Archive for the ‘கயிலாயம்’ Category

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

ஜூலை 9, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

 PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மோடியின் பரிசளித்தல்நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1].  இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:

  1. 2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.
  2. நவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.
  3. இரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.
  4. உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.
  5. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].
  6. டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.

Modi twitter on Cheraman mosque 2016

இதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன.  2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.

Marthoma cyrch, thiruvalla- copper plates-1

இதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

Marthoma cyrch, thiruvalla- copper plates-2

இப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,

  1. 9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  2. “இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.
  3. ஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].
  4. பிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.
  5. ஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.How Ceraman myth is promoted in Kerala by the vested groups
  6. யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. ஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.
  8. சேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
  9. சேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது!
  10. ஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.

How Ceraman myth is promoted

சேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].

© வேதபிரகாஷ்

09-07-2017

A chola painting 11th cent. depicting the ascension of Cheraman Perumal and Sundarar to kailisa

[1] Firstpost, PM’s flair gift diplomacy shows he’s a thoughtful guest, July.5, 2017. 17.00 IST.

[2] http://www.firstpost.com/india/narendra-modi-in-israel-pms-flair-gift-diplomacy-shows-hes-a-thoughtful-host-a-gracious-gu

[3] http://www.narendramodi.in/pm-modi-presents-king-salman-bin-abdulaziz-al-saud-a-gold-plated-replica-of-the-cheraman-juma-masjid-in-kerala-439914

[4] According to Sreedhara Menon, “The Cheraman legend is not corroborated by any contemporary record or evidence. None of the early or medieval travelers who visited Kerala has referred to it in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam”.

[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.

[7]  இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.

[8]  R. E. Miller, Mappila Muslims of Kerala, Orient Longman, 1976, Madras,op. cit., pp. 46-9.PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in