Archive for the ‘மிரட்டு’ Category

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

நவம்பர் 1, 2022

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

காஞ்சுக்கல் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலையில் மூவர் கைது: கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45. இவர் லிங்காயத் சமுதாய மடமான இங்கு 1997 முதல் பசவலிங்க சுவாமி மடாதிபதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார். மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் 30-10-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன[2]. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[3]. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது[4]. அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயரை மடாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

மடங்கள் அரசு, அதிகாரம் மற்றும் அரசியலுடன் சம்பந்தப் பட்டிருப்பது: கர்நாடகாவைப் பொறுத்த வரையில், லிங்காயத் சாமிகள் அதிக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழகத்து சங்கராச்சாரியார் போல, எல்லா அரசியல்வாதிகளும் இவர்களிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோலவே, இந்திரா காந்தி, சோனியா காந்தி, இப்பொழுது ராகுல் காந்தி என்று எல்லோரும் வந்து, இவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். மேலும், பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், கோடிகணக்கில் நிலம், முதலிய சொத்துகளும் இருக்கின்றன. பள்ளிகள் என்று நிறுவனங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. இதனால், ஆளும் அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும், மடங்களுக்கும் சம்பந்தங்கள், உறவுகள் மற்றும் போக்குவரத்துகள், பலவிதங்களில் இருந்து கொண்டே இருக்கும். ஆட்சி, அதிகாரம் மாறினாலும், இத்தகைய உறவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறாகத்தான், இந்த மடாதிபதியு சிக்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவ்வாறு திட்டமிட்டு தற்கொலைக்குத் தூண்டியது இன்னொரு மடாதிபதி.

இதையடுத்து, போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: ராம்நகர எஸ்.பி, சந்தோஷ் பாபு, 30-10-2022 அன்று இந்த விவரங்களை கூறினார். தற்கொலை செய்து கொண்ட மடாதிபதிக்கு போன் செய்து பேசியது, தொட்டபல்லாபூரைச் சேர்ந்த நீலாம்பிகா, 22. இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியான இவருக்கு, கன்னுார் மடாதிபதி மிருத்யுஞ்ஜயாவின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தனக்கு பணகஷ்டம் என்று சொல்லி ரூ 500, 1000 என்றெல்லாம் வாகிக் கொண்டிருக்கிறாள். இந்த இரண்டு மடாதிபதிகளும் உறவினர்கள். இருவரது மடங்களும் மாகடி பகுதியில் தான் உள்ளன. பண்டி மடாதிபதியின் புகழை கெடுத்தால், தனக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கன்னுார் மடாதிபதி கணக்கு போட்டார். மேலும் இரண்டு மடங்களுக்கும் இடையே நிலம் பற்றி வழக்குகளும் உண்டு. இதனால், நீலாம்பிகையை வைத்து, காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மாட்ட வழி வகுத்தார். எனவே, தனக்கு அறிமுகமான நீலாம்பிகாவை, அவரிடம் ‘வீடியோ’ காலில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் பேச வைத்து, பதிவு செய்து கொண்டார்[5]. ஏப்ரலில் இந்த வீடியோக்கள் எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்த மாணவியும் ஏதோ காரணங்களுக்காக ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்துள்ளாள் என்று தெரிகிறது.

கன்னூர் மடாதிபதி வீடியோவை வைத்து காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மிரட்டியது: இந்த வீடியோவை பண்டி மடாதிபதியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ந்தார். மேலும், அந்த மாணவியையும் வைத்து எச்சரிக்க செய்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு தொடர்ந்து அடிக்கடி தொந்தரவு செய்து, நிலைமை மீறி மனத்தளவில் பாதிக்க்ப் பட்ட நிலையை அடைந்துள்ளார். அத்தகைய மிரட்டல்-சதாய்ப்புகளால், பயந்து, மனவலிமை இழந்து. 24-10-2022 அன்று, அவர் தற்கொலை செய்து கொண்டார்[6]. அவர் எழுதி வைத்த கடிதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை செய்தனர். முழு விவரங்கள், வீடியோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்தப் பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தனர். இதையடுத்து ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் –

  1. பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி  நீலாம்பிகா, இவர்களுக்கு உதவியாக இருந்த
  2. கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருத்யுஞ்ஜயா சுவாமி,
  3. மகாதேவய்யா, ஓய்வு பெற்ற ஆசிரியர், இப்பொழுது வக்கீல்

ஆகிய மூவரையும் போலீசார் 30-11-2022 அன்று கைது செய்தனர்[7].

போன்களை கைப்பற்றி உரையாடல்களையும் கேட்டு வபுலன் விசாரணை நடத்தப் பட்டது: கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், மாணவி நீலாம்பிகா, தற்கொலை செய்த மடாதிபதி தவிர, மேலும் பல பிரமுகர்களுக்கும் போன் செய்ததுடன், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்களையும் அனுப்பி உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், பங்கஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பண்டி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்கள் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்[8]. இதனால் மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீலாம்பிகா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தற்கொலைக்கான காரணம் என்ன?: இதுபற்றி விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்[9]. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர்[10]. மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை வைத்து அந்த பெண் உள்பட மேலும் சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், வழக்குக்கும் என்ன தொடர்பு? உள்ளது என்பது பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் மடத்தில் உள்ளவர்கள் உள்பட பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கைதானவர்களிடன் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்து மடாதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம்: முன்னமே பல சம்பந்தப் பட்ட பதிவுகளில் அகசியுள்ள படி, மடாதிபதிகள், தங்களது சீடர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட, குடும்ப, இல்லற மற்றும் பொருளாதார பிரச்சினைகள், குறைகள் முதலியவற்றை சொல்லி, தீர்வு காண முறையிடுவர். மடாதிபதிகள் இறை நம்பிக்கையுடன், எல்லாம் நல்லபடி நடக்கும் என்று தான் ஆசி வழங்குவார். அவ்வாறே நடக்கும் போது சீடர்கள், பக்தர்கள் முதலியோர் சந்தோஷம் அடைவர், நடக்கா விட்டால், வெளிப்படையாக பிரச்சினைக்குக் காரணமானவர்களைக் குறிப்பிட்டு, சமாதானம்  மத்தியஸ்தம் செய்ய கோருவர். பிடிவாதமாக, அடம் பிடித்து, ஆர்பாட்டமும் செய்வர். அழுது கலாட்டா செய்யும் ஆட்களும் உண்டு. அந்நிலைகளில், முடிந்த வரை மடாதிபதி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார். ஆனால், முடியாத போது, பிரச்சினைகள் வேறு வகையில் உருவெடுத்து, குற்றங்கலிலும் முடிகிறது. மடாதிபதிகளுக்குள் பிரச்சினை ஏற்படும் போது, சட்டரீதியில் நீதிமன்றங்களில் வழக்குகளாகச் செல்கின்றன. நிச்சயமாக அங்கு வழக்கு ஒரு மடாதிபதிக்கு வெற்றி என்றால், இன்னொரு மடாதிபதிக்கு தோல்வி என்றாகிறது. பிறகு, மேல்முறையீடு என்றெல்லாம் போகலாம். ஆனால், மடாதிபதிகள் தங்களது தார்மீக, தரும, மதக் கடமைகள், கிரியைகள், செயல்கள் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். அந்நிலைகளில் இத்தகைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] தினமலர், கர்நாடகா மடாதிபதி தற்கொலை விவகாரம்: கைதான கல்லூரி மாணவி குறித்துதிடுக், Updated : நவ 01, 2022  09:24 |  Added : நவ 01, 2022  09:21.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3159346

[3] தினத்தந்தி, மடாதிபதி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது, தினத்தந்தி அக்டோபர் 31, 2:59 am.

[4] https://www.dailythanthi.com/News/India/abbot-suicide-case3-people-including-a-college-student-were-arrested-826146

[5] தினத்தந்தி, ஆடையின்றி வீடியோ காலில் பேசிய சாமியார் உயிரை காவு வாங்கிய சபலம்இளம்பெண் பகீர் வாக்குமூலம், By தந்தி டிவி 31 அக்டோபர் 2022 2:16 PM

[6] https://www.thanthitv.com/latest-news/karnataka-bandemutt-swamiji-sucide-145746

[7] தினத்தந்தி கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல், நவம்பர் 2, 1:23 am (Updated: நவம்பர் 1, 10:18 am)

[8] https://www.dailythanthi.com/News/India/including-the-arrested-college-student3-people-in-police-custody-for-6-days-826808

[9] தமிழ்.ஒன்.இந்தியா, ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல், By Nantha Kumar R, Published: Sunday, October 30, 2022, 0:21 [IST].

[10] https://tamil.oneindia.com/news/bangalore/honeytrap-karnataka-lingayat-seer-suicide-case-bangalore-woman-and-2-others-arrested-by-police-482828.html