கும் தல்காட்டின் ராஜா மல்லனுக்கும் இடையேயான பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவிய ஆதிஜகத்குரு, தனது ஆன்மீக போதனைகளாலும், சரியான நேரத்தில் தலையீடு செய்ததாலும், 10 ஆம் நூற்றாண்டில் சுத்தூர் மகாவித்யாபீடத்தை நிறுவினார். சுத்தூரில் வீரசிம்ஹாசன மடத்தை நிறுவ வேண்டும். அப்போதிருந்து, பண்டைய பீடமானது மத மற்றும் ஆன்மீக சிந்தனைகள், கலாச்சாரம் மற்றும் இலக்கியம், குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அம்மடத்தின் பள்ளி தான், இந்த “JSS பப்ளிக் பள்ளி.”

ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்[3].  நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது[4].  ஜூலை 16ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது[5].  இது தொடர்பாக பேசிய ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது[6]. இதில் அடுத்த 4 – 5 மாதங்களுக்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும். அமைப்பின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டங்கள், அதில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விகிதம் குறித்து ஆராயப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஸ்வயம் சேவகர்கள் வந்துள்ளார்கள்.

கூட்டத்திற்கு இடையூறு செய்ய திட்டமா?: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் மாநாடு 13-07-2023 அன்று தொடங்கியது. ஏற்கெனவே அறிவித்துள்ளதால் 500 போலீஸார் பாதுகாப்பு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது. இம்மாநாட்டில் இன்று அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு எதிராகவும், மோகன் பாகவத்துக்கு எதிராகவும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் ஊட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்[7]. அதன்படி, இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தனர்[8]. இத்தகவல் கோவை மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இத்தகவல் சூலூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, இருவரையும் வழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சூலூர் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் பஸ்ஸில் இருப்பதைக் கண்டு பெண் போலீஸார் உதவியுடன் அவர்களை கீழே இறக்கினர்.

நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்தனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத்தில் ஈடுபட முயன்ற மதுரை நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தனர்[9]. அப்போது, பெண் போலீஸை தகாத வார்த்தைகளால் பேசிய கன்னத்தில் அறைந்த காரணத்தால் நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்[10]. இதனையடுத்து  கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்[11]. பெண் காவலர் அளித்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[12]. இருவரும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராவும், மோடிக்கு எதிராகவும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி, ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வர்ணித்து, விவரித்து வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] Rashtriya Swayamsevak Sangh, RSS Akhil Bharatiya Prant Pracharak Meet, 2023, at Ooty, on July 13-15, ., 11-Jul-2023, press statement

[2] https://www.rss.org/Encyc/2023/7/11/RSS-Akhil-Bharatiya-Prant-Pracharak-Meet-2023-at-Ooty-on-July-13-15.html

[3] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் வருடாந்திர கூட்டம்: ஊட்டியில் நாளை தொடங்குகிறது , தினத்தந்தி ஜூலை 12, 12:23 am.

[4] https://www.dailythanthi.com/News/India/2611-like-attack-if-threat-call-over-pak-woman-who-came-to-india-for-lover-1007682?infinitescroll=1

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஊட்டியில் துவங்கிய 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு! மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு! நோக்கம் இதுதான், By Nantha Kumar R Published: Friday, July 14, 2023, 9:43 [IST]

[6] https://tamil.oneindia.com/news/coimbatore/3-day-rss-conclave-begins-in-ooty-mohan-bhagwat-expected-to-give-advices-tomorrow-521049.html?story=1

[7] குமுதம், கோயம்புத்தூர்: பெண் போலீசை தாக்கியதாக நந்தினி, நிரஞ்சனா கைதுஎன்ன நடந்தது?, ஜூலை 15, 2023.

[8] https://www.kumudam.com/news/tamilnadu/nandini-was-arrested-in-coimbatore

[9] மீடியான்.காம், ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக போராட முயற்சிதடுத்த போலீஸுக்கு பளார்மதுரை நந்தினி கைது!, Karthikeyan Mediyaan News, 04.00 மாலை, 14-07-2023.

[10] https://mediyaan.com/covai-police-arrested-social-activists-madurai-nandhini-niranjana/

[11] இ.டிவி.பாரத், Coimbatore: பெண் காவலரை தாக்கியதாக சமூக ஆர்வலர் நந்தினி உட்பட இருவர் கைது!, Published: 14-07-2023. 12.00 hours

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/two-social-activists-arrested-for-assaulting-female-police-officer-in-coimbatore/tamil-nadu20230714125845520520247

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரைசொன்னது!

ஜூன் 25, 2023

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரை சொன்னது!

பீஹாரில் 16 கட்சிகளின் கூட்டம்: அடுத்த ஆண்டு 2024ல் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் 23-06-2023 அன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் நடைபெற்றது. இதில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (53 வயது), தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

23-06-2023 அன்று லாலு பிரசாத் யாதவ் ராகுலை திருமணம் செய்து கொள் என்றது: லாலு இந்தியில் பேசியதை தமிழ் ஊடகங்கள் வரிந்து கொண்டு செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தி தெரியாது போடா என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியும், பிஹாரிகளை நக்கல் அடித்தும் வரும் தமிழ் ஊடகங்களுக்கு இதில் என்ன அக்கரை என்று தெரியவில்லை. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் [75 வயது] கூறியதாவது[1], “ராகுல் காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே கூறியிருக்கிறேன்[2]. நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்[3]. ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை[4]. இன்னும் காலம் கடக்கவில்லை. தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். ராகுலின் திருமணம் குறித்து அவரது தாயார் சோனியா காந்தி தன்னிடம் பேசியுள்ளார்[5]. நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும்[6], பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது[7]. அப்படி கல்யாணம் செய்து கொள்லும் பொழுது, நாங்கள் எல்லோரும் பாராத் / ஊர்வலத்தில் கலந்து கொள்வோம்,” என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இப்போது நீங்கள் சொன்னது நடக்கும் என்றார்[8].  கடந்த ஜனவரி மாதம், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது அளித்த பேட்டியில், சரியான பெண் கிடைக்கும்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது[9]..  டிசம்பரில், ராகுல் காந்தி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தாயார் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அவரது பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் பண்புகளை தனது துணை கொண்டிருக்க விரும்புகிறேன் என்று கூறினார்[10].

19-06-2023 அன்று ராகுலின் பிற்ந்த நாள்: 19-06-1970 அன்று பிறந்த ராகுலுக்கு 53 வயதாகிறது. 23-06-2023 அன்று இக்கூட்டம் என்றால், சரியாக சென்ற 19-06-2023 ராகுலின் பிறந்த நாள் ஆகிறது. எனவே ஒருவேளை, 75 வயதாகும் லாலு அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்லியிருக்கலாம்[11]. ஆகவே, தமாஷுக்காக சொல்லவில்லை[12]. லாலு முன்னர் ராகுலின் தந்தையால் தான் மாட்டுத் தீவின ஊழலில் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குச் சென்றார். இப்பொழுது, அதே குடும்ப வாரிசுடன் கூட்டு வைத்துக் கொள்கிறார், என்றும் ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மேலும், ராகுலின் பிறந்த நாளையே காங்கிரஸ்காரர்கள் மறந்து விடார்களா அல்லது கொண்டாடக் கூடாது என்ற மேலிடத்து உத்தரவா என்று தெரியவில்லை. 53-வயது என்றால், ராகுலின் இளமைத் தனம் போய்விடும் என்று நினைத்தார்கள் போலும். இருப்பினும், சமீபத்தில் தாடி வைத்துக் கொண்டபோது, நரைத்த முடி தெரியத்தான் செய்தது.

பிஜேபியின் திருமணஒப்புமை கிண்டல்: லாலு ராகுலுக்கு அற்வுரைக் கொடுத்தாரா, கிண்டல் அடித்தாரா என்ற நிலையில், பிஜேபிகாரர்களும் விடவில்லை. நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார்[13]. ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்) என்று தெரியவில்லை[14]. பெண்ணும் யார் என்று புரியவில்லை[15]. ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள் என பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து கிண்டலடித்துள்ளார்[16]. ஒருவேளை ராகுல் தான் பிரதம மந்திரி வேட்பாளர் என்பதனை மறைமுகமாகக் கூறினார் போலும். இந்தியில் பேசியதால், இந்தி தெரியாத கட்சித் தலைவர்கள் தமக்கு இந்தி தெரியாது என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்யும்.

2013ல் கொடுத்த விளக்கம்பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2013ல் ராகுல் விவாகம் பற்றி நடந்த விவாதம்: கடந்த  2013 மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும் ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[17]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[18]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[19]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[20]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

© வேதபிரகாஷ்

25-06-2023


[1] தினமணி, ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்: லாலு பிரசாத், By DIN  |   Published On : 23rd June 2023 09:56 PM  |   Last Updated : 23rd June 2023 09:56 PM.

[2] https://www.dinamani.com/india/2023/jun/23/lalu-prasad-yadav-asks-rahul-gandhi-to-get-married-4026423.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா,  ராகுல் நாங்க சொல்றத கேட்கணும்.. செல்லமாக மிரட்டிய லாலு பிரசாத்.. வெடித்து சிரித்த அரசியல் தலைவர்கள்!,  By Vignesh Selvaraj Published: Friday, June 23, 2023, 18:52 [IST],

[4] https://tamil.oneindia.com/news/india/lalu-prasad-asks-rahul-gandhi-to-get-married-made-fun-at-press-meet-after-opposition-meeting-518035.html

[5] நக்கீரன், திருமணம் நடக்கும்என்ற ராகுல்காந்தி; பாட்னாவில் நடந்த சுவாரசியம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 24/06/2023 (08:26) | Edited on 24/06/2023 (08:50).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/you-have-said-it-it-will-happen-rahul-gandhi-interesting-happenings-patna

[7] சமயம், தாடியை எடுத்துட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பாராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் அட்வைஸ்!, Authored by Bahanya Ramamoorthy | Samayam Tamil |,

[8] https://tamil.samayam.com/latest-news/india-news/lalu-prasad-yadhav-advise-to-ragul-gandhi-to-get-married-soon-in-patna-meeting/articleshow/101232555.cms

[9] காமதேனு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்திய லாலு பிரசாத் யாதவ்ராகுல் கூறிய பதில் என்ன?, Updated on : 23 Jun, 2023, 9:10 pm

[10] https://kamadenu.hindutamil.in/politics/rahul-gandhi-was-asked-by-lalu-yadav-to-get-married-his-response

[11] இந்தியன்.எக்ஸ்பிரஸ், பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலகலப்பு: ராகுல் திருமணத்தை வலியுறுத்திய லாலு! , Written by WebDesk, tamil news, June 23, 2023 20:15 IST

[12] https://tamil.indianexpress.com/india/still-not-too-late-to-get-married-lalu-prasad-yadav-makes-a-wisecrac,k-at-rahul-gandhi-at-patna-meet-704805/

[13] மாலைமலர், திருமண ஊர்வல அலங்கரிப்பில் மாப்பிள்ளை யார்?- பா.ஜனதா கிண்டல், Byமாலை மலர்23 ஜூன் 2023 10:10 AM (Updated: 23 ஜூன் 2023 10:11 AM).

[14] https://www.maalaimalar.com/shots/bjp-mp-ravi-shankar-prasad-takes-jibe-on-the-opposition-meeting-who-is-the-groom-pm-contender-626240

[15] புதியதலைமுறை, அனைவரும் மாப்பிள்ளைகள்…” எதிர்க்கட்சிக் கூட்டத்தை விமர்சித்த பாஜக!, Prakash J, Published on : 24 Jun, 2023, 8:50 pm.

https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[16] https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[17]  Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[18]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[19] http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[20] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் – இதன் அர்த்தம் என்ன?

ஜூன் 4, 2023

எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம்ஆர்.எஸ்.எஸ். தலைவர்இதன் அர்த்தம் என்ன?

அறிவுரை யாரை நோக்கி சொல்லப் பட்டுள்ளது: ஜூன் 2023 முதல் வாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளதில் பல விசயங்கள் உள்-பொதிந்துள்ளன. ஒவ்வொரு வரியும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்திய ஒற்றுமை என்ற நிலையில், பற்பல இப்பொழுதைய பிரச்சினைகளுக்கு பதில் கொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்களுக்கு அதிகமாகவே அறிவுரை கூறியுள்ளார். கர்நாடத் தேர்தல் தோல்வி மற்ற நிகழ்வுகளை மனத்தில் வைத்துக் கொண்டு பேசியுள்ளதை கவனிக்கலாம். முஸ்லிம் பிரச்சினை தீவிரமாகும் நிலையில் அவர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தும். ஏனெனில், எல்லையில் உள்ள எதிரிகளை எதிர்க்க, எல்லோரும் தான் ஒன்று படவேண்டியுள்ளது. பாகிஸ்தானை முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள், சீனர்கள் கம்யூனிஸ்டுகளுடன் மோத மாட்டார்கள் என்றிருக்க முடியாது.

இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: 01-06-2023 அன்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சங்க ஷிக்ஷா வர்க்’  நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.‛‛இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது எனவும், அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்” என ஆர் எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: “வேறுபாடுகள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற புரிதலின் மூலம் மட்டுமே நாட்டில் உள்ள சமூகங்களின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு ஏற்படும்[1]. வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன[2]. அவற்றுடன் நாம் அப்போது சண்டையிட்டோம். எல்லையில் அமர்ந்திருக்கும் எதிரிகளிடம் நமது பலத்தை காட்டாமல், நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்[3]. நாமெல்லாம் ஒரே நாடு என்பதை மறந்து விடுகிறோம். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்[4]. இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

இந்தியர்கள் அந்நியர்களின் கலப்பினை மறந்து ஒன்றுபட வேண்டும்: [மோகன் பகவத் பேசியதை இடது பக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அதன் விளக்கம் வலது பக்கம் கொடுக்க்ப் படுகிறது]

வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன, ஆனால் அவர்கள் இப்போது இல்லை. இப்போது அனைவரும் இங்கு உள்ளவர்கள் தான். எனவே, நாம் வெளியில் இருந்து வந்தவர்களுடன் உள்ள தொடர்பை மறந்து வாழ வேண்டும். இங்குள்ள அனைவரும், நமது அங்கத்தினர். அவர்களது சிந்தனையில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அவர்களிடம் பேச வேண்டும்.இடைகாலத்தில் இந்தியாவுக்கு வெளியிலிருந்து பல இனத்தவர் இங்கு வந்து, கலந்து, அவர்கள் மூலம் சந்ததியர் உண்டாகியுள்ளனர். அவர்கள் தாங்கள் இந்தியர்களை விட மாறுபட்டவர்கள் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் தான் பிரிவினைவாதமாகி, இந்தியர்களைப் பிளக்கிறது, ஒருவரை ஒருவர் எதிர்க்கவும் தூண்டுகிறது.

இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது. அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும். நமது தனித்துவ அடையாளங்களே, இந்தியாவை பாதுகாப்பதாக உள்ளது. வெளியில் இருந்து அல்ல. நமது நாட்டுடனான நமது உறவு பரிவர்த்தனை சார்நதது அல்ல. நாம் வேறுபாடுகளை கொண்டாடுகிறோம்[5]. ஒன்றாக வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிப்போம். ஒன்றாக வாழ்வதற்கும், நல்லிணக்கத்திற்கும் பேச்சுவார்த்தை முக்கியம். ஒவ்வொருவரும் சமுதாயத்திற்காக விட்டு செல்ல வேண்டும்[6].

புறத்தோற்றங்களில் வித்தியாசப் படுத்திக் காட்டிக் கொள்பவர்கள் வெளிநாட்டவர்கள் இல்லை, இந்தியர்களே: நல்லிணக்கத்திற்கு ஒரு தலைபட்சமான முயற்சிகள் பலிக்காது. ஒவ்வொருவரும் தியாகங்கள் செய்ய வேண்டும். அது பழக்கவழக்கம் மற்றும் மதிப்புகள் மூலம் மட்டுமே வரும். இது தான் நமது தாய்நாடு.

நமது வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். சில வெளியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில், நமது முன்னோர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். சில படையெடுப்பாளர்கள் வந்து சென்றுள்ளனர். பலர் தங்கி உள்ளனர். தாய்நாட்டுடன் இணைந்தால் நமது அடையாளம் அழிந்துவிடும் என சிலர் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. சிலர் தாங்கள் வித்தியாசமாக இருப்பதாகவும், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என நினைத்ததால், 1947 ல் நாட்டில் பிரிவினை ஏற்பட்டது.பாரசீகம், முகமதியம் / இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல அந்நிய மதத்தவர் இந்தியாவில் நுழைந்து, தமது மதத்தினைப் பரப்பியுள்ளனர். அவர்களது சந்ததியினரும் வளர்ந்துள்ளர், அத்தகையோர் இக்காலத்தில் தமது மதம், மத அடையாளங்கள் முதலியவற்றை இந்தியாவிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ள அதிகமாக முயன்று வருகின்றனர். ஆனால், புறத்தோற்றத்தில் அவ்வாறு காட்டிக் கொண்டாலும், அவர்கள் மற்ற காரணிகளால் இந்தியரே தவிர, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இல்லை.

இந்திய சமூகத்தில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு இடமில்லை. ஹிந்து சமூகம் அதன் சொந்த மதிப்புகள் மற்றும் லட்சியங்களை மறந்துவிட்டது. இதனால் தான் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு பலியாகிவிட்டது.

ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது:நமது முன்னோர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களின் கடனையும் அடைப்போம். இந்தியா ஜனநாயக நாடு. ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகள் மத்தியில் போட்டி இருக்கலாம்.

ஆனால், அரசியலுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் அது, சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது என்ற விவேகம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவில் பிளவுகளை விரும்பும் சக்திகள் குறித்து மக்கள் அறிந்து வைத்துள்ளனர்[7].இன்றைக்கு அரசியலாலேயே இந்துக்களே பிளவு பட்டுள்ளார்கள். அதே போல இந்துத்துவவாதிகளும் தனித்தனியாக இயங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்கள் கூட தனித்தனியாக கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவையெல்லாம் அவர்களது பேச்சு, நடவடிக்கை முதலியவற்றிலிருந்தே புரிந்து-தெரிந்து கொள்ளலாம்.

நமது பழங்கால பெருமைகளை புத்துயிர் பெற செய்வது முக்கியம். இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை மையமாக கொண்டு, நாட்டில் தேசிய உணர்வு ஏற்பட்டு உள்ளது[8]. கோவிட் போன்ற சவால்களை எதிர்கொள்வதையும், சமாளிப்பபையும் உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது[9]. ஜி20 அமைப்பின் தலைமைப்பதவி நம்மை த் தேடி வந்துள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்[10].

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தினமலர், இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது: மோகன் பகவத் பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஜூன் 02,2023 13:33;

[2] https://m.dinamalar.com/detail.php?id=3337052

[3] காமதேனு, எல்லையில் எதிரிகளிடம் பலத்தை காட்டாமல், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கிறோம்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி!, Updated on : 2 Jun, 2023, 1:40 pm

[4] https://kamadenu.hindutamil.in/politics/outsiders-have-gone-now-everyone-is-insider-rss-chief-mohan-bhagwat

[5] Indian Express, ‘Where is Islam safe other than India?: RSS chief Mohan Bhagwat in Nagpur, By: Express News Service, First published on: 02-06-2023 at 14:06 IST;; Updated: June 4, 2023 15:42 IST.

[6] https://indianexpress.com/article/cities/mumbai/where-is-islam-safe-other-than-india-rss-chief-mohan-bhagwat-in-nagpur-8642270/

[7] தினத்தந்தி, எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம்ஆர்.எஸ்.எஸ். தலைவர், தினத்தந்தி Jun 2, 8:42 am

[8] https://www.dailythanthi.com/News/India/fighting-among-ourselves-instead-of-showing-strength-to-enemies-at-border-rss-chief-mohan-bhagwat-977491

[9] Hindustan Times, ‘Islam is safe in India…forget foreign connections’: RSS chief Mohan Bhagwat, By HT News Desk, Jun 02, 2023 10:52 AM IST

[10] https://www.hindustantimes.com/india-news/islam-is-safe-in-india-forget-foreign-connections-rss-chief-mohan-bhagwat-101685676872813.html

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

செப்ரெம்பர் 11, 2018

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

PondyLitFest-participants-program

இந்துத்துவ எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் இரட்டை வேடங்கள்[1]: கவிதையின் பெயரில் இப்படியெல்லாம் இருக்கிறது, இலக்கிய விழா விற்பன்னர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

  1. காளமேகம், ஆறுமுக நாவலர் இருந்திருந்தால், இவன் / இது எல்லாம் இப்படி தமிழில் உளறி, நாறி, கும்பியைக் கொட்டியிருக்க முடியாது.
  2. இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்துத்துவ கவிக்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு, அவர்களை என்னென்பது. அடையாளம் கண்டு கொண்டால், அவர்களது பரஸ்பர விருப்பங்கள் தெரியவரும்.
  3. அதுகள் கொள்கைக்காக எப்பொழுதும் பாடுபடுகின்றன, ஆனால், புதுக்கவிக்கள் என்.டி.ஏ இல்லாதபோது இருந்திருக்காது, இருக்காது!
  4. பொதுவுடமை, சமத்துவம், சகோதரத்துவ சாராயத்தை அதுகளும்-இதுகளும் தாராளமாக குடித்து, ஆட்டம் போட்டுள்ளன-போடுகின்றன.
  5. புத்தகச் சந்தையில், அச்சு திருட்டில் கைக்கோர்த்து வியாபாரம் செய்யும், இருதலைகளுக்கு, இந்துத்துவம் தேவையில்லை[2].
  6. இடதுசாரி கூடுதல்கள் 70 சண்டுகளாக, தொடர்ந்து நடக்கும் வேளையில், வலதுசாரி குறிஞ்சி மலர்கள் பூக்காமலே இருந்திருக்கின்றனவே?
  7. தஞ்சை மண்ணெடுக்காமல், தாமிரவருணி நீரூற்றாமல், செய்யாத பொம்மைகள், இப்படி வலது-இடது அல்லது அது-இது-எது என்றாக இருக்குமா?
  8. புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளன என்று இந்துத்துவ செகுவேராக்களாக இதுகள் மாறிய-மாறுகின்ற மர்மம் என்னவோ?
  9. இந்துத்துவாவில் சிந்து பாடுவோம் அந்தத்துவாவில் அந்தர் பல்டி அடிப்போம் என்ற சித்த-பித்த-கவியாட்டங்கள் இப்படித்தான் இருக்குமா?
  10. அந்தத்துவாவை அதுகள் பேஸ்புக், டுவிட்டர்களிலிருந்து, புத்தக வெளியீடு, உள்நாட்டு-வெளிநாட்டு பார்ட்டிகள் வரை அறிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் தாசர்கள் என்றால் இப்பொழுதெல்லாம், தமிழச்சி, மனுஷன், மனுஷி, கோணங்கி, குஞ்சு என்றெல்லாம், வழக்கமாக இருப்பதோடு, இப்பொழுது மிருக வகைகளும் சேர்ந்துள்ளன.

PondyLitFest-participants-program-2

இன்றைக்கு கவி எழுதுவதற்கு இலக்கணம் இருக்கிறதா, தேவையா?: இன்றைக்கு எவனும் கவிதை எழுதலாம், எந்த இலக்கணமும் இல்லை, வெங்காயமும் இல்லை, பணம், பரிந்துரை, ஆட்கள் இருந்தால் போதும்[3].

  1. ஒரு வரி எழுதி, அதனை வெட்டி வார்த்தைகளை நான்கு வரிகளில், ஆச்சரியகுறி, ஒற்றைப்புள்ளி, முதலியவற்றைப் போட்டால் புதுகவிதை என்கிறார்கள்.
  2. கடி ஜோக் போன்று, ஒப்புமைகளுடன் இரண்டு வரிகள் எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது.
  3. அரசை, அதிகாரத்தை, ஆளும் நபர்களை, தலைவகளை, சித்தாந்தங்களை எதிர்த்து எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது[4].
  4. இந்துமதம், இந்துக்கள், அவர்களது நம்பிக்கைகள் முதலியவற்றை கொச்சைப்படுத்தினால் செக்யூலரிஸ கவிஞனாகி விடுகிறான்[5].
  5. காஷ்மீர் தேசத்துரோக பயங்கரவாதிகளை, பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு எழுதினால், அனைத்துலக கவிஞர் ஆகி விடுகிறான். உதாரணத்திற்கு, ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்றது நினைவில் இருக்க வேண்டும். ப.அறிவு மதி என்பவன், சொன்னது – “1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!

இங்கும் இந்துத்துவ புலவர்க:ள், கவிஞர்கள் இல்லை போலும். ஆதரவாக, கவிதை மழை பொழிந்து, மேடைகளில் வலம் வருவதில்லை. சாகித்திய அகடெமி விருது போன்றவை வேண்டும் என்றால், பிஜேபி அமைச்சர், எம்.பி முதலியோரை தாஜா பிடித்து வாங்கிக் கொள்வதுடன் சரி.

PondyLitFest-participants-program-3

மாதவிடாய் மூன்று நாட்களில் உங்கள் பெண்தெய்வங்கள் எங்கு போயிருந்தன?: இப்படி ஒருவன், கார்ட்டூன் போடுகிறான். பெண்களின் மாதவிடாய், இந்து பெண்கடவுள் முதலியவற்றை தூஷித்தால், பெரிய புரட்சி கவிஞன் ஆகிவிடுகிறான். இவற்றையெல்லாம் சேர்த்து செய்தால், சாகித்திய அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கப் படுகிறான். அதற்கும், இந்துத்துவவாதிகள், அரசியல்வாதிகள், துணைபோகிறார்கள். இரண்டு அரைவேக்காடு இந்துத்துவ ஆட்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமானால், அதற்கு சமரசம் செய்து கொண்டு எட்டு இந்துவிரோதிகளுக்கு பரிசு கொடுக்கப் படுகிறது[6]. இவ்விதத்தில் தான், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விற்ப்பனர்கள், விமர்சகர்கள் உண்டாக்கப் படுகின்றனர். ஆனால், திராணியற்ற இந்த்துவவாதி, சித்தாந்த பற்றோடு, அவனுடன் மோதுவதில்லை, பதிலுக்கு கார்ட்டூன் போட்டு, தனது எண்ணவுரிமை, சிந்தனா வெளிப்பாட்டு உரிமை முதலியவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது, இந்துத்துவ கார்ட்டூனிஸ்ட் என்று எவனும் இல்லை போலிருக்கிறது. பேஸ்புக்கில், அவரவர் மேடைகளில், கூடுதல்களில் மட்டும் வீராப்புக் காட்டிக் கொன்டிருப்பர். சரி, ராஷ்ட்ரீய்ய சேவிகா சமிதி போன்ற பெண்கள் அமைப்பு இருந்தாலும், அவர்களில் பெண்ணுருமை பேசும் அளவுக்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன், தமிழ் டிவி செனல்களில் வந்து செல்கிறார். மற்ற படி, பெண்கள் உரிமைகள் போன்ற விசயங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை[7].

PondyLitFest-participants-program-4

முடிவுரைஇலக்கிய விழா ஏற்பாடு செய்தவர்களின் கவனத்திற்கு: இதைப் பற்றி கிடைக்கும் அனைத்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் படித்து, கேட்டு, கீழ்கண்ட விசயங்கள் கவனத்திற்கு வைக்கப் படுகின்றன:

  1. பாண்டி இலக்கிய விழாவில் இந்துத்துவவாதிகள்377 பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களின் சார்பினை தீர்ப்பிற்கு முன்னரே வெளியிட்ட போக்கைக் காட்டுகிறது.
  2. சரித்திரத்தை ஏன் மறுபடியும் எழுத வேண்டும் பற்றி பேசியவர்கள்,விசயத்தை நேரிடையாக சொல்லாமல், சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.
  3. ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா போன்றோர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கிறோ, அது சரியில்லை என்றால், அந்த மேடையில் எதிர்த்திருக்க வேண்டும்.
  4. பலமுறை எடுத்துக் காட்டியபடி IHC, SIHC, TNHC முதலிய மாநாட்டுகளுக்கு வராமல், அவர்களுடன் சேர்ந்து விசயத்தைப் புரிந்து கொள்ளாமல், தனியாக உட்கார்ந்து அவர்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
  5. சரித்திரம், வரலாற்றுவரைவியல், வரலாற்றுவரைவியல் சித்தாந்தம், கோட்பாடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் முதலியவற்றை அறியாமல் பேசிகொண்டே இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
  6. 1987ல் நாங்கள் பேசியதைத் தான், இவர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களோ, திறமை, கடின உழைப்பினால் எங்கோ சென்று விட்டனர். அப்பொழுது ஶ்ரீராம் சாத்தே என்பவர் வழிநடத்தி வந்தார்.
  7. பெண்களை எவ்வாறு அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று பேசியவர் பரவாயில்லை ஆனால், அவர்களுடன் [எதிர்சித்தாந்தவாதிகளுடன்] விவாதிக்க வேண்டும்.
  8. சுகி.சிவத்தை விமர்சித்தால் போறாது, அத்தகைய சிறந்த பேச்சாளரை உருவாக்க வேண்டும், அது போலத்தான் ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா முதலியோர் போல உருவாக்க வேண்டும்.
  9. நான்கு பேர் சேர்ந்து கொண்டு, 50 பேர் முன்னால் பேசி, கைதட்டி, பெருமை பேசிக் கொண்டால், பொதுமக்களிடம் விசயம் சென்று சேராது.
  10. அரைகுறை, அரைவேக்காட்டுத் தனமாக, ஆத்திரத்துடன் செய்வதால் தான் “காவிமயமாக்கம்” போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது.

© வேதபிரகாஷ்

09-09-2018

PondyLitFest-dates.folder

[1] இத்தகைய இந்துத்துவவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில், நல்ல எண்ணத்தில், சுயபரிசீலினை செய்து கொள்ள, கவனமாக பிரச்சினையை அலசி பஹிவு செய்யப்பட்டுள்ளது.

[2] அங்கெல்லாம் தமது இந்துத்துவத்தை மறைத்துக் கொள்வதோடு, வலதுசாரித்துவத்தையும் நீர்த்து உறவாடுகின்ரனர், வியாபாரம் செய்கின்றனர் என்பதனை கவனிக்கலாம்.

[3] விளையாட்டு, சினிமா போன்றவற்றில் உயர்மட்ட ஊழலைப் போல, இதில் இருக்கும் ஊழலை யாரும் கண்டுன்கொள்வ்ச்தில்லை ஏனெனில், பரஸ்பர பலன்கள், தங்களுடைய யோக்கிய அடையாளங்கள் முதலியவற்றை கெடுத்துக் கொள்ள பலன் பெற்றவர்கள் மறைத்து வருகின்றனர்.

[4] இப்பொழுது மோடி ஆதரவு, எதிர்ப்பு என்ற ரீதியில் கண்டு கொள்ளலாம், 2014ற்கு முன்பாக ஒன்றாக இருந்தனர். பிஜேபியை எதிர்த்தவர்கள், இப்பொழுது பிஜேபியில் இருப்பது போல.

[5] எல்லா இந்து-விரோதிகளும், இந்த வழிமுறையினைத் தான் பின்பற்றி வருகின்றனர். சுலபமாக பிரபலம் அடைகின்றனர். பரிச்களையும் பெறுகின்றனர்.

[6] ஆளும் கட்சி, கூட்டணி கடிகள், எதிர் கட்சிகள் என்று எல்லோருக்கும் இத்தகைய பரிசுகள், விருதுகள், சலுகைகள், நியமனங்கள் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன என்பது அறிந்த விசயமே.

[7] இத்தனை பெரிய இயக்கம், எல்லா அதிகாரங்கள், வசதிகள் கொண்டிருந்தாலும், பெண் சித்தாந்த அறிவுஜீவிகளை உருவாக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.

தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்! (6)

ஜூன் 23, 2017

தாமஸ் கட்டுக்கதைதிருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்! (6)

deivanayagam-devakala-aravindan-neelakandan-rajiv-malhothra

மு. தெய்வநாயகம் யார்?: வி.ஜி.சந்தோசம் அவரது குடும்பத்தின் எவாஞ்செலிஸ பின்னணி, ஜான் சாமுவேலின் முருகன்–ஏசு மாற்றம், ஆதி-கிருத்துவ மாநாடுகள், அவற்றில், இருவரது பங்கு முதலியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி மு. தெய்வநாயகம் என்பவரைப் பற்றி பார்ப்போம். பொதுவாக இந்துத்துவவாதிகள், ஏன், சாதாரணமான மக்களுக்குக் கூட, இவர் யார் என்று தெரியாது. இவர் தான், “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” என்ற புரட்டு ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளியிட்டவர். அதற்கு திரு. அருணைவடிவேலு முதலியார் மூலம் அக்டோபர் 24, 1991 அன்று மறுப்பு நூல் வெளியானதற்கு, கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்[1]. பல மடங்களுக்கு கடிதங்கள் எழுதி, அதனை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டார். அப்பொழுது தான், அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. காஞ்சிபுரத்தில் தத்துவ மையத்திற்கு பலமுறை சென்று, மறுப்பு நூல் தயாரானதும், அதனை சென்னையில் பலரிடத்தில் காட்டி, அதனை பதிப்பிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். பிறகு, அது மயிலாடுதுறை, அகில உலக சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற நிறுவனத்திற்கு சென்றது. ஒருவழியாக வெளியிடப்பட்டது. ஆர். எஸ். நாராயணஸ்வாமி தன்னுடைய கட்டுரையில் இதைப்பற்றி விவரித்துள்ளார்[2]. ஆனால், இவரைப் பார்க்காமல், யார் என்று தெரியாமல், “உடையும் இந்தியா” என்று புத்தகத்தை[3] எழுதி, தெய்வநாகம் மற்றும் தேவகலா தந்தை-மகள் ஜோடியின் புகழைப் பரப்பியது ராஜீவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தான், என்று அவுட்-லுக் சஞ்சிகையில், ஒரு கட்டுரை எடுத்துக் காட்டியது.

arunai-vadivelu-mudaliar-md

தெய்வநாயகம், தேவகலா புகழ் ஏன் பரப்ப வேண்டும்?: “உடையும் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தான் தமிழ் எவாஞ்ஜெலிஸ்ட்டுகள் / மதம் மாற்றுபவர்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பிம் இல்லை. மல்ஹோத்ரா அவர்கள் தான் இந்தியாவின் முதல் எதிரி என்று நம்புவது போல, என்னால் நம்ப முடியவில்லை”, என்று ஒருவர் ஆச்சரியப்பட்டதை இங்கு குறிப்பிடலாம்[4]. நிச்சயமாக ராஜீவ் மல்ஹோத்ராவுக்கு அவர்கள் யார் என்று தெரியாது. அரவிந்த நீலகண்டனுக்கும், தமிழர் சமயம் மாநாடு சென்னையில் நடந்தபோது, கலந்து கொண்டதற்கு முன்னர் தெரியாது. ஏனெனில், சென்னை ஆர்ச்பிஷப் பாஸ்டோரெல் சென்டரில் ஆகஸ்ட் 14-17 2008ல் தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது[5], அவர் ஒரு கிருத்துவர் பெயரில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, கே.வி.ராமகிருஷ்ண ராவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, இவர் யார், அவர் யார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ராவும் அவரங்களை யார்-யார் என்று அடையாளம் காட்டி சொல்லிக் கொண்டிருந்தார். ஆக, 2005ல் அந்த தெய்வநாயகம், ஜான் சாமுவேல், முதலாம் கிருத்துவ மாநாடு நடந்தபோது கலந்து கொண்டதால், தாமஸ் கட்டுக்கதையில் இருவரும் சேர்ந்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதே போக்குதான், இப்பொழுது, சந்தோசத்தைப் பாராட்டி விருது கொடுத்தவர்களிடம் வேறு விதமாக வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான தெய்வநாயகம்-ஜான் சாமுவேல்-வி.ஜி.சந்தோசம் கூட்டை அறிந்து கொள்ளாமல் அல்லது அறிந்தும், அறியாதது போல இருந்து, இவர்கள், இப்பொழுது பாராட்டு விழா நடத்தியிருப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும்.

deivanayagam-johnson-basakara-dos-devalkaa-alva-edison-sameul

சந்தோசம்ஜான் சாமுவேல்தெய்வநாயகம் தொடர்புகள்: இந்தியாவில் கிருத்துவத் தொன்மை மாநாடுகளில் [ஆகஸ்ட் 13-17, 2005; மற்றும் ஜனவரி 14-17, 2007], சந்தோசம் சாமுவேல், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் எல்லோரும் கிருத்துவர்கள் என்பதால், முன்னரும் பேசியிருக்கலாம், அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[6] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ஆக முதல் மாநாட்டிலேயே, இவர்களுக்குள் இருந்த சம்பந்தம், தொடர்பு மற்றும் உறவுகள் வெளியாகின. கிருத்துவர்கள் என்ற முறையில் அவற்றை பெருமையாக எடுத்துக் கொண்டனர் எனலாம். எனவே, அவர்களது மதநம்பிக்கையைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சரித்திரப் புறம்பான, தாமஸ் கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, இந்துமதத்தை தூஷிக்கும் போக்கைத் தான் கண்டிக்க வேண்டியுள்ளது. கிருத்துவ சரித்திர ஆசிரியர்களே தாமஸ் கட்டுக்கதையை ஒதுக்கித் தள்ளியப் பிறகும், இவர்கள் இதனை, கூட்டாக, இத்தனை பணம் செலவழித்து, தொடர்ந்து ஈடுபடுவது கேள்விக்குறியாக உள்ளது. அந்நிலையில் இந்துக்கள் இவர்களை ஆதரிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள், விருதுகொடுக்ககிறார்கள்,….என்றெல்லாம் இருக்கும் போது, அதனை ஆராய வேண்டியுள்ளது.

Sanskrit college- N Mahalingam, I. Mahadevan, Sankaranarayanan

மைக்கேல் விட்செலும், சந்தோசமும், சமஸ்கிருத கல்லூரியில் நுழைவும்: குருபூர்ணிமா – ஜூலை.6, 2009 அன்று மைக்கேல் விட்செலின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதாராஜன், ஹரண் முதலியோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், போலீஸார் உள்ளே விடவில்லை[7]. அதாவது, மைக்கேல் விட்செல், ஒரு வெளிநாட்டவர், கிருத்துவர் ……அதனால், பெரிய-பெரிய மடாதிபதிகள், பண்டிதர்கள் முதலியோர் விஜயம் செய்து, ஆசீர்வாதித்து, சொற்பொழிவு ஆற்றிய இடத்தில், இவரை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்தனர்[8]. ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு முதலியோர், இந்துக்களாக இருந்தாலும், அந்த கிருத்துவரைத்தான் ஆதரித்தனர். அதுபோலத்தான், இந்துத்துப்வவாதிகள் இப்பொழுது வி.ஜி.சந்தோசத்தை பாராட்டி, விருது கொடுத்துள்ளனர். இங்குதான் இந்துக்களின் பலவீனம், உள்நோக்கம் அல்லது அந்த கிருத்துவர்களுடன் உடன்போகும் போக்கு, ப;அ சந்தேகங்களை எழுப்புகின்றன. ஒருவேளை, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்கின்றனரா? முன்னர், ஆர்.எஸ்.எஸ் கிருத்துவர்களுடன், திரு சுதர்ஷணம்ஜி தலைமையில் கேரளாவில் உரையாடல் வைத்துக் கொண்டனர். இப்பொழுதும், சமீபத்தில், கேரளாவில் அமீத் ஷா கிருத்துவ பாதிரிகளை சந்தித்துள்ளார். ஆகவே, தமிழக பிஜேபி மற்றும் கிருத்துவர்கள் அத்தகைய முறையில் இந்த உரையாடலை வைத்துக் கொண்டார்கள் போலும். மேலும் நாடார் காரணியும் இதில் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இப்பொழுது தமிழகத்தில், பிஜேபியில் நாடார்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இந்துத்துவ-கிருத்துவ உரையாடல்களுக்கு, நாடார்கள் தான் உகந்தவர்கள் என்று தீர்மானித்தார்கள் போலும் ஏனெனில், கன்னியாகுமரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நாடார்கள் இந்து-கிருத்துவரளாகவே இருந்து வருகின்றனர். அதாவது, அவர்களது குடும்பங்களில் உறவினர்கள் இந்துகளாகவும், கிருத்துவரளாகவும் இருந்து வருகின்றனர். வியாபாரம், சொத்து முதலியவற்றை இழக்கக் கூடாது என்ற ரீதியில் அத்தகைய பரஸ்பர-ஒத்துழைப்பு, உறவுகள் வைத்துக் கொண்டுள்ளனர். எனவே, மாநில மற்றும் மத்திய அரசியலுக்கு இவர்களது கூட்டு உதவும் என்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதால், அத்தகைய ஆதிக்கத்தை, இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் போலும்.முன்னர் மைக்கேல் விட்செல், சமஸ்கிருத கல்லூரியில் நுழைந்தது போல, இப்பொழுது சந்தோசம் நுழைந்திருக்கிறார். எனவே, இந்துக்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

Mylapore function 08-06-2017-3

தெரசா படத்தை எதிர்த்த உதயகுமார், இவ்விழாவில் சந்தோசமாக பங்கு கொண்டது, செல்பி எல்லாம் எடுத்து கொண்டது: கடந்த ஆகஸ்ட் 2016ல் இந்து ஆன்மீக கண்காட்சியில், இந்திய அகழ்வாய்வு துறை தெரசா படம் இருந்தது என்பதற்காக, உதயகுமார் என்பவர் ஆர்பாட்டம் செய்து எடுக்க வைத்தார். அதே நேரத்தில், பாரதிய இதிகாச சங்கலன சமிதி ஸ்டாலில் வைக்கப் பட்டிருந்த, ஈஸ்வர் ஷரண் எழுதிய, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை உட்பட, திராவிட சான்றோர் பேரவை வெளியிட்ட புத்தகங்களை, ஒருவர் வாரிச் சென்றார். ஆக முதல் நிகழ்ச்சியை “கிருத்துவ எதிப்பு” என்பதா, பின்னதை “கிருத்துவ ஆதரவு” என்பதா? ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்கள் என்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான்! அதே சாமி தியாகராஜன் தான், இப்பொழுது சந்தோசத்திற்கு “எல்லீசர்” பெயரில் விருது கொடுக்க விழா எடுத்துள்ளார்.

© வேதபிரகாஷ்

22-06-2017

Archdiocesan Pastoral Centre, 25, Rosary Church Road, Santhome

[1] அருணை வடிவேலு முதலியார், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல், தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், 1991

[2] R. S. Narayanaswami, Deivanayagam gets his due, Organiser, November 7, 1991, New Delhi.

https://apostlethomasindia.wordpress.com/2010/04/04/tamil-scholars-condemn-christian-author-for-misrepresenting-tiruvalluvar-as-st-thomass-disciple-r-s-narayanaswami-2/

[3] Rajiv Malhothra and Aravindan Neelakandan, Breaking India: western Interventions in Dravidian and Dalit Faultlines,  Infinity Foundation, Princeton, USA, 2011. இதில் வேடிக்கை என்னவென்றால், வேதபிரகாஷ் மற்றும் ஈஸ்வர் ஷரண் புத்தகன்ங்களைப் பற்றி எந்த குறிப்பையும் காணோம்.

[4] More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? They are Tamil evangelists, and while I hold no brief for either of them, I änd it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India.

Gita Ramaswamy, Yankee Hindutva Strikes A study on Bible-thumping activism ignores titular faultlines, concocts plots couched in anti-imperialism, \23 MAY 2011 BOOKS REVIEW.

http://www.outlookindia.com/magazine/story/yankee-hindutva-strikes/271815

[5] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[6]  கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

[7]

https://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-first-conference-of-micheal-witzel-of-harvard-university/

[8] While coming out I saw Haran and another were distributing four-page handout about Michae Witzel (while entering I saw Haran and Radha Rajan were arguing with the police). So when I enquired with the police, the organizers had given a complaint asking for protection of the speaker.

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்! (3)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்! (3)

2-stage-krishnaswamy-kasivelu-s-kalyanaraman-vedantham-sami-thyagarajan-s-ramachandran-k-v-ramakrishna-rao-g-p-srinivasan

சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப்பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில்  கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:

எண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்
1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்
2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.
3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.
4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.

தலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.

17-sami-thyagarajan-speaking

சாமி. தியாகராசன் பேச மறுத்ததேன்? [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது?” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்?” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா?” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார்.  இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.

Gauthaman outbursts

கௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன்? [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முரண்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து பாராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார்.  எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017

பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்?: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படுகின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் பற்றி தெரியாதா என்ன?

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017-2

2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன?: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு? மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது? இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா?

© வேதபிரகாஷ்

16-06-2017

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017-3

[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது, திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணமாக இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.

[2] http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[3]  அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.

[4] http://vsrc.in/

[5] http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-53-42

[6] http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/705-2016-06-17-07-14-45

[7] While coming out I saw Haran and another were distributing four-page handout about Michae Witzel (while entering I saw Haran and Radha Rajan were arguing with the police). So when I enquired with the police, the organizers had given a complaint asking for protection of the speaker. When I told them that those who had come there were educated and elite and not of such category as apprehended. I told that the speaker was telling that Siva is not Indian god and so on. The officer retorted, “Is it so? How then that IAS officer Iravatham Mahadevan was keeping quite? He knows everything”. The police informed that they had not obtained permission to stage demonstration against the meeting. The officer added that every body has a right to demonstrate, but they should have obtained prior permission.

https://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-first-conference-of-micheal-witzel-of-harvard-university/

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

ஏப்ரல் 4, 2017

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்:  உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

Congress - calf and cow symbol

பசுவின் முக்கியத்துவம்: பாரதத்தில் பசுவைப் போற்றும் பழக்கம் பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. பசுவதை பெரும்பாவம் என்று கல்வெட்டுகளில் அதிகமாகவே குறிப்பிடப் பட்டுள்ளன. “இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும், ” போன்றவை மிகப்பிரபலம். பிராமணர்கள் தாம் தாவர உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் எல்லாவகையான உணவுகளையும் உண்டு வந்தனர். பிறகு ஜைனர் மற்றும் பௌத்தர்கள் புலால் மறுத்தல், புலால் உண்ணாமை, ஜீவகாருண்யம் முதலியவை போதித்தாலும், அவர்களும் அவற்றைப் பின்பற்றவில்லை. ஏனெனில், சத்திரிய ஜைனர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தரே பன்றி இறைச்சி தின்று வயிற்றுப் போக்கு, ரத்தம் வெளியேறியதால் இறந்தார். மேலும், பௌத்தர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கின்றனர். சங்க இலக்கியங்களிலிருந்து, திருக்குறல் வரையிலுள்ளவற்றை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இக்காலத்தில் இதைப் பற்றி பிரச்சார ரீதியில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. ஜீவகாருண்யம் பேசுபவன், எப்படி புலால் உண்ணுவான் என்று கூட யோசிக்காமல், கண்டவன் எல்லாம் சித்தாந்தம் பேச ஆரம்பித்து விட்டான்.

Get sinned if one kills cow

முகமதியஐரோப்பிய காலங்களில் பசுவதை: முகமதியர் இந்தியாவில் நுழைந்து, கொள்ளையடுத்து, பிறகு ஆட்சி செய்த காலங்களில், இவ்வுணர்வு அதிகமாகியது. ஏனெனில், அவர்கள் மாமிசம் உண்பவர்கள் மட்டுமல்லாது, பசுமாமிசம் உண்பவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியர்கள் அப்பழக்கத்தைக் கொண்டிருந்ததால், அவ்வாறே சித்தரிக்கப் பட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் [1839-1898] புலால் உணவுக்காக உயிர் வதை செய்வதை மிகக் கடுமையாகக்    கண்டித்தவர். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் பசுக் கொலை செய்து ஊன் தின்னும் கொடுமையை வெறுத்துத் தாக்கி 100 பாடல்கள் கொண்ட ‘ஆங்கிலேயர் அந்தாதி’ என்னும் சமுதாய சிந்தனை நூலை இயற்றியவர். பாரதத்தைப் பொறுத்த வரையில், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருந்தாலும், பசு மாமிசம் உண்பதில்லை. அதே போல, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்ற பண்டிகை-விரத காலங்களில் மாமிசம் உண்பதில்லை. அத்தகைய ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், மக்களிடையே எந்த பிரச்சினையோ, விவாதமோ வந்ததில்லை. ஆகவே, இத்தகைய உணவு உண்ணும் பழக்க-வழக்கங்களில், மாமிசம் அறவே உண்ணாக்கூடாது என்று சொல்லவே, அமூல் படுத்தவோ முடியாது. பசுவதை மூலம் கலவரங்களை உண்டாக்கலாம் என்றறிந்து, பரிசோதனை செய்தவன் வெள்ளைக் காரன். அச்சதியில் ஒத்துழைத்தவர்கள் முகமதியர். இக்கலை இப்பொழுதும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.

Anti-Gandhi pro-beef campaign

மாட்டிறைச்சியும், பசு மாமிசமும்: மாட்டிறைச்சி எனும்போது, எருது, எறுமை முதலியவற்றின் மாமிசங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள், கிருத்துவர்கள், மேனாட்டவர் போன்றோர் தாம் பசுமாமிசமும் உண்கின்றனர். இந்துக்களில் 90% பசுமாமிசம் உண்பதில்லை. எனவே, பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும். மாட்டிறைச்சியை உண்பதை யாரும் தடுக்க முடியாது. இப்பொழுது கூட சட்டம், தண்டனை முதலியவை “பசுவதை” பற்றி தான் உள்ளதே தவிர மற்ற மாட்டிறைச்சி பற்றியில்லை. ஆனால், ஊடகங்கள், இதனை ஊதி பெரிதாக்கி, செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்து வருகின்றன. ஒவைசி போன்ற தீவிரவாத-அடிப்படைவாத முஸ்லிம்களும் திமிராக, நான் அப்படித்தான் பேசுவேன், முடிந்தால் வழக்குத் தொடுத்துக் கொள் என்று அகங்காகரமாக பேசி வருகின்றனர். இதிலிருந்தே, ஊடகங்களும், மற்றவர்களும், இதை வைத்து கலவரம் உண்டாக்க எத்தனித்திருப்பது தெரிகிறது.     முன்னரே குறிப்பிட்டப் படி, “பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே”, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்.

Anti-Gandhi pro-beef campaign-gandhi against beef

பிஜேபிக்காரர்கள் குழப்புகின்றனரா, குழம்பியுள்ளனரா?: கேரள மாநிலம் மல்லப்புரம் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 03-04-2017 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். குறிப்பாக, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ‘பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்’ எனக் கூறியிருந்தார்[1]. இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க-வின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களைக் கிளம்பியுள்ளன[2]. பிற மாநிலங்களில் உ.பி, ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா மாட்டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. கேரள மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததுமே சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை தொடங்கியது[4]. பிற பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடவடிக்கை இதனை அடுத்து அதிகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என கூறியுள்ளார்.

Gandhi againat cow slaughter

பசுவதை மற்றும் மாட்டிறைச்சி சித்தந்தங்களை குழப்பும் ஊடகங்கள், அரசியல்வாதிகள்: “இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்தால் உயர் தரமான மாட்டிறைச்சிகள் கிடைக்க செய்வேன், இறைச்சி கூடங்களை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன், தடையின்றி மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன்,” என அவர் தெரிவித்திருந்தார்[5]. பசுவதை மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிரான சித்தாந்தங்களை உடைய பா.ஜ.க.வில் இருக்கும் அவர் இத்தகைய கருத்து கூறியிருந்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது[6]. இந்நிலையில், இன்று தன்னுடைய கருத்தில் இருந்து பல்டியடித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஸ்ரீபிரகாஷ், “நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பசுவதைக்கு முழுவதும் எதிரானவனே, உத்தரப்பிரதேசத்தில் செய்தது போல சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கடைகளை கேரளாவிலும் மூடுவோம் என சொல்லி, மக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்வோம் என கூறியிருந்தேன்,” என தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி குறித்து பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் இருவேறு கருத்துக்கள் தெரிவித்தது குறித்து அம்மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜேந்திரனிடம் கேள்வியெழுப்பியபோது, அவருடைய பேட்டிகளை நான் பார்க்கவில்லை என பதிலளித்துள்ளார்.

Gandhi againat cow slaughter-MODI

பசுவதை தண்டனைப் பற்றிய குழப்பங்கள், சட்டங்கள்: குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. எனினும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் அங்கு நீடித்து வந்ததை அடுத்து, தண்டனையை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது[7]. இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர் களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய் தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும். தவிர அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா கூறும்போது, ‘‘பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் செய்யும்படி சாதுக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர் களது கோரிக்கைக்கு இணங்க நாட்டிலேயே மிக கடுமையான சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், வாக்காளர்களை ஈர்க்கவும், அரசியல் ஆதாயம் பெறவும் மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன[8].

Cow slaughter-Act-implementation-violation

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 2015 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

© வேதபிரகாஷ்

04-04-2017

Cow slaughter-Act-implementation-violation-in states

[1] விகடன், அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச் செய்வேன்’ : பா.. வேட்பாளரின் வாக்குறுதி!, Posted Date : 15:26 (02/04/2017); Last updated : 10:00 (03/04/2017

[2] http://www.vikatan.com/news/india/85204-bjp-candidate-campaign-against-beef-ban.html

[3] தினத்தந்தி, எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி, ஏப்ரல் 02, 05:00 PM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/02170000/Give-me-your-vote-I-will-give-you-good-quality-beef.vpf

[5] மாலைமலர், ’பசுவதைக்கு நான் எதிரானவனேதரமான மாட்டுக்கறி வழங்கப்படும் எனக் கூறிய கேரள பா.. வேட்பாளர் பல்டி , பதிவு: ஏப்ரல் 03, 2017 22:57

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/03225742/1077888/Am-against-cow-slaughter-says-BJP-candidate.vpf

[7] தி.இந்து, பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம், Published: March 31, 2017 14:45 ISTUpdated: April 1, 2017 09:12 IST

[8]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9609759.ece

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

ஜூலை 10, 2016

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

BJP Villuppuram meeting clash 08-07-2016

வியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.

பாஜக சண்டை விழுப்புரம்

தங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4].  கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின.  மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.

BJP Villuppuram - Dinathanthi photo- 08-07-2016

வாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.

BJP Villuppuram - backdrop torn - 08-07-2016

பாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

BJP Villuppuram - torn backdrop - 08-07-2016

வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.

BJP Villuppuram - chairs broken - 08-07-2016

பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.

பாஜக மோத-ல்1

செயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].

பாஜக மோத-1

அரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)

[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41

[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016

[4] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/politics/20/37530/clash-in-bjp-executive-council-meeting-15-arrested

[5] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=168768

[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST

[7] தினத்தந்தி, பா... செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559721

[9] தினமலர், பா.., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559715

[11]http://www.dinamani.com/tamilnadu/2016/07/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/article3519127.ece

[12] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=229607

[13] http://www.dailythanthi.com/News/India/2016/07/08012724/BJP-Committee-meeting-of-the-factional-conflict.vpf