Archive for the ‘பெண்’ Category

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (1)

மார்ச் 9, 2015

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (1)

புதிய தலைமுறை விளம்பரம்

புதிய தலைமுறை விளம்பரம்

இந்து அமைப்பினர் தாக்குதல்: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பிரபல டி.வி., சேனலான புதிய தலைமுறையில், ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சியை கண்டித்து, ஒளிப்பதிவாளரைத் தாக்கியதுடன் கேமிராவையும் அடித்து உடைத்துள்ளதுள்ளனர் இந்து அமைபினர்[1] என்று பொதுவாகவும்,  இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் என்று நக்கிரனும்[2],  “பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்று ஒன்.இந்தியா.தமிழ்[3] முதலியன ‘குறிப்பிட்டுள்ளன.  ஆனால், இந்து அமைப்பினர் ஏன் அந்நிகழ்ச்சியை எதிர்த்திருக்க வேண்டும் என்பது பற்றி மூச்சுக்கூட விடவில்லை. ”பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா” என்பது அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் தலைப்பு, உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே விஜய்-டிவியில் இத்தகைய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மையில் பெண்மையினை அவமதிப்பதாக இருந்தது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது. எந்த அமைப்பும், அந்த அமைப்பு சார்ந்தவர்களும் அவர்களுடைய உணர்வுகள் பாதித்திந்திருந்தால் ஒழிய, இத்தகைய எதிர்ப்புகள் ஏற்படாது.

My rights and the rights of others

My rights and the rights of others

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா”: சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக, பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா என்ற கருத்தை வைத்து உரக்கச் சொல்லுங்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தது[4]. இதற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வந்தன. இந்நிலையில், இது தாலியை இழிவு படுத்துவதாக அமைந்துள்ளது என்பதால், நிகழ்ச்சியை எடுக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீறி எடுத்தால் தாக்குதல் நடத்துவோம் என்று அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர், என்று ஊடகத்தினர் வெளியிட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. இவ்விசயத்தில் இவ்விரு பிரிவினரிடையே உரையாடல்கள் அடந்துள்ளன என்றாகிறது. அதையும் மீறி ஒப்புக்கொள்ளாத காரணங்களுக்காக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அச்சுருத்தல் ஆரணமாக புகார் கொடுக்கப்பட்டது. எனவே, இது குறித்து காவல்துறைக்கு தகவலளித்து டி.வி., சேனல் நிலையத்துக்கு பாதுகாப்பு வழங்கும் படி புதிய தலைமுறை கேட்டுக் கொண்டது. இதற்கமைய புதியதலைமுறை கட்டிடடத்திற்கு பாதுகாப்பும் போடப்பட்டது. கட்டிடத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இந்து முன்னணியினர் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்: இந்நிலையில், ஞாயிறு காலை (09-03-2015), புதிய தலைமுறை அலுவலகத்திற்கு வெளியில் இருக்கும் தேநீர் கடையில், நின்று கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் மற்றும் பெண் நிருபர் இருவரை சிலர் தாக்கியுள்ளனர். சிலர் தாக்கியுள்ளனர் என்றது, இந்து அமைபினர்[5] என்று பொதுவாகவும்,  இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் என்று நக்கிரனும்[6],  “பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்று ஒன்.இந்தியா.தமிழ்[7] முறையே வெளியிட்டன. பிறகு .அலுவலகம் அருகே நின்ற தன்னை பேச இடமளிக்காமல் இந்து முன்னணியினர் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்[8]. இப்படி செய்திகள் மாற்றி-மாற்றி எளியிட்டிருப்பதும் புதிராக உள்ளது. அப்படியென்றால், குறிப்பிட்டக் கருத்தைத் தடுக்க வேண்டும் என்ற போக்கு ஏன் இருந்தது என்பதை மற்றவர்கள் தாம் விளக்கியிருந்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

இந்து முன்னணி சார்பில் பரமேஸ்வரன் தெரிவித்த பதில்: தாலி பற்றிய விவாத நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை இந்து முன்னணியினர் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுவதற்கு அவ்வமைப்பின் மாநில செயலாளர் பரமேஸ்வரன் தெரிவிக்கும் பதில்[9] என்று பிபிசி வெளியிட்டுள்ளது. இந்து முன்னணியினரே இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்ற புதிய தலைமுறையின் குற்றச்சாட்டுக்கு இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் பரமேஸ்வரன் தமிழோசையில் பதிலளித்தார். புனிதமான தாலியைக் கொச்சைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என்று அவர் கூறினார்[10]. இதைக் காவலர்கள் பார்த்து கொண்டு இருந்தும், தாக்கியவர்கள் மீது நவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. இதனால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களில் இச்செய்தி தீயாகப் பரவியதை அடுத்தே, போலீசார், இது சம்பந்தமாக 5 பேரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு, கட்சித் தலைவர்களும், மற்ற ஊடகங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன, என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது: புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் மீது, நிறுவனத்தின் அலுவலகம் அருகே காவல் துறையினர் முன்னிலையில் மத அடிப்படைவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன[11] என்று புதியதலைமுறையே வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வன்முறை மூலம் பறிக்க முயன்று தாக்குதல் நடத்திய கும்பலையும், அதற்குத் துணை நின்ற தமிழகக் காவல்துறையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் என்பதை இத்தாக்குதலில் ஈடுபட்டோர் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய தவ்ஹீத் ஜமா அத் மாநில செயலாளர் முஹமது ஷிப்லி, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது வேதனையாக உள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தாக்குதல் நிகழ்த்தியவர்களை கைது செய்து கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆணவம், அகம்பாவத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதே போல் சென்னை பத்திரிகையாளர் சங்கம், ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆப் தமிழ்நாடு, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம், திருச்சி மீடியா கிளப் உள்ளிட்ட அமைப்புகளும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன[12]. இப்படி கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது வித்தியாசமாகத்தான் உள்ளது.

வேதபிரகாஷ்

© 10-03-2015

[1] தமிழ் உலகம், தாலிநிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: புதிய தலைமுறை கேமிராமேன் மீது தாக்குதல்..!!, Monday, 09 March 2015 10:07.

[2] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=139198

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/tv-cameraman-attacked-chennai-222343.html

[4]http://www.tamizhulagam.com/index.php?option=com_k2&view=item&id=23934:%E2%80%99%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E2%80%99-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=10;

[5] தமிழ் உலகம், தாலிநிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: புதிய தலைமுறை கேமிராமேன் மீது தாக்குதல்..!!, Monday, 09 March 2015 10:07.

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=139198

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/tv-cameraman-attacked-chennai-222343.html

[8] http://www.bbc.co.uk/tamil/india/2015/03/150308_puthiyathalaimuraiattack

[9] http://www.bbc.co.uk/tamil/india/2015/03/150308_parameswaran

[10]http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6972068.ece

[11]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5-2-204262.html

[12] புதியதலைமுறை, புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர், பெண் செய்தியாளர் மீது தாக்குதல்: பல்வேறு அமைப்புகள் கண்டனம், பதிவு செய்த நாள்மார்ச் 08, 2015, 1:46:12 PM; மாற்றம் செய்த நாள்மார்ச் 08, 2015, 10:38:57 PM.

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (2)

நவம்பர் 30, 2013

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (2)

இதன் முதல் பகுதி இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[1].

                                                                                     

ஆஷிஷ்கேதான்  போன்ற  புலன்விசாரணை  பத்திரிக்கையாளர்கள்  ஏன்  மற்ற  விசயங்களை  எடுத்துக்  கொள்வதில்லை?: அதாவது, அந்தந்த ஊடகங்கள் நேரில் சென்று பார்த்தோ, சரிபார்த்தோ, இச்செய்திகளை வெளியிடவில்லை. மேலும். ஆஷிஷ் கேதான் என்பவர் பொதுவாக பாஜக, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி போன்ற இயக்கங்களுக்கு எதிராக “ஸ்டிங் ஆபரேஷன்” செய்து கொண்டு, இச்வ்வாறு பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வரும் பழக்கத்தைக் கொண்டுள்ளவர். ஆனால், மற்ற இயக்கங்களைப் பற்றி அவ்வாறு தனது திறமைகளைக் காட்டுவதில்லை. உதாரணத்திற்கு, ஜிஹாதி தீவிரவாதம் இந்தியாவை சீர்குலைத்து வருகிறது. அதைப் பற்றி இவ்வாறு தனது புத்தியை பயன்படுத்தி எதனையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதில்லை. எத்தனையோ கோடானுகோடி ஊழல்கள் பற்றி விவரங்கள் வந்தாலும், காங்கிரஸ்காரர்கள் அவற்றை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள். அவற்றைப் பற்றியும் ஆஷிஷ் கேதான் போன்ற புலன்விசாரணை பத்திரிக்கையாளர்கள் தங்களது யுக்திகளைக் கையாண்டு எதையும் வெளிகொணர்வதில்லை. இதே மாதிரி, சோனியாவைப் பற்றி யாரும் “ஸ்டிங் ஆபரேஷன்” நடத்தி செய்திகளை வெளியிடுவதில்லை.

பிஜேபிக்கு  எதிரான  செய்தி  என்றதும்  அதனை  காங்கிரஸ்  ஊதி  பெரிதாக்குகிறது: காங்கிரஸ் கட்சி உடனே தங்களது பெண் எம்பிக்களை வைத்து ஒரு கூட்டம் கூடி, பத்திரிக்கையாளர்களிடம் கண்டனத்தை வெளியிட்டது. பெண்களுக்கு இத்தகைய தொந்தரவுகள் ஏற்படுகின்றன, பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, இவற்றையெல்லாம் பாஜக செய்து வருகிறது, ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமித் ஷா செய்துள்ளார், மோடியின் ஆணையின் கீழ் செய்துள்ளார், இதற்கு மோடியே பொறுப்பாகும் என்று வாதங்கள் பெரிதாக்கப் பெரிதாக்கப்பட்டுள்ளன. ஆனால், மதிப்புக்குரிய இதே பெண்மணிகள் கற்பழிப்பு விவகாரங்களில் இம்மாதிரி நேர்ந்து வரவில்லை கூட்டம் கூட்டவில்லை, எதிர்த்துப் பேசவில்லை ஏன் என்று தெரியவில்லை. தில்லியின் முதன்மந்திரி ஒரு பெண்ணாக வேறு இருக்கிறார். ஆமாம், அவர் காங்கிரஸ் என்பதால் மூடிக்கொண்டு இருந்தார்கள் போலும்!

காங்கிரஸ்  கட்சியின்  குற்றச்சாட்டு  மற்றும்  கண்டனம்: இதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. புலனாய்வு இணையதளங்கள் என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கோப்ராபோஸ்ட், குலாயில் ஆகியவை, நவம்பர் 15ஆம் தேதி, குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மோடிக்கு மிகவும் நெருங்கியவருமான அமித் ஷா ஒரு ஐபிஎஸ் அதிகாரியுடன் பேசிய உரையாடலின் பதிவை வெளியிட்டன. அதில், தனக்குத் தெரிந்த “சாஹேப்’ என்பவருக்காக, கட்டடக் கலை வல்லுநரான இளம்பெண் ஒருவரைக் கண்காணிக்குமாறு போலீஸாருக்கு அமித் ஷா உத்தரவிடுவதாக உரையாடல் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, தனிப்பட்ட ஒருவரை சட்டவிரோதமாகக் கண்காணிக்க காவல்துறையைப் பயன்படுத்தியதாக மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது. தவிர, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு அமைத்து இதை விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது. பெண் ஒருவர் சட்டவிரோதமாக வேவு பார்க்கப்பட்டது உண்மை என்றால், பிரதமர் வேட்பாளராக இருக்க மோடிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

புலனாய்வு  இணையதளங்கள்   என்று  பறைச்சாற்றிக்  கொள்ளும்  கோப்ராபோஸ்ட்,   குலாயில்: முன்பு டெஹல்கா/தெஹல்கா தான் ரொம்பவும் கலாட்டா செய்து கொண்டிருந்தது. மனித உரிமைகளுக்காக இவர்கள் தாம் உள்ளனர்போல, தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தன. தீஸ்தா செதல்வாத், சனம் ஹாஸ்மி போன்ற வீராங்கனைகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு போராடுவார்கள். ஆனால், மற்ற உரிமைமீறல்கள், மற்றவர்களின் சட்டமீறல்கள், குறிப்பாக, இவர்களுடையை குறிப்பிட்ட விருப்பங்களில் வராத மனிதர்களைப் பற்றிய உரிமைகளை இவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வேடிக்கை மட்டுமல்ல, அவர்கள் பாரபட்சம் மிக்கவர்கள் என்று எடுத்துக் காட்டுகின்றன. இப்பொழுது கோப்ரா[2], குலாயில்[3] என்று வந்திருக்கின்றன. இரண்டுமே ஒரே மாதிரியான விசயங்களைக் கொடுத்திருக்கின்றன. ஆனால், அந்த இணைதளங்களில் சோனியா, ராகுல் எல்லாம் எப்படி விவரங்களைப் பெறுகின்றனர், அவர்கள் போனில் யாருடன் பேசுகிறார்கள் என்பது பற்றி எந்த விவரங்களையும் காணவில்லை. அதாவது, அவர்கள் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் போலும்! ஊடகங்களுக்கு குசியாகி விட்டன – இன்னும் மோடியைப் பற்றி இம்மாதிரியான விசயங்கள் 2014 தேர்தலுக்கு முன்னர் நிறைய வரும் என்றே தலைப்பிட்டு எழுதியுள்ளன[4].

காங்கிரஸ்  கட்சியின்  குற்றச்சாட்டுக்கு  பாஜக  கண்டனம்: காங்கிரஸ் கட்சியின் புகார்களை பாஜக மறுத்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி இதுகுறித்துக் கூறியதாவது: இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. வேவு பார்க்கப்பட்டதாகச் சொல்லப்படும் இளம்பெண்ணோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ குஜராத் மாநில அரசு குறித்து புகார் கூறவில்லை. ஆனால், தனிப்பட்ட ஒருவரின் குடும்பப் பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காக பெரிதுபடுத்துகிறது காங்கிரஸ். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பெண் தொடர்பான முழு விவரங்களையும் சில காரணங்களால் வெளியிட முடியாது. ஆனால், சட்டவிரோதமாக எதுவும் நடந்துவிடவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இணையதளங்கள் வெளியிட்ட உரையாடலிலேயே கூட, பாஜகவுக்கு சாதகமான அம்சங்கள்தான் உள்ளன. நாட்டில் நரேந்திர மோடிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கால் நிலைகுலைந்து போயுள்ள காங்கிரஸ் கட்சியின் இயலாமையே இத்தகைய புகார்களாக வெளிப்படுகிறது. இந்த விவகாரத்தில் குறிப்பிடப்படும் இளம்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறிச் செயல்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணை போனவர்களும்தான்”,என்றார் மீனாட்சி லேகி[5].

அமெரிக்க  “ஸ்னூப்பிங்”,   “ஸ்டாக்கிங்”   சித்தாந்தங்கள்  இந்தியாவிற்கு   ஒத்துவருமா?:  “ஸ்னூப்பிங்” என்றால் ஒரு தனிப்பட்ட நபரை அவருக்குத் தெரியாமல், அவரைக் கண்காணிப்பது, அவரது போக்குவரத்துகளை கவனிப்பது, அவரது சொந்த விசயங்களை அறிந்து கொள்ள யத்தனிப்பது, வேவு பார்ப்பது முதலியன ஆகும். துப்பறியும் முறைப்போல, அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் நடவடிக்கையாகும். “ஸ்டாக்கிங்” என்பதும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து பார்க்கும் ச்யலாகும். இவையெல்லாம் இப்பொழுது, அதிநவீன அமெரிக்க சமூகங்களில், ஊடகங்களில் பிரயோகப்படுத்தும் வார்த்த்யைகள் ஆகும். அமெரிக்க சமூகத்தில் யார் எப்படி இருந்தாலும், வாழ்ந்தாலும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் உள்ளே புகுந்து ஆராய முடியாது.

பெண்ணின்தந்தைதனதுமகளைப்பற்றிஊடகங்கள்தலையிடவேண்டாம்என்றுகேட்டுக்கொண்டது: சமீபத்தில், குஜராத்தில் ஒரு பெண்மணியை 2009ல் அப்பொழுதைய உள்துறை அமைச்சரின் ஆணையின் படி, நோட்டம் விட்டதாக செய்திகள் வந்தன. அப்பெண்ணின் தந்தை ஏற்கெனவே, “தான் வேண்டிக்கொண்டதின் பேரில் தான் அவ்வாறு கவனிக்கப்பட்டது, அப்பொழுது எங்களுடைய குடும்பத்தின் நிர்பந்தத்தினால், அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால், இப்பொழுது அதனை அரசியல் மயமாக்கி பிரச்சினையாக்க முயல்வது தெரிகிறது. இதனால், எனது மகள் மற்றும் குடும்பத்தைப் பற்றி ஊடகங்களில் விவாதிக்கப் படுவது, ஒரு குறிப்பிட்ட குழுவின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. எனவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இவ்விசயத்தில், மேற்கொண்டு எந்த விசாடரணையும் செய்யப்படவேண்டிய அவசியம் இல்லை என்றுக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய மகள் ஒரு கட்டிடக் கலை வல்லுனர் மற்றும் நன்கு படித்தவர். இப்படி தனது சொந்த வாழ்க்கையில் ஊடகங்கள் நுழைவதை அவள் விரும்பவில்லை. அவள் தன்னைப் பற்றி மேலும் இவ்விசயத்தில் தொந்தரவுப் படக்கூடாது என்பதால் என் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளாள். மேலும் என் மகளுக்கு அரசாங்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி நன்றாகவே தெரியும், என்று தேசிய மகளிர் ஆணையத்திற்கு எழுதியுள்ளார்[6].

© வேதபிரகாஷ்

21-11-2013


[5] தினமணி, அமித்ஷாவுக்காகஇளம்பெண்வேவுபார்க்கப்பட்டாரா?, First Published : 18 November 2013 01:34 AM IST

[6] “In 2009, due to personal and family reasons, I requested the chief minister, Gujarat to take steps in my daughter’s interest,” the father has said in the letter. “Considering the fact that the issues bothering me and my family were personal in nature, I deemed it fit to make an oral request to the chief minister as the political head of the state of Gujarat and with whom I have long-standing relations spread over two decades.”  His letter says, “I am shocked and pained due to the developments of the past few days in which personal and family issues pertaining to my daughter are being publicly raised in the media by certain vested interest groups in spite of my written request to the media…”  He goes on to say that his daughter, an architect and educated woman is married and deeply perturbed by the intrusion upon her personal life and privacy. He says his daughter asked him to write to the commission “on her behalf to maintain her anonymity and keep her whereabouts from public gaze”.

http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Snooping-scandal-Womans-father-writes-to-NCW-saying-no-need-to-probe-case-further/articleshow/26070019.cms?intenttarget=no

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)

நவம்பர் 21, 2013

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)

Asish ketan anti-modi campaign2

குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா உத்தரவுப்படி அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் காவல்துறையால் சட்டவிரோதமாக வேவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது[1]. குஜராத் முதல்வரின் வலதுகரமாகச் செயல்பட்டவர் அமித் ஷா. போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் தற்போது புதிய விவகாரத்தில் சிக்கியுள்ளார். ஆதலால், அவருடைய பாஸ் மோடி என்பதால், மனித உரிமைகள் மீறிய குற்றத்திற்காக மோடி பதவி விலக வேண்டும், தேர்தலில் நிற்க அவருக்கு யோக்கியதை இல்லை, நிற்கக்கூடாது என்றெல்லாம் வாதங்கள் எழுந்துள்ளன. இனி இதன் பின்னணி என்ன என்பதனைப் பார்ப்போம். போலி என்கவுன்டர் விசயத்தில், உள்துறையின் கீழ் வரும் சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ எப்படி மோதவிடப் பட்டன என்பதை முன்னர் பார்த்தோம்.

Asish ketan anti-modi campaign

உள்துறையின் கீழ் வரும் சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ முதலியவை மோதவிட்டது:குஜராத்தைப் பொறுத்த வரையில், இஸ்ரத் ஜஹான் என்ற பெண் தன்னுடைய கேரளாவின் காதலுடன் மோடியைக் கொல்ல திட்டமிட்டு குஜராத்திற்கு வந்ததாகக் கருதப் பட்டு, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டாள். இதனை “என்கவுன்டர்” என்று சொல்லப்பட்டு, பிறகு “போலி என்கவுன்டர்” ஆகி சர்ச்சைகளில் சிக்கியுள்ள விவகாரமாகி விட்டது. இதனால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், மற்றதுறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டதுறைகளின் மந்திரிகள், முதல் மந்திரி என்று அனைவரது மீதும் குற்றஞ்சாட்டப் பட்டது. வழக்குகள் நடந்து வருகின்றன. இருப்பினும் இடையிடையே, 2002 பிரச்சினை நேரிடையாகவும், மறைமுகமாகவும் கிளப்பப்படுகிறது.

Anti-modi-brigade

செக்யூலரிஸ போர்வையில் கம்யூனலிஸமாக்கப்படும் பிரச்சினை: 2002கிருந்து நடந்து வருவதால், இடையில் தேர்தல்களும் நடந்துள்ளதால், தொடர்ந்து காங்கிரஸ்-பிஜேபிக்கு மோதல்கள் வலுத்துள்ளதால், அதே நேரத்தில் மோடியே திரும்ப-திரும்ப வெற்றிப் பெற்று முதலமைச்சராகியுள்ளாதால், மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்-கூட்டணி சிபிஐ, என்.ஐ.ஏ, ஐ.ஏ.எஸ் போன்ற அதிகாரிகள் மோடிக்கு எதிராக செயல்பட வைத்துள்ளனர். இதனால், நீதித்துறை, போலீஸ்துறை, மற்றும் சிபிஐ, என்.ஐ.ஏ, உள்துறை முதலியவை அரசியல் மயமாக்கப் பட்டுவிட்டது. இப்பிரசினையில் முஸ்லிம்பிரச்சினையும் சேர்ந்துள்ளதால், ஓட்டுவங்கி அரசியலுக்காக தேர்தல் வரும் போதெல்லாம், அவ்வழக்குகளை தூசிதட்டு எடுக்கிறது, கோர்ட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதிரடி தீர்ப்புகள் கொடுக்க ஆணையிடுகிறது, இல்லை ஏதாவது ஒரு பழைய பிரச்சினையைக் கிளப்பி விட்டு அதனை 2002 கலவரத்துடன் சேர்த்து, மோடி முஸ்லிம்களைக் கொண்று விட்டார் என்ற பழையப் பாட்டைப் பாட ஆரம்பிக்கிறது. இதற்கு ஊடகங்கள் பெரும்பாலும் துணை போகின்றன.

Asish ketan anti-modi campaign3

பிரதீப்சர்மாமனுவில் மாறம் செய்தது: போலி என்கவுன்டர் பிரச்சினை உண்மையில் பல ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குள் சண்டையை மூட்டியுள்ளது. காங்கிரஸ் வேண்டுமென்றே இதற்கு நெருப்பூட்டி, எண்ணையினையும் ஊற்றி வருகிறது. இவ்விசயத்தில் பிரதீப் சர்மா என்ற IAS அதிகாரி 1984வது பிரிவைச் சேர்ந்தவர், நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக சிலருக்கு ஒதுக்கீடு செய்தது, கட்ச் பகுதியில் உள்ள சில கம்பெனிகளுக்கு நிலத்தை கொடுத்தது போன்ற விசயங்களில் ஐந்து குற்றவியல் வழக்குகளில் சிக்க்யுள்ளார். கட்ச் பூகம்ப நிவாரண நிதி பட்டுவாடா விசயத்திலும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதால் ஜனவரி 6, 2010 அன்று கைது செய்யப்பட்டார். அப்பொழுது பாவ்நகர் முனிசிபல் கமிஷனராக இருந்தார்[2].யஆனால், அவரது குற்றங்களை, குற்றச்சாட்டுகளை அரசியலாக்கப் பார்க்கிறார். பிரதீப் சர்மா என்ற IAS அதிகாரி தான் 2002 கலவரங்களில் அரசின் பங்கு இருப்பதை வெளிப்படுத்தியதால் தான், தனது சகோதரன் குல்தீப் சர்மா என்பவரை தொந்தரவு படுத்துவதாக ஒரு மனு கொடுத்தார்.

G.L. Singhal, suspended IPS officer Photograph by Mayur Bhatt

பிரஷாந்த்பூஷண்என்றஆம்ஆத்மிகட்சிக்காரர்”இவருக்காக வாதாடுவது: முதலில் அவர் தனது மனுவில் ஆதாரமில்லாத குஜராத் அரசு ஒருபெண்ணை வேவு பார்த்ததாக சில டேப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றம் மே.12, 2013 அன்று அவருடைய வழக்கிற்கும், குறிப்பிடப் பட்ட டேப்புகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், எடுத்துவிடும் படி ஆணையிட்டது. அவ்வாறே அவரும் செய்தார். அதாவது மனு மாற்றி தாக்கல் செய்யப்பட்டது. இவருக்கு பிரஷாந்த் பூஷண் என்ற “ஆம் ஆத்மி கட்சிக்காரர்” வாதாடி வருகிறார். அரசுதரப்பில் வாதாடும் வக்கீல் துஷார் மெஹ்தா சர்மா தனது மனுவில் டேப்புகளைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை என்று எடுத்துக் காட்டினார். அந்நிலையில் உச்சநீதிமன்றம், பிரதீப் சர்மாவை ஒரு தன்னிலை விளக்க பிரமாணத்தைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

gl_singhal_amit Outlook representation

குறிப்பிட்ட ஊடகங்களின் வர்ணனை: பெங்களூரைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரை 2009-ம் ஆண்டில் காவல் துறையினரின் உதவியுடன் அமித் ஷா உளவு பார்த்துள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.ஜிங்கால் தலைமையிலான போலீஸார் அந்தப் பெண்ணை, விமான நிலையம், ஹோட்டல், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பின்தொடர்ந்துள்ளனர். வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் பெற்றோர் குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசிக்கின்றனர். அவர்களைப் பார்க்க அந்தப் பெண், பெங்களூரில் இருந்து அடிக்கடி அகமதாபாத் வந்து சென்றுள்ளார். 2005-ம் ஆண்டில் குஜராத்தின் பாவ்நகர் மாநகராட்சி விழாவில் முதல்வர் நரேந்திர மோடியும் அந்தப் பெண்ணும் சந்தித்ததாக கோப்ரா போஸ்ட் [Two investigative portals, Cobrapost and Gulail] இணையதளம் நவம்பர் 15, 2013 அன்று கூறுகிறது[3]. இதற்கு ஆதாரமாக அமித் ஷாவுக்கும் ஷிங்காலுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் பெரும்பாலான இடங்களில், மேலிட உத்தரவின்பேரில் இந்த உளவுப் பணி நடைபெறுவதாக போலீஸ் அதிகாரியிடம் அமித் ஷா கூறுகிறார்[4]. இவைல்லாம் ஆஷிஷ் கேதான் மற்றும் ராஜா சௌத்ரி[5], [The Stalkers: Amit Shah’s Illegal Surveillance Exposed] என்ற வெளியிட்ட கட்டுரையின் மீது ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ள செய்தியாகும்[6]

 

சிபிஐயிடம் இருந்த் டேப்புகள் எப்படி ஆஷிஷ் கேதானிடம் வந்தன?: ஜி.எல். சிங்கால் என்ற போலீஸ் அதிகாரி வழக்குகள் சம்பந்தமாக சிபிஐயிடன் நூற்றுக் கணக்கான ஒலிநாடாக்களை ஒப்படைத்தார். அவையெல்லாம் மாநில குஜராத் அரசு தீவிரவாதிகளைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு கொடுக்கப் பட்ட ஆணைகள், உள்துறை அமைச்சர், மற்ற போலீஸ் அதிகாரிகளின் உறையாடல்கள் முதலியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால், அவற்றில் சிலவற்றில், ஒரு பெண்ணைக் கண்காணிக்கச் சொல்லதாக உள்ளன. அந்த போன் உரையாடல்களின் மூலம், எப்படி ஒரு பெண் கண்காணிக்கப்பட்டாள் என்று தெரிய வருகிறது. ஆனால், இவ்வாறு சிபிஐயிடம் உள்ள ஒலிநாடாக்கள் எப்படி தனியாரிடம் வந்தன, குறிப்பாக ஆஷிஷ் கேதான் போன்ற பிஜேபி-எதிர்பிரச்சாரக் காரர்களிடம் கிடைக்கபெற்றுள்ளன என்பதை யாரும் விவாதிப்பதாக இல்லை. அதாவது, சிபிஐ தன்னிடமுள்ள எந்த ஆதாரங்களையும் அதுமாதிரி வெளிப்படுத்த முடியாது. குறிப்பாக சம்பந்தப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இவ்வாறு பொதுமக்களிடம் விநியோகிக்கும் அளவில் கிடைக்க வாய்ப்பு கொடுக்காது. ஆனால், கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் –

  1. சிபிஐக்கு யார் அவ்வாறு கொடுக்க ஆணையிட்டது?
  2. 2009லேயே தெரிந்த விசயத்தை, இப்பொழுது பிரச்சினையைக் கிளப்பலாம், அவற்றில் அமித் ஷா பேசிய உரையாடல்கள் உள்ளன என்பனவெல்லாம் தெரிந்து அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து எப்படி ஆஷிஷ் கேதானிடம் கொடுக்கப்பட்டன?
  3. அமித் ஷா பேசிய உரையாடல்கள் உள்ளன என்பது யாருக்குத் தெரியும்?
  4. அவர்கள் அதனை எப்படி தெரிந்து கொண்டார்கள்?
  5. குறிப்பாக ஒரு பெண் கண்காணிக்கப்பட்ட விசயம் உள்ளது என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?

ஆகவே, அந்த டேப்புகள் முழுவதும் போட்டுப் பார்த்து, கேட்டுத் தெளிந்து, இவ்விவகாரங்கள் உள்ளன, இவற்றை மோடிக்கு எதிராக உபயோகப் படுத்தலாம், அவற்றை இப்பொழுதுதான் கொடுக்க வேண்டும், ஆஷிஷ் கேதானிடம் கொடுக்கப்படவேண்டும் என்பனவற்றையெல்லாம் யாரோ தீர்மானித்துள்ளார் அல்லது தீர்மானிக்கப்பட்டுள்ள்து.

© வேதபிரகாஷ்


[2] Sharma, a 1984 batch IAS officer, is facing five criminal cases including a case for alleged irregularity in land allotment to private firms in Kutch district in 2008. In his petition, he had made references to the alleged surveillance on the woman. The court had on May 12, 2011 directed him to remove those charges. Sharma had deleted the references to the woman from his petition. Sharma, who last served as Bhavnagar municipal commissioner, was arrested on January 6, 2010 in a case involving alleged irregularities in Kutch earthquake rehabilitation.

http://timesofindia.indiatimes.com/india/SC-seeks-Gujarat-IAS-officers-affidavit-on-snooping/articleshow/26060200.cms

[5] Ashish Khetan is Editor, Gulail.com and Raja Chowdhury is Senior Correspondent, Cobrapost.com

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=roVZrT2_xuc

[6]  Ashish Khetan and Raja Chowdhury, The Stalkers: Amit Shah’s Illegal Surveillance Exposed, Updated: Nov 15, 2013 04:49 AM,  http://www.cobrapost.com/index.php/news-detail?nid=3969&cid=7

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்?

செப்ரெம்பர் 15, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்?

 

அமர்சிங் வெளியேற்றம், ஆசம்கான்மறுநுழைவு: அமர்சிங் பிஎஜேபி எம்.பிக்கள் விசயத்தில் அதிகமாகவே வேலை செய்து, அதாவது, பணம் கொடுத்து மாட்டிக் கொண்டு, சிறையிலும் இருந்துள்ளார். போதாகுறைக்கு அக்காலத்தில் தான், ஆசம்கானுடன் தகராறு ஏற்பட்டது. ஒருவேளை, இருவரும் கட்சிக்காக யார் அதிகமாக உழைக்கிறார் என்று காட்டிக் கொள்ள அத்தகைய காரியங்களை செய்திருக்கலாம். ஆனால், அமர்சிங் விவகாரம் பிஜேபி எம்.பிக்களுக்கு லஞ்சம் என்ற விதத்தில் பெரிதாகி விட்டது. காங்கிரசுக்கு தொடர்பு என்று கூட விவகாரங்கள் இருந்தன. போதாகுறைக்கு பாட்லா தீவிரவாத பிரச்சினையிலும் சிக்கிக் கொண்டார்[1]. இதனால், 06-01-2010 அன்று அமர்சிங் சமஜ்வாடி கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. 02-02-2010 அன்று கட்சியிலிருந்தும் முல்லாயம் சிங்கால் வெளியேற்றப்பட்டார். ஆனால், முன்னர் 04-12-2010 அன்று மறுபடியும் ஆசம்கான் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனால், எல்லாமே, சேர்ந்து நடத்திய நாடகமா அல்லது அமர்சிங்கை வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகளா இல்லை பிஜேபியின் பலம் குறைக்க மேற்கொண்ட வழிகளா என்று அரசியல் ரீதியில் ஆராய வேண்டியுள்ளது.

ராஜினாமாமிரட்டல்இவருக்குசாதாரணவிசயம்தான் (2012): 25-07-2012 அன்று தனக்கு மீரட் மாகாணத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்வதாக மிரட்டினார். அதாவது, மீரட் மிகவும் மதசார்புள்ள, கலவரங்கள் நடக்கும் இடமாகும். முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இவர்களைப் பிரித்து வைத்துதான் அரசியல் செய்ய முடியும். ஆகவே, தன்னுடைய அதிகாரம் குறைந்து விடுமே என்று ஆத்திரப்பட்டதில், ஆச்சரியமில்லை (இன்றும் கலவரப் பகுதிகளில் மீரட் உள்ளதை கவனிக்கலாம்). முஸ்லிமாக இருந்தாலும், வேண்டுமென்றே முல்லாயம் சிங், இவரை கும்ப மேளா கமிட்டிக்கு சேர்மேனாக நியமித்தார். ஏதோ உபியில் இவரைவிட சிறந்த இந்துவே கிடைக்காத மாதிரி, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் நியமிக்கப்பட்டது வினோதமே. ஆனால், அந்நேரத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. ஆனால், அல்லாஹாபாத் ரெயில் நிலையத்தில் நடந்த நெரிசலில் 40ற்கும் மேற்பட்டவர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்காணவர் காயமடைந்தனர். அப்பொழுது தான், தான் அதற்கு பொறுப்பில்லை, ரெயில்வே தான் காரணம் என்றெல்லாம் திமிராகப் பேசினார். அந்நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பிரச்சினை வரும் போலிருந்தது. இதனால், 11-02-2011 அன்று அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். முல்லாயம் விடவில்லை, ஆமாம், ராஜினாமை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் நிர்வாகத்தைப் போற்றிப் பாராட்டினார். ஒரு முஸ்லிம் நிர்வாகம் செய்ததில் 40 இந்துக்கள் இறக்க நேர்ந்தது என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. போதாகுறைக்கு, ஹார்வார்ட் பல்கலைக் கழகம், இவர் எவ்வாறு கும்ப மேளாவை நிர்வகித்து நடத்தினார் என்று பேசுவதற்காக அழைத்ததாம்!

பாஸ்டன் விமான நிலையத்தில் தகராறு செய்தது (ஏப்ரல், 2013): ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இவருக்கு அழைப்பு வந்ததால், கும்ப மேளா நிர்வகிப்புப் பற்றி பேசச் சென்றார். ஆனால், பாஸ்டன் விமான நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்லது. இவரது கட்சி சமாஜ்வாடி பார்டி மற்றும் அதற்குண்டான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப் பட்டது. அல்-குவைதா மற்றும் டி-கம்பெனிகளினின்று அக்கட்சிக்கு பணம் வருவது, மற்றும் இதர தொடர்புகள் பற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி, தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்தார்[2].  [இந்திய ஊடகங்கள், குத்தி-நோண்டி விவரங்களை சேகரிக்கும் புலன்-விசாரணை பத்திரிக்கையாளர்கள் இதைப் பற்றிக் கண்டு கொள்ளாதது ஆச்சரியமே. குறிப்பாக டெஹல்காகாரர்கள் இதைப் பற்றி ஆராயதது ஏன் என்று தெரியவில்லை] அந்த அதிகாரி ஒரு பெண்மணி என்று குறிப்பிடத் தக்கது[3]. ஆனால், தான் முஸ்லிம் என்பதால் தான் அவ்வாறு செய்கிறார்கள், தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள் என்று கத்தி கலாட்டா செய்திருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாது, தான் தடுத்து நிறுத்தப் பட்டதற்கு, அந்த அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்[5]. வாதம், கூச்சல்கள் அதிகமானதால், நியூயார்க் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. நிலைமை மோசமாகியதால், அது தலையிட்டு, விமான நிலையத்திலிருந்து ஆசம் கானை வெளியே அழைத்துச் செல்லப்பணிக்கப்பட்டார். இதை தனக்கு நேர்ந்த அவமானம் என்று அறிவித்து, இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார். இவற்றையெல்லாம், இவர் இந்தியாவிற்கு வந்த பிறகுதான் கூறியுள்ளார். அதாவது, உண்மையில் அங்கு என்ன நிகழ்ந்தது என்ற முழு விவரங்கள் இந்திய ஊடகங்கள் வெளியிடவில்லை.

இயற்கைவளங்களைகொள்ளையெடிக்கமனிதனுக்குஉரிமைஇருக்கிறது. ராமரின்பெயரால்கொள்ளைஅடிப்பதாகஇருந்தால், கொள்ளையடியுங்கள்”: சென்றமாதத்தில் துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பென்ட் செய்வதற்கும் இவர்தான் முக்கிய காரணமாக இருந்தார்[6]. மணல் மற்றும் கனிம கொள்ளையைத் தடுக்க முயன்ற அவரை, மசூதியின் சுவறை இடிக்க ஆணையிட்டார் என்று பொய் சொல்லி அவரை பதவி நீக்கம் செய்தனர். அப்பொழுது, அத்தகைய கொள்ளையைப் பற்றிக் கேட்டபோது, “இயற்கை வளங்களை கொள்ளையெடிக்க மனிதனுக்கு உரிமை இருக்கிறது. ராமரின் பெயரால் கொள்ளை அடிப்பதாக இருந்தால், கொள்ளையடியுங்கள்”, [leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal] என்று நக்கலாகவும் பேசினார். உண்மையில், இவர் குரானில் உள்ளதை மாற்றி இப்படி ராமரின் பெயரில் ஏற்றிச் சொன்னதை யாரும் கவனிக்கவில்லையா அல்லது மறுபடியும் “கம்யூனலிஸம்” பிரச்சினை வந்துவிடும் என்று விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.

ஆசம்கான் பெண்கள் விசயத்தில் விரோதமாக நடந்து கொண்டது ஏன்?: ஆசம்கான் பொதுவாக பெண்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்-அல்லாத பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் அப்படி ஏன் நடந்து கொண்டார், அவரது பிரசினை என்ன என்பதை யாரும் ஆராயமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கீழ்கண்ட பெண்கள் விசயத்தில், இவர் நடந்து கொண்ட முறை, மிகவும் மோசமாக இருந்துள்ளது:

  1. ஜெயபிரதா (2009)
  2. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி (2013)
  3. துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி (2013)

இவர்களுக்கும் ஆசம்கானுக்கும் எந்த விதத்திலும், சம்பந்தமோ, தொடர்போ இல்லை. ஜெயபிரதா ஆவது, அக்கட்சியில் இருந்தார், ஆனால், அமெரிக்க அதிகாரி மற்றும் இந்திய அதிகாரி அவர்களது கடமையைச் செய்துள்ளனர். பெண்கள் என்று கூட பார்க்காமல், மதரீதியில் காழ்ப்புடன் அவர்கள் மீது தூஷணம் செய்துள்ளார் என்று தெரிகிறது. இஸ்லாம் பெண்களுக்கு பதிப்பு அளிக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி இவர், அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியும்? இப்பொழுது கூட, பெண்களை, அதிலும் இந்து பெண்களை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால் தான், இந்த கலவரமே நடந்துள்ளது. இவர் தாம், முசபர்நகர் பகுதிக்கு பொறுப்பாக இருக்கிறார். பிறகு, இவருக்குத் தெரியாமல், இதெல்லாம் நடந்திருக்க முடியாது. ஆகவே, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் என்பதனால், இவ்வாறு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறாரா என்று ஆராய வேண்டியுள்ளது.

வேதபிரகாஷ்

© 14-09-2013


[1] On 22 July 2008 he accused Uttar Pradesh Chief Minister Mayawati of kidnapping six MPs of his party from Uttar Pradesh and holding them captive in Uttar Pradesh BhavanNew Delhi. Later, Samajwadi Party expelled the six MPs for defying the party directive during the confidence motion voting. He also courted controversy by asking for a probe in the Jamia Nagar batla house encounter case. First he gave 10 Lakh rupees cheque to the family of Mohan Chand Sharma, a police officer who died in the encounter, which bounced when checked its validity. Later he asked for a judicial enquiry into the firing incidence suggesting that the encounter may have been fake. Mohan Chand Sharma‘s family criticized him and returned his money. Amar Singh has been chargesheeted for offering bribes to three parliament members of the Bharathiya Janata Party in 2008 under the Prevention of Corruption Act by the Delhi Police on 24 August 2011. Amar Singh has pleaded health grounds for not appearing before the courts where the chargesheet was being heard. However, distressed by adverse media reports, Mr. Singh has appeared before the courts to dispel allegations that he is running away from a process of law. After hearing his personal pleas the Court has sent Mr. Amar Singh to judicial custody till September 19, 2011, in Delhi’s Tihar jail. A. Singh had filed a petition in 2006 after some of his telephone conversations were illegally tapped and were in circulation. The leader had moved the apex court and got a restraint order against their publication in the media. In May 2011, the Supreme Court of India removed the stay on publishing the taped conversations with political leaders and Bollywood stars. In these tapes, Amar Singh can be heard discussing bribes and bending government policies to suit vested interests. On September 6, 2011, Amar Singh was arrested for his alleged involvement in the scam and was ordered to be remanded in custody until 19 September. He had appealed to the court to exempt him from appearing personally, stating that he was ill with an infection; however, his request was rejected.

[2] However, Khan was detained at the Boston Airport for questioning, over his Samajwadi Party finances, and its links to Al-Qaeda and D-Company. Specifically, a female officer of the U.S. Customs and Border Protection wing of the U.S. Department of Homeland Security took Khan to an adjacent room “for further questioning”.

[3] A woman officer of the US Customs and Border Protection wing of the Homeland Security took Khan to an adjacent room “for further questioning,” sources said.

http://indiatoday.intoday.in/story/i-was-detained-at-boston-airport-because-i-am-a-muslim-alleges-azam-khan/1/267872.html

[5] The Minister was reportedly detained for about 10 minutes for “further questioning.” The high-power contingent led by Mr. Akhilesh Yadav, which included among others, State Chief Secretary Javed Usmani, had arrived by a British Airways flight.

http://www.thehindu.com/news/national/sp-condemns-azam-khans-detention-at-boston-airport/article4656605.ece

[6] Even as suspended Indian Administrative Service (IAS) officer Durga Shakti Nagpal, who took on the sand mining mafia in Gautam Budh Nagar, is to be served a chargesheet by the Uttar Pradesh government for allegedly mishandling a communally sensitive situation, senior Samajwadi Party leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal. Durga Shakti Nagpal, during her tenure as the sub-divisional magistrate of Gautam Budh Nagar, had cracked down on the sand mining mafia. She had recently seized 24 lorries involved in illegal mining and form April to June, under her watchful eye, the mining department impounded 297 vehicles and collected a fine of over Rs 80 lakh. Read more at: http://ibnlive.in.com/news/you-can-loot-in-lord-rams-name-sp-leader-azam-khan-on-ias-durga-case/410856-37-64.html?utm_source=ref_article

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)

செப்ரெம்பர் 12, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)

 

கலவரத்தில்பாதிக்கப்பட்டவர்கள்எல்லோருமேஎனும்போதுதொப்பிப்போட்டுக்கொண்டுவந்துசெக்யூலரிஸத்தைக்காட்டிக்கொள்ளவேண்டும்?: மக்கள் செய்திகளை நம்பித்தான் நிலைமையைத் தீர்மானிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான செய்திகள் கொடுக்கப்படவேண்டும். கலவரம் நடந்த இடங்களுக்கு, பீஜேபிகாரர்கள் செல்லக் கூடாது என்று தடுக்கும் போது, அகிலேஷ் யாதவ் எப்படி, முஸ்லிம் போல தொப்பிப் போட்டுக் கொண்டு, ஆஸம் கான் என்கின்ற அடிப்படைவாத முஸ்லிம் அமைச்சருடன் உலா வந்து கொண்டு ஊடகங்களுக்கு எப்படி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று காட்டிக் கொள்கிறாரா அல்லது இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறாரா? ஊடகங்களில் இந்து-முஸ்லிம் கலவரம் என்று குறிப்பிடக் கூடாது என்றால், இவர்கள் ஏன் தொப்பிப் போட்டுக் கொண்டு வந்து செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொள்ள வேண்டும்?

முஸ்லிம் குல்லாவும், செக்யூலரிஸமும், மதவாதமும்:  முஸ்லிம் குல்லா போட்டு செக்யூலசிஸத்தைக் காட்டிக் கொள்ளும் போக்கு, முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, தர்கா வழிபாடு செய்யவரும் இந்துக்களை அவ்வாறு செய்ய வைத்தார்கள். பிறகு, ரம்ஜான் நோன்பு விருந்துகளில் அதனை ஊக்குவித்தார்கள். அரசியல்வாதிகள் அவ்வாறு வருவதை ஏதோ பெருமையாக அல்லது தங்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டோம் அல்லது முஸ்லிம்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். இதுபோலத்தான், முல்லாயம் மற்றும் அவரது மகன் அகிலேஷ் குல்லா போட்டுக் கொண்டு திரிந்து வருகிறார்கள். சென்னைக்கு வந்தபோது கூட, அகிலேஷ் தாங்கள் முஸ்லிம்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொண்டார். இப்பொழுது, கலவரம் நடக்கும்போது, ஹஜ் இல்லத்திற்கு சென்ற போது (செவ்வாய்கிழமை) கூட இவர் குல்லாவோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட மொஹம்மது ஆஸம் கானும் இருக்கிறார்! பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா? இனி 27-08-2013லிருந்து நடந்த நிகழ்சிகள் அலசப்படுகின்றன.

27-08-2013 (செவ்வாய்): உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை ஒரு இளைஞன் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் [ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்] செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன் தடுக்கச் சென்றவர்களை சுமார் நூற்றுக்கும் மேலானவர் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், அந்த கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த இளைஞனும் இறந்துள்ளான். இந்த செய்தியை ஊடகங்கள் விதவிதமாக (முதலில், ஒரு மாதிரி, பிறகு வேறு மாதிரி என்று) வெளியிட்டன:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இந்து பெண்ணை ஒரு முஸ்லிம் (குரேசி) கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன். ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். தடுக்கச் சென்றவர்களை (கௌரவ் மற்றும் சச்சின்) சுமார் நூற்றுக்கும் மேலான முஸ்லிம்கள் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். (அவர்களிடம் ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்று குறிப்பிடத்தக்கது)[1]. அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், ஒரு முஸ்லிமும் இறந்துள்ளான். முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சிகளை நியாயப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிறகு விதவிதமாக ஊடகங்கள் வெளியிட்டன[2]:

  1. ஒரு முஸ்லிம் இளைஞன், ஒரு இந்து பெண்ணை கலாட்டா செய்தான். அதனை அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் தட்டிக் கேட்டுள்ளனர். சண்டையில், முஸ்லிம் இளைஞன் கொல்லப்பட்டான். முஸ்லிம் கூட்டம் அந்த இருவரையும் கொன்றுள்ளனர்.
  2. உள்ளூர் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட் கூறுவதாவது, மலகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவனின் சகோதரி தான் ஒருவனால் தொந்தரவு செய்யப்படுவதாக புகார் கொடுத்தாள். அவனும், அவன் நண்பனும் சென்று, பெண்னை பலாத்காரம் செய்தவனை அடித்துள்ளனர். ஆனால், கத்தி உபயோகப்படுத்தப் பட்டதால்,   பலாத்காரம் செய்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த இரண்டு இளைஞர்களும், கூட்டத்தினரால் கொல்லப்பட்டனர்.
  3. மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள், மோதிக் கொண்டதில், சண்டை ஏற்பட்டு, அதில் மூவர் இவ்வாறு கொல்லப்பட்டனர்[3]. இச்செய்தி பி.டி..ஐ மூலம் கொடுக்கப்பட்டிருதால், அப்படியே மற்ற நாளிதழ்களும் போட்டிருக்கின்றன[4].

ஆனால், இரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்பதனை மறைக்க முடியாது[5]. இறந்தவர்களின் குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பிறகு பொலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டனர். உடல்கள் திருப்பிக் கொடுக்கப் பட்டது. அப்படியென்றால், போலீசார், எதற்காக உடல்களை எடுத்து சென்றனர், அல்லது வைத்திருந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. போஸ்ட்மார்ட்டம் செய்தபிறகு உடல்கள் கொடுக்கப் பட்டிடருக்கலாம்.

தொந்தரவுசெய்யப்பட்டபெண்பொலீசிடம்புகார்கொடுத்துன்நடவடிக்கைஎடுக்காதது: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இவ்விசயத்தை ஊடகங்கள் வெளியிடாததால், தில்லி-மும்பை மாதிரி ஒரு தட்டிக் கேட்கும் நிகழ்சியாக மாறவில்லை. அப்படி செய்திடுந்தால், ஒருவேளை கலவரமே நடந்திருக்காது. இத்தனை உயிர்களும் போயிருக்காது. ஆனால், அவை அவ்வாரு செய்யவில்லை.

அதிகாரிகள்பயந்துகொண்டுநடவடிக்கைஎடுக்கவில்லையாஅல்லதுஅவ்வாறுபணிக்கப்பட்டனரா?: சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று மறைமுகமாக அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்ன்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.

வேதபிரகாஷ்

© 12-09-2013


[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.

[2] The incident took place in the Jansath area of Muzaffarnagar, 495 km from here, when a youth was caught harassing a girl. Her brother and his friend bashed up the alleged molestor and shot him dead, but were themselves lynched by a mob. Muzaffarnagar’s Senior Superintendent of Police (SSP) Manjil Saini told IANS that Sachin, a resident of Malakpura village was told by his sister hat a boy named Shahnawaz was harrasing her. Enraged at this, he, along with a friend, attacked Shahnawaz with a knife and later shot him. As the two tried to flee the crime scene, they were overpowered by the villagers and were beaten to death. With the news of the killings spreading in the area, people from both sides attacked each other and police reinforcements were rushed to the village.After great difficulty, police managed to take possession of the three dead bodies and bring the situation under control. The bodies have been sent for post-mortem while Provincial Armed Constabulary (PAC) personnel have been deployed in the village.

http://www.mid-day.com/news/2013/aug/280813-three-killed-in-up-after-girls-harassment.htm

[3] Tension prevails in Muzaffarnagar after clash [Last Updated: Wednesday, August 28, 2013, 13:38] Muzaffarnagar: Security has been tightened in Kawal village here where tension prevailed after three persons were killed over a minor dispute, police said here.  Security has been tightened and patrolling has been intensified as tension prevailed in the area. A posse of police have been deployed to maintain law and order, police said.  Three persons were killed over a minor dispute which broke out after two motorbikes had collided with each other at Kawal village yesterday. While victim Qureshi was allegedly stabbed to death by Gaurav and his friend Sachin (25), hearing his cries, locals later rushed to the spot and beat the duo to death. A case has already been registered in this regard. Meanwhile, in a major reshuffle, the Uttar Pradesh government has transferred 25 IPS officers, including Director Generals.  SSP Muzaffarnagar Manjil Saini has been transferred from the district and attached to the DG headquarters, an official spokesperson said today in Lucknow.