Archive for the ‘சதுர்த்தி’ Category

தீபாவளியை மறந்தவர்கள், பக்ரீதுக்கு வாழ்த்து சொல்கிறார்களாம்!

நவம்பர் 7, 2011

தீபாவளியை மறந்தவர்கள், பக்ரீதுக்கு வாழ்த்து சொல்கிறார்களாம்!

 

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்தால் –

 

  • Ø  மதவாதி – communalist,
  • Ø  ஆரியன் – Aryan,
  • Ø  பார்ப்பனன் – Brahmin,
  • Ø  இஸ்லாம்-விரோதி – enemy of Islam / Kafir,
  • Ø  கிருத்துவ-துரோகி – enemy of Christianity / gentile,
  • Ø  செக்யூலரஸம்-தெரியாதவன் non-secular,
  • Ø  நாகரிகம் இல்லாதவன் – barabarian,
  • Ø  இடைக்காலத்தவன் – mideavalist,
  • Ø  சமூக-விரோதி – anti-social,
  • Ø  பின்நோக்கிப் பார்ப்பவன் – Backward looking
  • Ø  பகுத்தறிவு இல்லாதவன் – Non-rationalist

 

என்று அடுக்கு மொழிகள் தொடர்கின்றன.

 

ஆனால், மற்ற பண்டிகைகளுக்கு, குறிப்பாக இந்துக்கள் அல்லாத முஸ்லீம்-கிருத்துவர் பண்டிகைகள் என்றால், போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பார்.

 

உடனே, அவர்கள் –

 

  • Ø  செக்யூலரிஸ்ட் – secularist,
  • Ø  இஸ்லாம்-நண்பன் – friend of Islam,
  • Ø  கிருத்துவ-சிநேகிதன் – friend of Christianity,
  • Ø  சிறுபன்மையோர் நலம் விரும்பி – pro-minority,
  • Ø  நாகரிகம் மிக்கவன் – civilized / elite,
  • Ø  முன்னோக்கு உடையவன் – Forward looking,
  • Ø  பகுத்தறிவு உள்ளவன் – rationalist
  • Ø  அறிவுஜீவி – intelligent / elite,

 

என்றாகி விட்டதைப் போல, அவர்களே தம்பட்டம் அடித்துக் கொள்வர்!

 

“எம்மதமும் சம்மதம்” என்றால், எல்லோருக்கும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தால் அது செக்யூலரிஸம் ஆகுமா?

 

அப்படியென்றால், “இந்த கடவுள் உண்டு அந்த கடவுள் இல்லை” என்றாகுமே, அப்படியென்றால் பல கடவுளர்கள் உண்டு என்றாகிறதே, பிறகு எப்படி முஸ்லிம்கள், கிருத்துவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்?

 

  • Ø  ஒன்று அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்
  • Ø  அல்லது நீங்கள் அவர்களுக்கு ஏதுவாக முட்டாள் / மடையன் போல பேசி, இந்துக்களை ஏமாற்றுகிறார்கள்
  • Ø  அல்லது எல்லோருமே சேர்ந்து கொண்டு இந்துக்களை தூஷிக்கிறார்கள் போலும்!

 

இதுதான் பகுத்தறிவா, செக்யூலரிஸாமா, படித்தப் படிப்பின் முதிர்ச்சியா இல்லை அனுபவத்தின் பக்குவமா என்று ஆராய்ச்சி தான் நடத்த வேண்டும்!

விநாயகருக்கு ஒரு மிஸ்டு கால் அனுப்புங்க, உடனே பரிசை அள்ளுங்க! விநாயகரிடமிருந்து பரிசைப் பெற!!

ஓகஸ்ட் 28, 2011

விநாயகருக்கு ஒரு மிஸ்டு கால் அனுப்புங்க, உடனே பரிசை அள்ளுங்க! விநாயகரிடமிருந்து பரிசைப் பெற!!


விநாயகருக்கு ஒரு மிஸ்ட் கால் அனுப்புங்க, உடனே பரிசை அள்ளுங்க! விநாயகரிடமிருந்து பரிசைப் பெற உங்கள் மொபைல் போனிலிருந்து டயல் செய்யுங்கள்……….என்று “சங்கீதா” என்ற கம்பெனி அரை பக்கத்திற்கு விளம்பரம் தினமலரில் கொடுத்துள்ளது[1]. வழக்கம் போல கண்ணுக்குத் தெரியாத  விதத்தில், “Conditions apply. Offer on select model only. Gifts can be claimed only againsy purchase. Admissibility of claims subject to terms & conditions of the insurance policy” என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த விநாயக சதுர்த்தியில், எங்களிடம் ஃபோன் வாங்கும் முன்பே உங்களுக்கான பரிசைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான நீங்கள், விநாயகருக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் (ஆமாம் தயவு செய்து உங்கள் மொபைல் ஃபோனிலிருந்து மட்டும் டயல் செய்யுங்கள்). மற்ற செல்போனிலிருந்து செய்தால் என்னாகுமோ?

செக்யூலரிஸ வியாபாரமா அல்லது வியாபார செக்யூலரிஸமா? இது வியாபார யுக்தியா அல்லது சந்தர்ப்பவாதமா அல்லது வேண்டுமென்றே கிண்டலுக்காக செய்வதா? ஏனெனில், மற்ற பண்டிகைகளின் போது, அவ்வாறு யாரும் மற்ற கடவுளர்களுக்கு மிஸ்டு கால் அனுப்பச் சொல்லி விளம்பரம் செய்திருக்கவில்லை. கிருஷ்ண ஜெயந்தி சென்று சில நாட்களே ஆகின்றன. ரம்ஜான் 30-08-2011 அன்றும் மேரி ஜெயந்தி 08-09-2011 அன்றும் வருகின்றன. அப்பொழுதும் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவார்களா? அந்தந்த கடவுளர்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்வார்களா?


[1] தினமலர், ஞாயிறு 28-08-2011, பக்கம்.16