Archive for the ‘சோனியா காங்கிரஸ்’ Category

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரைசொன்னது!

ஜூன் 25, 2023

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரை சொன்னது!

பீஹாரில் 16 கட்சிகளின் கூட்டம்: அடுத்த ஆண்டு 2024ல் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் 23-06-2023 அன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் நடைபெற்றது. இதில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (53 வயது), தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

23-06-2023 அன்று லாலு பிரசாத் யாதவ் ராகுலை திருமணம் செய்து கொள் என்றது: லாலு இந்தியில் பேசியதை தமிழ் ஊடகங்கள் வரிந்து கொண்டு செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தி தெரியாது போடா என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியும், பிஹாரிகளை நக்கல் அடித்தும் வரும் தமிழ் ஊடகங்களுக்கு இதில் என்ன அக்கரை என்று தெரியவில்லை. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் [75 வயது] கூறியதாவது[1], “ராகுல் காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே கூறியிருக்கிறேன்[2]. நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்[3]. ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை[4]. இன்னும் காலம் கடக்கவில்லை. தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். ராகுலின் திருமணம் குறித்து அவரது தாயார் சோனியா காந்தி தன்னிடம் பேசியுள்ளார்[5]. நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும்[6], பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது[7]. அப்படி கல்யாணம் செய்து கொள்லும் பொழுது, நாங்கள் எல்லோரும் பாராத் / ஊர்வலத்தில் கலந்து கொள்வோம்,” என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இப்போது நீங்கள் சொன்னது நடக்கும் என்றார்[8].  கடந்த ஜனவரி மாதம், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது அளித்த பேட்டியில், சரியான பெண் கிடைக்கும்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது[9]..  டிசம்பரில், ராகுல் காந்தி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தாயார் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அவரது பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் பண்புகளை தனது துணை கொண்டிருக்க விரும்புகிறேன் என்று கூறினார்[10].

19-06-2023 அன்று ராகுலின் பிற்ந்த நாள்: 19-06-1970 அன்று பிறந்த ராகுலுக்கு 53 வயதாகிறது. 23-06-2023 அன்று இக்கூட்டம் என்றால், சரியாக சென்ற 19-06-2023 ராகுலின் பிறந்த நாள் ஆகிறது. எனவே ஒருவேளை, 75 வயதாகும் லாலு அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்லியிருக்கலாம்[11]. ஆகவே, தமாஷுக்காக சொல்லவில்லை[12]. லாலு முன்னர் ராகுலின் தந்தையால் தான் மாட்டுத் தீவின ஊழலில் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குச் சென்றார். இப்பொழுது, அதே குடும்ப வாரிசுடன் கூட்டு வைத்துக் கொள்கிறார், என்றும் ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மேலும், ராகுலின் பிறந்த நாளையே காங்கிரஸ்காரர்கள் மறந்து விடார்களா அல்லது கொண்டாடக் கூடாது என்ற மேலிடத்து உத்தரவா என்று தெரியவில்லை. 53-வயது என்றால், ராகுலின் இளமைத் தனம் போய்விடும் என்று நினைத்தார்கள் போலும். இருப்பினும், சமீபத்தில் தாடி வைத்துக் கொண்டபோது, நரைத்த முடி தெரியத்தான் செய்தது.

பிஜேபியின் திருமணஒப்புமை கிண்டல்: லாலு ராகுலுக்கு அற்வுரைக் கொடுத்தாரா, கிண்டல் அடித்தாரா என்ற நிலையில், பிஜேபிகாரர்களும் விடவில்லை. நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார்[13]. ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்) என்று தெரியவில்லை[14]. பெண்ணும் யார் என்று புரியவில்லை[15]. ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள் என பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து கிண்டலடித்துள்ளார்[16]. ஒருவேளை ராகுல் தான் பிரதம மந்திரி வேட்பாளர் என்பதனை மறைமுகமாகக் கூறினார் போலும். இந்தியில் பேசியதால், இந்தி தெரியாத கட்சித் தலைவர்கள் தமக்கு இந்தி தெரியாது என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்யும்.

2013ல் கொடுத்த விளக்கம்பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2013ல் ராகுல் விவாகம் பற்றி நடந்த விவாதம்: கடந்த  2013 மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும் ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[17]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[18]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[19]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[20]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

© வேதபிரகாஷ்

25-06-2023


[1] தினமணி, ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்: லாலு பிரசாத், By DIN  |   Published On : 23rd June 2023 09:56 PM  |   Last Updated : 23rd June 2023 09:56 PM.

[2] https://www.dinamani.com/india/2023/jun/23/lalu-prasad-yadav-asks-rahul-gandhi-to-get-married-4026423.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா,  ராகுல் நாங்க சொல்றத கேட்கணும்.. செல்லமாக மிரட்டிய லாலு பிரசாத்.. வெடித்து சிரித்த அரசியல் தலைவர்கள்!,  By Vignesh Selvaraj Published: Friday, June 23, 2023, 18:52 [IST],

[4] https://tamil.oneindia.com/news/india/lalu-prasad-asks-rahul-gandhi-to-get-married-made-fun-at-press-meet-after-opposition-meeting-518035.html

[5] நக்கீரன், திருமணம் நடக்கும்என்ற ராகுல்காந்தி; பாட்னாவில் நடந்த சுவாரசியம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 24/06/2023 (08:26) | Edited on 24/06/2023 (08:50).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/you-have-said-it-it-will-happen-rahul-gandhi-interesting-happenings-patna

[7] சமயம், தாடியை எடுத்துட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பாராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் அட்வைஸ்!, Authored by Bahanya Ramamoorthy | Samayam Tamil |,

[8] https://tamil.samayam.com/latest-news/india-news/lalu-prasad-yadhav-advise-to-ragul-gandhi-to-get-married-soon-in-patna-meeting/articleshow/101232555.cms

[9] காமதேனு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்திய லாலு பிரசாத் யாதவ்ராகுல் கூறிய பதில் என்ன?, Updated on : 23 Jun, 2023, 9:10 pm

[10] https://kamadenu.hindutamil.in/politics/rahul-gandhi-was-asked-by-lalu-yadav-to-get-married-his-response

[11] இந்தியன்.எக்ஸ்பிரஸ், பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலகலப்பு: ராகுல் திருமணத்தை வலியுறுத்திய லாலு! , Written by WebDesk, tamil news, June 23, 2023 20:15 IST

[12] https://tamil.indianexpress.com/india/still-not-too-late-to-get-married-lalu-prasad-yadav-makes-a-wisecrac,k-at-rahul-gandhi-at-patna-meet-704805/

[13] மாலைமலர், திருமண ஊர்வல அலங்கரிப்பில் மாப்பிள்ளை யார்?- பா.ஜனதா கிண்டல், Byமாலை மலர்23 ஜூன் 2023 10:10 AM (Updated: 23 ஜூன் 2023 10:11 AM).

[14] https://www.maalaimalar.com/shots/bjp-mp-ravi-shankar-prasad-takes-jibe-on-the-opposition-meeting-who-is-the-groom-pm-contender-626240

[15] புதியதலைமுறை, அனைவரும் மாப்பிள்ளைகள்…” எதிர்க்கட்சிக் கூட்டத்தை விமர்சித்த பாஜக!, Prakash J, Published on : 24 Jun, 2023, 8:50 pm.

https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[16] https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[17]  Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[18]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[19] http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[20] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

பிப்ரவரி 22, 2023

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

கொரியர் டெல்லா சேரா என்ற இத்தாலி நாளிதழில் வெளிவந்த ராகுல் காந்தியின் பேட்டி (1-02-2023): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி [52 வயதான] இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு [ Italian daily “Corriere della Sera”] பேட்டி அளித்துள்ளார்[1]. இப்பேட்டி பிப்ரவரி 1, 2023 அன்று முழுபக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த பேட்டியில் தனது திருமணம், பாரத் ஜோடோ யாத்திரை, 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்[2]. ஆனால், இந்திய ஊடகங்களில் சுருக்கமாக வெளிவந்துள்ளது எனலாம். ராகுலின் திருமணம் பற்றி அடிக்கடி இத்தகைய கேள்விகள், செய்திகள் மற்றும் குசுகுசுக்கள் கடந்த 25 ஆண்டுகளாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. பல பெண்களுடன் இருப்பது போன்ற புகைப் படங்கள், அவர்கள் தான் காதலி, கார்ள்-பிரென்ட், வருங்கால மனைவி, திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார், திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது வரை ஒப்புக்கொண்ட-ஏற்றுக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.

பல இடங்களில் படித்தவர்: இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போது வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி ஜூன் 19, 1970 அன்று புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தலைவரான மோதிலால் நேரு ஆவார். இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர். 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார். மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவர் 1995 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் பட்டம் பெற்றார்.

ரகசியமாக வேலை செய்தவர்-காதலித்தவர்: ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் [the Monitor Group[3], a management consulting firm, in London] மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002-ன் பிற்பகுதியில் மும்பை திரும்பினார். 2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.

இத்தாலிய உறவுகளை மறக்காதவர்: 52 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, “விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது. குழந்தைகள் பெற விரும்புகிறேன்” என்றார்[4]. எங்கள் குடும்பத்தில் இந்திய பாட்டியான இந்திரா காந்திக்கு என் மீது பாசம் அதிகம்[5]. இத்தாலி பாட்டிக்கு பிரியங்கா மீது பாசம் அதிகம்[6]. இத்தாலி பாட்டி பாவ்லோ மைனோ [Paola Maino] 98 வயது வரை வாழ்ந்து கடந்தாண்டு தான் மறைந்தார்[7]. கடந்த வருடன் 2022 ஆகஸ்ட் மாதத்தில் காலமானார் . இத்தாலி பாட்டியுடன் மிகுந்த பாசத்துடன் இருந்தேன். என் பாட்டியுடன் மிகவும் பாசத்துடன் இருந்தேன். அதே போல மாமா வால்டர் மற்றும் அவரின் மகன்களிடமும் பாசமாக இருந்தேன்… என்று குறிப்பிட்ட ராகுல்[8], “இந்திய ஒற்றுமை யாத்திரை முடியும் வரை தாடியை எடுக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் தான் தாடியுடன் உள்ளேன். இனி தாடியை வைத்திருக்கலாமா அல்லது எடுக்கலாமா என்று முடிவு செய்வேன்” என தாடி ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்[9].

இந்திய அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்[10]: இந்தியாவில் ஏற்கெனவே ஃபாசிஸம் உள்ளது[11]. ஜனநாயக அமைப்புகள் நிலைகுலைந்துள்ளன. நாடாளுமன்றம் செயல்படுவதில்லை. அதிகார சமநிலை இல்லை. நீதித் துறை சுதந்திரமாக இல்லை. அனைத்து செயல்பாடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஊடகம் சுதந்திரமாக இல்லை. கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகள், நிறுவனங்களில் ஆா்எஸ்எஸ்ஸின் ஹிந்து பயங்கரவாதிகள் ஊடுருவி, அவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றனா். இந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனா். அவா்களால் தங்கள் எதிர்காலத்தைப் பார்க்க முடியவில்லை. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், பிரதமா் மோடியை 100 சதவீதம் தோற்கடிக்க முடியும். மாற்றுக் கண்ணோட்டத்தை முன்வைப்பதன் மூலம் ஃபாசிஸம் தோற்கடிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். வரும் தேர்தலில் பிரதமர் மோடி நிச்சயம் தோற்று போவார் என்று சொல்லவில்லை. அதேவேளை, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தால் 100 சதவீதம் அவர்களை தோற்கடிக்கலாம். நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் பாசிசம் ஊடுருவிவிட்டது. நாடாளுமன்றம் முறையாக செயல்படுவதில்லை.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெளி நாட்டு உறவுகள் பற்றிக் குறிப்பிட்டது: உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தை பொறுத்தவரை நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை[12]. அது வெளியுறவுக்கொள்கை சார்ந்தது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு காண்பது அவசியமானது[13]. சீனாவால் மேற்கத்திய நாடுகளால் தொழில்துறையில் போட்டியிட இயலாது. ஆனால், இந்தியாவால் அது முடியும்” என்றார். ராகுல் காந்தி 164 நாட்கள் நாடு தழுவிய நடைபயணத்தை அன்மையில் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் கடந்த மாதம் 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவுற்றது. பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி, கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட பயணமாக ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் சென்றுள்ளார். அதே நேரத்தில் கேம்பிரிட்ஜில் பேசப் போகிறார், சீனாவைப் பற்றி ரகசியமாக பேசப் போகிறார், என்றெல்லாம் செய்தி வந்துள்ளது.

© வேதபிரகாஷ்

22-02-2023.


[1] நியூஸ்.18.தமிழ், சிங்கிளாக இருப்பது ஏன்?… தாடி ரகசியம்மனம் திறந்த ராகுல் காந்தி..!, NEWS18 TAMIL First published: February 22, 2023, 09:07 IST, LAST UPDATED : FEBRUARY 22, 2023, 09:34 IST.

[2] https://tamil.news18.com/news/national/rahul-gandhi-answers-about-his-marriage-plans-in-an-interview-to-italian-news-media-896290.html

[3] Monitor Deloitte is the multinational strategy consulting practice of Deloitte Consulting. Monitor Deloitte specializes in providing strategy consultation services to the senior management of major organizations and governments.

[4] மாலைமலர், இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: ராகுல் காந்தி பதில், By மாலை மலர், 22 பிப்ரவரி 2023 8:15 AM

[5] https://www.maalaimalar.com/news/national/why-not-married-yet-rahul-gandhi-answers-575262

[6] தமிழ்.வெப்.துனியா, குழந்தை பெற்று கொள்ள ஆசை…..ராகுல் காந்தி பேட்டி…!, செவ்வாய், 21 பிப்ரவரி, 2023 20:49 IST

[7] https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/rahul-gandhi-says-about-marriage-and-child-123022100079_1.html

[8] தமிழ்.ஏபிபி.லைவ், Rahul Gandhi: “திருமணம் நடக்காதது ஏன் என தெரியவில்லை; ஆனால் இந்த ஆசை இருக்கு” – மனம் திறந்த ராகுல் காந்தி!, By: ஆர்த்தி | Updated at : 22 Feb 2023 12:39 PM (IST), Published at : 22 Feb 2023 12:39 PM (IST)

[9] https://tamil.abplive.com/news/india/former-congress-president-rahul-gandhi-has-mentioned-in-an-interview-to-a-private-daily-that-he-is-not-married-but-wants-to-have-children-103132

[10] தினமணி, திருமணம் செய்யாதது விசித்திரம்! – ராகுல் காந்தி பேட்டி, By DIN  |   Published On : 22nd February 2023 12:26 AM  |   Last Updated : 22nd February 2023 12:26 AM

[11] https://www.dinamani.com/india/2023/feb/22/i-was-indian-grandmothers-favourite-priyanka-italian-grandmothers-rahul-4005068.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, குழந்தைகளை பிடிக்கும்திருமணம் எப்போது? இத்தாலி நாளிதழில் ராகுல் ஓபன் டாக்.. மோடி பற்றியும் பேச்சு, By Mani Singh S, Published: Tuesday, February 21, 2023, 21:12 [IST.

[13] https://tamil.oneindia.com/news/delhi/i-would-like-to-have-children-rahul-gandhi-interview-to-the-italian-daily-499794.html

சிவப்பு கலர் புடவையும், முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும், புத்தக எதிர்ப்பும்-ஆதரவும், செக்யூலரிஸமும், கருத்துரிமையும் படும் பாடு!

ஜனவரி 19, 2015

சிவப்பு கலர் புடவையும், முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும், புத்தக எதிர்ப்பும்-ஆதரவும், செக்யூலரிஸமும், கருத்துரிமையும் படும் பாடு!

All India Rajiv Gandhi Brigade activists burn an effigy of Javier Moro  in New Delhi on June 8, 2010.

All India Rajiv Gandhi Brigade activists burn an effigy of Javier Moro in New Delhi on June 8, 2010.

சிவப்பு கலர் புடவை புத்தகத்திற்கு காங்கிரஸார் எதிர்ப்பு: “தி ரெட் சாரி” [The Red Sari] என்ற தலைப்பில் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜாவியர் மாரோ [Javier Moro] எழுதியுள்ள சோனியாவின் வரலாற்று நூலுக்கு எதிராக காங்கிரஸ் பயங்கர பிரசார யுத்தத்தை [terror campaign] துவக்கி இருப்பதாக நூலாசிரியர் மாரோ குற்றம் சாட்டியுள்ளார்[1]. வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் சோனியாவின் குழந்தை பருவம், காதல் வாழ்க்கை, இந்திரா காந்தி குடும்பத்தின் மருமகளாக ஆனது, அரசியல் தலைவராக உருவெடுத்தது, பிரதமர் பதவியை உதறியது உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன[2]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “சோனியா தொடர்பான இந்த புத்தகம் தற்போது இந்தியாவில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் இந்தியாவிற்குள் வராமல் தடுக்க காங்கிரசார் பெரும் பகீரத பிரயத்தனம் செய்தனர். ஆங்கில

Javier Moro and Publisher Roli Books Pramod Kapoor launch The Red Sari A Dramatised Biography of Sonia Gandhi in New Delh

Javier Moro and Publisher Roli Books Pramod Kapoor launch The Red Sari A Dramatised Biography of Sonia Gandhi in New Delh

காங்கிரஸ் எதிர்ப்பு 2010 முதல் 2015 வரை:  புத்தக வெளியீட்டாளர்களை, ஒரு காங்கிரஸ் தலைவர் பகிரங்கமாகவே மிரட்டினார். கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் சட்ட நோட்டீஸும் அனுப்பியது[3]. அப்புத்தகம் அயல்நாடுகளில் கூட விற்கக்கூடாது என்று காங்கிரஸார் கூக்குரல் இடுகின்றனர்[4].  அபிஷேக் மனு சிங்வி சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்போம் என்று நோட்டீஸ் தான் அனுப்பியிருக்கிறார், அது நாங்கள் அப்புத்தகத்தம் வெளியிடுவதைத் தடுக்க முடியாது, என்று ரோலி பதிப்பகத்தினர் கூரியுள்ளனர். மேலும், ஜாவியர் மாரோ தான் 2014 நடந்த விவரங்களை சேர்த்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்[5]. அதன்படியே 15-01-2015 அன்று அப்புத்தகம் வெளியிடப்பட்டது[6].

சோனியா புத்தகம் பிரச்சினை 2015

சோனியா புத்தகம் பிரச்சினை 2015

காங்கிரஸ் மெயில் மூலம் ஸ்பெயின் பதிப்பகத்தாருக்கு மிரட்டல்[7]கருத்துரிமை, பேச்சுரிமை என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நேரத்தில், இப்புத்தகத்தை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், பிறகு அமைதியாகி விட்டதும், வியப்பாக இருக்கிறது. அந்த புத்தகத்தை அனைத்து கடைக்காரர்களிடமிருந்தும் உடனடியாக திரும்ப பெறுமாறு, ஸ்பெயின் நாட்டு வெளியீட்டாளர்களுக்கு இ-மெயில் மூலம் காங்கிரசார் மிரட்டல் கடிதம் அனுப்பினர். இவ்வளவுக்கும் அப்போது இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகவில்லை; ஸ்பேனிஷ் (2008), இத்தாலி மற்றும் இதர மொழிகளில்தான் வெளியிடப்பட்டிருந்தது. இத்தகைய மிரட்டல் இ-மெயில்களால், 6 மாத காலத்திற்கு நான் இ-மெயில் பார்ப்பதையே நிறுத்தியிருந்தேன். சோனியாவின் இமேஜைப் பாதுகாக்க காங்கிரசார் இத்தகைய பயங்கர நடவடிக்யையில் இறங்கினர். தேவையில்லாமல், இவ்விசயத்தை காங்கிரஸ்காரர்கள் ஊதிபெரிதாகி விட்டனர், என்று கூறியுள்ளார்[8].

சோனியா புத்தகம்- காங்கிரஸ் எரிப்பு

சோனியா புத்தகம்- காங்கிரஸ் எரிப்பு

சோனியா பிஸ்ஸா சாப்பிடுவது ஒன்றும் பெரிய விவகாரம் இல்லைஜாவியர் மாரோ தொடர்கிறார், “அவர்கள் சோனியாவை ஒரு ரோபோவாக மாற்றியிருந்தனர். சோனியாவை ஒரு இந்தியர் என்று நிரூபிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினர். உண்மைக்கு மாறான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர். உண்மையில் சோனியா இந்தியராக மாற முயற்சி செய்திருக்கக்கூடும். ஆனால் ஒருமுறை நீங்கள் பிஸ்ஸா சாப்பிட ஆரம்பித்தால், எப்போதும் பிஸ்ஸாவையே சாப்பிடுவீர்கள். நான் ஒருமுறை டில்லியில் உள்ள “லா பிஸ்ஸா” என்ற உணவகத்திற்குச் சென்றபோது, அங்கு சோனியாவும் அவருடைய குடும்பத்தினரும் இத்தாலிய உணவை விரும்பி உண்டு கொண்டிருந்ததைப் பார்த்தேன். இது இயற்கையான ஒன்று. இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கலாம்; ஆனால் அவர் அப்போதும் இத்தாலியர்தான்.  ஆனால் காங்கிரஸ்தான் அவருடைய இத்தாலிய தன்மைகளை மாற்ற முயற்சி செய்தது. அவரை கடவுளாக சித்தரிக்கும் முட்டாள்தனமான முயற்சியில், அவரைச் சுற்றியிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். அது சரி இந்த புத்தகத்தில் காங்கிரசாருக்கு பிடிக்காத விஷயங்கள் என்னதான் இருக்கிறது?”.

 Sonia picture

விமான பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பிய சோனியா விமானவோட்டியை மணந்து கொண்டது: ஜாவியர் மாரோ விளக்குகிறார், “இத்தாலிய நகரான டோரினோ அருகே ஒரு விவசாயியாக இருந்து பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக மாறிய ஒருவரின் மகளாக பிறந்த சோனியா, அலிடாலியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பினார். இத்தகைய ஒருசாதாரண இத்தாலிய பெண்ணான அவர் எப்படி இந்தியாவின் ஆட்சியாளராக, உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக மாறினார் என்பதையே “தி ரெட் சாரி” என்ற இந்த புத்தகம் விவரிக்கிறது. சோனியாவை ராஜிவ் திருமணம் செய்து கொண்டபோது, சோனியாவை இந்தியர்கள் புலிகளுக்கு இரையாக்கி விடுவார்களோ என்று சோனியாவின் தந்தையான ஸ்டெபனோ மெய்னோ அஞ்சினார். சோனியா உயர்குடியில் [ aristocrat] பிறந்தவரல்ல; ஆனால் அவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக காட்ட காங்கிரசார் முயற்சி செய்தனர். என்னுடைய உறவினரான டொமினிக் லேப்பியர் (“இரவில் கிடைத்த சுதந்திரம்” என்ற நூலை எழுதியவர்) பத்ம பூஷன் விருது பெற்றபோது, காங்கிரஸ் தலைவரை (சோனியா) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சோனியாவிடம் சொன்னதாவது, “நான் உங்களுடன் 4 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறேன்”, என்றார். அதாவது அவர் தொடர்பான இந்த புத்தகத்தை எழுதுவதிலரந்த அளவிற்கு ஆழ்ந்து மூழ்கி போயிருந்தார் என்ற கருத்தில் அவ்வாறு கூறினார். அதைக் கேட்டதும் சோனியா அதிர்ந்து போனார்[9]; பின்னர் சமாளித்துக் கொண்டு சிரித்தார். என்னிடம் அவர் கூறிய ஒரே தகவல்: “நான் எப்போதுமே என்னைப் பற்றி எழுதப்படும் எதையுமே படிப்பதில்லை”.

 Sonia angry

ஜாவியர் மாரோ காங்கிரஸ் என்னை ஏன் எதிர்க்கிறர்கள் என்று தெரியவில்லை: சோனியா எப்போதுமே ஊடகங்களிலிருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினார்; தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுவதை வெறுத்தார்; அவரைச் சந்திக்க நான் முயன்றபோதெல்லாம், அவருடைய அலுவலக, வீட்டுக் கதவுகள் மூடியே இருந்தன. “இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது, சோனியா தனது குழந்தைகளுடன் இத்தாலிக்கு திரும்ப விரும்பினார் ” என்று நான் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான், காங்கிரசார் கடுமையாக எதிர்த்தனர். கோடிக்கணக்கான இந்தியர்களை ஆட்சி செய்யும் தான் ஒரு இத்தாலியர் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இதைத்தான் காங்கிரஸ் மறைக்க முயற்சி செய்தது. சோனியாவை சாதாரண ஒரு பெண்ணாக பார்த்து எனக்கு தெரிந்த விவரத்தை அனைத்தும் உண்மை மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் அவதூறாக ஏதும் சொல்லப்படவில்லை[10]. சோனியா பற்றி நல்லவிதமாகத்தான் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும், இதனை காங்கிரசார் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை[11]. இவ்வாறு அவர் கூறியுள்ளார்[12].

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மோடியும், சோனியாவும்: ஒரு ஆங்கில டிவி (ஐ.பி.என்.லைவ்) செனலுக்குக் கொடுத்த பேட்டியில் கூட, தானாக, சோனியாவைப் பற்றி எந்தவித விசயத்தையும் தவறாகக் கூறவில்லை, மற்றும் சர்ச்சைக்குரியது என்று சொல்லப்படுகின்ற விசயங்கள் எல்லாம், ஏற்னவே எல்லொருக்கும் தெரிந்தவை மற்றும் புபுல் ஜெயகர் போன்றோரின் புத்தகங்களிலும் அவ்விவரங்கள் அடங்கியுள்ளன. நிருபர்வ் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மறுக்க்லாமல், நேரிடையாகவே பதிலளித்தார். “மோடி தனது கீழிருந்து மேலே வந்தநிலையை மறைக்காமல், தான் ரெயில்வே நிலையத்தில், டீ விற்றுக் கொண்டிருந்ததை தெரிவித்தார், ஆனால், காங்கிரஸ்காரர்கள், சோனியாவின் ஆரம்பத்தை மறைக்க முயல்வது ஏன்”, என்று பதிலளித்தார். “மோடியைப் பற்றி புத்தகம் எழுதுவீர்களா?”, என்று கேட்டதற்கு, எழுதுவேன் என்றார்!

 Who-is-qutrochi-dinamalai

ஜாவியர் மாரோவும், பெருமாள் முருகனும்: ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்கள் எதிர்க்கப் பட்டிருக்கின்றன, ஆனால், சோனியா புத்தக எதிர்ப்பு நமது நாட்டிலேயே சிறியதாக்கி, அமுக்கி வாசி, அமுக்கியே விட்டனர். ஆனால், பெருமாள் முருகன் புத்தக விவகாரமோ, பெரியதாக்கி, அனைத்துலக விசயமாக்கப்பட்டுள்ளது. “தி ஹிந்து”வின் இரட்டை வேடமும் வெளிப்படுகிறது. சென்னையில், ஏதோ இலக்கிய விழா நடத்துகிறோம் என்று, தினம்-தினம், “மாதொருபாகன்” புத்தகத்தைப் பற்றி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. ஆனால், “சிவப்புப் புடவையை”ப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இருவேளை சிவப்பு நிறம் என்பதனால், அப்படி அனுதாபத்துடன் (கம்யூனிஸ சார்பு என்பதால்) நடந்து கொண்டதா என்று தெரியவில்லை. அவ்விழாவில் பங்கு கொண்ட பிரபலங்களுக்கு இதைப் பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. இருப்பினும் மிகசாமர்த்தியமாக அமைதி காத்தனர், ஆனால், பெருமாளைப் பற்றி இன்று வரை “தி ஹிந்து” செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

[1] தினமலர், சோனியாவை விமர்சிக்கும் புத்தகம் ; காங்., பயங்கர எதிர்ப்பு “யுத்தம்”: எழுத்தாளர் வேதனை, ஜபனவரி.19, 2015.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127575

[3] http://tamil.oneindia.com/news/india/controversial-sonia-gandhi-book-now-in-india-219023.html

[4] http://www.india.com/news/india/the-red-sari-the-story-behind-the-controversial-book-on-sonia-gandhi-251335/

[5] http://www.thehindu.com/news/national/did-not-obstruct-book-on-sonia-congress/article6794558.ece

[6] http://timesofindia.indiatimes.com/india/Moros-controversial-book-on-Sonia-hits-stands-in-India/articleshow/45904070.cms

[7] http://timesofindia.indiatimes.com/india/Cong-launched-a-terror-campaign-against-my-book-on-Sonia-Gandhi/articleshow/45918539.cms

[8] http://indianexpress.com/article/india/india-others/sonia-book-blown-out-of-proportion-by-congs-poor-pr-people-moro/

[9] “She is no aristocrat, but Congress wants to make her royalty .” Moro says he’s met the Congress president once when his uncle, Domnique Lapierre (author of `Freedom at Midnight’), was receiving the Padma Bhushan. He walked up to her and said “I’ve been sleeping with you for four years.” He meant he’d been obsessed with her while writing the book. “She was shocked, then managed to laugh. The only line she ever said to me was: ‘We never read anything that’s published about us.'” She abhors the press, hates being talked about and every time he tried to meet her, she was always totally “closed”.

http://timesofindia.indiatimes.com/india/Cong-launched-a-terror-campaign-against-my-book-on-Sonia-Gandhi/articleshow/45918539.cms

[10] தினகரன், சோனியா புத்தகம் காங். எதிர்ப்பு ஏன் ஆசிரியர் புலம்பல், 18-01-2015,05.56.04, சனிக்கிழமை

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127726

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1164490

மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (2)

மார்ச் 11, 2014

மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (2)

 

சுதந்திரம் இல்லை-ஊடகம் புலம்பல்

சுதந்திரம் இல்லை-ஊடகம் புலம்பல்

 

மோடி  திருமணமானவரா[1]  (மார்ச்.8, 2014)?: வழக்கம் போல திக்விஜய் சிங் மோடியின் மீது வசைபொழிய ஆரம்பித்து விட்டார். இம்முறை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையினை எடுத்துக் கொண்டுள்ளார். அதிலும், சர்வதேச மகளிர் தினமான 08-03-2014 அன்று அந்த தூஷனங்களை ஆரம்பித்துள்ளார். மனைவியை மதித்து காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்? என்று, நரேந்திரமோடி மீது காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் தாக்குதல் தொடுத்தார்[2].  “வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைப்பெண்ணான யசோதா பென்னை அவர் திருமணம் செய்தாரா”, என்ற வரியை காப்பியடித்த நக்கீரன் பிழையை சரி செய்யாமல் அப்படியே போட்டுள்ளது[3]. அதாவது தமிழ் ஊடகங்களின் தரம், ஊடக தர்மம், கருத்து சுதந்திரம் முதலியன அந்த அளவில் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், சர்வதேச மகளிர் தினமான 08-03-2014 அன்று நரேந்திரமோடி குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

 

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

நரேந்திர  மோடியின்  மனைவி[4] (இது  தினத்தந்தியின்  தலைப்பு): ‘‘மோடியிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நரேந்திரமோடியின் இதயத்தில் பெண்கள் மீது கொஞ்சமாவது மரியாதை இருந்தால், அவரிடம் இருந்து சில தகவல்களை அறிய விரும்புகிறேன். தேர்தல் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட வேண்டிய பகுதியில் அவருடைய மனைவியின் பெயரை குறிப்பிடாதது ஏன்? வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைப்பெண்ணான யசோதா பென்னை[5] [Jashodaben ] அவர் திருமணம் செய்தாரா, அல்லது திருமணம் செய்து கைவிட்டாரா, என்ற தகவலை தெரிவிக்காதது ஏன்? , இப்படி அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால், மேலே நேர்காணலில் குறிப்பிடப் பட்டுள்ளபடி, அந்த பெண்மணியே தனித்து வாழ்ந்தார், அவ்வாறே வாழ விரும்புகிறார் என்ற போது, இவருக்கு இந்த குசும்புத்தனம், அவதூறான விளக்கம், தூஷண பிரச்சாரம் முதலியவை ஏன்?

Sonia faces
மோடியின்  அந்தரங்கம்:   திக்  விஜய்சிங்  கடும்  விமர்சனம்  (இது  மாலை  மலரின்  தலைப்பு)[6]: மோடி தனக்கு திருமணமாகிவிட்டதாக ஏன் அதில் கூறவில்லை? அவர் திருமணம் செய்து கொள்ளவில்லையா? அல்லது தனது மனைவியை கை விட்டுவி்ட்டாரா? வறுமையில் வாடும் ஜஷோடாபென் (மோடியின் மனைவி என கூறப்படுபவர்) வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்[7]. இவ்வளவு பெரிய மனிதராக வந்திருக்கும் மோடி ஏன் அவரது மனைவிக்கு பங்களாவை தரவில்லை? தனது மனைவியை கவனிக்கத் தெரியாத ஒருவர் நாட்டை எப்படி கவனித்துக் கொள்ள போகிறார்?, என்று திக்விஜய் கேளிவிகளை அடுக்கினார். மனைவி என்று சொல்லிக் கொள்பவரே 45 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றார், என்று சொல்லியுள்ள நிலையில், கணவனைப் பற்றி ஏன் கேள்விகள் எழுப்ப வேண்டும்? இத்தனை தடவை மோடி வெற்றிப் பெற்று வந்துள்ளார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவ்வாறே குறிப்பிட்டிருப்பார். ஆனால், இக்கேள்வி கேட்கப்படவில்லை. அதாவது, அதில் ஒன்றும் விசயமே இல்லை. இப்பொழுது, மனைவி எனப்படுகின்ற 62 வயதான பெண்மணியே விளக்கல் கொடுத்து விட்டார். பிறகு என்ன பிர்ச்சினை?

Sonia-dances-with-tribals -renuka

மகாத்மா  காந்தியின்  படுகொலைக்கு  ஆர்.எஸ்.எஸ்.   இயக்கத்தை  குற்றம்  சாட்டிய  ராகுல்  காந்தியின்  கருத்து  சரியானது  தான்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் நரேந்திரமோடி, அந்தப் பெண் வசிப்பதற்கு பங்களா போன்ற வசதிகளை செய்த கொடுக்காதது ஏன்? தனது மனைவியை மதிக்காமல், காப்பாற்ற முடியாத சிலரால், இந்திய நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்?’’, இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார். அவர் மேலும் கூறும்போது, மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை குற்றம் சாட்டிய ராகுல் காந்தியின் கருத்து சரியானதுதான் என்றும் திக்விஜய்சிங் தெரிவித்தார். ‘‘ஆர்.எஸ்.எஸ். கொள்கைதான் காந்தியின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. இதை எங்களால் நிரூபிக்க முடியும்’’ என்றார், அவர்[8]. ஆக, இவ்வாறு மறுபடிமறுபடி பொய்களை சொல்லிக் கொண்டே காலத்தைத் தள்ள வேண்டும், பொய்பிரச்சாரத்தை மேற்கொள்ல வேண்டும் என்று தீர்மானமாக இருக்கின்றனர் என்றாகிறது.

Rahul Gandhi-with actress, girl friend etc

பெண்களுடன் மோடியின் டீக்கடை  பிரசாரம்: நரேந்திரமோடியை டீ விற்றவர் என்று காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டதால், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பா.ஜனதா நாடு முழுவதும் ‘நமோ டீக்கடை’கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மகளிர் தினமான நேற்று டீக்குடித்தபடி நரேந்திரமோடி பொதுமக்களுடன் கலந்துரையாடிய காட்சி இந்தியா முழுவதும் 1,500 இடங்களில் இணைய தளம் மூலம் ஒளிபரப்பானது. இந்த நிலையில், அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் திக்விஜய்சிங் இப்போது நரேந்திரமோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில கேள்விகளை எழுப்பி புதிய சர்ச்சையை அவர் தொடங்கி வைத்து இருக்கிறார்.

Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cutting

மனைவி என்கின்ற பெண்மணி சொன்னதையும் மீறி அவதூறு பேசுவதேன்?: ஜஸோதாபென் என்கின்ற 62 வயதான அப்பெண்மணி பேட்டி கொடுத்திருப்பதிலிருந்து, அவரது வெளிப்படைத்தனம் காணப்படுகின்றது. லக்ஷ்மி அஜய் ஊடகதோரணையில் கேள்விகள் கேட்டிருந்தாலும், அதனை பெரிதாக எடுத்டுக் கொள்ளாமல் பதில் அளித்திருக்கிறார். குறிப்பாக அவருக்கு / மோடிக்கு எந்த பாதிப்பையும் தான் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அந்நிலையில் அதேமுறையில் மற்ற பெண்களான சாகரிகா கோஷ் அல்லது ஆண்களான திக்விஜய் முறையாக பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள், வேண்டுமென்றே தங்களது வார்த்தைகளை வரம்பு மீறி உள்நோக்கத்துடன் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.  அதாவது, அப்பெண்ணின் நிலையைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். இப்படி தேவையில்லாமல் கேள்விகள் கேட்பதனால், அந்த 62 வயதான பெண்மணியில் நிலை பாதிக்கப்படுகிறது.

Anti-modi campaign - nakkeeran-2013

இதேமாதிரி, சோனியா, ராகுல்  இடத்தில்  சென்று  பேட்டிக்காண, இவர்களது  ஊடகதர்மம்,   ஊடகத்துணிவு,   முதலியவை  வருமா, வேலை  செய்யுமா  என்றெல்லாம்  தெரியவில்லை: இதுவரை யாரும் துணிந்ததாகவும் இல்லை. ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) “சிவப்புப் புடவை” என்ற சோனியாவப் பற்றிய புத்தகம் இந்தியாவில் வெளியிடப்படக் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் தடுத்து விட்டனர்[9]. அப்பொழுது இவர்கள் கருத்து சுதந்திரம், பத்திரிகா தர்மம், முதலிவற்றைப் பற்றி பேசவில்லை. ராகுலின் காதலி, மனைவி என்று பல செய்திகள் வந்துள்ளன. அவற்றை வைத்துக் கொண்டு ஏன் ராகுலிடம் கேள்விகள் கேட்கப்படவில்லை? துணிச்சலான அர்னவ் கோஷ்வாமி ராகுலிடம் கேட்டிருக்கலாமே? ஆனால், கேட்கவில்லையே? இதிலிருந்தே ஊடகக் காரர்கள் பாரபடசமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. தேர்தல் வருவதினால், காங்கிரஸ்காரகள், கீழ்த்தரமான பிரச்சாரங்களிலும் இறங்கத் தயார் என்று வெளிப்படுத்திக் கொள்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை வேவு பார்த்தார் என்று செய்திகளை வெளியிட்டன[10], ஆனால், அமுங்கி விட்டன. இவற்றை ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும் போது, மோடியை என்னமோ பெண்களுக்கு விரோதி, பெண்மையை எதிர்ப்பவர், பெண்ணுரிமைகளைப் பறிப்பவர் என்பது போல பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேலை செய்வது போல உள்ளது. கற்பழிப்பு என்று முன்னர் ஆர்பாட்டம், கலாட்டா செய்தனர். பிறகு ஊழல் என்று தெருக்களில் ஆர்பாட்டம், கலாட்டா செய்தனர். இப்பொழுது மோடியைப் பிடித்துக் ஒண்டு விட்டனர் போலும்.

 

வேதபிரகாஷ்

11-03-2014


[1] தினமணி, மோடிதிருமணமானவரா?, By dn, புது தில்லி, First Published : 09 March 2014 12:38 AM IST

[2] தினத்தந்தி, மனைவியைமதித்துகாப்பாற்றமுடியாதவர், இந்தியாவைஎப்படிகாப்பாற்றுவார்?நரேந்திரமோடிமீது திக்விஜய்சிங்கடும்தாக்கு, பதிவு செய்த நாள் : Mar 09 | 04:00 am

[3] நக்கீரன், ஏழைப்பெண்யசோதாவைமோடிதிருமணம்செய்தாரா?
 
திக்விஜய்சிங்கேள் , ஞாயிற்றுக்கிழமை, 9, மார்ச் 2014 (7:56 IST)

[6] மாலைமலர்,மோடியின்அந்தரங்கம்: திக்விஜய்சிங்கடும்விமர்சனம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 08, 6:41 PM IST

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)

Narendra Modi and Pachamuthu at SRM convocation 2014.

Narendra Modi and Pachamuthu at SRM convocation 2014.

 

பச்சமுத்து  என்கின்ற  பாரிவேந்தர்  மோடியைப்  புகழ்வது (10-02-2014): சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் குஜராத் மாநிலத்திற்கு சென்றேன். அங்கு டாஸ்மாக் கடை இல்லை. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலைகள் மிக அருமையாக உள்ளன. அங்கு இலவசங்கள் எதுவும் இல்லை. அங்கு 3–வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி மிகவும் நல்லவர். நாணயமானவர். ஊழலற்ற ஆட்சியை குஜராத்தில் தந்து தொடர்ந்து முதல்வராக உள்ளார். நான் பல கல்வி நிறுவனங்களை தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நிறுவி ஆண்டுக்கு 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்று தருகிறேன். இதோடு போதும் என்று நின்று விடாமல் நமது மக்களுக்கு ஏதாவது நல்லது நம்மால் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜனநாயக கட்சியை ஆரம்பித்தேன்[1]. இதெல்லாம் இவருக்கு முன்னர் தெரியாமல் போயிற்றா அல்லது இப்பொழுது தான் அறிந்து கொண்டாரா என்று ஆராய்ச்சி செய்யவேண்டும்.

Narendra Modi at SRM convocation 2014

Narendra Modi at SRM convocation 2014

பாரதிய ஜனதா கூட்டணி: “இன்று பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 2 தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்”, இவ்வாறு பாரிவேந்தர் பேசினார். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் டி.பி.பச்சமுத்து, அமைப்பு செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்[2]. மோடி கூட்டத்தில் பேசும் போது, “எனது கல்லூரி விழாவுக்கு மோடியை அழைத்த நான், எங்கள் கட்சியின் பொதுகூட்டத்திற்கும் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். அவர் பாஜக மாநிலத் தலைவரையும் அதில் இணைத்துக் கொள்ளுங்கள்எனக் கூறினார். அப்படி நடைபெறுவதுதான் இந்த கூட்டம்”, என்றார். தமிழக பிஜேபியில் 20-30 ஆண்டுகளாக வேலை செய்துவரும் தலைவர்களுக்குக் கூட சீட் கிடைக்காது என்ற நிலையில், லீமா ரோஸுக்கு சீட் எனும் போது வியப்பாகத்தான் இருக்கிறது. 39 தொகுதிகள் எவ்வாறு பிரிக்கப்படும் என்றும் பார்க்க வேண்டியுள்ளது. பிஜேபி ஜெயிக்கும் என்று ஒரு தொகுதியும் இல்லை. ஆனால், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை என்ற சில இடங்களில் ஒருவேளை கூட்டணி பார்முலாவில் வெல்லலாம். ஆனால், அவை மற்ற கட்சிகளுக்குக் கொடுத்தால் பிஜேபி அம்போதான்! ஆகவே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மோடி பேசியபோது, மோடி ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கலாம். மோடி ஆதரவாளர்கள், அறிவுஜீவிகள் இணைதளங்களில் அதைப் பற்றி புகழ்ந்து போற்றியிருக்கலாம். ஆனால், இந்த கூட்டணி பற்றி அவர்கள் யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

 

பச்சமுத்து கமல் ஹஸன் சத்தியநாராயணன்

பச்சமுத்து கமல் ஹஸன் சத்தியநாராயணன்

வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் சோதனை (2013): பணம் அதிகமாக வரும் போது, குறிப்பாக கணக்கில் வைக்க முடியாத பணம் வரும் போது, ஒரு இடத்திலிருந்து பணம் வந்ததாகவும், மற்ற இடத்தில் அவை செலவழிந்தது போலவும் காட்டுவது சார்டெட் அக்கௌன்டன்ட்களின் வேலை. அவற்றை செய்து வரும் அவர்களை யாரும் ஊழலுக்குத் துணைப் போகிறார்கள் என்று யாரும் விமர்சிப்பதில்லை[3]. அப்படி உருவான நிறுவனமான வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் ரெய்ட் நடந்தபோது அதன் ஒரு பார்ட்னர் காணாமல் போய்விட்டார் என்று செய்திகள் வெளியிடப் பட்டன. எதிர் நீச்சல், தில்லுமுள்ளு போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது. ரெயிடுகளில் கிடைத்த ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது, வாங்கப்பட்ட கொடைப்பணம், அதிக அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது போல காண்பித்து, மீதமுள்ளள பணத்தை டிரஸ்டுகளுக்கு திருப்பி விட்டது தெரியவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து, வருமான வரியை குறைத்துக் காட்ட இம்முறை கையாளப்பட்டதாகத் தெரிகிறது. நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன[4]. கொஞ்ச நாட்களில் இவையெல்லாம் மறக்கப்பட்டன. துப்பாக்கி பட விசயத்தில் கூட பச்சமுத்து பெயர் அடிபட்டது. எஸ்.ஆர்.எம். மருத்துவ மனைக்கு அருகில் கூட பச்சமுத்துவை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து   சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

மருத்துவக்  கல்லூரியில்   சேர்க்க  நன்கொடை  பிரச்சினை (ஏப்ரல் 2013): மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை பெற்றதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். வழக்கு ஒன்றில் சிக்கிய சுங்கத்துறை அதிகாரி ஜம்போ லாலின், தனது மகள் மானசாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை கொடுத்ததாக சிபிஐ-யில் வாக்குமூலம் அளித்ததாக கூறி, அதன் அடிப்படையில் இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருக்கு கடந்த மார்ச் 25 ஆம் தேதி 2013 சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து, முன் ஜாமீன் கோரி மேற்கூறிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாகவும், மனுதாரர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் சிபிஐ அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டபோது, அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது.  இதனிடையே சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான இருவரும் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். பிறகு இதைப் பற்றிய செய்திகள் நின்றுவிட்டன.

 

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து  சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பழைய  நண்பர்களை  மறந்து,  புதியநண்பர்களை உருவாக்கிக் கொண்டார் (1960-1990): 1960களிலிருந்து, கடின உழைப்பில் உயர்ந்த பச்சமுத்து, பணம் வந்ததுடன் மாறித்தான் போனார். அதனால், பழைய நண்பர்களை மறக்க / ஒதுக்க ஆரம்பித்தார். தமிழ்நாடு டுடோரியல்ஸ் (Tamilnadu Tutorials, started in 1967), நைட்டிங்கேல் நர்சரி பள்ளி (Nightingale Nursery School, started in 1969), ஏசியன் இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலாஜி (Asian Institute of Technology, started in 1976) போன்றவற்றில் அவருக்கு உதவியவர்களை மறந்து விட்டார். பழைய மாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறியபோது, இவரும் மாறி விட்டார். முன்பாவது, அதாவது 1980களில் பார்க்க வந்தால், அனுமதித்து வந்தார், ஆனால், இப்பொழுதோ “பழைய நண்பர்கள்” உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை. வெளியே காரியதரிசி என்று சொல்லிக் கொள்ளும் புதிய ஆட்கள், அவர்களைக் கொஞ்சமும் மதிக்காமல் அனுப்பி விடுவது பழக்கமாகியது. ஆனால், புதிய நண்பர்கள் அவருக்காக உழைப்பது போல காட்டிக் கொண்டு, தாங்களும் தங்களை உயர்த்திக் கொண்டனர். மார்ச் 2005ல் அப்படியொரு புகாரை அவரே அளித்தார். தனக்குக் கீழ் வேலை செய்துவந்த சுப்ரமணியம் என்ற ஆடிட்டர், சில ஆவணங்களை உபயோகித்து, ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக பச்சமுத்து புகார் கொடுத்தார்[5]. இதுவும் ஒரு உதாரணத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

© 15-02-2014


[2] தினத்தந்தி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்தொகுதிகளைபா.ஜனதாவிடம்கேட்டுள்ளோம்.இந்தியஜனநாயககட்சிதலைவர்பாரிவேந்தர்தகவல், பதிவு செய்த நாள் : Feb 11 | 03:45 am

[3]அரவிந்த கேசரிவாலும் இதே போலித்தனத்தைக் கடைபிடித்து வருகிறார். வருமானவரித்துறையிலிருந்து வந்துள்ள அவருக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவ்வாறு நடித்து வருகிறார்.

[4] According to the sources, the searches were also conducted in the premises of Vendhar Movies and TV news channel ‘Puthiya Thalaimurai’. One of the partners of Vendhar Movies is absconding since Tuesday. The recent hits of Vendhar Movies are Ethir Neechal and Thillu Mullu. The search led to confiscation of documents which indicated receipt of donations, inflated expenditure, diverting funds of trusts and evasion of income tax for the last few years. Jewels have been seized and kept in sealed conditions.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/it-raid-on-srm-group-yields-unaccounted-cash-of-rs-675-crore/article4830954.ece

[5] Auditor arrested on cheating charge, By Our Staff Reporter; Thursday, Mar 31, 2005http://www.hindu.com/2005/03/31/stories/2005033112710300.htmCHENNAI, MARCH 30. The police have arrested the auditor of Valliammal Society, which runs the SRM Groups of Institutions, following a complaint by the society’s chairman T.R. Pachamuthu.Mr. Pachamuthu told police that his auditor of over a decade, Subramaniam, had cheated him by misusing the institution’s property documents to get loans from private financiers of over Rs.2.5 crores. Speaking to The Hindu over phone, Mr. Pachaimuthu said the signatures in the promissory notes that Mr. Subramaniam had handed over to the financiers could either be forged or signed by him by mistake. “He has been managing the finances of my institutions for more than a decade and I trusted him. He might have tricked me into signing some of the papers,” he said.

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

நவம்பர் 9, 2013

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

Rahul hate speech at Churu, Rajasthan ISI etc

பாகிஸ்தான் உளவுப்படை முசபர்நகர்முஸ்லிம்களைசந்திக்கிறது: காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர், ‘.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில், மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, .எஸ்.., தொடர்பு கொண்டு பேசியதுஎன்றார். ‘முசாபர்நகர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சந்தித்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக, வன்முறையில் ஈடுபட அவர்களை ஊக்குவித்ததாகவும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த மத கலவர தீயை பாஜ.தான் தூண்டி விட்டது. அதை காங்கிரஸ் அணைத்து வருகிறது என்று ராகுல் பேசினார். அவரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

முஸ்லிம்தலைவர்களின்கண்டனம், எதிர்ப்புமுதலியன: முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜமாத் மௌலானா மதனி என்ற உலிமா-இ-ஹிந்த் முஸ்லிம்மத தலைவர், “ராஹுல் மிகவும் பொறுப்பற்றமுறையில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. உண்மையில் அத்தகைய விசயங்கள் அரசியல் ஆக்கக் கூடாது. ஒருவேலை அத்தகைய விவரம் அவருக்குக் கிடைத்திருந்தாலும் இவ்வாறு வெளிப்படையாக அறிவிப்பது, முறையற்றதாகும்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[1]. மௌலானா கல்பே சாதிக் என்ற இன்னொரு முஸ்லிம்மத தலைவர் அதனைக் கண்டித்து, போடியின் கருத்தை ஆதரித்து, “மோடியிடத்தில் அம்மாதிரியான மாற்றத்தை நாங்கள் காண நேர்ந்தால், 2002ஐ மறந்துவிடும்படி, முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்வோம்”, என்றும் கூறியிருந்தார்[2]. ஆஸம் கானே, .எஸ். தொடர்பு கொண்ட முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா என்று கேட்டார்[3].  கே.எம். செரிப் என்ற பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியாவின் தலைவர், “காங்கிரஸ் தனது திட்டத்தின் மூலம், பிஜேபியையும் மிஞ்சுகிறது”, என்று கமென்ட் அடித்தார்[4]. உடுப்பியில் குலாம் மொஹம்மது என்ற ஜனதா தள் (செக்யூலர்) மாவட்டத் தலைவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்[5]. முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும், ராகுலின் பேச்சு முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகத்தை இன்னும் அத்கப்படுத்துவதாக கவலைக் கொண்டுள்ளனர்[6].

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

மோடியின்கேள்விகள்: மோடி, “இளவரசர் .எஸ். முஸ்லிம்களை தொடர்பு கொள்ளும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்? அதனை ஏன் தடுக்கவில்லை. மேலும் அவரிடத்தில் .எஸ். அவ்வாறு முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டது என்று சொல்வதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறாதா?”, என்றும் கேட்டிருந்தார்[7]. அதுமட்டுமல்லாது, அரசில் எந்த பதவியும் வகிக்காமல்,வெறும் கட்சியின் துணைத்தலைவர் என்ற நிலையில் இருக்கும் போது, இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், எவ்வாறு அவரிடத்தில் அத்தகைய ரகசியமான தகவலை சொல்லமுடியும், அந்த முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா, என்று கேட்டிருந்தார். இதற்குள் எதிர்பார்த்தபடி, உள்துறை அமைச்சகம் அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டதாம்[8]. உத்திரபிரதேச அரசும் அவரது பேச்சை மறுத்து, பதிலுக்கு நூற்றுக் கணக்கான குஜராத்தியர் அங்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர் என்றது. இந்த கண்டுபிடிப்பை, பேனி பிரசாத் வர்மா என்பவர் செய்துள்ளார்[9].

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

தலைமைதேர்தல்கமிஷனில்புகார், நோட்டீஸ்: பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனில், புகார் அளித்தனர். ‘சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில், ராகுல் பேசியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிட கான்பூர் தலைமை மாஜிஸ்ட்ரேட் கோர்டில் சமஜ்வாடி கட்சி தலைவர் பர்ஹான் லரி, “ராகுலின் பேச்சு முஸ்லிம்களின் மனங்களை பாதிப்பதாக உள்ளது”, என்று பிரபுல்ல கமல், தலைமை மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் கொடுத்தார். இதுதவிடர வணிக சங்கத்தலைவர் ஞானேஸ் திவாரி மற்றும் சமூக சேவகர் மொஹம்மது இஸ்லாமுத்தீன் என்பவர்களும் அதே கோர்ட்டில் புகார் கொடுத்துள்ளனர்[10].  இதுகுறித்து பதில் அளிக்கும்படி, ராகுலுக்கு, ‘இது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த மாதம் 31ம் தேதி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடு விதித்தது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

ராகுல்பதில்அளிக்கமேலும்அவகாசம்கேட்டது: தேர்தல் கமிஷன் விதித்த கெடு முடிவடையும் நிலையில், ‘பதில் அளிப்பதற்கு, கூடுதலாக, ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என, ராகுல் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு, நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது[11].இந்த கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கும்படி தேர்தல் ஆணையத்தை ராகுல் கேட்டு கொண்டார். அதை ஏற்ற தேர்தல் ஆணையம், நவம்பர் 8ம் தேதி காலை 11.30க்குள் விளக்கத்தை அனுப்பும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், 08-11-2013 காலை 11.30 மணி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, ராகுல் அனுப்பிய விளக்க கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்தது[12].

Sonia angry

மதஉணர்வுகளைத்தூண்டவில்லை[13]: “ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின்போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை” என்று காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அனுப்பியிருந்த நோட்டீசுக்கு வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று ராகுல் காந்தி பதில் அனுப்பியுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. யாருடைய மனதையோ மத உணர்வுகளையோ தூண்டும் வகையில் பேசவில்லை. வகுப்புவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. எனவே, அது தொடர்பான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கிப் பேசினேன். எந்த இடத்திலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். அதை நிராகரிக்க வேண்டும்‘ என்று ராகுல் காந்தி கடிதத்தில் கூறியுள்ளார்.

உரியநடவடிக்கைதேர்தல்ஆணையம்: ராகுல் காந்தியின் கடிதம் கிடைத்த தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அவரது விளக்கத்தை ஆணையம் உரிய முறையில் பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று சம்பத் கூறினார். ஊடகக் காரர்கள் அக்கடிதத்தில் என்ன இருந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்ல மறுத்து விட்டார். ஏற்கெனவே என்.ஐ.ஏ, சிபிஐ முதலியவை காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கிறது என்று பரந்த புகார் உள்ளது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் உண்மையில் செயல்படுவாரா இல்லையா என்று சந்தேகத்தில் தான் உள்ளது. ராகுலின் மீது நாட்டில் பல இடங்களில் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், போலீஸ் என்று புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் இப்புகாரை நிராகரித்து விட்டால், மற்ற குற்றப் புகார்களும் அடிபட்டு விடும். முன்பு இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, ராகுலுக்கு ஏற்படுமா, அவ்வாறு ஏற்பட சோனியா விட்டுவிடுவாரா என்று ஆராயத்தக்கது.

© வேதபிரகாஷ்

09-11-2013


[1] Criticising Rahul Gandhi for his ISI remark, Jamiat Ulema-e-Hind leader Maulana Madani said, “Rahul Gandhi’s statement was very irresponsible and we condemn it. Such issues must not be politicised. Even if he had any such information, it’s a reckless statement.”

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[2] While Rahul is being criticised by Muslim clerics, Modi got unexpected support from a top Muslim cleric, Maulana Kalbe Sadiq. “If we see a change in the attitude of Modi, we will try to convince Muslims to forget 2002. Such a thing has happened in the past,” Sadiq said.

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[3] Khan also urged Rahul Gandhi to come forward with the names of the Muslim youth that were allegedly contacted by Pakistani agents to help the Samajwadi Party-led Uttar Pradesh to take action accordingly.

http://zeenews.india.com/news/nation/azam-khan-asks-rahul-gandhi-to-name-muslim-youth-approached-by-isi_885794.html

[7] Questioning Rahul’s Indore speech on ISI trying to recruit riot-affected victims in Uttar Pradesh’s Muzaffarnagar, the BJP leader asked what the Congress Vice President had done to address the issue. “What has the shahzada done to stop the ISI from reaching out to Muslims in Muzaffarnagar,” asked Modi while addressing a rally in Jhansi on Friday.His second question to Rahul was more direct. The Gujarat strongman questioned the credibility of Rahul’s statement on ISI. “Does shahzada have any proof of ISI reaching out to riot victims?” he said.

[9] The Uttar Pradesh Government on Saturday officially dismissed Congress vice-president Rahul Gandhi’s claims about Pakistan’s ISI being in touch with affected Muslim youth from riot-hit Muzaffarnagar even as Union Steel Minister Beni Prasad Verma added a new dimension, saying hundreds of people from Gujarat had come to Muzaffarnagar to indulge in rioting.

http://www.dailypioneer.com/sunday-edition/sunday-pioneer/nation/up-dismisses-rahuls-isi-in-touch-claim.html

[10] Samajwadi Party leader Farhan Lari, while alleging that Rahul had hurt the sentiments of the Muslim community, has lodged the complaint before the CMM Prafulla Kamal. Another case has been lodged by traders’ leader Gyanesh Tewari and social worker Mohammad Islamuddin in the same court. The duo too have maintained that the statement has posed serious threat to the country’s integrity.

http://www.hindustantimes.com/india-news/two-complaints-filed-against-rahul-gandhi-for-isi-statement/article1-1140912.aspx

[13] தினமணி, 09 November 2013 01:46 AM IST,

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

Rahul Gandhi-with actress, girl friend etc

ராகுல் தனது  “கேர்ல் பிரன்ட்”  பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cuttingஅதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].

Rahul with actress, women etc.2

 

Was Rahul Gandhi detained by FBI?

By Our Special Correspondent in “The Hindu” dated Sunday, September 30, 2001

http://www.frontlineonline.info/thehindu/2001/09/30/stories/02300003.htm

NEW DELHI, SEPT. 29. With the U.S. security agencies leaving nothing to chance after the September 11 terrorist strikes, sleuths of the Federal Bureau of Investigation (FBI) “detained” Mr. Rahul Gandhi, son of the former Prime Minister, Rajiv Gandhi, and the Leader of the Opposition, Ms. Sonia Gandhi, for about an hour at the Boston airport early this week, sources here said.

According to sources, Mr. Gandhi, reportedly travelling from Boston to Washington, was detained by the FBI agents who would not let him go even after checking his travel documents thoroughly. They checked his baggage, despite being told that he was the son of a former Indian Prime Minister.

Sources here maintain that only when the news reached 10, Janpath, and the Congress president, Ms. Sonia Gandhi, reportedly spoke to the Indian Ambassador in the U.S., Mr. Lalit Mansingh, Mr. Gandhi was able to proceed with his onward journey.

Though official circles were silent over the incident, Congress sources said they were concerned. Mr. Gandhi’s movement should have been known to the U.S. security agencies because he is a Special Protection Group protectee. And, under the security drill, any movement of a SPG protectee abroad is communicated in advance to their counterparts in that country.

`Envoy did not intercede’

Meanwhile, Sridhar Krishnaswami reports from Washington, quoting well-placed diplomatic sources, that media reports of Mr. Mansingh having been brought into the picture to allow Mr. Gandhi to proceed on his onward journey from Boston to Washington “are simply not true.”

The sources also said since Mr. Gandhi did not get any security protection here, the U.S. agencies were not under any obligation to inform the Indian Embassy of any contact they may have had with him.

In fact, some Embassy officials here have no knowledge of Mr. Gandhi’s trip from Boston to Washington. “But reports of Ms. Sonia Gandhi calling the Indian Ambassador and asking him to intercede with authorities on the `detention’ of Mr. Rahul Gandhi are simply not true,” a senior Indian diplomat told The Hindu.

Diplomats are pointing to the heightened security precautions in the U.S. in the aftermath of the terrorist attacks. Besides different layers of security check at airports, many are subjected to some intense questioning by the Federal Bureau of Investigation and other investigative agencies. But for official purposes, in the case of the movement of VVIPs – and in some cases VIPs – the Embassy notifies Diplomatic Security for necessary courtesies.

Rahul with actress, women etc.3

இந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].

Rahul with actress, women etc.4

அமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

Rahul with actress, women etc.5

ஐகோர்ட்,  சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின,  தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Rahul with actress, woen etc.1

கிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].

The alleged matter appearing in a foreign website

அயல்  நாட்டு  சதி  உள்ளது  என்று  சிபிஐ  கூறியதால்  விசாரித்து  அறிக்கை  வெளியிட  சுப்ரீம்  கோர்ட்  ஆணை   (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

 

சோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும்.  மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

Rahul with women workers

வேதபிரகாஷ்

© 09-08-2013

 


[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.

[2] He hasn’t been seen publicly with any woman after being pictured with his Spanish ex-girlfriend Veronique, an architect, at the cricket World Cup in 1999. “She is my girlfriend and best friend too,” Rahul had said about her when he spoke about the subject for the first time in 2004, when he was touring Amethi.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[3] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[4] Cricketer Atul Wassan says, “Rahul will in all probability marry someone who isn’t in the public eye as much as he is – someone who is intelligent, will be loved by people, and maintains a low profile.” A possible Diana-inthe- making would obviously be a potential disaster as the Congress scion’s wife.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[7] The apex court on October 1 had reserved its order on the plea challenging the March 7, 2011 order of the Allahabad High Court. – See more at: http://www.indianexpress.com/news/rahul-gandhi-absolved-of-rape-charge-but-sc-slashes-fine-on-exsp-mla-kishore-samrite/1018515/#sthash.gbVIxiUs.dpuf

[10] October 18, 2012 – ITEM NO.1A COURT NO.12 SECTION II (For Judgment) – S U P R E M E  C O U R T O F  I N D I A – RECORD OF PROCEEDINGS – CRIMINAL APPEAL NO. 1406 OF 2012 – KISHORE SAMRITE Appellant(s) – VERSUS – STATE OF U.P. & ORS. Respondent(s); Date: 18/10/2012 This Appeal was called on for pronouncement of Judgment today.

http://www.indiankanoon.org/doc/75923839/

[11] The CBI shall continue the investigation in furtherance to the direction of the High Court against petitioner in Writ Petition No. 111/2011 and all other persons responsible for the abuse of the process of Court, making false statement in pleadings, filing false affidavits and committing such other offences as the Investigating Agency may find during investigation. The CBI shall submit its report to the court of competent jurisdiction as expeditiously as possible and not later than six months from the date of passing of this order.

[13] The CBI also claimed that the petitioner, Kishore Samrite, who filed a case against Rahul Gandhi, in the Allahabad High Court, had received foreign funds. The agency told a Supreme Court bench that it had seized chits showing Samrite had received foreign money for paying lawyers’ fees.  The CBI said the abduction victim did not exist and the woman was conjured up in reports and uploaded on three foreign websites, which Samrite used with an ulterior motive. According to it, the victim woman was non-existent, her address fictitious and there was no record whatsoever with the Uttar Pradesh government or local bodies.

Read more at: http://indiatoday.intoday.in/story/foreign-hand-behind-bid-to-malign-rahul-gandhi-cbi-tells-sc/1/222107.html

 

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (1)

மே 10, 2013

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம்!

03-05-2013 (வெள்ளிக்கிழமை): மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மறுமகனான விஜய்சிங்லா, ரயில்வே வாரிய உறுப்பினர், மகேஷ்குமாரிடம், முக்கிய பொறுப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து[1], விசாரணை மற்றும் நடவடிக்கையில், சிபிஐயினால் கைது செய்யப்பட்டார். பிறகு, பன்ஸாலின் அந்தரங்க செயலர், ராஹுல் பண்டாரி சிபிஐயினால் விசாரிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கூட[2]. ஆனால், ஞாயிற்றுக் கிழமை கர்நாடகத்தில் தேர்தல் மற்றும் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை என்பதனால், சோனியா ராஜினாமா நாடகத்தை ஒத்தி வைத்தார்.

04-05-2013 (சனிக்கிழமை): விஜய் சிங்கலாவின் ஊழல் வலை பெரிதாகியது. பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலிடயவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து வந்ததை விவரம் அறிந்து சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டது.

  • விஜய் சிங்க்லா – Vijay Singla – Nephew of railway minister [Pawan Kumar Bansal]
  • மஹேஸ்குமார், ரெயில்வே வாரியம், உறுப்பினர் – Mahesh Kumar: Member Railway Board
  • நாராயணா ராம் மஞ்சுநாத், ஜி.ஜி.டிரானிக்ஸ் கம்பெனியின் எம்.டி – Narayana Rao Manjunath : MD of G.G Tronics
  • சந்தீப் கோயல், சிங்க்லாவின் நண்பர் – Sandeep Goyal: Singla’s friend
  • ராஹுல் யாதவ், மஞ்சுநாத்தின் கூட்டாளி – Rahul Yadav: Associate of Manjunath
  • சமீர் சந்திர் – Samir Sandhir
  • சுஸில் தாகா – Sushil Daga

மேற்கொண்ட கூட்டம், லஞ்சத்தை பணமாகவும், நிலமாகவும் பெற்று வந்தது மெய்ப்பிக்கப்பட்டது.

05-05-2013 (ஞாயிற்றுக் கிழமை): கர்நாடகத்தில் ஓட்டுப் பதிவு என்பதால், சோனியா காங்கிரஸ் அடக்கி வாசித்தது. பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டது[3].

06-05-2013 (திங்கட் கிழமை): ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை கவனித்தபோது, அமைச்சரின் பெயர் பலமுறை உபயோகப்படுத்தப் பட்டது தெரிய வந்தது[4]. இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.

07-05-2013 (செவ்வாய் கிழமை): சுனில் குமார் குப்தா என்ற தமது குடும்ப கணக்காளர், கனரா வங்கியின் இயக்குனராக 2007ல் நியமிக்கப் பட்டார். அப்பொழுது பன்ஸால், இணை நிதி அமைச்சராக இருந்தார்[5]. 2010ல் சுனில் குமார் குப்தாஆந்த வங்கியின் பங்குதாரர் ஆனார். தியோன் பார்மேசுடிகல்ஸ் லிமிடெட் என்ற மந்திரியின் கம்பெனிக்கு ரூ.20 கோடி கடன் உடனடியாக வழங்கப்பட்டது[6].

இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.

08-05-2013 (புதன் கிழமை): கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை வைத்துக் கொண்டு, காங்கிரஸ் ஊடக தொடர்பாளர்கள் – மணி அங்கர் ஐயர், மணீஸ் திவாரி, அபிஷேக் சிங்வி முதலியோர் – யாரும் ராஜினாமா செய்யத்தேவையில்லை என்று பேசினர்[7].

09-05-2013 (வியாழன் கிழமை): நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய சட்டமந்திரி அஸ்வனி குமார், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் ஆகியோரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்குவதற்காக அவர்கள் இருவரையும் நீக்க வேண்டும் என்று சோனியா காந்தி முடிவு செய்தார். ஆனால், இந்த கருத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாறுபட்டிருந்தார். எனவே, அவர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

10-05-2013 (வெள்ளி கிழமை): இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இரண்டு மந்திரிகள் மீதான புகார்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். பின்னர் “பன்சாலை ராஜினாமா செய்யும்படி கூறுங்கள்” என்று பிரதமரிடம் சோனியா வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு நடந்த சில நிமிடங்களில், பவன் குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்த பன்சால், இன்று திடீரென வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டு, பைசல் செய்துள்ளார். பின்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்[8]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[9].

கர்நாடகநாடகமும்ஆரம்பிக்கிறது: திடீர் வெற்றியினால், கர்நாடகத்தில் முதல் அமைச்சர் ஆக நான் – நீ என்ற போட்டி ஆரம்பித்தது. சித்தராமையா (பிசி) மற்றும் மல்லிகார்ஜுன கார்கே (எஸ்.சி) இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. ஜாதிரீதியிலும் பேச்சு வளர்ந்தது. ஜாதியை வைத்து தேர்தல் நடத்தியதால், காங்கிரஸுக்கு தர்ம சங்கடம் ஆயிற்று[10]. இங்குதான், சோனியா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். ஒன்று, பன்ஸாலை தூக்கி, மல்லிகார்ஜுன கார்கேவை போட்டுள்ளார். இதனால், புதிய ரெயில்வே மந்திரியாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் பாட்டை ஆரம்பித்துள்ளது.  ஆனால், இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது என்றெல்லாம் கதை விட ஆரம்பித்துள்ளன. பெங்களூடரில் குண்டு வெடித்தது[11] பற்றி அனைவரும் மறந்தே போய் விட்டார்கள்[12]! தேர்தலுக்காக, ஆர்.எஸ்.எஸ் தான் வைத்தது என்று காங்கிரஸ்காரர்கள் கூறினார்கள்[13]. இப்பொழுது காங்கிரஸ் வென்றதால், காங்கிரஸ் வைத்தது என்று சொல்லலாமா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[2] Bansal’s woes mounted when the CBI questioned his private secretary Rahul Bhandari, a 1997-batch IAS officer from Punjab cadre, in connection with the alleged Rs 10 crore bribery scandal.

[4] he minister’s name has also allegedly been mentioned in several of over a 1000 phone calls that the CBI has tracked over the last few months in its investigation of the case.

http://www.ndtv.com/article/cheat-sheet/why-the-cbi-might-interrogate-railway-minister-pawan-kumar-bansal-10-point-cheat-sheet-365245

[5] New information and documents available with NDTV also raise questions on whether Mr Bansal appointed his family accountant, Sunil Kumar Gupta, as a director of a public sector bank in 2007, when he was the Minister of State for Finance (Expenditure, Banking and Insurance).

http://www.ndtv.com/article/cheat-sheet/why-the-cbi-might-interrogate-railway-minister-pawan-kumar-bansal-10-point-cheat-sheet-365245

[6] In November 2007, Mr Gupta, who admits to working for the Bansal family in the 80s, was nominated by the government as a Part Time “Non Official Director” in state-owned Canara Bank. In July 2010, he was elevated as a Shareholder Director on the bank’s board. Four months later, the bank sanctioned a loan of almost Rs. 20 crore to Theon Pharmaceuticals Limited, a company started by the Bansal family in 2005.

http://www.ndtv.com/article/cheat-sheet/why-the-cbi-might-interrogate-railway-minister-pawan-kumar-bansal-10-point-cheat-sheet-365245

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்!

மே 9, 2013

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

ஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].

ஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].

ஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].

ஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].

பெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].

இந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].

பிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா?

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்?

“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.

ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.

© வேதபிரகாஷ்

09-05-2013