Archive for the ‘வசந்தகுமார்’ Category

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [1]

ஜூலை 11, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [1]

Opposition to Amit Shah., chennai

மோடிஎதிரிகளும், பிஜேபிஎதிரிகளும், இந்துவிரோதிகளும்: “கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி, பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை எதிர்த்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் வைரலானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோதியின் தமிழக வருகையை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுப்பட்டன. இதனால் சென்னையே ஸ்தம்பித்து போனது,” என்று பிபிசி.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது[1]. தொடந்து, “ஆனால், அமித் ஷாவுக்கு பிரதமர் மோதிக்கு இருந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லாவிட்டாலும் இணையத்தில் மோதிக்கு செய்தது போன்றே இணையவாசிகள் அமித் ஷாவுக்கு எதிராக ஒரு ஹேஷ்டேக்கை பரப்பிவிட அது வைரலானது. இச்சூழலில், சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடீரென காணவில்லை,” என்று புலம்பியுள்ளது. சரி, “திடீரென்று காணவில்லை,”. என்றால், கண்டு பிடித்து சொல்ல வேண்டியது தானே? அப்படி சொல்லாமல், “ஆனால், அந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி பலர் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்,” என்று சமாளித்துள்ளது. இந்தியாவில் என்ன அரசியல் தலைவர்கள் வது செல்லக் கூடாது என்றுள்ளதா? தமிழ்.வெப்துனியா[2] இதே பாட்டைப் பாடி, “இதைத்தொடர்ந்து அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவும், அன்பும் அளித்த தமிழக மக்களுக்கு எனது நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்,” என்று முடித்துள்ளது[3].

09-07-2018 - Amit Shah Meeting- flags on platform dug

அமித் ஷாவே திரும்பி போ பிரச்சாரம்: திமுக, காங்கிரஸ் மற்றும் இந்து-விரோத சித்தாந்திகள் இத்தகைய வேலைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிப்படையாகத் தெரிகிறது[4]. டி.ஆர்.பி.ராஜா, திமுக எம்.எல்..ஏ, ஜோதிமணி சென்னிமலை, காங்கிரஸ், போன்றோர் இதில் ஈடுபட்டனர்[5]. டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலுவின் மகன். வாஜ்பேயி ஆட்சியின் போது, ஆர்.எஸ்.எஸ், பாலுவுக்கு பிரச்சாரம் செய்தார்கள். இதன்படி, ஒவ்வொரு கட்சியும், இதே முறையைக் கடைபிடிப்பதன் மூலம், தேர்தலை ஜெயிக்க முடியுமா, இந்தியா முழுவதும் சென்று வரும் ஆசியல்வாதிகளைத் தடுக்க முடியுமா? பிஜேபியை எதிர்க்கிறேன் என்று பிரதம மந்திரியை எதிர்ப்பது போன்ற செயல்கள் ஜனநாயக ரீதியில் இல்லை. மோடியை எதிர்க்கிறேன் என்று இந்துக்களை தூஷிப்பதும், செக்யூலரிஸமாக இல்லை. ஆகவே, இந்துவிரோதிகள் தாம், இவ்விதம் வெளியிடுகின்றனர் என்று தெரிகிறது. இதெல்லாம் சரியில்லை என்பது தெரிந்திருக்கிறது. இருப்பினும், செய்திருக்கிறார்கள் எனும்போது, ஆரசியல் அநாரிகத்தையும் பின்பற்றும் போக்காகக் காட்டுகிறது.

VGP resort - Tamilisai inspected

தமிழிசை தனது தொண்டர்களுடன் வந்து பார்வையிட்டார்.

VGP resort - Tamilisai inspected-2

விஜிபி தங்கக்கடற்கரை தேர்வு ஏன்?: அமித்ஷாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று “கிருத்துவ நாடார்” லாபி தீவிரமாக வேலைசெய்து, நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்தது. 2017ல் “திருவள்ளுவரை” வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் டிரஸ்ட் ஏற்படுத்தி, வி.ஜி.சந்தாஷத்திற்கு விருது கொடுத்து பாராட்டு விழா நடத்தியதில் சாமி.தியாகராஜனுக்கு பங்கு உண்டு. வி.ஜி.சந்தாஷம், சந்தோசமாக இடம் கொடுத்ததும், குஷியாகி விட்டனர். அமித்ஷாவை அசத்த ஏற்பாடுகளில் இறங்கி விட்டனர்[6]. இடம் தீர்மானம் ஆனதும், தனது தொண்டர்களுடன், சுற்றிப் பார்த்து, கவனித்து இருக்கிறார். இப்பொழுது தமிழிசை, ரிசார்டில் பந்தல் போடும் பூமி பூஜையில் கலந்து கொண்டார்[7]. அமித்ஷா வரவு பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கினார்[8]. இவ்விசயத்தை முன்னின்று நடத்துவதும் தெரிகிறது[9]. இவரது மகன் திருமணத்தில் சந்தோஷம் உட்பட, கிருத்துவ நாடார் லாபி கூட்டம் கலந்து கொண்டது. தினத்தந்தி விழாவில், மோடியை வரவழைத்து, மோடியின் கையால் வி.ஜி.சந்தாஷத்திற்கு விருது வழங்க வைக்கப்பட்டது. இவ்வாறு, ஐஜேகிவிலிருந்து, விஜிபிக்கு மாறுவதில், புகைச்சலும் ஏற்பட்டுள்ளது. பச்சமுத்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். பாமக அன்புமண்ணிக்கு அழைப்பு அனுப்பியும் வந்ததாகத் தெரியவில்லை.

VGP resort chosen by Tamilisai-1

மேடை, மைதானம், ஏற்பாடு முதலியன: மதியத்திலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. மேடையில், “நாட்டுப்புற” பாணியில் பாட்டு பாடிக் கொண்டு, வந்தவகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தது கலைக்குழு. பாதுகாப்பு சோதனை அதிகமாகவே இருந்தது. நுழைவில் சோதனை. பிறகு, ஒவ்வொருவரும், ஐடி கார்டுடன் வீடியோ/போட்டோ எடுக்கப் பட்டு அனுமதிக்கப் பட்டனர். இறுதியாக மைதான கூட்டம் இடத்தில் நுழைய முழு-சோதனை இருந்தது.

09-07-2016 - Amit Shah Meeting.secuirity check.frisking

மேடைக்கு முன்பாக, பாதுகாப்பு இடைவெளி இருந்தது. முக்கியமானவர்கள் மட்டுமே மேடைக்கு அருகில் அனுமதிக்கப் பட்டனர்.

09-07-2016 - Amit Shah Meeting.going inside.4

முந்தைய அமைச்சர் ஹண்டே வந்தபோது, போலீஸாருக்குத் தெரியவில்லை….நாராயண திருப்பதியைக் கூட தடுத்தனர்…..பிறகு அவர் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். மாவட்ட / மாநில பொறுப்பாளர்கள் அழைத்த போது குழப்பம் ஏற்பட்டது – இடப்பிரச்சினை தான். வி.ஜி.சந்தோசம், வி.ஜி.ரவிதாஸ் மற்றும் வி.ஜி.ராஜதாஸ் மேடையில் இருந்தது திகைப்பாக இருந்தது. வி..ஜி.சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள் பற்றி பலமுறை எடுத்துக் காட்டியுள்ளேன். “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவதில், தீவிரமாக இருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளேன். இருப்பினும், வி..ஜி.சந்தோசம் கடந்த வருடம், மைலாப்பூரில், திருவள்ளுவர் கோவில் வளாகத்தில், விருது எல்லாம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். பொன். ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வாழ்த்தி பேசினார்[10].  இப்பொழுது அவர்கள் இடம் கொடுத்துள்ளதால், உரிமையுடன் மேடையில் உட்கார்ந்துள்ளனர்.

V G Santhosam, V G RAvidass and V G ... with Amit Shah

2019 மற்றும் 2021 நிலைமைகள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருது நகர், சிவகங்கா, மதுரை வட்டங்களில், நாடார் மற்றும் கிருத்துவர் ஆதரவில், சில சட்டசபை தொகுதிகளில்  பிஜேபி அல்லது என்.டி.ஏ ஜெயிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுகின்றனர். 2014ல் பொன் ராதாகிருஷ்ணன், எச். வசந்தகுமாரை [காங்கிரஸ்] வென்றார் ஆனால், 2009ல் ஹெலன் டேவிட்சனிடம் [திமுக] தோற்றார். 2016ல், மூன்று எம்.எல்.ஏ காங்கிரஸ் மற்றும் மூன்று திமுக என்று வெற்றி பெற, பிஜேபி தோற்றது. 2016ல் தோற்ற, நயினார் நாகேந்திரன் [அதிமுக] பிஜேபியில் சேர்ந்துள்ளார்.  ஆகவே, இவர்கள் பதிலுக்கு மந்திரி பதவி கேட்பார்கள்.  வடமாவட்டங்களில், வன்னியர் கூட்டோடு போட்டியிட திட்டமிட்டிருக்கலாம். ஆனால், திமுக அல்லது அதிமுகவை தனிமைப் படுத்த முடியாது.  இப்பொழுதைக்கு, அதிமுகவோடு நல்லுறவு இருப்பதால், அதனை முறிக்க முடியாது. காங்கிரஸ்-திமுக அணி எனும்போது, பிஜேபி-அதிமுக அணி சாத்தியமாகிறது. 2019ல் தோற்றால், எல்லா கட்சிகளும் பிஜேபிக்கு எதிராகி விடும். வென்றால், கூட்டணி பேரத்தின் படி, பதவி கொடுத்தாக வேண்டும். காங்கிரஸைப் போல, பிஜேபி, அதிகாரம், பணம் வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளுடன் பேரம் பேசலாம். “புதிய தமிழகம்” கிருஷ்ணசாமி ஏற்கெனவே, பிஜேபி பக்கம் சாய்ந்து விட்டது தெரிகிறது. அதாவது, ஒரு “ரிசர்வர்ட்” தொகுதி அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பிறகு 2021 வரை அமைதியாக இருக்க வேண்டியிருக்கும்.

© வேதபிரகாஷ்

11-07-2018

VGP resort chosen by Tamilisai-2

[1] பிபிசி.தமிழ், ட்விட்டர் டிரெண்டிங்கிலிருந்து காணாமல் போனஅமித் ஷாவே திரும்பிப் போ‘!, 9 ஜூலை 2018.

https://www.bbc.com/tamil/india-44769098

[2] தமிழ்.வெப்துனயா, கழுவி ஊற்றிய தமிழகம்: நன்றி சொன்ன அமித் ஷா, Last Updated: திங்கள், 9 ஜூலை 2018 (17:45 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/amit-shah-thanks-tn-people-in-twitter-118070900057_1.html

[4] The Hindu, #GoBackAmitShah trends, SPECIAL CORRESPONDENT CHENNAI , JULY 10, 2018 00:58 IST; UPDATED: JULY 10, 2018 09:46 IST.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/gobackamitshah-trends/article24374838.ece

[5] DMK MLA T.R.B. Raja, Congress leader Jothimani Sennimalai, Anti-corruption activist Savukku Shankar……tweeted………#GobackAmitShah.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/gobackamitshah-trends/article24374838.ece

[6] தினசரி, அமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு! தமிழிசை உற்சாகம்!, by Senkottai Sriram, 05-07-2018 5:24 PM.

[7] https://dhinasari.com/local-news/chennai-news/46073-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html

[8] News Today, Amit Shah’s visit to TN would be significant’, By NT Bureau Published on Jul 05, 2018 03:57 PM IST.

[9] https://www.newstodaynet.com/chennai/amit-shahs-visit-to-tn-would-be-significant-106531.html

[10] https://secularsim.wordpress.com/2017/06/16/why-hindutwavadis-hobnob-with-christians-under-the-guise-of-valluvar-promotion/