Archive for the ‘சுக்பீர் சிங் பாதல்’ Category

சோனியாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் எப்படி அந்திமக்கிரியையில் கலந்து கொள்கிறார்? (2)

மே 4, 2013

சோனியாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் எப்படி அந்திமக்கிரியையில் கலந்து கொள்கிறார்? (2)

Rahul gandhi with Dalbir kaur

ராகுல்சரப்ஜித்சிங்கின்குடும்பத்தைசந்தித்தது: 03-05-2013 அன்று ராகுல் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளது அரசியலாக்கத்தான் தெரிகிறது.  ஒரு மணி நேரம் அவர்களுடன் இருந்த ராகுல் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கௌரை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்[1]. முன்பு இவ்விஷயத்தில் அக்கரைக் காட்டாதவர், இப்பொழுது எப்படி இவ்வாறு செய்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[2]. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பீஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[3]. சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[4] பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

Rahul_Gandhi_at_Sarabjit_Singh_funeral

லாகூர்வெடிகுண்டுவழக்கு: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, பிகிவிண்ட் என்ற கிராமத்தை சேர்ந்தவர், சரப்ஜித் சிங் விவசாயி. பாகிஸ்தானின் லாகூர் நகரில், 1990ம் ஆண்டு தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. அதில், இந்திய உளவுப்படையான, “ரா’ வின் கைவரிசை இருக்கலாம் என, பாகிஸ்தான் கருதி வந்து, எல்லைகளில் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, இந்திய உளவாளி எனக் கருதிய பாகிஸ்தான் போலீசார், அவரைப் பிடித்து சென்று, சிறையில் அடைத்தனர்[5].

தவறுதலான அடையாளத்தினால் கைது, தண்டனை: பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, “மஞ்சித் சிங்” என்று அடையாளம் காணப்பட்டு பாகிஸ்தானியர் கைது செய்தனர்[6]. ஆரம்பநிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் அறிவித்தது[7]. சரப்ஜித் சிங்தான், “மஞ்சித் சிங் என்று அடையாளம் காட்ட முடியாத நிலையில், தனியாக அழைத்துச் சென்று, அவர் மீது, வெடிகுண்டு வழக்குகள் தொடரப்பட்டு, தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அவரின் கருணை மனுக்களை, கோர்ட்டுகளும், அப்போதைய அதிபர் முஷாரப்பும் நிராகரித்த நிலையில், தண்டனையை, அதிபர் ஜர்தாரி அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை, சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் சிலர் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர், சுயநினைவு இழந்தார். “கோமா’ நிலையில், லாகூர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலையில் இறந்தார். விமானம் மூலம் அவர் உடல் எடுத்து வரப்பட்டது[8].

சொந்தஊரில்தகனம்: பிறகு, சொந்த ஊரான பிகிவிண்டிற்கு, ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்ட சரப்ஜித் உடல், நேற்று அங்கேயே தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை, சரப்ஜித்தின் மூத்த சகோதரி, தல்பீர் சிங் மேற்கொண்டார். அப்பொழுது கூட, ராகுல் அணைத்தப் படி காணப்பட்டார். மாநில அரசு சார்பில், முழு அரசு மரியாதையுடன், சரப்ஜித் சிங் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க, தகனம் செய்யப்பட்டது[9]. இதில், மாநில முதல்வர், பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், வெளியுறவுத் துறை இணையமைச்சர், பிரினீத் கவுர், காங்கிரஸ் பொதுச் செயலர், ராகுல் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்[10]. சரப்ஜித் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தில், மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று கூடி, “சரப்ஜித் சிங், தேசிய தியாகி; அவர் மறைவு குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றியது.

உடல்உறுப்புகள்அகற்றம்: லாகூர் மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவர் உடல், சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் நகர மருத்துவமனையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. லாகூர் சிறையில் சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், அவர் தலையில், 5 செ.மீ., அகலத்திற்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஆழமாக இருந்த அந்த காயம் தான், அவரை, “கோமா’ நிலைக்கு கொண்டு சென்றது என, அவரின் உடலை, பிரேத பரிசோதனை செய்த, லாகூர் டாக்டர்களில் ஒருவர் கூறியுள்ளார்.மேலும், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க, சரப்ஜித் சிங்கின் மண்ணீரல், சிறுநீரகம், கல்லீரல், குடல், மூளை போன்ற பாகங்கள் அகற்றப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த டாக்டர் கூறினார்.

பாகிஸ்தான்பத்திரிகைகள்இரங்கல்: பாக்., சிறையில், சரப்ஜித் கொல்லப் பட்டதற்கு, அந்நாட்டு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளன. நேற்று வெளியான, பாகிஸ்தான் பத்திரிகைகளில், முதல் பக்கத்தில், சரப்ஜித் சிங் செய்தி வெளியாகி இருந்தது. அந்த பத்திரிகைகளில், சரப்ஜித் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அந்த பத்திரிகைகள் வலியுறுத்தியிருந்தன.

சீக்கியர், காங்கிரஸ், தேர்தல் – 2014: தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, சீக்கியர்களிடத்தில் வளைந்து செல்லும்ம் வேலையில் ஈடுபட்டால், காங்கிரஸ் மறுபடியும், ஒரு பெரிய இழப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இப்பொழுது தான், ஓரளவிற்கு, சீக்கியப் பிரிவினைவாதம் தணிந்து, சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. அதனுடன் காங்கிரஸ் விளையாடினால், மறுபடியும் எதிர்விளைவுதான் ஏற்படும். பாகிஸ்தான், அதனைத்தான் எதிர்பார்க்கிறது. ஏனெனில், பஞ்சாபில் பிரச்சினை என்றால், காஷ்மீர் பிரச்சினையை சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் நுழையலாம். சரியாக இந்நேரத்தில் தான் சீனத்துருப்புகளும் லடாக்கில் நுழைந்துள்ளன. இவற்றை நிர்வகிக்கத் தெரியாத காங்கிரஸ் அரசு, சிறுமைத்தனமாக, இத்தகைய நிகழ்சிகளில் பங்குக் கொண்டு ஆதாயம் தேடப் பார்ப்பது, கேவலமான செயல்.

உன்கி நாநி யாத் ஆயேகி: அப்பா இப்படி சொன்னது ஞாபகத்தில் இருக்கும். அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளுப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும் – என்று ராகுல் சொல்லித்தான், சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர்.  ராகுலுக்கு சீக்கியர்களை வளைத்துப் போடுவதற்கு சாமர்த்தியம் இருக்கிறாதா என்று தெரியவில்லை. பாட்டி எப்படி இறந்தால் என்பதும் ராகுலுக்குத் தெரிந்திருக்கும்.  பிறகு எதற்கு, இந்த விபரீத விளையாட்டு?

வேதபிரகாஷ்

04-05-2013


[1] During the meeting that lasted for nearly an hour, Mr Gandhi reportedly got very emotional. He was seen hugging Sarabjit’s sister Dalbir Kaur in pictures captured by the media. He reportedly also broke down while talking to her.

http://www.ndtv.com/article/india/rahul-gandhi-s-emotional-meeting-with-sarabjit-singh-s-family-361772

[2] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.

[5] உளவாளி, ஒற்றன் எனும்போது, ஆளும் கட்சி, ராஜீயமுறையில் ஒற்றர்கள் பரிமாற்றம் மூலம், சரப்ஜித் சிங்கை இந்தியா விடுவித்திருக்கலாம் என்று கூறியுள்ளதை நோக்கத்தக்கது. இக்கோணத்தில் சிந்திக்க காங்கிரஸுக்குத் தெரியவில்லையா அல்லது விடுவிக்க விருப்பம் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

[6] Sarbjit’s family says he had crossed the Indo-Pak border inadvertently in an inebriated condition 23 years ago. He was arrested in Pakistan by the army in 1990 by the name of Manjit Singh. Accused of being an Indian spy, he was charged with plotting a series of bomb blasts in 1989 at Lahore and Multan, convicted, and was sentenced to death.

http://news.outlookindia.com/items.aspx?artid=797122

[7] Sarabjit was tried by several successive courts and was awarded death penalty. His trial was based on a confessional statement which the Pakistani authorities claim he gave during the course of the investigation.

[8] இதனையும் ஊடகங்கள் பெருமளவில் கிரிக்கெட் போட்டி மாதிரி போட்டிப் போட்டுக் கொண்டு, காண்பித்துக் கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாது, விஷயம் இல்லாததால், காண்பித்ததையே, திரும்ப-திரும்பக் காண்பித்துக் கொண்டிருந்தன.

[9] இதை மத்திய அரசு ஏன் எதிர்க்கவில்லை அல்லது அவ்வாறு செய்யலாமா என்று கேட்கவில்லை.