Archive for the ‘செக்யூலரிஸம்’ Category

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரைசொன்னது!

ஜூன் 25, 2023

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரை சொன்னது!

பீஹாரில் 16 கட்சிகளின் கூட்டம்: அடுத்த ஆண்டு 2024ல் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் 23-06-2023 அன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் நடைபெற்றது. இதில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (53 வயது), தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

23-06-2023 அன்று லாலு பிரசாத் யாதவ் ராகுலை திருமணம் செய்து கொள் என்றது: லாலு இந்தியில் பேசியதை தமிழ் ஊடகங்கள் வரிந்து கொண்டு செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தி தெரியாது போடா என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியும், பிஹாரிகளை நக்கல் அடித்தும் வரும் தமிழ் ஊடகங்களுக்கு இதில் என்ன அக்கரை என்று தெரியவில்லை. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் [75 வயது] கூறியதாவது[1], “ராகுல் காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே கூறியிருக்கிறேன்[2]. நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்[3]. ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை[4]. இன்னும் காலம் கடக்கவில்லை. தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். ராகுலின் திருமணம் குறித்து அவரது தாயார் சோனியா காந்தி தன்னிடம் பேசியுள்ளார்[5]. நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும்[6], பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது[7]. அப்படி கல்யாணம் செய்து கொள்லும் பொழுது, நாங்கள் எல்லோரும் பாராத் / ஊர்வலத்தில் கலந்து கொள்வோம்,” என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இப்போது நீங்கள் சொன்னது நடக்கும் என்றார்[8].  கடந்த ஜனவரி மாதம், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது அளித்த பேட்டியில், சரியான பெண் கிடைக்கும்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது[9]..  டிசம்பரில், ராகுல் காந்தி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தாயார் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அவரது பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் பண்புகளை தனது துணை கொண்டிருக்க விரும்புகிறேன் என்று கூறினார்[10].

19-06-2023 அன்று ராகுலின் பிற்ந்த நாள்: 19-06-1970 அன்று பிறந்த ராகுலுக்கு 53 வயதாகிறது. 23-06-2023 அன்று இக்கூட்டம் என்றால், சரியாக சென்ற 19-06-2023 ராகுலின் பிறந்த நாள் ஆகிறது. எனவே ஒருவேளை, 75 வயதாகும் லாலு அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்லியிருக்கலாம்[11]. ஆகவே, தமாஷுக்காக சொல்லவில்லை[12]. லாலு முன்னர் ராகுலின் தந்தையால் தான் மாட்டுத் தீவின ஊழலில் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குச் சென்றார். இப்பொழுது, அதே குடும்ப வாரிசுடன் கூட்டு வைத்துக் கொள்கிறார், என்றும் ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மேலும், ராகுலின் பிறந்த நாளையே காங்கிரஸ்காரர்கள் மறந்து விடார்களா அல்லது கொண்டாடக் கூடாது என்ற மேலிடத்து உத்தரவா என்று தெரியவில்லை. 53-வயது என்றால், ராகுலின் இளமைத் தனம் போய்விடும் என்று நினைத்தார்கள் போலும். இருப்பினும், சமீபத்தில் தாடி வைத்துக் கொண்டபோது, நரைத்த முடி தெரியத்தான் செய்தது.

பிஜேபியின் திருமணஒப்புமை கிண்டல்: லாலு ராகுலுக்கு அற்வுரைக் கொடுத்தாரா, கிண்டல் அடித்தாரா என்ற நிலையில், பிஜேபிகாரர்களும் விடவில்லை. நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார்[13]. ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்) என்று தெரியவில்லை[14]. பெண்ணும் யார் என்று புரியவில்லை[15]. ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள் என பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து கிண்டலடித்துள்ளார்[16]. ஒருவேளை ராகுல் தான் பிரதம மந்திரி வேட்பாளர் என்பதனை மறைமுகமாகக் கூறினார் போலும். இந்தியில் பேசியதால், இந்தி தெரியாத கட்சித் தலைவர்கள் தமக்கு இந்தி தெரியாது என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்யும்.

2013ல் கொடுத்த விளக்கம்பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2013ல் ராகுல் விவாகம் பற்றி நடந்த விவாதம்: கடந்த  2013 மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும் ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[17]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[18]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[19]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[20]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

© வேதபிரகாஷ்

25-06-2023


[1] தினமணி, ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்: லாலு பிரசாத், By DIN  |   Published On : 23rd June 2023 09:56 PM  |   Last Updated : 23rd June 2023 09:56 PM.

[2] https://www.dinamani.com/india/2023/jun/23/lalu-prasad-yadav-asks-rahul-gandhi-to-get-married-4026423.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா,  ராகுல் நாங்க சொல்றத கேட்கணும்.. செல்லமாக மிரட்டிய லாலு பிரசாத்.. வெடித்து சிரித்த அரசியல் தலைவர்கள்!,  By Vignesh Selvaraj Published: Friday, June 23, 2023, 18:52 [IST],

[4] https://tamil.oneindia.com/news/india/lalu-prasad-asks-rahul-gandhi-to-get-married-made-fun-at-press-meet-after-opposition-meeting-518035.html

[5] நக்கீரன், திருமணம் நடக்கும்என்ற ராகுல்காந்தி; பாட்னாவில் நடந்த சுவாரசியம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 24/06/2023 (08:26) | Edited on 24/06/2023 (08:50).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/you-have-said-it-it-will-happen-rahul-gandhi-interesting-happenings-patna

[7] சமயம், தாடியை எடுத்துட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பாராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் அட்வைஸ்!, Authored by Bahanya Ramamoorthy | Samayam Tamil |,

[8] https://tamil.samayam.com/latest-news/india-news/lalu-prasad-yadhav-advise-to-ragul-gandhi-to-get-married-soon-in-patna-meeting/articleshow/101232555.cms

[9] காமதேனு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்திய லாலு பிரசாத் யாதவ்ராகுல் கூறிய பதில் என்ன?, Updated on : 23 Jun, 2023, 9:10 pm

[10] https://kamadenu.hindutamil.in/politics/rahul-gandhi-was-asked-by-lalu-yadav-to-get-married-his-response

[11] இந்தியன்.எக்ஸ்பிரஸ், பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலகலப்பு: ராகுல் திருமணத்தை வலியுறுத்திய லாலு! , Written by WebDesk, tamil news, June 23, 2023 20:15 IST

[12] https://tamil.indianexpress.com/india/still-not-too-late-to-get-married-lalu-prasad-yadav-makes-a-wisecrac,k-at-rahul-gandhi-at-patna-meet-704805/

[13] மாலைமலர், திருமண ஊர்வல அலங்கரிப்பில் மாப்பிள்ளை யார்?- பா.ஜனதா கிண்டல், Byமாலை மலர்23 ஜூன் 2023 10:10 AM (Updated: 23 ஜூன் 2023 10:11 AM).

[14] https://www.maalaimalar.com/shots/bjp-mp-ravi-shankar-prasad-takes-jibe-on-the-opposition-meeting-who-is-the-groom-pm-contender-626240

[15] புதியதலைமுறை, அனைவரும் மாப்பிள்ளைகள்…” எதிர்க்கட்சிக் கூட்டத்தை விமர்சித்த பாஜக!, Prakash J, Published on : 24 Jun, 2023, 8:50 pm.

https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[16] https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[17]  Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[18]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[19] http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[20] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் – இதன் அர்த்தம் என்ன?

ஜூன் 4, 2023

எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம்ஆர்.எஸ்.எஸ். தலைவர்இதன் அர்த்தம் என்ன?

அறிவுரை யாரை நோக்கி சொல்லப் பட்டுள்ளது: ஜூன் 2023 முதல் வாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளதில் பல விசயங்கள் உள்-பொதிந்துள்ளன. ஒவ்வொரு வரியும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்திய ஒற்றுமை என்ற நிலையில், பற்பல இப்பொழுதைய பிரச்சினைகளுக்கு பதில் கொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்களுக்கு அதிகமாகவே அறிவுரை கூறியுள்ளார். கர்நாடத் தேர்தல் தோல்வி மற்ற நிகழ்வுகளை மனத்தில் வைத்துக் கொண்டு பேசியுள்ளதை கவனிக்கலாம். முஸ்லிம் பிரச்சினை தீவிரமாகும் நிலையில் அவர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தும். ஏனெனில், எல்லையில் உள்ள எதிரிகளை எதிர்க்க, எல்லோரும் தான் ஒன்று படவேண்டியுள்ளது. பாகிஸ்தானை முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள், சீனர்கள் கம்யூனிஸ்டுகளுடன் மோத மாட்டார்கள் என்றிருக்க முடியாது.

இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: 01-06-2023 அன்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சங்க ஷிக்ஷா வர்க்’  நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.‛‛இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது எனவும், அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்” என ஆர் எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: “வேறுபாடுகள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற புரிதலின் மூலம் மட்டுமே நாட்டில் உள்ள சமூகங்களின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு ஏற்படும்[1]. வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன[2]. அவற்றுடன் நாம் அப்போது சண்டையிட்டோம். எல்லையில் அமர்ந்திருக்கும் எதிரிகளிடம் நமது பலத்தை காட்டாமல், நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்[3]. நாமெல்லாம் ஒரே நாடு என்பதை மறந்து விடுகிறோம். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்[4]. இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

இந்தியர்கள் அந்நியர்களின் கலப்பினை மறந்து ஒன்றுபட வேண்டும்: [மோகன் பகவத் பேசியதை இடது பக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அதன் விளக்கம் வலது பக்கம் கொடுக்க்ப் படுகிறது]

வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன, ஆனால் அவர்கள் இப்போது இல்லை. இப்போது அனைவரும் இங்கு உள்ளவர்கள் தான். எனவே, நாம் வெளியில் இருந்து வந்தவர்களுடன் உள்ள தொடர்பை மறந்து வாழ வேண்டும். இங்குள்ள அனைவரும், நமது அங்கத்தினர். அவர்களது சிந்தனையில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அவர்களிடம் பேச வேண்டும்.இடைகாலத்தில் இந்தியாவுக்கு வெளியிலிருந்து பல இனத்தவர் இங்கு வந்து, கலந்து, அவர்கள் மூலம் சந்ததியர் உண்டாகியுள்ளனர். அவர்கள் தாங்கள் இந்தியர்களை விட மாறுபட்டவர்கள் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் தான் பிரிவினைவாதமாகி, இந்தியர்களைப் பிளக்கிறது, ஒருவரை ஒருவர் எதிர்க்கவும் தூண்டுகிறது.

இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது. அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும். நமது தனித்துவ அடையாளங்களே, இந்தியாவை பாதுகாப்பதாக உள்ளது. வெளியில் இருந்து அல்ல. நமது நாட்டுடனான நமது உறவு பரிவர்த்தனை சார்நதது அல்ல. நாம் வேறுபாடுகளை கொண்டாடுகிறோம்[5]. ஒன்றாக வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிப்போம். ஒன்றாக வாழ்வதற்கும், நல்லிணக்கத்திற்கும் பேச்சுவார்த்தை முக்கியம். ஒவ்வொருவரும் சமுதாயத்திற்காக விட்டு செல்ல வேண்டும்[6].

புறத்தோற்றங்களில் வித்தியாசப் படுத்திக் காட்டிக் கொள்பவர்கள் வெளிநாட்டவர்கள் இல்லை, இந்தியர்களே: நல்லிணக்கத்திற்கு ஒரு தலைபட்சமான முயற்சிகள் பலிக்காது. ஒவ்வொருவரும் தியாகங்கள் செய்ய வேண்டும். அது பழக்கவழக்கம் மற்றும் மதிப்புகள் மூலம் மட்டுமே வரும். இது தான் நமது தாய்நாடு.

நமது வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். சில வெளியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில், நமது முன்னோர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். சில படையெடுப்பாளர்கள் வந்து சென்றுள்ளனர். பலர் தங்கி உள்ளனர். தாய்நாட்டுடன் இணைந்தால் நமது அடையாளம் அழிந்துவிடும் என சிலர் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. சிலர் தாங்கள் வித்தியாசமாக இருப்பதாகவும், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என நினைத்ததால், 1947 ல் நாட்டில் பிரிவினை ஏற்பட்டது.பாரசீகம், முகமதியம் / இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல அந்நிய மதத்தவர் இந்தியாவில் நுழைந்து, தமது மதத்தினைப் பரப்பியுள்ளனர். அவர்களது சந்ததியினரும் வளர்ந்துள்ளர், அத்தகையோர் இக்காலத்தில் தமது மதம், மத அடையாளங்கள் முதலியவற்றை இந்தியாவிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ள அதிகமாக முயன்று வருகின்றனர். ஆனால், புறத்தோற்றத்தில் அவ்வாறு காட்டிக் கொண்டாலும், அவர்கள் மற்ற காரணிகளால் இந்தியரே தவிர, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இல்லை.

இந்திய சமூகத்தில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு இடமில்லை. ஹிந்து சமூகம் அதன் சொந்த மதிப்புகள் மற்றும் லட்சியங்களை மறந்துவிட்டது. இதனால் தான் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு பலியாகிவிட்டது.

ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது:நமது முன்னோர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களின் கடனையும் அடைப்போம். இந்தியா ஜனநாயக நாடு. ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகள் மத்தியில் போட்டி இருக்கலாம்.

ஆனால், அரசியலுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் அது, சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது என்ற விவேகம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவில் பிளவுகளை விரும்பும் சக்திகள் குறித்து மக்கள் அறிந்து வைத்துள்ளனர்[7].இன்றைக்கு அரசியலாலேயே இந்துக்களே பிளவு பட்டுள்ளார்கள். அதே போல இந்துத்துவவாதிகளும் தனித்தனியாக இயங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்கள் கூட தனித்தனியாக கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவையெல்லாம் அவர்களது பேச்சு, நடவடிக்கை முதலியவற்றிலிருந்தே புரிந்து-தெரிந்து கொள்ளலாம்.

நமது பழங்கால பெருமைகளை புத்துயிர் பெற செய்வது முக்கியம். இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை மையமாக கொண்டு, நாட்டில் தேசிய உணர்வு ஏற்பட்டு உள்ளது[8]. கோவிட் போன்ற சவால்களை எதிர்கொள்வதையும், சமாளிப்பபையும் உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது[9]. ஜி20 அமைப்பின் தலைமைப்பதவி நம்மை த் தேடி வந்துள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்[10].

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தினமலர், இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது: மோகன் பகவத் பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஜூன் 02,2023 13:33;

[2] https://m.dinamalar.com/detail.php?id=3337052

[3] காமதேனு, எல்லையில் எதிரிகளிடம் பலத்தை காட்டாமல், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கிறோம்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி!, Updated on : 2 Jun, 2023, 1:40 pm

[4] https://kamadenu.hindutamil.in/politics/outsiders-have-gone-now-everyone-is-insider-rss-chief-mohan-bhagwat

[5] Indian Express, ‘Where is Islam safe other than India?: RSS chief Mohan Bhagwat in Nagpur, By: Express News Service, First published on: 02-06-2023 at 14:06 IST;; Updated: June 4, 2023 15:42 IST.

[6] https://indianexpress.com/article/cities/mumbai/where-is-islam-safe-other-than-india-rss-chief-mohan-bhagwat-in-nagpur-8642270/

[7] தினத்தந்தி, எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம்ஆர்.எஸ்.எஸ். தலைவர், தினத்தந்தி Jun 2, 8:42 am

[8] https://www.dailythanthi.com/News/India/fighting-among-ourselves-instead-of-showing-strength-to-enemies-at-border-rss-chief-mohan-bhagwat-977491

[9] Hindustan Times, ‘Islam is safe in India…forget foreign connections’: RSS chief Mohan Bhagwat, By HT News Desk, Jun 02, 2023 10:52 AM IST

[10] https://www.hindustantimes.com/india-news/islam-is-safe-in-india-forget-foreign-connections-rss-chief-mohan-bhagwat-101685676872813.html

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தி.மு.க. கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது!

மே 8, 2021

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தி.மு.க. கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (.யூ.எம்.எல்), தி.மு.. கூட்டணி: மார்ச் மாத கூட்டணி அரசியல் பேரம், முடிவு முதலியன தேர்தல், தேர்தல் வெற்றி-தோல்வி மற்றும் எம்.எல்.ஏ மந்திரி நியமனம் போன்றவற்றில் வெளிப்படுகிறது. DMK-IUML-கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்  பேச்சுவார்த்தை நடத்தினார்[1].  முஸ்லிம்களுக்கு பொதுவாக வேட்பாளரை மனதில் வைத்து தான் தொகுதிகளை கேட்பது வழக்கம்[2]. அதனால், திருவாடானை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம், சென்னையில் ஒரு தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் ஏதாவது 3 தொகுதிகளை ஒதுக்குமாறு IUML-பிரதிநிதிகள் கோரினர்[3]. ஆனால் அவர்கள் (திமுகவினர்) திருவாடானை, திருச்சி கிழக்கு, சென்னை தொகுதிகளை தர முடியாது என்று கூறி, கடையநல்லூர் தொகுதியை அவர்களுக்கு திமுகவினர் ஒதுக்கினர்[4]. அந்த ஒரு தொகுதி மட்டும் உறுதியாகியது. இப்படி மார்ச் இரண்டாம் வாரத்தில் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன.

இப்படி வேடம் போட்ட துலுக்கர் தான் கோவில்களையும் இடித்துள்ளனர்

இழுபறியில் DMK-IUML-கூட்டணி பேச்சு, பேரம், முடிவு: மீதம் உள்ள 2 தொகுதிகளில் சிதம்பரம் அல்லது பாபநாசம், ஆம்பூர் அல்லது வாணியம்பாடி ஆகிய தொகுதிகளை முஸ்லிம்லீக் கேட்டது[5]. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக் சார்பாக 6 நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் (கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம்) ஒதுக்கப்பட்டுள்ளன[6]. இப்படி செய்திகள் வந்தது வியப்பாக இருந்தது, DMK-IUML-கூட்டணி பேரம் அவ்வளவு மகத்தானதா, முக்கியமானதா, எதற்கு ஊடகங்கள் அதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், போன்ற கேள்விகள், புதிர்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பேரம் ஒரு வழியாக முடிந்தது. மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிறகு, ஸ்டாலின் முன்னிலையில் ஒரு வழியாக, திமுக – ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் மற்றும் மமக நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்[7]. காதர் மொஹிதீன் திருப்தியடையாமல் ஊடகங்களில் பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்ததையும் கவனித்திருக்கலாம். இவை தினம்-தினம் முக்கிய செய்திகளாக வெளிவந்தது[8], சாதாரண மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், அதன் பின்னர் இருந்த அரசியல்-வியாபாரம், அவர்களுக்குத் தான் தெரியும்.

ஒவைசி-திமுக “இதயங்களை இணைப்போம் மாநாடு” நாடகம்: கிருத்துவ மாநாடுகள் டிசம்பைல் நடத்திய பிறகு, “ஜனவரி 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்க உள்ளார். ஓவைசி முதல் முறையாக திமுக மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் நுழைகிறார்,” என்றெல்லாம் அதிரடியாக செய்திகள் வந்தன.. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற இருக்கிற நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்து, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6ஆம் தேதியன்று ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. அதில் இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு திமுக சிறுபான்மை நல உரிமை அணியின் செயலாளர் மஸ்தான் அழைப்பு விடுத்தார்.  இந்த சூழலில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதும் முஸ்லிம் கட்சி தலைவரான அசாதுதின் ஓவைசியை மஸ்தான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்க ஓவைசிக்கு மஸ்தான் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகின. அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தலில் ஓவைசியின் கட்சி போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததால்தான் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழலில், தமிழகத்துக்கு ஓவைசியை அழைப்பது நல்லதல்ல என இஸ்லாமிய இயக்க தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தால், அது நடக்கவில்லை.

திமுகவினர் மற்றும் தமிழக முஸ்லிம் பிரதிநிதிகள் ஒவைஸி வீட்டிற்குச் சென்று அழைப்பு விடுத்தது. ஸ்டாலின் அழைத்திருக்கலாம், ஆனால், பிறகு மறுக்கப் பட்டது.
உள்ளூர் முஸ்லிம்கள் எதிர்த்தனரா, ஒவைஸியின் ஆளுமை கண்டு பயந்தனரா, ஸ்டாலின் மறுத்தாரா….போன்ற கேல்விகளுக்கு பதில் கிடைத்தால், பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும்

பூவாதலையா, ஹெட்ஆர்டெயில், எங்களுக்குத் தான் வெற்றி என்று முஸ்லிம்கள் திட்டத்துடன் செயல்படுகின்றனர்: பாகிஸ்தானை உருவாக்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இன்றும் செக்யூலர் போர்வையில் நடமாடிக் கொண்டு, அரசியல் செய்து வருகிறது. “மதசார்பற்ற முற்போக்கு அணி” என்ற முகமூடிகள், பதாகைகள், கோஷங்கள், மேடை பேச்சுகள் வேறு. அதற்கு ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர், வருகின்றனர். அரசியல், வியாபாரம், சினிமா, அந்நிய முதலீடுகள் என்று பிண்ணிக் கிடக்கும் சம்பந்தங்களில் பரஸ்பர லாபங்களுக்கு அவர்கள் செயல் பட்டு வெற்றி கண்டு வருகின்றனர். பெருங்கட்டுமான அமைப்புகள், தொடர்புடைய திட்டங்களுக்கு (Infrastructure) ஆரம்பித்திலிருந்து கருணாநிதி முஸ்லிம் கம்பெனிகளுக்கு ஆதரவு கொடுத்தார். இப்பொழுது, ஸ்டாலின் அதை பின்பற்றுவதில் ஆச்சரியம் இல்லை. கூட சாடிலைட், டிவி-செனல், விளம்பரங்கள், சினிமா, படபிடிப்பு, ஊடக வியாபாரங்கள், பணப்பரிமாற்றம், கொரியர், என்று பற்பல வியாபார நெருக்கங்களும், சம்பந்தங்களும்  வேலை செய்து வருகின்றன. அதனால், மாறன் – ஸ்டாலின்  சொந்தங்கள் இணைந்தே செயல் படும். இப்பொழுது வாழ்த்து சொல்ல அழகிரி குடும்பமும் சேர்ந்து விட்டது.

ஏழு / எட்டு முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல். ஆகியுள்ளனர்: திமுக, விசிகே மற்றும் காங்கிரஸ் கட்சிகளிலிருந்து, ஆறு முஸ்லீம்கள் வென்றுள்ளனர்:

  1. ஜே. மொஹம்மது ஷானவாஸ், விசிகே [J. Mohamed Shanavaz from VCK]
  2.  [Mastan, Senji]
  3. எம். அப்துல் வஹாப், திமுக [Abdul Wahab M, DMK]
  4. எம்.எஹ். ஜவஹிருல்லா, திமுக [Jawarihullah M H, DMK ]
  5. எச்.எம். நாசர், திமுக [Nasar S M, DMK ]
  6. பி. அப்துல் சமது, திமுக [Abdul Samad P]
  7. அஸன் மௌலானா, காங்கிரஸ்  [Aassan Maulaana,  Congress]
  8. கே. காதர் பாட்சா என்கின்ற முத்துராமலிங்கம், ராமநாதபுரம் [K. Kader Basha alias Muthuramalingam, Ramanathapuram]

கடையாக இருப்பவர் நிலை சரியாக தெரியவில்லை. முஸ்லிம்கள் இப்படி பல கட்சிகளில், உருவங்களில், பெயர்களில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில், மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இவ்வாறு அதிகாரகத்தில், அரசியலில் ஆதிக்கம் பெற்று, தொடர்ந்து வருகின்றனர்.

SDPI கீழ்கண்ட ஆறு இடத்தில் நின்றாலும் தோல்வியடைந்தது: SDPI முஸ்லிம் கட்சிகளில் தீவிரமானது, கேரளாவில், கர்நாடகாவில், ஏன் தென் மாவட்டங்களிலும் முஸ்லிகளிடையே ஆதரவு பெற்றது.

  1. மொஹம்மது தமீம் அன்ஸாரி, ஆலந்தூர் (Mohammed Thameem Ansari),
  2. உமர் பரூக், ஆம்பூர் (Umar Farook),
  3. அப்துல்லா ஹஸன் திருச்சி (Abdullah Hassan Faizy),
  4. நஸீமா பானு திருவாரூர் (Naseema Banu ),
  5. சிக்கந்தர் பாஷா மதுரை (Sikkandar Batcha) மற்றும்
  6. பாளையங்கோட்டை

என்று போட்டியிட்டு தோல்வியடைந்தது. ஆம்பூர் போன்ற முஸ்லிம்கள் ஆதிக்கம் கொண்ட இடங்களில் தோற்றிருப்பது, திமுக ஆதரவான ஓட்டுகள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

08-05-2021


[1] மாலைமலர், கடையநல்லூர் தொகுதி உறுதியானதுகாதர் மொய்தீன், பதிவு: மார்ச் 09, 2021 12:39 IST

[2] https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/09123935/2428316/Tamil-News-Kader-Mohideen-Says-Kadayanallur-constituency.vpf

[3] தினகரன், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும்: காதர் மொய்தீன், 2021-02-28@ 20:19:03

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=658946

[5] டாப்.தமிள்.நியூஸ், 5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, By aishwarya, 01/03/2021 7:02:48 PM

[6] https://www.toptamilnews.com/indianunionmuslimleague-leader-press-meet/

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டி.. காதர் மொய்தீன் அறிவிப்பு.!, By Vinoth Kumar, Chennai, First Published Mar 1, 2021, 7:26 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/indian-union-muslim-league-competition-in-separate-symbol-kader-mohideen-qpampn

இந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை! நூதன நிபந்தனை!

ஒக்ரோபர் 27, 2019

இந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை! நூதன நிபந்தனை!

Hindu has to donate 25,000 to muslim and christian trursts-news cutting

இந்து கொலையில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டுள்ளதால், முஸ்லிம்கடைகளில் பொருளை வாங்காதே என்ற முகநூல் பதிவு: மத நல்லிணக்கத்துக்கு எதிராக, முகநுாலில் பதிவை வெளியிட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், வித்தியாசமான நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கியது[1]. நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், முகநுாலில் ஒரு பதிவை வெளியிட்டார்[2]. அதில், ‘மத மாற்றத்துக்கு எதிராக பேசிய ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். ‘அதை கண்டித்து நடந்த போராட்டத்துக்கு எதிராகவும், கொலைக்கு ஆதரவாகவும் செயல்படும், துணிக்கடையை புறக்கணிப்போம். ஹிந்துக்களே விழித்து கொள்வோம்’ என, கூறப்பட்டு உள்ளது. இந்த பதிவுக்காக, செல்வகுமாருக்கு எதிராக, மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘இந்தப் பதிவை நான் தயார் செய்யவில்லை; முகநுாலில் வந்த பதிவு அது. போலீஸ் எச்சரித்த உடன், அதை நீக்கி விட்டேன்’ என, கூறியுள்ளார்.

Hindu has to donate 25,000 to muslim and christian trursts

செக்யூலரிஸ ரீதியில் முன் ஜாமீன் நிபந்தனை: மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கினார். மத நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார். அதே போல பணத்தை கொடுத்து, ஜாமீன் பெற்றார் என்றாகிறது. ஆனால், மேல்முறையீடு சென்றாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. இந்துத்வவாதிகளும் இதில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

Hindu has to donate 25,000 -news cutting

மதசார்பற்ற நாட்டில், செக்யூலரிஸ போர்வையில் கம்யூனல் தீர்ப்புகள் கொடுக்கப் படுவது: ஜூலை மாதத்தில் ரிச்சா பட்டேல் என்பவர் இது போன்று ஒரு பதிவு செய்த போது, மசூதிக்குச் சென்று குரான் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும், என்று நீதிபதி ஆணையிட்டார். பிறகு அது சுமூகமாக இரு கூட்டத்தாரும் பேசிய சமரசம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முகநூலில் உள்ள பதவியை பகிர்ந்ததற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது/ பிரச்சனை இருபுறமும் ஆராய்ந்து கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியம், முக்கியத்துவம் மற்றும் நிர்பந்தம் உள்ளது. இது மத சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அணுகப் பட்டு, ஏதோ ஒரு செக்யூலரிஸம் ரீதியில் தீர்வு காண்பது போல உள்ளது. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 25,000 கொடுக்க வேண்டும் என்பது மதசார்பற்ற தீர்ப்ப்பா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், தமிழகத்தில் இதைவிட மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பள்ளிகளில், குறிப்பாக கிருத்துவ பள்ளிகளில், இந்து மாணவ மாணவிகள், விபூதி-பொட்டு வைக்கக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக்கூடாது, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாடக் கூடாது, போன்ற சரத்துகள் நடைமுறைப் படுத்தப் பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்திகளாக வந்திருக்கின்றன. மதசார்பற்ற செக்யூலரிஸ தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்றால், அவ்வாறே முந்தைய தீர்ப்புகள் இருந்திருக்கவேண்டும் அதாவது சட்டத்திற்கு முன்பு எல்லாம் நம்பிக்கையாளர்களும் ஒன்றுதான் என்று இருந்தால் எல்லாருக்கும் அதே மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நீதிமன்றங்கள் அத்தகைய ஒரு முன்மாதிரியை எடுத்து வைக்கும் படி நடந்து கொள்ளவில்லை. சட்டங்கள் செக்யூலரிஸ மயமாக்கப் படவில்லை. இவ்வாறிருக்கும்பொழுது, இத்தகையதீர்ப்பு வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது.

Richa Patel case July 2019

19 வயது மாணவி கைது – பேஸ்புக் பதிவிற்காக[3]: ஜார்கண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜூலை 12ம் தேதி, 2019 ரிச்சா பட்டேல் என்னும் மாணவி கைது செய்யப்பட்டார்[4]. இவ்வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ் குமார் 5 குரானை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கினார்[5]. ரிச்சா பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மன்சூர் கலிஃபா, ரிச்சா இப்போது வரை குரான் விநியோகிக்கவில்லை என பிபிசியிடம் கூறினார்[6]. மேலும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த பெண்ணின் வீட்டாரும் மற்றும் வேறு சிலரும் அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு என்னை சமாதானம் செய்ய வந்தார்கள்[7]. அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன், இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாக இருந்தது என்று கூறினார்[8].

Richa Patel case - quran-July 2019

சமரசமாக முடிந்த பிரச்சினை[9]: “ஃபேஸ்புக் பதிவிற்காக இன்னொரு மதத்தின் வழிபாட்டிடத்துக்கு சென்று குரானை விநியோகிப்பது எனக்கு சங்கடமாகத் தோன்றுகிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் என்னுடைய அடிப்படை உரிமையில் எப்படி தலையிடமுடியும்? என்னுடைய மதத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எவ்வாறு தவறாக முடியும். நான் ஒரு மாணவியாக இருக்குபோதும் என்னை திடீரென்று கைது செய்தார்கள்,” என பிபிசியிடம் கூறினார் ரிச்சா பட்டேல். ரிச்சா பட்டேல் அல்லது ரிச்சா பாரதி ராஞ்சி மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்[10]. இப்போது வரை எனக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு என்ன செய்யலாம் என்பதை நான் முடிவெடுப்பேன்” என கூறினார். அதன்பிறகு இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. திங்கள் கிழமை ராஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனீஷ் குமார், 5 குரானை வாங்கி அஞ்சுமன் கமிட்டி மற்றும் புத்தகசாலையில் விநியோகிக்க வேண்டும் என்னும் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும்போது ரிச்சாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Richa Patel case - quran-distribution, July 2019

செக்யூலரிஸ நீதிமன்றங்களில் கம்முனல் தீர்ப்புகள் ஏன்?: கடந்த ஆகஸ்ட் மாதம், கிருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் பாலியல் குற்றங்க்களுக்கு, தீர்ப்பு கொடுக்கும் போது, கிருத்துவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடக்கிறது, போன்றவை இடம் பெற்றபோது, அழுத்தம் கொண்டு வந்து, அவ்வரிகள் நீக்கப் பட்டன. அதாவது, தீர்ப்பும் வளைக்கப் பட்டது. பிறகு, இப்பொழுது, இவ்வாறான நிபந்தனை எப்படி விதிக்கப் பட்டது என்று தெரியவில்லை. என்னத்தான், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், அவர்கள் தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய, சிறிய வழக்குகளில், நீதிபதிகள் விசித்திரமாக நடந்து கொள்வது, வியப்பாகத் தான் இருக்கிறது. அதாவது, இந்துத்துவ வாதிகளுக்கு, எதிராகவே தீர்ப்புகள் வருகின்றன எனலாம்.

© வேதபிரகாஷ்

27-10-2019.

Richa Patel case - quran-distribution, July 2019-news cutting

[1] தினமலர், முகநுாலில் சர்ச்சை பதிவு, Added : அக் 26, 2019 19:49.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2397791&Print=1

[3] பிபிசிதமிழ், ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம், 17 ஜூலை 2019

[4] https://www.bbc.com/tamil/india-49013910

[5] The Hindu, Court ordeers Teenager to donate Quran over offensive Facebook post, PTI, RANCHI, JULY 16, 2019 21:20 IST, UPDATED: JULY 17, 2019 14:49 IST

[6] https://www.thehindu.com/news/national/other-states/donate-quran-courts-bail-condition-to-woman-arrested-for-offensive-post/article28491887.ece

[7] Indian Express, Donate Quran, court’s bail condition to Jharkhand woman arrested for offensive Facebook post targeting Muslims, Published: 16th July 2019 11:46 PM | Last Updated: 17th July 2019 12:51 AM.

[8] http://www.newindianexpress.com/nation/2019/jul/16/donate-quran-courts-bail-condition-to-jharkhand-woman-arrested-for-offensive-facebook-post-targeti-2004857.html

[9] Times of India, Ranchi court withdraws order to distribute Quran for bail over ‘communal’ FB post, Jaideep Deogharia | TNN | Updated: Jul 19, 2019, 13:29 IST.

[10] https://timesofindia.indiatimes.com/city/ranchi/ranchi-court-withdraws-order-to-distribute-quran-for-bail-over-communal-fb-post/articleshow/70267057.cms

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

Bharat sakti, Aurobindo 1904-08

வீக்என்டை ஜாலியாகக் கழித்த விதம்என்றாகியது: இவர்கள் முன்னமே  எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:

  1. இந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.
  2. ஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று?
  3. “பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.
  4. 130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை! என்று கேட்டிருந்தேன், வரவில்லை.
  5. “பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.
  6. 1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.
  7. “பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
  8. “பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்?
  9. தமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது!
  10. கத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன!

Suddhananda Bharati

ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா?: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.

Pondy Lit Fest - S G Suraya

தமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே? நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்!,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்?

PondyLitFest 2019-a lady lecturing standing on a table

தமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது.  வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.

PondyLitFest 2019- Hindi song

தூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.

© வேதபிரகாஷ்

07-10-2019Shenbaga convention centre, Puducherry

[1] The Hindu, Pondy Lit Fest begins, SPECIAL CORRESPONDENT, PUDUCHERRY, SEPTEMBER 28, 2019 00:38 IST; UPDATED: SEPTEMBER 28, 2019 04:56 IST

[2] Bedi inaugurates event; this year’s theme is ‘Bharat Shakti’: The second edition of the Pondy Lit Fest 2019, with the theme ‘Bharat Shakti,’ began here on Friday. Lieutenant Governor Kiran Bedi inaugurated the three-day event at Hotel Shenbaga convention centre. Ms. Bedi recalled the religious and cultural importance of the Union Territory. She spoke about the ancient history of Pondicherry and the origin of its name. Around 80 historians, writers, artists and journalists would participate in the three-day event.

Topics of discussion: Some of the topics included are “Nationalism: Just who is an anti-national,” Jammu and Kashmir: Erasing a blot on history,” Hindutva: Way of Life or rebranded Hinduism, “India in the world,” “Economy: Is $5trillion a mirage and “Fake News: Agenda or Technology to blame.” Kerala Governor Arif Mohammed Khan, Health and Public Works Minister of Assam Himanta Biswa Sarma and BJP general secretary Ram Madhav are the main speakers on the last day of the event. https://www.thehindu.com/news/cities/puducherry/pondy-lit-fest-begins/article29534347.ece

[3] The Print, India’s Right-wing doesn’t mind different voices within. That’s what separates it from Left, AJIT DATTA, Updated: 5 October, 2019 1:05 pm IST

[4] https://theprint.in/opinion/india-right-wing-mind-different-voices-within-left-wing/301461/

[5] DD, Pondy Lit Fest: A two day literature festival in Puducherry, Oct 4, 2019

[6] https://www.youtube.com/watch?v=atGA_Vl8hFE

[7] It is unfortunate that the organizers purposely prevented some experts from Tamilnadu to attend and the proceedings were held in a very restrictive manner. Ironically, most of them spoke in English and Hindi. Most of the speakers spoke in a very generalized manner [learned from three participants]. No videos are uploaded to know what exactly they spoke. There has not been any media coverage. Lt us hope that PondyLitFest 2020 would transparent, accommodative and democratic.

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

ஜூலை 9, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

 PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மோடியின் பரிசளித்தல்நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1].  இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:

  1. 2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.
  2. நவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.
  3. இரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.
  4. உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.
  5. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].
  6. டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.

Modi twitter on Cheraman mosque 2016

இதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன.  2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.

Marthoma cyrch, thiruvalla- copper plates-1

இதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

Marthoma cyrch, thiruvalla- copper plates-2

இப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,

  1. 9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  2. “இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.
  3. ஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].
  4. பிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.
  5. ஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.How Ceraman myth is promoted in Kerala by the vested groups
  6. யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. ஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.
  8. சேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
  9. சேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது!
  10. ஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.

How Ceraman myth is promoted

சேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].

© வேதபிரகாஷ்

09-07-2017

A chola painting 11th cent. depicting the ascension of Cheraman Perumal and Sundarar to kailisa

[1] Firstpost, PM’s flair gift diplomacy shows he’s a thoughtful guest, July.5, 2017. 17.00 IST.

[2] http://www.firstpost.com/india/narendra-modi-in-israel-pms-flair-gift-diplomacy-shows-hes-a-thoughtful-host-a-gracious-gu

[3] http://www.narendramodi.in/pm-modi-presents-king-salman-bin-abdulaziz-al-saud-a-gold-plated-replica-of-the-cheraman-juma-masjid-in-kerala-439914

[4] According to Sreedhara Menon, “The Cheraman legend is not corroborated by any contemporary record or evidence. None of the early or medieval travelers who visited Kerala has referred to it in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam”.

[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.

[7]  இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.

[8]  R. E. Miller, Mappila Muslims of Kerala, Orient Longman, 1976, Madras,op. cit., pp. 46-9.PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

தெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்! (5)

ஜூன் 20, 2017

தெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதைதிருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்! (5)

John Samuel - thomas myth

கிருத்துவர்களின் ஆராய்ச்சிகள் எல்லைகளைக் கடப்பது: இங்கு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட விசயங்கள் எதுவும் அலசப்படவில்லை. ஊடகங்களில் வந்தது மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிந்த, அறிந்த மற்றும் சரிபார்த்த விசயங்களை வைத்து தான் இவை தரப்படுகின்றன. கிருத்துவர்களுக்கு தங்களது நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், அதே நேரத்தில், மற்ற நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் புறம்பாக எதுவும் செய்ய முடியாது. ஆனால், தாமஸ் கட்டுக் கதையினை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் போது, அதன் பின்னணியை ஆயும் போது தான், இவ்வளவு விவரங்கள் வெளிவருகின்றன. ஆரம்பித்திலிருந்தே, ஜான் சாமுவேல் கிருத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர். ஆனால், முருகனை வைத்து அவ்வாறு செய்ததால் தான் பிரச்சினை உருவானது. பிறகு அவர்களது தொடர்புகளால், பிரச்சினை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை, எல்லாவழிகளிலும் மெய்ப்பிக்கப் படாமல் இருக்கிறது.

Shu Hikosaka, John Samuel, V R Krishna Iyer

ஜான் ஜி. சாமுவேல் யார்? [1998 முதல் 2001 வரை நடந்த பிரச்சினைகள்]:  ஜான் சாமுவேல் ஒரு கிருத்துவர், “Institute director John Samuel, an Indian Christian, increased the last percentage, opining a nonmystical­­and subtly anti­Hindu­­view that most scholars, including himself, believe Murugan was elevated from a historical person”, அதனால், முருகனை ஒரு மனிதனாக பாவித்து, பிறகு கடவுளாக உயர்த்தப் பட்டதை, இந்து-விரோதமானது என்று “இன்டுயிஸம் டுடே” வர்ணித்தது[1]. முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் ஒருவர் புகார் 1998ல் கொடுத்தார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி[2] அவரது பணம் கையாடலை விசாரித்தது. விசாரணையில் அவர் சுமார் ஒன்பது லட்சம் கணக்குக் காட்டமுடியவில்லை. அதனால், பணம் கையாடஉறுதி செய்யப் பட்டதால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார்.  பதிலுக்கு கொடுமுடி சண்முகம்[3] என்பவர் அமர்த்தப் பட்டார். விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை மே.7, 2001 அன்று ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர். இவையெல்லாம் அப்பொழுதைய தினசரிகளில் செய்திகளாக வெளிவந்தன[4].

Hotel Monisa, Mauritius, where the delegates of second International conference on Skanda-Muruka stayed in April 2001

அனைத்துலக ஸ்கந்தாமுருகா மாநாடு [1998, 2001, 2003]: அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை, கம்பனி சட்டம், பிரிவு 25ன் கீழ் ஆரம்பித்து, ஷேர்களை பங்குகளை / விற்க முயற்சித்தார். மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. முன்பு, ஏப்ரல் 2001ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில் பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது. மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது. ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்காகத்தான். தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டார் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார். பிறகுதான் அவரது நண்பர்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்தது.

J.G.Kannappan, I.Ramachandran, S,P.Sabharatnam

ஸ்கந்தமுருக இயக்குனர்கள் அதிர்ந்தது, நண்பர்கள் ஒதுங்கியது: ஒரு ஈரோடு மருத்துவர்  எம்.சி. ராஜமாணிக்கம்- நொந்தேப் போய்விட்டார். ஜே. ஜி. கண்ணப்பன் ஒதுங்கி விட்டார். வி. பாலாம்பாள் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல நடித்தார். ஜே. ராமச்சந்திரன், டாக்டர் ராம்தாஸ், ராஜு காளிதாஸ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் திடீரென்று தனது கிருத்துவ புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தெய்வநாயகம் போலவே இவனும் அந்த தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டார். நியூயார்க்கில் ஒரு மாநாடு, பிறகு சத்யபாமா காலேஜில் (ஜேப்பியார் உபயம்). இப்பொழுது, இந்த செம்மொழி மாநாட்டில் அடக்கம்! இந்த கூட்டத்தைப் பாருங்களேன் – மணவை முஸ்தபா, அப்துல் ரஹ்மான், …………..இப்படி முஸ்லீம்கள், அன்னி தமசு (தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிக்கு உதவியவர், சவேசுவின் மனைவி என்று சொல்லப்படுகிறது), சாமுவேல்……….கிருத்துவர்கள், மற்ற நாத்திகர்கள்………………….தயானந்த பிரான்சிஸ் தாமஸ் கட்டுக்கதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார், அதனை வீ. ஜானசிகாமணி குறிபிடுவார்; பிறகு, இருவரும் சேர்ந்து எழுதுவார். ஜே.டி. பாஸ்கர தாஸ் எழுதும் போது, தைக் குறிப்பிடுவார். இப்படித்தான், அவர்களது ஆராய்ச்சி வளரும்.

john-samuel-colluding-with-deivanayagam

2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.  இப்பொழுது பிஜேபி ஆட்சி வந்துள்ளதால், இவர்களது வேலை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். கேரளாவில் செரியனின் பட்டனம் ஆராய்ச்சியும், இதே தாமஸ் கட்டுக்கதையினை நோக்கி வந்துள்ளதை கவனிக்கலாம். பி.எஸ். ஹரிசங்கர் என்பவர், ஒரு புத்தகத்தை எழுதி [B S Harishankar’s ‘Pattanam: Constructs, Contexts and Interventions’] மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது[5].

Pattanam, Hari shankar, P J Cherian, thomas myth

2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[6]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[7]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது[8].

© வேதபிரகாஷ்

20-06-2017

First early Christianity in India held 2005 - Santhosam, Deivanayagam, John Samuel

[1] http://www.hinduismtoday.com/modules/smartsection/print.php?itemid=4380

[2] The Institute of Asian Studies is non-profit research centre was registered as an autonomous Society in 1982 and it is governed by a team of members in the capacity of the Board of Governors. Eminent personalities from various walk of life – judiciary, education, government, culture – who evince a keen interest in Asian culture, language, and literature form the Boar d of Governors which is headed by Justice V.R. Krishna Iyer.

[3] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419   E-mail : kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, காலமகிவிட்டார் என்று தெரிகிறது.

[4] “……………பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம். பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்”, என்று குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது, தினத்தந்தி, மாலைமுரசு, தினமணி போன்ற தமிழ் செய்திதாள்களிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் விவரங்கள் வந்துள்ளன. இப்பொழுது, கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.

[5] http://www.newindianexpress.com/states/kerala/2017/jun/05/questioning-efforts-to-connect-myth-with-history-1612964–1.html

[6] Second International Conference Seminar on the History of early Christianity in India (14th to 17th January 2007, http://www.xlweb.com/heritage/asian/christianity-conference2.htm

[7] Third International Conference on the History of Early Christianity in India and the Middle East (September 2008)

[8] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)

ஜூன் 19, 2017

எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)

V. G. Santhosm awarded - life time achievement

வி.ஜி.சந்தோசம் யார்?: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.

V. G. Santhosam was awarded Doctorate Degree by Jerusalem university

அனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.

First early Christianity in India held 2005 - Santhosam, Deivanayagam, John Samuel

சுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுகிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].

VGP Evangelixal nexus

 

முருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:

1.        ஜி. ஜான் சாமுவேல்.

2.       டி. தயானந்த பிரான்சிஸ்[9].

3.       ஜார்ஜ் மெனசேரி

4.       வி. தெய்வசிகாமணி.

5.        மோசஸ் மைக்கேல் பாரடே[10].

6.       பி. தியாகராஜன்.

7.        ஜி. ஜே. பாண்டித்துரை

8.       பி. லாசரஸ் சாம்ராஜ்

9.       தன்ராஜ்.

10.     ஜே. டி. பாஸ்கர தாஸ்.

11.      வொய். ஞான சந்திர ஜான்ஸான்.

12.     ஜாலி செபாஸ்டியன்.

13.     டி. யேசுதாஸ்.

14.     ஜொனாதன் சான்டியாகோ

15.     லாரன்ஸ் வின்சென்ட்.

16.     எர்னெஸ்ட் பிரதீப் குமார்.

இப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம்,  இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.

The covention was held at VGP grounds, Vandalur on 26-01-2015

விஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.

V. G. Sathosam awarded Doctorate etc

கிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்?: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.

© வேதபிரகாஷ்

19-06-2017

Tamil christuva koil, New York-2

[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.

[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.

[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.

[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.

[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.

[6] http://www.instituteofasianstudies.com/board_governors.html

[7] For further details on the Conference, please contact: Dr. G. John Samuel, Founder-Director, Institute of Asian Studies, Chemmancherry, Sholinganallur P.O.

http://www.instituteofasianstudies.com/christianity_conference.html

[8] G. John Samuel (General Editor),  Early Christianity in India : (with parallel developments in other parts of Asia), editors, J.B. Santiago, P. Thiagarajan, International Centre for the Study of Christianity in India, Institute of Asian Studies, 2008, Chennai.

[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.

[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

[11]  கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.