Archive for the ‘சிந்தனையுரிமை’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.

2018 முதல் 2023 வரை மேற்கொண்ட முயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது  இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….

ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யப் போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1].   ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளின் முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.

13-07-2023 அன்று கூட்டம் ஆரம்பம், படுகரின் வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4].  இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS  , Kathiravan V • HT Tamil, Jul 11, 2023 04:47 PM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/annual-meeting-of-rss-pracharaks-to-be-held-in-ooty-131689073805904.html

[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”

[4] தினமணி, உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!, By DIN  |   Published On : 14th July 2023 12:49 PM  |   Last Updated : 14th July 2023 12:49 PM.

[5] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/rss-reviwe-meeting-in-ooty-4037755.html

[6] மாலைமலர், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு, By மாலை மலர்,13 ஜூலை 2023 2:50 PM

[7] https://www.maalaimalar.com/news/district/tribal-people-give-enthusiastic-welcome-to-rss-leader-in-ooty-635605

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST

[9] https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/badugar-people-did-traditional-type-of-invite-to-rss-president-mohan-bhagwat-in-nilgiris-rxrtvl

சோனியா புகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது!

ஜூலை 3, 2013

சோனியா புகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது!

Sonia picture mosrphed 2013

The above photo is from from the DNA site

உள்ளது உள்ளபடியான கேலிச் சித்திரம்: நகைச்சுவை, தமாஷ், ஜோக், துணுக்கு, என்ற வகையில் படங்களை வரைவது முன்னர் கணினி இல்லாதக் காலத்தில், ஒரு கலையாக இருந்து வந்தது. படத்தைப் பார்த்தவுடன் ரசிக்கும்படி அவை இருந்தது, இருக்கின்றன. இப்பொழுது கூட, சில குறிப்பிட்ட நாளிதழ்களில் / பத்திரிக்கைகளில் குறிப்ப்ட்டவர்களின் “கேலிச்சித்திரம்” பிரபலமாக இருந்து வருகிறது. கற்பனையும், கைவண்னமும் தான் அவற்றில் மேலோங்கி நிற்கும். அவற்றை கீழ்கண்ட வகைகளில் இருக்கலாம்:

  • கேலிச்சித்திரம் / படம்
  • புகைப்படம்
  • இரண்டு படம் / புகைப்படங்களை இணைப்பது, இணைத்துக் காட்டுவது
  • இரண்டு அல்லது அதற்கு பேற்பட்ட படம் / புகைப்படங்களில் உள்ளவற்றை சேர்ப்பது, இணைப்பது, இணைத்துக் காட்டுவது

இவற்றில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் இருப்பர். உள்ளது உள்ளபடி இருக்கும், ஆனால், அவற்றை விவரிக்கும் போது, விளக்கும் போது, வேறுபடுத்திக் காட்டும் போது, சொல்ல வந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். பார்ப்பவர்கள், படிப்பவர்கல் புரிந்து கொள்வார்கள்.

Sonia angry

சித்தாந்த ரீதியில் வரையப் பட்ட கேலி சித்திரங்கள் (சுதந்திரத்திற்கு முன்பு): கார்ட்டூனிஸ்ட்டுகள் என்ற கேலிச்சித்திர கலைஞர்கள் நாளிதழ்கள்-பத்திரிக்கைகளில் பணியாற்றி வரும் நிலையில், அவை குறிப்பிட்ட சித்தாந்தம் அல்லது அரசியல் கட்சி சார்புடையதாக இருக்கும் போது, கேலிச்சித்திரங்களும் அவ்வாறே வரையும்படி பணிக்கப்பட்டனர் அல்லது பணியில் உள்லவர் வரைந்து தமது தொழிலை வளர்த்தனர். சுதந்திரகாலகட்டத்தில், ஆங்கிலேய கேலிச்சித்திரங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை மிகவும் மோசமாகத்தான் சித்தரித்துக் காட்டின. இன்று இந்தியர்கள் மதிக்கும் தலைவர்களை “நாய்கள்” பொன்றெல்லாம் சித்தரித்துக் காட்டின. இந்தியர்களையும் கேவலமாக – அறியாமை, ஏழ்மை, காட்டுமிராண்டித்தனம், மூடத்தனம், பேய்-பிசாசுகளை வழிப்பட்ய்ம் தன்மை – முதலிவற்றுடன் தொடர்பு படுத்தி – படம்பிடித்துக் காட்டினர்.

Case booked against the person for posting morphed Sonia picture

சித்தாந்தரீதியில் வரையப் பட்ட கேலிசித்திரங்கள் (சுதந்திரத்திற்கு பின்பு): சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஊடகங்களில் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தனர். அவர்களும் அதே ஆங்கிலேய-ஐயோப்பிய தாக்குதல்களை விசுவாசத்துடன் செய்து வந்தனர். அப்பொழுது இன்னொரு வெளிப்படையான விஷயம் என்னவென்றால், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் முஸ்லிம்களும் தங்களது விசுவாசத்தை தத்தமது சித்தாந்த மூல நாடுகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தனர். இன்றும் அவர்களுடைய ஆதிக்கம்-தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதனால், அவர்கள் மக்களின் மனங்களை, சிந்தனைகளைக் கட்டுப்படுத்த, ஈர்த்து தம் சித்தாந்தங்களுக்கேற்ப மாற்ற, அவர்களை அம்முறையிலேயே கட்டுக்குள் வைத்திருக்க பற்பல முறைகளைக் கையாண்டனர். அவர்களின் கைதேர்ந்த, தொழிற்நுணுக்கம் மிகுந்த, வியாபார யுக்தி நிறைந்த முறைகள் மற்றவர்களுக்கு வராது. அதனால் தான், காங்கிரஸ்காரர்கள்-அல்லாத, முஸ்லிம்கள்-அல்லாத, கிருத்துவர்கள்-அல்லாத மற்றும் கம்யூனிஸ்டுகள்-அல்லாத தேசிய, நாட்டுப்பற்று மிக்க, பிஜேபி போன்ற மாற்று அரசியல்வாதிகள் அம்முறைகளை கையாளும் போது, ஏதோ செய்யத்தெரியாத ஆட்களை போன்று செய்து மாட்டிக் கொள்கிறார்கள். உணர்வுகல் இருந்தும் யுக்திகள் அவர்களிடம் இல்லாது போது, ஏதோ நாகரிகமற்ற இடைக்கால்த்தவர் போல ஆகிவிட்டுகிறார்கள்.

Manmohan taking Sonia on a bike

Taken from the below mentioned website – shown for illustrative purposes

கணினி கேலிச்சித்திரங்களின் விபரீதங்கள்: ஆனால், கணினி வந்தபிறகு, அந்த தொழிற்நுட்பம் அறிந்தவர்களும், அறியாதவர்களும், உள்ள புகைப்படங்களை சேர்ந்து, இணைத்துக் காட்டி வருவது வழக்கமாக இருக்கிறது. கணினி வந்த பிறகு, புகைபடங்கள் டிஜிடல் மடிவமைப்பு முறையில் கிடைப்பதால் அவற்றை மாற்றமுடிகிறது. அதாவது, சிறிதாக்குவது, பெரிதாக்குவது, வெட்டுவது, ஒட்டுவது முதலியன சுலபமாக இருக்கிறது. யாராவது ஒரு குறிப்பிட்ட நபருடன் நின்றுகொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் வேண்டுமானால், இப்பொழுது சுலபமாக செய்துவிடலாம். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, வரம்புகளை மீறி அவதூறு, தூஷணம் செய்யவேண்டும், தனிப்பட்ட நபரை இழிவு படுத்த வேண்டும் என்ற பிடிவாதமுறையில், அவற்றை செய்தால் குற்றம் என்றும் சொல்லலாம். சிலர் ஆபாசமாக சித்தரித்துக் காட்டுகிறார்கள், குறிப்பாக சினினா நடிகர்-நடிகைகளுடன் சேர்த்து மாற்றம் செய்யும் போது அந்நிலை உருவாகிறது[1]. இப்பொழுதோ, கணினி முறைகளில் அவற்றை மேலும் அதிகமாக மாற்றங்களை செய்யமுடியும் என்பதால், அத்தகைய மாற்றுமுறைப் புகைபடங்கள், மாற்றப்பட்ட புகைபடங்கள், மாறிய புகைபடங்கள் என்று வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “மார்ப்ட்” (morphed) என்கிறார்கள் அம்முறை மார்பிங் (morphing) எனப்படுகின்றது.

Gandhi caricature on stampசோனியா புகைப் படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப் பட்டுள்ளது  (ஜூலை 2013): ஜலந்தரில் சந்தீப் பல்லா இளைஞர் மீது இன்வார்மேஷன் டெக்னோலாஜி சட்டத்தின் 66A பிரிவின் கீழ் ஆட்சேபிக்கும் முறையில், சோனியா பொகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது[2]. சஞ்ச்சய் செகால் என்ற காங்கிரஸ் தலைவர் புகார் கொடுத்துள்ளார்[3]. அவர் பிஜேபியைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுகளும் சேர்ந்துள்ளன[4]. இதனால், பிரச்சினை அரசியல் ரீதியில் சூடாகியுள்ளது[5]. நாளிதழ்களும் ஜாகிரதையாக பிடிஐயின் செய்தியை அப்படியே போட்டிருப்பது, இதன் பிரச்சினைத் தன்மையினைக் காட்டுவதாக உள்ளது.

Gandhi caricature - non-violenceவேதபிரகாஷ்

© 03-07-2013


[2] A case was registered here against Sandeep Bhalla under Section 66A of the Information Technology Act on the complaint of local Congress leader Sanjay Sehgal, police said.

http://www.hindustantimes.com/India-news/Punjab/Morphed-picture-of-Sonia-posted-on-FB-case-filed/Article1-1086182.aspx

[3] Morphed picture of Sonia posted on FB, case registered, Jalandhar, Jul 2 (PTI) A youth, claiming to be a BJP activist, was today booked here for allegedly posting an objectionable picture of Congress President Sonia Gandhi on a social networking website. A case was registered here against Sandeep Bhalla under Section 66A of the Information Technology Act on the complaint of local Congress leader Sanjay Sehgal, police said. Sehgal had filed the complaint yesterday and had also approached the police commissioner online on the matter.

http://www.ptinews.com/news/3769787_Morphed-picture-of-Sonia-posted-on-FB–case-registered