சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா?

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா?

Guru and the faithful followers

ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் – மற்றும் அவரது சீடர்கள்

மாருதிராவ் சுவாமி தாக்கப்பட்டது  (டிசம்பர் 31, 2012),  மறைந்தது  (ஜனவரி 31, 2013): கர்நாடகாவில், சவ்லி மடத்தில், மூன்று இளைய மடாதிபதிகள், யாக குண்டத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட செய்தி பலவிதத்தில் அலசப்பட்டு வருகின்றது. பீதர் மாவட்டத்தில் உள்ள சவ்லி மடம், தமிழ் நாளிதழ்கள் கூறுவது போல, பழமை வாய்ந்த மடமல்ல, 1989ல் தான் ஆரம்பிக்கப்பட்டது. ரெட்டி சமூகத்தினருக்கு சொந்தமானது என்றெல்லாம் எழுதியுள்ளனர். இந்த மடத்தின் தலைமை மடாதிபதி, கணேஷ் மகா சுவாமி என்பவர். இளைய மடாதிபதியாக இருந்த, மாருதி ராவ் சுவாமி (Maruti Rao Swami), மடத்தின் அருகிலேயே 31-12-2012 அன்று யாரோ அடையாளம் தெரியாத ஆட்களால் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கிடந்தார். அப்பொழுது போலீஸார் அதிகம் அக்கரை காட்டவில்லை. பிறகு ஜனவரி 31 2013, முதல், மாயமாகி விட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் ஏ.எம். ஜோதி என்ற எஸ்.பி இதுவரை ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. “அவரைக் கடத்திக் கொண்டு சென்றுள்ளனரா, உயிரோடு இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று எங்களுக்கு ஒன்றும் தெரியாது”, என்கிறார். “மறைவதற்கு முன்பு தனது தாயாருடன் பேசியுள்ளார். தான் இறந்ததும் இன்சூரன்ஸ் பணத்தைக் கொண்டு கடன்களை தீர்த்து விடுமாறு கூறியுள்ளார்”, என்று மேலும் கூறுகிறார்[1]. போன் மூலம் யார் யாருடன் பேசியுள்ளனர் என்பதைக் கண்டு பிடிக்கும் போது, மற்ற சீடர்கள் பேசியதையும் போலீஸார் கண்டறிய முடியும்.

Chawli mutt Karnataka

சௌலி மடம் – மடாதிபதியின் சிலை – போலீஸ் விசாரணை

கணேஷ் மகாசுவாமி தற்கொலை செய்து கொண்டது  (பிப்ரவரி 28, 2013): பல இடங்களில் தேடியும் மாருதி ராவ் சுவாமிகள் கிடைக்காததால், மடாதிபதி தான், அவரை கொன்று விட்டார் என, சில பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. குறிப்பாக அஷோக் சுவாமிகள் என்ற சீடர் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்தார் (விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன). இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தும், பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால், மனம் உடைந்த, தலைமை மடாதிபதி கணேஷ் மகா சுவாமி, கடந்த பிப்ரவரி, 28ம் தேதி இரவு, கோயில் கருவறையில் உள்ள சிவன் சிலை மீது, கடிதம் எழுதி வைத்து விட்டு, கருவறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.

Chawli mutt suicide - entrance

போலீஸ் விசாரணை

ஜீவசமாதி அறிவிப்பு: கடந்த பிப்ரவரி, 6ம் தேதி, மடத்தில் நடந்த ஆன்மிக கூட்டத்தில் பங்கேற்ற, கணேஷ் சுவாமிகள், “இது என்னுடைய கடைசி பொது நிகழ்ச்சி. நான் ஜீவ சமாதி அடையப் போகிறேன்என்றார். அதிர்ச்சியடைந்த பொது மக்கள், முடிவை மாற்றிக் கொள்ளும்படி கூறினர். எப்போதும், காலை, 10:00 மணிக்கெல்லாம் தன் அறையிலிருந்து வெளியே வந்து தரிசனம் தரும் கணேஷ் சுவாமிகள், பிப்ரவரி, 28ம் தேதி, காலை, 11.30 மணியாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மடத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் அங்கு இல்லை; கோவில் கருவறையில் பிணமாக கிடந்தார். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட, அவரின் கடிதத்தில், “மாருதி சுவாமிகளை சமூக விரோதிகள் தாக்கிய புகாருக்கும், அவர் கடத்தப்பட்டதாக மடம் சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கும், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீதே பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்‘ என, குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்துதான், இளைய மடாதிபதிகள் மூவர், தற்கொலை செய்து கொண்டது, சவ்லி மடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jagannaath Swami

ஜகன்னாத சுவாமி – தீக்குளித்த மூன்றில் ஒருவர்

சௌலி மடம் வளர்ந்த விதம்  (1989-2012): இந்த மடத்திற்கு சொந்தமாக ஆறு ஏக்கர் பரப்புள்ள நிலம் இருக்கிறது. இதை கிராம மக்களும், ஞானேஸ்வர மகராஜும் கொடுத்துள்ளனர். பிறகு பணத்திற்கு குறைவு எதுவும் இல்லாதலால், அவ்விடம் பெரிய மடமாகக் கட்டப்பட்டது. வரும் பக்தர்களுக்கு போதனை செய்து கொண்டு, வாரத்திற்கு ஒருமுறை தரிசனம் கொடுத்து வந்தார். தான் இறக்கும் போது, தன்னோடு இறக்கும் ஒரு குழுமத்தை உருவாக்க முயற்சித்ததாகத் தெரிகிறது[2]. சுமார் 50 அடி உயரத்தில் தன்னுடைய சிலையை அமைத்து, அதைச் சுற்றிலும், மற்ற கடவுளர்களது சிலைகளை சிறியதாக வைத்து அமைத்தார். புகழ் அதிகரிக்கும் போது, சாமியார்களுக்கு, குரு போன்றவர்களுக்கு, தாமே கடவுள் என்ற எண்ணம் வந்டுவிடும் அல்லது பக்தர்களே அவர்களை அவ்வாறு செய்துவிடுவர்.

Pranav Swami

பிரணவ் குமார் சுவாமி – இளைஞரான தீக்குளித்தவர்ளில் ஒருவர்

எடுயூரப்பா வந்தது,  ஆசிரமத்தில் பிளவு ஏற்பட்டது: முந்தைய முதலமைச்சர் எடியூரப்பா இங்கு சிலமுறை வந்துள்ளார். அப்பொழுது, மடத்திற்கு ஏதாவது செய்யுமாறு வேண்டியுள்ளார். வரும் பணத்தில், தன்னுடைய சிலையை இன்னும் பெரிதாக வைக்கவும் ஏற்பாடுகளை ஆரம்பித்தார். இதை சில பக்தர்கள் விரும்பவில்லை. மேலும் பிரணவ சுவாமி, வீர ரெட்டி சுவாமி மற்றும் ஜகன்னாத சுவாமி இவருடன் இருக்க, மற்றவர்கள் விலகி சென்றுவிட்டனர். இருப்பினும் மற்ற 13 சீடர்களும் மடத்திற்கு வெளியே, ஆனால், பிரதான வாயிலின் அருகே அறைகளைக் கட்டிக் கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் எல்லோரும் படித்தர்கள் அல்லர், வேதம் முதலியவை தெரியாது. பெரியவர் சொன்னதைக் கேட்டு நடந்து வந்தனர். உண்மையில் அவர்களுக்கு இந்த மடத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாது[3]. ஆகவே கூட ஒட்டிக் கொண்டு வந்தவர்கள், நிச்சயம் ஆன்மீகத்திற்கு என்றில்லாமல், சொத்து, பதவி முதலிய ஆசைகளுடன் இருந்தனர் என்று தெளிவாகிறது. அத்தகையோர் அரசியல்வாதிகளுக்கு எளிதாக பணிந்து வேலை செய்வது சகஜமே.

KPN photo

எடியூரப்பாவை ஆதரித்த லிங்காயத் மடாதிபதிகள்

யார் அடுத்த மடாதிபதி  – என்ற போட்டி வந்தது: முதலில் பெரியவருக்குப் பிறகு, தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மடாதிபதியாக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். பிறகு, இதனை அரசு நிர்வாகத்தில் அல்லது மற்ற மதக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் அரசியல் ஆக்கவேண்டும் என்ற முதல் முயற்சி எனலாம்[4]. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை[5]. இதன் பிறகு தான், இந்த மூன்று சீடர்களும் அத்தகைய முடிவை எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லது, தமது குரு சொன்னப்படி உயிர்விடுவது சிறந்தது என்றும் எண்ணினர்[6]. டிராக்டர்களில் விறகைக் கொண்டுவந்து வாயிலின் பக்கத்தில் குவித்துள்ளனர். இரண்டு கேன்களில் 60 லிட்டர் மண்ணெண்ணையும் வாங்கி வைத்துள்ளனர். பிறகு, அவர்கள் தீர்மானித்தபடியே, தீயை வளர்த்து அதில் குதித்துள்ளனர், இவற்றை ஒரு வீடியோ மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வீடியோவை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்[7].


[4] தமிழகத்தில் அப்படித்தான், மடாதிபதிகள், கோவில்கள் மிரட்டப்பட்டு, அரசுடமையாகி உள்ளது என்பதனை நினைவு கூரலாம். அதற்கு நாத்திகர்கள் ஒத்துழழைத்தனர் என்றால், இங்கு காங்கிரஸ்காரர்கள் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது.

[5] The other 13 disciples stayed in rooms built just outside the main entrance. Since the maharaj died, the three closest to him stayed inside the temple. Due to tension created by the mysterious circumstances of his death, police were posted outside the gates. Police say the 16 disciples had tried to resolve among themselves the issues of leadership and succession but could not reach a consensus. “Nearly all the disciples are illiterate; none knows the scriptures. They just followed what the chief seer said. Without him, they didn’t know what to do with this huge mutt,” says SP Tyagarajan. “About a fortnight ago, they met and one suggestion was to hand the mutt over to the district administration or to a religious group. They failed to take a decision,” he added

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா?”

  1. vedaprakash Says:

    ‘Chowli Mutya asked us to immolate ourselves’
    http://www.thehindu.com/todays-paper/tp-national/chowli-mutya-asked-us-to-immolate-ourselves/article4600716.ece

    Sri Ganeshwar Avadhoot aka Chowli Mutya, head of the Chowli Math, pressured his followers into mass suicide, making them swear before him, devotees who committed suicide have said in a video recorded before their death.

    Three devotees, Jagannath Swami, Eera Reddy Swami and Pranav Swami, immolated themselves in the math on Monday. The police have found a video camera with statements of the three.

    In the video, they are seen stating that Chowli Mutya asked 18 of his followers to follow him in death, two weeks before he died. The math head died on February 28, in what appeared to be suicide.

    “One month after my death, you should come to me through the route of Agni (sacred fire), Guruji said. He made us swear before him, that we would follow him,” Jagannath Swami is seen saying.

    Chowli Mutya told us that we would not get any position in the math once he was gone, Pranav Swami said in the message. All 18 followers took the oath, but they backed out, he added. His eyes move away from the camera once in a while to look at the person filming it, as if to seek approval for his statements.

    Eera Reddy, the oldest of the three, is seen speaking mostly in philosophical terms. He said he was pained by the separation from his guru.

    The recording is almost like a video blog. The three had mentioned its existence and the location of the camera “containing important information” in their suicide note.

    “This shows that all is not well in the math,” a police officer investigating the issue said.

    There has been no announcement on the annual fair of the math scheduled for April 11.

    Eighteen were in on the suicide pact, video made by three devotees who died reveals

  2. சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4) | Indian Secularism Says:

    […] [5] https://secularsim.wordpress.com/2013/04/11/chowli-pontiff-immolation-desire-for-wealth-post-politics… […]

  3. M. K. Mahalakshmi Says:

    ஒரு குரு இருக்கும் போதே, யார் அடுத்த மடாதிபதி என்ற பேச்சு வந்துள்ளது எனும்போதே, அந்த 13 பேரும் ஆசைப்பட்டது பதவிற்காகத்தான் என்று தெரிகிறது.

    மற்ற மூவரும் மடாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று தெரிகிறது.

    மற்றவர்கள் அரசியல்வாதிகளின் தூண்டுதல் பேரில் அல்லது கூட்டு மூலம் சதி செய்திருந்தால் உண்மை வெளிவந்தாக வேண்டும்.

பின்னூட்டமொன்றை இடுக